பந்தலூரில் இருந்து பாட்டவயல் செல்லும் சாலையை அகலப்படுத்தி தர ேவண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
பந்தலூர் முனீஸ்வரன் கோவில் முதல் முக்கட்டி வரையிலான வழித்தடத்தில் சுமார் 13 கிலோ மீட்டர் தூரம் இரு மாநிலங்களை இணைக்கும் சாலையாக பந்தலூர் முக்கட்டி பாட்டவயல் சாலை உள்ளது.
இந்த சாலை தற்போது இதர மாவட்ட புறவழி சாலை பிரிவில் (O.D.R) பிரிவில் உள்ளது, இந்த சாலை தற்போது சுமார் 3.90 மீட்டர் அகலத்தில் உள்ளது. இதனை மாவட்ட முக்கிய வழிசாலையாக (M.D.R) மாற்றி சாலையை சுமார் 6 மீட்டர் அளவிற்கு அகலப்படுத்த வேண்டும் .
இந்த சாலையில் அரசு பேருந்துகள் மற்றும் பல்வேறு தனியார் வாகணங்கள் பலவும் தினசரி இயக்கப்பட்டு வருகின்றது.
பந்தலூர் முனீஸ்வரன் கோவில் முதல் முக்கட்டி வரை மேங்கோரெஞ், தொண்டியாளம், உப்பட்டி, நெல்லியாளம், பொன்னானி, குந்தலாடி, முக்கட்டி மற்றும் சார்புடைய கிராமங்களில் வசிப்போர் பந்தலூர் மற்றும் கூடலூர் பகுதிகளுக்கும், பாட்டவயல் மற்றும் கேரளா மாநிலம் பத்தேரி உள்ளிட்ட பகுதிகளுக்கும் அரசு அலுவலகங்கள் சார்புடைய தேவைகளுக்கும், மருத்துவம் சார்புடைய தேவைகளுக்கும், இதர பணிகள் காரணமாகவும் வந்து செல்கின்றனர். பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளும் தினசரி நூற்றுகணக்கானோர் வந்து செல்கின்றனர்.
இதனால் அரசு பேருந்துகள் உட்பட தனியார் வாகணங்களின் பயன்பாடு அதிகரித்து அதிக போக்குவரத்து உள்ள சாலையாக இந்த சாலை உள்ளது.
இந்த சாலை பல ஆண்டுகளாக அகலப்படுத்தப்படாமல் உள்ளதால் சாலை குறுகியதாகவே உள்ளது. இதனால் சாலையில் எதிரே வரும் வாகணங்களுக்கு வழிவிடமுடியாமல் அவதிப்படும் நிலை உள்ளது.
சாலையில் வாகணங்கள் சென்று வருவதற்கும் மிகவும் சிக்கலை அளிக்க கூடியதாக உள்ளது. அவசர காலங்களில் இந்த சாலையில் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகணங்கள் நோயாளிகளை ஏற்றி வேகமாக செல்ல இயலாத நிலையும் உள்ளது.
இந்த சாலையை மாவட்ட முக்கிய சாலையாக தரம் உயர்த்தி சாலையை அகலப்படுத்தி தந்துதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
S. Sivasubramaniam
General Secretary
No comments:
Post a Comment