பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம்

 *பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம்*


 *2012 (The Protection of Children from Sexual Offenses (POCSO) Act, 2012)*


 *என்பது , இந்தியாவில் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க உருவாக்கப்பட்ட சட்டமாகும்.[1] இதனைச் சுறுக்கமாக போக்சோ சட்டம் அல்லது போக்ஸோ சட்டம் என அழைக்கப்படுகிறது. இச்சட்டம்*,


 மாநிலங்களவையில் 2012 ஆம் ஆண்டு மே மாதம் 10ம்தேதியும், மக்களவையில் மே மாதம் 22ம் தேதியும் நிறைவேற்றப்பட்ட சட்டமாகும்.இதற்கான விதிமுறைகளும் உருவாக்கப்பட்டு, நவம்பர் 14ம் தேதி அரசிதழ் அறிவிக்கை வெளியிடப்பட்டது. 


இச்சட்டம் வரும் முன் , குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை, இந்திய தண்டனை சட்டப்பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டது. இப்பிரிவுகள், குழந்தைகள், வயது வந்தவர்கள் என்ற வித்தியாசமின்றி வழக்குகளைக் கையாண்டன.[2]


சட்டத்தின் பொதுவான அம்சங்கள் 

18 வயதுக்குக் குறைவான அனைத்துக் குழந்தைகளும் பாலின வித்தியாசமின்றி, இச் சட்டத்தின் வரையறைக்குள் வருவர். 


அதாவது ஆண் குழந்தைகள், சிறுவர்களும் பாதிக்கப்பட்டாலும், இச்சட்டம் தலையீடு செய்யும். பாலியல் தாக்குதல்/வன்முறை, பாலியல் துன் புறுத்தல்/சீண்டல், ஆபாசப் படமெடுக்கக் குழந்தைகளைப் பயன்படுத்துதல் போன்றவற்றைக் குற்றங்களாக இச்சட்டம் முன்வைக்கிறது. 


30 நாட்களுக்குள் குழந்தையின் சாட்சியம் பதிவு செய்யப்பட வேண்டும். ஒரு வருடத்துக்குள் வழக்கு முடிய வேண்டும். 


இது மிகத் தேவையானது. சாதாரண சிறை தண்டனையிலிருந்து, கடுங் காவல், ஆயுள் தண்டனை வரை கொடுக்க லாம் என சட்டம் குறிப்பிடுகிறது. சில வகை பாலியல் வன்முறைக்குக் கூடுதல் தண்டனை உண்டு. 


உதாரணமாக, காவல் துறையினர், பாதுகாப்புப் படையினர், ராணுவம், அரசு அதிகாரிகள் போன்றவர்கள் பாதுகாவலர்கள் அல்லது நம்பிக்கைக் குரியவர்கள். அவர்களே குற்றம் இழைக்கும் போது, அதிக தண்டனை உண்டு என இச்சட்டம் தெளிவுபடுத்துகிறது.


மாவட்ட அளவில் குழந்தை பாதுகாப்புப் பிரிவு அமைக்கப்பட வேண்டும். தனி காவல் துறை பிரிவும் ஏற்படுத்தப் பட வேண்டும். பாதிக்கப்பட்ட குழந்தை எங்கு இருந்தால், அக்குழந்தையின் நலனுக்கு உகந்தது என்று பார்க்க வேண்டும். சில சமயம், குடும்ப உறுப்பினர்களே குற்றம் செய்பவராக இருந்தால், அங்கிருந்து குழந்தையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்.[2]


குழந்தையின் நலனே பிரதானம் 

சிறப்பு நீதிமன்றங்கள் இதற்காக நிறுவப்பட வேண்டும். வழக்கின் துவக்கத்திலிருந்து இறுதி வரை - புகார் கொடுப்பது, முதல் தகவல் அறிக்கை பதிவு, விசாரணை, வாக்கு மூலம் பதிவு, வழக்கு நடப்பது போன்ற அனைத்திலும் - பாதிக்கப் பட்ட குழந்தைகளின் நலன் மையமாக இருக்க வேண்டும். அதுதான் மிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டிய அம்சம் என்று சட்டம் கூறுகிறது. 


உதாரணமாக, “பாதிக்கப்பட்ட சிறுமி/சிறுவரின் சாட்சியம் அவர்களின் வீட்டிலோ அல்லது அவர்கள் விரும்புகிற இடத்திலோ தான் பதிவு செய்யப் பட வேண்டும். துணை ஆய்வாளர் அல்லது அதற்கு மேற்பட்ட பொறுப்பில் உள்ள பெண் காவல் அதிகாரி தான் பதிவு செய்ய வேண்டும். அப்போது காவலர் சீருடையில் அந்த அதிகாரி இருக்கக் கூடாது.”இரவு நேரத்தில், அவர்களைக் காவல் நிலையத்தில் வைத்துக் கொள்ளக் கூடாது. 


குழந்தை எதை எப்படி சொல்லுகிறதோ, அதை அப்படியே அந்த வார்த்தைகளில் பதிவு செய்ய வேண்டும். மாற்றுத் திறனாளி என்றால், குழந்தை பேசுவதைப் புரிந்து கொண்டு எடுத்துச் சொல்ல சைகை மொழி பேசுபவர் அல்லது குழந்தையின் பெற்றோர், உறவினரின் உதவியைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.


மருத்துவப் பரிசோதனை, பெற்றோர்/உற்றோரின் முன்னிலையில் செய்யப் பட வேண்டும். பெண் குழந்தை என்றால், பெண் மருத்துவர் செய்ய வேண்டும். அவசர மருத்துவ சிகிச்சை அளிக்க நேர்கிறபோது, மருத்துவர்கள் காவல் துறை அல்லது நீதி துறையின் உத்தரவைக் கோரக் கூடாது.


வழக்கு நடக்கும்போது, அடிக்கடி குழந்தை ஆசுவாசப் படுத்திக்கொள்ள நேரம் ஒதுக்க வேண்டும்.விசாரணையோ, வழக்கோ, வாக்கு மூலமோ பாதிக்கப்பட்ட சிறுமி/சிறுவரைத் திரும்ப திரும்ப நடந்ததைச் சொல்ல வற்புறுத்தக் கூடாது.குறுக்கு விசாரணை என்ற பெயரில் சங்கடப் படுத்தும் கேள்விகள் அல்லது நடத்தையை சந்தேகிக்கும் கேள்விகளைக் கேட்கக் கூடாது.[2]


குறிப்பிடத் தகுந்த பிரிவுகள் தொகு

குற்றம் இழைத்தவர்கள் மட்டுமல்ல, குற்றத்தை செய்யும் நோக்கத்துடன் அதற்காக முயற்சித்தவர்களும் குற்றவாளிகள் தான். பாலியல் வன்முறை செய்ய, ஒரு சிறுமியை இழுத்துச் சென்றிருக்கலாம். 


யாரோ வருகிறார்கள் என்பதற்காக விட்டு விட்டு ஓடியிருக்கலாம். பணம் திருடினாளா என்று பரிசோதிக்கவே தனியாக அழைத்து வந்தேன் என்று ஆசிரியர் கூறலாம். வழக்கு வந்தால், குற்றம் நடக்கவில்லையே என்று தப்பித்துக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. 


ஆனால் இச்சட்டம், தப்பிக்கும் வழியை மிகச் சரியாக அடைக்கிறது. குற்றத்துக்கு என்ன தண்டனையோ, அதில் பாதியை குற்றம் செய்யும் நோக்கத்துடன் முயற்சிப்பவர்களுக்கு வழங்க வேண்டும் என்று கூறுகிறது.


மற்றொரு முக்கிய பிரிவு, பாலியல் வன் கொடுமை குற்றத்தைப் பொறுத்தமட்டில், குற்றம் நடந்தது என்று மனுதாரர் ப்ராசிகியூஷன் தரப்பு நிரூபிக்க வேண்டியதில்லை. குற்றவாளி தான், தான் குற்றம் செய்யவில்லை என்று நிரூபிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.


பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட சிறுவர், சிறுமியர் பெயரையும், அடையாளத்தையும், சிறப்பு நீதிமன்றத்தின் அனுமதியில்லாமல் ஊடகங்கள் வெளியிடக்கூடாது என்பது அழுத்தமாக சொல்லப்பட்டிருக்கிறது. காவல் துறையும் வெளியிடக் கூடாது என்பது தான் இதன் பொருள்.[2]


இழப்பீடு/நிவாரணம் 

சிறப்பு நீதிமன்றம் தாமாகவோ, அல்லது பாதிக்கப்பட்டோரின் மனுவின் அடிப்படையிலோ தேவையைப் பொறுத்து இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். இறுதியில், குற்றவாளி தண்டனை பெற்றாலும், விடுவிக் கப்பட்டாலும் நிவாரணம் வழங்கலாம். 


குற்ற வாளியை அடையாளம் காண முடியாவிட்டாலும், தலைமறைவாகப் போய் விட்டாலும் கூட, இழப்பீடு வழங்கலாம். உடல் காயம், மன உளைச்சல், மருத்துவச் செலவு, குடும்பத் தின் பொருளாதார நிலை ஆகியவற்றைக் கணக்கில் எடுக்க வேண்டும். மன/உடல் நிலை சரியில்லாமல் அல்லது விசாரணை, வழக்குக்குச் செல்வதற்காகப் பள்ளி செல்ல முடியாத நிலை ஏற்பட்டால் அதையும் கணக் கில் எடுக்க வேண்டும். 


எச்.ஐ.வி. தாக்கியிருந்தால், கர்ப்பமாகி விட்டால், ஊனமடைந்து விட்டால் அவையும் எடுத்துக் கொள்ளப்பட்டு, இழப்பீடு வழங்கப் பட வேண்டும். மாநில அரசே நிவாரணத் தொகையை வழங்க வேண்டும். 


நீதிமன்ற உத்தரவு பெற்று 30 நாட் களுக்குள் இது அளிக்கப் பட வேண்டும்.இவ்வளவு வாய்ப்புகள் இருக்கிறது என்று தெரிந்தால்தானே, பாதிக்கப்பட்ட குழந்தை யும், பெற்றோரும் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளமுடியும்? இவை குறித்து அவர்களுக்குக் கூறப்பட வேண்டும் என்பது இச்சட்டத் தின் கீழ் கட்டாயமாக்கப் பட்டிருக்கிறது. 


அதே போல் வழக்கின் விவரம் அவ்வப்போது அவர்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும்.தேசிய/மாநில குழந்தைகள் உரிமை பாது காப்பு ஆணையம் தான் இச்சட்டத்தின் அமலாக்கத்தைக் கண்காணிக்க வேண்டும்.

கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் 

நீலகிரி மாவட்டம்





சர்பாசி சட்டம் – 2002*

 *சர்பாசி சட்டம் – 2002* 

(Securitisation and Reconstruction of Financial Assets and Enforcement of Security Interest)….


என்பதையே….


”SARFAESI ACT” என்று சுருக்கமாக அழைக்கிறோம். ஒரு பார்வை… சிறு அலசல்…


வங்கிகள் நீதிமன்றங்களுக்குச் செல்லாமலேயே ஒருவருக்கு கொடுத்த கடனை வசூலித்துக் கொள்வதற்கு இந்தச் சட்டம் முழு அதிகாரத்தைத் தருகிறது.


இதில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால், “வங்கிக் கடன் வசூல் தீர்ப்பாயம்” என்ற அமைப்பின் உதவியையும் வங்கிகள் பெறலாம்.


இந்தச் சட்டம் கடந்த 2002ம் ஆண்டுதான் இயற்றப்பட்டது.

2002ம் ஆண்டுக்கு முன்பு வரை வங்கிகள் தன்னுடைய வாடிக்கையாளருக்கு வழங்கிய கடனை வசூலிக்க படாதபாடுபட்டு வந்தது.


அதற்கு வங்கியானது முதலில் உரிய நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய வேண்டும். வழங்கப்பட்டிருக்கும் கடன் தொகைக்கு ஏற்ப நீதிமன்றத்தில் கட்டணம் செலுத்த வேண்டும். கடனுக்காக ஜாமீனாக கொடுக்கப்பட்ட சொத்தை ஜப்தி செய்வதற்கு பல சட்ட நடைமுறைகளை பின்பற்றி, வழக்கை நடத்தி தீர்ப்பைப் பெற வேண்டும்.


ஆனால், இந்த சர்பாசி சட்டம் அமுலுக்கு வந்தவுடன் நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. யாரையும் எதிர்பார்க்காமல், வங்கியானது தான் கொடுத்த கடனை தானே வசூல் செய்வதற்கு இந்தச் சட்டம் வழிவகுத்தது.


இந்தச் சட்டத்தின் கீழ், ‘கடன் வசூல் தீர்ப்பாயம்’ (Debt Recovery Tribunal) என்று ஒன்றும் ‘கடன் வசூல் மேல்முறையீட்டு தீர்ப்பாயம்’ (Debt Recovery Appellate Tribunal) என்று ஒன்றும் ஏற்படுத்தப்பட்டுள்ளது..


. இதில் எளிய முறையில் வங்கியானது கடன்காரர்கள் மீது வழக்கு தொடுக்கலாம். பிணைய சொத்தை வழக்கு தொடுப்பதற்கு முன்பாகவே வங்கியின் அதிகாரம் பெற்ற அலுவலர் மாவட்ட குற்றவியல் நடுவர் (DRO) மற்றும் மாவட்ட ஆட்சியர் வாயிலாக பற்றுகை செய்யலாம்.


நீதிமன்றம் பக்கம் போகும் வேலையே வங்கிக்கு இல்லை. அதே மாதிரி கடன்காரர்களும் கண்டபடி எதிர்வாதம் செய்யவும் முடியாது.


பிரிவு – 13


அடுத்தவர்கள் வாங்கிய கடனுக்கு உத்தரவாதம் அளித்துள்ளவர்கள், அதற்கு ஈடாக அளித்துள்ள சொத்துகளின் மீது சர்பாசி சட்டம் 2002 – பிரிவு 13-ன் கீழ் நடவடிக்கை எடுக்கமுடியும். ஒரு வேளை உத்தரவாத கையெழுத்திட்ட நபர்கள் அதற்கு ஈடாக நிறுவன பங்குகளைக் காட்டியிருந்தால் அவற்றை விற்பதற்கான நடவடிக்கை எடுக்க முடியும்.


பிரிவு – 17


வங்கியினுடைய சட்ட நடவடிக்கைளில் குறை ஏதாவது இருந்தால் அல்லது வங்கியானது தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி இருந்தால் அது பற்றி கடன்பெற்றவர் சர்பாசி சட்டம் பிரிவு 17-இன்படி கடன் வசூல் தீர்ப்பாயத்திடம் முறையிடலாம்.


பிரிவு – 34


பிரிவு 34-இன்படி சர்பாசி சட்டத்தின் கீழ் வங்கிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ள அதிகாரங்களை வங்கிகள் செயல்படுத்துவதை தடுத்து நிறுத்தும்படி எவரும் இடைக்கால உறுத்துக்கட்டளை உள்ளிட்ட இடைக்கால நிவாரணம் எதையும் நீதிமன்றங்களில் இருந்து பெறவே முடியாது.


ஏனென்றால், அவைகளை வழங்குவதற்கு உரிமையியல் நீதிமன்றத்திற்கு அதிகாரம் கிடையாது.


நிறுவனங்களுக்கு வங்கிகள் கடன் வழங்கும்போது தனி நபர் பிணை அல்லது ஜாமீன் கேட்பது அவர்களின் வழக்கமான நடைமுறையாகும். சொந்தமாக ஜாமீன் அளித்த தொழிலதிபர்களிடமிருந்து கடனை மீட்கும் நடவடிக்கையை வங்கிகள் கடைசி பட்சமாகத்தான் மேற்கொள்கின்றது.


சொந்த ஜாமீன் அளித்தவர்களின் மீது கொடுத்த கடனை வசூலிப்பதற்காக வங்கிகள் எடுத்த நடவடிக்கை மிகக் குறைவாகும்.


கடன் மீட்பு தீர்ப்பாயத்துக்கு செல்லும் முன் உத்தரவாதம் அளித்த நபரின் சொத்துகளை முடக்கி அவற்றை விற்பதற்கான நடவடிக்கையை வங்கிகள் முதலில் எடுக்க வேண்டும்.


கடன் வாங்கிய ஒரு நிறுவனம் நஷ்டமாகி மூடப்பட்டு இருந்தால், அந்நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு சொந்த ஜாமீன் வழங்கியவர்களிடமிருந்து அந்தக் கடன் தொகையை வசூலிக்குமாறு நிதி அமைச்சகம் அனைத்து பொதுத் துறை வங்கிகளுக்கு கடந்த 18.03.2016 அன்று அனுப்பிய சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.


தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு எதிராக தொடரப்படும் வழக்குகள் மற்றும் சொத்துகளை முடக்கும் நடவடிக்கைகளைத் தொடர்ந்து இதே போன்ற நடவடிக்கைகளை பிற தொழில் நிறுவனங்களின் தொழிலதிபர்களிடமும் மேற்கொள்ள வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இந்த சுற்றறிக்கையை ரிசர்வ் வங்கியுடன் ஆலோசனை நடத்தி அனுப்பியுள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.


கிங்பிஷர் ஏர்லைன்ஸுக்கு கடன் அளித்த விஷயத்தில் தொழிலதிபர் விஜய் மல்லையா வெளிநாட்டுக்கு சென்று விட்ட நிலையில் அவரிடமிருந்து, ”வழங்கிய கடனை” வசூலிக்க பல்வேறு கட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டியுள்ளது. அதனால் இதுபோன்ற நிலை பிற வாராக்கடனை செலுத்தாத நிறுவனங்களுக்கு ஏற்படக்கூடாது என்பதற்காக நிதி அமைச்சகம் இத்தகைய உத்தரவை பிறப்பித்துள்ளதாக தெரிய வருகிறது.


1) வழக்கு எண்: 2015 (1) CTC 526 (Mad)


சர்பாஸி சட்டத்தின் வாயிலாக வங்கி எடுத்து ஏலம் விட்ட சொத்தை ஒருவர் வாங்குகின்றார். அவ்வாறான ஏலத்திற்கு எடுத்த தொகைக்கு Sale Certificate வழங்கப்படுகின்றது. அந்த Sale Certificate அடிப்படையில் ஏலத்தில் சொத்தை எடுத்தவர் அதை பதிவு செய்ய முனையும்பொது, பதிவாளர் அந்த சொத்தின் அரசு மதிப்பிற்கு Stamp Duty செலுத்த சொல்கின்றார்.


உயர்நீதிமன்றமானது, section 47-A of the Indian Stamp Act, 1899, பொருந்தாது எனவும், Sale Certificate மதிப்பிற்கு Stamp Duty செலுத்துவதே சரி! என ஆணையிட்டுள்ளது.


2) வழக்கு எண்: 2016(2) CTC 319 (SC)


ஒருவர் வீட்டிற்காக வங்கியில் கடன் வாங்கியுள்ளார். அவர் வீட்டை வாடகைக்கு வீட்டை விட்டுள்ளார். இதற்கிடையில் வீட்டிற்காக வங்கியில் வாங்கிய கடனை கட்டமுடியாத நிலையில், வங்கியானது சர்பாஸி சட்டத்தை பயன்படுத்தி அந்த வீட்டின் உடமையை எடுக்க முயற்சி செய்கின்றது.


அப்போது ஒரு சட்ட வினா எழுகின்றது. வாடகைதாரர் குடியிருக்கும்போது, மேற்படி சட்டத்தை கொண்டு அவரை வாடகைதாரரை அங்கிருந்து அகற்றிவிட்டு அந்த வீட்டின் உடமையை எடுக்கு சர்பாஸி சட்டம் அனுமதிக்கின்றதா?


அதற்கு உச்சநீதிமன்றம் “சர்பாஸி சட்டத்தில் வாடகைதார்ர் இருக்கும்போது அவரை காலி செய்து உடமை எடுக்க அதிகாரம் இல்லை, எனவும் வாடகைதாரரை முறையாக சட்டப்படியாக அவரை அந்தவீட்டை விட்டு காலி செய்த பின்னரே அந்த வீட்டின் உரிமையை எடுக்க முடியும் என தீர்ப்பளித்துள்ளது.


3) வழக்கு எண்: 2015(4) CTC 18 (Mad)


சர்பாஸி சட்டத்தின்படி சொத்தின் உடமையை எடுக்கும் வகையில் வங்கியானது நீதிமன்றத்தில் ஆணையிட கோரியதில், வங்கி அதற்கான ஆணையை பிறப்பித்திருக்கும் நிலையில் (உடமை இன்னும் எடுக்கப்படவில்லை) சொத்தின் உரிமையாளர் DRT –ல் மேல்முறையீடு செய்கின்றார்.


வங்கியானது சொத்தின் உடமை இன்னும் எடுக்கபடாத்தால், மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்படவேண்டும் என்று வாதிட்டதின் பேரில் மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்படுகின்றது. சொத்தின் உரிமையாளரின் மேல்முறையீட்டின் உரிமையானது சொத்தின் உடமை எடுக்கப்படவில்லை என்பதை காரணமாக கொண்டு, எந்தவிதத்திலும் பாதிக்காது என தீர்ப்பளித்துள்ளது.


4) வழக்கு எண்: 2016 (3) CTC 66 (Mad).


SARFAESI சட்டத்தின் படி கடன் பெற்றவரின் சொத்துக்களை வங்கி எடுத்து கொள்கின்றது.


அந்த கடன் பெற்றவர் இந்திய அரசுக்கு சுங்கவரி செலுத்த வேண்டும் என்பதால் வங்கியானது அந்த சொத்தை விற்கும்போது விற்ற பணத்தில் இருந்து முதலில் இந்திய சுங்கவரி துறையானது வரியை பெற உரிமை உள்ளது! என்ற வாதத்தை மேற்படி சட்டத்தின் பிரிவு 35 யை காட்டி சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது.


கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம்

நீலகிரி மாவட்டம் 


*ஒருவரை கைது செய்வதற்கான விதிமுறைகள் என்ன?*

*ஒருவரை கைது செய்வதற்கான விதிமுறைகள் என்ன?* 


 *காவல் கைதியின் உரிமைகள் யாவை?* 


 *காவல்நிலைய சித்ரவதைகளையும் மரணங்களையும் குறைக்க என்ன செய்ய வேண்டும் என்பதை ஆலோசித்து முடிவெடுக்க இந்திய சட்ட ஆணையத்திற்கும் உத்தரவிட்டது.* 


விளைவாக கைதின் போது பின்பற்றப்பட வேண்டிய *11 விதிமுறைகளை நிர்ணயித்தது உச்ச நீதிமன்றம்.* 


 *மீறும் எந்தவொரு காவல் நடவடிக்கையும் சட்டத்துக்கு எதிரானது.* 


1. கைதின்போது தொடர்புடைய விசாரணை அதிகாரி தனது பெயர் பொறிக்கப்பட்ட சீருடை அணிந்திருக்க வேண்டும். யார் விசாரணை அதிகாரி என்பது காவல்துறை பதிவேட்டில் குறிப்பிடப்பட வேண்டும்.


2. கைதிற்கான மெமோவை தயார் செய்ய வேண்டும். அதில் கைது நடந்த நேரம், தேதி ஆகியவை குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். அதனை கைது செய்யப்பட்டவரின் குடும்ப உறுப்பினரோ, அல்லது அந்தப் பகுதியின் தெரிந்த மனிதர் ஒருவரோ ஏற்று ஒப்புதல் சாட்சியமளித்து கையெழுத்திட வேண்டும். கைது செய்யப்பட்டவரும் அதில் கையெழுத்திட வேண்டும்.


3. கைதி அல்லது விசாரிக்கப்படும் நபரின் உறவினர், நண்பர், நலம் விரும்பி ஆகிய யாராவது ஒருவருக்கு முடிந்த அளவு விரைவாகத் தகவல் சொல்ல வேண்டும். எந்த இடத்தில் கைது செய்து வைக்கப்பட்டிருக்கிறார் என்ற விவரத்தைத் தெரிவிக்க வேண்டும்.


4. கைது செய்யப்பட்டவரின் உறவினரோ நண்பரோ மாவட்டத்திற்கு வெளியில் வசித்தால் கைது செய்யப்பட்ட இடம், நேரம் குறித்த தகவல்களை 8 முதல் 12 மணி நேரத்திற்குள் அவர்களுக்குத் தெரிவிக்க வேண்டும். மாவட்ட சட்ட உதவி ஆணையமும் சம்பந்தப்பட்ட காவல் நிலையமும் தந்தி மூலம் இதனைச் செய்ய வேண்டும்.


5. கைது செய்யப்பட்டவுடன், அதனை யாருக்காவது தெரிவிக்கும் உரிமை கைது செய்யப்பட்ட நபருக்கு இருக்கிறது என்பதை அவருக்குச் சொல்ல வேண்டும்.


6. காவல் நிலைய நாட் குறிப்பில் கைது குறித்தும் யாருக்கு தெரிவிக்கப்பட்டது என்பது குறித்தும் எந்த காவல் அதிகாரியின் பிடியில் அந்த நபர் இருக்கிறார் என்பது குறித்தும் பதிவு செய்ய வேண்டும்.


7. கைதி தன்னை பரிசோதிக்க வேண்டுமென கோரலாம். காயங்கள் இருந்தால் பதிவு செய்யப்பட வேண்டும். இந்த சோதனை ஆவணம் கைது செய்யப்பட்ட நபராலும் கைதுசெய்யும் காவல்துறை அதிகாரியாலும் கையெழுத்திடப்பட வேண்டும். இதன் பிரதி கைதிக்கும் வழங்க வேண்டும்.


8. 48 மணி நேரத்திற்குள் மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும். அந்தந்த மாநிலத்தின் மருத்துவ சேவை இயக்குநரகத்தால் சான்றளிக்கப்பட்ட மருத்துவரே இந்த சோதனையைச் செய்ய வேண்டும்.


9. கைது ஆவணம் உட்பட அனைத்து ஆவணங்களும் அந்தப் பகுதியின் மாஜிஸ்ட்ரேட்டிற்கு அனுப்பப்பட வேண்டும்.


10. விசாரணையின்போது தனது வழக்கறிஞரைச் சந்திக்க கைது செய்யப்பட்டவருக்கு உரிமை உண்டு.


11. ஒவ்வொரு மாவட்டத்திலும், மாநில தலைமையகத்திலும் இதற்கென ஒரு கட்டுப்பாட்டு அறையை அமைக்க வேண்டும். இந்த கைது, அந்த நபர் வைக்கப்பட்டிருக்கும் இடம் குறித்த தகவல்களை அங்கே அனுப்ப வேண்டும். கைது நடந்து 12 மணி நேரத்திற்குள் இதைச் செய்ய வேண்டும்...


கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு  மையம் https://kutumbapp.page.link/HfdrHc9aE9NxJFV7A

நீதிமன்ற தீர்ப்பை பற்றிய விளக்கங்கள்

 *நீதிமன்ற தீர்ப்பை பற்றிய விளக்கங்கள்* 

நீதிமன்றத்தில் ஒரு வழக்கை வாதி தாக்கல் செய்கிறார் அந்த வழக்கை எதிர்த்து பிரதிவாதி வழக்கு நடத்துகிறார் இரு பக்க வழக்கு விசாரணையும் நடைபெற்று முடிந்த பிறகு அந்த வழக்கிற்கான இறுதி தீர்ப்பை நீதிபதி வழங்குகிறார் அந்த வழக்கின் தீர்ப்பை எப்படி பெறுவது அந்த தீர்ப்பு எப்போது கிடைக்கும் என்ற மக்களின் பல கேள்விகளுக்கு பதிலை இந்த கட்டுரையில் விபரமாக தெரிந்துகொள்ளலாம்.

 *நீதிமன்ற தீர்ப்பு என்றால் என்ன?* 

ஒரு சர்ச்சையைத் தீர்த்து, கட்சிகளின் உரிமைகள் மற்றும் கடமைகளைத் தீர்மானிக்கும் நீதிமன்றம் அல்லது தீர்ப்பாயத்தின் வழக்கின் விசாரணை முடிந்த இறுதிப் பகுதியாகும் இதை நீதிமன்ற இறுதி உத்தரவு எனலாம். 

ஒரு செல்லுபடியாகும் தீர்ப்பு அனைத்து போட்டியிட்ட சிக்கல்களையும் தீர்க்கிறது மற்றும் வழக்கிற்கு முடிவுக்குக் கொண்டுவருகிறது, ஏனெனில் இது நீதிமன்றத்தின் முன் நிலுவையில் உள்ள நடவடிக்கை குறித்த சட்டத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பாகக் கருதப்படுகிறது. வழக்கில் யார் வெற்றி பெறுகிறார்கள் மற்றும் வெற்றியாளருக்கு என்ன தீர்வுகள் வழங்கப்படும் என்று அது குறிப்பிடுகிறது. பரிகாரங்களில் பண சேதங்கள், தடை நிவாரணம் அல்லது இரண்டும் இருக்கலாம். 

ஒரு தீர்ப்பு வழக்கில் நீதிமன்றத்தின் அதிகார வரம்பின் முடிவையும் குறிக்கிறது. சிவில் நடைமுறையின் கூட்டாட்சி விதிகள் மற்றும் சிவில் நடைமுறையின் பெரும்பாலான மாநில விதிகள் இறுதித் தீர்ப்புகளிலிருந்து மட்டுமே மேல்முறையீடுகளை அனுமதிக்கின்றன. 

ஒரு தீர்ப்பு எழுத்துப்பூர்வமாக இருக்க வேண்டும் மற்றும் அனைத்து சிக்கல்களும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளன என்பதை தெளிவாகக் காட்ட வேண்டும். அது குறிப்பாக யாருக்கு ஆதரவாகவும் எதிராகவும் கொடுக்கப்பட்டுள்ளது என கட்சிகளைக் குறிக்க வேண்டும். 

பணவியல் தீர்ப்புகள் திட்டவட்டமானதாகவும், உறுதியுடன் குறிப்பிடப்பட்டதாகவும், புள்ளிவிவரங்களைக் காட்டிலும் வார்த்தைகளில் வெளிப்படுத்தப்பட்டதாகவும் இருக்க வேண்டும். உண்மையான சொத்துக்களின் வழக்குகளில் தீர்ப்புகள் நிலத்தை எளிதில் அடையாளம் காணும் வகையில், நிலத்தின் வெளிப்படையான விளக்கத்தைக் கொண்டிருக்க வேண்டும்.

 *நீதிமன்ற தீர்ப்பை எப்பொழுது பெற முடியும்?* 

நீதிமன்ற தீர்ப்பை அன்றைய தினமே நீதிமன்றத்தில் தெரிந்து கொள்ள முடியும். நீதிமன்ற தீர்ப்பை ஒரு நீதிபதி வழங்கும்போது அந்த நீதிமன்றத்தில் அந்த தீர்ப்பை பற்றி சொல்லித்தான் தீர்ப்பை வழங்குவார், 

ஒருவேளை அதை நாம் கவனிக்க தவறினால் அந்த தீர்ப்பை தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் நீதிமன்றங்களில் கோர்ட் டைரி என்ற நடைமுறையின் மூலமாக தினம் நடைபெறும் நீதிமன்ற நடைமுறைகளை பதிவிட்டு பதிவேடுகள் மூலமாக பாதுகாத்து வருவார்கள் அந்த கோட்டையில் நீதிமன்றத் தீர்ப்பில் என்ன சொல்லி இருக்கிறார்கள் என்பதை உங்கள் வழக்கறிஞர் மூலமாக படித்து தெரிந்து கொள்ள முடியும். 

நீதிமன்ற வாதியோ அல்லது பிரதிவாதியோ நீதிமன்ற தீர்ப்பை முழுமையாக தெரிந்து கொள்ள நீதிமன்றத்தில் அந்த வழக்கு என்னை பதிவிட்டு மனு கொடுத்து நகலை பெற்று தான் முழுமையாக தெரிந்து கொள்ள முடியும்.

 *நீதிமன்ற தீர்ப்பை பாதுகாக்கும் முறை?* 

நீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கியவுடன், அது நீதிமன்ற நிர்வாகி அலுவலகத்துடன் தேதியிடப்பட்டு ஆவணப்படுத்தப்பட வேண்டும். நவீன கணினி தரவுத்தளங்களுக்கு முன், அகர வரிசைப்படி தீர்ப்புகள் ஒரு டாக்கெட் docketed புத்தகத்தில் உள்ளிடப்பட்டு வழக்கில் தொடர்புடையவர்கள் அறியும் படி அவற்றை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க முடியும். 

பதிவு செய்தல் மற்றும் அறிவிப்பு நோக்கங்களுக்காக நீதிமன்ற நிர்வாகியால் தீர்ப்புகளின் அட்டவணை தயாரிக்கப்பட்டு தீர்ப்புகள் பாதுகாக்கப்பட வேண்டும். தற்போது நீதிமன்றங்கள் இப்போது தங்கள் தீர்ப்புகளை மின்னணு முறையில் பதிவு செய்து கணினியில் ஆவணப்படுத்தி தகவல்களைப் பராமரிக்கின்றன. தகவல்களைச் சேமிப்பதற்கான வழிமுறைகள் வேறுபட்டாலும், அடிப்படை செயல்முறை அப்படியே உள்ளது.

