*வருவாய் ஆய்வாளர்களின் கடமைகளும் பொறுப்புகளும்*

 *வருவாய் ஆய்வாளர்களின் கடமைகளும் பொறுப்புகளும்*


🌹🌹🍓🍓🏀


1. பயிராய்வு

2. கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராமப் பணியாளர்களின் பணிகளை மேற்பார்வை செய்தல்.


3. நிலவரி வசூல், கடன்வசூல் மற்றும் அரசின் பல்வேறு துறைகளுக்கு சேரவேண்டிய தொகைகளை வசூலித்தல்.


4. கிராம கணக்குகளைத் தணிக்கை செய்தல்.


5. “ஏ” மற்றும் “பி” மெமொ இனங்களைத் தணிக்கை செய்தல்.


6. புறம்போக்கு இடங்களில் உள்ள மரங்களை தணிக்கை செய்தல்.


7. ஆட்சேபணையுள்ள ஆக்கிரமிப்புகளை கண்டுபிடித்து அவற்றை அகற்றுதல்.


8. இயற்கை இடர்பாடுகளின் போது பாதிக்கப்படுவோருக்கு உணவு வழங்கிட உடனடி ஏற்பாடு செய்வதுடன், நிவாரணம் வழங்கிட ஆவண செய்தல்.


9. முதியோர் உதவித்தொகை பெறுவோர் மற்றும் பிற நலத்திட்டங்களின் கீழ் பயன்பெறும் பயனாளிகளின் விவரம் சரிபார்த்தல்.


10. பட்டா, பாஸ் புத்தகம் கணக்கெடுப்பு மற்றும் பதிவுகளை சரிபார்த்தல்.


11. பாசன ஆதாரங்களை தணிக்கை செய்தல்.


12. மனுநீதி நாள் முகாம்களில் கலந்து கொண்டு பொதுமக்களின் குறைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுத்தல்.


13. ஆறுகள் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களில் சட்டவிரோதமாக மணல், கல் போன்றவை தோண்டி எடுக்கப்படுகின்றனவா என்பதை கண்காணித்து நடவடிக்கை எடுத்தல்.


14. வரி வசூல் காலங்களில் அனைத்து வசூல் கணக்குகளையும் தணிக்கை செய்தல்.


15. வருவாய் தீர்வாயப் பணி தொடர்பாக கிராம நிர்வாக அலுவலரால் தயாரிக்கப்படும் கணக்குகளை சரிபார்த்து அங்கீகரித்தல்.


16. பதிவுகள் மற்றும் பதிவு மாற்றங்களை சரிபார்த்தல்.


17. பிறப்பு, இறப்பு மற்றும் திருமணப் பதிவுகளை தணிக்கையிடல்.


18. நிபந்தனையின் பேரில் வழங்கப்படும் நில ஒப்படை, நலக்குத்தகை, நல மாற்றம் ஆகிய இனங்களை சரிபார்த்தலும் நிபந்தனை மீறல்களை கண்டுபிடித்தலும்.


19. குத்தகை உரிமை இனங்களை தணிக்கை செய்தல்.


20. நில பராதீன இனங்களை தணிக்கை செய்து நிபந்தனைகள் மீறப்பட்டனவா என்பதை சரிபார்த்தல்.


21. பட்டா நிலங்களில் அனுபவம் குறித்து சரிபார்த்தல்.


22. வனக் குற்றங்களை கண்டறிந்து நடவடிக்கை எடுத்தல்.


23. முக்கிய பிரமுகர்கள் வருகை தொடர்பான பணிகளைக் கவனித்தல்.


24. தீர்வை ஜாஸ்தி, பசலி ஜாஸ்தி வரி தள்ளுபடி இனங்களை, மரப்பட்டாக்கள் மற்றும் அரசு தோப்புகள் ஆகியவற்றை தணிக்கை செய்தல்.


25. கிராம கல் டிப்போக்களை தணிக்கை செய்தல்.


26. புல எல்லைக்கற்களை சரிபார்த்தல்


27. பல்வேறு பிற பணிகள்:-


அ) மர மதிப்பு நிர்ணயம் செய்தல்


ஆ) நில ஒப்படை குத்தகை மற்றும் நில மாற்றம் சம்பந்தமாக புலத்தணிக்கை செய்தல்.


இ) கால்நடைப் பட்டிகளைப் பார்வையிடல் மற்றும் அது தொடர்பான கணக்குகளை சரிபார்த்தல்.


ஈ) வருவாய் வசூல் சட்டம் மற்றும் பிறவகை ஜப்தி நடவடிக்கைகள்.


உ) சிறுபாசனத் திட்டங்களை பார்வையிடுதல்.


ஊ) தல விசாரணை கோரி வரும் பல்வகை மனுக்களின் பேரில் விசாரணை மேற்கொள்ளுதல்.


எ) மாதாந்திர சாகுபடி கணக்குகளை தயார் செய்து வட்டாட்சியருக்கு அனுப்புதல்.


ஏ) கிராம மக்களின் சுகாதார நிலை, கால்நடைகளின் சுகாதார நிலை, குடிநீர் விநியோகம், மழையளவு, பயிர்நிலைமை ஆகியவை குறித்து அறிக்கை அனுப்புதல்.


ஐ) கிராமச் சாவடிகளை பார்வையிடல் மற்றும் அவைகளின நிலை குறித்து அறிக்கை அனுப்புதல்.


28. பல்வேறு சான்றுகள் வழங்கும் பொருட்டு அறிக்கை அனுப்புதல்.


29. மக்கள் தொகை கணக்கெடுப்பு, கால்நடைகள் கணக்கெடுப்பு பாசன ஆதாரங்கள் கணக்கெடுப்பு முதலிய பணிகளை மேற்பார்வை செய்தல்.


30. வாக்காளர் கணக்கெடுப்பு மற்றும் தேர்தல்கள் தொடர்பான பணிகள்.


சரக வருவாய் ஆய்வாளர் மேற்பார்வை பணிகள்


வ.எண்.

ஆய்வு பொருள்

விவரம்

தொடர்புடைய கிராமக் கணக்குகள் / வருவாய் நிலை ஆணை / அரசு ஆணை விவரம்

(1)

(2)

(3)

(4)


1.

பயிராய்வு

கிராம நிர்வாக அலுவலர் பிரதிமாதம் பயிராய்வு மேற்கொண்டு அடங்கலில் பதிவு செய்தல்

எண்.2(அடங்கல்)


2.

அரசு புறம்போக்கு நிலங்களில் உள்ள மரங்கள்

அரசு-குடிகள் ஆகியோருடைய தோட்டம் மற்றும் தோப்புகள் மரத்தீர்வைக்குட் பட்டவை, மரத்தீர்வை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியவை, மரத்தீர்வைக்குட்படாத மரங்களின் பலன்களை பசலிதோறும் ஏலம் விடுதல், மரங்கள் நடுவதற்கு உரிமம் வழங்குதல்.


3.

ஆக்ரமணங்கள்

ஆக்ரமணங்கள் பார்வையிட்டு அடங்கலில் பதிவு செய்தல்

ஆட்சேபணையற்ற ஆக்ரமணங்கள் ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுத்தல் ஆக்ரமணங்கள் பேரில் சாதாரண தீர்வை தண்டத்தண்ணீர் தீர்வை விதித்தல்.

ஆக்ரமணங்கள் காலி செய்ய நடவடிக்கை எடுத்தல்,. ஆக்கிரமிப்பு சட்டம் 5,7,6வது பிரிவின் கீழ் அறிவிப்பு நடவடிக்கை

2 (அடங்கல்)

ஏ.மெமோ

வ.நி.ஆ.26(5)


பி.மெமோ

வ.நி.ஆ.26(2)

நில ஆக்ரமணச்சட்டம்1905


4.

நிபந்தனைமீறப்பட்ட இனங்கள்

நிலமாற்றம்

நிலஉரிமை

நிலஉரிமை விட்டுவிடல்

நில ஒப்படை(சாகுபடி நிலம்)

தாழ்த்தப்பட்டோருக்கு ஓதுக்கீடு

செய்யப்பட்டவை

வீட்டுமனை ஒப்படை

குறுகிய மற்றும் நீண்டகால

குத்தகைக்குவிடப்பட்ட இனங்கள்

ஆய்வுபோது நிபந்தனைகள்

மீறப் பட்டுள்ளதா என கண்டறியப்பட வேண்டும்.

வ.நி.ஆ.23

வ.நி.ஆ.24

வ.நி.ஆ.33

வ.நி.ஆ.15

அ பதிவேடு (செட்டில்

மெண்டு பதிவேடு)

வ.நி.ஆ.21

வ.நி.ஆ.24(அ)

வ.நி.ஆ.17


5.

மாதாந்திர சாகுபடி கணக்கு பராமரித்தல்

பிரதிமமாதம் பயிர் சாகுபடி விபரம். வட்ட அலுவலகத்திற்கு வருவாய் ஆய்வாளர் மூலம் 25ம். தேதி அனுப்பிவைத்தல்.

எண் 1,1ஏ


6.

அரசு பாசன ஆதாரங்களிலிருந்து நீர்; பாய்ச்சப்பட்ட சாகுபடி பரப்பிற்கு தண்ணீர் தீர்வை விதித்தல்

பசலி ஜாஸ்தி, தீர்வை ஜாஸ்தி மற்றும் முறையற்ற விதமாக சாகுபடிக்கு நீர்பாய்ச்சப்பட்டமைக்கு அபராத தண்ணீர் தீர்வை விதித்தல், வட்ட அலுவலகத்திற்கு தண்ணீர் தீர்வை பட்டி அனுப்பி ஆணை பெறுதல்

எண்.6

வ.நி.ஆ.4


7.

பருவ நிலை கோளாறு காரணமாக ஏற்படும் தரிசு மற்றும் பயிர் இழப்பு ஆகியவற்றிற்கு அரசால் வழங்கப்படும் வழக்கத்திற்கு மாறான தள்ளுபடி.

தள்ளுபடி குறித்து அரசாணை பெற்று நடவடிக்கை மேற்கொள்ளுதல்

எண்.5-1,5ஐஐஐ

வ.நி.ஆ.13,14


8.

நிலையான தள்ளுபடிகள்

இறவை, நில உரிமை மாற்றம் (அலியநேஷன்), நில உரிமை பெறல்(நில ஆர்ஜிதம்) நீண்ட நாள் குத்தகை வஜாக்கள் (தள்ளுபடி தொடர்ந்து தேவையா என ஆய்வு செய்யப்பட வேண்டும்)

செட்டில்மெண்ட் பதிவேடு

வ.நி.ஆ-24

நில உரிமை பெறல்

சட்டம் 1894

வ.நி.ஆ.17


9.

பட்டா மாறுதல்

பட்டா மாறுதல் நடவடிக்கைகள், முழுபுலங்கள் மற்றும் உட்பிரிவு இனங்கள் (பதிவுகள் சரிபார்த்து ஒப்புதல் செய்யப்பட வேண்டும்

எண.3

2(அடங்கல்)10-ஐ

(சிட்டா)அ பதிவேடு

வ.நி.ஆ.தொகுதி-ஐ

நி.ஆ.31


10.

வசூல் கணக்குகள்

நிலவரி, அபராதம், கடன் மற்றும் அரசுக்கு சேர வேண்டிய தொகை வசூலித்தல், தாமதித்த இருசால் மற்றும் கையாடல் இனங்கள் கண்டு பிடித்தல்

13,14,14சி, 15,16, 17,18


11.

தடையாணை புத்தகத்தில் பதிவுகளை செய்தல்

திட்டமிடப்பட்ட அல்லது எதிர்கால திட்டங்களுக்கு தேவைப்படும் நிலங்கள்.

பள்ளிகள், சாலைகள், ரயில் நிலையம் முதலானவற்றின் எதிர் காலத்தேவைக்கு தேவைப்படும் நிலங்கள்

பெருமளவில் கனிமவளம் கொண்டுள்ள நிலங்கள்

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிலங்கள் சட்டம் ஒழுங்கு பிரச்சனை காரணமாக அளிக்கக்கூடாத நிலங்கள்

இவ்வகையான நிலங்களை தகுந்த ஆணைபேரில் தடையானண புத்தகத்தில் பதிவுகள் மேற்கொண்டு பராமரித்தல்.

தொடர்புடைய அரசாணை மற்றும் நில நிர்வாக ஆணைகள்

வ.நி.ஆ.15-2(2)

தடையாணை புத்தகம்

அ பதிவேடு அடங்கல்


12.

பாசன ஆதாரங்கள்

வருடம் முழுவதும் நீர் அளிக்கக்கூடிய காவிரிபோன்ற ஆறுகள் (முதல் வகுப்பு)

8 முதல் 10 மாதங்கள் வரை நீர் கிடைக்கக் கூடியது (இரண்டாம் வகுப்பு)

5முதல் 8 மாதங்கள் வரை நீர் கிடைக்கக் கூடியது (மூன்றாம் வகுப்பு)

3 முதல் 5 மாதங்கள் வரை நீர் கிடைக்கக் கூடியது (நான்காம் வகுப்பு)


3 மாதங்களுக்கு குறைவாக நீர் கிடைக்கக் கூடியது (ஐந்தாம் வகுப்பு)

இந்த பாசன ஆதாரங்களில் பழுது, சேதம் போன்றவற்றினை வருவாய்த்துறை கண்காணித்தல்.

பாசன ஆதாரங்களில் பொதுப்பணித் துறையினரால் மாற்றம் செய்ய உத்தேசிக்கும் போதும் மற்றும் சிறுபாசன திட்டம் செயலாக்கத்தின்போதும் மற்றும் புது திட்டங்கள் திட்டமிடும்போதும் ஒத்திசைவு கோரும் போது ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்தல்.

மேம்பாட்டு வரிவிதிக்க நடவடிக்கை மேற்கொள்ளுதல்


பாசன ஆதாரத்தின் வகுப்பு உயர்த்துதல் நடவடிக்கை எடுத்தல்


13.

பிறப்பு இறப்பு பதிவேடுகள்

கிராம நிர்வாக அலுவலக பதிவாளர் என்ற முறையில் மேற்கொள்ளும் பணிகள்

படிவம்-1(பிறப்பு)

படிவம்-2(இறப்பு)

படிவம்-3 (இறந்து பிறத்தல்)

இதுஇரண்டு பகுதிகளாகக் கொண்டது


1.சட்ட ரீதியான பகுதி (டுநபயட Pயசவ)


2.புள்ளிவிபரப்பகுதி (ளுவயவளைவiஉயட Pயசவ)

முதல் பகுதி - பதிவாளர் பராமரிப்பில் உள்ளது.

இரண்டாவது பகுதி - பிரித்தெடுத்து சுகாதார துணை இயக்குநருக்கு அனுப்பி வைத்தல்;

பதிவுகள் குறித்து வாய்மொழி விசாரணை செய்து சரிபார்த்தமைக்கான ஒப்புதல் செய்யப்பட வேண்டும்.


த.நா.பிறப்பு இறப்பு விதிகள் 2000

எண்.19-பதிவேடுகள் (மேற்படி விதிகளின்படி திருத்தியமைக்கப்பட்டது)


14.

கால்நடைவியாதி மற்றும் இறப்பு அம்மை குத்திய பாதுகாப்பு பெற்றிராத குழந்தைகள் பற்றிய பதிவேடு

இம்மாதிரியாக நிகழ்வுகள் குறித்து ஆய்வுபோது விசாரணை மேற்கொண்டு சரிபார்த்தல்

எண்.19


15.

மழை மற்றும் நீர்; வழங்கு விவரப்பட்டி

மழையளவு மற்றும் நீர் வழங்கு ஆதாரத்தின் தண்ணீர்வரத்து பதிவு செய்தல் முகாம் போது வருவாய் ஆய்வாளர் பதிவுகள் சரிபார்த்து சோதனை முடிவினை குறிப்புரை கலத்தில் பதிவு செய்ய வேண்டும்.

எண்.20


16.

கிராமச் சாவடிகள்

கிராமச் சாவடிகள் பராமரிப்பு,

பழுதுபட்டிருப்பின் சீரமைக்க முன்மொழிவுகள் அனுப்பி வைத்தல்

தனி நிதிகள் விதி

தொகுப்பு


17

கால்நடைப்பட்டிகள்

கிராம நிர்வாக அலுவலர்களால் கால்நடைப்பட்டிகள் நிர்வாகம், கால்நடை அடைப்பு, கட்டணம் வசூலித்தல், விடுவித்தல் மற்றும் விடுவித்துச் செல்லாத கால்நடைகளை ஏலத்திற்கு கொண்டு வருதல் முதலான நடவடிக்கைகள் ஆய்வு செய்தல். 


கட்டிடம் பழுதுபட்டிருப்பின் சீரமைப்பு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளுதல் தனிநிதிகள் விதித் தொகுப்பு பதிவேடுகள் மற்றும் படிவங்கள் 34,35,36,37,38,39 ஆகியவை பராமரித்தல்

தமிழ்நாடு கால்நடைகள் உரிமையில்லாத இடத்தில் நுழைதல் சட்டம் 1871

தனி நிதிகள் விதி தொகுப்பு கூறு 86


18.

கடன் பதிவேடுகள்

விவசாயி கடன் மற்றும் விவசாய நில அபிவிருத்தி கடன் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட கடன்பாக்கி, நில உச்சவரம்புச் சட்டம் உபரிநில அடமான விதிகளின் கீழ் அடமானம் செய்யப்பட்ட நிலங்களுக்கு நில மதிப்பு தொகை வசூல் செய்தல்.

தொடர்புடைய சட்டங்கள் அரசாணைகள் த.நா.நில உச்சவரம்பு சட்டம் உபரி நிலம் அடமானம் விதிகள்


19.

கல் டிப்போக்கள்

கல் டிப்போவில் கற்கள் இருப்பு சரிபார்த்தல்

ஏ ரூ பி கற்கள் சம்பந்தப்பட்ட பதிவேடுகள்


20.

குவாரிகள்

குவாரிகள் குத்தகைக்கு விடப்பட்ட இனங்களில், குத்தகைக்கு விடப்பட்ட பகுதிக்கு அப்பாலும் மற்றும் அனுமதிக்கப்பட்ட ஆழத்திற்கு கீழும் கனிமங்கள் தோண்டாமலிருப்பதை கண்காணித்தல் மற்றும் நிபந்தனை மீறல் கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்தல்.

தமிழ்நாடு சுரங்கம் மற்றும் கனிமங்கள் (டி ரூ ஆர்) சட்டம் 1957


21.

திருமணப் பதிவேடு

குறிப்பிட்ட கிராமத்தில் வசிப்பவரின் திருமணத்தை மட்டும் இப்பதிவேட்டில் பதிவு செய்திட வேண்டும். கிராம நிர்வாக அலுவலரால் பராமரிக்கப்பட வேண்டும். படிவத்தில் உள்ள எல்லா தகவல்களும் பெற்று பூர்த்தி செய்யப்படவேண்டும் மணமகன் - மணமகள் பிறந்த தேதி பிறப்பு சான்று, மருத்துவமனை பிறப்பு சான்று, பள்ளி சான்றுடன் சரிபார்க்கப்பட வேண்டும்

குழந்தைகள் திருமணம் தடை (திருத்தம்) சட்டம் 2/1978


22.

வருவாய் வசூல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை

1.நிலவரி வசூல் காலத்தில் (கிஸ்தி சீசன் போது ) நடப்பு கேட்புக்குமட்டும் வருவாய் ஆய்வாளர் நெ.1 டிமாண்டு (ஜப்தி ஆணை) ஒப்புதல் செய்தல்

2.நிலுவை கேட்புக்கு வட்டாட்சியர் ஒப்புதல் பெறுதல்.

3.அரசுக்கு சேர வேண்டிய வருவாய் வசூலித்தல்.

4.அசையும் சொத்துக்கள் ஜப்தி செய்தல்:

படிவம் - 1 ஜப்தி ஆணை சார்வு செய்தல்

படிவம் - 2 (ஜப்தி பொருட்கள் பட்டியலிட்டு) நோட்டீஸ் சார்வு செய்தல்

படிவம் - 3 ஏல நோட்டீஸ் சார்வு

செய்தல் மற்றும் ஏல நடவடிக்கைகள்.


5.அசையா சொத்துக்கள் ஜப்தி செய்தல்:

படிவம் - 4 டிமாண்டு நோட்டீஸ் சார்வு செய்தல்.

படிவம் - 5 ஜப்தி செய்யப்பட்டமைக்கான நோட்டிஸ் சார்வு செய்தல்

படிவம் -6 சொத்தின் நிர்வாகத்தினை பெற்றுக்கொண்டதற்குரிய அறிவிப்பு

படிவம் - 7 ஏல நோட்டீஸ் சார்வு செய்தல் மற்றும் ஏல நடவடிக்கைகள்.

படிவம் - 10 நிலத்தை ஏல விற்பனையில் வாங்கியதைப் பற்றிய அரசாங்க அறிவிப்பு.


சூரிய உதயத்திற்கு பின்னரும், சூரிய அஸ்தமனத்திற்கு முன்னரும் ஜப்தி செய்யப்படவேண்டும்.


இச்சட்டப்பிரிவுகள்படி நடவடிக்கை எடுக்கும்போது ஏதேனும் முறைகேடுகள் மற்றும் சட்ட மீறல்கள் நிகழாமல் தவிர்ப்பதற்கான அறிவுரைகள் வருவாய் நிலை ஆணை - பாகம் - 2ல் (நிலை ஆணை 41 பத்தி 26-ன் கீழ் இணைப்பு - ஐஐஐ) அளிக்கப்பட்டுள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

தமிழ்நாடு வருவாய் வசூல் சட்டம் 1864 வருவாய் நிலை ஆணை

தொகுதி ஐஐ

வ.நி.ஆ. 41-6


23.

