கர்ம வீரர் 2



விட்டுக்கொடுக்கும் மனம்... பொறுமை... பகுத்தறிவு... 
இது சரித்திர நாயகன்...!!

காமராஜரின் இளமைப் பருவம்!!

👉கு.காமராஜர் அவர்கள், 1903ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15ஆம் தேதி விருதுநகரில் குமாரசாமி-சிவகாமியம்மாவின் மகனாக பிறந்தார். 

👉'காமாட்சி" எனும் குலதெய்வத்தின் பெயரே ஆரம்பத்தில் இவருக்கு சூட்டப்பட்டது. அவரின் தாய் செல்லமாக 'ராசா" என அழைப்பதுண்டு. பிற்காலத்தில் இவ்விரு பெயர்களும் சேர்ந்தே 'காமராசர்" என்று வரலாற்றில் நீங்காத இடம்பிடித்த பெயராக மாறியது.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி :

👉காமராஜர் அவர்கள், ஆரம்பக்கல்வியை தனது ஊரிலேயே தொடங்கி, 1908ஆம் ஆண்டில் 'ஏனாதி நாராயண வித்யா சாலையில்" சேர்க்கப்பட்டார். 

பின்னர் அடுத்த வருடமே விருதுப்பட்டியிலுள்ள உயர்நிலைப்பள்ளியான 'சத்ரிய வித்யா சாலா பள்ளியில்" சேர்ந்தார்.

👉அவருக்கு ஆறு வயதிருக்கும்போது, அவருடைய தந்தை இறந்ததால், அவரின் தாயாரின் நகைகளை விற்றுக் குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 

மேலும், தன்னுடைய பள்ளிப்படிப்பை தொடரமுடியாத நிலைக்கு தள்ளப்பட்ட காமராஜர், தன்னுடைய மாமாவின் துணிக்கடையில் வேலைக்குச் சேர்ந்தார்.

👉படிக்கும்போதே மிகவும் பொறுமையுடனும், விட்டுக்கொடுக்கும் மனதுடனும் விளங்கினார். 

👉காமராஜர் பயின்ற பள்ளியில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு பிரசாதம் வழங்கப்படுவதை வழக்கமாக கொண்டிருந்தனர். 

பிரசாதம் விநியோகிக்கப்படும்போது மாணவர்கள் முண்டியடித்துக்கொண்டு சென்று, ஒரு தடவைக்கு இரண்டு தடவையாகப் பிரசாதத்தை கைநிறைய பெற்றுக்கொண்டனர். 

பிரசாதத்துக்காக அந்த மாதிரி முண்டியடித்துக்கொண்டு செல்வது காமராஜருக்கு பிடிக்கவில்லை. ஆகவே, ஒரு மூலையில் ஒதுங்கி நின்றார்.

👉கடைசியாக மிச்சமிருந்த பிரசாதத்தை வாங்கிக்கொண்டு வீட்டுக்குச் சென்றார்.

 'எல்லோரும் நிறைய பிரசாதம் வாங்கிக்கொண்டு செல்லும்போது, நீ மட்டும் குறைவாக வாங்கி வந்தது ஏன்?" என வீட்டில் உள்ளவர்கள் அவரைக் கேட்டனர். 

அதற்கு காமராஜர் 'மற்ற மாணவர்களுடன் போட்டி போட்டுக்கொண்டு சென்று பிரசாதம் வாங்க எனக்கு விருப்பமில்லை. 

பள்ளியில் எல்லா மாணவர்களிடமும் ஐந்து காசு வசூலித்தவர்கள், ஒரே மாதிரியாகப் பிரசாதம் வழங்கியிருக்க வேண்டும். அவ்வாறு செய்யாதது அவர்கள் தவறு" என்று கூறினார். சிறுவயது முதலே பகுத்தறியும் ஆற்றலையும் பெற்றிருந்தார் காமராஜர்.



No comments:

Post a Comment

உயில் நடைமுறைகள்

 *பதிவு செய்யப்பட்ட உயில் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியுமா?... சட்டம் கூறுவது என்ன*...✍🏻 ⚖️உயில் என்பது ஒரு நபர் தனது மரணத்திற்க...