 *நீதிமன்ற வழக்கு தீர்ப்பு நகல் கிடைக்க எவ்வளவு நாட்கள் ஆகும்?* 

நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று அந்த வழக்கிற்கான தீர்ப்பை வழங்கிய பிறகு அந்த தீர்ப்பின் முழு விபரத்தை தெரிந்து கொள்ள அந்த தீர்ப்புக்கான நகலை நீதிமன்றத்தில் பெறுவதற்காக நகல் மனு ஒன்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். நீதிமன்ற அலுவலகம் அந்த நகல் மனுவை சரி பார்த்து மனு அளித்தது வாதியாகவோ பிரதிவாதியாகவோ இருக்கும் பட்சத்தில் அந்த மனுவை ஏற்றுக் கொண்டு மூன்று அல்லது ஐந்து நாட்களுக்குள் நகலை கொடுப்பார்கள்.

மனுவை சரிபார்க்கும் போது வாதி மற்றும் பிரதிவாதியை தவிர்த்து வழக்கிற்கு சம்மிந்தமில்லாத மூன்றாம் நபர் நகல் மனுவை தாக்கல் செய்திருந்தால் அந்த மனு நிராகரிக்கப்படும்.

 *வழக்கின் தீர்ப்பின் நகல் மூன்றாம் நபருக்கு வழங்கப்படுமா?* 

ஒரு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று அந்த வழக்கிற்கு தீர்ப்பு வழங்கியவுடன் அந்த வழக்கிற்கு சம்மந்தமில்லாத மூன்றாம் நபருக்கு அந்த வழக்கின் தீர்ப்பு வேண்டுமென்றால், அந்த மூன்றாம் நபர் நீதிமன்றத்தில் நகல் வேண்டும் என்று மனு செய்து நீதிமன்ற விசாரணையில் எதற்காக தனக்கு தீர்ப்பு நகல் தேவை என்ற காரணத்தை சொல்லி நீதிமன்ற உத்தரவு பெற்றால் மட்டுமே அவருக்கு வழக்கின் தீர்ப்பு நகல் வழங்கப்படும்.

மூன்றாம் நபர் சொல்லும் காரணத்தை நீதிமன்றம் ஏற்கவில்லை என்றால் அவரது மனு நிராகரிக்கப்படும் அவருக்கு நீதிமன்ற தீர்ப்பின் நகல் வழங்கப்படாது.

 *நீதிமன்ற தீர்ப்பு நகலுக்கு கட்டணம் உண்டா?* 

ஆம் நீதிமன்ற தீர்ப்பு நகலுக்கு கட்டணம் செலுத்த வேண்டும். உடனடியாக நகல் வேண்டுமென்றால் (urgent) சாதாரணமாக செலுத்தும் கட்டணத்தைவிட அதிகமாக கட்டணம் செலுத்தினால் வேகமாக நீதிமன்ற உத்தரவு நகல் (urgent copy) உடனடியாக வழங்குவார்கள்.

 *நீதிமன்ற தீர்ப்பு நகலின் கட்டணம் விபரம் மற்றும் மனு செய்யும் முறை?* 

நீதிமன்ற தீர்ப்பு நகலின் மனுவை தயார் செய்து அதில் 2. ரூபாய்க்கான நீதிமன்ற ஸ்டாம் கட்டணமாக ஒட்ட வேண்டும். பின் அந்த மனுவை சரி பார்த்து எவ்வளவு காகிதங்கள் நீதிமன்ற உத்தரவுக்கு வேண்டுமென்று குறிப்பிட்டு நோட்டிஸ் ஒட்டப்படும் பின்னர் அதன் படி அதற்க்கான தனி மனுவில் தேவைப்படும் காகிதங்களை இணைத்து திரும்பவும் மனு கொடுக்க வேண்டும். 

குறிப்பு பக்கங்களை பெறுத்து கட்டணங்கள் கூறப்பட்டிருக்கும் அந்த கட்டணத்தை செலுத்திய பிறகு நீதிமன்ற உத்தரவை உங்களுக்கு நகல் எடுத்து வழங்கப்படும்.

இந்த நகலை அங்கீகரிக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவு நகல் (certified judgement copy) என்று கூறலாம். இது ஒரிஜினல் (original) நீதிமன்ற உத்தரவு இதை தான் வழக்கு முடிந்த பிறகு நாம் அனைத்து சம்பந்தப்பட்ட வேலைகளுக்கும் பயன்படுத்த முடியும்.

மாநில நுகர்வோர் தகராறுகளை நிவர்த்தி செய்யும் ஆணையத்தில், செனானா

 மாநில நுகர்வோர் தகராறுகளை நிவர்த்தி செய்யும் ஆணையத்தில், செனானா


மாண்புமிகு டாக்டர் நீதியரசர் எஸ்.தமிழ்வாணன் திரு.கே.பாஸ்கரன் தலைவர் நீதித்துறை உறுப்பினர் மு


F.A.NO 235/20


(சிசி.எண். 264/2010 தேதியிட்ட 29.6.2011 இல் உள்ள உத்தரவுக்கு எதிராக, கோயம்புத்தூர் டிசிடிஆர்எஃப் கோப்பில்


2018 ஜூலை 27 ஆம் தேதி வெள்ளிக்கி


ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு, மண்டல அலுவலகம், பவிஷ்ய நிதி பவன் பி.பி.3875, டாக்டர்.பாலசுந்தரம் சாலை, கோயம்புத்தூர் 641 0


காமரா


..முறையீடு செய்பவர்/1 வது எதிர் தரப்


1.எஸ்.திவ்யா எண்.83-டி, பொன்னுரங்கம் சாலை மேற்கு, ஆர்.எஸ்.புரம், கோயம்புத்தூர் 641 0


..1 வது பதிலளிப்பவர்/புகார்தார


2. கிளை மேலாளர், ஐசிஐசிஐ வங்கி லிமிடெட். அவிநாசி சாலை, கோயம்புத்தூர் 641 00


..2வது பிரதிவாதி/2வது எதிர் தரப்


 மேல்முறையீட்டாளருக்கான வழக்கறிஞ


: எம்/கள் கே. ரா


1வது பதிலளிப்பவ


: P.P. விளைவு, இல்லை என்று அழைக்கப்பட்ட


2வது பிரதிவாதிக்கான வழக்கறிஞர்: எம்.எஸ்.எஸ்.நமசிவாய


இறுதியாக 9.7.2018 அன்று விசாரணைக்கு வரும் இந்த மேல்முறையீட்டு மனு, கோயம்புத்தூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தின் பதிவேடுகளை ஆராய்ந்து, இரு தரப்புகளையும் விசாரித்து, இந்த ஆணையம் கீழ்க்கண்ட உத்தரவை பிறப்பித்தது


மாண்புமிகு டாக்டர் நீதியரசர் எஸ்.தமிழ்வாணன் தலைவர் அவர்களா


காமரா


1. 29.06.2011 தேதியிட்ட உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்தவர் மேல்முறையீடு செய்ய விரும்பினார். கோயம்புத்தூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தின் கோப்பில் CC.NO.264/2010 இல் செய்யப்பட்டது. குற்றஞ்சாட்டப்பட்ட உத்தரவின்படி, முதல் எதிர் தரப்புக்கு அனுப்பப்பட்ட புகார் ஓரளவு அனுமதிக்கப்பட்


a) சேவை குறைபாடு, மன வேதனை மற்றும் துன்பம் ஆகியவற்றிற்கு இழப்பீடாக ரூ.10,000/- செலுத்த வேண்டு


b) புகார்தாரருக்கு வழக்குச் செலவுகளுக்காக ரூ.1000/- தொகையைச் செலுத்தவும்


முதல் பிரதிவாதி/புகார்தாரரின் வழக்கின் சுருக்கமான உண்மைக


புகார்தாரரின் வழக்கு என்னவென்றால், மேல்முறையீடு செய்பவர்/முதல் எதிர் தரப்பு PF A/C எண்.73054/784-க்கு மேல்முறையீட்டாளர்/முதல் எதிர் தரப்பு அனுப்பிய முதல் பிரதிவாதி/புகார்தாரருக்கு ரூ.6690/- செலுத்த வேண்டும். இரண்டு காசோலைகள் dt 17.08.2009, ஒன்று ரூ.4,429/- மற்றும் மற்றொன்று ரூ. 2261/- இரண்டாவது பிரதிவாதி/இரண்டாம் எதிர் தரப்புக்கு, ஐசிஐசிஐ வங்கி லிமிடெட், அவினாசி ரோடு, கோயம்புத்தூர், இரண்டாவது பிரதிவாதி வங்கியால் பராமரிக்கப்படும் புகார்தாரரின் சேமிப்பு வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்


 மேற்கூறிய காசோலைகள் மேல்முறையீட்டாளரால் 19.08.2009 அன்று இரண்டாவது பிரதிவாதிக்கு அனுப்பப்பட்டது. எவ்வாறாயினும், இரண்டாவது பிரதிவாதி/2வது எதிர் தரப்பினரால், முதல் பிரதிவாதி/புகார்தாரரின் கணக்கில் அது வரவு வைக்கப்படவில்லை, முதல் பிரதிவாதி/புகார்தாரர் அதை நேரிலும் தொலைபேசியிலும் எதிர் தரப்பினரின் கவனத்திற்குக் கொண்டு வந்தபோது, பதில் மேற்கூறிய காசோலைகளை கண்டுபிடிக்க முடியவில்


3. முதல் பிரதிவாதி/புகார்தாரரின் கூற்றுப்படி, இது எதிர் தரப்பினரின் சேவை குறைபாடு மட்டுமே, இதன் மூலம் முதல் பிரதிவாதி/புகார்தாரர் தூணிலிருந்து பதவிக்கு தள்ளப்பட்டார். அதைத் தொடர்ந்து, முதல் பிரதிவாதி/புகார்தாரர் எதிர்த் தரப்பினருக்கு 4.12.2009 தேதியிட்ட சட்டப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார், இதற்கு மேல்முறையீடு செய்தவர்/முதல் எதிர் தரப்பு 5.01.2010 தேதியிட்ட பதிலை அனுப்பினார். இருப்பினும், ஆகஸ்ட் 2009 மாதம், இரண்டாவது பிரதிவாதி/இரண்டாம் எதிர் தரப்பால் முதல் பிரதிவாதி/புகார்தாரருக்கு ஆதரவாகத் தொகை வரவு வைக்கப்படவில்லை. எனவே 4.12.2009 தேதியிட்ட சட்ட நோட்டீஸ், முதல் பிரதிவாதி/புகார்தாரர் எதிர் தரப்பு 1 மற்றும் 2 க்கு சட்ட நோட்டீசுக்காக அனுப்பப்பட்டது, மேல்முறையீட்டாளர்/1வது எதிர் தரப்பின் பதில், Ex.A.3 பெறப்பட்டது, இருப்பினும் இல்லை. இரண்டாவது எதிர்தரப்பு ICICI வங்கி லிமிடெட் இருந்து பதில், மற்றும் தொகை முதல் பிரதிவாதி/புகார்தாரர் கணக்கில் இரண்டாவது பிரதிவாதி/2வது எதிர் தரப்பினரால் வரவு வைக்கப்படவில்லை. எனவே முதல் பிரதிவாதி/புகார்தாரருக்கு இழப்பீடு கோரி கோவை மாவட்ட மன்றத்தில் புகார் அளிக்கப்பட்டது


மேல்முறையீட்டாளரின்/முதல் எதிர் தரப்பின் எழுத்து வடிவ


4. எழுதப்பட்ட பதிப்பில், மேல்முறையீட்டாளர் முதல் எதிர்தரப்பு, முதல் பிரதிவாதி/புகார்தாரருக்குச் செலுத்த வேண்டிய தொகை இரண்டு காசோலைகள் மூலம் அனுப்பப்பட்டதாகக் கூறியது, காசோலை எண்.634483, 484085 தேதியிட்ட 17.8.2009 மற்றும் இரண்டு காசோலைகளும் எடுக்கப்பட்டன. ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, கோயம்புத்தூர் கிளையிலிருந்து முறையே ரூ.4,429/- மற்றும் ரூ.2261/-க்கு


5. மேல்முறையீடு செய்தவர்/முதல் எதிர் தரப்பின் படி, 17.8.2009 தேதியிட்ட காசோலைகள் அனுப்பப்பட்


மேல்முறையீடு செய்தவர்/முதல் எதிர் தரப்புக்கு இரண்டாவது பிரதிவாதி/இரண்டாம் எதிர் தரப்பு குறிப்பிட்ட நபரு


முதல் பதிலளிப்பவர்/புகார்தாரர் மற்றும் காசோலைகளின் கணக்கில் தொகையை வரவு வைக்க அறிவுறுத்த


கோயம்புத்தூரில் உள்ள ஆர்.எம்.எஸ் தபால் நிலையத்தின் மூலம் விரைவு தபால் மூலம் அனுப்பப்பட்டது. இருப்பினும் மேல்முறையீடு செய்பவர்/முதல் எதி


புகார்தாரரின் கணக்கில் காசோலைகள் வரவு வைக்கப்படாதது குறித்து கட்சிக்கு தெரியா


மேல்முறையீடு செய்பவர்/முதல் எதிர் தரப்பினர் சட்ட நோட்டீஸைப் பெற்ற பிறகுதான் இதைப் பற்றித் தெரிந்து கொண்டன


4.12.2009 தேதியிட்ட முதல் பிரதிவாதி/புகார்தாரர் அனுப்பினார். நோட்டீஸ் கிடைத்ததும், மேல்முறையீடு செய்பவர்


முதல் எதிர் தரப்பு ஒரு பதிலை அனுப்பியது, அதன் மூலம் புகார்தாரருக்கு உண்மைகளை தெரிவித்


மூலம் அனுப்பப்பட்ட சட்ட நோட்டீஸ் கிடைத்த பிறகும் காசோலைகள் பணமாக இல்லாமல் இருந்


புகார்தாரர். இரண்டாவது எதிர் தரப்பு எந்த காரணத்தையும் மேல்முறையீடு செய்தவருக்கு/முதல் எதிரிக்கு தெரிவிக்கவில்


பிரதிவாதி/புகார்தாரருக்கு ஆதரவாக அனுப்பப்பட்ட இரண்டு காசோலைகளின் கடன் பெறாத காரணத்திற்கா


இரண்டாவது பிரதிவாதி/இரண்டாம் எதிர் தரப்பால் தாக்கல் செய்யப்பட்ட எழுத்துப் பதிப்பின் குறைகள்


ஐசிஐசிஐ வங்கி லிமிடெட், கோயம்புத்தூர் கிளை, இரண்டாவது பிரதிவாதி/இரண்டாவது எதிர் தரப்பு முற்றிலும் உள்ள


634483 மற்றும் 484085 ஆகிய இரண்டு காசோலைகளுக்கு ரூ. 4429/- மற்று


ரூ.2261/- தேதி 17.8.2009. எனினும் 4.12.2009 அன்று சட்ட அறிவிப்பு வெளியிடப்பட்டது என்ற உண்மையை ஒப்புக்கொண்டா


முதல் பிரதிவாதி/புகார்தாரர் இரண்டாவது பிரதிவாதி/இரண்டாம் எதிர் தரப்புக்கு. பிற


சட்டப்பூர்வ அறிவிப்பின் ரசீது, மேல்முறையீடு செய்தவர்/முதல் எதிர் தரப்பு மற்ற இரண்டு காசோலைகளை இரண்டாவதாக அனுப்பினா


பதிலளிப்பவர்/இரண்டாம் எதிர் தரப்பு 1வது பிரதிவாதி/புகார்தாரரின் கணக்கில் வரவு வைக்கப்படு


 மற்றும் அடுத்தடுத்த இரண்டு காசோலைகள் முறையே ரூ.4,777/-க்கான எண். 430090 மற்றும் காசோலை எண். 365620 ரூ. கூறப்பட்ட அடுத்தடுத்த காசோலைகளில் கூறப்பட்ட தொகைகள், சர்ச்சைக்குரிய இரண்டாவது பிரதிவாதி/இரண்டாம் எதிர் தரப்பினரால் முதல் பிரதிவாதி/புகார்தாரரின் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. எழுதப்பட்ட பதிப்பு மற்றும் எழுதப்பட்ட வாதங்களில், இரண்டாவது பிரதிவாதி 17.8.2009 தேதியிட்ட காசோலைகள் இரண்டாவது பிரதிவாதி/இரண்டாம் எதிர் தரப்பினரால் பெறப்படவில்லை, எனவே காசோலைகள் தொடர்பான தொகையை முதல் பிரதிவாதிக்கு சாதகமாக வரவு வைக்க முடியவில்லை. புகார்தாரர்