முதியோர் உதவித்தொகை (65வயது)

ஆதரவற்ற விதவை உதவித்தொகை (வயது வரம்பு இல்லை) ஊனமுற்றோர் உதவித் தொகை(45வயது) கணவனால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை (30 வயது) நலிவடைந்த விவசாய தொழிலாளர் உதவித்தொகை

(60 வயது)

கிராம நிர்வாக அலுவலரால் பராமரிக்கப்படும் பதிவேடு முகாமின் போது ஆய்வு செய்தல், உதவித்தொகை பெறுபவர்களை நேரில் சந்தித்து பதிவேட்டில் குறிப்பு எழுதப்பட வேண்டும்.

தொடர்புடைய அரசாணைகள்


24.

சாதிச் சான்று வழங்குதல்

தனிப்பதிவேடு கிராம நிர்வாக அலுவலரால் பராமரிக்கப்படுகிறது. வட்ட அலுவலகத்திலிருந்து அனுப்பி வைக்கப்படும் மனுக்களை பதிவு செய்து அறிக்கை அனுப்புவதை சரி பார்க்கப்பட வேண்டும.

தொடர்புடைய அரசாணைகள்


25.

நில உரிமை விட்டு விடுதல்

வட்டாட்சியர் ஏற்பு செய்யலாம். பாதை அமைத்தல் மற்றும் வளர்ச்சித் திட்டங்களுக்கு ரயத்துக்கள் தங்கள் நிலங்களின் உரிமையினை விட்டு விடும் நேர்வுகளில் ஊராட்சி ஒன்றிய ஆணையர் ஏற்பு செய்து வட்டாட்சியருக்கு அனுப்பி வைக்க வேண்டும்

வருவாய் நிலை ஆணை எண்:33.


26.

நிபந்தனை மீறப்பட்ட இனங்களில் நிலத்தினை மீட்டல்

ஒப்படை செய்யப்பட்ட அரசு நிலங்களில் நிபந்தனை மீறல் கண்டுபிடித்து, மீண்டும் அரசு நிலமாக்க நடவடிக்கை மேற்கொள்ளல்.

வருவாய் நிலை ஆணை எண்:15-1 அரசாணை எண்:619, வருவாய் துறை நாள்:1.9.77


கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம்

நீலகிரி மாவட்டம் 

*பிரைவேட் லிமிடெட் கம்பெனியைப் பதிவு செய்வது*

 *பிரைவேட் லிமிடெட் கம்பெனியைப் பதிவு செய்வது* 


நம் நாட்டைப் பொறுத்தவரை எல்லா நிறுவனங்களின் பதிவுகளும் கம்பெனி சட்டம் 1956, பிரிவு 609ன் படி அமைக்கப்பட்ட ரிஜிஸ்ட்ரார் ஆஃப் கம்பெனி (ஆர்ஓசி) என்ற அமைப்பின் கட்டுப்பாட்டின் கீழ் வரும்.


ஒவ்வொரு மாநிலத்திலும் இந்த அமைப்பின் அலுவலகங்கள் உள்ளன.


நிறுவனப் பதிவுகளை மேற்பார்வையிடுவதும் அவை சட்ட ரீதியாக இயங்குகிறதா என்று கண்காணிப்பதும் இதன் வேலை.


முதலில் இந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் DIN என்று அழைக்கப்படும் Director Identification No பெறவேண்டும்.


அடுத்ததாக நிறுவனத்தின் பெயரை ஆர்ஓசி அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.


குறைந்தபட்சம் நான்கிலிருந்து 6 விதமான பெயர்களைப் பரிந்துரைக்கலாம்.


ஆர்ஓசி ஏற்கெனவே அந்தப் பெயர்களில் ஏதேனும் நிறுவனங்கள் இந்தியாவில் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதைப் பரிசீலித்துவிட்டு அனுமதியளிக்கும்.


நாம் வைக்கும் நிறுவனத்தின் பெயர்கள் ஏற்கெனவே சந்தையிலுள்ள பெரிய நிறுவனங்களின் பெயர்களை எந்த விதத்திலும் ஒற்றியிருக்கக்கூடாது.


அப்படி இருந்தால் அனுமதி கண்டிப்பாக மறுக்கப்படும்.


பெயர் அனுமதி பெற்றவுடன் எம்ஓஏ எனப்படும் Memorandom of Association மற்றும் ஏஓஏ எனப்படும் Articles of Association ஆகியவற்றை உருவாக்கவேண்டும்.


நிறுவனத்தின் பெயர், அந்த நிறுவனத்தின் தன்மை, குறிக்கோள், நிறுவன இயக்குனரின் முதலீடு (Authorised capital) போன்ற தகவல்களை அளிக்கவேண்டும்.


இவை மட்டுமல்லாமல் நிறுவனத்தின் எதிர்காலத் திட்டங்கள், வளர்ச்சியடைந்த பின்பு விரிவாக்க நினைக்கும் மற்ற துறைகள் (Allied Industries) போன்றவற்றையும் குறிப்பிடவேண்டும்.


மேலும், நிறுவன பங்குகளைப் பற்றிய தகவல்கள், நிறுவன இயக்குனர்களைத் தேர்ந்தெடுக்கும் முறை, பங்குகளை விற்பது மற்றும் டிவிடண்ட் எனப்படும் நிகர லாபத்தின் குறிப்பிட்ட தொகை போன்ற தகவல்களும் அளிக்கவேண்டும்.


ஏஓஏவில் கொடுக்கப்படும் தகவல்களை மாற்றி அமைக்கும் உரிமை அந்த நிறுவனத்தின் பங்குதாரர்களுக்கு உண்டு.


இருப்பினும் அதில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து விதிமுறைகளும் நிறுவனத்தின் எல்லா இயக்குனர்களையும் பங்குதாரர்களையும் முழுவதுமாகக் கட்டுப்படுத்தும்.


இவற்றை தீர்மானித்தப்பின்பு, இதன் நகல்களை ஆர்ஓசி எனப்படும் அரசாங்க அமைப்புக்கு அச்சிட்டு அனுப்பப்பட வேண்டும்.


கொடுத்துள்ள தகவல்களில் ஏதேனும் மாற்றம் இருந்தால், இந்த அமைப்பு, நிறுவனத்துக்குத் தெரியப்படுத்தும்.


இத்தகைய தகவல்களைத் தொழில் முனைவோர் கம்பெனி செகரட்டரி மற்றும் சார்டர்ட் அக்கவுண்டன்ட் போன்றோரிடம் கொடுத்து வடிவமைத்துக்கொள்வர்.


கம்பெனி சீல் என்பதை உருவாக்கவேண்டும்.


அதே போல் நிறுவன இயக்குனர்கள் டிஜிட்டல் சிக்னேச்சர் பெறவேண்டும்.


வருமான வரித்துறையிடமிருந்து பேன் நம்பர் மற்றும் டேன் நம்பர் எனப்படும் டாக்ஸ் அக்கவுண்ட் நம்பர் கண்டிப்பாகப் பெற வேண்டும்.


இவைத்தவிர, மதிப்புக்கூட்டுவரி எனப்படும் வாட் பதிவு எண்ணை வருமான வரித்துறையிடமிருந்தும், சேவை வரி பதிவை சுங்க வரித்துறையிடமிருந்தும் பெற வேண்டும்.


பொருள்களை உற்பத்தி செய்யும் நிறுவனமாக இருந்தால், அந்தந்த துறைக்கு ஏற்றவாறு இன்னும் சில சட்டப் பதிவுகளை உற்பத்தி பொருட்களுக்கெனச் செய்ய வேண்டியது இன்றியமையாதது.


இன்று பெரும்பாலான நிறுவனப் பதிவுகளைக் கணினி மூலமாகச் செய்யும் வசதி இருக்கிறது.


இது இன்னமும் எளிமையானது.

Sole Properietorship எனப்படும் தனிநபர் நிறுவனங்களை உருவாக்குவது எளிது.


சட்ட விதிமுறைகள் மிகவும் குறைவு. தனி நபரும் நிறுவனமும் ஒன்று என்று கருதப்படுவதால் இவற்றை ஆர்ஓசி என்ற அமைப்பு தணிக்கை செய்யாது.


மற்றொரு வகை நிறுவன அமைப்பு பார்ட்னர்ஷிப் எனப்படும் ஒன்றுக்கு மேற்பட்ட பங்குதாரர்கள் இணைந்து உருவாக்கும் நிறுவனங்கள் ஆகும்.


இத்தகைய நிறுவனங்கள் சட்டம் 1932ன் படி கட்டுப்படுத்தப்படுகிறது.


வங்கிப் பணியல்லாத பிறதொழில்களுக்கு அதிகபட்சமாக 20 தனி நபர்கள் முதலீடு செய்து, ஒன்றிணைந்து நிறுவனத்தை உருவாக்க முடியும்.


இத்தகைய நிறுவனங்களுக்கும் பங்குதாரர்களிடையே ஒப்பந்தம் எழுத்துபூர்வமாக இருக்க வேண்டியது அவசியம்.


இத்தகைய ஒப்பந்தங்கள் சட்ட வல்லுநர்களின் ஆலோசனையோடு உருவாக்கப்பட வேண்டும்.


இந்த நிறுவனங்களின் லாப நஷ்டத்துக்கு பங்குதாரர்களே பொறுப்பேற்க வேண்டும்.


2008ம் ஆண்டு எஎல்பிஏ எனப்படும் Limited Liability Partnership ஏற்படுத்தப்பட்டது.


இந்தப் புதிய சட்டம் ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் நிறுவனச் சட்டம் 1956 மற்றும் பார்ட்னர்ஷிப் சட்டம் 1932 ஆகிய இரண்டுக்கும் இடையில் சில மாற்றங்களைச் செய்து உருவாக்கப்பட்டுள்ளது.


இது தொழில்முனைவோருக்குச் சாதகமானது.


இந்தச் சட்டத்தின்படி ஒரு நிறுவனத்தின் பங்குதாரர்களின் பங்குகளின் அளவைப் பொறுத்து அந்த நிறுவனத்தின் லாப நஷ்டங்கள் தீர்மானிக்கப்படும்.


இத்தகைய நிறுவனங்கள் வங்கி கடன் பெற்று வியாபாரம் செய்யும்போது, அவர்கள் கொடுக்கும் அசையா சொத்துக்களின் மதிப்பை வங்கிகள் தேவைப்படும் போது உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.


ஆனால் ஒரு நிறுவனர் செய்யும் தவறுகளுக்கு எல்லோரும் பொறுப்பாகமாட்டார்கள் என்பது கூடுதல் நன்மை.


அதே சமயத்தில் அந்த நிறுவனத்தின் பணத்தின் பொறுப்பை அனைவரும் சமமாக ஏற்க வேண்டும். இதற்கு எந்த விதிவிலக்கும் கிடையாது.

சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

வட்டார போக்குவரத்து துறை, கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் மற்றும் கேத்தி லைட்லவ் நினைவு மேல்நிலை பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்றம் ஆகியன சார்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

பள்ளி கூட்ட அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் நெல்த்ராப் தலைமை தாங்கினார்.

பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்ற பொறுப்பாசிரியர் பரமேஸ்வரி வரவேற்றார். 

கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம் துவக்கி வைத்து பேசும்போது சாலை பாதுகாப்பு என்பது சாலைக்கு அல்ல நமக்கு, மனிதர்கள் சாலையில் செல்லும் போது பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்கான அறிவுரைகள் வழங்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி வாகனங்களில் செல்லும் போது மட்டுமல்ல நாம் சாலையில் நடக்கும் போதும் கவனமுடன் செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது சாலையில் செல்லும்போது மெதுவாக நடந்து சாலையை கடப்பது நல்லது, வேகமாக ஓடுவதால் வாகனத்தில் மோதும் அபாயம் அதிகம் உள்ளது. விதிகளை மதித்து சென்றால் விபத்து தவிர்த்து உயிரையும் உடமைகளையும் பாதுகாக்கலாம் என்றார்.

வட்டார போக்குவரத்து அலுவலர் தியாகராஜன் பேசும்போது

வாகனங்களில் செல்லும் போது கவனமுடன் செல்ல வேண்டும். நீலகிரி மாவட்டத்தில் மலைபகுதியாகவும், வளைவுகள் அதிகம் உள்ளதாலும் மேடான பகுதியாக இருப்பதாலும் வாகனங்கள் அதிகபட்ச 40 கிலோமீட்டர் வேகத்தில் இயக்க வேண்டும்.   

வாகனங்களில் ஆர் சி புக், இன்சூரன்ஸ், மாசு சான்று உள்ளிட்டவை கட்டாயம் வைத்திருக்க வேண்டும். 

அதிவேகம், மற்றும் கவன சிதறல்கள், சாலையில் உள்ள குழிகள் போன்றவை விபத்திற்க்கான காரணங்கள் ஆகும். 

விபத்தில் சிக்கியவர்கள் தலை, கைக்கால், முதுகு அடிப்பட்டு, கிடப்பவர்களை பார்த்தால் வாகனங்கள் இயக்குவதில் தானாகவே கவனம் மற்றும்  பொறுப்பு ஏற்படும்.

தற்போது விபத்து ஏற்படுவதை தடுக்கும் வகையில் வாகனங்களில் வேகத்தை கண்காணிக்க மேட்டுப்பாளையம் உதகை சாலையில் கல்லார் மற்றும் காட்டேரி ஆகிய இடங்களில் வேக கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ள பட உள்ளது. இது திருப்பதிக்கு அடுத்து நீலகிரியில் அறிமுக செய்யப்பட உள்ளது. இதன்மூலம் வேகமாக இயக்கும் வாகனங்கள் கண்டறிந்து அபராதம் விதிக்கபடும், மலை பகுதியில் வேகமாக இயக்குவது தடுக்கப்படும்.

லைசன்ஸ் இன்சூரன்ஸ் ஆகியன இல்லாவிட்டால் 1000, ஹெல்மெட் அணியாவிட்டால்  1000 அபராதமும், போதையில் வாகனங்கள் இயக்கினால் 10,000 அபராதம் மற்றும் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும். ஓட்டுநர் உரிமம் இந்தியாவில் 16  முதல் 18 வயதுடையவர்கள் மிகஇலகு வாகனம் இயக்கலாம், ஆனால் மின்சாரம் மூலம் இயங்கும் 25 கிலோவாட்டுக்குள் திறன் உடைய வாகனம் லைசென்ஸ் இல்லாமல் ஒட்டலாம் ஆனால் அதற்கு மேல் திறன் கொண்ட மின்சார வாகனங்கள் இயக்க உரிமம் கட்டாயம் வேண்டும். என்றார்.

நுகர்வோர் பாதுகாப்பு சேவை மையத்தின் மாநில தலைவர் சுப்பிரமணியம் பேசும்போது சாலையில் செல்லும் போது இருபுறங்களிலும் கவனித்து சாலையை குறுக்கிட வேண்டும். செல்போன் பேசியபடி வாகனங்கள் இயக்குவதால் கவனம் திசை மாறி விபத்து ஏற்படுகிறது. 

இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது தலை கவசம் அணிந்தும் 4 சக்கர வாகனத்தில் செல்லும்போது சீட் பெல்ட் அணிந்தும் செல்லும் போது விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க முடியும்

18 வயதிற்கு குறைவான நபர்கள் வாகனங்கள் இயக்கும் போது அவர்களுக்கு அபராதம் விதிப்பதுடன் பெற்றோர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்படும் என்றார். 

நிகழ்சசியில் பள்ளி மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்ற மாணவர் பிரபாகரன் நன்றி கூறினார். 

நீதிமன்றத்தில் IA என்றால் என்ன*

 *நீதிமன்றத்தில் IA என்றால் என்ன*


*I.A பெட்டிஷன் அர்த்தம் என்ன*


இந்தியாவில் உள்ள நீதிமன்றங்களில் சிவில் வழக்குகள் தாக்கல் செய்தவர்கள் I.A என்ற வார்த்தையை பல முறை கேள்விப்பட்டு இருப்பீர்கள்,


 IA என்ற சொல்லின் அர்த்தம் என்னவென்றால் I. A" என்பது 


🌹Interlocutory Application,


🌹Interim Application,

and


🌹Impleading application


என்று அறியப்படுகிறது.

 

Interlocutory Application- என்றால் இடைநிலை விண்ணப்பம்.


 Interim Application- என்றால் இடைக்கால விண்ணப்பம்.


 Impleading application- என்றால் உள்வாங்கும் விண்ணப்பம்.


I.A பெட்டிஷன் எப்போது தாக்கல் செய்யப்படுகிறது?


நீதிமன்ற வழக்குகளில் சூழ்நிலைக்கேற்ப இந்த I.A மனுக்கள் தாக்கல் செய்யபடுகிறது.  


இதை தெளிவாக நீங்கள் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் அனைத்து I.A மனுக்களும் இடைக்கால விண்ணப்பங்கள் (இடைச்சொருகல் விண்ணப்பங்கள்) என்றே வைத்துக் கொள்ளுங்கள். 


இனி இதை பற்றி இடைக்கால விண்ணப்பம் என்றே குறிப்பிடுகிறேன் எளிதாக புரிந்து கொள்வதற்காக, இந்த இடைக்கால விண்ணப்பம் என்பது முக்கிய வழக்கு நிலுவையில் இருக்கும் போது சில இடைக்கால நிவாரணம் அல்லது நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களைக் கோரி சட்ட நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள தரப்பினரால் செய்யப்படும் கோரிக்கையாகும்.


இது ஒரு குறிப்பிட்ட சிக்கலைத் தீர்க்க அல்லது உடனடி கவனம் தேவைப்படும் உத்தரவைப் பெறுவதற்கான முக்கிய நடவடிக்கைகளின் போது செய்யப்படும் விண்ணப்பமாகும்


*எடுத்துக்காட்டாக*


ஒரு சொத்தில் உரிமை யாருக்கு என்று வழக்கு நடந்து கொண்டு இருக்கும் போது *வாதியோ* அல்லது *பிரதிவாதியோ* அந்த வழக்கு சொத்தை விற்பனை செய்ய முயற்சி செய்தால் அதை தடை செய்ய உடனடியாக நீதிமன்றத்தில் தெரியப்படுத்தி தடை உத்தரவு பெற வேண்டும். 


இதற்காக வாய்மொழியாக சொல்லி உத்தரவு பெற முடியாது அதற்காக புதிய விண்ணப்பம் தாக்கல் செய்து அதன் அடிப்படையில் உத்தரவை நீதிமன்றத்தில் பெற வேண்டும். 


இந்த புதிய விண்ணப்பத்தை வழக்கு நடந்து கொண்டிருக்கும் இடையில் இடைக்காலத்தில் தாக்கல் செய்வதால் தான் இதை இடைக்கால விண்ணப்பம் I.A என்று அழைக்கப்படுகிறது.


இடைக்கால விண்ணப்பங்கள், தடை கோருதல், தற்காலிக தடை (temporary stay), பெறுநர்களை நியமனம் செய்தல்(appointment of receivers), மனுக்களில் திருத்தம் செய்தல் (amendment of pleadings), கூடுதல் ஆதாரங்களை சேர்க்க அனுமதி கோருதல் போன்ற பல்வேறு விஷயங்களைத் தீர்ப்பதற்காக தாக்கல் செய்யப்படுகின்றன.


இடைக்கால விண்ணப்பங்கள் என்பது அடிப்படையில் இது இடைக்கால நிவாரணம் பெற அல்லது ஏதேனும் ஒன்றைப் பெறுவதற்குப் பயன்படுத்தப்படும் நடைமுறை சட்ட செயல்முறை ஆகும்.


I.A பெட்டிஷன் நீதிமன்ற நடைமுறை?

ஒரு தரப்பினர் ஒரு இடைநிலை விண்ணப்பத்தை தாக்கல் செய்யும் போது, அது வழக்கமாக தனித்தனியாக எண்ணப்பட்டு, "IA எண். X இன் YYYY" போன்ற ஒரு தனித்துவமான தலைப்பு எண் வழங்கப்படுகிறது. 


வழக்கின் தகுதி மற்றும் சூழ்நிலைகளின் அடிப்படையில் விண்ணப்பத்தை நீதிமன்றம் முடிவு செய்யும். 


நீதிமன்றம் மற்றும் குறிப்பிட்ட வழக்கை நிர்வகிக்கும் குறிப்பிட்ட சட்டங்களைப் பொறுத்து இடைநிலை விண்ணப்பங்கள் தொடர்பான குறிப்பிட்ட விதிகள் மாறுபடலாம் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

எனவே, ஒரு குறிப்பிட்ட நீதிமன்ற அதிகார வரம்பில் ஒரு இடைநிலை விண்ணப்பத்தை தாக்கல் செய்வதற்கான தொடர்புடைய விதிகள் மற்றும் நடைமுறைகளைப் புரிந்து கொள்ள ஒரு வழக்கறிஞர் அல்லது சட்ட ஆலோசகர்களிடம் உடன் கலந்தாலோசிப்பது நல்லது.

ஓட்டுரிமையை ஊர்ஜிதம் செய்து கொள்ள

 *நமக்கு உள்ள ஓட்டுரிமையை ஊர்ஜிதம் செய்து கொள்ள உடனடியாக  அறிய வேண்டிய/ செய்ய வேண்டிய 8 விஷயங்கள்*


1.  'நான் போன முறை ஓட்டு போட்டேன். எனவே ஓட்டு உரிமை உள்ளது' என்று அசால்ட்டாக நினைக்க வேண்டாம். பல இடங்களில் ஏதாவது காரணம் சொல்லி,  ஓட்டு பட்டியலில் இருந்து நீக்கிவிட்ட சம்பவங்கள் உண்டு.


