visit http://www.dinakaran.com/Dinakaran_search.asp?cx=partner-pub-1112317142011070%3A8620244187&cof=FORID%3A10&ie=UTF-8&q=%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%81%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D+&sa=Search&siteurl=www.dinakaran.com%2F&ref=www.google.co.in%2F&ss=8488j26219770j4


About 96 results (0.20 seconds)
2 மார்ச் 2013 ... ஊட்டி,:கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுசூழல் பாதுகாப்பு மையம், ஊட்டி நகர மக்கள் விழிப்புணர்வு சங்கம் ஆகியவை சார்பில் ...
www.dinakaran.com/District_Detail.asp?Nid=163230&cat=504
30 ஜனவரி 2013 ... கூடலூர் பாத்திமா பெண்கள் மேல்நிலை பள்ளியில் நுகர்வோர் பாதுகாப்புத்துறை, கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் ...
www.dinakaran.com/District_Detail.asp?Nid=148085&cat=504
4 பிப்ரவரி 2013 ... கூடலூர் அரசு மருத்துவமனையில் பிரசவ வார்டு துவக்க ...என கூடலூர் நுகர்வோர் மற்றும் மனிதவள பாதுகாப்பு மையம் ... கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் ...
www.dinakaran.com/District_Detail.asp?cat=504&Nid=150190
27 மார்ச் 2013... கூட்ட மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் வலியுறுத்தி உள்ளது.
www.dinakaran.com/District_Detail.asp?cat=504&Nid=176370
20 பிப்ரவரி 2013... நுகர்வோர் பாதுகாப்பு துறை, கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுசூழல் பாதுகாப்பு மையம், பள்ளி குடிமக்கள் நுகர்வோர் ...
www.dinakaran.com/District_Detail.asp?cat=504&Nid=157564
28 நவம்பர் 2012... பொருட்கள் வழங்கல் நுகர்வோர் பாதுகாப்பு துறை மற்றும்கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், ...
www.dinakaran.com/District_Detail.asp?cat=504&Nid=123040
29 அக்டோபர் 2012 ... பந்தலூர், : கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்று சூழல்பாதுகாப்பு மையம் மக்கள் மையத்தின் ஆலோசனைக்கூட்டம் பந்தலூரில் ...
www.dinakaran.com/District_Detail.asp?Nid=112330&cat=504
28 ஜனவரி 2013... கூடலூர் நுகர்வோர் சுற்று சூழல் பாதுகாப்பு மையம், ...கூடலூர், பந்தலூர் வட்டார நுகர்வோர் பாதுகாப்பு சங்கங்கள் ஆகியன ...
www.dinakaran.com/District_Detail.asp?Nid=146974&cat=504
18 அக்டோபர் 2012 ... கூடலூர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம் தலைமை வகித்தார். நுகர்வோர் மைய நிர்வாகி...
www.dinakaran.com/District_Detail.asp?Nid=108726&cat=504
4 மார்ச் 2013 ... கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம் சார்பில் பொதுவிநியோக திட்டம் குறித்த ...
www.dinakaran.com/District_Detail.asp?Nid=163860&cat=504

ஜில்லுனு ஒரு டூர் : ஊட்டிக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்

சுட்டெரிக்கும் சூரியனின் உஷ்ணம் ஒரு புறம்... பாடாய்படுத்தும் மின்வெட்டு மறுபுறம்... என, கோடைகால "கொடுமை'யில் இருந்து, சிலநாள் விடுதலை பெற்று இளைப்பாற, கோடை வாசஸ்தலமான ஊட்டிக்கு படையெடுக்கத் துவங்கியுள்ளனர், சுற்றுலா பயணிகள்.

வெப்பக்காற்றை சுவாசித்து, வியர்வைக் குளியலுடன், ஊட்டி மலைப்பாதைக்குள் நுழையும் போது, உடலை வருடிச்செல்லும் "குளு,குளு' காலநிலையால், வியர்வை துளிகளுக்கு விடைகொடுத்து, வியந்து போகின்றனர் சுற்றுலா பயணிகள். ஊட்டிக்கு வந்து ஓய்வெடுத்து, மாலை நேரத்தில், "வாக்கிங்' செல்லும் போது, உடலை வருடிச் செல்லும் குளிர்தென்றல் காற்றில் சிலிர்த்து போகும் இவர்கள், முதல் வேளையாக, ஸ்வெட்டர், தொப்பிகளை வாங்கி, மாட்டிக் கொள்வதையும் பார்க்க முடிகிறது. குளு குளு ஊட்டிக்கு வருவோர், மலை மாவட்டத்தில் பார்த்து, ரசித்து, அனுபவிக்க வேண்டிய இடங்கள் குறித்த விபரம் இதோ:

ஊட்டி தாவரவியல் பூங்கா: கடந்த 1845ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட தாவரவியல் பூங்காவில், 120 குடும்பங்களைச் சேர்ந்த 3000 ரக தாவர இனங்கள் உள்ளன. 144 ரக பரணிச் செடிகள், 350 வகை ரோஜா, 60 ரக டேலியா, 30 ரக கிளாடியோலை, 150 ரக கள்ளிச்செடிகள், "டைனோசர்' கால "ஜிங்கோபைலபா' மரம் என, ஏராளமான மர வகைகள் உள்ளன. பூங்கா முகப்பில் உள்ள புல் தரை, லண்டன் "க்யூ' பூங்கா தரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. உங்களது பாதங்களை அதன் மீது பதித்தாலே, பஞ்சு மீது நடப்பதுபோன்ற உணர்வை பெறுவீர்கள். இங்கு, தினமும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வந்து, ரசித்துச் செல்கின்றனர். குட்டீஸ்கள் குதூகலத்துடன் ஓடியாடி விளையாடி மகிழ்கின்றனர்.