மாவட்ட நுகர்வோர் மன்றம், கோயம்புத்தூர், புகாரில் செய்யப்பட்ட குறைகளை பரிசீலித்து, அதே போல் இரு தரப்பினரும் தாக்கல் செய்த எழுத்துப் பதிப்புகள் மற்றும் புகார்தாரரின் பக்கத்தில் Ex.A.1 முதல் A.5 மற்றும் Ex. என குறிக்கப்பட்ட ஆவணங்கள். பி.1 முதல் பி.5 வரை மற்றும் இரு தரப்பினரும் முன்வைத்த வாதங்கள், முதல் பிரதிவாதி/புகார்தாரர் மேல்முறையீடு செய்பவர்/முதல் எதிர் தரப்புக்கு எதிராக மட்டுமே சேவைக் குறைபாட்டை ஏற்படுத்தியிருப்பதாகவும், அதன்படி ரூ. 10,000/- மற்றும் செலவு ரூ. வழக்குச் செலவுகளுக்காக 1000/- கோயம்புத்தூர் மாவட்ட மன்றம், மேல்முறையீடு செய்தவர்/முதல் எதிர் தரப்புக்கு எதிராக மட்டும் உத்தரவிட்டது. மேல்முறையீட்டாளர்/1 வது எதிர் தரப்பு மேல்முறையீட்டில், இரண்டாவது பிரதிவாதி/இரண்டாம் எதிர் தரப்பு, மேல்முறையீட்டாளர்/1வது எதிர் தரப்பு அனுப்பிய முந்தைய இரண்டு காசோலைகளை வரவு வைக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். முதல் பிரதிவாதி/புகார்தாரர். எவ்வாறாயினும், மேல்முறையீட்டாளர்/முதல் எதிர் தரப்பு முதல் பிரதிவாதி/புகார்தாரருக்கு ஆதரவாக இரண்டாவது பிரதிவாதி/இரண்டாம் எதிர்தரப்புக்கு அனுப்பிய இரண்டு காசோலைகள், முதல் பிரதிவாதி/புகார்தாரருக்கு சாதகமாக வரவு வைக்கப்பட்டதால், மேல்முறையீட்டாளரின் கூற்றுப்படி, கீழே உள்ள நீதிமன்றம் இருக்க வேண்டும். இரண்டாவது பிரதிவாதி/இரண்டாவது எதிர் தரப்பு வங்கிக்கு எதிராக மட்டுமே சேவை குறைபாடு கண்டறியப்பட்டது, மேல்முறையீடு செய்தவர்/முதல் எதிர் தரப்புக்கு எதிராக அல்ல. ஒரே அடிப்படையில், மேல்முறையீடு செய்பவர்/முதல் எதிர் தரப்பால் விரும்பப்படுகிற


மரா மேல்முறையீட்டில், தீர்மானிக்கப்படுவதற்கு பின்வரும் புள்ளிகள் எழுகின்றன


1. முதல் பிரதிவாதி/புகார்தாரருக்கு எதிராக எந்த எதிர் தரப்பு சேவை குறைபாட்டை ஏற்படுத்தியது


2. மேல்முறையீடு செய்பவர்/முதல் எதிர் தரப்பு எழுப்பிய அடிப்படையில் மேல்முறையீடு அனுமதிக்கப்பட வேண்டு


புள்ளி எண்.


இந்த முறையீட்டில், முதல்வருக்கு எதிராக சேவை குறைபாடு இருந்தது என்பது தெளிவாக்கப்பட்டுள்ள


பதிலளிப்பவர்/புகார்தாரர் மற்றும் அவள் PF தொகையைப் பெறுவதில் தூணிலிருந்து பதவிக்கு தள்ளப்பட்டா


நுகர்வோர் புகாரை மாவட்டத்திற்கு முன் தாக்கல் செய்ய முதல் பிரதிவாதி/புகார்தாரர் தே


மன்றம், கோயம்புத்தூர். முதல் பிரதிவாதி/புகார்தாரர் திருமதி திவ்யா என்பது ஒப்புக்கொள்ளப்பட்ட உண்


பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பால் செலுத்தப்படும் ரூ,6690/- தொகைக்கு உரிமை உண்டு


இதில் மேல்முறையீடு செய்பவர்/முதல் எதிர் தரப்


மேல்முறையீட்டாளர்/முதல்வரின் படி, முதல் பிரதிவாதி/புகார்தாரர் கொடுத்த விருப்பத்தின் பார்வையி


எதிர் தரப்பு, 17.8.2009 தேதியிட்ட 634483 மற்றும் 484085 எண்களைக் கொண்ட இரண்டு காசோலைகள் மாநிலத்தில் எடுக்கப்பட்ட


பாங்க் ஆப் இந்தியா, கோயம்புத்தூர், ரூ. 4429/- மற்றும் ரூ.2261/- முறையே அனுப்பப்பட்ட


மேல்முறையீடு செய்தவர்/முதல் எதிர் தரப்பு, இரண்டாவது பிரதிவாதி/இரண்டாம் எதிர் தரப்பு, ஐசிஐசிஐ வங்கி லிமிடெ


058701503276 என்ற கணக்கில் முதல் பிரதிவாதி/புகார்தாரரின் கணக்கில் வரவு வைக்கப்பட வேண்டும்


இரண்டாவது பிரதிவாதி வங்கியால் பராமரிக்கப்படுகிற


 இரண்டாவது பிரதிவாதி/இரண்டாம் எதிர் தரப்பு மேல்முறையீட்டாளரின்/முதல்வரின் அபிப்பிராயங்களை முற்றிலுமாக மறுத்துள்ள


17.8.2009 தேதியிட்ட இரண்டு காசோலைகளை இரண்டாவது பிரதிவாதி/இரண்டாம் நபருக்கு அனுப்பும் எதிர் தரப்


எதிர் தரப்பு, முதல் பிரதிவாதி/புகார்தாரரின் கணக்கில் வரவு வைக்கப்படும். தொகைகள் என்பதா


முதல் பிரதிவாதி/புகார்தாரருக்கு ஆதரவாக இரண்டாவது பிரதிவாதியால் வரவு வைக்கப்படவில்


4.12.2009 தேதியிட்ட நோட்டீஸ் முதல் பிரதிவாதி/புகார்தாரர் மேல்முறையீட்டாளர்/முதல்வருக்கு வழங்கப்பட்டது


எதிர் தரப்பு அதே போல் இரண்டாவது பிரதிவாதி/இரண்டாம் எதிர் தரப்பு. சட்ட அறிவிப்பின் ந


Ex.A.1 எனக் குறிக்கப்பட்டுள்ளது, இதில் முதல் பிரதிவாதி/புகார்தாரர் குறிப்பாக குறிப்பிட்டுள்ளா


அவளுக்கு செலுத்த வேண்டிய தொகை ரூ. 6690/- அவரது PF கணக்கு எண். 73054/784 இன் படி, மற்றும் குறிப்பிட்ட தொ


17.8.2009 தேதியிட்ட இரண்டு காசோலைகள் மூலம் மேல்முறையீட்டாளர்/முதல் எதிர் தரப்பால் அனுப்பப்பட்ட


மேல்முறையீடு செய்பவர்/முதல் எதிர் தரப்பினருக்கு ஆதரவாக அவரது எஸ்.பி கணக்கு எண். 058701503276 இல் வரவு வைக்கப்படும்


முதல் பிரதிவாதி/புகார்தாரர். அது அவளுக்கு வாய்வழியாகத் தெரிவிக்கப்பட்டது, இருப்பினும் அ


இரண்டாவது பிரதிவாதி/இரண்டாவது எதிர் தரப்பு வங்கியிடம் சரிபார்க்கப்பட்டது, அவளுக்கு அப்படி எதுவும் இல்லை என்று தெரிவிக்கப்பட்ட


அவர்களிடம் காசோலைகள் பெறப்பட்டன. பிஎஃப் தொகையை வரவு வைப்பதற்கு சரியான பதில் வராததா


முதல் பிரதிவாதி/புகார்தாரருக்கு ஆதரவாக புகார்தாரரால் சட்ட அறிவிப்பு வெளியிடப்பட்ட


மேல்முறையீடு செய்பவர்/முதல் எதிர் தரப்பு மற்றும் இரண்டாவது பிரதிவாதி/இரண்டாம் எதிர் தரப்பு


புகார்தாரர் அனுப்பிய சட்டப்பூர்வ நோட்டீஸ் இரு தரப்பாலும் பெறப்பட்டது என்பது சர்ச்சைக்குரியது அல்ல, இருப்பினும் பதில் மேல்முறையீடு செய்தவர்/முதல் எதிர் தரப்பால் மட்டுமே அனுப்பப்பட்டது மற்றும் காரணங்களுக்காக இரண்டாவது பிரதிவாதி/இரண்டாம் எதிர் தரப்பால் பதில் எதுவும் அனுப்பப்படவில்லை. இரண்டாவது பிரதிவாதி/இரண்டாம் எதிர் தரப்பினருக்கு முறையாக நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்தாலும், 2வது பிரதிவாதிக்கு நன்கு தெரிந்தவர், இரண்டாவது பிரதிவாதிக்கு சட்டப்பூர்வ அறிவிப்பு சேவைக்காக, புகார்தாரரால் பெறப்பட்ட அஞ்சல் ஒப்புகை அட்டை Ex.A எனக் குறிக்கப்பட்டுள்ளது. .4. சட்ட நோட்டீஸில், முதல் பிரதிவாதி/புகார்தாரர் இரு தரப்பையும் நேரில் அணுகி, பிஎஃப் திட்டத்தின் கீழ் தனக்குச் செலுத்த வேண்டிய பணத்தைப் பெறுவதில் தனது இயலாமையை விளக்கியதாகத் தெளிவுபடுத்தியுள்ளார், அதற்கு மேல்முறையீட்டாளர்/முதல் எதிர் தரப்பு பதிலளித்தார். கூறப்பட்ட தொகை ரூ.6690/- அவரது கணக்கில் இரண்டாவது பிரதிவாதி/இரண்டாம் எதிர் தரப்புக்கு வரவு வைக்கப்படுவதற்காக இரண்டு காசோலைகள் மூலம் அனுப்பப்பட்டது, எனவே மேல்முறையீடு செய்தவர்/முதல் எதிர் தரப்பு மீது எந்த தவறும் இல்


முதல் பிரதிவாதி/புகார்தாரர் தனது கணக்கில் வரவு வைக்கப்பட வேண்டிய தொகையை இரண்டாவது பிரதிவாதியால் பராமரிக்கப்பட்டு அனுப்புவதற்கு ஒப்புக்கொண்டது சர்ச்சைக்குரியதல்ல. மேற்கூறிய சூழ்நிலைகளில். இரண்டாவது பிரதிவாதி/இரண்டாம் எதிர் தரப்பு குறைந்தபட்சம் காசோலைகள் வங்கிக்கு வரவில்லை என்று பதிலை அனுப்பியிருக்கலாம், இருப்பினும் விசித்திரமாக அவர்கள் பதில் அனுப்பாமல் அமைதியாக இருந்தனர், இது வாடிக்கையாளரின் உரிமைகளைப் பாதுகாப்பதில் வங்கியின் பொறுப்பான அணுகுமுறை அல்ல. நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நுகர்வோர்


மேல்முறையீடு செய்பவர்/முதல் எதிர் தரப்பு, இவரிடம் இருந்து பெறப்பட்ட சான்றிதழை சமர்ப்பித்துள்ளா


மேலாளர், தேசிய வேக அஞ்சல் மையம், கோயம்புத்தூர் மற்றும் மேல்முறையீட்டில் Ex.B.1 எனக் குறித்துள்ளா


இதில், ஸ்பீட் போஸ்ட் மூலம் ஒரு கட்டுரையை அஞ்சல் துறை குறிப்பாகக் கூறியுள்


பரிவர்த்தனை எண். ET 52607016-61N ஐசிஐசிஐ வங்கி, அவிநாசி சாலை, கோயம்புத்தூர் என்ற முகவரிக்கு அனுப்பப்பட்டது


இரண்டாவது பிரதிவாதி/இரண்டாம் எதிர் தரப்பினரின் முகவரிக்கு தெளிவான கூற்றின் கீழ் வழங்கப்பட்டது. அன்


சரிபார்ப்பு, மேல்முறையீடு செய்தவர்/முதல் எதிர் தரப்பு அவர்களின் எழுத்துப் பதிப்பில் உள்


17.8.2009 தேதியிட்ட இரண்டு காசோலைகள் கோயம்புத்தூரில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் எடுக்கப்பட்டவை என்று குறிப்பிட்டது


மூலம் RMS தபால் அலுவலகத்தில் ஸ்பீட் போஸ்ட் மூலம் இரண்டாவது பிரதிவாதி/இரண்டாம் எதிர் தரப்புக்கு அனுப்பப்பட்


பதிவு எண். ET 52607016-61N. தபால் துறையினர் பொய்யாக கொடுக்க வேண்டிய அவசியம் இல்


இரண்டாவது பிரதிவாதி/இரண்டாம் எதிர் தரப்புக்கு ஸ்பீட் போஸ்ட் சேவைக்கான அறிக்


தொடர்புடைய தேதி மற்றும் இரண்டாவது மூலம் அஞ்சல் துறை மீது குறிப்பிட்ட குற்றச்சாட்டு எதுவும் இல்


பதிலளிப்பவர்/இரண்டாம் எதிர் தரப்பு சான்றிதழுடன் அஞ்சல் மூலம் வழங்கப்பட்ட Ex.B


துறை. பதிவில் கிடைக்கும் ஆதாரங்கள் மற்றும் முன்வைக்கப்பட்ட வாதங்கள் மூலம் சென்ற பிற


 கணக்கு வைத்திருப்பவராகவும், நுகர்வோராகவும் இருக்கும் முதல் பிரதிவாதி/புகார்தாரரின் நலனைப் பாதுகாப்பதில், இரண்டாவது பிரதிவாதி/இரண்டாம் எதிர் தரப்பு சரியான பொறுப்புடன் கவனமாகச் செயல்படவில்லை என்பதை இரு தரப்பும் மேல்முறையீட்டில் கருதுகிறோம். நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 1986 இன் கீழ் எதிர் தரப்பு வங்கி


முதல் பிரதிவாதி/புகார்தாரர் மீது சட்டப்பூர்வ அறிவிப்பை அனுப்புவதன் மூலம் ஒரு குறிப்பிட்ட குற்றச்சாட்டு இருக்கும் போது, மேல்முறையீட்டாளர்/1 வது எதிர் தரப்பினரால் அவருக்கு இரண்டு காசோலைகள் அனுப்பப்பட்டதாக இரண்டாவது பிரதிவாதிக்கு அவரது கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. அனைத்து தொடர்புடைய விவரங்களுடன் இரண்டாவது பிரதிவாதி வங்கி, இரண்டாவது பிரதிவாதியின் மந்தமான அணுகுமுறை, சட்ட நோட்டீசுக்கு கூட பதில் அனுப்பாதது மற்றும் இரண்டாவது பிரதிவாதி/இரண்டாம் எதிர் தரப்பால் பராமரிக்கப்படும் தொடர்புடைய பெறப்பட்ட பதிவேட்டை தயாரிக்காதது மேல்முறையீட்டாளரால் குறிக்கப்பட்ட அஞ்சல் துறை Ex.B.1, இரண்டாவது பிரதிவாதி வங்கிக்கு எதிராக பாதகமான அனுமானத்திற்கு வழிவகுக்கு


இரண்டாவது பிரதிவாதிக்காக ஆஜரான கற்றறிந்த ஆலோசகர் வாதிட்டபடி, மேல்முறையீட்டாளருக்கு நன்கு தெரிந்த காரணங்களுக்காக 17.8.2009 தேதியிட்ட இரண்டு காசோலைகளுடன், இரண்டாவது பிரதிவாதிக்கு அனுப்பப்பட்ட கடிதத்தின் நகலை மேல்முறையீட்டாளர் சமர்ப்பிக்கவில்லை. உண்மைகள் மற்றும் சூழ்நிலைகளில், எதிர் தரப்பினர் 1 மற்றும் 2 இல் பங்களிக்கும் அலட்சியம் இருப்பதாக நாங்கள் கருதுகிறோம், இருப்பினும் மாவட்ட மன்றம் முறையீடு செய்தவர்/முதல் எதிர் தரப்புக்கு எதிராக மட்டுமே பொறுப்பை தவறாக நிர்ணயித்துள்ளது. எனவே, முதல் பிரதிவாதி/புகார்தாரருக்கு ஏற்படும் சேவைக் குறைபாட்டிற்கு இரு தரப்பினரும் கூட்டாகப் பொறுப்பேற்க வேண்டும் என்ற உறுதிமொழி எண். 1க்கு நாங்கள் பதிலளிக்கிறோம்