2.  ஓட்டு பட்டியலில் பெயர் உள்ளதா என்பதை அரசு அலுவலகத்திற்குச் சென்று நான் உதவி செய்ய வேண்டும் என்பதில்லை. உட்கார்ந்த இடத்திலேயே செய்யலாம். ஒவ்வொரு ஓட்டு அட்டையிலும் EPIC என்ற நம்பர் ஒன்று உண்டு.  

பின்வரும் வெப்சைட்டில் EPIC நம்பரும் உங்கள் மாநிலத்தையும் உள்ளீடு செய்தால் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளலாம்: https://electoralsearch.eci.gov.in/.

 இன்னும் சுலபமாக வேண்டும் என்றால் பின்வரும் எஸ்எம்எஸ்ஐ 1950  என்ற எண்ணிற்கு அனுப்பினால் அது தகவல் தரும்: ECI your EPIC number 


3.  உங்கள் பெயர் ஓட்டு பட்டியலில் இருந்தால் ஓட்டர் ஐடி தொலைந்து விட்டாலும் வேறு ஆவணங்களை காட்டி போட்டு போடலாம்.  ஓட்டர் ஐடி இல்லாவிட்டால் பின்வரும் வெப்சைட்டில் மாநிலம் மற்றும் EPIC நம்பர் அல்லது Phone number enter செய்து ஓட்டர் ஐடி காபியை பெற்றுக் கொள்ளலாம்: https://voters.eci.gov.in/login


4.  ஜனவரி 1 அன்று 18 வயதை பூர்த்தி செய்தவர்கள் ஓட்டர் ஐடிக்கு அப்ளை செய்யலாம்.  அதற்குப் பிறகு உதாரணத்திற்கு ஜனவரி 2 அன்று 18 வயதை பூர்த்தி செய்தாலும் ஓட்டர் ஐடி அப்ளிகேஷன் ரிஜெக்ட் செய்யப்படும்.  ஜனவரி ஒன்றுக்கு பிறகு) ஜனவரி இரண்டிலிருந்து) 18 வயதை பூர்த்தி செய்தவர்கள் ஏப்ரல் ஒன்றுக்கு பிறகு அப்ளை செய்யவும்.


5.  புதிதாக அப்ளை செய்வது மிக எளிதானது.  இந்த https://voters.eci.gov.in/login வெப்சைட்டுக்கு சென்று Form 6 "Application for including name in assembly constituency voters list.",  பட்டனை கிளிக் செய்து,  விவரங்களை பூர்த்தி செய்து அப்ளை செய்யவும்.  அட்ரஸிற்கான ஒரு ப்ரூப்,  பிறந்த தேதிக்கான ஒரு குரூப்,  இவைகளை சொந்த  கையெழுத்துட்டு (self attestation),  வெப்சைட்டில் அப்லோட் செய்யவும். 


சமீபமாக எடுத்த போட்டோ ஒன்றையும் அப்லோடு செய்யவும்.  பெயர் விவரங்கள் எல்லா ஐடியிலும் ஒரே மாதிரியாக இருந்து குழப்பம் இல்லாமல் இருந்தால் ஒரு வாரத்தில் கூட  ஸ்பீட் போஸ்ட் மூலமாக வந்துவிடும் என்கிறார்கள்.  


இதுவெல்லாம் நமக்கு செய்யத் தெரியாது என்பவர்கள், இ சர்வீஸ் சென்டர்களில் நூறிலிருந்து 150 ரூபாய் வரை வசூலிக்கிறார்கள். அங்கே செய்து கொள்ளலாம். 


6.  இதுவே நீங்கள் வெளிநாட்டில் இருந்தால் அதே வெப்சைட்டில் ஃபார்ம் 6ஏ பூர்த்தி செய்து அப்ளை செய்யலாம்.   வெளிநாட்டில் இருந்து கொண்டு ஓட்டு அளிக்க முடியாது. ஆகவே ஓட்டர் ஐடி அப்ருவ செய்தவுடன், என்றைக்கு எலக்சன்  நடக்கிறதோ அதற்கு ஏற்றார் போல உங்கள் விடுமுறை பயணங்களை அமைத்துக் கொள்ளலாம்.


7.  இதுவெல்லாம் செய்த பிறகு  ஓட்டர் ஐடி உடன்,  வாக்குச்சாவடிக்கு செல்லுகிறீர்கள்.  உங்கள் ஓட்டு போடப்பட்டு விட்டது ( கள்ள ஓட்டு) என்று தடாரடியாக சொல்லுகிறார்கள்.  என்ன செய்வது? குழப்பம் வேண்டாம்.  அந்த வாக்குச்சாவடிக்கான Poll Officer இருப்பார். 

அவரிடம் உங்கள் அடையாள அட்டையை காண்பித்து நீங்கள் தான் அவர் என்று  நிரூபணம் செய்யுங்கள்.  அரசு விதி 49 பி படி அவர் உங்களை கண்டிப்பாக அனுமதிப்பார்.


8.  வெளியூர் சென்று வேலை செய்யும் பலர்,  'என்னுடைய ஓட்டு ஊரில் உள்ளது ஆகவே ஒன்றும் செய்ய இயலாது' என்று கையாளாகாதவர்கள் போல கவலைப்படுவார்கள்.  இதுவெல்லாம் சாக்குப் போக்கு.   ஒருவர் தன்னுடைய அட்ரஸ் எத்தனை முறை வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம்.  


உதாரணத்திற்கு திருநெல்வேலி இருந்து சென்னை வந்து வேலை செய்யும் ஒருவர் சென்னையில்  உள்ள வாக்கு சாவடிக்கு தகுந்த ஆதாரங்களை கொடுத்து மாற்றிக் கொள்ளலாம்.  


பின்னர் திரும்பும்போது திருநெல்வேலிக்கு மாற்றிக் கொள்ளலாம். 2024 லோக்சபா தேர்தலை பொருத்தவரை அருகில் வந்து விட்டதால் இப்பொழுது அட்ரஸ் களை மாற்றிக் கொண்டிருக்க வேண்டாம். எங்கு இருக்கிறதோ அங்கே செல்வதற்கு உண்டான  ஏற்பாடுகளை இப்போதே செய்து விடுங்கள்.


  நாம் ஒவ்வொருவரும் ஓட்டு போட வேண்டும் என்கிற ஒரு  உரிமைக்காக வேண்டி, பலர் தங்கள் உயிரைக் கொடுத்து விடுதலையை  பெற்றுத் தந்துள்ளார்கள்.  அந்த உரிமையை இழந்து விடாதீர்கள்.


Gudalur Consumer Human Resources

and Environment Protection Center

 The Nilgiris 

  *#கண்கள்* - 1

கண்கள் பாதுகாப்பில் உணவின் பங்கு அவசியமானதாகும். உடம்புக்கு ஒவ்வாத உணவுகளைச் சாப்பிடுதல், நேரம் தவறிய உணவுமுறை, சத்தில்லா உணவு வகைகள், பாஸ்ட் புட் வகைகள் ஆகியவைகளை சாப்பிடும்போது மலச்சிக்கலும் அஜீரணமும் ஏற்பட்டு உடல் நலம் பாதிப்பு, ஒவ்வாமையால் தலைவலி போன்றவை ஏற்பட காரணமாய் அமைந்து விடும்.

வைட்டமின் ‘ஏ’ சத்து நிறைந்த உணவுப்பொருட்கள் எல்லா வயதினர்க்கும் தேவையான ஒன்றாகும். நிறக்குருடு , மாலைக்கண் நோய், போன்றவைகளுக்கு வைட்டமின் ‘ஏ’ குறைபாடே காரணமாக அமைகிறது. கண்கள் தொடர்பான தொற்றுநோய்கள் எளிதில் கண்களை தாக்குவதற்குக் காரணம் வைட்டமின் ‘ஏ’ குறைபாடே .

வைட்டமின் ‘ஏ’ குறைபாடுள்ளவர்கள் மீன் எண்ணய், பப்பாளி , கேரட், போன்றவைகளை உணவில் சேர்த்துக் கொள்ளுவதன் மூலம் பாதுகாப்பில் உணவின் பங்கு முக்கியமான ஒன்றாய் இருப்பதை தெளிவாக அறிந்து கொள்ள முடிகிறது.

40 வயதிற்குப்பின் கண்களை பரிசோதித்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியமான ஓன்று. இதற்கு வெள்ளெழுத்து என்று பெயர்., இது வியாதி அல்ல, இயற்கையின் உடல்கூறுதான் . 

கண்பார்வை மட்டுமல்ல கண்ணின் நீர் அழுத்தம் , தோற்றப்பரப்பு, கண்ணின் உட்புறமாகிய விழித்திரையை காணல் –(VISION , TENSION ,FIELDS &FUNDUS) இந்த நான்கையும் சோதித்து அறிந்து கொள்ள வேண்டும். 

குறிப்பாக பரம்பரை வியாதிகளான நீரழிவு நோய் , கண் புரை, குளுகோமோ, இரத்த அழுத்தம் , ஆகியவைகளால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சார்ந்தவர்களாயிருப்பின் தங்களுக்கும் இதனால் ஏதாவது பாதிப்புக்கள் உள்ளதா என்பதை 40 வயதிற்குள் அறிந்து கொள்ளுவது மிகவும் அவசியமானதாகும். வயதான காலத்தில் இரத்த அழுத்தம், நீரழிவுநோய் , கண்ணின் நீர் அழுத்தம் ,கண்புரை, பார்வை நரம்பு கோளாறுகள், டி.பி, கிரந்தி நோய், ஆகியவைகள் மூலம் கண்பார்வை பாதிக்ககூடும். 

நமது உடலைத் தாக்கும் எந்த நோயாக இருந்தாலும் அது கண்களோடு தொடர்புள்ளாதாக அமைகிறது. நீரழிவு இரத்தக்கொதிப்பு , ஸிபிலிஸ், மேகநோய், எலும்புருக்கி, கக்குவான், இருமல், முதலிய நோய்களால் கண்களில் சில அறிகுறிகள் தோன்றும். 

கண்களை பரிசோதிக்கும்பொழுது கண்களின் ஒளித்திரையில் ஏற்படும் சில அறிகுறிகளைக் கொண்டு அதனடிப்படையில் நோயாளி நீரழிவு நோய் (அ) இரத்த கொதிப்பால் துன்பப்படுகிறார் என்பதனை அறிந்து கொள்ள முடியும். 

நீரழிவு நோயால் ஒருவருக்கு பார்வை குறைவு ஏற்பட்டால் முக்கியமாக ஒளித்திரையில் ஏற்பட்ட இரத்த கசிவே காரணமாக இருக்கும் மற்றும் நீரழிவு நோயால் தசைநாருக்கு வரும் நரம்புகள் கெட்டு கண்விழி ஒரு பக்கம் போக முடியாத காரணத்தால் ஒரு பொருள் பலவாகத் தோன்றும்.

 இப்பிரச்சனை உள்ளவர்களின் சிறுநீரை ஆய்வு செய்து சர்க்கரையின் அளவை கண்டறியலாம். இந்த நீரழிவு நோய்களுக்கு அடிக்கடி கண் இமைகளில் கட்டி ஏற்படும், கண்புரை ஏற்படும். 

சொத்து :-


சொத்து :-

*********


சுய சம்பாத்தியம் என்றால் என்ன...?


சுய சம்பாத்தியம் என்றால், ஒருவர் தன்னுடைய வாழ்நாளில் யாருடைய தயவுமின்றி சுயமாக சம்பாதித்த அல்லது வாங்கிய அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் அனைத்துமே அவரது சுய சம்பாத்தியம் ஆகும்.


சுயசம்பாத்தியச் சொத்தில் யாருக்கெல்லாம் பங்கு உண்டு...?


சுயசம்பாத்தியச் சொத்தில் யாருக்கு பங்கு கிடையாது. அதனை சம்பாதித்தவர் அதனை யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கலாம். அதனை தடுக்கும் உரிமை யாருக்கும் கிடையாது.


பூர்வீகச் சொத்து என்றால் என்ன...?


ஒருவர் தனது வாழ்நாளில் சுயமாக சம்பாதித்த அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களைப் பற்றி, எந்தவித ஏற்பாடும் எழுதி வைக்காமல் இறந்துவிட்டால், அவரது சொத்துக்கள் பூர்வீகச் சொத்துக்கள் ஆகும். 


பூர்வீகச் சொத்துக்களில் யாருக்கெல்லாம் உரிமை உண்டு...?


பூர்வூகச் சொத்துக்கள் பிரிக்கப்படாதவரை, அந்தப் பரம்பரையில் வருகின்ற வாரிசுகள் அனைவருக்குமே சொந்தமாகும். 


வாரிசுகள் என்றால் யார்...? 

இவர்களில் முன்னுரிமை உண்டா...?


திருமணமான ஒரு ஆணின் வழித்தோன்றல்கள் அனைவருமே அவரது வாரிசுகள்தான். இருந்தாலும், சட்டம் இவர்களில் சிலரை முன்னிலைப்படுத்தி இருக்கிறது.


முதல்நிலை வாரிசு

திருமணமான ஒரு ஆணின் சொத்திற்கு அவரது மனைவி, மகன், மகள் மற்றும் தாய் ஆகியவர்கள் முதல்நிலை வாரிசுகளாக சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டு உள்ளனர். 


இரண்டாம் நிலை வாரிசு

திருமணமான ஒரு ஆணின் சொத்திற்கு அவரது தந்தை இரண்டாம் நிலை வாரிசாக சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டு உள்ளார். 


மூன்றாம்நிலை வாரிசு

திருமணமான ஒரு ஆணின்சொத்திற்கு அவரது உடன்பிறந்த சகோதர, சகோதரர்கள் மூன்றாம்நிலை வாரிசுகளாக சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டு உள்ளனர்.


திருமணம் ஆன ஒருவரின் சொத்துக்கு அவரது பேரன் மற்றும் பேத்திகள் எப்போது உரிமை கொண்டாட முடியும்...?


திருமணமான ஒரு ஆண், தனது சொத்துக்களைப் பற்றி எதுவும் எழுதி வைக்காமல், திடீரென இறந்து போன சூழ்நிலையில், அவரது மகன் அல்லது அவரது மகள் ஏற்கனவே இறந்து போயிருந்தால் அந்த மகன் அல்லது மகளுக்குரிய பங்கு (அவர்களின் குழந்தைகளான) அவரது பேரன் பேத்திகளுக்கு சரிசமமாக பிரித்து வழங்கப்படும்.


திருமணம் ஆகாத ஒருவரின் சொத்துக்கு, அவரது தந்தை எப்போது உரிமை கொண்டாட முடியும்...?


திருமணமாகாத ஒரு ஆண், தனது சொத்துக்களைப் பற்றி எதுவும் எழுதி வைக்காமல், திடீரென இறந்து போய்விட்டார் என்றால், அவரது தாயாரும் ஏற்கனவே இறந்துபோயிருந்தால், அவரது சொத்துக்கள் அனைத்தும் அவரது தந்தைக்குச் சேரும்.


திருமணம் ஆன ஒருவரின் சொத்துக்கு அவரது தந்தை எப்போது உரிமை கொண்டாட முடியும்...?


திருமணமான ஒரு ஆண், தனது சொத்துக்களைப் பற்றி எதுவும் எழுதி வைக்காமல், திடீரென இறந்து போன சூழ்நிலையில், அவரது தாயும், அவரது மனைவியும், அவரது மகன் மற்றும் மகள்களூம் ஏற்கனவே இறந்துபோயிருந்தால், அவரது சொத்துக்களுக்கு அவரது தந்தை உரிமை கொண்டாட முடியும். 


திருமணம் ஆகாத ஒருவரின் சொத்துக்கு அவரது சகோதர, சகோதரிகள் எப்போது உரிமை கொண்டாட முடியும்...?


திருமணமாகாத ஒரு ஆண், தனது சொத்துக்களைப் பற்றி எதுவும் எழுதி வைக்காமல், திடீரென இறந்து போய்விட்டார் என்றால், அவரது தாயாரும், தந்தையும் ஏற்கனவே இறந்து போயிருந்தால், அவரது சொத்துக்கள் அனைத்திற்கும் அவரது சகோதர, சகோதரிகள் உரிமை கொண்டாட முடியும்.


திருமணம் ஆன ஒருவரின் சொத்துக்கு அவரது சகோதர, சகோதரிகள் எப்போது உரிமை கொண்டாட முடியும்...?


திருமணமான ஒரு ஆண், தனது சொத்துக்களைப் பற்றி எதுவும் எழுதி வைக்காமல், திடீரென இறந்து போன சூழ்நிலையில், அவரது தாயும் தந்தையும், அவரது மனைவியும், அவரது மகன் மற்றும் மகள்களூம் ஏற்கனவே இறந்துபோயிருந்தால், அவரது சொத்துக்கள் அனைத்திற்கும் அவரது சகோதர, சகோதரிகள் உரிமை கொண்டாட முடியும். 


Half Brother, Half Sister என்று சட்டம் யாரைக் குறிப்பிடுகிறது...?


கோபால் என்ற ஒருவருக்கு இரண்டு மனைவிகள் என்று வைத்துக் கொள்வோம். கோபாலின் முதல் மனைவிக்குப் பிறந்த குழந்தைகளுக்கு, கோபாலின் இரண்டாவது மனைவியின் மகன் Half Brother , மகள் Half Sister ஆவார். 


Half Brother, Half Sister-கள் எந்தச் சொத்தில் உரிமை கொண்டாட முடியாது...?


திருமணமான ஒரு ஆண், தனது சொத்துக்களைப் பற்றி எதுவும் எழுதி வைக்காமல், திடீரென இறந்து போன சூழ்நிலையில், அவரது தாயும் தந்தையும், அவரது மனைவியும், அவரது மகன் மற்றும் மகள்களூம் ஏற்கனவே இறந்துபோயிருந்தால், அவரது சொத்துக்கள் அனைத்திற்கும் அவரது உடன்பிறந்த சகோதர, சகோதரிகள் மட்டுமே உரிமை கொண்டாட முடியும். 


Half Brother Half Sister-கள் உரிமை கொண்டாட முடியாது. சட்டம் இங்கு ஒரு தாய் வயிற்று பிள்ளைகளுக்கே உரிமையை வழங்கி இருக்கிறது.


சட்டத்தால் அங்கீகரிக்கப்படாத திருமணம் எது...?


ஒரு ஆண் முதல் மனைவி உயிருடன் இருக்கையிலேயே, அந்த முதல் திருமணத்தை சட்டபூர்வமாக ரத்து செய்யாமலேயே, இரண்டாவதாக ஒரு திருமணம் செய்வதை சட்டம் அங்கீகரிக்கவில்லை.


ஒரு ஆணின் சொத்தில் முறையாக திருமணம் செய்யாத இரண்டாவது மனைவிக்கு பங்கு உண்டா...?


கிடையாது. ஆனால், அவரது குழந்தைகளுக்கு தந்தையின் சொத்தில் பங்கு உண்டு.


இரண்டாவது மனைவிக்கு கணவனின் சொத்தில் உரிமை எப்போது கிடைக்கும்...?


ஒரு ஆண் தன்னுடைய முதல் மனைவி இறந்த பிறகோ அல்லது தன்னுடைய முதல் மனைவியை சட்டப்படி விவாகரத்து செய்த பிறகோ, இன்னொரு பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ளும் போது, அந்தப் பெண்ணிற்கு அவரது சட்டப்படியான மனைவி என்ற அந்தஸ்தும், கணவனின் சொத்தில் அல்லது பூர்வீகச் சொத்தில் உரிமையும் கிடைக்கும்.


இறந்து போன முதல் மனைவிக்கு ஒரு குழந்தையும், உயிருடன் உள்ள (சட்டபூர்வ) இரண்டாவது மனைவிக்கு இரண்டு குழந்தையும் இருந்தால், ஒருவரின் சொத்தை எப்படி பிரிக்க வேண்டும்...?


இறந்து போன ஆணுக்கு சொந்தமாக ஒரே அளவுள்ள 4 வீடுகளும், வங்கியில் 40 லட்ச ரூபாய் ரொக்கமும் இருப்பதாக வைத்துக் கொள்வோம். 


இதனை அனைவரும் சமமாக பிரித்து வைத்துக் கொள்ள வேண்டும். அதாவது மூத்த தாரத்து மகள்(1), இரண்டாவது மனைவி(2), இரண்டாவது மனைவியின் மகன்(3), இரண்டாவது மனைவியின் மகள்(4) ஆகிய நால்வரும் ஆளுக்கொரு வீடும், 10 லட்ச ரூபாயுமாக பங்கு பிரித்துக் கொள்ள வேண்டும். 


ஒரு மனையை அல்லது ஒரு நிலத்தினை அண்ணன் தம்பிகள் எப்படி சண்டையில்லாமல் பிரித்துக் கொள்வது...? 


ஒரு வீடு அல்லது ஒரு நிலம் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். இதனை சண்டை போட்டுக் கொள்ளாமல் சகோதரர்கள் (இருவர் மட்டும் இருந்தால்) பிரித்துக் கொள்ள விரும்பினால், அண்ணனுக்கு மேற்கு திசையில் உள்ள இடமும், தம்பிக்கு கிழக்கு திசையில் உள்ள இடமும் என்று பிரித்துக் கொள்ளலாம். 


நான்கு பேர் இருந்தால், மூத்தவனுக்கு தென்மேற்கு, அடுத்தவன் வடமேற்கு, மூன்றாவது உள்ளவனுக்கு தென்கிழக்கு, கடைசியில் உள்ளவனுக்கு வடகிழக்கு என்று பிரித்துக் கொள்ள வேண்டும் என்றும், பெண்வாரிசுகள் இருந்தால் சகோதரர்கள் மேற்கு மற்றும் தெற்கு பக்க பங்குகளையும், சகோதரிகள் கிழக்கு மற்றும் வடக்கு பக்க பங்குகளையும் பிரித்து எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும், 

ஒரு மனையையோ அல்லது ஒரு வீட்டையோ நான்கு பாகமாக மட்டுமே பிரிக்க வேண்டும் என்றும், அந்தச் சொத்துக்கு அதிக வாரிசுகள் இருந்தால் நான்கு நபர்கள் தவிர மற்றவர்கள் தங்கள் பங்கிற்காக பணத்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.