படகு இல்லம்:கடந்த 1823ல் உருவாக்கப்பட்ட ஊட்டி ஏரி, தமிழக சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தின் பராமரிப்பிலுள்ளது. 65 ஏக்கர் பரப்பில் உள்ள ஏரியில் படகு சவாரிக்காக, 318 படகுகள் உள்ளன. சிறுவர், சிறுமியரை கவர, ஏரிக்கரையில் சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. ஏரியின் மறு கரையில் உள்ள தேனிலவு படகு இல்லத்திலும், சிறுவர் பூங்கா உட்பட வசதிகள் உள்ளன. குதிரை சவாரி மேற்கொள்ள ஏதுவாக, தனியார் சார்பில் குதிரைகளும் உள்ளன. ஏரிசாலையை ஒட்டி, வனத்துறை சார்பில் பராமரிக்கப்படும் மான் பூங்காவில் கடமான், வரையாடுகளை கட்டணமின்றி பார்க்க முடியும். ஊட்டிக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள், இங்கு வராமல் போவதில்லை. ஊட்டிக்கு வந்துவிட்டு, படகுப்பயணமின்றி ஊர் திரும்பினால், சுற்றுலா அனுபவம் முற்றுப்பெறாது என்பதை, பயணித்துப்பார்த்தவர்கள் நன்கு உணர்ந்திருக்கிறார்கள். இதனால், இங்கு கூட்டம் அலைமோதுகிறது.

தொட்டபெட்டா சிகரம்:கடல் மட்டத்திலிருந்து 2,623 மீட்டர் உயரத்தில், "தென்னிந்தியாவின் உயர்ந்த சிகரம்' என்ற பெருமையை பெற்ற தொட்டபெட்டா சிகரம், பார்வையாளர்களுக்கு பரவசம் தரக்கூடிய காட்சி முனை. இங்கு, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள "டெலஸ்கோப்' மூலம், ஊட்டி, குன்னூர், வெலிங்டன், குந்தா, கோவை, கர்நாடகா, கேரளா பகுதிகளை கண்டு வியக்கலாம்.

பைக்காரா ஏரி:பைக்காரா அணையில் திறந்து விடப்படும் நீர், இங்குள்ள பாறைகளில் தவழ்ந்து செல்லும் போது, அருவியை போன்று ரம்மியமாக காட்சியளிக்கிறது. நீர்வீழ்ச்சியை அடுத்த ஒரு கி.மீ., தூரத்தில் பைக்காரா ஏரி உள்ளது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில், படகு சவாரி விடப்படுகிறது. நீரை கிழித்து கொண்டு, மின்னல் வேகத்தில் செல்லும், "ஸ்பீடு போட்' (அதிவிரைவு படகு) இந்த ஏரியில் மட்டுமே உள்ளது, என்பது, சுற்றுலா பயணிகளுக்கு குஷியான தகவல்.

சிம்ஸ் பூங்கா:குன்னூரில், கடந்த 1874ல் உருவாக்கப்பட்ட சிம்ஸ்பூங்கா, 1,200க்கும் மேற்பட்ட அரிய வகை மரங்களின் புகலிடமாக இப்பூங்கா உள்ளது. கற்பூர மரங்களில் மட்டும் 27 வகைகள் உள்ளன. 104 ஆண்டு பழமை வாய்ந்த யானைக்கால் மரம், ருத்ராட்சை, காகிதம், டர்பன்டைன், ஜெகரன்டா, கெமேலியா, அகேசியா, மரதாகை மரங்கள் என, காணக் கிடைக்காத, மிகப்பழமையான மரங்கள் இப்பூங்காவில் உள்ளன. இடையிடையே அழகிய மலர்களின் அணிவகுப்பை, சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்துச் செல்கின்றனர்

"டால்பின்ஸ் நோஸ்' காட்சிமுனை:சிம்ஸ்பூங்காவில் இருந்து 5 கி.மீ., தொலைவில் உள்ள லேம்ஸ் ராக், அங்கிருந்த 2 கி.மீ., தூரத்தில் உள்ள டால்பின்ஸ் நோஸ் காட்சி முனைகளில் இருந்து தெரியும், 6,000 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கு காட்சிகள், பார்வையாளர்களுக்கு "திரில்' அனுபவத்தை தருகின்றன.

