தர்பூசணி வாங்குமுன் கவனிக்க வேண்டிய 6 விஷயங்கள்!

.குளிர் முடிந்து வெப்பம் அதிகமாகத் தொடங்கிவிட்டதால் சாலைகளிலும், சந்தைகளிலும் தர்பூசணிப் பழங்கள் குவியத் தொடங்கிவிட்டன.   வெப்பத்தின் தாக்கத்தைச் சமாளிக்கப் பலரும் நாடும் பழமும் தர்பூசணிதான்.       இதுதவிர, விலை குறைவாகவும் கிடைப்பதால் மக்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுகின்றனர்
  
பெரும்பாலான பழங்களில் குறைகளோ அல்லது செயற்கையான வண்ணமோ இருந்தால் கடைக்காரர்களிடம் சுட்டிக் காட்டும்போது,
"      எங்களுக்கு என்ன தெரியும்" எனக் கையை விரிப்பார்கள். அதனால் முழுமையாகக் குறைகளை கண்டறிந்து வாங்க வேண்டியது அவசியமாகிறது.

ஒவ்வொரு பழத்திற்கும் ஒரு தன்மை இருக்கிறது, அதை வைத்து தரமான நல்ல பழங்களாக வாங்கிக் கொள்ளலாம். 

1. தர்பூசணியை முழுமையான பழமாக வாங்கும்போது சில நேரங்களில் வாங்கும் பழங்கள் காயாக இருக்க வாய்ப்பு உண்டு. காயை அறுத்த பின்னர் அது வீணாகிவிடும். அதனால் வாங்கும்போதே பழமாக வாங்குவதற்கு எளிய வழிகள் இருக்கின்றன. 

பொதுவாக மண்ணில் கொடியாகப் படரும் காய்கள் (சுரைக்காய், பூசணிக்காய்) தரைப் பகுதியில் இருக்கும். அந்தக் காய்களில் தரையில் உள்ள பாகம் மஞ்சள் வண்ணத்திற்கு மாறும். 

அதைப்போன்று தர்பூசணி பழமானது, நல்ல மஞ்சள் நிறத்தில் அல்லது ஆரஞ்சு கலந்த மஞ்சள் நிறத்தில் சற்றே பிசுபிசுப்புடன் இருக்கும். மாறாகத் தரையில் இருக்கும் பகுதி வெண்மை நிறத்தில் இருந்தால் அது முழுமையாகப் பழுக்காத பழம் எனத் தெரிந்து கொள்ளலாம்.

 2. தர்பூசணி பழத்தின்மேல் வலைப்பின்னலாக பழுப்பு நிற கோடுகள் இருந்தால், அந்தப் பழம் அடிபட்டதாக நினைத்து பெரும்பாலானோர் தவிர்த்துவிடுவோம்.

ஆனால், அதுதான் நல்ல ஆரோக்கியமான பழமாகும். அதற்கு ஒரு காரணமும் உண்டு. 

தர்பூசணி பூவாக இருக்கும்போது அதிக தேன் எடுக்கும்பொருட்டு பல பூச்சிகளும், தேனீகளும் பலமுறை அணுகுவதால் மகரந்தச் சேர்க்கை நடக்கும். அதனால், பூவின் இதழ்களில் தழும்புகள் ஏற்பட்டுவிடும்.

 பூ, காயாகி கனியானாலும் கூட அந்தத் தழும்புகள் வலைப்பின்னலாக மாறி பழத்தில் இருக்கும். இதைக் கொண்ட தர்பூசணி பழங்கள் அதிகமான சுவையுடன் இருக்கும்.

 தர்பூசணி பழங்கள் ஆண், பெண் என இரு வகையாகப் பிரிக்கப்படும். 

3. ஆண் தர்பூசணிப் பழங்கள் பெரியதாகவும், நீள் வடிவத்துடனும் இருக்கும். இத்தகைய பழங்கள் சுமாரான சுவையுடனும் இருக்கும்.
அதிக நீர் கொண்டதாகவும் இருக்கும். பெண் தர்பூசணிப் பழங்கள் முழுமையான வட்ட வடிவத்திலும், அதிக இனிப்பு சுவை கொண்டதாகவும் இருக்கும். 

இது தெரியாத பலரும் பழங்கள் உருவத்தில் பெரியதாகவும், அதிக இனிப்பில்லாத ஆண் பழங்களை வாங்குகிறார்கள். 

நாம் வாங்கும் தர்பூசணிப் பழம் சிறியதாகவோ அல்லது பெரியதாகவோ இல்லாமல் சராசரியான எடை கொண்ட பழமாகப் பார்த்து வாங்க வேண்டும். 

அவ்வாறு தேர்வு செய்யப்படும் பழம் அளவுக்கேற்ற எடையுடன் இருக்கிறதா எனப் பார்த்து வாங்க வேண்டும். 

இத்தகைய பழங்களே அதிக இனிப்புடன் இருக்கும். 

4. தர்பூசணிப் பழத்தின் காம்பு காய்ந்திருந்தால், அந்தப் பழம் பழுத்து விட்டது என்று அர்த்தம். காம்பு பச்சையாக இருந்தால் முழுமையாகப் பழுப்பதற்கு முன்னரே பறிக்கப்பட்டுவிட்டது என்று அர்த்தம். இந்த வகை பழத்தை தவிர்த்துவிடுவது நல்லது. 

5. விவசாயிகளில் பெரும்பாலானோர் ரசாயன உரங்களை உபயோகித்தாலும், தர்பூசணி விவசாயிகள் கொஞ்சம் அதிகமாகவே ரசாயன புழக்கத்தை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். 

அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமான அளவில் நைட்ரேட் உரங்களை உபயோகிப்பதால், சுமார் 3 வாரங்களிலேயே பழங்கள் பெரிதாகிவிடுகின்றன. 

இத்தகைய பழங்களை வாங்கி உண்பதால் நைட்ரேட் நச்சுகள் உடலில் கலந்துவிடுகின்றன. அதைக் கண்டுபிடிக்க ஒரு வழி உண்டு. 

பழத்தை இரண்டாக வெட்டும்போது நடுப்பகுதி வெள்ளையாகவும், பழத்தின் தோல் பகுதிக்கும், பழத்திற்கும்  இடையில் மஞ்சள் நிறமாகக் காணப்பட்டால் அது நைட்ரேட் தாக்கம் அதிகமாக உள்ள தர்பூசணிப் பழம் என்பதை அறிந்து கொள்ளலாம். 

இதுதவிர பழங்களின் ஓர் இடத்தில் மட்டும் சிவப்பு நிறமாக இருந்தால் அந்தப் பழங்களில் நைட்ரேட் செலுத்தப்பட்டிருக்கலாம்.

 6. பழத்தை இரண்டாக வெட்டிப் பார்க்கும்போது நடுப்பகுதியில் பெரிய அளவிலான பள்ளம் இருத்தால், அது வளர்ச்சி ஹார்மோன்கள் செலுத்தப்பட்ட பழமாக இருக்கலாம். அதனால் அதைத் தவிர்ப்பது நல்லது. 

அதிகமாகப் பழுத்த தர்பூசணி பழங்கள் கொஞ்சம் கசப்பு சுவையுடன் இருக்கும். வளர்ச்சி ஹார்மோன் செலுத்தப்பட்டதாக இருந்தால் அது உடலுக்கு தீமையைக் கொடுக்கும். 

அதேபோல தர்பூசணிப் பழத்தின் ஒரு துண்டை எடுத்து சுத்தமான தண்ணீரில் போட்டு வைக்கலாம். 
சிறிதுநேரம் கழித்து தண்ணீர் இளஞ்சிவப்பு நிறமாக மாறியிருந்தால், அது அதிக ரசாயனம் ஏற்றப்பட்ட பழமாக இருக்கலாம். 

இது உடலுக்கு அதிக தீங்கை விளைவிப்பதாகும். 

கலப்படமில்லாத உணவுப் பொருட்களும், ரசாயனம் கலக்காத காய்களும், பழங்களும் கிடைப்பது அரிதாகி விட்ட காலத்தில் நாம்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 

தர்பூசணிப் பழங்கள் உடலுக்கு அதிகமான பலனைக் கொடுப்பதால்தான் கோடைக்காலங்களில் அதிகமாக மக்கள் வாங்குகின்றனர். 

அதிகமாக கிராக்கி உள்ள பழங்களில் தர்பூசணிக்கும் முக்கிய இடம் உண்டு. அதிகமாகப் புழங்கும் பொருட்களில்தானே கலப்படமும் இருக்கும்.

FBOs using edible oils for frying > 50 ltrs per day required to maintain records as per FSSAI orders March 3 onward

FBOs using edible oils for frying > 50 ltrs per day required to maintain records as per FSSAI orders March 3 onward

by SENTHIL
 
FBOs using edible oils for frying > 50 ltrs per day required to maintain records as per FSSAI orders March 3 onward
New Delhi, Feb 8 (KNN) Food Business Operators (FBOs) whose consumption of edible oils for frying is more than 50 litres per day are required to maintain the records as per the Food Safety and Standard Authority of India's (FSSAI's) notification.
The record should contain information that includes name of the oil, quantity of oil taken for frying, quantity of oil discarded at the end of the day, date and mode of disposal of used cooking oil and discarded oil collected by authorized agency.
In this regard, FSSAI issued a notification to ensure that such used cooking oil is neither directly used in the food preparation nor re-enter food chain.
The FSSAI said “All FBOs whose consumption of edible oils for frying is more than 50 litres per day shall maintain the given records and dispose used cooking oil to agencies authorized by the FSSAI or Commissioner of Food Safety of States/UTs from time to time.”
Further, it added that the cooking oil having developed Total Polar Compounds (TPCs) of more than 25% shall not be topped up with fresh oil.
In view of the above, FSSAI said “Food safety commissioners of all States/ UTs are directed to initiate enforcement of the requirements with effect from March 3, 2019.”
Repeated frying of oil leads to changes in physiochemical, nutritional and sensory properties of edible oil. During frying TPCs are formed in the oil which have adverse effects on health.
In this regard, Food authority has notified Food Safety and Standards (Licensing and Registration) First Amendment Regulation, 2017 on October 24, 2017 which prescribes the limit for TPCs to be maximum 25% beyond which the vegetable oil is not suitable for use.
SENTHIL | February 9, 2019 at 9:58 

வரதட்சணை கொடுமைப் புகார்கள்

வரதட்சணை கொடுமைப் புகார்கள் இந்திய தண்டனை சட்டம் - 1860 பிரிவு - 498A, 406,41

இந்திய தண்டனை சட்டம் - பிரிவுகள் 498A, 406, 41 மற்றும் வரதட்சணை தடுப்புச் சட்டத்தின் கீழ்

காவல்நிலையத்தில் கொடுக்கப்படும் புகார் மனுக்களின் மீது காவல்துறையினர் உடனடியாக வழக்கு பதிவு செய்யக்கூடாது. அதேபோல் யாரையும் கைது செய்யவும் கூடாது.