நன்றி....!


கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம்

நீலகிரி மாவட்டம் 

மோட்டார் வாகனச் சட்டத்தில் உள்ள திருத்தங்கள்: சுருக்கம்

 மோட்டார் வாகனச் சட்டத்தில் உள்ள திருத்தங்கள்: சுருக்கம்

===============================================================


மோட்டார் வாகனச் சட்டம் என்பது இந்தியப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட  ஒரு சட்டமாகும், இது சாலை போக்குவரத்து வாகனங்களின் அனைத்து அம்சங்களையும் ஒழுங்குபடுத்தும் ஒரு சட்டம்.


 ஓட்டுநர்கள் / நடத்துனர்களுக்கு உரிமம் வழங்குதல், மோட்டார் வாகனங்களை பதிவு செய்தல், அனுமதி மூலம் மோட்டார் வாகனங்களை கட்டுப்படுத்துதல், மாநில போக்குவரத்து நிறுவனங்கள் தொடர்பான சிறப்பு விதிகள் , போக்குவரத்து ஒழுங்குமுறை, காப்பீடு, பொறுப்பு, குற்றங்கள் மற்றும் அபராதம் போன்ற சட்ட விதிகளை இந்த சட்டம் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.


மோட்டார் வாகன (திருத்தம்) சட்டம் 2019  ஆனது  இந்திய பாராளுமன்றத்தில்   9 ஆகஸ்ட், 2019 ல் சட்டமாக நிறைவேற்றப்பட்டு இந்திய குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்து    1 செப்டம்பர்  2019  முதல் நடைமுறைக்கு வந்தது .


http://egazette.nic.in/WriteReadData/2019/210413.pdf


உலக சுகாதார அமைப்பின் 2018 அறிக்கையின்படி, உலகளவில் இந்தியாவில் அதிக சாலை விபத்துக்கள் நிகழ்கின்றன. இந்த விஷயத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடான சீனா கூட நமக்கு பின்னால் உள்ளது . இதன் அடிப்படையில் பல்வேறு காரணங்களால், மோட்டார் வாகனங்கள் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டன.


https://www.jagranjosh.com/general-knowledge/features-of-motor-vehicles-amendment-bill-2019-1567410462-1


மோட்டார்  வாகன சட்டத்தில் செய்யப்பட்டுள்ள  திருத்தங்கள்

===============================================================


சட்டப்பிரிவு -  138 

===============================================================

 https://indiacode.nic.in/show-data?actid=AC_CEN_30_42_00009_198859_1517807326286§ionId=28411§ionno=138&orderno=143


விதிகளை உருவாக்க மாநில அரசுக்கு அதிகாரம் வழங்கும் சட்டத்தின் 138 வது பிரிவில், சட்டத்தின் 138 வது பிரிவில் உட்ப்பிரிவு 1 (A ) ல் இணைக்கப்பட்டுள்ளது . 

புதிதாக  இணைக்கப்பட்டுள்ள உட்பிரிவு  - பொது இடங்களுக்கும் தேசிய நெடுஞ்சாலைகளுக்கும் இயந்திரம் அல்லாத வாகனங்கள் மற்றும் பாதசாரிகளின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்த மாநில அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது, அதே நேரத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் தொடர்பாக எந்தவொரு விதிகளும் இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை அதிகாரத்துடன் கலந்தாலோசித்த பின்னர் செயல்படுத்த  வேண்டும்.


சட்டப்பிரிவு - 194 B

===============================================================


https://indiacode.nic.in/show-data?actid=AC_CEN_30_42_00009_198859_1517807326286§ionId=49501§ionno=194B&orderno=207


இது சட்டத்தில் புதிதாக  இணைக்கப்பட்டுள்ள பிரிவு, இது பயணிகளின் பாதுகாப்பு குறித்து பேசுகிறது. பாதுகாப்பு பெல்ட் அணியாமல் மோட்டார் வாகனம் ஓட்டும் எந்தவொரு நபருக்கும் 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று இந்த பிரிவு கூறுகிறது.


மேலும், இந்த பிரிவு குறிப்பாக குழந்தைகளைப் பற்றி பேசுகிறது, மேலும் * சீட் பெல்ட் அணியாமல் அல்லது குழந்தை கட்டுப்பாட்டு முறை இல்லாமல் 14 வயதை பூர்த்தி செய்யாத குழந்தையுடன் மோட்டார் வாகனம் ஓட்டும் எந்தவொரு நபருக்கும் 1000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் * என்று கூறியுள்ளது.


சட்டப்பிரிவு  - 129 

===============================================================


http://egazette.nic.in/WriteReadData/2019/210413.pdf


சட்டத்தின் 129 வது பிரிவு பாதுகாப்பு தலைக்கவசம் அணிவது பற்றி பேசுகிறது. பிரிவு 129 இன் திருத்தம் நான்கு வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு குழந்தையும் மோட்டார் சைக்கிளில் கொண்டு செல்லும் போது  ஒரு ஹெல்மெட் அணிய வேண்டும் என்று முன்மொழிகிறது,  ஹெல்மெட் வடிவமைப்பு மற்றும் விவரக்குறிப்புகள் இந்திய தர நிர்ணய பணியகத்தின் தரங்களுக்கு இணைந்து இருக்க வேண்டும்.


சட்டப்பிரிவு - 137. 

===============================================================


https://indiacode.nic.in/show-data?actid=AC_CEN_30_42_00009_198859_1517807326286§ionId=28410§ionno=137&orderno=142


சட்டத்தின் 137 வது பிரிவு விதிகளை உருவாக்க மத்திய அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது. பிரிவு 137 இன் பிரிவு (அ) பாதுகாப்பு தலைக்கவசத்தின் தரங்களையும், நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பாதுகாப்பிற்கான நடவடிக்கைகளையும் வழங்க மத்திய அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது.


பிரிவு 110 B  மற்றும் 110 B 

===============================================================


https://savelifefoundation.org/wp-content/uploads/2019/07/MVA-Bill-2019_Analysis_SLF.pdf


மேலே குறிப்பிடப்பட்ட பிரிவுகள் வாகனங்களை திரும்ப அழைப்பது பற்றி பேசுகின்றன. புதிதாக இணைக்கப்பட்டுள்ள  பிரிவுகள் 110 A மற்றும் 110 B  ஆகியவை தரங்களை பூர்த்தி செய்யாத வாகனங்களை நினைவுகூர மத்திய அரசுக்கு அதிகாரம் அளிக்கின்றன, மேலும் இது ஒப்புதல் சான்றிதழ்களை வழங்குவதற்காக சோதனை நிறுவனங்களை நிறுவுவதற்கும்  அதிகாரம் வழங்குகிறது.


சட்டப்பிரிவு - 198 A

===============================================================


https://savelifefoundation.org/wp-content/uploads/2019/07/MVA-Bill-2019_Analysis_SLF.pdf


சாலை வடிவமைப்பு, கட்டுமானம் மற்றும் பராமரிப்புக்கான தரங்களுக்கு இணங்கத் தவறியது பற்றி சட்டத்தின் பிரிவு 198 A பேசுகிறது. புதிதாக இணைக்கப்பட்டுள்ள இந்த பிரிவு 198  A  சாலை ஒப்பந்தக்காரர்கள் / ஆலோசகர்கள் தவறான சாலை வடிவமைப்பு, கட்டுமானம் மற்றும் பராமரிப்பு ஆகியவற்றிற்கு பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவ்வாறு செய்யத் தவறினால் அவர்களுக்கு ரூ. 1 லட்சம் வரை அபராதமும் தவறான சாலை வடிவமைப்பு மற்றும் பொறியியலுக்காக ஒப்பந்தக்காரர்களுக்கு அபராதம் விதிக்கவும்  ஒரு பிரிவைச் சேர்ந்துள்ளது . இது சாலைகளின் தரத்தை மேம்படுத்துவதோடு பொறுப்புக்கூறல் கட்டமைப்பையும் உறுதி செய்யும்.


உரிம அமைப்பு 

===============================================================


https://savelifefoundation.org/wp-content/uploads/2019/07/MVA-Bill-2019_Analysis_SLF.pdf


பிரிவு 9 (4) இன் படி, போக்குவரத்து ஓட்டுநர்களுக்கு குறைந்தபட்ச கல்வித் தகுதி தவிர்க்கப்பட்டுள்ளது. பிரிவு 9 (3) க்கு இரண்டாவது விதிமுறையில் கொடுக்கப்பட்ட ஒரு நிறுவப்பட்ட பள்ளியிலிருந்து  ஒரு விண்ணப்பதாரர்  தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் பெறுவதற்கான விலக்கு தவிர்க்கப்பட்டுள்ளது.


போக்குவரத்து வாகனத்தை ஓட்டும் முன் ஒரு கற்றவரின் உரிமத்திற்கு விண்ணப்பிப்பதற்கு  குறைந்த பட்சம் ஒரு வருடத்திற்கு இலகுவான மோட்டார் வாகனத்தை ஓட்ட உரிமம் வைத்திருப்பதன் அவசியத்தை நீக்கி சட்டத்தின் 12 வது பிரிவில்  உட்பிரிவு 5 சேர்க்கப்பட்டுள்ளது.


சட்டத்தின் 14 வது பிரிவில் உள்ள திருத்தம் போக்குவரத்து உரிமங்களை புதுப்பிப்பதை 3 ஆண்டுகளில் இருந்து 5 ஆண்டுகளாக அதிகரிக்கிறது, அதே நேரத்தில் அபாயகரமான பொருட்களுடன் வாகனங்களை ஓட்டுவதற்கான போக்குவரத்து உரிமங்களை புதுப்பிப்பது ஒரு வருடத்திலிருந்து மூன்று ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது 


ஓட்டுநர் உரிமங்களின் தேசிய பதிவேட்டை நிறுவுவதற்கு வழிநடத்தும் புதிய பிரிவு 25A  இணைக்கப்பட்டுள்ளது. மாநில பதிவேடுகளை தேசிய பதிவேட்டில் சேர்க்கவும் இந்த ஏற்பாடு வழங்குகிறது. ஓட்டுநர் உரிமங்களின் தேசிய பதிவேட்டின் கீழ் தனித்துவமான ஓட்டுநர் உரிம எண் வழங்கப்படாவிட்டால் எந்த ஓட்டுநர் உரிமமும் செல்லுபடியாகாது என்று அது குறிப்பிடுகிறது.


உரிமத்தின் புதுப்பித்தல் காலம் முப்பது வயதுக்குப் பிறகு 10 வருட இடைவெளியில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஐம்பத்தைந்து வயதை எட்டிய பின் புதுப்பித்தல் காலம் ஒவ்வொரு 5 வருடங்களுக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


பிரிவு 19 இன் திருத்தம், ஒரு நபரை உரிமம் வைத்திருப்பதில் இருந்து தகுதி நீக்கம் செய்வதற்கும், ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான குற்றங்களுக்குப் பிறகு நிறுவப்பட்ட பள்ளியிலிருந்து ஓட்டுநர் புதுப்பித்தல் பயிற்சி வகுப்பை வெற்றிகரமாக முடிக்காவிட்டால், அவரது பெயரை பொது களத்தில் வைப்பதற்கும் உரிமம் வழங்கும் அதிகாரத்தை வழங்குகிறது.


சட்டப்பிரிவு -  27

===============================================================


https://indiacode.nic.in/show-data?actid=AC_CEN_30_42_00009_198859_1517807326286§ionId=28287§ionno=14&orderno=16


இதற்கான விதிகளை உருவாக்க சட்டத்தின் பிரிவு 27 மத்திய அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது:


உரிமம் வழங்கும் அதிகாரம் உரிமங்களை வழங்கும் வடிவம் மற்றும் முறை


பிரிவு 12 இல் குறிப்பிடப்பட்டுள்ள பள்ளிகள் மற்றும் நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவதற்கான பாடத்திட்டம் மற்றும் பயிற்சி தொகுதிகள் பற்றியும்.


ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான குற்றங்கள் காரணமாக தகுதி நீக்கம் செய்ய உரிம உரிமையாளர்களின் பெயரை பொது களத்தில் வைக்கும் விதம் பற்றியும் 


இயக்கி புதுப்பித்தல் பயிற்சி வகுப்பின் தன்மை, பாடத்திட்டம் மற்றும் காலம் பற்றியும் 


பிரிவு 25 A இல் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்கள், அதாவது ஓட்டுநர் உரிமங்களுக்கான தேசிய பதிவேடுகளை பராமரித்தல் பற்றியும் குறிப்பிடுகிறது.


சட்டப்பிரிவு -  41 

===============================================================


https://indiacode.nic.in/show-data?actid=AC_CEN_30_42_00009_198859_1517807326286§ionId=28314§ionno=41&orderno=43


சட்டத்தின் 41 வது பிரிவு புதிய வாகனங்களை பதிவு செய்வது பற்றி பேசுகிறது. இந்தத் திருத்தம் வாகனங்களின் விற்பனையாளர்களுக்கு புதிய வாகனங்களை பதிவு செய்ய உதவுகிறது. ஒரு வாகனத்தை முறையாக பதிவு செய்யத் தவறும் அல்லது கடமைகளில் தடுமாறும் வியாபாரிகளுக்கு நிலையான அபராதம் விதிக்கப்படுவதும் உண்டு. அத்தகைய வியாபாரிகளுக்கு ரூ. 15,000 அபராதம் விதிக்கப்படும்.


சட்டப்பிரிவு - 72 

===============================================================


https://savelifefoundation.org/wp-content/uploads/2019/07/MVA-Bill-2019_Analysis_SLF.pdf


சட்டத்தின் பிரிவு 72 மேடை வண்டி அனுமதி வழங்குவது பற்றி பேசுகிறது. பிரிவு 72 க்கு திருத்தம் கிராமப்புறங்களில் ஒரு மேடை வண்டிக்கு அனுமதி பெற பிரிவில் பரிந்துரைக்கப்பட்ட எந்தவொரு நிபந்தனையையும் தள்ளுபடி செய்வதற்கான பிராந்திய  அதிகார அதிகாரத்திற்கு அதிகாரம் அளிக்கிறது. பிரிவு 72 இல் பரிந்துரைக்கப்பட்ட நிபந்தனைகள் அடங்கும்


பயணிகளின் அதிகபட்ச எண்ணிக்கை மற்றும் எடுத்துச் செல்லக்கூடிய சாமான்களின் அதிகபட்ச எடை.


வழங்கப்படக்கூடிய குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச தினசரி பயணங்கள்


அங்கீகரிக்கப்பட்ட உடல் குறியீடுகளின் விவரக்குறிப்புகள்


இந்த மசோதா போக்குவரத்து வாகனங்களுக்கான தானியங்கி உடற்பயிற்சி பரிசோதனையை மத்திய அரசு அறிவித்த தேதியிலிருந்து அமல்படுத்துகிறது.


சட்டப்பிரிவு -  117 

===============================================================


https://indiacode.nic.in/show-data?actid=AC_CEN_30_42_00009_198859_1517807326286§ionId=28390§ionno=117&orderno=122


சட்டத்தின் 117 வது பிரிவு பார்க்கிங் இடங்கள் மற்றும் நிலையங்களை நிறுத்துதல் பற்றி பேசுகிறது. பிரிவு 117 இன் திருத்தம் சாலை பயனர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிப்பதற்கும், பார்க்கிங் மண்டலங்களை நியமிக்கும் போது போக்குவரத்தின் இலவச ஓட்டத்தை உறுதி செய்வதற்கும் மாநில அரசுக்கு ஒரு கடமையை அளிக்கிறது.


பிரிவு 136A

===============================================================


https://savelifefoundation.org/wp-content/uploads/2019/07/MVA-Bill-2019_Analysis_SLF.pdf


பிரிவு 136 A என்பது புதிதாக இணைக்கப்பட்டுள்ள  பிரிவு இது மின்னணு கண்காணிப்பு மற்றும் சாலை பாதுகாப்பை அமல்படுத்துவது பற்றி பேசுகிறது. இது தொடர்பாக விதிகளை உருவாக்க மத்திய அரசுக்கு இந்த பிரிவு அதிகாரம் அளிக்கிறது, மேலும் அதை செயல்படுத்துவதை உறுதிப்படுத்த மாநில அரசை வழிநடத்துகிறது.


பிரிவு 215 D 

===============================================================


https://savelifefoundation.org/wp-content/uploads/2019/07/MVA-Bill-2019_Analysis_SLF.pdf


பிரிவு 215 D ஒரு தேசிய சாலை பாதுகாப்பு வாரியத்தை நிறுவ முன்மொழிகிறது. சாலை வடிவமைப்பு, வாகன பராமரிப்பு, சாலை பராமரிப்பு, சாலை போக்குவரத்தின் நிலையான பயன்பாடு, பாதிக்கப்படக்கூடிய சாலை பயனர்களின் பாதுகாப்பு, சாலை கட்டுமான தொழில்நுட்பம் உள்ளிட்ட சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நிர்வாகத்தின் அனைத்து அம்சங்களிலும் வாரியம் யூனியன் மற்றும் மாநில அரசுக்கு ஆலோசனை வழங்கும். , மோட்டார் வாகன தரநிலைகள் போன்றவை அடங்கும்.


பிரிவு 66 A மற்றும் 66 B

===============================================================


https://savelifefoundation.org/wp-content/uploads/2019/07/MVA-Bill-2019_Analysis_SLF.pdf


புதிதாக இணைக்கப்பட்டுள்ள பிரிவு 66 A  மற்றும் 66 B ஆகியவை தேசிய போக்குவரத்துக் கொள்கையை முன்மொழிகின்றன. புதிதாக  இணைக்கப்பட்டுள்ள  இந்த பிரிவுகள் மாநிலங்களுடன் கலந்தாலோசித்து தேசிய போக்குவரத்துக் கொள்கையை செயல்படுத்த மத்திய அரசுக்கு அதிகாரம் அளிக்கின்றன.


பிரிவு 199A 

===============================================================


https://www.jagranjosh.com/general-knowledge/features-of-motor-vehicles-amendment-bill-2019-1567410462-1


சிறார்களின் குற்றம் ஒரு புதிய வகை என்றால்  அப்போது சிறார் பாதுகாவலர் / வாகனத்தின் உரிமையாளருக்கு 3 வருடங்கள் சிறை தண்டனை மற்றும் ரூ 25,000  அபராதமும் மோட்டார் வாகனத்தின் பதிவும்  ரத்து செய்யப்படும்.சிறாருக்கு  சிறார் நீதிச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட வேண்டும்


அபராதங்கள் 

===============================================================


 குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதற்கான அபராதம் ரூ .2,000 இருந்து  ரூ .10,000 ஆகவும்  6 மாத சிறைத்தண்டனையுடன் உயர்த்தப்பட்டுள்ளது.


உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ. 5000.


ஒரு வாகன உற்பத்தியாளர் மோட்டார் வாகனத் தரங்களுக்கு இணங்கத் தவறினால், அபராதம் ரூ .100 கோடி வரை அபராதம் அல்லது ஒரு வருடம் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும். 


ஒரு ஒப்பந்தக்காரர் சாலை வடிவமைப்பு தரத்திற்கு இணங்க அமைக்க  தவறினால், அபராதம் ரூ .1 லட்சம் வரை இருக்கும்.


மோட்டார் வாகனச் சட்டத்தின் பிரிவு 196 ன் கீழ், 2019 இன்ஷூரன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ .2000 அபராதம் விதிக்கப்படும்.


சட்டத்தின் 194  D  பிரிவின் கீழ்; ஹெல்மெட் இல்லாமல் வாகனங்களில்  சவாரி செய்தால்  ரூ .1000 அபராதமும் உரிமத்திற்கு 3 மாதங்களுக்கு தகுதி நீக்கம் செய்யப்படும்.


சட்டத்தின் 194 B  பிரிவின் கீழ் - சீட் பெல்ட் இல்லாமல் வாகனம் ஓட்டினால ரூ. 1000 அபராதம்  விதிக்கப்படும்.


வேகம் / பந்தயத்திற்கு முன்பு விதிக்கப்பட்ட  ரூ .500 க்கு பதிலாக ரூ .5,000 அபராதம் விதிக்கப்படும்.


சட்டத்தின் 194 E  பிரிவின் கீழ் -  அவசரகால வாகனங்களுக்கு ஒரு வழியை வழங்காவிட்டால் ரூ .10,000  அபராதம் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இரா.கணேசன் அருப்புக்கோட்டை

கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் 

நீலகிரி மாவட்டம் 

வழக்கறிஞர்களுக்கு சட்டம் வழங்கும் உரிமைகள்!*

*வழக்கறிஞர்களுக்கு சட்டம் வழங்கும் உரிமைகள்!*


*ஆறு உரிமைகள் பின் வருமாறு;*


1. Right of pre audience

2. Right to practice the profession

3. Right to enter in any court 

4. Right against arrest

5. Right to meet accused

6. Privileges to a lawyer under the Indian Evidence Act, 1872


முதலாவது உரிமை கீழ்க்காணுமாறு வரிசைப் படுத்தப்படுகிறது.


ஒருநீதிமன்றத்தில் இவர்கள் அனைவரும் இருந்தால் முதலாவதாக கேட்கப்படும் உரிமையைத்தான் Right of Pre audience என்கிறோம்.