புள்ளி எண்


கோயம்புத்தூர் மாவட்ட மன்றம் இயற்றிய குற்றஞ்சாட்டப்பட்ட உத்தரவைக் கருத்தில் கொண்டு, மாவட்ட மன்றம் வழங்கிய இழப்பீட்டுத் தொகை நியாயமானது என்பதை உறுதிப்படுத்துவது நியாயமானது. எவ்வாறாயினும், இரண்டு எதிர் தரப்பினரும் புகார்தாரருக்கு எதிராக சேவைக் குறைபாட்டை ஏற்படுத்தியதால், இரண்டாவது பிரதிவாதி/இரண்டாம் எதிர் தரப்பை விட்டுவிட்டு, மேல்முறையீடு செய்தவர்/முதல் எதிர் தரப்புக்கு மட்டும் பொறுப்பு நிர்ணயம் செய்வதில் மாவட்ட மன்றத்தின் கருத்தை ஏற்க நாங்கள் விரும்பவில்லை. அவளுக்கு மன வேதனையையும் துன்பத்தையும் ஏற்படுத்தியது. நீதியின் முடிவைச் சந்திக்க, எதிர் தரப்பினர் இருவருக்குமான பொறுப்பை சரிசெய்வது நியாயமானது என்று நாங்கள் கருதுகிறோம். அதன்படி, இந்த மேல்முறையீட்டில் முறையே மேல்முறையீட்டாளர் மற்றும் இரண்டாவது பிரதிவாதியாக உள்ள எதிர்தரப்பு இரு தரப்பினரும் கோயம்புத்தூர் மாவட்ட மன்றத்தால் நிர்ணயம் செய்யப்பட்ட இழப்பீட்டுத் தொகையில் தலா 50% செலுத்துமாறு அறிவுறுத்துவது நியாயமானதாகவே கருதுகிறோம்


இதன் விளைவாக, மேல்முறையீடு ஓரளவு அனுமதிக்கப்படுகிறது, இதன் மூலம் நிறைவேற்றப்பட்ட உத்தரவின் பகு


மாவட்ட மன்றம், கோயம்புத்தூர், இழப்பீட்டுத் தொகையின் அளவு உறுதி செய்யப்பட்


இரு எதிர் தரப்பினருக்கும் எதிரான சேவைக் குறைபாட்டிற்கான பொறுப்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. என


இரு தரப்பினரும் கூட்டாக ரூ.10,000/- இழப்பீடாக வழங்க வேண்டு


சேவையின் குறைபாடு மற்றும் மாவட்டத்தால் தீர்மானிக்கப்பட்ட வழக்கு செலவுக்கு ரூ.1000


மன்றம். அதன்படி இழப்பீடு மற்றும் செலவில் ரூ. 11,000/-, ரூ.5500/- செலுத்த வேண்டு


மேல்முறையீடு செய்பவர்/முதல் எதிர் தரப்பு மற்றும் ரூ.5500/- இரண்டாவதாக செலுத்த வேண்டு


பதிலளிப்பவர்/முதல் பிரதிவாதி/புகார்தாரருக்கு இரண்டாவது எதிர் தரப்பு


 இந்த உத்தரவின் நகல் கிடைத்த நாளிலிருந்து 30 நாட்களுக்குள் முழுத் தொகையும் எதிர் தரப்பினரால் செலுத்தப்படும் உணர்த


இணங்காத பட்சத்தில், எதிர் தரப்பினர்/தரப்புகளுக்கு எதிராக நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் யு/எஸ் 25 மற்றும் 27 உத்தரவைச் செயல்படுத்த முதல் பிரதிவாதி/புகார்தாரருக்கும் சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது என்பதை நாங்கள் தெளிவுபடுத்தினோம்


மேல்முறையீட்டில் செலவு என உத்தர


e தமிழ்நாடு மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம், சென்னை, நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கடிதம் மற்றும் உணர்வில், பல்வேறு ஏக்கங்களில் வாடிக்கையாளர்கள்/கணக்கு வைத்திருப்பவர்களான நுகர்வோரின் உரிமைகளைப் பாதுகாப்பதில் அதிக அக்கறை கொண்டு, மாநிலப் பதிவாளருக்கு அறிவுறுத்துகிறது. ரிசர்வ் வங்கியின் தலைமை நிர்வாகியிடம் பேசுவதற்கு, நுகர்வோர் தகராறுகள் நிவர்த்தி கமிஷன்


என்னாய், அனைத்து வங்கிகளுக்கும் தகுந்த சுற்றறிக்கையை க்யூ லீவுகளில் கவுண்டர் ஃபாயிலாக வழங்குவதற்கும், ஏதேனும் டிடி/காசோலை தொடர்பான 7-இன்-ஸ்லிப் இருக்கும்போது, வங்கியின் எந்த ஊழியர்களின் முதலெழுத்து மற்றும் முத்திரையுடன் கூடிய ரசீதுகளையும் வழங்குதல். நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 1986ன் கீழ் நுகர்வோர் கணக்கு வைத்திருப்பவரால் சமர்ப்பிக்கப்பட்டது. நுகர்வோரின் உரிமைகள் அனைத்தும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகவும், வங்கிகள் கடைப்பிடிக்கும் நியாயமற்ற வர்த்தக நடைமுறையை வங்கிகளின் உன்னத நோக்கத்தின் பார்வையில் தடுக்க வேண்டும் என்பதாலும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றம் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 1986ஐ இயற்றியதில், இந்த உத்தரவைப் பெற்ற நாளிலிருந்து 60 நாட்களுக்குள், அந்த உத்தரவில் கொடுக்கப்பட்டுள்ள வழிகாட்டுதல் அதிகாரிகளால் பின்பற்றப்பட வேண்டும், இல்லையெனில் பாதிக்கப்பட்ட நுகர்வோர் சுதந்திரமாக இருக்க வேண்டும். ஆணையத்தை அணுகவும், உத்தரவை மீறுதல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தை மீறியதற்காக நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தண்டனை விதிகளை செயல்படுத்தவு


நான். உத்தரவின் நகல், அதன் பதிவாளர் மூலம், புது தில்லியில் உள்ள தேசிய நுகர்வோர் தகராறுகள் தீர்வு ஆணையத்திற்கு அனுப்பப்படும்


ii இந்த உத்தரவின் நகல் சென்னையிலுள்ள இந்திய ரிசர்வ் வங்கியின் தலைமை செயல் அதிகாரிக்கு அனுப்பப்படு


ஸ்டெனோ-டைப்பிஸ்ட்டிற்கு கட்டளையிடப்பட்டது, அவளால் எழுதப்பட்டு தட்டச்சு செய்யப்பட்டது, இதை எங்களால் சரிசெய்து உச்சரிக்கப்பட்ட


ஜூலை 27, 2018. தும்..ம்.,வு..ல்..ம்ம்/-ம்வேடதுதி..2:.ம்..கு.1லைகைலைடது.ளதுறு.ளதுர்ர்.லை..துல்துவள்.துகைர்கல்.லைல்புதுது..ட்துதுல்பு..மைவைள்து1:மா??:-து..ம்ர்குர்ம்து:-க.லைதனதது/ர்துர்ல்டன்டன.ம்:.லை..ள்:.ம்டதுஜ்ல்.ம்துர்முர்பு4.ர்02புஜ்18ழமை)12ன் நகல் சென்னையிலுள்ள இந்திய ரிசர்வ் வங்கியின் தலைமை செயல் அதிகாரிக்கு அனுப்பப்படும்.


ஸ்டெனோ-டைப்பிஸ்ட்டிற்கு கட்டளையிடப்பட்டது, அவளால் எழுதப்பட்டு தட்டச்சு செய்யப்பட்டது, இதை எங்களால் சரிசெய்து உச்சரிக்கப்பட்டது


ஜூலை 27, 2018.

சேரம்பாடி- கர்ப்பிணிகளுக்கு மன நல ஆலோசனை முகாம்

 சேரம்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிகளுக்கு மன நல ஆலோசனை முகாம் நடைபெற்றது.

ஏகம் பவுண்டேசன், ஆல் த சில்ரன் ஆகியன சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர் கணியேந்திரன், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பத்மினி, ஊராட்சி கவுன்சிலர் பார்வதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 நிகழ்ச்சிக்கு சுகாதார நிலையம் மருத்துவர் ஶ்ரீநிதி தலைமை தாங்கி பேசும்போது

ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிகளுக்கு ஆரம்ப கட்டம் முதல் பதிவு செய்து தொடர் சிகிச்சை வழங்கபடுகின்றது. கர்ப்ப காலத்தில் தொடர் பரிசோதனை மற்றும் மருந்துகள் வழங்கப்படுகின்றது. முறையான சிகிச்சை எடுத்து கொண்டால் நலமான குழந்தை பெற முடியும் என்றார்.

பிரம்ம குமாரிகள் அமைப்பின் நிர்வாகியும், மன நல ஆலோசகருமான ரேணுகா பேசுகையில்

மனசு எதை நோக்கிய பார்வை கொண்டு இருக்கிறோமோ அதையே எண்ணங்கள் பிரதிபலிக்கும்.  கர்ப்பிணிகள் ஆன்மீக கதைகள், அறிவியல் சார்ந்த கட்டுரைகள், இலக்கியம், விளையாட்டு போன்றவற்றை படிக்கும் போது அதே பிரதிபலிப்பு குழந்தையிடம் இருக்கும். ஆரோக்கியமான மன நிலையில் குழந்தைகள் பெற கர்ப்ப காலத்தில் எண்ணங்கள் நல்லவையாக சிந்திக்க வேண்டும். தீயவை தவிர்க்க வேண்டும். நம்பிக்கை இருந்தால் அது நடக்கும் எனவே நல்ல எண்ணங்களை என்னும் போது நல்லவையாகா இருக்கும். மனதால் நல்ல குழந்தை பிறக்க வேண்டும் என்ற நம்பிக்கையும் நாம் ஆரோக்கியமாக இருக்கின்றோம் என்கிற நம்பிக்கையும் கொண்டு இருக்கும் பட்சத்தில் நல்ல ஆரோக்கிய குழந்தை பிறக்கும் என்றார். 

கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம் பேசும்போது ஊட்டசத்து குறைபாடு இல்லாத குழந்தைகள் பிறக்க கர்ப்பிணிகள் கர்ப்ப காலத்தில் உரிய ஊட்டசத்து உணவுகள் எடுத்து கொள்ள வேண்டும் குறிப்பாக பால், புரத சத்து, கொழுப்பு சத்து, நீர் சத்து ஆகியன எடுத்து கொள்ள வேண்டும்.  பழங்கள் மென்று உண்பதால் நார் சத்து கிடைக்கும். அதுபோல அயோடின் கலந்த உப்பினை எடுத்து கொள்ளவதான் மூலம் முழுமையான வளர்ச்சியடைந்த குழந்தையை பெற்று கொள்ள முடியும். என்றார். 

ஏகம் பவுண்டேஷன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரவீந்திரன், ஆல் த சில்ரன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர அஜித் ஆகியோர் மன நல்ல ஆலோசனைகள் வழங்கினார்கள். சமூக ஆர்வலர் சந்திரன், சுகாதார ஆய்வாளர் நாசர், செவிலியர்கள் கர்ப்பினிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்












தேவாலா PHC கர்ப்பிணிகளுக்கு மன நல ஆலோசனை முகாம்

 தேவாலா நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம்,  ஏகம் பவுண்டேஷன், ஆல் த சில்ரன், தி ஹோப் டிரஸ்ட் ஆகியன சார்பில் கர்ப்பிணிகளுக்கு மன நல ஆலோசனை முகாம் நடைபெற்றது. 

நிகழ்ச்சிக்கு கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம் தலைமை தாங்கி பேசும்போது 

மனநலன் குழந்தையின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. அதுபோல ஊட்டச்சத்து உணவுகளை எடுத்துகொள்ள வேண்டும்.  ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் சிறுதானிய உணவுகள் பழங்கள் கீரைகள் உள்ளிட்டவை உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை தரக்கூடியதாக அமைகிறது எனக்கு கூறினார் 


தொடர்ந்து மருத்துவ அலுவலர் கார்த்திகா பேசும்போது கர்ப்பிணிகளுக்கு

உடல் ரீதியாக மட்டுமே அதிகமாக கவனத்தை எடுத்துக் கொள்கின்றோம் ஆனால் அதையும் தாண்டி மனதளவிலும் குழந்தைகளை அக்கறையோடு கவனிக்க வேண்டிய அவசியம் உள்ளது கர்ப்பத்தில் இருக்கும் குழந்தை மீது வளர்ப்பதில் ஆர்வம் காட்டி வளர்ப்பது மூலம் ஆரோக்கியமான குழந்தை பெற முடியும் என்றார்

மனநல ஆலோசகர் சத்தியசீலன் பேசும்போது குடும்பத்தினர் இடையே ஏற்படும் சிறு சிறு சண்டைகளும் குழந்தைகளை மனதளவில் பாதிக்கப்படுகிறது எனவே குழந்தைகளிடம் அன்பாக இருப்பது போல் குழந்தைகள் எதிரே சண்டையிடுவதையும் தவிர்க்க வேண்டும் குழந்தைகளை அன்போடும் கண்டிப்புடனும் வளர்க்க வேண்டியது பெற்றோரின் கடமை என்றார் நிகழ்ச்சியில் பல்வேறு பகுதியை சேர்ந்த கர்ப்பிணிகள் கலர் கலந்து கொண்டனர் ஏகம் பவுண்டேஷன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரவீந்திரன் வரவேற்றார் ஆல் த சில்ரன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித் நன்றி கூறினார்.

அரசு ஊழியர் யார்?*

*அரசு ஊழியர் யார்?*

தமிழ்நாடு அரசு ஊழியர் நடத்தை விதிகள்,1973 பிரிவு.2(3)-ன் படி, ஒரு அரசு ஊழியர்கள் என்பவர் அரசு தன் ஆட்சியின் காரியங்களை ஆற்ற பணி அல்லது பதவிக்கு அமர்த்தும் நபர் என வரையறுக்கபடுகின்றது. இது இந்திய ஆட்சிப் பணியிலிருந்து (I.A.S) கடைநிலை ஊழியர் வரை பொருந்தும்.

”Officer” என்பது அலுவலர் அதாவது அலுவல்களை செய்பவர் ஆவார். ”Minister’ என்பது செயலாற்றுப் பணியாளர், என பொருள்படும். ”அமைச்சு’ என்றால் பணி செய்தல், உதவியாயிருத்தல், கொடுத்துதவுதல் என பொருள். 

அதிகாரி என்றால் அரசு நிர்வாகத்தில் ஆனைகளை நடைமுறைபடுத்தும் பொறுப்பிலுள்ள அலுவலர் என பொருள். ஆக அனைத்தும் மக்களுக்கு பணி செய்யவே ஒழிய. அதிகாரி என அதிகாரம் செய்தல் சட்ட விரோதம் ஆகும்.

தமிழ்நாடு அரசு ஊழியர்களை வகைப்படுத்தல்: (Classification of Government Employees)

அரசு ஊழியர்கள்/ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் தர ஊதியத்தை (Grade Pay) அடிப்படையாகக் கொண்டு அரசு ஊழியர்கள், அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களை கீழ்கண்டவாறு வகைப்படுத்துகிறது..

1. தர ஊதியம் (Grade Pay) ரூபாய் 6,600ம் அதற்கு மேலும் பெறும் அரசு அலுவலர்களை வகை l (கிரேடு) என்றும், (முன்பு A Class)

2. தர ஊதியம் ரூபாய் 4,400 முதல் 6,600க்குள் பெறும் அரசு அலுவலர்கள்/ஆசிரியர்களை வகை II (கிரேடு) என்றும், ( முன்பு B Class)

3. தர ஊதியம் ரூபாய் 4,400க்கு கீழ் பெறும் அரசு ஊழியர்கள்/ஆசிரியர்களை வகை III & lV (கிரேடு) என்றும் பிரிக்கப்படுகிறது. (முன்பு C & D Class).

*அரசு ஊழியர் பெறும் சம்பளம்*

அடிப்படை சம்பளம்( Basic salary), பஞ்சப்படி எனும் அகவிலைப்படி(Dearness Allowances), பயணப்படி (Travelling Allowances), வீட்டுவாடகை படி (House allowance), அரசு ஊழியர் ஆரோக்கிய இன்சூரன்ஸ் திட்டம் (Govt. Employees Health Fund Scheme), வருங்கால வைப்பு நிதிக்கு பங்களிப்பு (provident fund) பொங்கல் பரிசு (Pongal Gift), விழா முன்பணம்(Festival Advance), மருத்துவ படி (Medical Allowance) விடுப்பு பணம்(Encashment of Leave) ஓய்வூதியம், இன்னும் பல

*அரசு ஊழியர்களுக்கான செலவு*

மாநில அரசின் மொத்த வருவாயில் மாநில வரிவருவாய் ரூ. 99,590.13 கோடி வரி அல்லாத ஏனைய வருவாய் 12,318. கோடியில் ரூ.66,908 அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியதிற்கும் செலவிடப்படுகிறது.

