சூரிய நமஸ்காரம்

டாய்த்திரிய ஆரன்யகா புனித நூலில் இருந்த அதிகாரத்தில் இருந்து பார்க்க சூரிய நமஸ்காரம் அத்தியாயம்.
சூரிய நமஸ்காரம் (IAST: சூரிய நமஸ்காரா) அல்லது சூரிய வணக்கமுறை (இலக்கியத்தில் "சூரியனுக்கு வணக்கம்") என்பது ஹட யோக ஆசனங்களின் பொதுவான வரிசைமுறையாகும். இந்து சூரியக் கடவுளான சூரியனின் இறைவழிபாட்டில் இருந்து திரிந்து இது பிறந்ததாகும். இந்த இயக்கங்களின் வரிசைமுறை மற்றும் நிலைகளானது விழிப்புணர்வின் மாறுபட்ட நிலைகளில் பயிற்சியளிக்கப்படுகிறது. ஆசனம், பிரணாயாமம், மந்திரம் மற்றும் சக்கர தியானம் ஆகியவற்றை ஒன்றிணைத்து பல்வேறு பாணிகளில் உடல் பயிற்சிகளின் எல்லைகளைக் கொண்ட ஒரு முழுமையான சாதனாவாக இது உள்ளது.
பயிற்சி இணைப்புகளின் உடல்சார் அடிப்படையானது இயக்கவியலில் செயல்படுத்தப்படும் வரிசையில் பன்னிரண்டு ஆசனங்களை ஒன்றாய் கொண்டுள்ளது. இந்த ஆசனங்கள் சீர்படுத்தப்பட்டுள்ளன. அதனால் ஆசனங்களைச் செய்பவர்கள் முதுகெலும்பை முன்னோக்கியும், பின்னோக்கியும் மாறி மாறி நீட்ட மூடியும். வழக்கமான வழியில் செயல்படும் போது ஒவ்வொரு ஆசனமும் (ஆறாவது ஆசனத்தைத் தவிர்த்து, மூச்சோட்டமானது வெளிப்புற தாமத்துடன் கடைபிடிக்கப்படும்) மாறி மாறி நிகழும் மூச்சை உள்ளிழுத்தல் மற்றும் மூச்சை வெளியிடுதலுடன் நகரும். சூரிய நமஸ்காரத்தின் ஒரு முழுச் சுற்றானது இந்த வரிசையின் வழியாக எதிர்பக்கத்திலுள்ள காலை முதலில் நகர்த்தும் இரண்டாவது தொகுப்பில் மாறுவதுடன் பன்னிரண்டு நிலைகளுடைய இரண்டு தொகுப்புகள் இதில் கருதப்படுகின்றன.
நவீன யோகா பராம்பரியத்தின் ஒரு பகுதியாக சூரிய நமஸ்காரம் செய்ய விரும்புபவர்கள் இதை சூரிய உதயத்தில் செய்வதற்கு ஆயத்தமாவர். ஒரு நாளில் மிகவும் 'ஆன்ம ரீதியாக உகந்த' நேரமாக இந்நேரத்தை பழமை விரும்பிகள் கருதுகின்றனர்.