1. Attorney General

2. Solicitor General

3. Additional Solicitor General

4. Second Additional Solicitor General and the Advocate General of India

5. Advocate General of any state

6. Senior Advocates

7. Other Advocates

நீதிமன்ற மாண்புக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசினாலன்றி, இவர்கள் பேசுவதை தடுக்கமுடியாது.


இரண்டாவது உரிமை Right to practice the profession ஆகும். இது இருவகையில் பாதுகாக்கப் படுகிறது.

முதலாவது இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 19(1)(g) -ன் படி தொழில்செய்யும் உரிமை.

இரண்டாவதாக, வழக்கறிஞர் சட்டம், 1961-ன் பிரிவு 30-ன் கீழ் எந்த நீதிமன்றத்தில் பதிவுபெற்ற வழக்கறிஞர் தொழில் புரிய உரிமை வழங்குகிறது.


மூன்றாவது உரிமை Right to enter in any court வழக்கறிஞர் சட்டப் பிரிவு 30, இவ்வுரிமையை வழங்குகிறது.


நான்காவது உரிமை Right against arrest 

உரிமையியல் நடைமுறை சட்டப் பிரிவு 135-ன் படி, ஒரு வழக்கறிஞர் நீதிமன்றம் செல்கையிலோ, பணியிலிருக்கும்போதோ, நீதிமன்றத்திலிருந்து திரும்பும்போதோ கைது செய்யப்படுவதை தடை செய்கிறது.


ஐந்தாவது உரிமை Right to meet accused ஆகும்.

குற்றஞ்சாட்டப்பட்டவரை சந்திக்கும் உரிமை வழக்கறிஞருக்கு உண்டு. அவர் சிறையில் இருந்தாலும் கூட, காலவரையறைக்கு உட்பட்டு, சந்திக்க உரிமை உண்டு.


ஆறாவதாக Privileges to a lawyer u/s 129 of Indian Evidence Act

இந்திய சாட்சிய சட்டப் பிரிவு 129-ன் கீழ், வழக்கறிஞருக்கும், அவரது கட்சிக்காரருக்கும் இடையிலான தனிப்பட்ட தகவல் தொடர்பை தெரிவிக்குமாறு கேட்கவோ, மிரட்டவோ எவருக்கும் உரிமையில்லை. வழக்கறிஞர் தாமாக முன்வந்து நீதிமன்றத்தில், அதனை சாட்சியமாக கூற இயலும். ஆனால், கட்டாயப்படுத்த சட்டத்தில் இடமில்லை.


Gudalur Consumer Human Resources and Environment Protection Center

The Nilgiris 

நிலப்பயன்பாட்டை வேளாண்மை நோக்கத்திலிருந்து வேளாண்மை அல்லாத நோக்கத்திற்கு மாற்றுவதற்கான விதிகள், 2017

நிலப்பயன்பாட்டை வேளாண்மை நோக்கத்திலிருந்து வேளாண்மை அல்லாத நோக்கத்திற்கு மாற்றுவதற்கான விதிகள், 2017


விதிகள். 1. குறுந்தலைப்பு, தொடக்கம் மற்றும் பயன்கள்


(1) தமிழ்நாடு 2017 ஆம் ஆண்டு நிலப்பயன் மாற்ற ( திட்டமில்லாப் பகுதியில் வேளாண்மையிலிருந்து வேளாண்மை அல்லாத பிற பயன்பாடுகளுக்கான) விதிகள் என இவ்விதிகள் அழைக்கப்படுகின்ற


(2) இவ்விதிகள் உடனடியாக செயலுக்கு வரும்


(3) இவ்விதிகள்  திட்டமில்லாப் பகுதிகளுக்குப் பொருந்து


 2. சொற்பொருள் விளக்கம்.-  இவ்விதிகளில் சந்தர்ப்பம் வேறு பொருள் குறித்தாலன்றி, மற்றபடி


(i) “சட்டம்” என்பது தமிழ்நாடு 1971 ஆம் ஆண்டு நகர் ஊரமைப்புச் சட்டம், தமிழ்நாடு சட்டம் (35/1972) என்று பொருள்படு


(ii) “ஆட்சியர்” என்பது மாவட்ட வருவாய் ஆட்சியர் என்று பொருள்படும்


(iii) “புன்செய் நிலம்” என்பது அரசு வருவாய் ஆவணங்களில் நிலமானது “வறண்ட” எனப் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டு


(iv) “மனைப்பிரிவு” என்பது நிலமானது புதிய சாலை அல்லது தெருக்கள் கொண்ட மனைகளாகப் பிரிக்கப்பட்டிருக்க வேண்டும்


(v) “உள்ளாட்சி” என்பது சம்பந்தப்பதிட்ட நிலம் அமைந்துள்ள நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சி என்று பொருள்படு


(vi) ‘மனை’ என்பது தெரு, சந்து, வழி, பாதை அல்லது பொதுப் பயன் ஆகியவற்றுக்கு அனுமதிக்கப்பதிட்ட பகுதி  நீங்கலாக உள்ள தனித்தோ அல்லது சேர்ந்தோ உள்ள உரிமைதாரரின் ஒரு நிலப்பகுதி  என்று பொருள்படும்


(vii) “உட்பிரிவு” என்பது நிலையில் உள்ள சாலை அல்லது தெருவினை ஒட்டியுள்ள பகுகப்பட்ட நிலம் என்று பொருள்படு


(viii) “நன்செய் நிலம்” என்னும் சொல்லுக்குத் தமிழ்நாடு 1963 ஆம் ஆண்டு கூடுதல் மதிப்பீடு மற்றும் கூடுதல் தண்ணீர் சட்டத்தில், (தமிழ்நாடு சட்டம் 8/1963)-இல் உள்ளவாறான அதே பொருளைக் கொண்டிருக்கும்


(iv) இவ்விதிகளில் சில சொற்கள் மற்றும் சொற்றொடர்கள் பயன்படுத்தப்பட்டு அதற்கு விளக்கம் அளிக்கப் பெறாதிருப்பின், மேற்படி சட்டம் மற்றும் அவற்றைச் செயல்படுத்த ஏற்படுத்தப்பட்ட விதிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்குண்டான சட்டம் மற்றும் விதிகளில் அளிக்கப்பட்ட பொருள், இவ்விதிகளில் கண்டுள்ள அத்தகைய சொற்கள் மற்றும் சொற்றொடர்களுக்குப் பொருந்து


3. அனுமதிக்கான விண்ணப்பம்.- எந்த ஒரு நபரும்,  திட்டமில்லாப் பகுதியில் எந்தவொரு மேம்பாட்டினையும் மேற்கொள்ள உள்ளாட்சியிடம் படிவம் 1-இல் விண்ணப்பிக்க வேண்டும். மனை ஒன்றுக்கு ரூ.1000/-ஐ  திரும்பப் பெறமுடியாத கூராய்வுக் கட்டணத் தொகையாக உள்ளாட்சியிடம் விண்ணப்பதாரர் செலுத்த வேண்டும்


4. விண்ணப்பத்தினைப் பரிசீலித்தல்.-  நகர் ஊரமைப்பு இயக்குநரின் முன்னனுமதி  பெற்ற பின்னரே,  திட்டமில்லாப் பகுதியில் மேம்பாட்டினை மேற்கொள்ள உள்ளாட்சி அமைப்பு அனுமதியளிக்க வேண்டு


5. இயக்குநரின் இசைவு.- உள்ளாட்சி அமைப்பிடமிருந்து மேம்பாட்டுக்கான விண்ணப்பம் பெறப்பட்டவுடன், நகர் ஊரமைப்பு இயக்குநர் அவர்கள் நன்செய் நிலம் எனில், மாவட்ட ஆட்சியரின் முன்னனுமதியும், புன்செய் நிலம் எனில் மாவட்ட வேளாண் இணை இயக்குநரின் அறிக்கையையும் பெற வேண்டும்


6. முன்னனுமதி அளிக்கப்படும் முன், மாவட்ட ஆட்சியரால் பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள்


(1) நிலத்தில் மேற்கொள்ளவிருக்கும் உத்தேச மேம்பாடு, கீழ்வரும் வகைப்பாடுகளில் அமையவில்லை என்பதை மாவட்ட ஆட்சியர் உறுதி செய்து கொள்ள வேண்டு


(அ) பொது நீர்நிலைகளான வாய்க்கால், கால்வாய், குளம், ஏரி, ஆறு, போன்றவை


(ஆ) புறம்போக்கு நிலங்கள், கோயில் நிலங்கள், வஃப் சொத்துக்கள் மற்றும் சமய/அறக்கட்டளை நிறுவனத்தின் நிலங்க


(இ) பொதுச் சாலை அல்லது தெருக்கள் அல்லது விண்ணப்பதாரருக்கு உரிமை அல்லாத பிற நிலங்களில் ஆக்கிரமித்துள்ள காலி நிலங்கள்


(ஈ) உயர் மின்னழுத்தக் கம்பிகள் மற்றும் மின் கோபுரங்களின் கீழ் அமைந்துள்ள நிலங்க


உ) வேளாண்மையைத் தொடர்ந்து மேற்கொள்ளுவதற்கு ஏற்றதாக உள்ள நிலங்கள்


(2) மாவட்ட ஆட்சியர், நகர் ஊரமைப்புத் துணை இயக்குநர் மற்றும் தொடர்புடைய துறையின் அலுவலர்களைக் கொண்டு தேவையெனக் கருதினால், கீழ்க்கண்டவற்றைக் களஆய்வு மேற்கொண்டு உறுதி  செய்து கொள்ள வேண்டும்


i) வருவாய் ஆவணங்களின்படி உத்தேச நிலத்தின் நி


ii) உத்தேச மனையினைச் சுற்றியுள்ள தற்போதைய மேம்பாடு, செய்யக்கருதியுள்ள மேம்பாட்டுக்கு ஏற்றதாய் இருத்


 iii) உறுதியாகப் பெறப்படும் பாசன ஆதாரம்/ஆயக்கட்டின் விவர


iv) வேளாண்மையின் தற்போதைய நிலை மற்றும் எத்தனை காலம் வேளாண்மை மேற்கொள்ளப்படவில்லை எனில் அதற்கான காரணங்கள்


 v) வேளாண் உற்பத்தித்திறன் மீதான விளைவுகள் மற்றும் வேளா


உற்பத்தியினைத் தொடருவதற்கான அவசிய


 vi) துப்புரவு பிரச்சனைகள், கழிவுநீர் வெளியேற்றம் மற்றும் கால்வாய்/ வாய்க்கால்/நீர் வடிகால் ஆகியவற்றை மாற்றி அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள்


(3) செய்யக் கருதியுள்ள மேம்பாட்டினால், பாசன வாய்க்கால் மற்றும் கால்வாய்கள் அல்லது இயற்கை மழை நீர் வடிகால் ஆகியவை தடைபடாமலும் அல்லது பாதிக்கப்படாமலும், நிலத்தடி நீர் குறையா வண்ணம் அல்லது வெள்ளப் பெருக்கத்தினால் அருகில் உள்ள பகுதிகள் பாதிக்கப்படாமலும் உள்ளதா என்பதை மாவட்ட ஆட்சியர் உறுதி செய்து கொள்ள வேண்டு


7. முன்னனுமதி  வழங்குவதற்கு முன்னர், நகர் ஊரமைப்பு இயக்குநர் பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள்


(1) நகர் ஊரமைப்பு இயக்குநர் கீழ் வருவன குறித்து உறுதி செய்து கொள்ள வேண்டும்


(அ) செய்யக் கருதியுள்ள மேம்பாட்டின் ஒரு பகுதி  அல்லது முழுவதும் பொது நீர் நிலைகளான கால்வாய், வாய்க்கால், குளம், ஏரி, ஆறு ஆகியவற்றில் அமையவில்லை


(ஆ) செய்யக் கருதியுள்ள மேம்பாடு, புறம்போக்கு நிலம், கோயில் நிலங்கள், வஃப் சொத்துக்கள் மற்றும் சமயம்/அறக்கட்டளை நிறுவனத்திற்கு உரிமையான நிலங்களில் அமையவில்


(இ) சுற்று வட்டார நிலங்களுக்கு எவ்வித அணுகுபாதையும் இல்லாத நேர்வில் அந்நிலங்களுக்கு வழித்தடை ஏற்படுத்தும் காலி நிலங்களில் செய்யக்கருதியுள்ள மேம்பாடு அமையவில்லை


(ஈ) செய்யக் கருதியுள்ள மேம்பாட்டின் ஒரு பகுதியோ அல்லது முழுவதுமோ, உத்தேச சாலை மற்றும் இருப்புப் பாதையினை பாதிக்கும் நிலத்தில் அமையவில்


(உ) செய்யக் கருதியுள்ள மேம்பாட்டு பொதுச்சாலை அல்லது தெரு அல்லது விண்ணப்பதாரருக்கு உரிமை அல்லாத பிற நிலங்களில் ஆக்கிரமிப்பு செய்து அமையவில்லை


(ஊ) செய்யக் கருதியுள்ள மேம்பாட்டின் ஒரு பகுதியோ அல்லது முழுமையாகவோ, உயர் மின்னழுத்தக் கம்பிகள் மற்றும் மின் கோபுரங்களின் கீழ் அமைந்துள்ள நிலங்களில் அமையவில்


(எ) செய்யக் கருதியுள்ள மேம்பாடு மேற்கொள்ளப்படும் மனையில் உரிய வடிகால் பணி, கழிவு நீர்  திட்ட அமைப்புடன் தேவையற்ற நீர் மற்றும் அபிவிருத்திப் பகுதி யிலிருந்து ஓடும் மிகுதியான மழை நீரானது வடிவதற்கு அருகில் உள்ள பிரதான கழிவுநீர் அமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளதா அல்லது வேறுவித வசதிகளுடன் கூடிய அமைப்பினை ஏற்படுத்தி  உத்தேச இடத்தில் தண்ணீர் தேங்கா வண்ணம் இருப்பதை நகர் ஊரமைப்பு இயக்குநர் உறுதி  செய்து கொள்ள வேண்டும்


(2) நகர் ஊரமைப்பு இயக்குநர் செய்யக் கருதியுள்ள மேம்பாட்டிற்கு முன்னனுமதி  வழங்கும் முன்னர், மேம்பாடானது நன்செய் நிலத்தில் அமையுமாயின், மாவட்ட ஆட்சியரின் முன் அனுமதியும் புன்செய் நிலத்தில் அமையுமாயின், வேளாண் இணை இயக்குநரின் அறிக்கையையும் கருத்தில் கொள்ள வேண்டு


(3) நகர் ஊரமைப்பு இயக்குநர் செய்யக் கருதியுள்ள மேம்பாட்டிற்கு இசைவு அளிக்கும் முன்னர், மனையிடத்தை ஆய்வு செய்யவோ அல்லது தொடர்புடைய அலுவலர்களிடமிருந்து, தேவையெனில், அறிக்கை பெறலாம்


8. நகர் ஊரமைப்பு இயக்குநரின் முன் அனுமதி .- நகர் ஊரமைப்பு இயக்குநர், செய்யக் கருதியுள்ள மேம்பாடு குறித்து மன நிறைவு அடையும் நேர்வில் செய்யக் கருதியுள்ள மேம்பாட்டிற்கு உரிய முன் அனுமதி  அளிக்கலா


9. நகர் ஊரமைப்பு இயக்குநரிடமிருந்து செய்யக் கருதியுள்ள மேம்பாடு குறித்து முன் அனுமதி  பெறப்பட்டவுடன் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பு, நிலப்பயன் மாற்ற கட்டணமாக 1899 ஆம் ஆண்டு இந்திய முத்திரைச் சட்டம், (மத்திய சட்டம் 2/1899) உட்கூறு aa பிரிவு 47-இன் கீழ் சந்தை மதிப்பில் 3 விழுக்காடு நிர்ணயம் செய்து, அதனை வசூலித்து, அரசுக் கணக்குத் தலைப்பின் கீழ் வரவு வைத்து செய்யக் கருதியுள்ள மேம்பாட்டுப் பணியை மேற்கொள்ள உரிய அனுமதி  அளிக்க வேண்டும்


இணைப்பு

*************


சரிபார்ப்புப் பட்டியல் விண்ணப்பதாரரால் அளிக்கப்பட வேண்டிய விபரங்க


 (செய்யக்கருதியுள்ள மேம்பாட்டிற்கு பொருந்தாத இனங்களை அடித்து விடவும்


1. விண்ணப்பதாரரால் சுய சான்றொப்பமிட்ட ஆவணங்களின் (விற்பனை ஆவணம்/குத்தகை ஆவணம்/பகராள் உரிமைப் பத்திரம்) ந


2. அணுகுசாலை: உரிமையாளர், பராமரிப்பு, வகை, இடத்தின் எல்லை சார்ந்த அணுகுசாலையின் அகலம் ஆகியவற்றிற்கான சான்றிதழ்களை நகர்ப்பகுதி  உள்ளாட்சி மன்றங்களைப் பொறுத்தமட்டில் நேர்விற்கேற்ப பேரூராட்சியின் செயல் அலுவலர் அல்லது நகராட்சி/மாநராட்சி ஆணையரிடமிருந்து பெற வேண்டும். ஊரகப் பகுதி  உள்ளாட்சி மன்றங்களைப் பொறுத்த நேர்வில், உள்ளாட்சி மன்றத்தால் பராமரிக்கப்படும் சாலைப் பதிவேட்டின் அடிப்படையில் அத்தகைய சான்றிதழ் நேர்விற்கேற்ப வட்டார ஊராட்சி/கிராம ஊராட்சியின் வட்டார வளர்ச்சி அலுவலர்களிடமிருந்து பெறப்பட வேண்டும்


3. சம்பந்தப்பட்ட துறையின் தகுதி  வாய்ந்த அலுவலரால்  சான்றொப்பமிடப்பதிட்ட ஆவணங்க


(i) புல வரைபட சுவடி/நகர்ப்புற நில அளவை வரைபட


(ii) உடைமை உரிமையாளரின் பெயரில் உள்ள பட்டா/சிட்டா/நகர்ப்புற நி


அளவைப் பதிவுருக்


4. 1:400/800/1600 உரிய அளவிலான தள வரைபட


5. கருதப்பட்ட மனைப்பிரிவு வரைபடம்/மனை உட்பிரிவு வரைபடம் (மனைப்பிரிவு/ மனை உட்பிரிவு செயற்குறிப்பு குறித்த நேர்வில்


6. 1:2000 குறையாத அளவில் சுற்றியுள்ள கணக்கெடுப்பு எண்களில் ஏதேனும் ஒரு அளவிற்கு வரையப்பட்டிருப்பின், வண்ண குறியீட்டு மூல  திட்ட நிலப் பயன்பாட்டுடன் கூடிய கிராம வரைபடத்தில் இருக்கக்கூடிய அனைத்து அம்சங்களையும், விவரங்களையும் குறிக்கக்கூடிய 500 மீட்டர் சுற்றளவு தளத்தைச் சுற்றியுள்ள தற்போதைய அனைத்து மேம்பாடுகளைக் காட்டக்கூடிய சுற்றுப்புற வரைபட


7. விண்ணப்பம் அளிக்கப்பதிட்ட நாளிலிருந்து முப்பது நாட்களுக்கு முன்னர் வழங்கப்படாத / முப்பது நாட்களுக்குள் வழங்கப்பட்ட 13 ஆண்டுகளுக்கான வில்லங்கச் சான்றித


8. வருவாய் பதிவுருக்களின்படி/அல்லது மனை தொடர்பான நிபந்தனைகளின்படி, மனை அமைந்துள்ள இடத்திற்குள் மற்றும் / அல்ல


மனையை அடுத்துள்ள பகுதிகளில் குளம், ஏரி, கால்வாய், வாய்க்கால் அல்லது யாதொரு நீர் வழிப் பாதை போன்ற ஏதேனும் நீர் அமைப்பு இருப்பின்


(i) மனை வரைபடம் மற்றும் சுற்றுப்புற வரைபடத்தில் இவை குறிக்கப்பட வேண்டு


(ii) விண்ணப்பதாரரின் தனி உடைமை உரிமையின் கீழ் நீர்நிலை அமைப்புகள் இருந்து, கால்வாய்/வாய்க்கால்/நீர் வழிப்பாதைக்கான மாற்று ஒழுங்கமைவு முறை மனை வரைபடத்தில் காட்டப்பட வேண்டும். அவை பக்கத்து நிலங்களுக்குச் செல்லக்கூடிய நீரோட்டத்தைத் தடை செய்யாமல் இருக்க வேண்டும்


(iii) நீர் அமைப்பு அரசுக்குச் சொந்தமாக இருப்பின், கால்வாய்/ வாய்க்கால்/நீர் வழிப்பாதைக்கான மாற்று வரிசை மனை வரைபடத்தில் காட்டப்பட வேண்டும். அவை, பக்கத்து நிலங்களுக்குச் செல்லக்கூடிய நீரோட்டத்தைத் தடை செய்யாமல் இருக்க வேண்டும். அத்தகைய நேர்வுகளில், அத்தகைய மாற்று ஒழுங்கமைவு முறையைக் கருதிப்பார்ப்பதற்காக சம்பந்தப்பட்ட துறையிடமிருந்து தடையில்லாச் சான்றிதழ் பெறப்பட வேண்டு


(iv) அரசு உடைமை உரிமையின் கீழ் நீர் நிலை அமைப்பு இருந்து, விண்ணப்பதாரர், கால்வாய், வாய்க்கால்/நீர் அமைப்பின் குறுக்கே பாலம் அமைக்கக் கருதினால், சம்பந்தப்பதிட்ட அரசு முகவரமைப்பிடமிருந்து தடையில்லாச் சான்றிதழ் பெறப்பட வேண்டும்


