விவசாயத்தில் தண்ணீரை
எப்படி சிக்கனமாக பயன்படுத்தலாம்?
சொட்டு நீர்ப்பாசனம்
!!
தண்ணீருக்காக 'மூன்றாம்
உலகப்போர் மூளும்" என விஞ்ஞானிகள் கூறியுள்ளார்கள். எனவே, தண்ணீரை சிக்கனமாக செலவு
செய்ய வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். இனியாவது தண்ணீரை பணத்தைப்போல் எண்ணி
எண்ணிச் செலவு செய்ய வேண்டும். நீரை சிக்கனமாக செலவழிக்க விவசாயத்திற்கு சொட்டு நீர்ப்பாசனம்
கைக்கொடுக்கிறது.
பயிருக்கு தேவையான தண்ணீர்
கிடைக்காமல் போனால் பயிர்கள் வாடிவிடும். அதேபோல் தண்ணீர் அதிகமாக கொடுத்தால் வேர்ப்பகுதிகள்
அழுகி நோய்கள் ஏற்படும். அதனால் பயிர் வளர்ச்சி பாதிக்கப்படும். இவற்றுக்கெல்லாம் ஒரே
தீர்வு சொட்டு நீர்ப்பாசனம் அமைப்பது தான். பயிருக்கு தேவையான தண்ணீரை கணக்கிட்டு அதைக்
குழாய்கள் வழியாக வேருக்கு அருகிலேயே அளிக்கும்பொழுது பயிர் வளர்ச்சி சீராக இருக்கும்.
ஒரு மணி நேரத்திற்கு வெளியேற்றப்படும்
தண்ணீர் அளவை மையமாக கொண்டு வௌ;வேறு அளவுகளில் சொட்டுவான்கள் தயாரிக்கப்படுகின்றன.
சொட்டுவான் வகைகள் :
1. ஆன்லைன் டிரிப்பர்
2. இன்லைன் டிரிப்பர்
3. ஏரோ ஜெட்
ஆன்லைன் டிரிப்பர் :
சொட்டுநீர்க் குழாயில்
வெளிப்புறமாக சொட்டுவான்களைப் பொருத்தினால் அது ஆன்லைன் டிரிப்பர் ஆகும். இம்முறையில்
குழாயின் வெளிப்புறத்தில் சொட்டுவான்கள் பொருத்தி இருப்பதால் அடிக்கடி குழாய்களை சுருட்டி
வைக்க முடியாது.
எனவே தென்னை, மா, வாழை
போன்ற நீண்ட காலப் பயிர்களுக்கு இது ஏற்றது. குறிப்பாக நான்கு அடிக்கு மேல் இடைவெளியுள்ள
பயிர்களுக்கு இதை அமைக்கலாம். ஒரு மணி நேரத்திற்கு 2, 4 மற்றும் 8 லிட்டர் என்ற அளவில்
தண்ணீர் சொட்டும் வகையில் சொட்டுவான்கள் கிடைக்கும்.
இன்லைன் டிரிப்பர் :
சொட்டுநீர்க் குழாயின்
உட்பகுதியிலேயே சொட்டுவான்களைப் பொருத்தினால் அது இன்லைன் டிரிப்பர் ஆகும். இது சுலபமாக
சுருட்டி வைத்துக்கொள்ள ஏற்றது. காய்கறி போன்ற குறுகிய காலப் பயிர்களுக்கு இம்முறை
ஏற்றது. குறிப்பாக 30, 40, 50, 60 மற்றும் 90 செ.மீ இடைவெளியுள்ள பயிர்களுக்கு ஏற்றது.
இந்த வகையில் ஒரு மணி நேரத்திற்கு 2 மற்றும் 4 லிட்டர் அளவில் தண்ணீர் சொட்டும் வகையில்
சொட்டுவான்கள் கிடைக்கும்.
ஏரோ ஜெட் :
பசுமைக்குடில் விவசாயத்திற்கு
இம்முறை பயன்படுத்தப்படுகிறது. பசுமைக்குடிலில் பாலிபேக் எனப்படும் பைகளில் தான் விதைகளை
ஊன்றி விவசாயம் செய்யப்படுகிறது. அந்த மாதிரி பைகளில் ஏரோ ஜெட் முறை பாசனம் செய்ய ஏற்றது.
பாய்ச்சப்படும் தண்ணீரின்
அளவிற்கு ஏற்ற வகையில் சொட்டுவான்களை குச்சி போன்ற அமைப்பில் பொருத்தி பையின் உட்பகுதியில்
குத்தி வைக்க வேண்டும். இதுதான் ஏரோ ஜெட் முறையில் பாசனம் செய்வதாகும். இதன் மூலமாக
பையில் உள்ள பயிருக்கு பாசனம் நடக்கும்.
மைக்ரோ டியூப் :
நிலத்தில் சொட்டு நீர்ப்பாசனம்
அமைக்கும் முன் மண் பரிசோதனை, நீர் பரிசோதனை, மின் மோட்டார்களின் அழுத்தம் ஆகியவற்றை
தெரிந்துக்கொள்வது அவசியமாகும். அதிக உப்பு தண்ணீர் உள்ள நிலங்களுக்கு டிரிப்பர் பயன்படுத்துவது
பொருந்தாது. அதுபோன்ற பகுதிகளில் மைக்ரோ டியூப் எனப்படும் சிறிய குழாய்களின் மூலம்
பாசனம் செய்யலாம்.
நீரை சேமிப்போம் !! விவசாயத்தை
காப்போம் !!
No comments:
Post a Comment