தோற்றங்கள்

வேதாந்தம்
வேதங்களில் ஆரோக்கியமான உடல்நலம் மற்றும் வளமையை உயர்த்துவதற்கு சூரியனை வழிபடும் ஏராளமான மேற்கோள்கள் உள்ளன. இந்த வேதாந்த பாசுர ஏடுகளில் சில (இந்துக்கள் தினசரி செய்யும் வழக்கமான கடமையான) நித்ய விதியுடன் ஒருங்கிணைந்துள்ளது. இந்த தினசரி செயல்பாடுகளானது சூரிய நமஸ்காரம் என வரையறுக்கப்படுகிறது ("சூரிய வணக்கமுறை" எனவும் கூறப்படுகிறது). சூரியனுக்கு உடல்சார் வணக்கமானது கடவுளிடம் முழுமையாக சரணடைவதைக் காட்டுகிறது. இது இந்த செயல்பாடுகளின் முக்கிய பண்பாகும். மண்டலத்திற்கு மண்டலம் இந்த சூரிய நமஸ்காரத்தின் வடிவங்கள் வேறுபடுகின்றன. டுருச்ச கல்ப நமஸ்காரம் மற்றும் ஆதித்ய பிரசனம் இரண்டும் பிரபலமான பயிற்சிகளாகும்.
புராணம்
ஆதித்ய ஹிருதயம் [1][2] சூரிய நமஸ்காரத்தில் உள்ளடங்கியிருக்கும் மற்றொரு பழமையான பயிற்சியாகும். சூரியனுக்கு வணக்கம் செலுத்தும் இந்த செயல்பாடானது இராவணனுடன் சண்டையிடுவதற்கு முன்பு அகத்திய முனிவரின் மூலமாக ஸ்ரீ ராமருக்கு சொல்லிக் கொடுக்கப்பட்டதாகும். இது இராமாயணத்தின் "யுத்த காண்டப்" படலம் 107 இல் விவரிக்கப்படுள்ளது.
பழைய ஆங்கில மேற்கோள்கள்
ஆரம்பகால ஆங்கில வெளியீடுகள் சிலவற்றில் சூரிய வணக்கமுறையின் பழமையான வழிகளில் சில பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. "எ கேட்டலாக் ரெயிஸன்னே ஆப் ஓரியண்டல் மனுஸ்கிரிப்ட்ஸ்" (A Catalogue raisonnée of oriental manuscripts) இல்[3]. (ஆண்டு: 1860, பக்கம் 246) மேதகு வில்லியம் கூக் டைலர் (William Cooke Taylor) "ஆதித்ய புராணத்தில்" இருந்து 71 பக்கங்களைக் கொண்ட சுருக்கமான புத்தகமாகப் பாதுகாக்கப்பட்டுள்ள "ட்ரிச்சா கல்ப விதி" குறித்து குறிப்பிட்டுள்ளார். "சூரியனை வணங்கித் துதித்து மரியாதை செலுத்தும் முறைகள் மற்றும் அதன் மூலம் நோயில் இருந்து குணமடைதல்" ஆகியவை குறித்த விதியை அவர் விளக்கியுள்ளார். ஆரக்ய பிரதானத்தின் இருப்பு, சூரிய ஸ்தோத்ரம், ஆதித்ய தவதச நாமம், இராசிமண்டலங்களின் இராசிகள் சார்ந்து சூரியனின் 12 பெயர்கள், சூரிய நாராயண கவசம், சரஷ்டஹரி மந்திரம் மற்றும் பல பிற விரிவான சமய சடங்குகள் ஆகியவற்றை விதியின் ஒரு பகுதியாகக் குறிப்பிட்டுள்ளார். அதே புத்தகத்தில் 148 ஆம் பக்கத்தில் "லகு ட்ரிச்ச கல்ப விதி" என்றழைக்கப்படும் ஒரு குறுகிய பதிப்பையும் அவர் விளக்கியுள்ளார்.

பயிற்சி

  • சூரிய நமஸ்காரமானது பொதுவாக காலை அல்லது மாலை நேரத்தில் உணவருந்தும் 2 மணி நேர இடைவேளிக்குப் பிறகு மட்டுமே செய்யப்பட வேண்டும்.[4]
  • சூரிய நமஸ்காரங்களை தளத்தில் அல்லாமல் விரிப்பில் செய்யவேண்டும்.
  • சில பாரம்பரியங்களில் ஒரே பயிற்சியில் 12 சூரிய நமஸ்காரங்கள் நிகழ்த்தப்படுகிறது. முதல் முறையாக இந்தப் பயிற்சியைத் தொடங்கினால் வழக்கமாக ஒவ்வொரு நாளும் சில (3 முதல் 6) நமஸ்காரங்கள் மட்டுமே செய்ய வேண்டும். பிறகு ஒரு வார காலத்தில் படிப்படியாய் 12 நமஸ்காரங்களாக உயர்த்த வேண்டும்.[5]
  • பயிற்சியின் இறுதியில் ஓய்வெடுக்கும் போது சவாசனத்தைச் செய்ய வேண்டும்.
    சூரிய நமஸ்காரத்திற்குப் பிறகு ஓய்வெடுப்பதற்கு பயிற்சியளிக்கப்பட்ட சவாசனம்
  • மூச்சோட்டம் (பிரணாயாமங்கள்) கீழே கொடுக்கப்பட்ட பட்டியலில் குறிப்பிட்டுச் சொல்லப்பட்டுள்ளது. இது ஆசனங்களுடன் ஒரே சமயத்தில் செயல்படுத்தப்படுகிறது.
  • மந்திரங்கள் ஒவ்வொரு சூரிய நமஸ்காரத்தில் தொடக்கத்திலும் உச்சரிக்கப்படும். அதைப் பற்றிக் கீழே கொடுக்கப்பட்டுள்ள பட்டியலில் குறிப்பிட்டுச் சொல்லப்பட்டுள்ளது.
  • சூரிய நமஸ்காரத்தின் அதே சுழற்சியில் சில ஆசனங்கள் இருமுறை மீண்டும் மீண்டும் வருகிறது. சூரிய நமஸ்காரத்தின் 12 ஆசனங்களின் வரிசையில் மொத்தம் 8 ஆசனங்கள் உள்ளன.
  • யோகாசனங்களின் (தோரணை அல்லது நிலை) பயிற்சியானது பொதுவாக சூரிய நமஸ்கார பயிற்சியைத் தொடர்ந்தே வருகிறது.[6]
  • பாரம்பரியமான இந்து சூழல்களில் சூரிய நமஸ்காரமானது சூரியன் உதிக்கும் அல்லது மறையும் திசையைப் பார்த்தே எப்போதும் செயல்படுத்தப்படுகிறது.