(தீர்ப்பு நகல் எஸ்.முருகேசன் 👇👇👇🌹🌹)


புகாரை பெற்றவுடன் அந்த புகாரை Family Welfare Committee க்கு அனுப்ப வேண்டும். இந்த கமிட்டி ஒவ்வொரு தாலுகா வாரியாக ஆரம்பிக்கப்பட வேண்டும். மேலும் இந்த கமிட்டியில் ஒரு வழக்கறிஞர் உட்பட இரண்டு சமூக நல ஆர்வலர்கள் உறுப்பினர்களாக இருந்து காவல்துறையால் அனுப்பப்படும் புகார்களை விசாரித்து அந்த பிரச்சினைகளை தீர்க்க ஆலோசனைகளை வழங்க வேண்டும்.

இதற்கு இந்த கமிட்டி ஒரு மாதம் கால அவகாசம் எடுத்துக் கொள்ள வேண்டும். அதன்பிறகு தங்களது அறிக்கையை காவல்துறைக்கு வழங்க வேண்டும்.

அதன்பிறகே காவல்துறை FIR பதிவு செய்ய வேண்டும் என 27.7.2017 ஆம் தேதியில் உச்சநீதிமன்றம்

"ராஜேஷ் சர்மா Vs உத்திர பிரதேச மாநில அரசு"

என்ற வழக்கில் தீர்ப்பு கூறியுள்ளது.

கூடலூர் இரத்ததான முகாமில் கல்லூரி மாணவர்கள் ஆர்வம்

கூடலூர் இரத்ததான முகாமில்
கல்லூரி மாணவர்கள் ஆர்வம்
23 பேர் இரத்த தானம் செய்தனர்
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம், பாரதியார் கலை அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம், இளையார் செஞ்சிலுவை சங்கம், கூடலூர் அரசு மருத்துவமனை இரத்த வங்கி, நெலக்கோட்டை சமுதாய சுகாதார நிலையம் ஆகியன இணைந்து நடத்திய இரத்த தான முகாம் கோழிபாலம் வளாகத்தில் நடைபெற்றது.
கல்லூரிநாட்டு நலப்பணி திட்ட அலுவலர் மகேஸ்வரன் வரவேற்றார்.
முகாமிற்கு கல்லூரி முதல்வர் சுரேஷ் தலைமை தாங்கினார். இரத்த தானம் குறித்து இரத்தவங்கி மருத்துவ அலுவலர் மயில்சாமி பேசினார்.
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் காளிமுத்து, பொது செயலாளர் சிவசுப்பிரமணியம், பந்தலூர் செஞ்சிலுவை சங்க பொறுப்பாளர் ஸ்டிபன்சன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நெலக்கோட்டை வட்டார மருத்துவ அலுவலர் கதிரவன் முகாமினை துவக்கி வைத்தார்.
முகாமில் 23 பேர் இரத்த தானம் செய்தனர். முகாமில் சேகரிக்கப்பட்ட இரத்தங்கள் கூடலூர் அரசு இரத்த வங்கிக்கு எடுத்து செல்லப்பட்டது.
நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் மேரி சுஜி, சைலஜா, கார்த்திக் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கல்லூரி இளையோர் செஞ்சிலுவை சங்க திட்ட அலுவலர் செல்வகுமார் நன்றி கூறினார்.

https://www.facebook.com/cchepnilgiris/posts/1230166847130701

விவசாயிக்கு இழப்பீடு வழங்க காப்பீட்டு நிறுவனத்துக்கு உத்தரவு

*விவசாயிக்கு இழப்பீடு வழங்க காப்பீட்டு நிறுவனத்துக்கு உத்தரவு*

Published on : 11th February 2019 02:19 AM  |

விவசாயிக்கு வழங்க வேண்டிய பயிர்க் காப்பீட்டு இழப்பீடுத் தொகையை 4 வார காலத்துக்குள் வழங்க காப்பீட்டு நிறுவனத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 சென்னை உயர்நீதிமன்றத்தில் நாகப்பட்டினம் மாவட்டம், ஆண்டியப்பன்காடு கிராமத்தை சேர்ந்த பாண்டியன் தாக்கல் செய்த மனுவில் கூறியதாவது:

 வேதாரண்யம் தாலுகாவில் உள்ள பஞ்சநதிக்குளம் கிராமத்தில் எனக்கு விவசாய நிலம் உள்ளது.

கடந்த 2016-2017-ஆம் ஆண்டுகளில் போதுமான மழை பெய்யவில்லை. உரிய காலத்தில் காவிரி நீரும் வரவில்லை, இதனால் எங்கள் பகுதியில் கடுமையான வறட்சி நிலவியது. நெல் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டது.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 100 சதவீத பயிர் காப்பீட்டு மூலம் இழப்பீடு வழங்க அரசு உத்தரவிட்டது.

ஆனால், எனக்கு வெறும் 25 சதவீத இழப்பீடு தொகைதான் வழங்கப்பட்டது. 75 சதவீத இழப்பீடு வழங்கவில்லை.

 இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் செய்தேன். இந்தப் புகார் நாகப்பட்டினம் விவசாயத்துறை இணை இயக்குநருக்கு பரிந்துரைக்கப்பட்டது.

இணை இயக்குநர், இதுகுறித்து தகுந்த நடவடிக்கை எடுக்க நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் காப்பீட்டு நிறுவனத்துக்கு கடந்த ஆண்டு உத்தரவிட்டும், இதுவரை இழப்பீடு தொகை வழங்கப்படவில்லை என கோரியிருந்தார்.

 இந்த மனு நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் தரப்பில் வழக்குரைஞர் ஆர்.முருகபாரதி ஆஜராகி வாதிட்டார்.

 இதனையடுத்து, மனுதாரருக்கு வழங்க வேண்டிய 75 சதவீத காப்பீட்டு தொகையை காப்பீட்டு நிறுவனம் 4 வார காலத்துக்குள் வழங்கவேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

https://www.dinamani.com/tamilnadu/2019/feb/11/விவசாயிக்கு-இழப்பீடு-வழங்க-காப்பீட்டு-நிறுவனத்துக்கு-உத்தரவு-3093322.html

புகைப்படம் வீடியோ சரியில்லை 2 லட்சம் அபராதம்

*திருமண புகைப்படங்கள், வீடியோ சரியில்லை என வழக்கு; புகைப்பட நிறுவனத்துக்கு ரூ.2 லட்சம் அபராதம்: நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு*

Published :  10 Feb 2019

திருமண வரவேற்பு நிகழ்ச்சியின் போது புகைப்படங்கள், வீடியோவை சரியாக எடுக்கவில்லை என தொடரப்பட்ட வழக்கில் தனியார் புகைப்பட நிறுவனத்துக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக கோவை ராம்நகரைச் சேர்ந்த என்.அசோகன்,மாவட்ட நுகர்வோர் குறைதீர்மன் றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

எனது மகளின் திருமணம் கடந்த 2017 மார்ச் 2-ம் தேதி நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழியில் நடைபெற்றது.

திருமண வரவேற்பு நிகழ்ச்சி மார்ச் 3-ம் தேதி சீர்காழியிலும், 5-ம் தேதி கோவையிலும் நடைபெற்றது. திருமணம், வரவேற்பு நிகழ்ச்சியை புகைப்படம், வீடியோ எடுப்பதற்காக மட்டும் ரூ.1.31 லட்சம் செலவு செய்தேன்.

 இதற்காக, சென்னையைச் சேர்ந்த தனியார் புகைப்பட நிறுவனத்தில் முன்பதிவு செய்திருந்தேன். அவர்களும், சிறப்பாக புகைப்படங்களை எடுத்து தருவதாக தெரிவித்தனர்.

ஆனால், வாக்குறுதி அளித்தபடி கோவையில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சிக்கு கேன்டிட் புகைப்படக்கலைஞரை அவர்கள் அனுப்பவில்லை.

 ஃபோகஸ் விளக்குகளும் சரிவர இல்லை. சீர்காழியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மணமகளும், மணமகனும் மண்டபத்துக்குள் நுழையும்போது அங்கு புகைப்படக்கலைஞர் இல்லை.

பல முக்கிய விருந்தினர்களின் புகைப்படங்களையும் அவர்கள் எடுக்கவில்லை. திருமண புகைப்பட ஆல்பத்தில், நாங்கள் தேர்வு செய்த பல படங்கள் இடம்பெறவில்லை.

 சில படங்கள் இரண்டு முறை இடம்பெற்றிருந்தன. புகைப் படங்களும் தரமாக இல்லை.
நிகழ்ச்சி முடிந்த பிறகு, எடிட் செய்யபட்ட வீடியோவும் நிகழ்வு களின் வரிசைப்படி இல்லை. வீடியோவில் திருமண தேதி கூட தவறாக இருந்தது.

இதையடுத்து, சேவை குறைபாட்டை காரணம்காட்டி புகைப்பட நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பினேன். அதற்கு அவர்கள், உரிய பதில் அளிக்கவில்லை.

எனவே, புகைப்படம், வீடியோ எடுப்பதற்காக நான் செலுத்திய ரூ.1.31 லட்சத்தை திருப்பி அளிக்கவும்,சேவை குறைபாட்டுக்கு உரிய இழப்பீடு வழங்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கோரியிருந்தார்.

மனுவை விசாரித்த மாவட்ட நுகர்வோர் குறைதீர்மன்றத்தின் தலைவர் ஏ.பி.பாலசந்திரன், உறுப்பினர் ஆர்.டி.பிரபாகர் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:
புகைப்பட நிறுவனத்தின் சேவையில் குறைபாடு இருந்துள்ளது ஆதாரங்கள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, மனுதாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூ.2 லட்சத்தை 9 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும். அதோடு, வழக்குச் செலவாக ரூ.2,500 வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் உத்தரவிட்டனர்.

https://tamil.thehindu.com/tamilnadu/article26227317.ece

தமிழக பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்

2019-2020ம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. நிதி அமைச்சரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

தமிழக பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்;

விவசாயிகளுக்கு ரூ.10 ஆயிரம் கோடிக்கு பயிர்க்கடன் வழங்கப்படும்

தமிழகத்தில் தனிநபர் வருமானம் ரூ.1,42,267 ஆக உயர்வு

மக்கள் பங்களிப்புடன் ஏரிகளை புணரமைக்க ரூ.300 கோடி

தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8.1 சதவீதமாக இருக்கும் என மதிப்பீடு

புதுமை வளர்ச்சி திட்டங்களுக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு

* நடப்பாண்டில் வரி வருவாய் 14 சதவீதம் அதிகரிக்கும் என எதிரப்பார்ப்பு

* நடப்பாண்டில் வருவாய் பற்றாக்குறை ரூ.14,315 கோடி

* நகராட்சித்துறை, குடிநீர் வழங்கல் துறைக்கு ரூ.18,700 கோடி ஒதுக்கீடு

* 2018-19-ல் தமிழக அரசு வாங்கிய 44,066.82 கோடி

* தமிழக அரசின் கடன் ரூ.3 லட்சத்து 97 ஆயிரத்து 495 கோடியாக உயர்வு

* 2019-20-ல் தமிழக அரசு ரூ.43,000 கோடி கடன் வாங்க திட்டம்

* கடந்த ஆண்டை விட தமிழக அரசின் கடன் இந்த ஆண்டு 42 ஆயிரம் கோடி அதிகம்

* சென்னையில் ஆற்றோரம் வசிப்போருக்கு 38,000 வீடுகள் கட்ட திட்டம்

* உலக வங்கி உதவியுடன் 4,647 கோடி ரூபாயில் வீடுகள் கட்டப்படும்

* மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் கடன் ரூ.22,815 கோடி

அரசின் நிதி பற்றாக்குறை 3 சதவீதத்துக்குள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது

* ராமேஸ்வரத்தில் அப்துல்கலாம் பெயரில் அரசு கலை, அறிவியல் கல்லூரி கட்டப்படும்

* பள்ளி கல்வித்துறைக்கு ரூ.28,757 கோடி ஒதுக்கீடு

* கஜா புயல் நிவாரணமாக ரூ.2,361.41 கோடி வழங்கப்பட்டு்ளது

* ஜெர்மன் வங்கி உதவியுடன் 2,000 பேட்டரி பேருந்துகள் வாங்கி இயக்கப்படும்

* சென்னை, கோயம்புத்தூர், மதுரையில் முதல்கட்டமாக 500 பேருந்துகள்

* சென்னை மெட்ரோ ரயில் மாதவரம் - கோயம்ேபடு - சோழிங்கநல்லூர் திட்டத்திற்கு ஜப்பான் நிதியுதவி

* மதுரை மாவட்டம் திருமங்கலத்தை தலைமையாக கொண்டு புதிய வருவாய் கோட்டம்

* கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்ட புதிய மாவட்டம் விரைவில் உருவக்கப்படும்

* ரூ.2,000 கோடியில் சென்னையில் வாகன நிறுத்த மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படும்

அத்திக்கடவு - அவிநாசி திட்டத்துக்கு ரூ.1000 ஒதுக்கீடு

* ரூ.1,125 கோடியில் தேனி, சேலம், ஈரோட்டில் 250 மெகாவாட் மிதக்கும் சூரிய திட்டம்

* ரூ.2,350 கோடியில் 500 மெகாவாட் கடலாடி, மிக உய்ய சூரிய பூங்கா திட்டம்

* முதியோர் உதவித்தொகை, இலவச வேட்டி, வேலை உள்ளிட்ட சமூக பாதுகாப்பு திட்டங்களுக்கு ரூ.3,958 கோடி ஒதுக்கீடு

* ரூ.284 கோடி மதிப்பில் வெள்ளத்தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்

* ஸ்ரீபெரும்புதூர் ஒரத்தூரில் அடையாறு உபநதியில் நீர்த்தேக்கம் அமைக்கப்படும்

* குறிஞ்சிப்பாடி வட்டத்தில் பரவனாற்று படுகை மறு சீரமைக்கப்படும்

* சிதம்பரம் வட்டம் பேரம்பட்டு அருகே கொள்ளிடம் ஆற்றில் வெள்ளத்தடுப்பு நீரொழுங்கி கட்டப்படும்

* பிச்சாவரம் அருகே உப்பனாற்றின் குறுக்கே நீரொழுங்கி அமைக்கப்படும்

* நில ஆதாரங்களை முறையாக திறம்பட பயன்படுத்த மாநில நலப்பயன்பாட்டு கொள்கை வடிவமைக்கப்படும்

* ஒன்றரை லட்சம் குடும்பங்களுக்கு வீட்டு மனை பட்டா

* தேசிய ஊராக வாழ்வாதார திட்டத்துக்கு ரூ.349.4 கோடி ஒதுக்கீடு

வீட்டு வசதி, நகர்ப்புற மேம்பாட்டுத்துறைக்கு ரூ.6,265.5 கோடி ஒதுக்கீடு

* ஊரக குறுந்தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்க ரூ.172 கோடி ஒதுக்கீடு

* வறுமை ஒழிப்பு திட்டங்களுக்கு மொத்தம் ரூ.1,031.5 கோடி ஒதுக்கீடு

* 2019-20-ம் ஆண்டில் சாலை மேம்பாட்டு பணிகளுக்கு ரூ.1,142 கோடி ஒதுக்கீடு

தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் 7,896-ல் இருந்து 5,198 ஆக குறைப்பு

* 2019-20-ம் நிதியாண்டில் விவசாயிகளுக்கு 2,000 சூரிய பம்ப் செட்டுகள் வழகங்ப்படும்

* ரயில்வே மேம்பால பணிகளுக்கு வரும் ஆண்டில் ரூ.726.6 கோடி ஒதுக்கீடு

* 2019-20-ம் ஆண்டுகளுக்கு நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள்துறைக்கு ரூ.13,605 கோடி ஒதுக்கீடு

* பள்ளி கல்வித்துறைக்கு 2019-20-ம் ஆண்டில் ரூ.28,757.62 கோடி ஒதுக்கீடு

* தொடக்கநிலை வகுப்புகளில் நிகர மாணவர் சேர்க்கை விகிதம் 99.8 ஆக உயர்வு

* பள்ளி செல்லா குழந்தைகளின் எண்ணிக்கை 33,519 ஆக குறைந்துள்ளது

* இலவச பாடப்புத்தகங்கள், காலணிகள், புத்தகப் பைகள் வழங்க ரூ.1,657 கோடி ஒதுக்கீடு

* நபார்டு உதவியுடன் பள்ளிகளில் வகுப்பறைகள், ஆய்வகங்கள், கழிப்பறைகள் கட்ட ரூ.381 கோடி ஒதுக்கீடு

* ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்திற்க ரூ.2,791 கோடி ஒதுக்கீடு

* முதல் முதல்முறையாக பட்டதாரி மாணவ, மாணவியருக்கு கல்வி கட்டணம் வழங்க ரூ.460 கோடி ஒதுக்கீடு

* மத்திய அரசின் திட்டங்களில் நிதி ஒதுக்கீட்டை மத்திய அரசு குறைத்துவிட்டது

* நிதி ஒதுக்கீட்டை மத்திய அரசு குறைத்ததால் மாநில அரசுக்கு நிதிச்சுமை அதிகரிப்பு

* சீருடை பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 9,975 பேர் பணியமர்த்தப்படுவர்

* வேளாண்துறைக்கு ரூ.10,550 கோடி நிதி ஒதுக்கப்படும்

* பயிர்க்கடன் மீதான வட்டி தள்ளுபடிக்காக ரூ.200 கோடி ஒதுக்கீடு

* கால்நடை பராமரிப்பு துறைக்கு ரூ.1,252 கோடி ஒதுக்கீடு

* பால் வளத்துறைக்கு ரூ.258 கோடி ஒதுக்கீடு

* மீனவளத்துறைக்கு ரூ.928 கோடி ஒதுக்கீடு

* உணவு மானியத்துக்கு ரூ.6,000 கோடி ஒதுக்கீடு

* ஊரக வளர்ச்சி துறைக்கு ரூ.18,273 கோடி ஒதுக்கீடு

* 20,000 பசுமை வீடுகள் கட்டுவதற்கு ரூ.420 கோடி ஒதுக்கீடு

* கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி, கே.பரமத்தியில் 282 குடியிருப்புகளுக்கு குடிநீர் திட்டம்

* பாசன மேலாண்மை நவீனமயமாக்கல் திட்டத்துக்கு ரூ.235 கோடி ஒதுக்கீடு

* நீர் ஆதார அமைப்புகளின் கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களுக்கு ரூ.811.6 கோடி ஒதுக்கீடு

* 2019-20-ம் ஆண்டு பட்ஜெட்டில் பாசனத்துறைக்கு ரூ.5,984 கோடி ஒதுக்கீடு

* கிராமங்களில் உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்த ரூ.1,200 கோடி ஒதுக்கீடு

* 2019-20-ம் ஆண்டில் 1.97 லட்சம் வீடுகள் கட்ட பட்ஜெட்டில் ரூ.266.16 கோடி ஒதுக்கீடு

* 1986 கி.மீ. பஞ்சாயத்து சாலைகள் ரூ.1,142 கோடியில் மேம்படுத்தப்படும்

* அண்ணா பல்கலை கழகத்தின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.100 கோடி

* வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு விரைவில் புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் அறிமுகப்படுத்தப்படும்

* தூய்மை இந்தியா திட்டத்திற்காக ரூ 400 கோடி ஒதுக்கீடு

* மத்திய , மாநில அரசு பங்களிப்புடன் கஜா புயலால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு மாற்று வீடு கட்டித்தரப்படும்.

* காவிரி பாசன பகுதிகளில் பருவ நிலை மாற்ற தழுவல் திட்டத்தை ஆசிய வளர்ச்சி வங்கியின் கடன் உதவியுடன் 1560 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அரசு செயல்படுத்தி வருகிறது

* கிராமப்புற ஏழை மக்களுக்கு கான்கிரீட் வீடுகளை கட்ட 2276.14 கோடி மாநில அரசின் பங்காக ஒதுக்கீடு

* சென்னை தவிர்த்து இதர நகரங்களில் வீட்டு வசதியை உருவாக்க 5000 கோடி மதிப்பில் ஆசிய வங்கிக் கடன் கோரப்பட்டுள்ளது
* ஆழ்கடல் மீனவர்களின் தொலைத் தொடர்பு வசதிக்காக 18 உயர்மட்ட மின்கோபுரங்கள் அமைக்கப்படும்

* 80 ஆழ்கடல் மீன்பிடி குழுக்களுக்கு நவீன தொடர்பு கருவிகள் வழங்கப்படும்

* ஏழை மக்கள் எளிதில் வாங்கும் வகையில் விரைவில் குடியிருப்பு கொள்கை அறிவிக்கப்படும்

* மாநில நில பயன்பாட்டு கொள்கை விரைவில் உருவாக்கப்படும்

* முதல்கட்டமாக கோவை, மதுரை, மண்டலங்களில் அமல்படுத்தப்படும்

* அண்ணாமலை பல்கலை கழகத்துக்கு ரூ.250 கோடி நல்கை தொகை வழங்கப்படும்

* உள்கட்டமைப்பை மேம்படுத்த அண்ணா பல்கலைக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு

* மருத்து காப்பீட்டு திட்டத்துக்கு ரூ.1,363 கோடி ஒதுக்கீடு

* தமிழ்நாட்டில் மொத்த கருவுறு விகிதம் 1.6 ஆக குறைந்துள்ளது

* முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்துக்கு ரூ.959 கோடி ஒதுக்கீடு
* அனைவருக்கு கல்வித்திட்டம் இடைநிலை கல்வி இயக்கத்துக்கு மத்திய அரசு நிதி தரவில்லை

* மத்திய அரசு ரூ.3,201 கோடி வழங்கவில்லை என்று பட்ஜெட்டில் ஓ.பி.எஸ். புகார்

* பல்கலை கழகங்களுக்கு தொகுப்பு நல்கை தொகை வழங்க ரூ.538 கோடி ஒதுக்கீடு

* தமிழக சுகாதாரத்துறைக்கு ரூ.12,563 கோடி ஒதுக்கீடு

* மக்கள் நல்வாழ்வு, குடும்ப நலத்துறைக்கு ரூ.12,564 கோடி ஒதுக்கீடு

* மாணவ, மாணவிகள் பயண கட்டண சலுகைக்காக ரூ.766 கோடி ஒதுக்கீடு

* போக்குவரத்துறைக்கு ரூ.1,298 கோடி ஒதுக்கீடு

* 2023-க்குள் சூரிய சக்தி மூலம் 9,000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க இலக்கு நிர்ணயம்