*அரசின் முக்கிய துறைகள்*

ஆதி திராவிடர் (ம) பழங்குடியினர் நலத் துறை, வேளாண்மை துறை,கால்நடை பராமரிப்பு, பால்வளம் (ம) மீன்வளத் துறை, பிற்படுத்தப்பட்டோர் நலம் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை

கூட்டுறவு,உணவு (ம) நுகர்வோர் பாதுகாப்பு துறை, வணிகவரி மற்றும் பதிவுத்துறை

எரிசக்தி, சுற்றுச்சூழல் (ம) வனத்துறை, நிதி துறை, கைத்தறி, கைத்திறன், துணிநூல் (ம) கதர்த்துறை

மக்கள் நல்வாழ்வு (ம) குடும்பநலத்துறை, உயர்கல்வி துறை,நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, உள், மதுவிலக்கு (ம) ஆயத்தீர்வை துறை,

 வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, தொழில் துறை, தகவல் தொழில் நுட்பவியல் துறை, தொழிலாளர் (ம) வேலைவாய்ப்பு துறை, சட்டத்துறை, நகராட்சி நிர்வாகம் (ம) குடிநீர் வழங்கல் துறை பணியாளர் (ம) நிருவாகச் சீர்திருத்தத் துறை, 

திட்டம்,வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை, பொது துறை, வருவாய் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, பள்ளிக் கல்வி துறை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை, 

சமூக நலம் (ம) சத்துணவுத் திட்டத் துறை, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை, சுற்றுலா,பண்பாடு மற்றும் இந்து சமய அறநிலையத் துறை, போக்குவரத்து துறை, இளைஞர் நலன் (ம) விளையாட்டு மேம்பாட்டுத்துறை மாற்றுத் திறனாளிகள் நலத் துறை, பொது (தேர்தல்கள்) துறை,பொதுப்பணி துறை. இத்தனை துறைகளில் ஊழியர்கள் உண்டு.

*தமிழ்நாடு அரசு ஊழியர் நடத்தை விதிகள்,1973 சொல்வது என்ன?*

தமிழ்நாடு அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள், ஆசிரியர்கள், சீருடை பணியாளர்கள் மற்றும் அரசு உதவி பெறும் கல்விக்கூட ஆசிரியர்கள் மற்றும், மாநில அரசிடம் ஊதியம் பெறும் சட்ட சபை உறுப்பினர்களும், அமைச்சர்களும், வாரியத்தலைவர்களும் அரசு ஊழியர்கள் ஆவார். எனவே இவர்களும் தமிழ்நாடு அரசு ஊழியர் நடத்தை விதிகளுக்கு உட்பட்டவர்களே.

*விதி-3*

எந்த அரசு ஊழியரும் வரதட்சணை கொடுக்கவோ, பெறவோ கூடாது.

*விதி-3-A*

எந்த அரசு ஊழியரும் தனியார்களின் கௌரவ விழா, ஓய்வி விழா, நிறுவனங்கள், பொதுமக்கள் அவர்களுடன் புகைப்படம் எடுப்பது போன்ற செயல்களை அரசின் முன் அனுமதியின்றி செய்தல் கூடாது.

*விதி-5*

எந்த அரசு ஊழியரும் பங்குச் சந்தையில் ஈடுபடுதல், வேறு முதலீடுகள் செய்தல், தன் சார்பாக குடும்ப உறுப்பினர்களை ஈடுபடச் செய்தல், எந்த தொழில், வியாபாரம் போன்றவற்றில் ஈடுபடுதல் போன்றவற்றை செய்தல் கூடாது.

*விதி-6 (4) (aa)*

எந்த அரசு ஊழியரும் அரசின் அனுமதியின்றி யாருக்கும் 10,000 ரூபாய்க்கு மேல் அசையும் சொத்தை குத்தகை, அடமானம், வாங்குதல், விற்றல், கொடை செய்தல், பரிமாற்றம் செய்தல் போன்றவற்றை அரசின் அனுமதியின்றி செய்தல் கூடாது.

*விதி-7*

எந்த அரசு ஊழியரும் அரசின் அனுமதியின்றி எந்த வியாபாரம், தொழிலில் ஈடுபடக்கூடாது.

*விதி-11*

எந்த அரசு ஊழியரும் அரசின் அனுமதியின்றி நாளிதழ், தொலைக்காட்சி, வானொலி பிரசுரம் போன்றவற்றை ஈடுபடுதல் கட்டுரை வரைதல் செய்தல் கூடாது.

*விதி-12*

எந்த அரசு ஊழியரும் அரசின் அனுமதியின்றி பொதுவிழாவில் நடந்த விசயங்களை, கருத்தை சொல்லக் கூடாது. அரச்சின் கொள்கைகள், அரசு பரிபாலனம், அரசின் மற்ற அரசுகளுடனான உறவுகள் பற்றி பேசுதல் கூடாது. அலுவலகம் சாராத கூட்டங்களில் கலந்து கொள்ளுதல், தலைமை ஏற்றல் கூடாது.

*விதி-14*

எந்த அரசு ஊழியரும் தன் குடும்ப உறுப்பினர்கள் அரசியலில் ஈருபடுதலை தடுக்க வேண்டும்

*விதி-14-A*

எந்த அரசு ஊழியரும் மதம், இனம், இடம், பிறந்த இடம், குடியிருப்பு, மொழி, ஜாதி சம்மந்தமான எந்த அமைப்பிலும் உறுப்பினராகவோ, சம்மந்தப்பட்டோ இருத்தல் கூடாது

*விதி-17*

எந்த அரசு ஊழியரும் நெருங்கிய சொந்தங்கள் தங்களுக்கு கீழ் பணிபுரியவோ, தன் பணி சம்மந்தப்பட்ட தனியார் நிறுவனத்தில் பணியமர்ந்திருப்பதையோ அனுமதிக்கக் கூடாது.

*விதி-20*

எந்த அரசு ஊழியரும் முழுமனதுடன், முழு ஈடுபாட்டுடன் பணியில் இருக்க வேண்டும்.

*விதி-20-B*

எந்த அரசு ஊழியரும் பெண் பணியாளர்களுக்கு பாலியல் தொந்திரவு கொடுத்தல், பாலியல் ஆசையை முன்மொழிதல், தொடுதல், கேட்டல், வேண்டல், சைகை, ஆபாசப்படம் காட்டுதல் போன்ற தேவையற்ற காரியங்களில் ஈடுபடக் கூடாது.

*பிரிவு-21*

எந்த அரசு ஊழியரும் அரசின் அனுமதியின்றி அலுவலக நேரத்தில் அல்லது அலுவலின் போது குடித்திருக்கக் கூடாது.

*இதையெல்லாம் ஊழியர்கள் கடைபிடிக்கிறார்களா?*

*அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்யலாமா! சட்டம் சொல்வதென்ன?*

# அரசியலமைப்புச் சட்டம் ஷரத்து.19.(1)(c) அமைப்புகள் மற்றும் சங்கங்கள் வைத்துக் கொள்ள உரிமை அளிக்கிறது.

# ஆனால் ஷரத்து 19(4) இன் படி ”இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு அல்லது பொது ஒழுங்கு அல்லது ஒழுக்கத்தின் மீது அக்கரை கொண்டு, சொல்லப்பட்ட உரிமையில் நியாயமான கட்டுப்பாட்டை விதிக்கக் கூடிய நடைமுறையிலுள்ள சட்டம் எதையுமோ அரசு இயற்றிய உட்கூறுகள் பாதிக்கக் கூடாது.

# இதை P.N.Ramasamy Vs The Commissioner of Coimbatore AIR 1968 (Masdras) 383 Per Ramakrishna J.- என்ற வழக்கில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது.

# O.K.Ghosh Vs.E.X.Joseph, AIR 1963 SC 812 என்ற வழக்கில் சங்கங்கள் அமைப்புகளுக்கு உரிமை கொடுக்கப்பட்ட உரிமை ஒரு உத்திரவாதமான உரிமை என கொள்ள முடியாது, தகுந்த காரணங்கள்: இருப்பின் அவை திரும்பப் பெறப்படும் என் தீர்ப்பளித்துள்ளது.

# தமிழ்நாடு அரசு ஊழியர் நடத்தை விதிகள்,1973 விதி-16 இன் படி எந்த அரசு ஊழியரும் அரசின் அனுமதியின்றி சங்கத்தில் அமைப்பில் உறுப்பினராக இருக்கக் கூடாது. விதி-22-A இன் படி அலுவலக நேரத்தில், அலுவலக வளாகத்தில் ஊர்வலம் கூட்டங்கள் நடத்தகூடாதென சொல்லப்பட்டுள்ளது.

மேலும் All India Bank Employees’s Association Vs. National Industrial Tribunal என்ற வழக்கில் உச்ச நீதிமன்றம், “ வேலைநிறுத்தம் என்பது அரசியலமைப்பு சட்டம் ஷரத்து-19-இன் படி அடிப்படை உரிமையில்லை, ஊழியர்கள் தங்கள் கோரிக்கையை குறிப்பிட்ட எல்லைக்குள் வெளிப்படுத்தலாம் எனவும், தங்கள் குறைகளை வேலைநிறுத்தல் என்ற உரிமையை கோரமுடியாது எனவும் தீர்ப்பளித்தது.

*இறுதியாக!*

எப்படியாவது அரசு வேலைக்கு செல்வது என பெரு முயற்சி எடுத்து சேர்ந்து, அரசின் அத்தனை பணப்பலன்களையும் பெற்று பணிக்கு வந்தது மக்கள் பணி ஆற்றவே. 

2002ல் தமிழகத்தில் டெஸ்மா (Tamil Nadu Essential Services Maintenance Act (TESMA), 2002) போன்ற சட்டத்தை இயற்ற அரசை தள்ளியது யார் என எண்ண வேண்டும். மக்களின் வரிப்பணத்தில் மொத்த மக்கள் தொகையில் 2 சதவீத அரசு ஊழியர்களுக்கு அரசு செலவிடும் தொகை 60 சதவீதத்துக்கும் மேல். என்பதை நினைவுக்கூர்ந்து மக்கள் பணியாற்ற வேண்டுமென்பதே மக்களின் விருப்பம்

மேலும், ஊழியர்கள், அலுவலர்கள் வரும் நேரம், செல்லும் நெரம், அலுவலர்கள் கள ஆய்வு செல்லும் இடம் நேரம்,என அனைத்து பணிகளைச் குறிப்பிடும் மாவட்ட அலுவல கையேடு(District Office Manual), அரசு ஊழியர் நடத்தை விதிகள்(the tamil nadu government servants' conduct rules, 1973), 

தமிழ்நாடு அரசு சார்நிலை ஊழியர்கள் பணி விதிகள்(tamilnadu government subordinate service rules) என ஒவ்வொரு துறைக்கும் உள்ள பணிவிதிகளை அனைவரும் தெரிந்து அதன்படி நடந்தால் அரசு இயந்திரம் சிறக்கும்

*நடத்தை விதிகள்*

தமிழக அரசு அலுவலர்களுக்கான சட்ட விதிமுறைகள், அரசாணைகளுடன் குறிப்புகள்

*நடத்தை விதிகள் என்றால் என்ன*?

அரசுப் பணியாளர்களுக்காக அரசு உருவாக்கியுள்ளநடைமுறைகள் மற்றும் விதிகளை அவர்கள் தவறாமல் கடைபிடிக்க வேண்டும்.

சொத்து வாங்குதல், விற்றல், நிதி ஆதாரங்கள் உருவாக்குதல் போன்ற நடவடிக்கைகளை அரசுக்கு முறைப்படி தெரிவித்த பின்னரே மேற்கொள்ள வேண்டும். இந்த நடவடிக்கைகளை பணிபுரிபவர்கள் கடைபிடிப்பதற்காக தமிழ்நாடு அரசு ஊழியர் நடத்தை விதிகள், 1976 உருவாக்கப்பட்டது.இந்த விதிகள் அரசுப் பணியில் இருப்பவர்களின் குடும்ப உறுப்பினர்களையும் கட்டுப்படுத்தும்.

 தமிழ்நாடு அரசு ஊழியர் நடத்தை விதி 2(5) &  (6) ன் கீழ்க்கண்டவர்கள் குடும்ப உறுப்பினர்களாக கருதப்படுவார்கள். தந்தை / வளர்ப்பு தந்தைதாய் / வளர்ப்பு தாய்கணவன்மனைவிமகன் / வளர்ப்பு மகன்மகள் / வளர்ப்பு மகள்சகோதரன்சகோதரிமனைவியின் தாய் மற்றும் தந்தைகணவரின் தாய் மற்றும் தந்தைசகோதரனின் மனைவிசகோதரியின் கணவர்மகளின் கணவர்மகனின் மனைவிஇந்த உறவுமுறைகள் அனைத்தும் தமிழக அரசின் கீழ் பணிபுரியும் ஊழியரின் குடும்ப உறுப்பினர்களாகவே கருதப்படுவர்.உயர்கல்வி பெறுவது தொடர்பான அரச…


1)GO.MS.200 P&AR dt 19.4.96

     உயர்கல்வி பயில அனுமதி

கோரிய அரசு ஊழியரின் விண்ணப்பத்தின் மீது 15 நாட்களுக்குள்

துறைத்தலைவா் அனுமதிதராவிட்டால்,அனுமதி

அளித்ததாக கருதி மேல்படிப்பை தொடரலாம்.


2)GOVT Leter no 14735/s/10/

dt 08.042010

        தகுதிகான் பருவத்தில் உள்ள அரசுஊழியர் தகுதிகான் பருவத்திற்குரிய

அனைத்துதகுதிகளையும் பெற்றும் துறைதலைவரால் தகுதி பெற்றநாளிலிருந்து

ஆறுமாதத்திற்குள்

தகுதிகான்பருவம் நிறைவு

செய்துஆனைகள் பிறப்பிக்க

பட வில்லை என்றால்,தகுதிகான்பருவம் அதுவாகவே நிறைவடைந்ததாக அவ்அரசுப்பணியாளா் கருதிகொள்ளலாம்.

3)GO.MS.NO1988/Public(service-N)dept dt 04.4.75

             துறைத்தலைவரால்

வழங்கப்பட்டதண்டனையை எதிர்த்து மேல்முறையீட்டு

அலுவலருக்கு மேல்முறையீடு

செய்த ஒரு அரசுஊழியரின்  விண்ணப்பத்தின் மீது

ஆறு மாதத்திற்குள் மேல்முறையீட்டு

அலுவலா் இறுதி ஆனைபிறப்பிக்கவேண்டும்.

4)GO.MS.112 P&AR

       அசையாசொத்துவாங்க

அனுமதிகோரி விண்ணப்பித்த அரசு ஊழியரின் விண்ணப்பத்தின்மீது ஆறுமாதத்திற்குள் அனுமதி.வழங்க வேண்டும்

அவ்வாரு ஆறுமாதத்திற்குள் துறைத்தலைவா் அனுமதி

அளிக்கவில்லை, என்றால்

அனுமதி பெற்றதாக கருதப்படும்.

பறவைகள் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு

 தேசிய பறவைகள் தினத்தை முன்னிட்டு சோலாடி அரசு உணடு உறைவிட நடுநிலை பள்ளியில் பறவைகள் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம், நீலகிரி ஆல் த சில்ரன், சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை ஆகியன சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் விக்னேஷ்வரன் தலைமை தாங்கினார். பள்ளி ஆசிரியர் முருகன் முன்னிலை வகித்தார்

கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம்

பேசும்போது நீலகிரி மாவட்டத்தில் தற்போது சுமார் 200க்கு மேற்பட்ட வகை பறவைகள் வாழ்வதாக கண்டறிய பட்டுள்ளது. பறவைகள் இயற்கை பாதுகாப்பில் முக்கிய பங்காற்றி வருகிறது.  பறவைகள் பழங்கள் தின்று அவை பர்ப்பும் எச்சங்கள் மூலம் மரக்கன்றுகள் விரைவாக வளர்கின்றன. இதனால் மரம் வளர்ப்பில் ஒரு நாளைக்கு சுமார் 30 முதல் 50 வரை தனது பங்கினை ஆற்றுகிறது. பறவைகள் அதிகம் ஆக்சிஜன் தர கூடிய மரங்களில் மட்டுமே வசிக்கும் தன்மையுடையது. வீடுகளை சுற்றி பழங்கள் தரகூடிய மரங்களை வளர்க்க வேண்டும். டைக்குலோபினாலிக் இரசாயன கலந்த வலி நிவாரண மாத்திரைகள், மருந்துகள் பறவைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. இவற்றையும் பசையுடைய பொருட்களையும் திறந்த வெளியில் போடகூடாது. வீடுகளில் வெயில் காலங்களில் தண்ணீர் தாகம் தீர்க்க தண்ணீர் வைக்க வேண்டும். பறவைகளை வீடுகளில் வளர்ப்பது, அவற்றை சித்ரவதை படுத்துவது சட்டபடி தவறு என்றார். 

மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித் பேசும்போது பறவைகள் விவசாயிகளின் நண்பர்கள் ஆக உள்ளது. விவசாய பயிர்களை தாக்கும் பூச்சிகளை அழிக்கும் இவற்றால் பயிர்கள் பாதுகாக்க படுகிறது. பறவைகளை பாதுகாக்க வேண்டியது அனைவரின் கடமையாகும் என்றார். 

தொடர்ந்து சீனிவாசன் சேவைகள் அறக்கட்டள பணியாளர் பினு, முனீஸ்வரர் ஆகியோர் பறவைகள் பாதுகாப்பதன் அவசியங்கள் குறித்து விளக்கம் அளித்தனர். 

தொடர்ந்து மாணவர்களுக்கு பறவைகள் தங்க கூடுகள் அமைக்க வலியுறுத்த பட்டது.

நிகழ்ச்சியில் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்

*144 தடை உத்தரவு மற்றும் ஊரடங்கு உத்தரவு*

 *144 தடை உத்தரவு மற்றும் ஊரடங்கு உத்தரவு* 

 *ஊரடங்கு உத்தரவு (curfew) சொல் பயன்பாடு*

பிரெஞ்சு மொழியில் "'couvre-feu'" என்பது "நெருப்பை மூடுவது" என்று பொருள். அனைத்து விளக்குகளையும், மெழுகுதிரிகளையும் அணைக்கும் நேரத்தை இது குறிக்கப் பயன்பட்டது. இச்சொல் பின்னர் curfeu என்ற சொல்லாக இடைக்கால ஆங்கிலத்திலும், பின்னர் 'curfew" என்ற சொல்லாக நவீன ஆங்கிலத்திலும் அறிமுகப்படுத்தப்பட்டது. பிரிட்டீஷ் இந்தியாவில், இந்திய விடுதலை இயக்க வீர்ர்களை ஒடுக்கும் வகையில் இச்சட்டங்கள் இயற்றப்பட்டன.

ஊரடங்கு உத்தரவு எனில், காவல்துறையினர் உத்தரவுக்கு கட்டுப்பட்டு ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு பொதுமக்கள் வீட்டின் உள்ளேயே இருக்க வேண்டும் என்பது விதிமுறை. இந்த விதிமுறைகள் வன்முறைக் காலகட்டங்களில் நிலைமைகளைக் சமாளிக்கவும், சீரமைக்கவும் மிக உதவியாக இருக்கும். ஊரடங்கு உத்தரவு காலகட்டங்களில் முன்னதாக போலீஸ் அனுமதியின்றி மக்கள் நடமாடவோ, வீட்டை விட்டு வெளிவரவோ தடை விதிக்கப்படுகிறது. அத்தியாவசிய சேவைகள் மட்டுமே இயங்க அனுமதிக்கப்படுகின்றன, சந்தைகள், பள்ளிகள் மூடப்பட வேண்டும்.


 *144 தடை உத்தரவு -144 வது சட்ட பிரிவு* 


1861-ஆம் ஆண்டில் ராஜ்-ரத்னா E.F. டீபோ (Raj-Ratna E.F. Deboo IPS ) என்ற காவல் அதிகாரியே 144-வது பிரிவின் வடிவமைப்பாளர் ஆவார், அதன் மூலம் பரோடா மாநிலத்தில் அந்த நேரத்தில் மொத்தக் குற்றங்களைக் குறைத்தார்


 *குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144* 


1. தொல்லை அல்லது எதிர்பார்க்கப்படுகிற அபாயம் ஆகிய அவசர நிலைகளில் உத்தரவு பிறப்பிப்பதற்குள்ள அதிகாரம்


2. இந்தப் பிரிவின் படியான கட்டளை ஒன்று நெருக்கடி நிலைகளிலும், அல்லது எவருக்கெதிராகக் கட்டளை குறிப்பிட்டனுப்பப்படுகிறதோ அவருக்கு முன்னறிவிப்பை, உரிய காலத்தில் சார்வு செய்வதற்குச் சூழ்நிலைகள் இடங்கொடாத சந்தர்ப்பங்களிலும் அவர் இல்லாமலேயே பிறப்பிக்கப்படலாம்.


3. இந்தப் பிரிவின் படியான கட்டளையொன்று, குறிப்பிட்ட ஒருவருக்கு அல்லது குறிப்பிட்ட இடம் அல்லது குறிப்பிட்ட அப்பகுதியில் அடிக்கடி வந்து போகிற அல்லது பார்க்க வருகிற பொதுமக்களுக்கு பொதுவாகக் குறிப்பிட்டு அனுப்பலாம்.


3. இந்தப்பிரிவின்படி பிறப்பிக்கப்பட்ட கட்டளை எதுவும் அது பிறப்பிக்கப்பட்டதிலிருந்து இரண்டு மாதங்களுக்கு மேல் அமலில் இருத்தல் கூடாது.


4. வரம்புரையாக, மனித உயிருக்கோ, ஆரோக்கியத்திற்கோ ஏற்படும் அபாயத்தைத் தடுப்பதற்காகாகவோ, கலகம் அல்லது சச்சரவு எதையும் தடுப்பதற்காகவோ, அவ்வாறு செய்வது அவசியமென மாநில அரசாங்கம் எண்ணுமானால், அது அறிவிப்பு மூலமாக, இந்தப் பிரிவின்படி நடுவரால் பிறபிக்கப்பட்ட ஒரு கட்டளையானது மாநில அரசின் கட்டளையில்லாதிருப்பின் எந்தத் தேதியில் முடிவடைந்திருக்குமோ அந்தத் தேதியிலிருந்து ஆறு மாதங்களுக்கு மேற்படாது மேற்சொன்ன அறிவிப்பில் அரசு குறிப்பிடலாகும் கால அளவுக்கு அந்தக் கட்டளை அமலில் இருக்க வேண்டுமென உத்தரவிடலாம்.


5. நடுவர் எவரும் தம்மாலோ, தமக்குக் கீழமைந்துள்ள நடுவராலோ அல்லது தமக்கு முன்பிருந்தவராலோ பிறப்பிக்கப்பட்ட கட்டளை எதையும் முன்வந்தோ அல்லது அக்கட்டளையால் பாதிக்கப்பட்டவரின் விண்ணப்பத்தின் பெயரில் ரத்து செய்யலாம் அல்லது மாற்றலாம்.


6. மாநில அரசாங்கம், 4-வது உட்பிரிவின் வரையத்தின்படி தான் பிறப்பித்த கட்டளை எதையும் தானே முன்வந்தோ அல்லது இந்தக் கட்டளையால் பாதிக்கப்பட்டவரின் விண்ணப்பத்தின் பேரிலோ ரத்து செய்யலாம்.


(5) ஆவது உட்பிரிவு அல்லது (6)-வது உட்பிரிவின்படி விண்ணப்பமொன்று கிடைக்கப்பெற்றதும், நிலவரத்திற்கேற்ப, நடுவரோ அல்லது மாநில அரசாங்கமோ, தம்முன் நேர்முகமாக அல்லது வாதுரைஞர் மூலமாக அந்தக் கட்டளையை எதிர்த்துக் காரணம் சொல்வதற்கு வாய்ப்பினை விண்ணப்பதாரருக்கு அளித்தல் வேண்டும், மற்றும் நிலவரத்திற்கேற்ப நடுவரோ அல்லது மாநில அரசோ அவ்விண்ணப்பத்தை, முழுவதுமோ ஒரு பகுதியையோ நிராகரிப்பாரானால் அவர் அல்லது அது அவ்வாறு செய்வதற்கான காரணங்களை எழுத்து மூலம் பதிவு செய்தல் வேண்டும்.


 *ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் சந்தர்ப்பங்கள்* 


இன, சாதிக் கலவரங்கள், வன்முறை, சட்ட எதிர்ப்பு, முன்பாதுகாப்பு போன்ற காலங்களில் பிரிவு 144 ஆணை உரிய முறையில் வெளியிடப்பட வேண்டும் இந்தப்பிரிவின் படி வெளியிடப்படும் தடையாணை, பிரிவு 134ல் உள்ளபடி வெளியிடப்பட வேண்டும் எனக் கூறுகிறது குற்றவியல் நடைமுறைச் சட்டம்.


 *பிரிவு 134 என்ன கூறுகிறது ?* 


1. இந்த ஆணை சாத்தியமாக இருக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட நபருக்கு சம்மன் வழங்குவதன் மூலம் கொடுக்கப்பட வேண்டும்.

அப்படி சாத்தியம் இல்லாத பட்சத்தில், இந்த ஆணை ஒரு வெளியீட்டின் மூலம், மாநில அரசு வெளியிடும் விதிகளின் படி, சம்பந்தப்பட்ட நபர்களுக்கு தெரியும் விதத்தில் பொது இடத்தில் ஒட்டப்படுவதன் மூலம் தெரிவிக்கப்பட வேண்டும்.


2. இந்த தடை உத்தரவில் இருந்து பள்ளி, கல்லூரி வாகனங்கள் தினசரி வாகனங்கள், அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்கள், சுற்றுலா வரும் வாகனங்கள், சரக்கு வாகனங்கள், தினசரி செல்லும் ஆம்னி பஸ்கள் ஆகியவற்றிற்கு விதிவிலக்கு அளிக்கப்படுகிறது.


 *மீறினால் தண்டனை என்ன ?* 


இந்தியத் தண்டனைச் சட்டம் பிரிவு 188. பொது ஊழியரால் முறையாக அறிவிக்கப்பட்ட கட்டளைக்குக் கீழ்ப்படியாமை:-


இந்த தடையை மீறி நடந்தால், இந்திய தண்டனை சட்டத்தின் 188–ம் பிரிவின் அடிப்படையில் தண்டனை விதிக்கப்படும். தடையை மீறியதால் மக்களுக்கு தொந்தரவை ஏற்படுத்துவோருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை அல்லது ரூ.200 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.


தடை உத்தரவை யாரும் மீறினால், மனித உயிருக்கு சேதம், சுகாதாரக் கேடு, கலவரம் ஏற்பட்டு பொது அமைதி குலைந்துபோனால் அவர்களுக்கு 6 மாத ஜெயில் தண்டனை அல்லது ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.


 *காவல்துறையின் கடமைகள்* 


Police Standing Order PSO No 703 Sec 6 (பி) இன் படி துப்பாக்கி சூடு, தடியடி போன்ற நிகழ்வுக்கு பின்னர் காவல் துறை உடனடியாக காயம்பட்டவர்களுக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கவும், காயம்பட்டவர்களை உடனடியாக மருத்துவ மனைக்கு கொண்டு செல்லவும் காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.


Police Standing Order PSO No 705 உட்பிரிவு (எப்) ன் படி கலவரம் நடக்க வாய்ப்புள்ள இடத்தில் அவசர கால ஊர்தி ஆம்புலன்ஸ் ஒன்றும் முதலுதவி பெட்டகம் ஒன்றும் நிறுத்தி வைக்க வேண்டும். ஆம்புலன்ஸ் ஒன்று நிறுத்தி வைப்பதால் கலவரக்காரர்கள் மனதில் அமைதி ஏற்பட வழிவகுக்கும்..


 *144 தடை உத்தரவு முதல்வரை கட்டுப்படுத்துமா?* 

அவரைக் கட்டுப்படுத்தாது. சட்டத்தை போடும் இறையாண்மை கொண்ட முதல்வருக்கு பொருந்தாது. 144 தடை உத்தரவை போடுவதே அரசு தானே? 144 போட்டால் 5 அல்லது 5 நபருக்கு மேல் ஒன்றுகூட கூடாது, சட்டம் ஒழுங்கை பாதிக்கும் வகையில் நடமாட கூடாது. அப்படியானால் 4 போலீஸுக்கு மேல் அங்கு நடமாடாமல் இருப்பார்களா? அதைக் கட்டுப்படுத்த வேண்டிய இடத்தில் இருப்பவர்கள் போலீஸார் தானே? நூற்றுக்கணக்கில் போலீஸார் அங்கு போகிறார்களே?


கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் 

நீலகிரி 








 *144 தேவையா..?* 

தூக்குத் தண்டணையே தேவையில்லை என்ற வாதங்கள் இருக்கும் பொழுது, 144 தடையுத்தரவு தேவையா? என்பதும் வாதத்திற்குரியதே. இத்தடையுத்தரவு பெரும்பாலும் பொது மக்களின் அறப் போராட்டங்களுக்குகே தடை போடப்படுகிறது என்பதும், அதனால் மக்கள் படும் துயரங்களைப் பார்க்கும் பொழுது சுதந்திரம் கிடைத்துவிட்டதா என்ற சந்தேகத்தையே எழுப்புகிறது.

பரோல் (Parole) - யாருக்கு எப்போது வழங்கப்படுகிறது?*

 *பரோல் (Parole) - யாருக்கு எப்போது வழங்கப்படுகிறது?* 

சிறைத் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கும் ஒருவரை இடையில் நிபந்தனையின் பேரில் தற்காலிகமாக விடுவித்தல் ‘பரோல்’ எனப்படும். அந்த விடுவிப்பை அதற்குரிய ஆணைய அதிகாரி எப்போது வேண்டுமானாலும் மாற்றலாம்.

 *பரோலில் எப்போது விடுவிக்கலாம்* 

1. கைதி ஒருவர் முழுமையாகக் குருடாகிவிடுதல் மற்றும் குணப்படுத்த முடியாத குருட்டுத் தன்மையில் இருத்தல்.

2./நுரையீரல் சம்பந்தமான கடுமையான காசநோயால் பாதிக்கப்பட்டிருத்தல், அந்த நோயின் காரணமாக, கைதி எந்தக் குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறாரோ அந்தக் குற்றத்தை மீண்டும் செய்ய முடியாதிருத்தல்.

3. கைதியின் உடல்நலம் மிகவும் மோசமாக பாதிக்கப்படுதல், அவர் பரோலில் விடுவிக்கப்படாமல் இருந்தால் உடல்நலமின்மை காரணமாக இறந்துபோக நேரிடும். வெளியில் அனுப்பினால் மீண்டும் உடல்நலம் பெற வாய்ப்புள்ளது.

4. தொற்று நோயல்லாத வேறு நோயின் காரணமாக கைதி ஒருவர் இறந்துவிடும் அபாயநிலையில் இருத்தல்.

5. அவர் சிறையின் உள்ளேயோ சிறைக்கு வெளியிலோ உடல்நலம் பெற வாய்ப்பில்லாதிருத்தல் ஆகிய இந்த நிலைகளில் கைதியை விடுவிக்கலாம்.

6.கைதி ஒருவரைச் சிறைக்கு வெளியில் அல்லது புகலிடம் ஒன்றில் சிகிச்சைப் பெறுவதற்காகவும் விடுவிக்கலாம்.

7. இவைகளைத் தவிர, கைதி ஒருவரைப் பிரத்யேகமான சூழ்நிலைகளில் (Extraordinary circumstances) விடுதலை செய்யலாம். அதாவது ஈமச் சடங்குசெய்வதற்கும் (Funeral rites)  மற்றும் முக்கிய சடங்குகளில் கலந்து கொள்வதற்கும் அல்லது மரணப்படுக்கையில் இருக்கும் உறவினரைப் பார்பதற்கும் விடுவிக்கலாம்.

8. உச்சநீதிமன்றம் Smt.Poonam lata Vs Wadhawan and other (AIR 1987 SC 1383) என்ற வழக்கில் “பரோல்’ பற்றி விளக்கமளிக்கிறது;

*  பரோலில் கைதி ஒருவரை விடுதலை செய்வதென்பது நிர்வாகத் துறை சார்ந்ததாகும். அது பற்றிய விவரம் நீதிமன்றத்திற்கு தெரியாததாகவே இருந்தது. அண்மைக் காலங்களாக சில உயர்நீதிமன்றங்கள் மனிதாபிமானத்தைக் கவனத்தில் கொண்டு கைதிகளை பரோலில் விடுவித்து வருகின்றன.

* வரலாற்று அடிப்படையில், பரோல் என்பது இராணுவச் சட்டத்திற்கு உரியதாகும். இராணுவத்தில் போர்க்கைதி (War Prisoner) திரும்ப வருவதற்கு உறுதியளித்ததன் பேரில் பரோலில் விடுவிக்கப்பட்டார். பரோல்’ என்பது இங்கிலாந்து மற்றும் அமெரிக்க குற்றவியல் நீதிமுறையில் உள்ள ஒரு சொல்வழக்காகும், குற்றம் மற்றும் குற்றவாளிகளின் மீதுள்ள சமூகத்தின் மனநிலையை மாற்ற வேண்டும் என்பதற்காக பரோல் முறை அந்த நாடுகளில் கொண்டுவரப்பட்டது.