வரிசைத் தொகுப்பு

வீடியோ

ஆசனம் மூச்சோட்டம் உருவப்படங்கள்
1 பிராணமாசனம்
(இறைவணக்க போஸ்)
மூச்சை வெளியிடுதல் 1Pranamasana.JPG
2 அஸ்ட உட்டனாசனம்
(உயர்த்தப்பட்ட கைளுடன் போஸ்)
மூச்சை உள்ளிழுத்தல் Suryathon4.jpg
3 அஸ்டபாதாசனம்
(முன்னோக்கிய நிலையின் குனிந்தவாறு போஸ்)
மூச்சை வெளியிடுதல் Fb1.jpg
4 ஏகபாதபிரஸர்நாசனம்
(குதிரையேற்றம் சார்ந்த போஸ்)
மூச்சை உள்ளிழுத்தல் 4godhapitham (l‘iguane).JPG
5 தந்தாசனம்
(நான்கு-கரங்கள் உள்ள பணியாளர் போஸ்)
மூச்சை வெளியிடுதல்
6 அஷ்டாங்க நமஸ்காரம்
(எட்டு கரங்களுடைய போஸுடன் வணக்கம்)
தற்காலிகமாக நிறுத்தி வைத்தல் 6Ashtanga Namaskara.JPG
7 புஜங்காசனம்
(நல்ல பாம்பு போஸ்)
மூச்சை உள்ளிழுத்தல் Suryathon2.jpg
8 அதோ முக்கா ஸ்வானாசனம்
(கீழ்முகம் பாக்கும் நாய்)
மூச்சை வெளியிடுதல் Suryathon6.jpg
9 ஆஷ்வா சஞ்ச்சலனாசனம்
(குதிரையேற்றம் சார்ந்த போஸ்)
மூச்சை உள்ளிழுத்தல்
10 உட்டனாசனம்
(முன்புறம் வளைந்து குனிந்தவாறு போஸ்)
மூச்சை வெளியிடுதல் Fb1.jpg
11 அஸ்ட உட்டனாசனம்
(உயர்த்தப்பட்ட கைகளையுடைய போஸ்)
மூச்சை உள்ளிழுத்தல் Suryathon4.jpg
12 பிராணமாசனம்
(இறைவணக்க போஸ்)
மூச்சை வெளியிடுதல் 1Pranamasana.JPG

உச்சரிக்கப்படும் மந்திரங்கள்

பிராணமாசனத்தின் போது ஒவ்வொரு சூரிய நமஸ்காரத்தின் தொடக்கத்திலும் உச்சரிக்கப்படும் மந்திரங்கள் பின்வருமாறு.

மந்திரம் சக்கரம்
மூலம் வணக்கமுறை
1 ஓம் ஹ்ராம் (ॐ ह्रां) om mitrāya namaḥ (ॐ मित्राय नमः) அனஹட்டா
2 ஓம் ஹ்ரீம் (ॐ ह्रीं) om ravaye namaḥ (ॐ रवये नमः) விஷுத்தி
3 ஓம் ஹ்ரூம் (ॐ ह्रूं) om sūryāya namaḥ (ॐ सूर्याय नमः) ஸ்வாதிஸ்தனா
4 ஓம் ஹ்ரேம் (ॐ ह्रैं) om bhānave namaḥ (ॐ भानवे नमः) அஜ்னா
5 ஓம் ஹ்ரோம் (ॐ ह्रौं) om khagāya namaḥ (ॐ खगाय नमः) விஷுத்தி
6 om hraḥ (ॐ ह्रः) om puṣṇe namaḥ (ॐ पूष्णे नमः) மனிப்பூரா
7 ஓம் ஹ்ராம் (ॐ ह्रां) om hiraṇya garbhāya namaḥ (ॐ हिरण्यगर्भाय नमः) ஸ்வாதிஸ்தனா
8 ஓம் ஹ்ரீம் (ॐ ह्रीं) om marīcaye namaḥ (ॐ मरीचये नमः) விஷூத்தி
9 ஓம் ஹ்ராம் (ॐ ह्रूं) om ādityāya namaḥ (ॐ आदित्याय नमः) அஜ்னா
10 ஓம் ஹ்ரேய்ம் (ॐ ह्रैं) om savitre namaḥ (ॐ सवित्रे नमः) ஸ்வாதிஸ்தனா
11 ஓம் ஹ்ரோம் (ॐ ह्रौं) om arkāya namaḥ (ॐ अर्काय नमः) விஷூத்தி
12 om hraḥ (ॐ ह्रः) om bhāskarāya namaḥ (ॐ भास्कराय नमः) அனஹட்டா
சூர்ய நமஸ்காரத்திற்குப் பிறகு கூறப்படும் மந்திரம்.
அதித்யாஸ்ய நமஸ்காரன், யேக்கர்வந்தி தின் தின், ஆயூ: பிர்தியா: பாலம் விருயம். டேஜ்:ஸ்டே ஷான்ச் ஜெயடே.
आदित्यस्य नमस्कारान, येकुर्वन्ती दिने दिने | आयु: प्रद्न्या बलं वीर्यं, तेज:स्ते शांच जायते ||