கோடநாடு காட்சி முனை:கோத்தகிரியில் உள்ள கோடநாடு காட்சிமுனை உச்சியில் அமைக்கப்பட்டுள்ள கோபுரத்தில் இருந்து பார்த்தால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வனங்கள், வயல் வெளிகள், பார்வைக்கு விருந்தாக அமையும். அங்குள்ள "பைனாகுலர்' மூலம் வரலாற்று சிறப்பு மிக்க சுஜல் கோட்டை, அல்லிராணி கோட்டையை பார்க்க முடியும்; தெங்குமரஹாடா கிராமத்தின் அழகையும் ரசிக்கலாம். நீலகிரி மலையில் உருவாகி பவானிசாகர் அணையில் கலக்கும் "மாயாறு' ஆற்றின் பயணத்தையும் பார்வையில் "படம்' பிடிக்கலாம்.

கோத்தகிரி நேரு பூங்கா:கோத்தகிரியில் உள்ள கேத்ரீன் நீர் வீழ்ச்சி, பசுமையான தேயிலை தோட்டங்கள், அழகிய மலை முகடுகளின் வழியே வழிந்து, பாறைகளை ஈரமாக்கி, சுற்றுலாபயணிகளின் மனதை இதமாக்குகிறது. கோத்தகிரியின் மையப்பகுதியில், காமராஜர் சதுக்கத்தில் அமைந்துள்ளது நேரு பூங்கா. பல அரிய வகை மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டு மலர்கள் மலர்ந்துள்ளன. அழகிய புல்வெளி, கோத்தரின மக்களின் கோவில் பூங்காவின் சிறப்பு அம்சம்.

பஸ் இருக்கு... ஜாலியா போகலாம்!* ஊட்டியில் இருந்து, தாவரவியல் பூங்கா, படகு இல்லம், ரோஜா பூங்கா, தொட்டபெட்டா செல்ல, அரசு போக்குவரத்து கழகம் சார்பில் "சர்கியூட்' பஸ்கள் விடப்பட்டுள்ளன. மரவியல் பூங்காவுக்கு, ஊட்டி பஸ் நிலையத்தில் இருந்து நடந்தே செல்லலாம்.
* ஊட்டியிலிருந்து கூடலூர் செல்லும் வழியில் உள்ள பைக்காரா நீர் வீழ்ச்சிக்கு, தனியார் வாடகை வாகனங்கள், அரசு பஸ்கள் மூலம் செல்லலாம்.
*கோத்தகிரி - கோடநாடுக்கு செல்ல காலை 6.30 மணியில் இருந்து இரவு 7.30 மணி வரை அரசு பஸ்களும், கேத்ரீன் நீர்வீழ்ச்சிக்கு செல்ல, காலை 9.00 மணியிலிருந்து இரவு 7.30 வரை மினி பஸ்களும் இயக்கப்படுகின்றன.
* கோத்தகிரி பஸ் ஸ்டாண்ட், டானிங்டன், ராம்சந்த் பகுதிகளில் இருந்து, நடந்து செல்லும் தூரத்தில் தான் நேரு பூங்கா உள்ளது.
* குன்னூர் பஸ் ஸ்டாண்டிலிருந்து சிம்ஸ்பூங்காவுக்கு, மினி, அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. குன்னூர் டால்பின்'ஸ் நோஸ், லேம்ஸ்'ராக் காட்சி முனைக்கு, பஸ் வசதி குறைவு என்பதால், தனியார் வாகனங்களே சிறந்தது.

த்ரில் சவாரி...:முதுமலை புலிகள் காப்பகத்தில், வனத்துறை வாகனம், வளர்ப்பு யானைகள் மூலம், வனப்பகுதிக்குள் சவாரி செய்யலாம். வாகன சவாரி, தெப்பக்காடு வரவேற்பு மையத்திலிருந்து, தினமும் காலை 7:00 மணி முதல் 9:00 மணி வரை, பிற்பகல் 3:00 மணி முதல் 5:30 மணி வரை நடத்தப்படுகிறது.
யானை சவாரி, தினமும் காலை 7:00 மணி முதல் 8:30 மணி வரையும், மாலை 4:00 மணி முதல் 5:30 வரை உண்டு.
* முதுமலை தெப்பக்காடுக்கு, ஊட்டியிலிருந்து மைசூரு, பெங்களூரு குண்டல்பேட்டை பகுதிக்கு இயக்கப்படும்
தமிழக, கர்நாடக பஸ்கள் மூலமும், கூடலூரிலிருந்து அரசு பஸ், தனியார் வாகனங்கள் மூலமும் செல்ல முடியும்.
ஊசிமலை காட்சி முனைஊட்டி - கூடலூர் சாலையில், 40 கி.மீ., தொலைவில் உள்ள ஊசிமலை காட்சி கோபுரத்தில் இருந்து, கூடலூர், சிங்காரா, நடுவட்டம் மற்றும் முதுமலை வனப்பகுதியை ரசிக்க முடியும்.
*அவலாஞ்சி, முக்கூர்த்திஊட்டி அருகே 20 கி.மீ., தூரத்தில் உள்ள அவலாஞ்சி பகுதிக்கு செல்ல, வனத்துறை அனுமதியுடன், சுற்றுலா வாகனங்கள் இயக்கப்படுகின்றன. அங்கு செல்லும் சுற்றுலா பயணிகள், அங்குள்ள பவானியம்மன் கோவில், புல்வெளி காடுகள், வரையாடு உட்பட இயற்கை காட்சிகளை ரசிக்கலாம். இதை தவிர, முக்கூர்த்தி காட்சி முனை பகுதிக்கு
"டிரக்கிங்' செல்ல வேண்டும்மெனில், வனத்துறையில் முறையான அனுமதி பெற்று செல்லலாம்.