* விவசாயிகள் மற்றும் இதர மின் நுகர்வோருக்கு மின்மானியம் வழங்க ரூ.8,118 கோடி ஒதுக்கீடு

* தமிழ்நாடு சுகாதாரத்துறை சீரமைப்பு என்ற புதிய திட்டத்திற்கு ரூ.2,686 கோடி ஒதுக்கீடு

* தமிழக இளைஞர்களின் வேலை வாய்ப்பு திறனுக்காக 200 கோடியில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது

* ஆண்டுதோறும் 10 ஆயிரம் வேலையில்லா பட்டதாரிகள் உயர்நிலை சிறப்பு தகுதி தேர்வின் மூலம் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்

* எரிசக்தி துறைக்கு ஒட்டுமொத்தமாக 18,560.77 கோடி ஒதுக்கீடு
* 2500 மெகாவாட் அளவிற்கு புதிய புனல் மின் திட்டங்கள்

* மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 1264 கோடி ரூபாய் செலவில் உருவாக்க பிரதமர் அடிக்கல் நாட்டியுள்ளார்

* மதுரை, தஞ்சை, நெல்லை ஆகிய மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளில் 150 கோடி செலவில் விபத்து காய சிகிச்சை பிரிவு உருவாக்கம்

* மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ் 2018 ஆம் ஆண்டில் 111.24 கோடி நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது.2020 ஆம் ஆண்டுக்கு 959.21 கோடி ஒதுக்கீடு

* மானிய விலை இருசக்கர வாகனத் திட்டத்திற்கு ரூ.250 கோடி நிதி ஒதுக்கீடு

* தமிழ் மொழி வளர்ச்சிக்கு ரூ.54.76 கோடி ஒதுக்கீடு 

* கைத்தறி உதவி திட்டத்திற்கு ரூ.40 கோடி ஒதுக்கீடு

* பல்வேறு திருமண நிதியுதவி திட்டங்களுக்காக 726.32கோடி ஒதுக்கீடு

* நெசவாளர் கூட்டுறவு சங்க மானியங்களுக்காக 150 கோடி ஒதுக்கீடு
* கைத்தறி மற்றும் துணி நூல் துறைக்கு 1170.56 கோடி ஒதுக்கீடு

* அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நல வாரியம் அமைக்க 148.83 கோடி ஒதுக்கீடு

* சுற்றுலா திட்டங்களை மேம்படுத்த ரூ 100 கோடி ஒதுக்கீடு

* ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பகுதிகளில் ரூ 43.39 கோடியில் திருக்கோயில் திருப்பணிகள்

நாடுகானி பகுதியில் தடுப்பனை உடைந்து

பெறுனர்
                                            
உயர்திரு.  மாவட்ட ஆட்சியர் அவர்கள்
நீலகிரி மாவட்டம்.

பொருள் :    நாடுகானி பகுதியில் தடுப்பனை உடைந்து சேதமானது 
நீர் வீனாவை தடுக்க கேட்டல் சார்பாக.

அம்மையீர், வணக்கம்,

            கூடலூர் அருகே நாடுகானி பகுதியில் இருந்து கூடலூர் வரும் வழியில் வனப்பகுதியை ஒட்டி சாலையோரத்தில் நீரை சேமிக்கும் விதமாக தடுப்பனை கட்டப்பட்டது.  இந்த தடுப்பனையில்  தேங்கும் நீரினை வன உயிரிணங்கள் பயன்படுத்தி வந்தன.  மக்களும் பல்வேறு தேவைகளுக்கு பயன்படுத்தி வந்தனர்.

இந்த தடுப்பனையில் தேங்கும் நீரின் காட்டுயானைகள் பருகுவதால் சாலையை தாண்டி யானைகள் வர வேண்டிய நிலை தடுக்கப்பட்டது..  மேலும் வன உயிரனங்களும் சாலையை கடக்க வேண்டிய நிலை தடுக்கப்பட்டது. 

தற்போது இந்த தடுப்பனை மண் நிறைந்து காணப்படுகின்றது.  தடுப்பனையில் அடிப்பகுதியில் அணையில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.  இதனால் தண்ணீர் தேங்காமல் வடிந்து விடுகின்றது.  இதனால் வன விலங்குகள் பெரும்பாலும் தண்ணீர் தேவைக்கு சாலையை கடந்த அருகில் ஓடும் ஓடையை நோக்கி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

காட்டு யானைகளும் சாலையை கடந்தே தண்ணீர் தேவைக்கு செல்ல வேண்டிய நிலை இருப்பதால் சாலையில் செல்லும் வாகணங்களை காட்டுயானைகள் துரத்தும் அபாயம் உள்ளது.  மேலும் சாலைக்கு அடுத்தபகுதியில் டேன்டீ குடியிருப்புகளும் உள்ளது.

யானைகள் சாலையை கடந்த குடியிருப்பை நோக்கி செல்லும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.  இதனால் மனித விலங்கு மோதல்களும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.  அதுபோல் அருகில் உள்ள வனப்பகுதிக்கும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு வறட்சி ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே இந்த தடுப்பணையை தூர் வாரி.  மீண்டும் தடுப்பனையை தண்ணீர் வடியாமல் இருக்கும் வைகயில் தடுப்பனையின் உட்பகுதியில் கூடுதல் வார்ப்பு மூலம் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றோம்.
                                                                                                                                                     இப்படிக்கு
                                                                                              


சு. சிவசுப்பிரமணியம்
                                                                                                 பொது செயலாளர்.  CCHEP. Nilgiris


ஹேர் டை ஆபத்து" அறிவோம்.


ஹேர் டை ஆபத்து" அறிவோம்.

நமது உடலில் சுரக்கும் ‘மெலனின்’ என்ற நிறமிதான் முடியின் கருமை நிறத்துக்குக் காரணம். 

40 வயதுக்கு மேல், இந்த நிறமிகளை ‘டிரையோஸின்’ என்ற என்ஸைம் தடை செய்கிறது. 

இதனால் முடி நரைக்கிறது. சிலருக்கு இளமையிலேயே நரைப்பதற்குக் காரணம், தவறான உணவுப்பழக்கமும் மன அழுத்தமும் மற்றொரு காரணமாக உள்ளது.

இளநரை:

இளநரை ஒருசில குடும்பத்தில் தொடர்ச்சியாக பாதிக்கும். அதாவது பாட்டி, அம்மா, பேத்தி எல்லாருக்குமே சின்ன வயதிலேயே நரை வந்ததாகச் சொல்வார்கள்.
இது அவர்களுடைய மரபணுக்களில் உள்ள ஒரு சின்ன குறைபாடு. 

அவர்களுடைய மெலனோசைட்கள் 30 முதல் 40 வயது வரை சுறுசுறுப்பாக வேலை செய்யாமல் 20 வயதிலேயே சோர்ந்து வேலை செய்வதை நிறுத்தி விடுவதால் இளநரை உண்டாகிறது.

சுற்றுச்சூழல் மாசுக்களால் தலையில் படியும் தூசி, தலையில் எண்ணெயே வைக்காததால் ஏற்படும் வறட்சி போன்றவையும் இளநரைக்கு காரணம். 

இதனை மறைப்பதற்காக, நாம் பயன்படுத்தும் தலைமுடி சாயத்தில் சில்வர், மெர்குரி, லெட் போன்றவை உள்ளது. தொடர்ந்து ரசாயனம் கலந்த தரமற்ற தலைமுடி சாயத்தை பயன்படுத்தும்போது கூந்தல் வறண்டு போய், முடி உடைதல், உதிர்தல், பொடுகு, இளநரை ஏற்படும். 

வழுக்கை விழவும் வாய்ப்புகள் அதிகம்.ஒரு சிலருக்கு ரத்த சோகையினால் கூட ஏற்படலாம். இரும்புச்சத்து குறைபாடு, செம்புச்சத்து குறைபாடு(Copper), புரதச்சத்து குறைபாடுகளும் முடியை வெள்ளையாக்கலாம். 

இவ்வாறு சத்து குறைபாட்டினால் வரும் வெள்ளை முடியானது, அந்த சத்துகளை நாம் கொடுக்கும்போது கருப்பாக மாறும். சில வகை மாத்திரைகளை உட்கொள்வதும் முடியை வெள்ளையாக்கலாம்.
 (எ.கா: Chloroquine, Phenylthiourea, Triparanol போன்ற மருந்து வகைகள்.) புகைப்பிடிப்பதாலும் சிலருக்கு இளநரை ஏற்பட காரணமாக இருக்கலாம்.

இப்போதைய இளைஞர்கள், மாணவர்கள், ஹைலைட்ஸ், ப்ரவுன், என முடியில் வெரைட்டி காட்டத் துவங்கி விட்டார்கள். உடையில் இருக்கும் வண்ணம் முடியிலும் வர வேண்டும் என உடை நிற ஷேடுகளை பயன்படுத்துகிறார்கள்.

 ஹேர் டை என்பது கருப்பு நிறம் மட்டும்தான். இளநரை மற்றும் நாற்பது வயதுக்கு மேல் தோன்றும் வெள்ளை முடி பிரச்சனைகளுக்கு பெரும்பாலும் ஹேர் டை தான் பயன்படுத்துவார்கள். 

டையில் அமோனியம் மற்றும் பெராக்சைடு கலக்கப்பட்டிருக்கும். ஹெவி டைக்காக கொஞ்சம் PPD சேர்த்திருப்பார்கள்.Para phenylene diamine என்பதின் சுருக்கம்தான் PPD.

 டை உபயோகிப்பவர்களுக்கு பொதுவாக அலர்ஜி ஏற்படுத்தும் காரணியாக இருப்பது இதுதான். 

பொதுவாக பாதுகாப்பு கருதி PPD-யின் அளவு டையில் 2% க்கு குறைவாகத்தான் இருக்க வேண்டும் என்ற விதி உள்ளது. 

ஆனால், நடைமுறையில் இது எந்தளவுக்கு எல்லா நிறுவனத்தின் தயாரிப்புகளிலும் பின்பற்றுகிறார்கள் என்பது சந்தேகமே. 

முடியின் இயற்கை வண்ணத்தை மாற்ற பயன்படும் இந்த ரசாயனக் கலவைகளை அடிக்கடி நாம் பயன்படுத்துவது நம்மை ஆபத்தில் கொண்டு நிறுத்தும்.

.''டை பயன்படுத்துவதால்... அலர்ஜியில் ஆரம்பித்து, ஹார்மோன் சமச்சீரின்மை, புற்றுநோய் வரை ஆபத்து நேரலாம்''

டைகளில் இருக்கும் பினலின்டயமின், அமோனியா, ஹைட்ரஜன் பெராக்ஸைடு போன்ற பல ரசாயனப் பொருட் கள்... நம் ஹார்மோன்களைச் சரியாக செயல் படவிடாமல் தடுக்கின்றன. 

