நீலகிரி மாவட்டத்தில் கடந்த 6 ஆண்டுகளாக தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மையம் மற்றும் கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் ஆகியன சார்பில் கடைகளில் விற்பனை செய்யப்படும் உப்புகளில் அயோடின் அளவு குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதுபோல மாணவர்கள், பெண்கள் என பல்வேறு தரப்பினரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றோம்.
இந்த காலாண்டில் பந்தலூர், கூடலூர் வட்டாரத்தில் உப்புகளில் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு திருவாரூர் தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மைய ஆய்வகத்திற்க்கு அனுப்பி வைக்கப்பட்டது. பந்தலூர், கூடலூர் பகுதிகளில் கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய நிர்வாகிகள் சிவசுப்பிரமணியம், கனேசன், தனிஸ்லாஸ், நாகராஜ், செல்வராஜா உள்ளிட்ட பலர் 75 மாதிரிகள் சேகரித்தனர்.
கல் உப்புகள் கடைகளுக்கு வெளியே வைக்கப்பட்டு இருந்ததில் அயோடின் அளவு குறைவாக இருந்ததையும், பாதுகாப்பாக வைக்கவும் வலியுறுத்தப்பட்டது. கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் தொடர் கண்காணிப்பினால்
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2016ல் 55%சதவீதமாக இருந்த அயோடின் அளவு 2018 ல் தற்போது அயோடின் உப்பு பயன்பாட்டில் 70% சதவீதமாக உயர்வு பெற்றுள்ளது என்பது குறிப்பிடதக்கது.
தொடர்ந்து அனைத்து நியாய விலை கடைகளிலும் அயோடின் கலந்த அரசின் உப்பு விற்பனை செய்யவும் வலியுறுத்தப்பட்டு வருகின்றது
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில் தொடர்ந்து அனைத்து வட்டங்களிலும் அயோடின் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளபட உள்ளது.
No comments:
Post a Comment