ஜனநாயக கடமைக்கு இன்று உன்னதமான நாள். கண்டிப்பாக ஓட்டு போடும் பொறுப்பை நிறைவேற்றுங்கள். இதற்காக ஒரு சிறிய கைடு:
* உங்கள் வாக்காளர் அட்டையை தயார்படுத்துங்கள். வீட்டுக்கு பூத் ஸ்லிப் கொடுத்திருந்தால் அதில் எந்த பூத் என்று தெரிந்திருக்கும்.
* இல்லாவிட்டால் கவலை வேண்டாம். ஆன்லைனில் எளிதில் பார்த்து விடலாம். சரி, ஓட்டுச்சாவடிக்கு கிளம்பலாம் நீங்கள் இனி.
* வாக்குசாவடிக்குள் நுழைந்தால், அங்கு உங்கள் எண் உள்ள பூத் முன் வரிசையில் நிற்க வேண்டும். வரிசை நெருங்கும்போது, பெரிய போர்டில் வேட்பாளர்கள் பெயர், சின்னம் எல்லாம் பொறிக்கப்பட்டிருக்கும். அதை பார்த்து கொள்ளலாம்.
* பூத்துக்குள் நுழைந்ததும், முதல் இருக்கையில் அமர்ந்திருக்கும் தேர்தல் அதிகாரி, உங்கள் வாக்காளர் அடையாள அட்டை, பூத் ஸ்லிப் இரண்டையும் வாங்கி பார்ப்பார்.
* உங்கள் பெயர், வாக்காளர் எண், முகவரியை உரக்க படிப்பார். அருகே வரிசையாக உட்கார்ந்திருக்கும் கட்சிகள் சார்ந்த ஏஜென்ட்கள் அதை தங்களிடம் இருக்கும் பதிவேட்டில் உறுதி செய்து கொள்வர்.
* பெயரில் குழப்பம், முகவரி தவறு என்று ஆட்சேபம் தெரிவிக்காதபட்சத்தில் உங்களை அடுத்த இருக்கையில் உள்ள அதிகாரியிடம் அனுப்புவார்.
* அடுத்த இருக்கையில் உள்ள அதிகாரியிடம் நீங்கள் போக வேண்டும். அவர் உங்கள் இடது கை விரலில் மை வைப்பார்.
* அடுத்த அதிகாரி தன் பதிவேட்டில் உள்ள பெயர், முகவரியுடன் ஒப்பிட்டு பார்த்து கையெழுத்து வாங்குவார். பட்டனை ஆன் செய்வார். அவரிடம்தான் வாக்கு இயந்திரத்தின் கன்ட்ரோல் இருக்கும்.
* அடுத்து மறைக்கப்பட்ட இடத்தில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்கு இயந்திரத்தின் முன் நீங்கள் சென்று, பெயர், சின்னங்களை பார்த்து விருப்பமான வேட்பாளர் பெயர் எதிரே உள்ள பட்டனை அழுத்த வேண்டும்.
* அவ்வளவுதான். நீங்கள் ஓட்டு போட்டு விட்டீர்கள். ஜனநாயக கடமையாற்றிய திருப்தியுடன் வெளியே வரலாம். மை பூசிய விரலை உறவினர்கள், நண்பர்களிடம் காட்டி, நான் ஓட்டு போட்டுவிட்டேன் என மகிழலாம்.

No comments:
Post a Comment