இந்தாண்டு இது புதுசு:ஊட்டி - குன்னூர் சாலையில், வெலிங்டன் எம்.ஆர்.சி., ராணுவ முகாம் பகுதியில், 3 ஏக்கர் பரப்பளவில், செயற்கை ஏரியும், ஏரிக் கரையில், சிறுவர் பூங்காவும் அமைக்கப்பட்டுள்ளது. தவிர, மாவட்டத்தில் முதன் முறையாக, ஏரியின் ஒரு பகுதியில், இசையின் பின்னணியில், மின்னொளியில் "நடனமாடும்' நீர் வீழ்ச்சி அமைக்கப்பட்டுள்ளது; "அனுமதி இலவசம்' என்பது, கூடுதல் தகவல்.

என்ன வாங்கலாம்எங்கே வாங்கலாம்:சீசனை மையப்படுத்தி ஊட்டியில் அனைத்து விதமான விளையாட்டு பொருட்கள்; உடைகள்; உணவு பொருட்கள் சமவெளிப்பகுதிகளில் இருந்து கொண்டு வந்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஆனால், மலை மாவட்டத்துக்கு உரித்தான, நீலகிரி தைலம், கல்தேரியா, ஜெரோனியா எண்ணெய், தேயிலை, ஹோம் மேட் சாக்லெட், வர்க்கி ஆகியவற்றை வாங்கி செல்லலாம். தரமான பொருட்கள் வாங்க அரசு சார்பில் நடத்தப் படும் கூட்டுறவு அங்காடிகள். பழமையான பேக்கரிகளை விசாரித்து வாங்கினால் பயன் தரும்.

ரோஜா பூங்கா : கடல் மட்டத்தில் இருந்து 2,200 மீட்டர் உயரத்தில், ஊட்டி ரோஜா பூங்கா அமைந்துள்ளது. நான்கு ஹெக்டர் பரப்பளவில், 5 அடுக்குகளை கொண்டு, 3,300 வகையைச் சேர்ந்த, 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உள்நாட்டு, வெளிநாட்டு ரோஜா செடிகளின் அணிவகுப்பில், வாசம் வீசிக் கொண்டிருக்கிறது இப்பூங்கா, ஆசியாவின் மிகப்பெரிய ரோஜா பூங்காக்களில் ஒன்று, என்பது கூடுதல் தகவல்.

மரவியல் பூங்கா:ஊட்டி பஸ் ஸ்டாண்டில் இருந்து ஒரு கி.மீட்டர் தூரத்தில் உள்ள பர்ன்ஹில் சாலையில் உள்ள மரவியல் பூங்காவில், 100க்கும் மேற்பட்ட சோலை மரங்கள், 60க்கும் மேற்பட்ட அரிய வகை மரங்கள் உள்ளன. பூங்காவை ஒட்டியுள்ள சதுப்பு நிலத்தில், மாலை நேரங்களில் பறவைகளின் "கிரீச்' ஒலி காதுக்கு இனிமை சேர்க்கின்றன.

ஜான் சலிவன் நினைவிடம் : கோத்தகிரி கன்னேரிமுக்கு கிராமத்தில், நீலகிரி மாவட்டம் உருவாக காரணமாக இருந்த ஆங்கிலேயர் "ஜான் சலிவன்' நினைவிடம் உள்ளது. இங்கு, நீலகிரி மாவட்டத்தின் பாரம்பரியம், கலாசாரம், எல்லை கோடுகள் என முக்கிய தகவல்கள் பராமரிக்கப்பட்டு வருவதால், ஆராய்ச்சி மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

நுழைவு கட்டண விபரம்:ஊட்டி தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ்பூங்கா, கோத்தகிரி நேரு பூங்காவில், நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு 30 ரூபாய், சிறியவர்களுக்கு 15 ரூபாய். ஸ்டில் கேமரா கொண்டு செல்ல50 ரூபாய், வீடியோ கேமரா கொண்டு செல்ல 100 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. ஊட்டி படகு இல்லத்தில், 5 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும், நுழைவு கட்டணமாக5 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்









அரசுப் பள்ளிக்குப் பரிசு

பந்தலூர்: சிறப்பான சேவை செய்த பந்தலூர் அரசு மேல்நிலைப்பள்ளி நுகர்வோர் மன்றம் இரண்டாம் பரிசை பெற்றது.
அரசு உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை, மாவட்ட நிர்வாகம், கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் இணைந்து, பள்ளிகளில் குடிமக்கள் நுகர்வோர் மன்றங்களை செயல்படுத்தி வருகிறது. கடந்த 2012-13ம் ஆண்டில் சிறப்பான சேவை செய்த நுகர்வோர் மன்றம், மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் தேர்வு செய்யப்பட்டது.
அதில், பந்தலூர் அரசு மேல்நிலைப்பள்ளி, புனித சேவியர் பெண்கள் உயர்நிலைப்பள்ளி ஆகியவை 2ம் இடத்தை பிடித்தன. பந்தலூர் வட்ட வழங்கல் அலுவலர் ஜான்மனோகர், இதற்கான பரிசை தலைமையாசிரியர் சாமலேசனிடம் வழங்கினார். மைய தலைவர் சிவசுப்ரமணியம், ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் தண்டபாணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