சூரிய நமஸ்காரம்

சூரியன்தான் இப்பூவுலகில் உயில் வாழும் அனைத்து ஆற்றல்களுக்கும் மூலம். சூரியன் இல்லாவிட்டால் இப்பூலவுகில் வாழ்க்கையே இருக்காது. பல் ஆயிரம் ஆண்டுகளாக சூரியனிடம் இருந்து ஆற்றல் பெறுவதை நம் முன்னோர்கள் ஒரு விஞ்ஞானமாக வளர்த்து வந்துள்ளார்கள். இந்த விஞ்ஞானம் யோகம் எனப்படுகின்றது. சூரிய நமஸ்காரப் பயிற்சியும் யோகா முறைகளுள் ஒன்றாக கருதப்படுவதால் இன்றும் பலர் அதனை கற்றுக்கொள்கின்றனர்.
சூரிய நமஸ்காரத்தில் உடல் அசைவுகளும் மூச்சு ஒட்டமும் இணக்கமாக நடைபெறுகின்றன. நுரையீரல்களில் காற்றோட்டம் தாராளமாகின்றது. இரத்தம் உயிர்க்காற்றால் நலம் பெறுகின்றது. ஏராளமான கரியமில வாயுவையும் பிற நச்சுப் பொருள்களையும் மூச்சு மண்டலத்திலிருந்து வெளியேற்றுவதன் மூலம் சூரிய நமஸ்காரம் உடலுக்குப் பெரும் நன்மை விளைவிக்கின்றது.
சூரிய நமஸ்காரம் ஜீரண மண்டலத்திற்கு உயிரூட்டி ஆற்றலை அளிக்கின்றது. கல்லீரல், வயிறு, மண்ணீரல், குடல்கள் எல்லாம் நன்றாக மசாஜ் செய்யப்படுகின்றன. இதனால் மலச்சிக்கல் மறைகின்றது. வயிற்று உறுப்புக்களில் இரத்தம் தங்ககுவதில்லை என்பதால் உடல் உறுதியடைகின்றது.
நினைவாற்றல் அதிகரிக்கும்:
உடலின் ஆரோக்கியத்தை நிலைநாட்டுவதில் சூரிய நமஸ்காரம் சிறந்த இடம் பெறுகின்றது. இது இரத்தக் கொதிப்பை மட்டுப்படுத்தும். இதயத் துடிப்பைச் சமன் செய்யும். கை, கால் போன்ற உறுப்புகளுக்குச் சூடு கொடுத்துக் காக்கும். நரம்பு மண்டலத்தை விழிப்புடனிருக்க வைப்பதில் சூரிய நமஸ்காரத்திற்கு இணையானது வேறு ஒன்றுமில்லை. சிம்பதட்டிக், பாராசிம்பதட்டிக் நரம்புகளின் செயல்களை நெறிப்படுத்துவதன் மூலம் நல்ல ஒய்வுக்கும் உறக்கத்திற்கும் உதவுகின்றது. இதனால் நினைவாற்றல் அதிகரிக்கின்றது.
உடல் பொலிவடையும்:
சூரிய நமஸ்காரத்தை முறைப்படி செய்யும் போது வியர்வை உண்டாகும். ஏராளமாக உடலில் உள்ள நச்சுப்பொருட்கள் தோலின் வழியே வெளியேறும். நன்றாக வியர்க்கும் வரை இப்பயிற்சி செய்வது நல்லதென சூரிய நமஸ்காரத்தைப் பிரபலப்படுத்திய அவுண்ட் அரசர் கூறுகின்றார். வியர்வை பத்துப் பதினைந்து நிமிடங்களிலேயே வெளிவருவதை அனுபவத்தில் அறியலாம்.
தோலின் மூலம் வியர்வை வெளிவரும் அளவுக்கு உடல்நலம் ஒங்கும்.சூரிய நமஸ்காரத்தில் கழுத்து முன் பின் வளைகின்றது. இதனால் தைராயிட், பாராதைராயிட் சுரப்பிகளுக்கு இரத்தம் கிடைக்கின்றது. அவை செயல்படுவதனால் எல்லா எண்டோக்கிரைன் சுரப்பிகளும் தமக்குரிய இயல்பான காரியங்களைச் செய்கின்றன.
தோல் புத்துணர்வு பெற்றுப் பொலிவடைகின்றது. சூரிய நமஸ்காரம் செய்வதற்கு ஒரு நாளில் மூன்று முதல் பத்து நிமிடங்களே போதும். இது உடம்பு முழுமைக்கும் பயிற்சி அளிக்கின்றது. சூரிய நமஸ்கரத்திற்குச் செலவொன்றுமில்லை. பளுவான கருவிகள் எதுவும் தேவையில்லை. வேண்டியதெல்லாம் நான்கு சதுர மீட்டர் இடம் தான்.
சூரிய நமஸ்காரத்தைப் பழகப் பழக இன்பம் அதிகரிக்கும். முதலில் சுலபமான உடல் நிலைகளைப் பழக வேண்டும். ஆரம்பத்தில் பூர்ண வெற்றியை எதிர்பார்க்க கூடாது. போகப் போக இலகுவாக இயக்கங்கள் முழுமையான கைவரும். சூரிய நமஸ்காரம் ஆண், பெண், சிறுவர், சிறுமியர் அனைவரும் செய்யலாம். தனியாகவும் கூட்டாகவும் செய்யலாம். ஆண்டு முழுவதும் செய்யலாம். அரங்கிலும் செய்யலாம்.
அறையிலும் செய்யலாம். காலை நேரம் சிறந்தது. முடியாதவர்கள் மாலையிலும் செய்யலாம். சாப்பிட்ட பின் குறைந்தது இரண்டு மணி நேரமாவது கழித்து தான் செய்ய வேண்டும். அலுவலக வேலையால் களைத்துப் போனவர்களுக்குக் கூட பத்து பன்னிரெண்டு நமஸ்காரங்கள் டானிக் போல உயிரூட்டும். தனி அறையில் அமைதியில் செய்வது புத்துணர்வை வளர்க்கும். வேண்டியதெல்லாம் ஒரு சிறு ஜமுக்காளமும் துண்டும் தான்.



