இதன் காரணமாக வளர்சிதை மாற்றம் பாதிக்கப்பட்டு, ஒவ்வொரு வரின் உடல்நிலையைப் பொறுத்து ஒவ்வொரு விதமான பாதிப்பு ஏற்படும்.

 அலர்ஜி, உடம்பின் எதிர்ப்பு சக்தி குறைவது, கேன்சர், சிறுநீர்ப்பை கேன்சர் என்று பல பாதிப்புகளும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. மீசைக்கு டை அடிப்பதும் அதிகமாகவே இருக்கிறது. 

அப்படி அடிக்கும்போது சுவாசத்தின் வழியாக உள்ளே சென்று நுரையீரலை பாதிக்கக்கூடும் என்று சிலர் நினைக்கலாம். ஆனால், அதற்கு வாய்ப்பில்லை. 

அதேசமயம், மீசைக்கு கீழே இருக்கும் தோல் வழியாகவும் அது உடலில் ஊடுருவும் என்பதை மறக்கவேண்டாம்''

இயற்கை டை!

அவுரி இலை - 50 கிராம், 
மருதாணி இலை - 50 கிராம், 
வெள்ளை கரிசலாங்கண்ணி - 50 கிராம்,
கறிவேப்பிலை - 50 கிராம்,
பெருநெல்லி (கொட்டை நீக்கியது) - 10 எண்ணிக்கை... 

இவை அனைத்தையும் நன்றாக அரைத்துக் கொள்ளவும். 
ஒரு மடல் சோற்றுக் கற்றாழையை மிக்ஸியில் அரைத்து (சிறுசிறு துண்டுகளாகவும் வெட்டி சேர்க்கலாம்). அரைத்து வைத்திருக்கும் அவுரி கலவையுடன் சேர்த்து, 
ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெயுடன் கலந்து மிதமான தீயில் காய்ச்ச வேண்டும். 

கொதி நிலைக்கு வரும்போது இறக்கி வடிகட்ட வேண்டும். 
இதை பத்திரப் படுத்தி வைத்து, தினசரி தலைக்கு எண்ணெய் பூசுவது போல பயன்படுத்தலாம். 
நாளடைவில் முடியின் நிறம் மாறுவதோடு புதிதாகவும் முடி வளரும்.

சு. சிவசுப்பிரமணியம்
பொது செயலாளர்
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம்.

கல்வி உரிமை சட்டத்தின் கீழ், பிளஸ் 2 வகுப்பு வரை

புதுடில்லி: கல்வி உரிமை சட்டத்தின் கீழ், 8ம் வகுப்பு வரை வழங்கப்பட்டு வரும், கட்டாய இலவச கல்வியை, பிளஸ் 2 வகுப்பு வரை நீட்டிக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

பள்ளி படிப்பை, ஏழை மாணவ - மாணவியர், பாதியிலேயே நிறுத்துவதை தடுக்க, இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக, மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.நாட்டில், கல்வி உரிமை சட்டம், ௨௦௧௦ம் ஆண்டில் அமல்படுத்தப்பட்டது. இந்த சட்டத்தின் படி, 9 முதல், 14 வயதுக்குட்பட்டோருக்கு, 8ம் வகுப்பு வரை, இலவச கல்வி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்காக, சுயநிதி தனியார் பள்ளிகளில், 25 சதவீத இடங்கள், ஏழை மாணவ - மாணவியருக்கு ஒதுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.குழந்தை தொழிலாளர் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், பொருளாதார வசதி இல்லாததால் கல்வி கற்க முடியாமல் போவதை தடுக்கவும், கல்வி உரிமை சட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஆனால், இந்த சட்டம், எதிர்பார்த்த பலனை தரவில்லை.குறையவில்லை.

பள்ளிகளில், 8ம் வகுப்புக்கு பின், படிப்பை கைவிடும், மாணவ - மாணவியர் எண்ணிக்கை
குறையவில்லை. உத்தர பிரதேச மாநிலத்தில்
மட்டும், 2014 - 15ல், 8.66 லட்சம் மாணவ - மாணவியர், பள்ளி படிப்பை பாதியில் அரசுக்கு கோரிக்கைகைவிட்டது, ஆய்வில் தெரிய வந்துள்ளது.இந்த நிலை பல மாநிலங்களில் தொடர்கிறது. எனவே, 'கல்வி உரிமை சட்டத்தின் கீழ், பிளஸ் 2 வரை, இலவச கல்வியை கட்டாயமாக்க வேண்டும்' என, பல மாநில அரசுகள், மத்தியவிடுத்துள்ளன.
இது பற்றி, டில்லி உயர் நீதிமன்ற வழக்கறிஞரும், அகில இந்திய பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவருமான, அசோக் அகர்வால் கூறியதாவது:கல்வி உரிமை சட்டப்படி, அரசு உதவி பெறாத, தனியார் பள்ளிகள், ஏழை மாணவ - மாணவியருக்காக, ௨௫ சதவீத இடம் ஒதுக்க வேண்டும்; அவர்களிடம், கட்டணம் வசூலிக்க கூடாது. இலவச கல்வி இல்லாததால், 8ம் வகுப்புக்கு பின், தனியார் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவ - மாணவியர், அரசு பள்ளிக்கு மாற வேண்டிய நிலை உள்ளது.அப்போது, பல பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. பலர், 8ம் வகுப்புடன் படிப்பை நிறுத்தி விடுகின்றனர்.எனவே, 'கல்வி உரிமை சட்டத்தின் கீழ் கட்டாய இலவச கல்வியை, பிளஸ் 2 வரை நீட்டிக்க வேண்டும்' என, ௨௦௧௭ல் இருந்தே, பெற்றோர் - ஆசிரியர் சங்கம் கோரி வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.இந்நிலையில், கல்வி உரிமை சட்டத்தின் கீழ், கட்டாய இலவச கல்வியை, பிளஸ் 2 வரை நீட்டிக்க பரிசீலிக்கப்பட்டு வருவதாக, மத்திய மனிதவளமேம்பாட்டுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பரிசீலனை :


அமைச்சகத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:பல்வேறு மாநிலங்கள், பெற்றோர் - ஆசிரியர் சங்கங்கள், சமூக நல அமைப்புகளின் கோரிக்கைகளை ஏற்று, பிளஸ் 2 வரை, கட்டாய இலவச கல்வியை நீட்டிக்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது. விரைவில், இது
தொடர்பாக முடிவு எடுக்கப்படும்.பள்ளி படிப்பை, ஏழை மாணவ - மாணவியர், பாதியில் நிறுத்துவதை தடுக்கும் நோக்கில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


எதிர்காலம் இல்லை :


'ஏழை மாணவ - மாணவியருக்கு, 8ம் வகுப்பு வரை மட்டும் இலவச கல்வி அளிப்பதால் பயன் இல்லை' என, பிரபல கல்வியாளரும், டில்லி, 'ஜாமியா மிலியா இஸ்லாமியா' பல்கலை பேராசிரியருமான, ஜானகி ராஜன் கூறினார்.இது பற்றி அவர் கூறியதாவது:ஏழை மாணவ - மாணவியருக்கு, 8ம் வகுப்புக்கு பின், கட்டணம் செலுத்தி படிப்பது, மிகவும் கஷ்டம். இதனால் பலர், 8ம் வகுப்புடன் கல்வியை நிறுத்தி விடுகின்றனர். 8ம் வகுப்பு வரை படித்தவர்களுக்கு, வேலை கிடைப்பது சிரமம். சாதாரண வேலைக்கு கூட, ௧௦ம் வகுப்பு வரையாவது படித்திருக்க வேண்டும்.எனவே, கட்டாய இலவச கல்வியை, பிளஸ் 2 வரை நீட்டிக்க வேண்டும். பிளஸ் 2 வரை படித்தவர்களுக்கு, மேற்படிப்பு பற்றி சிறந்த புரிதல் இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்

பொது நல வழக்கு போடுவது எப்படி ?*

*வழக்கறிஞர் இல்லாமல், நீங்களே வழக்கு தாக்கல் செய்வது எப்படி?*

*பொது நல வழக்கு போடுவது எப்படி ?*

பொதுவாக இரண்டு இடங்களில் பொது நல வழக்கு போடலாம். ஒன்று, கீழ் நீதிமன்றம். இது, மாவட்ட நீதிமன்றம் ஆகும். இரண்டு, உயர்நீதிமன்றம். இப்போது, கீழ் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு
போடுவது எப்படி என்று பார்க்கலாம்.