போலி ரேஷன் கார்டுகளை பிடித்து கொடுத்தால் தக்க சன்மானம்



ஊட்டி, : நீலகிரி மாவட்டத்தில் போலி ரேஷன் கார்டுகளை பிடித்து கொடுப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என மாவட்ட வழங்கல் அலுவலர் தெரிவித்துள்ளார். 
கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம் சார்பில் பொதுவிநியோக திட்டம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. ஊட்டியில் நடந்த முகாமிற்கு கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மக்கள் மைய தலைவர் சிவசுப்ரமணியம் தலைமை வகித்தார். 
 மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெயராஜ் பேசியதாவது:
அரசு ஏழை எளிய மக்களுக்கு உணவு கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் விலையில்லா அரிசி வழங்கி வருகிறது. சர்க்கரை மற்றும் உணவு பொருட்களை மானிய விலையில் வழங்கி வருகிறது. இதற்காக ஆண்டு தோறும் ரூ.4900 கோடியை ஒதுக்குகிறது. நீலகிரி மாவட்டத்தில் 397 ரேஷன் கடைகள் உள்ளன. 2 லட் சத்து 20 ஆயிரம் குடும்ப அட்டைகளுக்கு உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அரிசி, சர்க்கரை ஆகியவை 100 சதவீதமும், பருப்பு வகைகள் 86 சதவீதமும், மண் எண்ணெய் 80 சதவீதமும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. கூட்டுறவு சங்கங்கள், நுகர்பொருள் வாணிப கழகம், மகளிர் குழுக்கள் மூலமாக ரேஷன் கடைகள் நடத்தப்பட்டு வருகிறது. ரேஷன் கடைகளில் முறைகேடு நடப்பதாக தெரிந்தால் உடனடியாக இணை பதிவாளருக்கு புகார்கள் தெரிவிக்கலாம். ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்களின் தரம் மற்றும் அளவு குறைவாக இருந்தால் உடனடியாக மண்டல மேலாளரிடம் புகார் தெரிவிக்கலாம். அனைத்து ரேஷன் கார்டுகளிலும் தொலைபேசி எண்கள் அச்சிடப்பட்டுள்ளன. அதனை பார்த்து உடனடியாக கலெக்டர், மாவட்ட வழங்கல் அலு வலர், மண்டல மேலாளர், இணை பதிவாளர் ஆகியோருக்கு புகார் தெரிவிக்கலாம். ரேஷன் கார்டுகளை அடமானம் வைப்பது, விற்பனை செய்வது சட்டப்படி குற்றம். போலி குடும்ப அட்டைகள் புழக்கத்தில் இருந்தால் உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கலாம். போலி குடும்ப அட்டை இருப்பது கண்டு பிடிக்கப்பட்டால், அதனை ஒழிப்பது மட்டுமின்றி பிடித்து கொடுத்தவர்களுக்கு தகுந்த சன்மானம் வழங்கப்
படும். 
புதிய கார்டு கேட்டு விண்ணப்பிப்பவர்கள் உரிய சான்றுகள் இணைத்து விண்ணப்பித்தால், ஆய்விற்கு பின் வழங்கப்படும்.
இவ்வாறு ஜெயராஜ் பேசினார்.
இக்கூட்டத்தில், மகளிர் குழுக்களை சேர்ந்த பெண்கள், ஊட்டி நகர விழிப்புணர்வு சங்க தலைவர் ஜனார்த்தனன், சாமிநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நுகர்வோர் கூட்டங்களை முறையாக கூட்ட வேண்டும்