(v) கால்வாய்/வாய்க்கால்/நீர் வழியின் எல்லையிலிருந்து 15 மீட்டருக்குள் திட்டடத்திற்கான யாதொரு மனை அமைக்க விண்ணப்பதாரர் கருதினால், ஆணையர்/செயல் அலுவலர்/உள்ளாட்சி அமைப்பின் நிருவாக அதிகாரியிடமிருந்து தடையில்லாச் சான்றிதழ் பெறப்பட வேண்டும். உரிய அதிகாரியால், பல்வேறு அம்சங்களைக் கருத்திற் கொண்டும், நீர்நிலைக்குள் கழிவு நீர் வெளியேற்றுவது நீர் அமைப்பை மாசுபடுத்தாத வகையில் உள்ளதாகக் கருதப்பட்ட ஏற்பாட்டு முறை குறித்து மன நிறைவு கொண்டும், அத்தகைய சான்றிதழ் வழங்கப்பட வேண்டு


9. இரயில்வேக்குச் சொந்தமான இடத்தின் எல்லையிலிருந்து 30 மீட்டர் தொலைவிற்குள் மனை அமைந்து, அத்தகைய பகுதிக்குள கட்டடம் கட்டுவதற்கான மனையைப் பெறுவதற்காக விண்ணப்பதாரர் கருதினால், இரயில்வே துறையிடமிருந்து தடையில்லாச் சான்றிதழ் பெற வேண்டு


10. இடுகாடு/சுடுகாட்டு எல்லையிலிருந்து 90 மீட்டர் தொலைவிற்குள் மனை அமைந்திருப்பின், அத்தகைய பகுதிக்குள் கட்டடம் கட்டுவதற்கான மனையைப் பெறுவதற்காக விண்ணப்பதாரர் கருதினால்


(i) நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் குறித்த நேர்வில், அதாவது, மாநகராட்சி/நகராட்சி/பேரூராட்சிகளில், குடியிருப்பு தவிர கட்டடப் பயன்பாட்டிற்கான மனைகளுக்காக, உள்ளாட்சி அமைப்பின் சுகாதார அலுவலரிடமிருந்து தடையில்லாச் சான்றிதழ் பெற வேண்டும். குடியிருப்புப் பயன்பாடு குறித்த நேர்வில், இடுகாடு/சுடுகாடு பயன்பாட்டில்  இல்லையென்றும், கடந்த ஐந்து ஆண்டுகளாக அவை (இடுகாடு/சுடுகாடு) மூடப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கக்கூடிய வகையில் உள்ளாட்சி அமைப்பின் சுகாதார அலுவலரிடமிருந்து சான்றிதழ் பெறப்பட வேண்டு


(ii) ஊரக உள்ளாட்சி அமைப்புகள் குறித்த நேர்வில், அதாவது, கிராம ஊராட்சியில், குடியிருப்பு தவிர, ஏனைய திட்டடப் பயன்பாட்டிற்கான மனைகளுக்காக, உள்ளாட்சி அமைப்பின் நிருவாக அதிகாரியிடமிருந்து தடையில்லாச் சான்றிதழ் பெறப்பட வேண்டும். குடியிருப்புப் பயன்பாடு குறித்த நேர்வில், இடுகாடு/சுடுகாடு பயன்பாட்டில் இல்லையென்றும் கடந்த ஐந்து ஆண்டுகளாக அவை (இடுகாடு/சுடுகாடு) மூடப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கக்கூடிய வகையில் உள்ளாட்சி அமைப்பின் நிருவாக அதிகாரியிடமிருந்து சான்றிதழ் பெறப்பட வேண்டும்


11. செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு கல் குவாரி அல்லது ஏற்றுக் கொள்ளப்பட்ட தர நிலையைப் பின்பற்றத் தவறிய / பயன்பாட்டில் இல்லாத மூடப்பதிட்ட ஒரு கல் குவாரியின் எல்லையிலிருந்து 300 மீட்டர் தொலைவிற்குள் ஒரு மனைப்பகுதி  அமைந்திருந்தால் மற்றும் அப்பகுதியில் கட்டடம் கட்டப்படுவதற்காக ஒரு மனைப்பிரிவினை அமைக்க விண்ணப்பதாரர் உத்தேசிருந்தால், அதனை நடைமுறைப்படுத்துவதற்கான ஒரு சான்றிதழைத் தொடர்புடைய உள்ளாட்சி அமைப்பிடமிருந்தோ அல்லது அனுமதியளிக்கும் அதிகார அமைப்பிடமிருந்தோ பெறப்பட்டிருக்க வேண்டு


12. கல் உடைக்கும் குவாரியின் எல்லையிலிருந்து 500 மீட்டர் தொலைவிற்குள் மனை இருந்து மனைப்பகுதியில் கட்டடம் கட்டுவதற்காக விண்ணப்பதாரர் உத்தேசித்திருந்தால் உள்ளாட்சி அமைப்பிடமிருந்து அல்லது சம்பந்தப்பட்ட அனுமதியளிக்கும் அமைப்பிடமிருந்து, நடைமுறைப்படுத்துவதற்கான ஒரு சான்றிதழை பெறப்பட வேண்டும்


13. வான்வழிப் போக்குவரத்துத் துறையிடமிருந்து தடையில்லாச் சான்றிதழ் பெறப்பட வேண்டும். (விமான நிலையத்தின் அருகமைந்த பகுதிகளுக்கான தனி விதிகளின்படி தேவைப்பட்டால் பொருத்தமான விமானப்படை அதிகார அமைப்பிடமிருந்து தடையில்லாச் சான்றிதழ் / விமானப்படை நிலையங்களின் அருகே அமைந்த பகுதிகளைப் பொறுத்தவரையில், சம்பந்தப்பட்ட விமானப்படை அதிகாரியின் அறிவிக்கை/ஆணையின்படி தேவைப்பட்டால்) (சாதாரணமான கட்டடங்களைத் தவிர ஏனைய கட்டடங்களைப் பொறுத்த நேர்வில்


14. அரசு வழக்கறிஞர்/கூடுதல் அரசு வழக்கறிஞர்/அரசு சிறப்பு வழக்கறிஞர்/அரசு குற்றவியல் வழக்குரைஞர்/உள்ளாட்சி அமைப்புக் குழுவில் உள்ள வழக்கறிஞர்/தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் குழுவில் உள்ள வழக்கறிஞரிடமிருந்து நில உரிமை குறித்துப் பெறப்பட்ட சட்டக் கருத்துரை (அசலா


15. ஆவண ரீதியாகவும் நிலத்தின் ஒவ்வொரு நில அளவை எண்ணின் வாரியாகவும் தெளிவான விபரங்களைக் குறிப்பிட்டு நிலத்தின் உடைமை பற்றி விண்ணப்பதாரரால் ரூ.20/- (ரூபாய் இருபது மட்டும்) முத்திரைத்தாளில் அளிக்கப்படும் உறுதிமொழி ஆவணம்


16. மனையின் வழியாக மின்சார/தொலைபேசி கம்பிகள் செல்லுமாயின் அதை மாற்றியமைப்பதற்காக ரூ.20/- (ரூபாய் இருபது மட்டும்) முத்திரைத்தாளில் உத்தரவாத


17. முத்திரை மற்றும் பதிவு எண்ணுடன் கட்டடக் கலைஞர் மற்றும் கட்டுமான வடிவமைப்புப் பொறியாளர் உட்பட உரிமையாளரால் முறையாகக் கையொப்பமிடப்பட்ட கட்டட உறுதித் தன்மைக்கான சான்றிதழ் (சாதாரண கட்டடத்தைத் தவிர ஏனைய கட்டடங்களைப் பொறுத்த நேர்வில்


18. கட்டுமான வடிவமைப்பு நிறைவு, கட்டடம் கட்டி விற்பனை செய்பவர் பொறுப்பேற்பதற்கான உத்தரவாதம், கட்டட வடிவமைப்பாளர், கட்டுமான அமைப்புப் பொறியாளர் ஆகியோரின் கட்டட உறுதித் தன்மை விபரங்கள் பற்றியதான சான்றிதழ், பணிகளை உரிய முறையில் மேற்பார்வையிடுவதற்கான சான்றிதழ், கட்டடப் பாதுகாப்புத் தேவைகளின்படி மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளுக்கான சான்றிதழ் (சாதாரண கட்டடத்தைத் தவிர்த்து ஏனைய கட்டடங்களைப் பொறுத்த நேர்வில்


19. பின்வரும் நேர்வுகளைப் பொறுத்த வரையில் தீயணைப்புத் துறையிடமிருந்து தடையில்லாச் சான்றுப் (noc) பெறப்பட்டிருக்க வேண்டும்


(i) வணிக வளாகம்/பெருவணிக வளாகம்/ திரையரங்கம்/ திருமண மண்டபம்/சமுதாயக் கூடம் ஆகியவற்றுக்கு 1971-ஆம் ஆண்டு நகர் ஊரமைப்புச் சட்டத்தின் 2(33)வது பிரிவின் கீழ் வரையறுக்கப்பட்டுள்ளவாறான பொதுக் கட்டடங்க


(ii) அனைத்து வகையினத்தையும் சேர்ந்த பன்மாடிக் கட்டடங்கள், தொழிற்சாலைகள் மற்றும் கிடங்குகள்


 (iii) வெடிபொருட்கள், பட்டாசுகள் மற்றும் அதைப்போன்ற ஏனைய எளிதில் தீ பற்றக்கூடிய பொருட்கள் கையாளப்படக்கூடிய / விற்பனை செய்யப்படக்கூடிய வணிகக் கட்டடங்க


20. நேர்விற்கேற்ப, நகர உள்ளாட்சி அமைப்புகளைக் குறித்த நேர்வில் செயல் அலுவலர் அல்லது அணையரிடமிருந்து பெறப்பட்ட வரைபடத்தில் காட்டப்பட்டுள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் விபரங்கள் அல்லது பாதாளச் சாக்கடை வசதி  கிடைக்கப் பெறுவதற்கான சான்றிதழ். மேலும், நேர்விற்கேற்ப ஊரக உள்ளாட்சி அமைப்புகளைக் குறித்த நேர்வில், கிராமப் பஞ்சாயத்துகள்/வட்டார பஞ்சாயத்துகளின் வட்டார வளர்ச்சி அலுவலரின் சான்றிதழ் (சாதாரண கட்டடங்களைத் தவிர ஏனைய கட்டடங்கள் குறித்த நேர்வில்


21. குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் அகற்றம் வழிகளை வழங்கும் ஒரு புகழ்பெற்ற நிறுவனத்தினை ஈடுபடுத்திப் போதிய ஏற்பாடுகளை அவரது சொந்த செலவிலேயே மேற்கொள்வார் என விண்ணப்பதாரர் ரூ.20/- (ரூபாய் இருபது மட்டும்) முத்திரைத் தாளில் உறுதிமொழி அளிக்கப்பட வேண்டும். (சாதாரண கட்டடங்களைத் தவிர ஏனைய கட்டடங்கள் குறித்த நேர்வில்


22. நிலை 1 கட்டுமானப் பொறியாளரிடமிருயது நிலநடுக்க அதிர்வுகளை உரிய நேரத்தில் கருதிப் பார்த்து வரைபடங்கள், உறுதித் தன்மை குறித்த சான்றிதழுடன் விரிவான கட்டட வடிவமைப்பு அறிக்கை (உரிமையாளர் மற்றும் கட்டடக்கலை வல்லுநர் மற்றும் கட்டட வடிவமைப்புப் பொறியாளர் அவரவர் அலுவலக முத்திரை மற்றும் பதிவெண்ணுடன் வரையறுக்கப்பட்ட படிவத்தில் ரூ.100/- (ரூபாய் நூறு மட்டும்)-க்கான முத்திரைத்தாளில் உறுதி மொழிப் பத்திரம் ஒன்றை அளிக்க வேண்டும். (பன்மாடிக் கட்டடங்களைப் பொறுத்த நேர்வில்


23. விமான நிலையத்தின் எல்லையிலிருந்து 20 மீட்டருக்குள் அமைந்துள்ள மனையில் கட்டடத்தின் உயரம் 30 மீட்டருக்கும் அதிகமாக இருப்பின் சிவில் விமானப் போக்குவரத்துத் துறையிடமிருந்து தடையில்லாச் சான்றிதழ் பெறப்பட வேண்டும். (பன்மாடிக் கட்டடங்களைப் பொறுத்த நேர்வில்


24. பன்மாடிக் கட்டடங்களின் உயரம் 60 மீட்டருக்கும் அதிகமாக இருக்கும் நேர்வில், (கட்டடத்தின் அடிமட்டத்திலிருந்து அளவிடப்பட வேண்டும்). பின்வரும் நிறுவனங்களிடமிருந்து உறுதித் தன்மை சான்றிதழ் பெறப்பட வேண்டு


(i) இந்தியத் தொழில்நுட்ப நிறுவன


 (ii) அண்ணா பல்கலைக்கழக


 (iii) தேசியத் தொழில்நுட்ப நிறுவனம் (திருச்சிராப்பள்ளி


(iv) கட்டுமானப் பொறியியல் ஆராய்ச்சி மையம், சென்


25. படத்தில் காட்டப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்பு ஏற்பாட்டு முறை (சாதாரண கட்டடங்களைத் தவிர ஏனைய கட்டடங்கள் குறித்த நேர்வில்


26. படத்தில் காட்டப்பட்டுள்ள சூரிய மின்சக்தியினால் இயங்கும் நீர் சூடேற்றும் ஏற்பாட்டு முறை (சாதாரண கட்டடங்களைத் தவிர ஏனைய கட்டடங்கள் குறித்த நேர்வில்


27. தூண்கள் மற்றும் உத்திரங்களுக்கான வடிவமைப்பு கணக்கீடுகளை உள்ளடக்கிய  திட்டம் மற்றும் வரைபடத்தின் விபரங்கள் மற்றும் தூண்களின் நிலைகளை உள்ளடக்கிய கட்டமைப்பின் அனைத்துக் கட்டுமானப் பகுதிகள் (பன்மாடிக் கட்டடங்கள் குறித்த நேர்வில்


28. அமைக்கக் கருதியுள்ள கட்டடத்திற்கான மண், பாதுகாப்பான தாங்கு  திறன் ஆகியவை போதிய அளவில் உள்ளதா என்பதைக் கணக்கிடுவதற்காக பன்மாடிக் கட்டடத்தைக் கட்டக் கருதியுள்ள இடத்தில் மேற்கொள்ளப்பட்ட மண் வள ஆய்வுகள், அவசியமான சோதனைகள், தெரிவிக்கப்பட்ட கடைக்கால் முறை ஆகியவை பற்றிய விபரங்களைத் தெரிவிக்கிற புகழ்பெற்ற நிறுவனத்தின் மண்வள வல்லுநர்/புவி தொழில்நுட்பப் பொறியாளர் ஒருவரிடமிருந்து பெறப்பட்ட, தொடர்புடைய வரைபடங்கள் உட்பட முழுமையான அறிக்


29. இந்தியத் தொல்லியல் அறிவிக்கப்பட்ட கடலோர முறைப்படுத்தல் மண்டலப் பகுதி  மற்றும் ஏனைய அறிவிக்கப்பட்ட தடைசெய்யப்பட்ட பகுதியில் கட்டடத்தின் இடம் அமைந்திருக்குமாயின், சம்பந்தப்பட்ட துறையிடமிருந்து தடையில்லாச் சான்றிதழ் பெறப்பட வேண்டும்


30. மலைப்பகுதி ப் பாதுகாப்பு அணையத்தின் வரம்பெல்லைக்குள் கட்டடத்தின் இடம் அமையுமாயின் பின்வருவனவும் அளிக்கப்பட வேண்டு


(i) முதன்மை தலைமை வனப்பாதுகாவலரிடமிருந்து பெறப்பட்ட தடையில்லாச் சான்றிதழ்


(ii) தலைமைப் பொறியாளரிடமிருந்து (வேளாண் பொறியியல்) பெறப்ப


தடையில்லாச் சான்றிதழ்


(iii) உரிய மாவட்ட அளவிலான சுரங்க மற்றும் புவியியல் துறையின் உதவி இயக்குநர்/துணை இயக்குநரிடமிருந்து பெறப்பட்ட தடையில்லாச் சான்றித


(iஎ) சம்பந்தப்பட்ட நகர் ஊரமைப்புத் துறையின், மண்டல துணை இயக்குநரின் குறிப்பிட்ட பரிந்துரை மற்றும் இடத்தின் ஆய்வு குறித்த குறிப்புரைகள்


(எ) மாவட்ட ஆட்சியரின் இடத்தின் மீதான ஆய்வு அறிக்கை மற்று


குறிப்பிட்ட பரிந்துரைக


(vi) கட்டடக் கலை மற்றும் அழகியல் அம்சங்கள் குழுவின் பரிந்துரைகள் (மாவட்டங்களில் அறிவிக்கப்பதிட்ட மலைவாழிடங்களின் கீழ் இடம் அமைந்திருக்கும் நேர்வுகளில், அதாவது நீலகிரி,  திண்டுக்கல் மற்றும் சேலம்


(vii) இடத்தின் நில வளைவுக்கேற்ற திட்டம்


நன்றி.


கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய

நீலகிரி மாவட்டம்

ம்..!.).ள்.ம்.ழ்..ட்ட.ம்..கை.).).).னை)ம்ம்ம்.)).).).ள்..ள்..).).ம்..க).)..ம்..ம்.,ம்.ம்.ம்..ம்.;துழ்ம்.)ம்கள்லம்ள்:.கல்)ள்* :-.ம்..ம்..லை..லை..லை..:-.-ம்..ம்.ண்.ம்தல்லை:-;ள்;;ள்;;ம்..-.ம்..ம்.;ம்;;ம்;;ம்;;ம்;,ம்..ன.:-7.ர்வுகளில், அதாவது நீலகிரி, திண்டுக்கல் மற்றும் சேலம்).


(vii) இடத்தின் நில வளைவுக்கேற்ற திட்டம்.


நன்றி...!


கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம்

நீலகிரி மாவட்டம்


*நீதிமன்ற தீர்ப்பை பற்றிய விளக்கங்கள்*

 *நீதிமன்ற தீர்ப்பை பற்றிய விளக்கங்கள்* 


நீதிமன்றத்தில் ஒரு வழக்கை வாதி தாக்கல் செய்கிறார் அந்த வழக்கை எதிர்த்து பிரதிவாதி வழக்கு நடத்துகிறார் இரு பக்க வழக்கு விசாரணையும் நடைபெற்று முடிந்த பிறகு அந்த வழக்கிற்கான இறுதி தீர்ப்பை நீதிபதி வழங்குகிறார் அந்த வழக்கின் தீர்ப்பை எப்படி பெறுவது அந்த தீர்ப்பு எப்போது கிடைக்கும் என்ற மக்களின் பல கேள்விகளுக்கு பதிலை இந்த கட்டுரையில் விபரமாக தெரிந்துகொள்ளலாம்.


 *நீதிமன்ற தீர்ப்பு என்றால் என்ன?* 


ஒரு சர்ச்சையைத் தீர்த்து, கட்சிகளின் உரிமைகள் மற்றும் கடமைகளைத் தீர்மானிக்கும் நீதிமன்றம் அல்லது தீர்ப்பாயத்தின் வழக்கின் விசாரணை முடிந்த இறுதிப் பகுதியாகும் இதை நீதிமன்ற இறுதி உத்தரவு எனலாம். ஒரு செல்லுபடியாகும் தீர்ப்பு அனைத்து போட்டியிட்ட சிக்கல்களையும் தீர்க்கிறது மற்றும் வழக்கிற்கு முடிவுக்குக் கொண்டுவருகிறது, ஏனெனில் இது நீதிமன்றத்தின் முன் நிலுவையில் உள்ள நடவடிக்கை குறித்த சட்டத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பாகக் கருதப்படுகிறது. வழக்கில் யார் வெற்றி பெறுகிறார்கள் மற்றும் வெற்றியாளருக்கு என்ன தீர்வுகள் வழங்கப்படும் என்று அது குறிப்பிடுகிறது. பரிகாரங்களில் பண சேதங்கள், தடை நிவாரணம் அல்லது இரண்டும் இருக்கலாம். 


ஒரு தீர்ப்பு வழக்கில் நீதிமன்றத்தின் அதிகார வரம்பின் முடிவையும் குறிக்கிறது. சிவில் நடைமுறையின் கூட்டாட்சி விதிகள் மற்றும் சிவில் நடைமுறையின் பெரும்பாலான மாநில விதிகள் இறுதித் தீர்ப்புகளிலிருந்து மட்டுமே மேல்முறையீடுகளை அனுமதிக்கின்றன. 


ஒரு தீர்ப்பு எழுத்துப்பூர்வமாக இருக்க வேண்டும் மற்றும் அனைத்து சிக்கல்களும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளன என்பதை தெளிவாகக் காட்ட வேண்டும். அது குறிப்பாக யாருக்கு ஆதரவாகவும் எதிராகவும் கொடுக்கப்பட்டுள்ளது என கட்சிகளைக் குறிக்க வேண்டும். பணவியல் தீர்ப்புகள் திட்டவட்டமானதாகவும், உறுதியுடன் குறிப்பிடப்பட்டதாகவும், புள்ளிவிவரங்களைக் காட்டிலும் வார்த்தைகளில் வெளிப்படுத்தப்பட்டதாகவும் இருக்க வேண்டும். உண்மையான சொத்துக்களின் வழக்குகளில் தீர்ப்புகள் நிலத்தை எளிதில் அடையாளம் காணும் வகையில், நிலத்தின் வெளிப்படையான விளக்கத்தைக் கொண்டிருக்க வேண்டும்.