ஹால் மார்க் நகைகள்


ஹால் மார்க் நகைகள்


ஹால் மார்க் முத்திரை இடப்பட்ட தங்க நகைகளையே வாங்க வேண்டும். 

ஹால் மார்க் தங்க நகைகளின் தரத்தை உறுதி செய்யும்.அதாவது ஆபரண தங்கத்தில்  உள்ள தங்கத்தின் சுத்தத்தன்மையை அளவிடுவதற்கான   அதிகாரப் பூர்வமான முத்திரை. 2000ம் ஆண்டு முதல்   இந்திய தர நிர்ணய அமைவனத்தால் வழங்கப் படுகிறது. இது நுகர்வோர் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டது.

வாங்கும் நகை சரியான மதிப்பீடு செய்யப்பட்டதா, அதிகாரப்பூர்வமான அஸேயிங் [ Assay ] மற்றும் ஹால்மார்க் மையத்தின் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதா, அதில் கலக்கப்பட்ட உலோகம்  தேசிய/ உலக தர நியமங்களுக்கு ஏற்ப சுத்தம் செய்யப் பட்டுள்ளதா ? என்பதை குறிக்கும்.
 இதனால் மக்கள் மாற்று குறைவான நகைகள் வாங்கி ஏமாற்றம் அடைவதை தடுக்கிறது.

தங்கத்தின் தரம் கேரட் (KARAT) என்ற அலகால் அறியப்படுகிறது. சுத்தமான தங்கம் என்பது 24 கேரட் ஆகும். 
அதாவது 99.9%. முதலீட்டுக்காக தங்கம் வாங்குபவர்கள் 24 கேரட் தங்க கட்டியாக வாங்குவார்கள்.  இதனை கொண்டு ஆபரணங்கள் செய்ய முடியாது. நகை செய்ய வேண்டுமெனில் தங்கத்துடன் சில உலோகங்களை  சேர்த்து செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும் போது அதன் தரம் 22 கேரட், 18 கேரட் தங்கமாக மாறுகிறது. இது தான் ஆபரணத் தங்கமாகும். நாம் வாங்கும் தங்கம் 22 கேரட்டா அல்லது 18 கேரட்டா என்று தெரிந்து கொள் ஹால்மார்க் முத்திரை உதவுகிறது.
24 கேரட் என்பது  99.9%
22 கேரட் என்பது  91.6%
18 கேரட் என்பது  75.0%
14 கேரட் என்பது  58.5%
10 கேரட் என்பது  41.7%
  9 கேரட் என்பது  37.5%
  8 கேரட் என்பது  33.3%
22 கேரட் ஆபரணத்தங்கம் என்பது, 
அதன் சுத்தத்தில் 91.6% ஆகும். 
இதைத்தான் 916 தங்கம் என்று குறிப்பிடுகிறார்கள்.
இந்திய அரசின் தர கட்டுப்பாடு அமைப்பான 

“பீரோ ஆஃப் இந்தியன் ஸ்டாண்டர்டு ” 

(Bureau of IndianStandards) என்ற அமைப்பு தான்

 ஹால்மார்க் முத்திரையை வழங்குகிறது. 

