ஸ்கேன் மையங்களில் முறைகேடு
நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
நீலகிரி மாவட்டத்தில் பெருகி வரும் ஸ்கேன் மையங்களில் முறைகேடுஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் வலியுறுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் மருத்துவ துறையில் அரசுமருத்துவமனைகள் தான் முன்னனியில் சிசிச்சை அளித்து கொண்டிருந்தது.
ஆனால் போதியமருத்துவர்கள் இல்லாத காரணத்தாலும், மேற்படிப்பு படித்த மருத்துவர்கள், அறுவை சிசிச்சைநிபுனர்கள் பற்றாக்குறை நிலவி வருவதால் தற்போது பல தனியார் மருத்துவமனைகள்அதிகரித்து வருகின்றது.
இந்நிலையில் பல தனியார் மருத்துவமனைகள் மற்றும் தனியார்நிறுவணங்கள் ஸ்கேன் மையங்கள் அமைத்து உள்ளனர்.
ஸ்கேன் மையங்கள் அமைக்கரேடியோதெரபி பட்டயம் இரண்டாண்டு படிப்பு படித்தவர்களுக்கு மட்டுமே உரிமம்வழங்கப்படுகின்றது.
ஆனால் இந்த படிப்பு படித்தவர்கள் தான் இதுபோன்ற ஸ்கேன்மையங்களில் பணி புரிய வேண்டும்.
அப்போது தான் ஸ்கேன் அறிக்கை சரியாக தயாரிக்கமுடியும்.
ஆனால் பல ஸ்கேன் சென்டர்களில் உரிய கல்வி தகுதி இல்லாதவர்களும்பணியில் உள்ளனர். அரசு மருத்துவமனைகள் மூலம்எடுக்கப்படும் ஸ்கேன்களுக்கு அறிக்கை தரப்படுவதில்லை.
அரசு மருத்துவமனைகளிலும்,ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் எடுக்கப்படும் ஸ்கேன்கள் பெயரளவிற்கேஎடுக்கப்படுகின்றது என்பது குறிப்பிட தக்கது.
அரசு மருத்துவ மனைகள் சுகாதாரநிலையங்களில் கூட ஸ்கேன் எடுக்க தனியார் மருத்துவமனைகளுக்கே பரிந்துரைசெய்யப்படுகின்றது.
கர்ப்பினி தாய்மார்களுக்கு கர்ப்பம் உறுதி செய்ய 3 மாதத்திலும், 6மாதத்தில் குழந்தையின் வளர்ச்சி விகிதம் கணக்கிடவும், குழந்தையின் நிலை குறித்து அறியகடைசியாக 9 மாதத்திலும் ஸ்கேன் எடுக்கப்படுவது வழக்கம்.
தற்போது தனியார்மருத்துவமனைகள் மற்றும் தனியார் ஸ்கேன் மையங்களில் மாதந்தோறும் ஸ்கேன் எடுக்ககட்டாயபடுத்தி அதன் மூலம் லாபம் சம்பாதித்து வருகின்றனர்.
சில மருத்துவர்கள்மாதந்தோறும் ஸ்கேன் எடுக்க சொல்வதும் வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.
அடிக்கடிஸ்கேன் எடுப்பதால் ஸ்கேன் கதிர்வீச்சில் குழந்தைக்கும் தாய்க்கும் பாதிப்பு ஏற்படும் என்பதுஅறிவியல் ஆய்வுகள் தரும் தகவல்கள் ஆகும்.
அரசு மருத்துவர்களுக்கு 6 மாதம், 2 மாதம்என ஸ்கேன் எடுக்க பயிற்சி அளிக்கப்பட்டாலும் பல அரசு மருத்துவர்கள் ஸ்கேன் எடுக்கதயக்கம் காட்டி, பயிற்சி பெற்ற மருத்துவர்களும் தனியார் ஸ்கேன் சென்டர்களுக்கே கர்ப்பினிதாய்மார்கள் மற்றும் வயதான பெண்களை கர்ப்பபை புற்றுநோய் குறித்த ஸ்கேனுக்குஅனுப்புவது பல ஏழை எளிய மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடதக்கது.
ஸ்கேன் மையங்களில் வயிற்றில் வளரும் குழந்தைகள் ஆணா, பெண்ணா என ஆய்வுசெய்து தகவல் தெரிவிக்க கூடாது என அரசு மூலம் ஒவ்வொரு மூன்றாண்டுகளுக்குஒருமுறை ஸ்கேன் சென்டர் உரிமம் புதுபிக்கும்போது உறுதிமொழி ஆவணம் கொடுத்தேஉரிமம் புதுபிக்கப்படுகின்றது.
ஆனால் சில தனியார் ஸ்கேன் சென்டர்களில் இதுபோன்று வயிற்றில் இருக்கும் குழந்தை குறித்த தகவல் அளிப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளது,
இதனால் முறைகேடுகள் அதிகரிப்பதால் ஏழை எளிய மக்கள் பெருமளவில்பாதிக்கப்படுகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் செயல்படும் ஸ்கேன் சென்டர்கள் முறையானஅங்கீகாரம் பெற்றுள்ளதா எனவும், ஸ்கேன் மையங்களில் பணியாற்றுபவர்கள் தகுதிபெற்றிருக்கின்றார்களா என்பதை சம்பந்தபட்ட துறையினர் ஆய்வு செய்ய வேண்டியதுஅவசியம்.
அதுபோல அரசு மருத்துவமனைகளில் உள்ள மருத்துவர்களுக்கு பல்வேறு பயிற்சிஅளிப்பது போல் ஸ்கேன் எடுக்கவும் போதிய பயிற்சி அளித்து அனைத்து அரசுமருத்துவமனைகள் மற்றும் சமுதாய சுகாதார நிலையங்களில் தாய்மார்களுக்கு ஸ்கேன்எடுத்து அதற்கான அறிக்கை அளிக்க வேண்டும். என கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையத்தின் தலைவர் சிவசுப்பிரமணியம் தமிழக முதல்வருக்கு மனு அனுப்பியுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Ckyc என்றால் என்ன
CKYC (Central Know Your Customer) என்றால் என்ன? CKYC (Central Know Your Customer) என்பது இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட Central KYC Rec...
-
:1.காவல் நிலை ஆணைகள் மொத்தம் எத்தனை தொகுதிகளாக (Volume)உள்ளது? -மூன்று தொகுதிகளாக. 2.காவல் நிலை ஆணைகள் தொகுதி -1ல் மொத்தம் எத்தனை ஆணைக...
-
https://kutumbapp.page.link/Dva5RTUpZAbb1pR57 பட்டா பதிவு புத்தக சட்டம் 1983 1. பிரிவு 3(1) - ன் கீழ் வட்டாட்சியர் நில உரிமையாளருக்கும் ...
-
பதிவு செய்யப்பட்ட சங்கம் என்பது என்ன? Law on registration of societies 1. பதிவு செய்யப்பட்ட சங்கம் என்பது என்ன? பதிவு செய்யப்பட்ட சங...
No comments:
Post a Comment