ஊட்டி, : நீலகிரி மாவட்டத்தில் நுகர்வோர் ஆலோசனை கூட்டங்களை முறையாக கூட்ட மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் வலியுறுத்தி உள்ளது.
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுசூழல் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம் மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளுடன் மாவட்ட நிர்வாகம் சார்பில் கூட்டப்படும் கூட்டங்கள் முறை யாக கூட்டப்படவில்லை. அரசாணைகளில் காலாண்டிற்கு ஒருமுறை  நுகர்வோர் அமைப்புகளுடனான ஆலோசனை கூட்டம், மாவட்ட நுகர்« வார் பாதுகாப்பு குழு கூட்டம் ஆண்டிற்கு இரண்டிற்கு குறையாமல் நடத்தப்பட வேண்டும். மேலும் பொது விநியோக திட்ட ஆலோசனை கூட்டம் இரு மாதங்களுக்கு ஒரு முறைகூட்டப்பட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. இக்கூட்டங்களில் ஆண்டிற்கு 4 கூட்டங்கள் மட்டுமே தற்போது கூட்டப்படுகின்றது. மற்ற கூட்டங்களும் முறையாக கூட்டப்பட வேண்டும். எனவே நுகர்வோர் ஆலோசனை கூட்டம் முறையாக நடத்தப்பட வேண்டும்.
அதுபோல எரிவாயு நிறுவன மண்டல அலுவலர்களுடன் நடத்தப்பட வேண்டிய கூட்டங்கள் கடந்த 5 ஆண்டுகளாக நீலகிரியில் கூட்டப்படவில்லை.
எனவே எரிவாயு குறைதீர் கூட்டத்தினை விரைவில் கூட்ட வேண்டும். தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளுடன் கூட்டம் நடத்தப்படும் போது கூட்டத்தில் பங்கேற்கும் அலுவல்சாரா தன்னார்வ நுகர்வோர் பிரதிநிதிகளுக்கு போக்குவரத்து செலவு தரப்பட வேண்டும் என அராசாணையில் கூறப்பட்டுள்ளது. 
எனவே நீலகிரி மாவட்டத்தில் நடைபெறும் கூட்டங்களில் கலந்து கொள்ளும் நுகர்வோர் பிரதிநிதிகளுக்கு போக்குவரத்து செலவு வழங்க வேண்டும். மளிகை கடைகள், நகை கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகளில் உரிய ரசீது வழங்கப்படுவதில்லை. இது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும். பல்வேறு உணவகங்கள் மற்றும் மளிகைகடைகள், பெட்டிகடைகளில் கலாவதி உணவு பொருட்கள் முறையான தகவல் பொட்டலமிட்ட தேதி போன்ற முக்கிய தகவல்கள் அச்சிடப்படாமலே விற்பனை செய்யப்படுகின்றன.
இது போன்ற கடைகளில் ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

உலக நுகர்வோர் தினத்தை முன்னிட்டு நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கு




ஊட்டி,:கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுசூழல் பாதுகாப்பு மையம், ஊட்டி நகர மக்கள் விழிப்புணர்வு சங்கம் ஆகியவை சார்பில் ஊட்டியில் உள்ள கனரா வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில் தரமான வாழ்வுக்கு தரமான பொருட்கள் என்ற தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கு நேற்று நடந்தது. உலக நுகர்வோர் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட இந்த நுகர்வோர் விழிப்புணர்வு முகாமினை மாவட்ட வழங்கல் அலுவலர் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ஜெயராஜ்  தலைமை தாங்கி துவக்கி வைத்து பேசுகையில், நுகர்வோர் நலன் காக்கும் வகையில் இந்திய நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் மற்றும் அதை சார்ந்து பல சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் பொருட்களின் தரங்கள் அறிய தரக்குறியீடுகளை வழங்கியுள்ளது. தரமான பொருட்களை வாங்குவதால் நமது பணத்திற்குரிய மதிப்பினை பெற முடிகிறது என்றார்.
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம் பேசுகையில், தரமான பொருட்களை அடையாளம் காணும் வகையில் இந்திய தர கட்டுபாட்டு சட்டம் 1986ன்படி இந்திய தர அமைவனத்தை அமைத்துள்ளது. இந்த அமைவனம் பொருட்களுக்கான தர குறியீடுகளை வழங்கியுள்ளது. குறிப்பாக மின் உபயோகம் மற்றும் வீட்டு உபயோக பொருட்களுக்கு ஐ.எஸ்.ஐ., முத்திரையும் உணவு பொருட்களுக்கு அக்மார்க் முத்திரையும், பழவகை உணவு பொருட்களுக்கு எப்.பி.ஒ.,முத்திரையையும், சில்க்மார்க், பிஇஇ., உள்ளிட்ட பல முத்திரைகளை வழங்கியுள்ளது. தயாரிப்பு நிறுவனத்தை ஆய்வு செய்து அவை முறைப்படி தயாரிப்பதை உறுதி செய்து இம்முத்திரைகளை வழங்குகிறது. இம்முத்திரைகளை பார்த்து வாங்குவதால் 90 சதவீத நம்பகத்தன்மை ஏற்படுகிறது. நகைக்கடைகளில் ஆல்மார்க் முத்திரை பெற அரசு வலியுறுத்தி உள்ளது. இதனால் ஆல்மார்க் முத்திரை இருந்தால் தங்கத்திற்கான நம்பகத்தன்மையை உறுதி செய்கிறது எனவே நுகர்வோர்களாகிய பொதுமக்கள் பொருட்களை வாங்கும் பொது தரமானதா தரக்கட்டுபாட்டு முத்திரைகளை பெற்றுள்ளதா என பார்த்து வாங்க வேண்டும் என்றார்.
இந்நிகழ்ச்சியில் ஊட்டி நகர மக்கள் விழிப்புணர்வு சங்க தலைவர் ஜனார்த்தனன் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பயிற்சி மைய உதவியாளர் சதீஸ் செய்திருந்தார்.