பொதுவாக சார்பு நீதிமன்றத்திலேயே, பொது நல வழக்கு தாக்கல் செய்யப்படுகிறது. பத்து நபர்கள் இணைந்து வழக்கு போடுவது நல்லது. இதற்கு முதலில், லீவ் மனு போட வேண்டும். இது, வழக்குடன் இணைந்தது. முதலில் சிவில் வழக்கு போட, பிராது தயாரிக்க வேண்டும். முதலில், நீதிமன்றத்தின் பெயர், அதன் கீழ், ஊர், அதன் கீழ், முதலேற்பு வழக்கு எண் என போட்டு, இடம் விட்டு, எந்த வருடம் தாக்கல் செய்கிறோமோ, அந்த வருடத்தை போட வேண்டும். அதன் பின்பு, பத்து பேர் வழக்கு போடுவதாக இருந்தால் அவர்கள் பெயரை, ஒன்றன் கீழ் ஒன்றாக எழுதுங்கள். அதற்கு நேராக, வாதிகள் என்று காண்பியுங்கள். அதன் பின்பு, எதிரிடை என்று போட்டு, எதிர் பார்ட்டி நபர்கள் பெயரை ஒன்றன் கீழ் ஒன்றாக எழுதுங்கள். அதற்கு நேராக, பிரதிவாதிகள் என்று காண்பியுங்கள். இதன் பெயர், short cause title எனப்படும்.சிவில் வழக்கில், பிராதை, ஆர்டர் 7, விதி 1 இன் கீழேயே தாக்கல் செய்ய முடியும். ஆகையால், இப்போது, வாதி தரப்பில் சமர்ப்பிக்கும், பிராது, ஆர்டர் 7, விதி 1 என்று, நடு மையத்தில் எழுதுங்கள். அதன் பின்பு, வாதிகளின் விலாசம் என்று, தலைப்பிட்டு, வாதி வசிக்கும் மாவட்டம், ஊர், தெரு, கதவு இலக்கம், மற்றும், ஹிந்து என்றால், ஹிந்து என்றும், அப்பா பெயர், வயது, அதன் பின்பு, வாதியின் பெயர் என எழுதுங்கள். பல பேர் இருந்தால், வரிசையாக ஒன்று, இரண்டு என எழுதுங்கள். அதன் பின்பு, வாதிக்கு summon, நோட்டீஸ் அனுப்ப மேலே சொன்ன முகவரி போதுமானது என்று எழுதுங்கள். அதன் பின்பு, பிரதிவாதிகளின் விலாசம் என்று தலைப்பிட்டு, மேலே சொன்னது போல, வாதிகளின் முகவரி போலவே, எழுதி கொள்ளுங்கள். அதன் கீழ், பிரதிவாதிகளுக்கு summon, நோட்டீஸ் அனுப்ப மேலே சொன்ன முகவரி போதுமானது என்று குறிப்பிடுங்கள். இதன் பெயர் லாங் cause டைட்டில் ஆகும். இப்போது, அடுத்த பாராவாக, நீதிமன்ற jurisdiction குறிக்க வேண்டும். நீங்கள் வழக்கு போடும் ஊர், தாவா நீதிமன்ற எல்லைக்குட்பட்டதால், இந்த வழக்கு இங்கு தாக்கல் செய்யபடுகிறது என்று எழுதுங்கள். ஒவ்வொன்றும் ஒரு பாரா ஆகும். இப்போது மூன்று பாரா முடிந்திர்க்கும். . வழக்கு போடுபவர், வாதி என்று நினைவில் வைத்து கொள்ளுங்கள். வழக்கின் எதிராளி, பிரதிவாதி ஆவார். யார் மேல் பரிகாரம் கோருகிறீர்களோ, அவர்கள் அனைவரையும் பிரதிவாதியாக சேர்க்க வேண்டும். அடுத்த பாரா, வழக்கு விவரங்களை ஆரம்பியுங்கள். வாதியானவர், இந்த கிராமத்தில் வசித்து வருகிறார். இப்படி, வழக்கின் சாராம்சத்தை, சுருக்கமாக, பல பாராக்களாக பிரித்து எழுதுங்கள். உதாரணமாக, பொது பாதை, இவ்வளவு நாளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இப்போது, இன்ன நபர், அதை ஆக்கிரமித்துள்ளார். இதனை தெரிவித்து, எதிர் மனுதாருக்கு, இந்த தேதியில் வாதியால் மனு, பதிவு தபாலில் அனுப்ப பட்டது. அதை பெற்று கொண்டு, இன்று வரை, பிரதிவாதிகள் நடவடிக்கை ஏதும் எடுக்காமல், காலம் கடத்தி வருகின்றனர். இவ்வாறாக, உங்கள் கரு பொருளை மையபடுத்தி, பிராது விவரங்களை சொல்லுங்கள். நீங்கள் அனுப்பிய மனுவின் நகலை தாக்கல் செய்தால், ஒன்றாம் பிரதிவாதிக்கு அனுப்பிய மனு, தபால் ரசீது ஆகியவை வாதி தரப்பு ஒன்றாவது சான்றாவணம் ஆகும் என்று குறிப்பிடுங்கள். சட்ட பாயிண்ட் களையும், குறிப்பிடுங்கள். அதன் பின்பு, அடுத்த பாராவாக, உங்கள் வழக்கின் வியாச்சிய மூலத்தை எழுதுங்கள். அதாவது, எந்த தேதியில் ஆக்கிரமிப்புதாரர் ஆக்கிரமித்தார், எப்போது பிரதிவாதிகளுக்கு மனு செய்யப்பட்டது, இன்று வரை பிரதிவாதிகள் வீண் காலம் கடத்தி வருகிறார்கள், மற்றும், வாதி இருக்கும் ஊர், பிரதிவாதி இருக்கும் ஊர், வழக்கு சொத்து இருக்கும் ஊர் ஆகியவற்றை சொல்லி, இதில் உற்பத்தி என்று காண்பியுங்கள். இது தனி பாரா. அடுத்து, வாதி, நீதிமன்ற கட்டணமாக TAMILNADU COURT FEES AND SUITS VALUATION ACT பிரிவு, இன் படி, இவ்வளவு பணம் செலுத்துகிறார் என்று எழுதுங்கள். அதன் பின்பு, prayer. இதில், நீங்கள் என்ன பரிகாரம் கூறுகிறீர்கள், யார் மீது கூறுகிறீர்கள் என்று சொல்லுங்கள். உதாரணமாக, ஒன்றாம் பிரதிவாதி, பொது இடத்தை ஆக்கிரமித்திருந்தால், ஒன்றாம் பிரதிவாதியை, இரண்டு, மூன்று பிரதிவாதிகள் தாவா பொது இடத்தில் இருந்து அகற்ற, உத்தரவிடும் படிக்கும். அதன் பின்பு, வாதிக்கு, பிரதிவாதிகள் வழக்கிடை செலவை தரும்படிக்கும், மற்றும், நீதிமன்றம் கருதும் இன்ன பிற பரிகாரங்களை வழங்கும்படிக்கும், பிரார்திக்கபடுகிறது என்று முடியுங்கள். இதில், அரசு அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடுப்பதால், பிரிவு என்பது, சிவில் procedure code படி, வழக்கு தொடுப்பதற்கு தொண்ணூறு நாட்களுக்கு முன் அறிக்கை அனுப்ப வேண்டும். அவசரமாக, இந்த வழக்கை தாக்கல் செய்தால், exemption மனு, பிரிவு, 80(2), civil procedure code படி, தாக்கல் செய்ய வேண்டும். அந்த மனு, இந்த பிராதுடன் தாக்கல் செய்திருப்பதாக, பிராதில், சொல்லுங்கள். இப்போது, இடது பக்கம் வழக்கறிஞர் கையொப்பமும், வலது பக்கம் வாதிகள் கையொப்பமும் போட வேண்டும். அதன் பின்பு, பிராதை எப்படி மதிப்பிடுகிறீர்கள் என்று, particulars ஒப் valuation என்று தலைப்பிட்டு, சொத்து மார்க்கெட் மதிப்பு காட்டுங்கள். அதன் பின்பு,TAMILNADU COURT FEES AND SUITS VALUATION ACT பிரிவு, இன் படி, இவ்வளவு பணம் செலுத்துகிறார் என்று எழுதுங்கள். அதன் பின்பு, சரி பார்த்தல் என்று தலைப்பிட்டு, மேலே கண்ட சங்கதிகள் எல்லாம் என் அறிவிற்கு எட்டிய வரை உண்மை என சொல்லி, மதுரையில் வைத்து, தேதியில் கை எழுத்திட்டேன் என சொல்லுங்கள். அதன் பின்பு, சொத்து விவரம் எழுதுங்கள். கிரைய பத்திரத்தில் சொத்து விவரம் கொடுத்திருப்பார்களே, அந்த மாதிரி. அதன் பின்பு, மீண்டும், சரி பார்த்தல் என்று மேலே சொன்னவாறு, எழுதுங்கள். அதன் பின்பு, மேலே சொன்ன short cause title எழுதி, வாதி தரப்பில் சமர்ப்பிக்கும் ஆவணங்கள், ஆர்டர் ஏழு, விதி பதினான்கின் படி என்று தலைப்பிட்டு, நான்கு column கட்டமிட்டு கொள்ளுங்கள் முதல் column இல், வரிசை என், அடுத்த column இல் ஆவன தேதி, அடுத்த column இல் ஆவன விவரம், அடுத்த column இல் ஆவன தன்மை, அது நகலா அல்லது அசலா என்று காண்பியுங்கள். இப்போது, உங்கள் கைவசம் உள்ளல ஆவனங்களை, வரிசையாக ஒன்றன் கீழ் ஒன்றாக எழுதுங்கள். அதன் கீழ், இடது பக்கம், ஊர், தேதியும், வலது பக்கம், வழக்கறிஞர் என்று காண்பியுங்கள். வழக்கறிஞர் இல்லாவிட்டால், வாதிகள் என்று காண்பித்து கொள்ளுங்கள். அசல் ஆவநங்கள் அனைத்தையும் தாக்கல் செய்யுங்கள். அது முடியாவிட்டால், சான்றிட்ட நகல் தாக்கல் செய்யலாம். அதுவும் இல்லாவிட்டால், நகலை தாக்கல் செய்யலாம். ஆனால், விசாரணை வரும்போது, அசல் அல்லது சான்றிட்ட நகலைத்தான் தாக்கல் செய்ய வேண்டும். அதை, பின்பு கொடுப்பதாக குறிப்பில் காண்பிக்கலாம். இந்த ஆவண பட்டியல் தனி தாளில் தயார் செய்து, பிராதுடன் இணைக்கலாம். இப்போது பிராது தயார். இதனுடன், நீங்கள் வழக்கறிஞர் வைத்தால், வக்காலத்து வைக்க வேண்டும். அதன் பின்பு, ஆவணங்களை, ஒரு தனி தாளில் டாக்கட் போட்டு, தைத்து, அசல ஆவணங்கள தவிர, மற்றவற்றிற்கு, ஐந்து ரூபாய் நீதிமன்ற வில்லை ஒட்டி கொடுங்கள். பிராதின், முதல் பக்கத்தில், valuation சீட் வைக்க வேண்டும். அதன் பின்பு, நீதிமன்ற ஸ்டாம்ப் பேப்பர், அதன் கீழ் பிராது வைத்து தைத்து கொள்ளுங்கள். உள்ளே, வக்காலத்து, ஆவணங்கள் ஆகியவற்றை வைக்க வேண்டும். சில நீதிமன்றத்தில், வாதி, பிரதிவாதி விலாசம் தனி தாளில் அடித்து வைக்க வேண்டி உள்ளது. முன்பே சொன்னது போல, short cause title எழுதி, STATEMENT U/O. VI, RULE 14-A என்று, தலைப்பிட்டு அதன் கீழ், வாதி, பிரதிவாதி விலாசங்கள் எழுத வேண்டும். அதன் பின்பு, supporting affidavit. இதுவும், short cause title எழுதி, SUPPORTING AFFIDAVIT FILED BY THE 1st PLAINTIFF ABOVENAMED U/O VI, R. 15(4) OF C.P.C. என்று தலைப்பிட்டு, அதன் கீழ், வாதியின் விலாசத்தை தலை கீழாக எழுதி, பிராதில் வாதியின் விலாசம் எழுதுவீர்களே, அது போல, ஆகிய நான், சத்திய பிரமாணத்தின் பேரில் எழுதி வைத்த அப்பிடவிட் என்று எழுதி