*ஆட்கொணர்விக்கும் ரிட் மனு.*

 *ஆட்கொணர்விக்கும் ரிட் மனு.* 

ஆட்கொணர்விக்கும் ரிட் மனுவை மக்கள் பல பெயர்களில் தெரிந்து கொள்கிறார்கள் அதாவது ஆட்கொணர்விக்கும் ரிட் மனுவை ஆட்கொணர்விக்கும் நீதிப்பேராணை. மற்றும், H C P, ஹேபியஸ் கார்பஸ் (Habeas Corpus Writ Petition) என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறது.

 *ஆட்கொணர்விக்கும் ரிட் மனுவின் நோக்கம்.* 

Habeas Corpus Writ Petition.

இந்திய மக்களின் உரிமைகளை நிலைநாட்டுவதற்கு நம் சட்டம் பல அம்சங்களை வழங்கியுள்ளது. அதில் மிக முக்கியமானது நீதி பேராணைகள். ரிட் மனுகள் ( WRIT ) என சொல்லப்படும் இந்த நீதிப்பேராணைகள் ஐந்து வகைகளாக இருக்கிறது. இதில் அதிகமாக பயன்படுத்தப்படுவது Habeas corpus எனப்படும் ஆட்கொணர்விக்கும் நீதிப்பேராணைகள் தான்.

ஓருவரை சட்டத்திற்கு புறம்பாக கைது செய்து அவர் இருக்கும் இடமே தெரியாமல் இருக்கிறது என்ற சூழ்நிலையில் உயர்நீதிமன்றத்தை அணுகி இந்த ரிட் மனுவை தாக்கல் செய்யலாம். அவரை வெளியே கொண்டுவருவதற்காக ஆபத்து காலங்களில் இந்த ரிட் மனு பயன்படுகிறது. 

 *நீதிமன்றத்தில் hcp என்றால் என்ன?* 

 What is hcp in court?

HABEAS CORPUS PETITION என்பதன் சுருக்கமே H.C.P என அழைக்கப்படுகிறது.

 *ஹேபியஸ் கார்பஸுக்கான காரணங்கள் என்ன?* 

காவல்துறையினர் சட்டத்திற்கு புறம்பாக ஒருவரை கைது செய்யும்போது மட்டுமல்லாமல், யாரேனும் ஒருவர் கடத்திச் செல்லப்பட்ட சூழ்நிலையிலும் அவரை உரியவர்களிடம் ஒப்படைக்க கூறி நீதிமன்றத்தில் இந்த ரிட் மனுவைதாக்கல் செய்யலாம். உதாரணமாக, காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜோடிகள் பெற்றோருக்கு தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

 பெற்றோர்கள் அவர்களை தேடி கண்டுபிடித்து அந்த பெண்ணை அழைத்துச் சென்றுவிட்டார்கள் என்று வைத்துக் கொள்வோம் அந்த நேரத்தில் கணவன் என்ற முறையில் தனது மனைவியை கண்டுபிடித்து தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என அவர் மனு போடலாம் மனுவை விசாரித்து அதில் உண்மை இருப்பின் நீதிமன்றத்தின் முன் சட்டத்திற்கு புறம்பாக கைது செய்திருக்கும் நபரை ஒப்படைக்க சொல்வார்கள்.

 *ஹேபியஸ் கார்பஸ் மனுவை எவ்வாறு தாக்கல் செய்வது* 

இந்த மனுக்களை நேரடியாக உயர்நீதிமன்றத்திலும் அல்லது உச்சநீதிமன்றத்திலும் தான் தாக்கல் செய்ய முடியும். மாவட்ட நீதிமன்றங்களில் தாக்கல் செய்ய முடியாது. சட்டத்திற்கு புறம்பான வகையில் ஒரு வரை கைது செய்து வைத்திருக்கும் போதும் கூட ரிட் மனு தாக்கல் செய்யலாம்.  

காணாமல் போயிருக்கும் நபரை உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டி நீதிமன்றத்தை அணுகி ரிட் மனு தாக்கல் செய்ய ஆட்கொணர்விக்கும் நீதிபேராணை பெரும் துணையாக இருக்கிறது.

கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம்

நீலகிரி


No comments:

Post a Comment

கோரிக்கை

அனுப்புநர்: சு. சிவசுப்பிரமணியம், பொதுச்செயலாளர், கூடலூர் நுகர்வோர் மனிதவள மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், பந்தலூர், நீலகிரி மாவட்டம...