 *நீதிமன்ற தீர்ப்பை எப்பொழுது பெற முடியும்?* 


நீதிமன்ற தீர்ப்பை அன்றைய தினமே நீதிமன்றத்தில் தெரிந்து கொள்ள முடியும். நீதிமன்ற தீர்ப்பை ஒரு நீதிபதி வழங்கும்போது அந்த நீதிமன்றத்தில் அந்த தீர்ப்பை பற்றி சொல்லித்தான் தீர்ப்பை வழங்குவார், ஒருவேளை அதை நாம் கவனிக்க தவறினால் அந்த தீர்ப்பை தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் நீதிமன்றங்களில் கோர்ட் டைரி என்ற நடைமுறையின் மூலமாக தினம் நடைபெறும் நீதிமன்ற நடைமுறைகளை பதிவிட்டு பதிவேடுகள் மூலமாக பாதுகாத்து வருவார்கள் அந்த கோட்டையில் நீதிமன்றத் தீர்ப்பில் என்ன சொல்லி இருக்கிறார்கள் என்பதை உங்கள் வழக்கறிஞர் மூலமாக படித்து தெரிந்து கொள்ள முடியும். நீதிமன்ற வாதியோ அல்லது பிரதிவாதியோ நீதிமன்ற தீர்ப்பை முழுமையாக தெரிந்து கொள்ள நீதிமன்றத்தில் அந்த வழக்கு என்னை பதிவிட்டு மனு கொடுத்து நகலை பெற்று தான் முழுமையாக தெரிந்து கொள்ள முடியும்.


 *நீதிமன்ற தீர்ப்பை பாதுகாக்கும் முறை?* 


நீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கியவுடன், அது நீதிமன்ற நிர்வாகி அலுவலகத்துடன் தேதியிடப்பட்டு ஆவணப்படுத்தப்பட வேண்டும். நவீன கணினி தரவுத்தளங்களுக்கு முன், அகர வரிசைப்படி தீர்ப்புகள் ஒரு டாக்கெட் docketed புத்தகத்தில் உள்ளிடப்பட்டு வழக்கில் தொடர்புடையவர்கள் அறியும் படி அவற்றை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க முடியும். பதிவு செய்தல் மற்றும் அறிவிப்பு நோக்கங்களுக்காக நீதிமன்ற நிர்வாகியால் தீர்ப்புகளின் அட்டவணை தயாரிக்கப்பட்டு தீர்ப்புகள் பாதுகாக்கப்பட வேண்டும். தற்போது நீதிமன்றங்கள் இப்போது தங்கள் தீர்ப்புகளை மின்னணு முறையில் பதிவு செய்து கணினியில் ஆவணப்படுத்தி தகவல்களைப் பராமரிக்கின்றன. தகவல்களைச் சேமிப்பதற்கான வழிமுறைகள் வேறுபட்டாலும், அடிப்படை செயல்முறை அப்படியே உள்ளது.


 *நீதிமன்ற வழக்கு தீர்ப்பு நகல் கிடைக்க எவ்வளவு நாட்கள் ஆகும்?* 


நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று அந்த வழக்கிற்கான தீர்ப்பை வழங்கிய பிறகு அந்த தீர்ப்பின் முழு விபரத்தை தெரிந்து கொள்ள அந்த தீர்ப்புக்கான நகலை நீதிமன்றத்தில் பெறுவதற்காக நகல் மனு ஒன்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். நீதிமன்ற அலுவலகம் அந்த நகல் மனுவை சரி பார்த்து மனு அளித்தது வாதியாகவோ பிரதிவாதியாகவோ இருக்கும் பட்சத்தில் அந்த மனுவை ஏற்றுக் கொண்டு மூன்று அல்லது ஐந்து நாட்களுக்குள் நகலை கொடுப்பார்கள்.


மனுவை சரிபார்க்கும் போது வாதி மற்றும் பிரதிவாதியை தவிர்த்து வழக்கிற்கு சம்மிந்தமில்லாத மூன்றாம் நபர் நகல் மனுவை தாக்கல் செய்திருந்தால் அந்த மனு நிராகரிக்கப்படும்.


 *வழக்கின் தீர்ப்பின் நகல் மூன்றாம் நபருக்கு வழங்கப்படுமா?* 


ஒரு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று அந்த வழக்கிற்கு தீர்ப்பு வழங்கியவுடன் அந்த வழக்கிற்கு சம்மந்தமில்லாத மூன்றாம் நபருக்கு அந்த வழக்கின் தீர்ப்பு வேண்டுமென்றால், அந்த மூன்றாம் நபர் நீதிமன்றத்தில் நகல் வேண்டும் என்று மனு செய்து நீதிமன்ற விசாரணையில் எதற்காக தனக்கு தீர்ப்பு நகல் தேவை என்ற காரணத்தை சொல்லி நீதிமன்ற உத்தரவு பெற்றால் மட்டுமே அவருக்கு வழக்கின் தீர்ப்பு நகல் வழங்கப்படும்.


மூன்றாம் நபர் சொல்லும் காரணத்தை நீதிமன்றம் ஏற்கவில்லை என்றால் அவரது மனு நிராகரிக்கப்படும் அவருக்கு நீதிமன்ற தீர்ப்பின் நகல் வழங்கப்படாது.


 *நீதிமன்ற தீர்ப்பு நகலுக்கு கட்டணம் உண்டா?* 


ஆம் நீதிமன்ற தீர்ப்பு நகலுக்கு கட்டணம் செலுத்த வேண்டும். உடனடியாக நகல் வேண்டுமென்றால் (urgent) சாதாரணமாக செலுத்தும் கட்டணத்தைவிட அதிகமாக கட்டணம் செலுத்தினால் வேகமாக நீதிமன்ற உத்தரவு நகல் (urgent copy) உடனடியாக வழங்குவார்கள்.


 *நீதிமன்ற தீர்ப்பு நகலின் கட்டணம் விபரம் மற்றும் மனு செய்யும் முறை?* 


நீதிமன்ற தீர்ப்பு நகலின் மனுவை தயார் செய்து அதில் 2. ரூபாய்க்கான நீதிமன்ற ஸ்டாம் கட்டணமாக ஒட்ட வேண்டும். பின் அந்த மனுவை சரி பார்த்து எவ்வளவு காகிதங்கள் நீதிமன்ற உத்தரவுக்கு வேண்டுமென்று குறிப்பிட்டு நோட்டிஸ் ஒட்டப்படும் பின்னர் அதன் படி அதற்க்கான தனி மனுவில் தேவைப்படும் காகிதங்களை இணைத்து திரும்பவும் மனு கொடுக்க வேண்டும். குறிப்பு பக்கங்களை பெறுத்து கட்டணங்கள் கூறப்பட்டிருக்கும் அந்த கட்டணத்தை செலுத்திய பிறகு நீதிமன்ற உத்தரவை உங்களுக்கு நகல் எடுத்து வழங்கப்படும்.


இந்த நகலை அங்கீகரிக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவு நகல் (certified judgement copy) என்று கூறலாம். இது ஒரிஜினல் (original) நீதிமன்ற உத்தரவு இதை தான் வழக்கு முடிந்த பிறகு நாம் அனைத்து சம்பந்தப்பட்ட வேலைகளுக்கும் பயன்படுத்த முடியும்.


கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம்

நீலகிரி மாவட்டம்.


*காவல் நிலையம் – சட்டம் அறிவோம்*

 *காவல் நிலையம் – சட்டம் அறிவோம்* 


1. காவல் நிலையத்திற்கு பொறுப்பு வகிக்கும் அலுவலர் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 156(1) ன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படி புலன்விசாரணை மேற்கொள்ளலாம்.


2. காவல் நிலையத்திற்கு பொறுப்பு வகிக்கும் அலுவலர்களில் காவலரைச் (Gr. II. PC) சேர்த்துக் கொள்ளக்கூடாது.


3. தமிழ்நாட்டில் இரண்டாம் நிலை மற்றும் முதல் நிலைக் காவலர்கள் புலன்விசாரணை நடத்துவதில் இருந்து தவிர்க்கப்பட்டுள்ளார்கள். சிறு குற்றங்கள் அல்லது விரைவாக விசாரணை முடிக்கப்பட வேண்டிய குற்றங்கள் ஆகியவற்றில் தலைமைக் காவலர்கள் புலன்விசாரணை நடத்திட அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலும் காவல் நிலைய பொறுப்பு அலுவலர் (SHO) அதாவது காவல் சார்பு ஆய்வாளர் / காவல் ஆய்வாளர் ஆகியோருக்கு புலன்விசாரணை நடத்திட அதிகாரம் உள்ளது. பெருங்குற்ற வழக்குகளில் காவல் நிலை ஆணைகளின்படியும் மற்றும் அவ்வப்போது வழங்கப்படும் துறை சார்ந்த அறிவுரைகளின்படியும், காவல் ஆய்வாளர் புலன்விசாரணை நடத்திட வேண்டும்.


4. குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 156(1) ன்படி, காவல் நிலையத்திற்கு பொறுப்பு வகிக்கும் அலுவலருக்கு பிடியாணை வேண்டாக் குற்றங்களில் (Cognizable Offences) மட்டுமே விசாரணை நடத்தும் அதிகாரம் உள்ளது.


5. பிடியாணை வேண்டாக் குற்றங்களின் மீது புலன்விசாரணையை காவல் அலுவலர் மேற்கொள்ள, குற்றவியல் நடுவரின் அனுமதியோ, அங்கீகரிப்போ தேவையில்லை.


6. பிடியாணை வேண்டும் குற்றங்களை (Non Cognizable offences) பொறுத்த வரையில், காவல் நிலைய பொறுப்பு அலுவலருக்கு புலன்விசாரணை செய்ய அதிகாரம் கிடையாது என்ற போதிலும், அவர் உரிய அதிகாரம் படைத்த குற்றவியல் நடுவர் அவர்களிடமிருந்து குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 190(1)(பி) உ/பி 155(4) மற்றும் தமிழ்நாடு காவல் நிலை ஆணை 561 ன்படி முன் அனுமதி பெற்று, அத்தகைய புலன்விசாரணையை மேற்கொள்ளலாம்.


7. ஒரு குற்ற வழக்கில் பல பிடியாணை வேண்டும் குற்றங்களும், அதனோடு சேர்ந்து ஒரேயொரு பிடியாணை வேண்டாக் குற்றமும் புரியப்பட்டிருந்தால், காவல் நிலைய பொறுப்பு அலுவலர், அந்த வழக்கை மொத்தமாக பிடியாணை வேண்டாக் குற்றமாக கருதி குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 155(4) ன்படி புலன்விசாரணை செய்யலாம். இதற்காக குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 155(2) ன்படி, அதிகாரம் படைத்த குற்றவியல் நடுவரிடமிருந்து அனுமதி பெற தேவையில்லை.


8. குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 156(1) ன்படி, காவல் நிலைய பொறுப்பு அலுவலர் பிடியாணை வேண்டாக் குற்றங்களை பொறுத்த வரையில், குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 154 ன்படி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த பிறகே, அது குறித்த புலன்விசாரணையை மேற்கொள்ள அதிகாரம் உள்ளவராவார்.


9. பிடியாணை வேண்டாக் குற்றங்களை பதிவு செய்யும் அதிகாரம் என்பது ஒரு செயலாக இருந்தாலும், அது சம்மந்தமாக புலன்விசாரணை மேற்கொள்ளும் அதிகாரம் என்பது அதற்கு மாறானதாகும்.


காவல் நிலைய பொறுப்பு அலுவலர் பிடியாணை வேண்டாக் குற்றம் ஒன்று தாக்கலாகினால், அந்த பிடியாணை வேண்டாக் குற்றமானது, அவரது உள்ளூர் சரகத்தில் நடந்துள்ளதா? என்பதை குறித்து பார்த்திடாமல், அது குறித்து FIR பதிவு செய்ய வேண்டியது உடனடிக் கடமையாகும். பிடியாணை வேண்டாக் குற்றத்தை பொறுத்தவரையில் அதனை பதிவு செய்ய மறுக்க அதிகாரம் இல்லை.


ஆயினும் காவல் நிலைய பொறுப்பு அலுவலருக்கு, குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவுகள் 177 முதல் 189 வரை குறிப்பிட்டுள்ளபடி, தனது உள்ளூர் அதிகார எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற அத்தகைய குற்றங்களின் மீது புலன்விசாரணை மேற்கொள்ளும் அதிகாரம் உண்டு.


காவல் அலுவலர், குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 154 ன் கீழ் பதிவு செய்த குற்றமானது, அவரது உள்ளூர் அதிகார எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்தது இல்லையெனில், அக்காவல் அலுவலர் அந்த வழக்கை, அதிகார வரம்பு எல்லை நன்கு தெரிந்தால், அந்த சம்பவம் நடைபெற்ற அதிகார எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்திற்கு உடனடியாக அவ்வழக்கை புலன்விசாரணைக்கு அனுப்பிட வேண்டும்.


அதிகார வரம்பு எல்லை தெரியாமல் அல்லது சந்தேகமாக இருந்தது என்றால் ஆரம்பகட்ட புலன்விசாரணையை முடித்த பிறகு அத்தகைய அதிகார எல்லைப் பகுதியை கண்டறிந்து அந்நிலையத்திற்கு மேல் புலன்விசாரணைக்கு அனுப்பிட வேண்டும்.


10. காவல் நிலையப் பொறுப்பு வகிக்கும் அலுவலர், தனது அதிகார எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற பிடியாணை வேண்டாக் குற்றம் சம்மந்தமாக புலன்விசாரணை மேற்கொள்ளுதலை, எந்தவொரு நீதிமன்றத்தாலும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 156(2) ன்படி கேள்வி கேட்க இயலாது.


11. ஓர் இடத்தின் எல்லைவரம்பிற்குட்பட்ட அதிகாரமுடைய குற்றவியல் நடுவருக்கு குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 190 ன்படி அந்த குறிப்பிட்ட அதிகார எல்லைவரம்பிற்குட்பட்ட காவல் நிலையத்திற்கு பொறுப்பு வகிக்கும் அலுவலருக்கு, தான் அனுப்பி வைக்கும் வழக்கை, புலன்விசாரணை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்திட குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 156(3) ன்படி அவருக்கு அதிகாரம் உண்டு.


12. சட்டப்படி அதிகாரம் படைத்த குற்றவியல் நடுவருக்கு முன்பாக தாக்கல் செய்யப்பட்ட தனியார் மனு (private complaint) குறித்து, அந்தக் குற்றத்தின் விசாரிப்பதற்கு உகந்த தன்மை (cognizance) என்ன என்பதை கண்டறியும் முன்பே, அது குறித்து குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 200 ன்படி அப்புகாரை விசாரிக்கவோ, குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 156(3) ன்படி காவல்துறை விசாரணைக்கு உத்தரவிடவோ செய்யலாம். அத்தகைய வழக்குகளில் காவல்துறையினர் குற்றவியல் நடுவர் அனுப்பிய புகாரின் பேரில் வழக்கொன்றை பதிவு செய்து, அதில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றங்கள் குறித்து இறுதியரிக்கை ஒன்றை குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 173(2) ன்படி அனுப்பிட வேண்டும். இறுதி அறிக்கை MF, NC, ML அல்லது உண்மையான வழக்கு என்று எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.


அந்தப் புகாரில் கூறப்படும் குற்றத்தின் விசாரிப்பதற்கு உகந்த தன்மையைக் கருத்தில் கொண்ட பிறகு, குற்றவியல் நடுவர் இந்த வழக்கு நடைமுறையை குற்றவாளிகளுக்கு எதிராக தீர்மானித்திட குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவுகள் 202(1) மற்றும் 203 ன்படி காவல்துறை புலன்விசாரணைக்கு உத்தரவிடலாம்.


13. குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 156(3) ன்படி உரிய அதிகாரம் படைத்த குற்றவியல் நடுவர், ஒரு வழக்கு பற்றிய புலன்விசாரணையை நடத்திட தனிப்பட்ட நபர், ஒரு வழக்கறிஞர் போன்றோரைக் கூட அறிவுறுத்தலாம்.


ஆயினும் அத்தகைய புலன்விசாரணை காவல்துறையினர் நடத்துவதை போன்ற தாக்கத்தையும், வேகத்தையும் கொண்டதாக இருக்காது. அத்தகைய நபருக்கு உரிய உத்தரவு குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 202(3) ன்படி இல்லாமல், பிடியாணை இல்லாமல் கைது செய்யலாம் என்பதை தவிர்த்து, பிற அனைத்து புலன்விசாரணை அதிகாரங்களும் இருக்கும்.


14. குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 2(h) ன்படி, குற்றவியல் நடுவரால் புலன்விசாரணை எதையும் நடத்திட இயலாது.


15. குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 156 ன்படி காவல் அலுவலர்களுக்கு பிடியாணை வேண்டாக் குற்றங்களின் மீதான புலன்விசாரணையை வழக்கு பதிவு செய்து நடத்திட அதிகாரம் உள்ள நிலையில், குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 157 பிடியாணை வேண்டாக் குற்றங்களை பொறுத்தவரையில் காவல் அலுவலர் அதனை பதிவு செய்வதற்கு முன்பாகவே புலன்விசாரணை செய்யும் அதிகாரத்தை அளிக்கிறது.


16. குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 157(1) ன்படி காவல் அலுவலர் ஒருவருக்கு தனது அதிகார எல்லைக்குள்பட்ட உள்ளூர் சரகத்தில் பிடியாணை வேண்டாக் குற்றம் நிகழந்துள்ளதாக உண்மையான தகவலோ, சந்தேகமோ கிடைக்கப்பெற்றால், எந்தவொரு வழக்கையும் பதிவு செய்யாமலேயே காவல் நிலைய பொது நாட்குறிப்பில் அதுகுறித்து பதிவுகளை செய்து, அது சம்பந்தமாக அவ்வதிகார எல்லைக்குள்பட்ட குற்றவியல் நடுவருக்கு அறிக்கை ஒன்றை அனுப்பிவிட்டு, அவர் தானே நேரடியாக சம்பவ இடத்திற்கு சென்றோ மாநில அரசால் அதிகாரம் வழங்கப்பட்டுள்ள தனது சார்நிலை பணியாளரை அனுப்பியோ புலன்விசாரணையை தொடங்கலாம்.


17. காவல் அலுவலருக்கு இரு பிரிவினரிடையே கலவரம் நடக்கிறது என்றோ, சொத்துகளுக்கு சேதம் ஏற்படுகிறது என்றோ நம்பகமான தகவல் கிடைத்தது என்றாலோ அல்லது கள்ளச்சாராயம் அல்லது போதைப் பொருட்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் விற்பனை செய்யப்படுகிறது என்று தகவல் கிடைத்தது என்றாலோ, அவர் பொது நாட்குறிப்பில் பதிவு செய்து, அது சம்பந்தமாக உரிய அதிகார எல்லைக்குள்பட்ட குற்றவியல் நடுவருக்கு அறிக்கை ஒன்றை அனுப்பிய பின்னர், சம்பவ இடத்திற்கு சென்று குற்றவாளிகளை கைது செய்து, அத்தனை சாட்சிப் பொருட்களையும் பறிமுதல் செய்து, சாட்சிகளை விசாரித்து விட்டு, அதுவரை செய்யப்பட்ட புலன்விசாரணையின் பேரில், வழக்கை பதிவு செய்திட காவல் நிலையம் திரும்பி, வழக்கை பதிவு செய்து, அதன்பிறகு தொடர்ந்து புலன்விசாரணையை குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 157(1) ன்படி செய்திடலாம்.


18. குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 157(1)(a) மற்றும் (b) [ விலக்கு – Proviso] ன்படி காவல் அலுவலருக்கு பெயர் தெரியாத நபர் ஒருவரால், அதிக கடும் தனமை இல்லாத குற்றம் நடைபெற்றதாக தகவல் ஒன்று கிடைத்தால் என்றால், அவர் அது சம்பந்தமாக குற்றம் நடைபெற்ற இடத்திற்கு செல்லவோ அல்லது அவ்விடத்திற்கு தனது சார்நிலை அலுவலரை அனுப்பவோ வேண்டியதில்லை. காவல் அலுவலரை பொறுத்தவரையில் அதுகுறித்து புலன்விசாரணையை தொடங்க போதிய காரணம் இல்லை என்று தெரிய வந்தால், அவர் அந்த வழக்கை புலன்விசாரணை செய்ய வேண்டிய அவசியமும் கிடையாது.


19. பாலியல் பலாத்காரம் சம்மந்தப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்ட நபரிடமிருந்து வாக்குமூலத்தை அவரின் வசிப்பிடத்திற்கோ அல்லது அவர் தேர்வு செய்யும் இடத்திற்கோ சென்று, அவரின் பெற்றோர் முன்னிலையிலோ அல்லது நெருங்கிய உறவினர்கள் முன்னிலையிலோ அல்லது அப்பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள் முன்னிலையிலோ முடிந்த அளவுக்கு ஒரு பெண் காவல் அலுவலரை கொண்டே பதிவு செய்ய வேண்டும்.


20. சில வழக்குகளில் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 154 ன்படி தாக்கல் செய்யப்பட்டுள்ள தகவலில் குற்றங்களின் தன்மை கடுமையானதாக இல்லாமல் இருந்தாலோ அல்லது அதற்கான போதிய காரணம் எதுவும் இல்லாமல் இருந்தாலோ, அல்லது அத்தகவலானது குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 157(1) ன்படி பெறப்பட்டு இருந்தாலோ காவல் அலுவலர் அந்த வழக்கில் தாங்கள் புலன்விசாரணை செய்திட இயலாது என்ற தகவலை, தகவல் கொடுத்தவருக்கு உடனடியாக பிரிவு 157(2) ன்படி தெரிவிக்க வேண்டும்.