கொள்ளுங்கள். அதன் பின்பு, நான் வழக்கின் வாதி ஆவேன். எனக்கு வழக்கு விவரங்கள் பூராவும் நன்கு தெரியும் என்று சொல்லி, அடுத்த பாராவில், சுருக்கமாக பிராதின் விவரத்தை சொல்லுங்கள். பல வாதிகள் இருந்தால், பிற வாதிகளுக்காக, இந்த அப்பிடவிட் தை தாக்கல் செய்வதாக கூறி கொள்ளுங்கள். இறுதியாக, தனி பாராவாக, ஆகவே, கணம் நீதிபதி அவர்கள் பிராதுபடி தீர்ப்பளிக்க வேண்டும் என்று முடியுங்கள். அதன் பின்பு, இடது பக்கம், மேலே சொன்ன சங்கதிகள் யாவும் உண்மை என சொல்லி, தேதியில், என் முன்பாக, ஊரில் வைத்து கை எழுத்திட்டார் என எழுதுங்கள். வலது பக்கம், வாதியின் கையொப்பம் இடுங்கள். அதன் நடுவில், ஒரு வழக்கறிஞரின் attestation வாங்கி கொள்ளுங்கள். இப்போது supporting அப்பிடவிட் ரெடி. பிராதின் ஒவ்வொரு பக்கத்திலும், supporting affidavit ஒவ்வொரு பக்கத்திலும், வாதி கையெழுத்து  வாங்க வேண்டும். அடுத்து, அரசு ஊழியர்கள் மேல் வழக்கு தொடுக்கும் முன், உரிய அறிவிப்பு அனுப்பாவிட்டால், அதற்கும் ஒரு அப்பிடவிட், மனு தாக்கல் செய்ய வேண்டும். வழக்கம் போல, short cause டைட்டில் எழுதுங்கள். இது தனி இடை நிலை மனு ஆகும். எனவே, லேசாக மாற்றி, நீதிமன்ற பெயர், ஊர் எழுதி, அதன் கீழ், இடைநிலை மனு எண் என எழுதி, இடம் விட்டு, பார் போட்டு, 2014 என வருடத்தை போட்டு கொள்ளுங்கள். இதில், வாதிகள் மனுதாரர்கள் ஆவார்கள். எனவே, வாதிகள் பெயரை எழுதி, மனுதார்கள் / வாதிகள் என்று காண்பித்து கொள்ளுங்கள். அதே போல, கீழே, எதிர்மனுதார்கள் / பிரதிவாதிகள் என்று, அரசு அலுவலர்களை மட்டும் சேர்க்க வேண்டும். உதாரணமாக, நீங்கள் பொது நல வழக்கு போடும்போது, முதல் பார்ட்டி ஆக, ஆக்கிரமிப்புதாரரை காண்பித்து இருந்தால், இரண்டாம் பார்ட்டி ஆக, அரசு அதிகாரிகளை காண்பித்து இருப்பீர்கள். இங்கு, அரசு அலுவலர்கள் மட்டும் வருவதால், அவர்களை, இம்மனுவில், எதிர்மனுதார்களாக காண்பிக்கும்போது, வரிசையாக காண்பித்து, அவர்கள் முக்கிய வழக்கில் எந்த cadre ஒ, அந்த cadre காண்பியுங்கள். உதாரணமாக, மாவட்ட ஆட்சியர், முக்கிய வழக்கில் இரண்டாம் பிரதிவாதி என்றால், இங்கு, முதல் எதிர்மனுதாராக காண்பித்து இருந்தால், முதல் எதிர்மனுதார் / இரண்டாம் பிரதிவாதி என்று காண்பியுங்கள். இப்போது, அப்பிடவிட் க்கு வருவோம். முதல் மனுதார் / முதல் பிரதிவாதி தரப்பில் தாக்கல் செய்யும் அப்பிடவிட் என்று தலைப்பிட்டு கொள்ளுங்கள். அல்லது, எந்த மனுதார் வேண்டுமானாலும் அப்பிடவிட் தாக்கல் செய்யலாம். வழக்கம் போல, sworn செய்து கொள்ளுங்கள். அதாவது, விலாசத்தை தலை கீழாக எழுதி, ஆகிய நான் சமர்ப்பிக்கும் அப்பிடவிட் என்று காண்பியுங்கள். அடுத்து. முதல் பாரா, supporting அப்பிடவிட் இல் சொன்னது போல எழுதி கொள்ளுங்கள். அதன் பின்பு, ஒவ்வொரு சிறு பாராவாக, வழக்கு இந்த அரசு அதிகாரிகள் மீது உடனே தாக்கல் செய்ய வேண்டி உள்ளதால், அவர்களுக்கு அனுப்ப வேண்டிய அறிவிப்பை, அனுப்ப முடியவில்லை என்று பொருத்தமான காரணத்தை காண்பியுங்கள். இறுதியாக, தனி பாராவில், இம்மனுவை அனுமதிக்காது போனால், எனக்கு பெருத்த இழப்பு ஏற்படும். ஆனால், எதிர்மனுதாருக்கு எவ்வித ஆட்சேபனையும் இம்மனு தாக்கல் செய்ய இருக்க போவதில்லை என்று எழுதி கொள்ளுங்கள். prayer, ஆகவே, கணம் நீதிபதி அவர்கள் கிருபை செய்து, எதிர்மனுதார்கள் / பிரதிவாதிகளுக்கு அனுப்ப வேண்டிய பிரிவு 80(2) cpc அறிவிப்பை, dispense செய்ய வேணுமாய் பிரார்த்திக்கபடுகிறது என்று முடியுங்கள். இங்கும், supporting அப்பிடவிட் இல் இருப்பது போல முடித்து கொள்ளுங்கள். அப்பிடவிட் ரெடி. இப்போது மனு. இத்துடன் இணைத்துள்ள அப்பிடவிட் short cause title அதே போல எழுதி கொள்ளுங்கள். மனுதார் / வாதி தரப்பு மனு பிரிவு 80(2) c.p.c. படி என்று எழுதி கொள்ளுங்கள். இத்துடன் இணைத்துள்ள அப்பிடவிட்டில் கண்டுள்ள காரநன்களால், கணம் கோர்ட்டார் அவர்கள் கிருபை செய்து, எதிர்மனுதார்கள் / பிரதிவாதிகளுக்கு அனுப்ப வேண்டிய பிரிவு 80(2) cpc அறிவிப்பை, dispense செய்ய வேணுமாய் பிரார்த்திக்கபடுகிறது என்று முடியுங்கள். அதாவது, அப்பிடவிட் prayer உம, மனு prayer உம, ஒன்றாக இருக்க வேண்டும். நீங்கள் இந்த வழக்கை உடனடியாக தாக்கல் செய்ய, அரசு ஊழியர்களுக்கு உரிய அறிவிப்பை கொடுக்க exemption செய்ய முறையான காரணங்களை சொல்லாவிட்டால், நீதிமன்றம் உங்கள் வழக்கை உடனடியாக கோப்பிற்கு எடுக்காது. நோட்டீஸ் அனுப்பி விட்டு, மூன்று மாதம் கழித்து தாக்கல் செய்ய சொல்லுவார்கள். அடுத்து, லீவ் மனு. அதாவது, நீங்கள் பொது நல மனு தாக்கல் செய்ய, நீதிமன்றந்தில் லீவ் வாங்க வேண்டும். இது ஒரு விதமான், அனுமதி ஆகும். இதுவும், இடை நிலை மனுதான். இதற்கும் அப்பிடவிட், மனு வைக்க வேண்டும். அப்பிடவிட், ஒருமையில் இருக்க வேண்டும். அதாவது, நான், கேட்கிறேன் என்று வர வேண்டும். ஆனால், பிராதோ, வாதி, வாதி கோருகிறார் என்று அந்த நடையில் வர வேண்டும். ஒரு பொதுவான நலத்திற்கு எல்லா நபர்களுக்கும் ஒரே நபரே வழக்கு நடத்த, நீதிமன்றம் அனுமதி கொடுக்க வேண்டும். அதற்குதான், இந்த மனு. வழக்கம் போல, அப்பிடவிட், இதில் நீங்கள் ஏன் ஒரு நபரே இந்த வழக்கை நடத்த வேண்டும் என்று காரணம் கூற வேண்டும. அதே போல மனுவை, ஆர்டர் 1, விதி 8 இன் படி தாக்கல் செய்ய வேண்டும். prayer, ஆகவே, கணம் நீதிபதி அவர்கள், இவ்வழக்கில் ஒன்றாம் வாதியே, பிற வாதிகளுக்காக, இந்த வழக்கை நடத்த, உத்தரவிட வேண்டியது, அவசியமாயும், நியாயமான்யும் உள்ளது என முடியுங்கள். ஒவ்வொரு இடை நிலை மனுவில் இரண்டு ரூபாய் நீதிமன்ற வில்லை ஒட்டுங்கள். இதன் கீழே, படி மெமோ. அதாவது, பிரதிவாதிகளுக்கு நோட்டீஸ் வைக்க வேண்டும். பிராது copy, நோட்டீஸ், படி மெமோ, போஸ்டல் கவர் மற்றும், அஞ்சல் ஒப்புதல் அட்டை ஆகியவற்றை வைக்க வேண்டும். ஒரு எதிர்பார்ட்டி க்கு உள்ளூர் என்றால் ஐந்து ரூபாய் மற்றும் போஸ்டல் ஸ்டாம்ப் முப்பத்தைந்து ருபாய் ஒட்டுங்கள். பிரதிவாதி குடி இருப்பது வேறு நீதிமன்றம் மூலம் போகும் என்றால், கூடுதலாக பத்து ரூபாய், ஒரு நபருக்கு ஓட்டுவது நல்லது, நீதிமன்ற வில்லை. பிராதுக்கு ஒரு டாக்கட் வாங்கி வைத்து, கூடுதலாக நான்கு பச்சை காகிதங்கள் பிராதின் அடியில் வைத்து, பிராது டாக்கட், அதன் மேல் நான்கு கூடுதல் ஷீட்ஸ், அதன் மேல் பிராது, அதன் மேல் கோர்ட் பீஸ், அதன் மேல் valuation சீட் வைத்து தைத்து கொள்ளுங்கள். இப்போது, எல்லாம் தயார். இனி, இந்த வழக்கை இன்றே, நீதிமன்றம் கோப்பிற்கு எடுக்க வேண்டுமானால், emergent மனு மற்றும் அப்பிடவிட் வைக்க வேண்டும். இரண்டு ரூபாய் ஸ்டாம்ப் மனுவில் ஒட்டுங்கள். இதை மேலே வைத்து, காலை பத்து முப்பதுக்கு நீதிபதியிடம் சமர்ப்பியுங்கள். இதில், வழக்கு முடியும்வரை, உருத்து கட்டளை வேண்டும் என்றால், அதற்கு தனி அப்பிடவிட், மனு. மனு ஆர்டர் 39, விதி 1 இன் படி. அப்பிடவிட், வழக்கம் போலதான். அதில் கூடுதலாக, இம்மனுவை அனுமதிக்காது போனால், எனக்கு இழப்பு ஏற்படும். எனக்கு prima facie case and balance of convenience உள்ளது என சேர்த்து கொள்ளுங்கள். prayer, ஆகவே, கணம் நீதிபதி அவர்கள், எதிர்மனுதார் / பிரதிவாதி, வழக்கு முடியும்வரை, தாவா சொத்தை பயன்படுத்தக்கூடாது என இடைக்கால உருத்து கட்டளை வழங்கும்படிக்கும்,அதன் தொடர்ச்சியாக, இன்று, ஒரு exparte ad-interim injunction இம்மனு முடியும்வரை தரும்படிக்கும், பிரார்த்திக்கபடுகிறது. இதில் ஒவ்வொரு இடை நிலை மனுவுக்கும், படி மெமோ வைக்க வேண்டும். dispense வித் மனுவுக்கு மட்டும் தேவை இல்லை. படி, பிராதில் சொன்ன படிதான். ஒரு நபருக்கு ஐந்து ரூபாய். முடிந்தால், ஒரு வழக்கறிஞரிடம் ரெடி செய்து வாங்கி கொள்ளுங்கள். அல்லது நீங்கள் தயார் செய்து, ஒரு வழக்கறிஞரிடம் காண்பித்து கொள்ளுங்கள். அதன் பின்பு, file செய்வது நல்லது. இது ஒரு மாதிரியே. இதில் நீங்கள் வழக்கை நன்றாக சட்டப்படி எழுதினால்தான், வழக்கு வெற்றி பெற வாய்ப்பு உண்டு. ஒரே நாளில் நம்பர் ஆகி விடும், சரியாக இருந்தால். இடைக்கால உறுத்து கட்டளையும், அன்றே கிடைக்க வாய்ப்பு உண்டு. அசல் ஆவணங்களை வைத்தால், அன்றே கிடைக்க வாய்ப்பு உண்டு. ஒவ்வொரு அப்பிடவிட், மனு ஆகியவற்றுக்கும் டாக்கட் போட்டு கொள்ளுங்கள்