dinakaran news thanks


18 அக்டோபர் 2012 ... கூடலூர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம் தலைமை வகித்தார். நுகர்வோர் மைய நிர்வாகி...
www.dinakaran.com/District_Detail.asp?Nid=108726&cat=504
25 மே 2012 ... ஊட்டி: கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுசூழல் பாதுகாப்பு மையம் மற்றும் மக்கள் மையத்தின் மாவட்ட குழு ஆலோசனை ...
www.astrology.dinakaran.com/District_Detail.asp?Nid=46365...
26 மே 2012 ... இதனால் மழை காலங்களில் மீண்டும் சேதமடையும் எனகூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் குற்றம்சாட்டியுள்ளது.
www.astrology.dinakaran.com/District_Detail.asp?Nid=46617...
3 ஜனவரி 2013 ... கூட்டத்தில் கலந்து கொண்ட கூடலூர் நுகர்வோர் பாதுகாப்புமற்றும் மக்கள் மைய ... விரைவில் இந்த மையம் திறக்கப்படும்.
www.dinakaran.com/District_Detail.asp?Nid=137567&cat=504
16 பிப்ரவரி 2013 ... இலங்கை பயணிகளுக்கு இந்தியாவில் பாதுகாப்பு00:17:13 ...பந்தலூர், : பந்தலூர் அங்கன்வாடி மையத்தில் பெண் குழந்தைகள் தினம் கடைப்பிடிக்கப்பட்டது. ... கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுசூழல்பாதுகாப்பு மைய தலைவர் ...
www.dinakaran.com/District_Detail.asp?cat=504&Nid=155617
27 அக்டோபர் 2012 ... ஊட்டி, : கூடலூர் சுற்றுசூழல் பாதுகாப்பு மையம், நீலகிரி... முகாமிற்கு கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் ...
www.dinakaran.com/District_Detail.asp?Nid=111777&cat=504
28 ஜனவரி 2013... கூடலூர் நுகர்வோர் சுற்று சூழல் பாதுகாப்பு மையம், ...கூடலூர், பந்தலூர் வட்டார நுகர்வோர் பாதுகாப்பு சங்கங்கள் ஆகியன ...
www.dinakaran.com/District_Detail.asp?Nid=146974&cat=504
9 ஜூலை 2012 ... இதில், கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுசூழல்பாதுகாப்பு மையம் மக்கள் மைய தலைவர் சிவசுப்ரமணியம் பேசியதாவது: ...
www.cinema.dinakaran.com/District_Detail.asp?Nid=64486&cat...
6 ஜூலை 2012 ... 6 தாலுகாவில் 13ம் தேதி நுகர்வோர் குறை தீர் கூட்டம் ...சிறுபான்மையினர் நலஅலுவலர் முன்னிலையிலும், கூடலூர் வட்டாரத்தில் ...மையம் அமைக்க கோரிக்கை · சங்க பொதுக்குழு கூட்டம் ... குழந்தைகள்பாதுகாப்பு சங்கத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணியிடங்கள் ...
www.astrology.dinakaran.com/District_Detail.asp?Nid=63290...
31 ஜனவரி 2013 ... பந்தலூர், : பந்தலூர் மகாத்மா காந்தி பொது சேவைமையத்தின் ... இந்நிகழ்ச்சிக்கு கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் ...
www.dinakaran.com/District_Detail.asp?Nid=148629&cat=504
18 அக்டோபர் 2012 ... கூடலூர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம் தலைமை வகித்தார். நுகர்வோர் மைய நிர்வாகி...
www.dinakaran.com/District_Detail.asp?Nid=108726&cat=504
25 மே 2012 ... ஊட்டி: கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுசூழல் பாதுகாப்பு மையம் மற்றும் மக்கள் மையத்தின் மாவட்ட குழு ஆலோசனை ...
www.astrology.dinakaran.com/District_Detail.asp?Nid=46365...
26 மே 2012 ... இதனால் மழை காலங்களில் மீண்டும் சேதமடையும் எனகூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் குற்றம்சாட்டியுள்ளது.
www.astrology.dinakaran.com/District_Detail.asp?Nid=46617...
3 ஜனவரி 2013 ... கூட்டத்தில் கலந்து கொண்ட கூடலூர் நுகர்வோர் பாதுகாப்புமற்றும் மக்கள் மைய ... விரைவில் இந்த மையம் திறக்கப்படும்.
www.dinakaran.com/District_Detail.asp?Nid=137567&cat=504
16 பிப்ரவரி 2013 ... இலங்கை பயணிகளுக்கு இந்தியாவில் பாதுகாப்பு00:17:13 ...பந்தலூர், : பந்தலூர் அங்கன்வாடி மையத்தில் பெண் குழந்தைகள் தினம் கடைப்பிடிக்கப்பட்டது. ... கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுசூழல்பாதுகாப்பு மைய தலைவர் ...
www.dinakaran.com/District_Detail.asp?cat=504&Nid=155617
27 அக்டோபர் 2012 ... ஊட்டி, : கூடலூர் சுற்றுசூழல் பாதுகாப்பு மையம், நீலகிரி... முகாமிற்கு கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் ...
www.dinakaran.com/District_Detail.asp?Nid=111777&cat=504
28 ஜனவரி 2013... கூடலூர் நுகர்வோர் சுற்று சூழல் பாதுகாப்பு மையம், ...கூடலூர், பந்தலூர் வட்டார நுகர்வோர் பாதுகாப்பு சங்கங்கள் ஆகியன ...
www.dinakaran.com/District_Detail.asp?Nid=146974&cat=504
9 ஜூலை 2012 ... இதில், கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுசூழல்பாதுகாப்பு மையம் மக்கள் மைய தலைவர் சிவசுப்ரமணியம் பேசியதாவது: ...
www.cinema.dinakaran.com/District_Detail.asp?Nid=64486&cat...
6 ஜூலை 2012 ... 6 தாலுகாவில் 13ம் தேதி நுகர்வோர் குறை தீர் கூட்டம் ...சிறுபான்மையினர் நலஅலுவலர் முன்னிலையிலும், கூடலூர் வட்டாரத்தில் ...மையம் அமைக்க கோரிக்கை · சங்க பொதுக்குழு கூட்டம் ... குழந்தைகள்பாதுகாப்பு சங்கத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணியிடங்கள் ...
www.astrology.dinakaran.com/District_Detail.asp?Nid=63290...
31 ஜனவரி 2013 ... பந்தலூர், : பந்தலூர் மகாத்மா காந்தி பொது சேவைமையத்தின் ... இந்நிகழ்ச்சிக்கு கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் ...
www.dinakaran.com/District_Detail.asp?Nid=148629&cat=504
29 அக்டோபர் 2012... என கூடலூர் நுகர்வோர் மையம் வலியுறுத்தியுள்ளது.கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம் அரசு ...
www.dinakaran.com/District_Detail.asp?Nid=112322&cat=504
25 பிப்ரவரி 2013 ... MORE VIDEOS. பந்தலூர், : கூடலூர் நுகர்வோர், சுற்றுச்சூழல்பாதுகாப்பு மையம் மற்றும் மேன்கொரேஞ் மருத்துவமனை சார்பில் ...
www.dinakaran.com/District_Detail.asp?Nid=159891&cat=504
13 டிசம்பர் 2012... கூடலூர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், நீலகிரி ... சேவை மையம், பந்தலூர் வட்டார நுகர்வோர் சங்கம் இணைந்து ...
www.dinakaran.com/District_Detail.asp?cat=504&Nid=129651

