ஆட்சி புரிந்தது 9 ஆண்டுகள்... ஆனால் இன்றும் பலரது மனதில் நீங்காமல்...
முதல்வராக பதவியேற்ற காமராஜர்...!!
👉காமராஜர், மிகச்சிறந்த பேச்சாளர் என புகழப்பட்ட சத்தியமூர்த்தி அவர்களை தன்னுடைய அரசியல் குருவாக மதித்தார்.
👉1936ஆம் ஆண்டு சத்தியமூர்த்தி காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றபோது, காமராஜரை செயலாளராக நியமித்தார்.
இந்தியா விடுதலை அடைவதற்கு முன்பே, சத்தியமூர்த்தி இறந்துவிட்டார்.
ஆனால், காமராஜர் இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, முதலில் சத்தியமூர்த்தி வீட்டிற்கு சென்று தேசியக்கொடியை ஏற்றினார்.

சத்தியமூர்த்தி அவர்களுடன் காமராஜர்
தமிழக முதல்வராக காமராஜர் :
👉1953ஆம் ஆண்டு, ராஜாஜி கொண்டுவந்த குலக்கல்வி திட்டத்தால் எதிர்ப்புகள் கிளம்பியது. இதனால், ராஜாஜியின் செல்வாக்கு குறைந்ததோடு மட்டுமல்லாமல், காங்கிரஸ் கட்சி உள்ளேயும் மதிப்பு குறைந்தது.
👉இதனால், ராஜாஜி பதவியிலிருந்து விலகி, தன் இடத்திற்கு சி.சுப்பிரமணியத்தை முன்னிறுத்தினார்.
ஆனால், கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில், காமராஜர் பெருவாரியான வாக்குகளை பெற்றதால், 1954ஆம் ஆண்டு தமிழக முதல்வராக பொறுப்பேற்றார்.
👉காமராஜர் தமிழக முதலமைச்சராக பதவி ஏற்பதற்கு முன், சத்தியமூர்த்தியின் வீட்டுக்கு சென்று அவருடைய படத்திற்கு மாலை அணிவித்து வணங்கி, தன்னுடைய பணியை தொடர்ந்தார்.
👉இந்தியாவில் ஆங்கிலம் தெரியாத ஒருவர் ஒரு மாநிலத்தின் முதலமைச்சரானது அதுவே முதன்முறை.
ஆனால் ஆங்கிலம் தெரியாமலும் 6 ஆண்டுகளே கற்ற கல்வியுடனும் முதலமைச்சர் பொறுப்பை ஏற்ற அவர்தான் அடுத்த 9 ஆண்டுகளுக்கு தலைச்சிறந்த தலைமைத்துவத்தை தமிழகத்திற்கு வழங்கினார்.
அவரது காலக்கட்டத்தில் இந்தியாவிலேயே மிகச்சிறந்த முறையில் நிர்வகிக்கப்பட்ட மாநிலம் என்ற பெருமையை பெற்றது தமிழ்நாடு.

No comments:
Post a Comment