நிறுத்தப்பட்ட பேருந்துகளை இயக்க நடவடிக்கை கேட்டு மாவட்ட நீதிபதியிடம் மனு

பெறுனர்

                        கணம் மாவட்ட நீதிபதி அவர்கள்
            மாவட்ட நீதிமன்றம் உதகை.

பொருள்  : கூடலூர் போக்குவரத்து கிளை கழகம் மூலம் இயக்கப்பட்ட
அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டதை மீண்டும் இயக்க
முறையாக பராமரித்து இயக்க நடவடிக்கை எடுத்து
உதவுமாறு கேட்டல் சார்பாக.

மதிப்பிற்குரிய அய்யா அவர்களுக்கு பணிவான வணக்கங்கள்

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கூடலூர் கிளை சார்பில் கூடலூர் வைத்திரி பேருந்தும் கூடலூர் பத்தேரி வழித்தட பேருந்தும் பல ஆண்டுகாளக இயக்கப்பட்டது.  இவை தற்போது தீடிரென் நிறுத்தப்பட்டுள்ளது.

வைத்திரி செல்லும் பேருந்து காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் அரசு மற்றும் தனியார் நிறுவணங்களில் பணிபுரிவோர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இப்பேருந்துகள் நிறுத்த கூறப்படும் காரணம் வருவாய் இல்லை என்பது,  ஆனால் பேருந்தில் காலை மாலை வேளைகளில் கூட்டம் அதிகமாகவே உள்ளது.  இதில் பெரும்பாலும் அரசின் இலவச பயணஅனுமதி திட்டத்தின் பயணடையும் கல்லூரி, பள்ளி மாணவ மாணவிகள்  இவர்கள் இந்த பேருந்துகளை மட்டுமே நம்பி உள்ளனர். 

இலவச அனுமதி பெற்றவர்கள் அதிகம் பயன்படுத்துவதால் பயணகட்டணம் செலுத்தி பயணிப்போர் குறைவாக செல்லும் நிலை ஏற்படுகின்றது.  இதனால்  வருவாய் இழப்பு ஏற்படலாம்,  அதற்கு மக்கள் பொறுப்பல்ல என்பதும் குறிப்பிடதக்கது.

பேருந்தில் பயணம் செய்பவர்கள் அரசு நிர்ணயித்த கட்டணம் செலுத்தி பயணிக்கின்றனர்.  அதுபோல அரசு இலவச பயண அனுமதி வழங்கியதாலே மாணவர்களும் இலவசமாக பயணிக்கின்றனர்.  அனுமதித்த அளவை விட இருமடங்கு பயணிகள் அதிகமாக செல்லும் போது பேருந்து நஷ்டத்தில் இயங்குவதற்கு மக்கள் பெறுப்பல்ல என்பதும் குறிப்பிடதக்கது.

குறிப்பாக தமிழக அரசின் இலவச மருத்துவ காப்பீடு வசதி மேப்பாடி அருகில் உள்ள அரப்பட்டா பகுதியில் உள்ள விம்ஸ் மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு வழங்கப்பட்டுள்ளது.  கூடலூர் பந்தலூர் பகுதி மக்கள் மேல் சிகிச்சை அறுவை சிகிச்சை பெற கோவைக்கு சென்றுவர இயலாத நிலையில் இந்த மருத்துவமனை பெரிதும் உதவியாக உள்ளது. 

அதுபோல சுமார் 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கள்ளிக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரிக்கும் மருத்துவ தேவைக்கு சென்று வர இப்பேருந்துகள் உதவியாக உள்ளது,

வைத்திரி பகுதியில் செயல்படும் விம்ஸ் மருத்துவ கல்லூரிக்கு  மருத்துவ தேவைக்கு செல்பவர்கள் அதிகம் நம்பியுள்ள வைத்திரி மற்றும் கள்ளிக்கோட்டை பேருந்துகளை நிறுத்தியுள்ளது  அனைத்து தரப்பினருக்கும் பாதிப்பை எற்படுத்தியுள்ளது.

அதுபோல கூடலூர் பந்தலூர் வழித்தடத்தில் தனியார் வாகணங்கள் இயக்க தடை விதிக்க்ப்பட்டு அதற்கு பதிலாக அரசு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. 

சிலநாட்கள் இயக்க்ப்பட்ட கூடலூர் பந்தலூர் பேருந்துகளும் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.  இதனால்  பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் அனைத்து தரப்பினரும் போக்குவரத்து வசதி இன்றி பாதிக்கப்படுகின்றனர்.

எனவே மேற்படி வைத்திரி் மற்றும் கூடலூர் பந்தலூர் வழித்தடம் மற்றும் நிறுத்தப்பட்ட பேருந்துகளை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.

மேலும்  அரசு போக்குவரத்து கழகம் மூலம் இயக்கும் பேருந்துகள் பலவும் அதன் பாகங்கள் உடைந்தும் சேதமடைந்தும் காணப்படுகின்றது.  இவை பல 10 ஆண்டுகளுக்கு மேலாக ஒடகூடியவையாக உள்ளது.

இதனால் இதன் பாகங்கள் பலவும் சேதமடைந்து காணப்படுகின்றது.  மேற்கூரைகள் உடைந்தும்,  பக்கவாட்டு தகரங்கள் உடைந்தும் சீட்டுகள் சேதமடைந்தும் காணப்படுகின்றது.

மழை காலங்களில் பேருந்துகள் மேற்கூரை பழுது காரணமாக ஒழுகும் சூழ்நிலையும் உள்ளது , இதனால் பயணிகள் பேருந்துகளின் உள்ளேயே குடை பிடிக்கும் நிலைக்கு ஆளாகின்றனர்.  பல்வேறு பாதிப்புகளுக்கும் ஆளாகின்றனர்,

            அதுபோல கல்லூரி மாணவர்களின் நலன்கருதி கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் வகையில் காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.

                                                                                                                        இப்படிக்கு

கூடலூர் நிலப்பிரச்சனை இஅடிப்படை வசதிகள் செய்து கொடுக்க கேட்டு மனு

பெறுனர்

மேன்மைமிகு ஆளுனர் அவர்கள்,
தமிழ்நாடு அரசு  உதகை முகாம்.

பொருள்  : கூடலூர் நிலப்பிரச்சனை  காரணமாக மின்வசதி சாலை வசதி
அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காமல் இருப்பதால் வாழ்வாதாரம்
பாதிப்பு  நடவடிக்கை எடுத்து மக்களுக்கு அடிப்படை வசதிகள் வழங்க
கேட்டல் சார்பாக.

மேன்மைமிகு ஆளுநர் அய்யா அவர்களுக்கு 
பணிவான வணக்கங்கள்
                       
நீலகிரி மாவட்டத்தில் கூடலூர் பந்தலூர் வட்டங்களில் பலரும் கைவசம் உள்ள நிலங்களில் வீடுகட்டி வசித்து வருகின்றனர்.  இவர்களுக்கு பல ஆண்டுகாளாக அரசும் அனைத்து வசதிகளும் ஏற்படுத்தி கொடுத்து வந்தது.

இந்நிலையில் கடந்த சில வருடங்களாக அடிப்படை வசதிகள் செய்வதில் சட்ட பிரிவுகளை காரணம் காட்டி தடை செய்து வருகின்றது.  யாணைகள் வழித்தடம், பிரிவு 17 நிலங்கள் தனியார் வனபாதுகாப்பு சட்டம் என பல்வேறு காரணங்களை கூறி அடிப்படை வசதிகள் செய்து தருவதில்லை,

பல கிராமங்களுக்கு சாலைவசதி, மின்வசதி, குடிநீர் வசதி, தெருவிளக்கு வசதி கூட செய்து தராமல் உள்ளதால் மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகின்றனர்.   வனவிலங்கு தாக்குதல்கள் மருத்துவ சிகிச்சை பெற முடியாமல் அவதிபடுகின்றனர், 

எனவே அய்யா அவர்கள் கருணை கூர்ர்ந்து அடிப்படை வசதிகளான மின் வசதி, குடிநீர் வசதி, சாலை வசதிகள் அனைத்து தரப்பினருக்கும் கிடைக்க செய்ய வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் சார்பில் மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

இப்படிக்கு

தாயகம் திரும்பியோருக்கு இட ஒதுக்கீடு தொடர்ந்து வழங்க கேட்டல் சார்பாக.

பெறுனர்

மேன்மைமிகு ஆளுனர் அவர்கள்,
தமிழ்நாடு அரசு  உதகை முகாம்.

பொருள்  : தாயகம் திரும்பியோருக்கு இட ஒதுக்கீடு தொடர்ந்து
வழங்க கேட்டல் சார்பாக.

அய்யா அவர்களுக்கு பணிவான வணக்கங்கள்

நீலகிரி மாவட்டத்தில் இந்திய இலங்கை அரசுகள் ஒப்பந்ததின் மூலம் கடந்த 1966 க்கு பிறகு பல குடும்பங்கள் வந்து வசித்து வருகின்றனர்.  இவர்கள் பலர் தமிழ்நாடு அரசு தேயிலை தோட்டத்திலும்,  பலர் தனியாக வீடுகள் கட்டி கூலி வேலை செய்தும் ஆங்காங்கே வசித்து வருகின்றனர்.

சிரிமா சாஸ்திரி ஒப்பந்தம் அடிப்படையில் தாயகம் திரும்பியவர்களுக்கு அரசு மூலம் கல்வி வேலை வாய்ப்புகளில் இடஒதுககீடு வழங்கப்பட்டு வந்தது.  இதனால் பொருளாதாரத்தில் பின்னடைவு பெற்ற சிலர் சிறப்பு இடஒதுக்கீடு வாய்ப்புகள் மூலம் அரசு பணி பெற்று பயனடைந்தனர்.

ஆனால் தற்போது இரண்டாம் தலைமுறை என கூறி தாயகம் திரும்பியோருக்கு இடஒதுக்கீடு மறுக்கப்பட்டு வருகின்றது.  தற்போது தான் தாயகம் திரும்பியவர்கள் படித்து பட்டம் பெற்று வருகின்றனர்.
தற்போது இடஒதுக்கீடு மறுக்கப்பட்டு வருவதால் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இடம் கிடைப்பதில்லை. இதனால் இவர்களின் பொருளாதார நிலை மிகவும் மோசமாகவே உள்ளது.

எனவே மீண்டும் தாயகம் திரும்பியோருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்கி தாயகம் திரும்பியோர்களின் வாழ்வில் வளம்பெற செய்ய பணிவுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

இப்படிக்கு

ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (AB PM-JAY) திட்டத்தின் முக்கிய பயன்களை    “திடீர் உடல்நலப் பிரச்சினை ஏற்பட்டால் குடும்ப...