இது சம்பந்தமாக தமிழ்நாடு காவல் நிலை ஆணை 562 மற்றும் 660 புலன்விசாரணை எவ்வப்போது மறுக்கப்படலாம் மற்றும் புகார்தாரருக்கு படிவம் 90 ல் அறிவிப்பு அனுப்புதல் மற்றும் அதனை செய்து முடித்தல் பற்றிய விவரங்களை கூறுகிறது.


கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம்

நீலகிரி மாவட்டம் 

CIBIL என்றால் என்ன?*

 *CIBIL என்றால் என்ன?* 


​கடன் சம்பந்தப்பட்ட விஷயமென்றால் முதலில் நம் காதில் விழுவது: “எல்லாம் ஓகே சார். சிபில் ஸ்கோர்ல ஒரு சின்ன பிரச்னை. பார்த்துக்கலாம் சார்”. சரி, அது என்ன சிபில்? அதன் அடிப்படை விஷயங்களைக் கொஞ்சம் பார்ப்போமா?…..


 *Credit Information Bureau (India) Limited. (CIBIL* )….


இது, கடன் பெறுவோர் பற்றிய இந்தியாவின் முதல் தகவல் நிறுவனம். வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள், தங்களிடம் கடம் பெறுவோர் பற்றிய விவரங்களை ஒவ்வொரு மாதமும் ( சில வங்கிகள் 60 நாட்களுக்கொரு முறை ) சிபில் நிறுவனத்தில் அப்டேட் செய்யும். சிபில் போன்று மேலும் சில அமைப்புகள் இருந்தாலும், வங்கிகள் சிபில் ரேட்டிங்கிற்கே முக்கியத்துவம் தருகின்றன.


 *யாருடைய விவரங்கள் சிபிலில் இருக்கும்?* 


க்ரெடிட் கார்ட், பர்சனல் லோன், கார் லோன், வீட்டுக் கடன் அல்லது வேறு எந்த வகைக் கடனாவது வங்கிகளிலிலோ அல்லது வங்கி சாராத தனியார் நிதி நிறுவனங்களிலோ பெற்றுள்ள ஒவ்வொருவர் பற்றியும், சிபில் நிறுவனத்தில் தகவல் இருக்கும்.


 *இதனால் என்ன பயன்?* 


நீங்கள் க்ரெடிட் கார்ட் அல்லது வேறு வகைக் கடன்களுக்கு விண்ணப்பிக்கும்போது அந்த வங்கி அல்லது நிதி நிறுவனம் உங்கள் விவரங்களை வைத்து சிபில் பதிவுகளை சோதிக்கும். சிபிலில் உங்கள் ஸ்கோர் எவ்வளவு, உங்களின் கடன் விவரங்கள், அவற்றை திருப்பி செலுத்தி இருக்கும் விதம் ஆகியவற்றை பார்த்துவிட்டு உங்களுக்கு க்ரெடிட் கார்ட் அல்லது கடன் கொடுக்கலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்யும். இதன் மூலம் குறிப்பிட்ட நபர்களுக்கு கடன் கொடுத்து, அதை வசூலிக்கும் பிரச்சனையை வங்கிகள் தவிர்க்க முடியும்.


 *கடன் பெறுவோர் விவரங்களை சிபில் எப்படிப் பெறுகிறது?* 


ரிசர்வ் வங்கி உத்தரவுப்படி, வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள் தங்களிடம் கடன் பெறுவோர் குறித்த விவரங்களை தானாகவே சிபில் நிறுவனத்திற்கு அளிக்கும்.


 *என்னென்ன தகவல்கள் இடம் பெறும்?* 


க்ரெடிட் கார்ட் அல்லது மற்ற வகைக் கடன் பெறுவோரின் தனிப்பட்ட தகவல்கள், கடன் வகை, கடன் தொகை, கடன் செலுத்த வேண்டிய காலம், ஒவ்வொரு மாதமும் சரியாக கடன் செலுத்தி இருக்கிறார்களா அல்லது எத்தனை நாள் தாமதமாக செலுத்தி இருக்கிறார்கள் ஆகிய விவரங்களுடன் கடனை கட்டி முடித்து விட்டார்களா அல்லது செட்டில்மெண்ட் அல்லது வராக்கடன் ஆகியவை பற்றிய தகவல்களுல் இடம் பெறும்.


 *ஸ்கோர் எவ்வளவு இருந்தால் கடன் கிடைக்கும்?* 


சிபில் ஸ்கோர் 300 முதல் 900 வரை இருக்கும். பொதுவாக 750க்கும் மேல் சிபில் ஸ்கோர் இருப்பவர்களுக்கு எளிதில் கடன் கிடைக்கும். வட்டியும் குறைவாக இருக்கும். 750க்கும் கீழ் ஸ்கோர் இருப்பவர்களுக்கு கடன் கிடைப்பது கடினம். மேலும் அப்படியே கொடுத்தாலும் வட்டி அதிக அளவில் இருக்கும். 


 *சிபில் ஸ்கோர் தெரிந்துக் கொள்வது எப்படி?* 


சிபில் இணையதளத்திற்கு சென்று தெரிந்துக் கொள்ளலாம். ஆண்டிற்கு ஒரு முறை இலவசமாக பார்த்துக் கொள்ளலாம். மேலும் பார்க்க ஒவ்வொரு முறையும் ரூ.550 செலுத்த வேண்டியிருக்கும். எத்தனை முறை வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ளலாம். இதில் உங்கள் கடன் பற்றிய அனைத்து விவரங்களையும் தெரிந்துக் கொள்ளலாம். விவரங்கள் சரியாக இருக்கின்றனவா என்றும் பார்த்துக் கொள்ளலாம்.


 *தவறான விவரங்கள் இருந்தால் எப்படி சரி செய்வது?* 


சிபில் நிறுவனம் உங்கள் விவரங்களில் எந்த மாறுதலையும் செய்யாது. முறையான ஆவணங்களுடன் நீங்கள் கடன் பெற்றிருக்கும் வங்கி அல்லது நிதி நிறுவனத்தை அணுகி சரி செய்துக் கொள்ளலாம். உங்கள் வங்கி, சிபில் ரிப்போர்ட்டில் தவறுகளை சரி செய்துவிடும்.


 *சிபில் ஸ்கோர் குறைவதற்கான காரணங்கள் என்ன?* 


க்ரெடிட் கார்ட் அல்லது பிற வகைக் கடன்களுக்கான தவணைத் தொகையை சரியான நேரத்தில் முழுமையாக செலுத்தாமல் இருப்பது, கடன் அட்டையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் க்ரெடிட் லிமிட்டில் 50 சதவிகிதத்திற்கும் மேல் பயன்படுத்துவது, வங்கிகளில் கடன் கேட்டு அடிக்கடி விண்ணப்பிப்பது, சரியாக கடனை திருப்பிச் செலுத்தாதவருக்கு ஜாமீன் கையெழுத்துப் போடுவது ஆகியவை உங்கள் சிபில் ஸ்கோரை குறைத்துவிடும்.


 *கடன் கேட்டு விண்ணப்பிப்பது கூட ஸ்கோரை குறைக்குமா?* 


ஆமாம். நீங்கள் ஒவ்வொருமுறை க்ரெடிட் கார்ட் அல்லது கடனிற்கு விண்ணப்பிக்கும் போதும், சிபிலில் உங்களைப் பற்றிய விவரங்கள் அந்த வங்கியால் பார்க்கப்படும். அப்படி அடிக்கடி பார்க்கப்படுவது எதிர்மறையாக கருதப்படும். ஆண்டிற்கு 2 முறைக்கும் மேல் கடனிற்காக விண்ணப்பிக்க வேண்டாம். ஒவ்வொரு முறை உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்படும் போதும் அடுத்த வங்கி உங்களுக்கு கடன் கொடுக்க தயங்கும்.


 *சிபில் ஸ்கோர் உயர்த்துவது எப்படி?* 


இதுவரை கடன் பெறாதவர் என்றால், உங்கள் வருமானத்தின் அடிப்படையில் க்ரெடிட் கார்ட் அல்லது சிறிய தொகையில் கடன் பெற்று அதைச் சரியாக திருப்பிச் செலுத்துங்கள்.


ஏற்கனவே வாங்கிய கடன்களில் நிலுவைத் தொகை இருந்தால் அதை முழுமையாக செலுத்தி விடுங்கள். குறைவான சிபில் ஸ்கோர் இருப்பவர்களுக்கும் சில தனியார் நிதி நிறுவங்கள் சிறிய அளவில் கடன் கொடுக்கின்றன. வட்டி சற்றுக் கூடுதலாகத்தான் இருக்கும். அவர்களிடம் கடன் பெற்று தாமதமில்லாமல் சரியாக மாதத் தவணையைக் கட்ட வேண்டும். நகைக்கடன் போன்றவையும் இதற்கு பயனுள்ளதாக இருக்கும்.


பெரும்பாலான வங்கிகள், தங்களிடம் பிக்சட் டெபாசிட் வைத்திருப்பவர்களுக்கு, அதை உத்தரவாதமாக வைத்துக் கொண்டு பிக்சட் டெபாசிட் தொகையில் 70 சதவிகிதம் வரை க்ரெடிட் லிமிட் வைத்து க்ரெடிட்க் கார்டுகளை தருகின்றன. ஒவ்வொரு மாதமும் மிகக் குறைந்த அளவு செலவளித்து அதை சரியாக திருப்பிச் செலுத்துவதன் மூலம் சிபில் ஸ்கோரை உயர்த்தலாம். எந்தக் காரணம் கொண்டும் இதிலும் தாமதமாக மாதத் தவணைக் கட்டக்கூடாது.


அடமானக் கடன் மற்றும் அடமானமற்றக் கடன் என்ற கலவையில் கடன் பெற்று அதை முறையாக திருப்பிச் செலுத்துவதன் மூலமும் சிபில் ஸ்கோரை எளிதில் அதிகரிக்கலாம்.


 *நம் சிபில் ஸ்கோரை நாம் அடிக்கடிப் பார்ப்பதால் ஸ்கோர் குறையுமா?* 


குறையாது. அவ்வப்போது சிபில் ஸ்கோர் பார்த்துவிடுவது நல்ல பழக்கமே. அப்போதுதான் தவறுகள் ஏதும் இருந்தால் அதை வங்கியில் சொல்லி திருத்திக் கொள்ளலாம். சில நேரங்களில் அடுத்தவர் கடனெல்லாம் நம் கணக்கில் வைத்துவிடுவார்கள். அது, நம் க்ரெடிட் ஸ்கோரை வெகுவாக பாதிக்கலாம்.


சில வங்கிகள், சிபில் ஸ்கோர் அடிப்படையில் வீட்டுக் கடன் போன்ற கடனுக்கான வட்டியை நிர்ணயிக்கின்றன. எனவே உங்கள் சிபில் ஸ்கோர் குறையாமல் பார்த்துக் கொள்ளுங்கள்….


கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம்

நீலகிரி

பட்டா பதிவு புத்தக சட்டம் 1983

 https://kutumbapp.page.link/Dva5RTUpZAbb1pR57 


பட்டா பதிவு புத்தக சட்டம் 1983 


1. பிரிவு 3(1) - ன் கீழ் வட்டாட்சியர் நில உரிமையாளருக்கும் பட்டா பத்தகம் வழங்க வேண்டும்.


2. பிரிவு 3(7) ன் படி நிலத்தில் அக்கறை கொண்டுள்ள நபருக்கு முறையீடு செய்ய வாய்ப்பு வழங்கப்படவில்லை. அறிவிப்பு ஏதும் கொடுக்கப்படவில்லை.


3. பிரிவு 3(9) ன் படி பட்டா புத்தகத்தில் அடங்கியுள்ள பதிவுகள் விவரங்கள் ஆகியவற்றை வட்டாட்சியர் அலுவலகத்தில் கட்டாயம் பராமரிக்கப்பட வேண்டும்


4. பிரிவு 3(10) ன் படி பட்டா புத்தகத்தை கேட்டு உரிமையாளர் விண்ணப்பம் செய்யும் போது அதனை மறுக்காமல் உரிய கட்டணத்துடன் வழங்க வேண்டும். கட்டணம் -20(தமிழ்நாடு பட்டா விவரக்குறிப்பு புத்தக விதிகள் 1987 ன் விதி 7.


5. பிரிவு 10-ன்படி படி பிரிவு 3- இன் கீழ் ஏற்கனவே வழங்கப்பட்ட பட்டா பாஸ்புக் புத்தகத்தில் இறப்பு, நிலம் மாற்றப்படுதல் பாகப்பிரிவினை போன்றவை காரணங்களுக்காக மாற்றங்கள் தேவை என்று சம்பந்தப்பட்ட நபர்கள் வட்டாட்சியருக்கு மனு செய்து பட்டா பாஸ் புத்தகத்தில் மாற்றிக் கொள்ளலாம். 


6. பிரிவு 11 ன் படி பிரிவு 3- இன் கீழ் வழங்கப்பட்ட பட்டாவில் ஏதேனும் தவறுகள் இருக்கும் பட்சத்தில் அல்லது தேர்வு செய்யப்பட்ட நபர் தகுதியற்ற நபர்கள் என்றால் அது சம்பந்தமான ஆட்சவனைகளை வட்டாட்சியிடம் மனுவாக தாக்கல் செய்யலாம். 


7. பிரிவு 12-இன் படி 30 நாட்களுக்குள் வருவாய் வட்டாட்சியர் நடவடிக்கை எடுக்க தவறினால் அதனை மேல்முறையீடு மனுவாக வருவாய் கோட்டாட்சியரிடம் கொடுக்க வேண்டும். 


8. பிரிவு 5- இன் படி விற்பனை கொடை அடமானம் சொத்து பரிமாற்றம் ஏற்பாட்டு ஆவணம் மூலம் நிலத்தை பதிவு செய்யும்போது கட்டாயம் பட்டா பதிப்புக்கு புத்தகம் சமர்ப்பிக்கப்பட வேண்டும் அப்படி சமர்ப்பிக்காத பட்சத்தில் அத்தகைய பதிவை சம்பந்தப்பட்ட பதிவு அலுவலகங்கள் பதிவு அலுவலர்கள் கட்டாயம் மறுக்க வேண்டும்.


9. பதிவு செய்தவுடன் வட்டாட்சியர் பட்டா பாஸ்புக் புத்தகத்தில் பதிவேட்டின் தேவையான மாற்றங்களை திருத்தம் செய்ய வேண்டும் அதற்கு உரிய கட்டணம் வசூலிக்க வேண்டும் என்றால் அந்த கட்டணத்தையும் வசூலித்து திருத்தம் செய்யலாம். 


10. பிரிவு 13 இன் படி மேல்முறையீட்டு மனு மீது வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் 90 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அதனை சீராய்வு மனுவாக மாவட்ட வருவாய் அலுவலரிடம் அளிக்க வேண்டும்.

 

11.பிரிவு 13 இன் கீழ் சீராய்வு மனுவாக அளித்த மனு மீது மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் 60 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க தவறினால் நீதிமன்ற அவமதிப்பாக கருதப்பட்டு சிறைத்தண்டனையும் ,அபதாரமும் விதிக்கப்படும் என்று *சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதியரசர் வைத்தியநாதன் அவர்கள் வழக்கு எண்:WP(MD)NO.14135/2020, DATE:12/10/2020* வழக்கில் தீர்ப்பு வழங்கியுள்ளார். 


*ஆட்சேபனைகளை எப்படி தாக்கல் செய்யவேண்டும்?*


1. தாசில்தாரின் பட்டா மாற்றம் இந்திய அரசியலமைப்பு சட்டம் 1950 பிரிவு 14 & 21 ல் கூறப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளுக்கு முரணானது.


2. இந்திய அரசியலமைப்பு சட்டம் 1950 பிரிவு 14 & 21 ல் கூறப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளின் படி பட்டா மாற்றம் செய்வதற்கு முன் ஏற்கனவே கூட்டுப்பட்டாவில் உள்ள எனக்கு நீதிக்குட்பட்டு அறிவிப்பு கொடுக்காமலும், வாய்ப்பு அளிக்காமலும் என் தரப்பு வாதத்தை கேட்காமலும் பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளது சட்டப்படி தவறாகும்.


3. இந்திய அரசியலமைப்பு சட்டம் 1950 பிரிவு 375 ன்படி தாசில்தார் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் கூறப்பட்டுள்ளவற்றை மதித்து நடக்கவில்லை.


4. வருவாய் நிலை ஆணை எண் 31 ஐ பின்பற்றி பட்டா மாற்றம் செய்யப்படவில்லை. 


5. தமிழ்நாடு பட்டா பதிவு புத்தகச் சட்டம் 1983 மற்றும் தமிழ்நாடு பட்டா விவரக்குறிப்பு புத்தக விதிகள் 1987 ஆகியவற்றில் கூறப்பட்டுள்ள நடைமுறைகளை தாசில்தார் கடைபிடிக்கவில்லை.


6. தமிழ்நாடு பட்டா பதிவு புத்தகச் சட்டம் 1983 ன் பிரிவு 3(7) ன்படி நிலத்தில் அக்கறை கொண்டுள்ள எனக்கு முறையீடு செய்ய வாய்ப்பு வழங்கப்படவில்லை. அறிவிப்பு ஏதும் கொடுக்கப்படவில்லை.


7. தமிழ்நாடு பட்டா பதிவு புத்தகச் சட்டம் 1983 ன் பிரிவு 7 ல் கூறப்பட்டுள்ள நடைமுறைகளை தாசில்தார் பின்பற்றவில்லை.


8. தமிழ்நாடு பட்டா விவரக்குறிப்பு புத்தக விதிகள் 1987 ன் விதி 3 (1) ன்படி சம்பந்தப்பட்ட கிராமத்தில் பட்டா மாற்றம் குறித்து அறிவிப்பு செய்யப்பட்டு தண்டோரா போடப்படவில்லை. இது தான் படிவம் – 1.


9. VAO வருவாய் நிலை ஆணை மற்றும் கிராம நிர்வாக நடைமுறை நூல் ஆகியவற்றில் கூறப்பட்டுள்ள நடைமுறைகளை மீறி சட்ட விரோதமாக பட்டா மாற்றம் செய்ய பரிந்துரை செய்துள்ளார். 


10. இயற்கை நீதிக்கு புறம்பாகவும், சட்ட விரோதமாகவும் பட்டா மாற்றம் தாசில்தாரரால் செய்யப்பட்டுள்ளது. 


கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் 

https://kutumbapp.page.link/Dva5RTUpZAbb1pR57 

இரத்த அழுத்தம் உள்ளவர்கள் சாப்பிட வேண்டியவை*

 *இரத்த அழுத்தம் உள்ளவர்கள் சாப்பிட வேண்டியவை* 


 *உணவே மருந்து* 


 உப்பு சேர்க்காமல் எலுமிச்சம் பழம் சாற்றை 1டம்ளர் தண்ணீரில் கலந்து குடிக்கவும் 


10 பூண்டை பாலில் கலந்து கொதிக்க வைத்து பூண்டை மட்டும் சாப்பிடவும் 


முதல் நாள் ஊற வைத்த வெந்திய தண்ணீரை மறுநாள் ஒரு டம்ளர் அளவில் வெறும் வயிற்றில் குடிக்கவும்


 5 சின்ன வெங்காயம் பச்சையாக காலையில் சாப்பிடவும்


 பெரிய நெல்லிக்காய் தினமும் ஒன்று சாப்பிடவும் 


வாரம் மூன்று நாட்கள் பீட்ரூட் ஜூஸ் குடிக்கவும்


 கமலா ஆரஞ்சு, சாத்துக்குடி பழங்களை தினமும் ஒன்று சாப்பிடவும்


 வாழைப்பழம் தினமும் ஒன்று சாப்பிடவும்


 நார்ச்சத்து உள்ள காய்கறிகள், பழங்கள் கீரை வகைகளை சாப்பிடவும்


 வாரம் இரண்டு நாட்கள் முருங்கைக்கீரை, சின்ன வெங்காயம் சூப் செய்து சாப்பிடவும் 


தினமும் 45 நிமிடம் நடைப்பயிற்சி செய்யவும்


 செம்பருத்தி பூவை தினமும் மூன்று சாப்பிடவும் 


மாதுளம் பழம் சாப்பிடவும்


 மஞ்சள் தூளை பாலில் கலந்து குடிக்கவும்


 கருவேப்பிலையை தினமும் இரண்டு கொத்து சாப்பிடவும்


 கொதிக்க வைத்த சீரக தண்ணீரை தினமும் இரண்டு டம்ளர் பருகவும் 


இஞ்சி , இலவங்கம், 2 டம்ளர் தண்ணீர், 2 பூண்டை கொதிக்க வைத்து அவற்றுடன் அரை ஸ்பூன் தேன் மற்றும் அரை எலுமிச்சம்பழத்தை கலந்து வாரம் ஒரு நாள் குடிக்கவும்


ஃஃஃஃஃஃ


*இரத்த அழுத்தம் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டியது* 


உப்பை தவிர்க்க வேண்டும் 


ஊறுகாய் 

அப்பளம் 

பீசா பர்கர் 

ஐஸ்கிரீம் 

நூடுல்ஸ் 

சாஸ் சாக்லேட் 

 உப்பு சேர்த்த பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்கவும் 


கருவாடு 

துரித உணவுகள் 

கிரீம் மிகுந்த கேக் வகைகள்

எண்ணெய்யில் வறுத்த உணவுகள் 

சிகரெட் மது கொழுப்பு அதிகம் உள்ள மாமிசம்

சோடா உப்பில் தயாரிக்கப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும்.........

கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம்

நீலகிரி மாவட்டம் 

நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 2019

**நுகர்வோர் பாதுகாப்பு சட்டம், 2019 (Consumer Protection Act, 2019 – Act No. 35 of 2019)**   இந்தச் சட்டம் நுகர்வோர் நலன்களைப் பாதுகாப்பதற்க...