கர்ம வீரர் 3



தன்னலமில்லா தலைவன்..
இன்றும் மனதைவிட்டு நீங்காத சரித்திர மனிதர்..!!

விடுதலை போராட்டத்தில் காமராஜரின் பங்கு..!!

👉பள்ளிப்படிப்பை தொடரமுடியாத நிலை ஏற்பட்டதும் காமராஜர் தன் மாமாவின் துணிக்கடையில் வேலைக்கு சேர்ந்தார். அப்போது இந்தியா முழுவதும் சுதந்திரத் தீ கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது. அவருக்கு 15 வயதானபோது ஜாலியன் வாலாபாக் படுகொலைப் பற்றிய செய்தி அவரின் காதுக்கு எட்டியது.

👉டாக்டர் வரதராஜுலு நாயுடு, கல்யாணசுந்தர முதலியார் மற்றும் ஜார்ஜ் ஜோசப் போன்ற தேசத்தலைவர்களின் பேச்சுக்களில் கவரப்பட்ட காமராஜர் சுதந்திரப் போராட்டத்திலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். 'ஹோம் ரூல் இயக்கத்தின்" ஒரு அங்கமாக மாறிய அவர், பல போராட்டங்களிலும் கலந்துகொண்டார்.

👉அதேசமயம் காந்தி விடுத்த ஒத்துழையாமை இயக்க அழைப்பை ஏற்று 1920ஆம் ஆண்டில் தனது 16வது வயதில் காங்கிரஸ் கட்சியில் முழுநேர உறுப்பினராக சேர்ந்தார். அன்றிலிருந்து பல ஆண்டுகள் சௌகர்யம், பதவி, வசதி என்று பாராமல் கட்சிக்காக கடுமையாக உழைத்தார்.

👉1930ஆம் ஆண்டில் வேதாரண்யத்தில் நடந்த காந்தியடிகளின் உப்பு சத்தியாக்கிரகதில் கலந்துக்கொண்டார். அதனால் அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அடுத்த ஆண்டே, 'காந்தி இர்வின் ஒப்பந்தத்தின்" அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டார்.

👉பின் விருதுநகர் வெடிகுண்டு வழக்கில் கைதானார். அப்போது சேலம் டாக்டர் பெ.வரதராஜூலு நாயுடுவின் வழக்காடும் திறமையால் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் விடுதலை ஆனார். 1940 இல் மீண்டும் கைதாகி வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

👉அங்கிருக்கும் போதே விருதுநகர் நகராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒன்பது மாதங்களுக்கு பின் விடுதலை ஆனதும் நேராக சென்று தன் பதவியை விலகினார். பதவிக்கு நேர்மையாக முழுமையாகக் கடமையாற்ற முடியாத நிலையில் அதில் ஒட்டிக் கொண்டிருப்பது தவறு என்பது அவருடைய கொள்கையாக இருந்தது.

👉மீண்டும் 1942ல் ஆகஸ்ட் புரட்சி நடவடிக்கைகளுக்காக கைது செய்யப்பட்டார். இந்த முறை மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையை பெற்றார்.

👉மேலும், காமராஜர் அவர்கள் 'ஒத்துழையாமை இயக்கம்", 'வைக்கம் சத்தியாக்கிரகம்", 'நாக்பூர் கொடி சத்தியாக்கிரகம்" போன்றவற்றில் பங்கேற்றார். சென்னையில், 'வாள் சத்தியாக்கிரகத்தை" தொடங்கி, நீல் சிலை சத்தியாக்கிரகத்திற்கு தலைமை தாங்கினார்.

👉மேலும், ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக நடந்த பல போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றார்.



No comments:

Post a Comment

உயில் நடைமுறைகள்

 *பதிவு செய்யப்பட்ட உயில் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியுமா?... சட்டம் கூறுவது என்ன*...✍🏻 ⚖️உயில் என்பது ஒரு நபர் தனது மரணத்திற்க...