சுகாதார விழிப்புணர்வு கருத்தரங்கு


பந்தலூர் புனித சேவியர் உயர்நிலைப்பள்ளியில்
சுகாதார விழிப்புணர்வு கருத்தரங்கு
பந்தலூர், செப். 5:
கூடலூர் நுகர்வோர், மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், அரசு உணவுப்பொருள் வழங்கல் துறை, நுகர்வோர் பாதுகாப்புத்துறை, பந்தலூர் புனித சேவியர் பெண்கள் உயர்நிலைப்பள்ளியின் குடிமக்கள் நுகர்வோர் மன்றம் ஆகியவற்றின் சார்பில், சுகாதார விழிப்புணர்வின் அவசியம் என்ற கருத்தரங்கு நடத்தப்பட்டது. மாணவி மஞ்சு வரவேற்றார்.
கருத்தரங்குக்கு நுகர்வோர் மன்ற தலைவர் சிவசுப்பிரமணியம் தலைமை வகித்து, ஊட்டச்சத்து குறைபாட்டினால் உண்டாகும் நோய்கள், சத்தான உணவு உண்பதன் அவசியம், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்வதன் வழிமுறைகள் குறித்து பேசினார்.
பந்தலூர் அரசு மருத்துவமனையின் காசநோய் பிரிவு மேற்பார்வையாளர் யசோதரன், பேசியதாவது:
இந்தியாவில் காச நோய் பாதிப்பால் 3 நிமிடத்திற்கு 2 பேர் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தற்போது, இந்தியாவில் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதன் காரணமாக இந்த நோய் வேகமாக பரவி வருகிறது. தொடர் காய்ச்சல், சளி, இருமல், உடல்சோர்வு இருப்பின் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று காசநோய் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். தக்க விழிப்புணர்வு இருந்தால், எய்ட்ஸ் நோய் வராமல் தடுக்கலாம். ஒவ்வொரு தலைமை அரசு மருத்துவமனையிலும் நம்பிக்கை மையம் உள்ளது. அங்கு சென்று பரிசோதனை மற்றும் ஆலோசனை பெறலாம்� என்றார்.
இக்கருத்தரங்கில், நுகர்வோர் மைய நிர்வாகி தனிஷ்லாஸ், குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் மார்ட்டின் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இறுதியில், மாணவி கீர்த்தனா நன்றி கூறினார்.

பொறுப்புடன் குப்பைகளை அகற்றுவோம்! தூய்மையான சுற்றுச்சூழலை உருவாக்குவோம்!

### 📢 நுகர்வோர் விழிப்புணர்வில் இன்று ஒரு தகவல்! ### ♻️ பொறுப்புடன் குப்பைகளை அகற்றுவோம்! தூய்மையான சுற்றுச்சூழலை உருவாக்குவோம்! Waste Mana...