இதைத்தான் BIS முத்திரை பதித்த நகைகள் என்றும் கூறுவார்கள். 

இந்த முத்திரை கொடுப்பதற்கு நாடு முழுவதும் 

பல டீலர்களை லைசென்ஸ் கொடுத்து நியமித்திருக்கிறார்கள். 

இந்த லைசென்ஸ் பெற்ற டீலர்கள் மட்டுமே

 ஹால்மார்க் முத்திரை வழங்க முடியும். 

நகை கடை உரிமையாளர்கள்,  

பொற்கொள்ளர்களிடமிருந்து வாங்கிய  நகைகளை 

இந்த டீலர்களிடம்  கொடுத்து தரத்தை பரிசோதிக்கின்றனர். 

அவ்வாறு பரிசோதிக்கும் நகைகள் 

22 கேரட் எனில்

 91.6% ஹால்மார்க் முத்திரையும்,

 18 கேரட் எனில்

 75% ஹால்மார்க் முத்திரையும் தருகின்றனர்.

ஹால்மார்க் நகை விற்க லைசன்ஸ் 
பெற்ற நகை வியாபாரி 
கடையின் பிரதான இடத்தில் 
இது குறித்த தகவல் பலகை 
வைத்து இருக்க வேண்டும்.
ஹால் மார்க் ஐந்து முத்திரைகளை கொண்டது.
நகை எவ்வளவு சின்னதாக இருந்தாலும் 
நகையின் பின்புறமோ,உட்புறமோ 
ஐந்து முத்திரைகள் இருக்க வேண்டும்.
1.BIS முத்திரை [ THE BIS LOGO ]
2.நேர்த்தி தன்மை முத்திரை [ PURITY OF GOLD ]
3.அஸேயிங் & ஹால்மார்க் முத்திரை [ ASSAY CENTER ]
4.ஹால்மார்க் முத்திரையிடப்பட்ட ஆண்டு [ THE YEAR OF HALL MARKING ]
5.நகை விற்பனையாளர் முத்திரை[ JEWELLER'S IDENTIFICATION MARK ]
விற்பனையாளர் கண்டிப்பாக பூதக்கண்ணாடி [magnifying glass]
வைத்திருக்க வேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது.
வாங்குபவர்கள் பூதக்கண்ணாடி மூலம் ,
ஐந்து முத்திரைகள் இருக்கிறதா என்று 
சரிபார்த்த பின்னரே வாங்க வேண்டும்.
 BIS mark 
 
Assay Center Mark   


Jeweller's identification mark


Identification Marks958916875750585375

Gold in Carat23ct22ct21ct18ct14ct9ct
Purity of Gold 


AYear 2000GYear 2006

BYear 2001HYear 2007

CYear 2002IYear 2008

DYear 2003JYear 2009

EYear 2004KYear 2010

FYear 2005LYear 2011
 
The Year of Hallmarking


BIS Hallmark

916 அல்லது 916 & KDM அல்லது 916 & BIS முத்திரை 
மட்டும் இருந்தால் ,  அது  உண் மையான 
ஹால்மார்க் முத்திரை அல்ல.
ஐந்து  முத்திரைகள் இருக்க வேண்டும்.
KDM என்பது கேட்மியம் மோனாக்சைட் 
என்ற உலோகத்தை குறிப்பது.
நகை செய்யும் போது 
எளிதாக தங்கத்தைப் பற்ற வைக்க 
பயன்படுத்தப் படும் பொடி. 
கேட்மியம் பயன்படுத்துவதால் 
புற்று நோய் வர வாய்ப்பு இருப்பதால் 
ஹால்மார்க் செய்யப்பட்ட நகைகளில் 
இதை பயன்படுத்த BIS அனுமதிப்பது இல்லை.
நகைகளில் KDM என குறிப்பது 
விற்பனையாளரின் விற்பனை தந்திரம்.
KDM  என இருப்பது சுத்தமான தங்க நகை 
என எண்ணி வாங்கி ஏமாற வேண்டாம் என்கிறது BIS. 
கடைகளில் தங்கத்தின் சுத்த தன்மையை 
அளவிட கேரட் மீட்டர் பயன்படுத்துகிறார்கள்.
அது நகையின் மேற்புறம்  [20மைக்ரான் அளவில்]
மட்டுமே சோதித்து காட்டுகிறது.
ஆனால் ஹால்மார்க் செய்யப்பட்ட நகைகள் 
உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட 
FIRE ASSAY முறையைப் பின்பற்றி 
தங்கத்துடன் சேர்க்கப்படும் 
உலோகங்களை பிரித்து எடுத்து 
பின் எஞ்சிய சுத்த தங்கத்தின் 
கேரட் அளவை சோதித்து 
பின் ஹால் மார்க் முத்திரை தருகிறது.
.அஸேயிங் மையத்தில் ஒரு நகை 
எவ்வளவு எடை இருந்தாலும் 
 ஹால் மார்க் முத்திரை தர 
வெறும் 18 ரூ மட்டுமே பெறப்படுகிறது.
எனவே ஹால் மார்க் நகைகள் 
அதிக விலை என கூறுவது தவறு என்கிறது BIS. 
நகை வாங்கும் போது 
முறையான பில் வாங்குவது அவசியம்.
கவனிக்க வேண்டிய விஷயம்
ஹால்மார்க் முத்திரை உள்ள நகை 
என்ற விவரம் மட்டும் போதாது, 
அதற்கு கீழே அந்த நகையின் தரம் எவ்வளவு 
என்பதயும் (91.6% or 75%) குறிப்பிடப்பட்டிருக்கும். 
அது தான் முக்கியம்.
வாங்கிய ஹால்மார்க் நகையில் 
ஏதேனும் குறை இருந்தால் 
[நகை வாங்கும்போது 22 கேரட் என வாங்கிவிட்டு, 
பின்  18 கேரட் என தெரிய வந்தால்]
 ஒரிஜினல் பில்லுடன்
உடனடியாக BIS அலுவலகத்தில் 
புகார் தெரிவிக்கலாம். 
சென்னை, கோயம்புத்தூர் ஆகிய ஊர்களில் 
இந்த அலுவலகம் இருக்கிறது. 
தரம் குறைவாக இருக்கும் நகையை 
அவர்கள் பரிசோதித்து 
புகார் உறுதி செய்யப்பட்டால் 
அந்த ஹால்மார்க் முத்திரை வழங்கிய 
டீலரின் லைசென்ஸை உடனடியாக ரத்து செய்வார்கள்.
எந்த கடையில் நகை வாங்கினோமோ 
அந்தக் கடை கண்டிப்பாக நஷ்டஈடு வழங்கியாக வேண்டும். 
ஒருவேளை நஷ்ட ஈடு தர மறுத்தால் 
நுகர்வோர் நீதிமன்றத்தை அணுகலாம்.  
சின்ன மோதிரமோ, காதில் அணியும் தோடோ 
அனைத்து நகைகளிலும் 
இந்த ஹால்மார்க் முத்திரை இருக்கும். 
ஹால்மார்க் முத்திரை வழங்கும் 
ஒவ்வொரு டீலருக்கும்
 ஒரு தனிப்பட்ட அடையாளத்துடன் கூடிய 
முத்திரை இருக்கும். 
இந்த முத்திரையை வைத்து 
அதை வழங்கிய டீலரை 
எளிதாக கண்டுபிடித்துவிட முடியும்.

தமிழ்நாட்டில் உள்ள BIS  அலுவலகங்கள்:
Southern Regional office:
C.I.T CAMPUS,
 IV CROSS ROAD,
CHENNAI-600 013.
91 044 22542315,22541584, 22541470
Fax: 91 044 22541087 . 
E-mail -     sro@bis.org.in  

இந்திய தர நிர்ணய அமைவனம்,
தென் பிராந்திய அலுவலகம், 
சி.ஐ.டி.வளாகம்,
தரமணி,  
சென்னை- 600113

COIMBATORE BRANCH OFFICE
 5th Floor, Kovai Towers, 
44, Bala Sundaram Road,

Coimbatore 641 018.

landmark- on RTO road, 

near womens polytechnic
0422 2201016, 2210141, 2215622; 
Fax: 0422-2216705
E-mail-cbto@bis.org.in

 கோயமுத்தூர் பிராந்திய அலுவலகம், 
5வது மாடி,
கோவை டவர்ஸ்,
44,பால சுந்தரம் வீதி,
[ பெண்கள் பாலிடெக்னிக்  அருகில் ] 
கோயமுத்தூர்-641018
இதுநாள் வரை சில நகைக் கடைகள் மட்டுமே 
ஹால் மார்க் முத்திரை பதித்த நகைகளை 
விற்பனை செய்தன.
இனி எல்லா நகைக் கடைகளும் 
ஹால் மார்க் முத்திரை பதித்த நகைகளை 
விற்க வேண்டும் என 
மத்திய அமைச்சரவை உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

உலக நுகர்வோர் தினத்தை முன்னிட்டு சிறப்பு நுகர்வோர் விழிப்புணர்வு முகாம்


உதகை அருகே கத்தாடிமட்டம் அரசு மேல் நிலை பள்ளியில்  உலக நுகர்வோர் தினத்தை முன்னிட்டு 
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்றம் நாட்டு நலப் பணி திட்டம் ஆகியன இணைந்து      சிறப்பு நுகர்வோர்  விழிப்புணர்வு முகாமினை நடத்தின.  நிகழ்ச்சிக்கு பள்ளி உதவி தலைமை ஆசிரியர் சாரதாமணி தலைமை தங்கினார் 
நாட்டு  நலப்பணி திட்ட அலுவலர் சிவராஜ் சிவபுத்ரா முன்னிலை வகித்தார்.  

கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம் பேசும்போது 
"நுகர்வோர்கள் இன்று பல்வேறு நிலைகளில் ஏமாற்ற படுகின்றனர் இதற்க்கு கரணம் நுகர்வோர்களிடையே விழிப்புணர்வு குறைவாக உள்ளது தான். நுகர்வோர் அனைவருக்குமே பல்வேறு உரிமைகளும், கடமைகளும் உள்ளது. நுகர்வோரின் கல்விக்கான உரிமையை செய்து தருவது அரசின் கடமையாகும். நுகர்வோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே குடிமக்கள் நுகர்வோர் மன்றங்கள் பள்ளிகளை துவக்கி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. மாணவர்களின் மத்தியில் நுகர்வோர் விழிப்புணர்வை ஏற்படுத்தினால் அது ஒரு தலை முறையினருக்கே விழிப்புணர்வு ஏற்படுத்தியதாக அர்த்தம்.

நுகர்வோருக்கு உரிமை இருப்பதைபோல தவறு செய்பவர்களை தட்டிக் கேட்கும் கடமையும் உள்ளது. பொருட்களை, சேவையை பெறும்போது அவைகளை ஆராய்ந்து பார்ப்பது ஒவ்வொரு நுகர்வோரின் கடமையாகும். வெறும் விளம்பரத்தை மட்டும் நம்பி பொருட்கள் வாங்குவது தவறு.  உரிமையும், கடமையும் சரி சமமாக இருக்க வேண்டும். குறிப்பாக உண்ணும் உணவு பொருட்கள் தரமானவைகளா? கலப்படம் அற்றதா? என்பதை உணர்ந்து சாப்பிட வேண்டும். பாஸ்ட் பூட் எனப்படும் நுடுல்ஸ், லேஸ், போன்ற உணவு வகைகள் உடலுக்கு தெங்கு விளைவிக்க கூடியவை  

கலர் ஏற்றப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும். நமது முன்னோர்கள் இயற்கை உணவுகளை உண்டதால் நீண்ட ஆயுளுடன் வாழ்ந்தனர். இன்று நமது சராசரி வயது 63 ஆக உள்ளது. இது மட்டுமின்றி சிறு வயதிலேயே பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றனர். எனவே தரமற்ற பொருட்களை  வாங்குவதை தவிர்த்து தர முத்திரைகள் பார்த்து பொருட்கள் வாங்க வேண்டும் என்றார் 

முதுகலை ஆசிரியர் அர்சுனன், மாணவி தீபிகா ஆகியோர் நுகர்வோர் குறித்து பேசினார்கள்.  

ஆசிரியர் யோகநாத மூர்த்தி, இராமச்சந்திரன், கணேஷன் மெர்சி  கிராம நுகர்வோர் மன்ற நிர்வாகி ஜெயபிரகாஷ்  மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் 400க்கும் மேற்ப்பட்டோர் பங்கேற்றனர்.


முன்னதாக குடிமக்கள் நுகர்வோர் மன்ற மாணவ தலைவர் ரியாஸ் அகமது வரவேற்று பேசினர் 

முடிவில் குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஆசிரிய ஒருங்கிணைப்பாளர் சிவகுமார் நன்றி கூறினார்.






நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை குடிமக்கள் நுகர்வோர் மன்ற செயலர் ஜெயலச்ச்மி பொருளார் நிஷா மற்றும்  நிர்வாகிகள் செய்து இருந்தனர்.   

பொறுப்புடன் குப்பைகளை அகற்றுவோம்! தூய்மையான சுற்றுச்சூழலை உருவாக்குவோம்!

### 📢 நுகர்வோர் விழிப்புணர்வில் இன்று ஒரு தகவல்! ### ♻️ பொறுப்புடன் குப்பைகளை அகற்றுவோம்! தூய்மையான சுற்றுச்சூழலை உருவாக்குவோம்! Waste Mana...