* பரோலில் விடுதலை செய்வது அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், 18 மாதங்களுக்கு மேல் தண்டனை அடைந்தவர்கர்கள் உரிமத்திற்குட்பட்டு விடுவிக்கப்படுவார்கள். அதாவது தண்டனையை அனுபவிக்கும் மூன்றாவது பருவத்திற்குப் பின்னர் பரோலில் விடுவிக்கப்படுவார்கள். அந்த நாடுகளில் பரோல் என்பது கருணையின் அடிப்படையில் வழங்கப்படுவதாகும். அதனை உரிமையாகக் கொண்டாட முடியாது.

* தண்டனைக் கைதி பரோலில் விடுவிக்கப்படும் போது சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டு விடுவிக்கப்படலாம். அவர் அந்த நிபந்தனைகளுக்கு ஏற்ப நடந்து கொள்ளுதல் வேண்டும். தண்டனைக் கைதி பரோலில் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டாலும், அதை ஒரு பகுதி சிறை வைப்பாகவே மேற்கொள்ளுதல் வேண்டும்.

* பரோலில் விடுதலை செய்வதென்பது சீர்திருத்தத்திற்கான நடைமுறையாகும். கைதி தன்னை திருத்திக் கொண்டு பயனுள்ள குடிமகனாக ஆவதற்குப் பரோல் மூலம் கைதிக்கு வாய்ப்பளிக்கப்படுகிறது. பரோல், கைதிக்கு பகுதியளவு சுதந்திரத்தை அளிக்கிறது அல்லது கைதிக்கு வரையரைகளைக் கற்பிக்கிறது. ஆனால், அவர் பரோலில்  விடுவிக்கப்படுவதால், கைதி என்ற தகுதியினின்று மாறுபடமாட்டார்.

* பரோலில் விடுவிக்கப்பட்ட கைதிகளைப் பரோல் வழங்கும் அதிகாரி கண்காணிப்பதற்கு விதிகள் இயற்றப்பட்டுள்ளன. பரோலில் விடுதலையான கைதி ஒருவர் பரோல் வழங்கும் அதிகாரியிடம் உறுதியளித்திட்டபடி நடந்து கொள்ளாத போது, அந்த அதிகாரி, அந்தக் கைதியை சரணடையும்படி கட்டளையிடலாம்.

* பரோல் என்பது நீண்டகால தண்டனையைப் பெற்ற கைதி ஒரு பகுதியளவு தண்டனையை அனுபவித்திருக்கும் போது மட்டுமே வழங்கப்படுகிறது.

* மேலும், உயர்நீதிமன்றங்களோ, உச்சநீதிமன்றமோ காவலில் வைக்கப்பட்டவரை (Detenu) பரோலில் விடுவிக்கக் கூடாது.  பிரத்யேகமான சூழ்நிலைகளில் கைதியை உயர்நீதிமன்றம் குற்றவியல் நடைமுறை சட்டப் பிரிவு 482-இன் படி விடுதலை செய்யலாம். (Prisoner can be released on Parole by the High Court U/s 482 in Extra ordinary circumstances).

முன் ஜாமீன் அல்லது முன் ஜாமீன் :

 *முன் ஜாமீன் அல்லது முன் ஜாமீன் :

இந்தியாவில், கைதுக்கு முன் ஜாமீன் என்பது ஒரு தனிநபருக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்படுவதற்கு முன்பு ஜாமீன் பெற அனுமதிக்கும் ஒரு சட்ட விதியாகும். இது முன்ஜாமீன் என்றும் அழைக்கப்படுகிறது.

இந்திய குற்றவியல் சட்டங்கள் ஜாமீனில் வெளிவர முடியாத குற்றத்தைச் செய்ததற்காக கைது செய்யப்படுவதை எதிர்பார்த்து ஜாமீன் பெற அனுமதிக்கின்றன. 

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 438(1) ன் கீழ் முன்ஜாமீன் வருகிறது .

இந்திய சட்ட ஆணையம் அதன் ஒருங்கிணைப்பை பரிந்துரைத்த பிறகு, இந்த பிரிவு குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் (CrPC) சேர்க்கப்பட்டது. ஜாமீனில் வெளிவர முடியாத குற்றமாக இருந்தால் மட்டுமே ஒருவர் முன்ஜாமீனுக்கு விண்ணப்பிக்க முடியும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் .

முன்ஜாமீனுக்கான நிபந்தனைகள் என்ன?

1) முன் ஜாமீன் பெற, அந்த நபர் உயர் நீதிமன்றம் அல்லது செஷன்ஸ் நீதிமன்றத்தில் விண்ணப்பம் செய்ய வேண்டும் .

2) முன் ஜாமீன் கோருவதற்கான காரணங்களைக் குறிப்பிட வேண்டும் மற்றும் கோரிக்கையை ஆதரிக்க ஏதேனும் ஆதாரங்களை வழங்க வேண்டும். 

3) தகுதியை மதிப்பிட்ட பிறகு, நீதிமன்றம் பின்வரும் நிபந்தனைகளின் அடிப்படையில் ஜாமீன் வழங்கலாம்:

குற்றம் சாட்டப்பட்டவர் காவல் துறை அதிகாரி (கள்) மூலம் விசாரணைக்கு அழைக்கப்படும் போதெல்லாம் இருக்க வேண்டும்.

4) சாட்டப்பட்டவர்கள் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்த பிறகு, அது குறித்து எதிர் தரப்புக்கு அறிவிக்க வேண்டும். அதே நீதிமன்றத்தில் எதிர்க்கட்சிகளும் ஜாமீன் மனுவை எதிர்த்துப் போராடலாம். மேலும், எதிர் தரப்பு இந்த நோக்கத்திற்காக அரசு வழக்கறிஞரின் உதவியை நாடலாம்.

5) சாட்டப்பட்டவர் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வற்புறுத்தவோ, தூண்டவோ, வாக்குறுதியளிக்கவோ, வழக்கு தொடர்பான உண்மைகளை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்திற்கோ அல்லது காவல்துறை அதிகாரிகளுக்கோ (களுக்கு) வெளிப்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

6) சாட்டப்பட்டவர்கள் உயர் நீதிமன்றம் அல்லது செஷன்ஸ் நீதிமன்றத்திடம் முன் அனுமதி பெறாமல் இந்தியாவை விட்டு வெளியேறக் கூடாது.

7) மாநிலத்தின் உயர் நீதிமன்றம் அல்லது செஷன்ஸ் நீதிமன்றத்தால் மட்டுமே  வழங்க முடியும். இது குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்வதிலிருந்து விலக்கு பெற அதிகாரம் அளிக்கிறது.

எனவே, நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கினால், அந்த நபர் கைது செய்யப்படுவதைத் தவிர்த்து, தொடர்ந்து சுதந்திரமாக இருக்க முடியும். மேலும் ஜாமீன் பொதுவாக ஜாமீன் அல்லது தனிப்பட்ட பத்திரத்தை வழங்குதல், பாஸ்போர்ட்டை ஒப்படைத்தல், காவல் நிலையத்தில் புகார் செய்தல் மற்றும் சாட்சியங்களை சேதப்படுத்துதல் அல்லது சாட்சிகளை பாதிக்காமல் இருப்பது போன்ற சில நிபந்தனைகளுடன் வழங்கப்படுகிறது.


கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் 

நீலகிரி மாவட்டம்


வாகனம் திருடப்பட்டால்

 வாகனம் திருடப்பட்டால், வாகனத்தை மாற்றுபவர் காப்பீட்டு பாலிசியின் பலனைப் பெற தகுதியுடையவரா?

 வழங்கிய தொடர்புடைய அவதானிப்புகள்

  மாண்புமிகு உச்சநீதிமன்றம் மல்லம்மா வழக்கில் தீர்ப்பின் 10வது பத்தியில்

  (சுப்ரா), தற்போதைய வழக்கில் லாபகரமாக பின்பற்றப்படலாம், கீழ்க்கண்டவாறு படிக்கவும்:-

  “எங்களுக்கு முன், மேல்முறையீடு செய்தவர்களுக்கான ஆலோசனையைக் கற்றுக்கொண்டோம்

  எம்.வி.யின் பிரிவு 157ஐ நம்பி  சட்டம், என்று வாதிட்டார்

  என வாகனத்தின் உரிமை பரிமாற்றம் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது

  கமிஷனர் முன் நிரூபிக்கப்பட்டது.  ஒருமுறை உரிமை

  வாகனம் மாற்றப்பட்டது நிரூபிக்கப்பட்டுள்ளது

  ஜீவ ரத்ன செட்டி, தற்போதுள்ள காப்பீட்டு பாலிசி

  அதே வாகனமும் இருந்ததாகக் கருதப்படும்

  புதிய உரிமையாளருக்கு மாற்றப்பட்டது மற்றும் பாலிசி காலாவதியாகாது

  பிரிவு 103 இன் கீழ் தகவல் தேவைப்பட்டாலும் கூட

  எம்.வி.  சட்டம் காப்பீட்டாளருக்கு வழங்கப்படவில்லை, எனவே குற்றம் சாட்டப்பட்டது

  உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு சட்டத்திற்கு முரணானது.  இல்

  இந்த வாதத்தை ஆதரிப்பதற்காக, கற்றறிந்த ஆலோசனை

  மேல்முறையீடு செய்தவர் இந்த நீதிமன்றத்தின் தீர்ப்பை நம்பியிருந்தார் ஜி.

  கோவிந்தன் Vs.  நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கோ. லிமிடெட் (1999) 3

  SCC 754."

  மேலே சொன்ன விகிதத்தில் மல்லம்மாவின் சட்டத்தில் வகுக்கப்பட்ட போது

  வழக்கு (சுப்ரா), தற்போதைய வழக்கின் உண்மை சூழலில் கருதப்படுகிறது, அதே

  பிரதிவாதி எண்.1க்கு ஆதரவாகவும் மனுதாரருக்கு எதிராகவும் முழுமையாகப் பொருந்தும்-


  காப்பீட்டு நிறுவனம்.  இந்த விஷயத்தின் பார்வையில், அதை பாதுகாப்பாக முடிக்க முடியும்

  நிரந்தர லோக் அதாலத் சரியாக நியாயப்படுத்தப்பட்டது, அதே சமயம் ரிலையன்ஸ் வைக்கிறது

  மல்லம்மா வழக்கில் மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் பேரில் (சுப்ரா)

  இந்த காரணத்திற்காகவும் தடைசெய்யப்பட்ட உத்தரவு நிலைநாட்டப்படுவதற்கு தகுதியானது.

  பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தில்

  சண்டிகரில்

  2016 இன் சிவில் ரிட் மனு எண். 14086

  முடிவு தேதி: 11.8.2016

  தி ஓரியண்டல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் மற்றும் பிற


  Vs.

  அபிஷேக் குமார் மற்றும் மற்றொருவர்


  கோரம் : திரு.  நீதியரசர் ரமேஷ்வர் சிங் மாலிக்

  மேற்கோள்: 2017(2) ALLMR(JOURNAL)23

*ஆயுள் தண்டனை என்றால் என்ன?*

 *ஆயுள் தண்டனை என்றால் என்ன?* 


பெரும்பாலான நேரங்களில் குற்றம் செய்த நபருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்படுகிறது. இன்றைய கால கட்டத்தில் தூக்கு தண்டனைக்கு பதிலாக பெரும்பாலான வழக்குகளில் இந்த ஆயுள் தண்டனையே வழங்கபடுகிறது. 


 *ஆயுள் தண்டனை என்பது எவ்வளவு நாட்கள் தண்டனைக்காலம்?* 


இந்த ஆயுள் தண்டனையை “life” “ஆயுள்” என்பது ஒரு மனிதனின் கடைசி மூச்சுவரை, அதாவது “அவனின் இறப்புவரை” என்பதாகும்.


 *ஆயுள் தண்டனை எந்த சட்டத்தின் அடிப்படையில் கொடுக்கப்படுகிறது?* 


இந்திய தண்டனை சட்டம் பிரிவு 45-ன்படி தான் ஆயுள் தண்டனை வழங்கபடுகிறது.


இந்திய தண்டனைச் சட்டம் 53 ஆம் பிரிவின்படி பல்வேறு குற்றங்களுக்கு ஏற்ப தண்டனைகளையும் பிரித்து சொல்லியுள்ளது. இந்தச் சட்டத்தின் விதிகளின்படி குற்றவாளிகள் பொறுப்பேற்க வேண்டிய தண்டனைகள் எவ்வாறு பிரிக்கப்படுகிறது. நமது இந்தியா ஆங்கிலேயர்களின் ஆட்சியில் இருந்தபோதிலிருந்தே வழங்கப்பட்ட சட்டங்களை வரையறுத்துள்ளேன்.

 

1) மரணதண்டனை. (Death)


2) ஆயுட்காலம் வரை சிறை. (imprisonment for life)


3) நாடு கடத்துவது (இந்த சட்டம் தற்போது அமலில் இல்லை. இந்த சட்டத்தின் அடிப்படையில் குற்றம் செய்தவர்களுக்கு 1955க்கு பின்னர் கடும்சிறை தண்டனை வழங்கப்பட்டது) 


4)இந்த நான்காவது பிரிவு இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. 

    

4 இன் உள்பிரிவு (1) கடும் சிறைதண்டனை Rigorous imprisonment (சிறையில் வேலை செய்ய வைப்பர்)


அல்லது 


4 இன் உள்பிரிவு (2) சாதாரண சிறை தண்டனை Simple imprisonment.


5) சொத்தை பறிமுதல் செய்வது.


6) அபராதமாக பணம் கட்டச் சொல்வது. (Fine)


ஆயுள் தண்டனைகளை மாற்றஅரசுக்கு அதிகாரமுண்டா?


பிரிவு 54-ன்படி மரணதண்டனை கொடுத்திருந்தால், அதை அடுத்த குறைந்த தண்டனைக்கு மாற்றிக் கொள்ள தகுந்த அரசாங்கத்துக்கு அதிகாரமுண்டு.


இங்கு “தகுந்த அரசாங்கம்” என்று சொல்லியுள்ளதற்கு விளக்கமாகத்தான், தற்போது சுப்ரீம்கோர்ட், சிபிஐ வழக்குகளுக்கு மத்திய அரசு என்றும் மற்ற வழக்குகளுக்கு மாநில அரசு என்றும் விளக்கம் அளித்துள்ளது.


உதாரணமாக ராஜிவ்காந்தி கொலை வழக்கு எடுத்துக்கொள்ளலாம். 

 

பிரிவு 54-ல் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்ற தகுந்த அரசாங்கத்துக்கு அதிகாரமுண்டு.


பிரிவு 55-ல் ஆயுள் தண்டனையை 14 வருடங்களுக்கு மிகாத தண்டனையாக மாற்ற தகுந்த அரசாங்கத்துக்கு அதிகாரமுண்டு. 


(இந்தப் பிரிவை வைத்துத்தான், எல்லா ஆயுள் தண்டனை கைதிகளும் 14 வருடத்திலோ, அல்லது நன்நடத்தை விதிகளின்படி அதற்கு முன்னரோ சிறையிலிருந்து வெளியே வந்துவிடுகின்றனர்.)


இதுஇல்லாமல், பிரிவு 57-ல் ஆயுள் தண்டனை என்பதை 20 வருட தண்டனைக்கு சமமானதாக எடுத்துக் கொள்ளவேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. இது இல்லாமல், குற்றவாளி, கடும்சிறை அனுபவிக்க வேண்டுமா அல்லது சாதாரண சிறை அனுபவிக்க வேண்டுமா என்பதை, தண்டனை கொடுத்த நீதிபதிதான் முடிவு செய்து தீர்ப்புடன் அறிவிப்பார்.


அபராத தொகை எவ்வளவு என்பது அதே சட்டத்திலேயே (மிக அதிகபட்சம் எவ்வளவு என்று) சொல்லப்பட்டிருக்கும். அதற்கு மேல் அபராதம் விதிக்க நீதிபதிக்கு அதிகாரம் கிடையாது. ஆனால், அதற்கும் குறைவாக அபாரதம் விதிக்க அவருக்கு அதிகாரம் உண்டு.

அந்த அபராத தொகையையும் கட்ட முடியாதவராக இருந்தால், அதற்கும் சேர்த்து சாதாரண சிறை தண்டனை அனுபவித்துவிட்டு வந்தால் போதும். (50 ரூபாய்க்கு 2 மாதமும், 100 ரூபாய்க்கு 4 மாதமும், எவ்வளவு பணமாக இருந்தாலும் 6 மாதமும் சிறைதண்டனை இது பொருத்தமாக இல்லாதது போலவே உள்ளது இன்னும் இதை யாரும் கவனிக்கவில்லை என்றே தோன்றுகிறது).


 *ஆயுள் தண்டனை பற்றி நீங்க புரிஞ்சிக்க வேண்டியது என்ன?* 

 

ஆயுள் தண்டனை என்பது 20 வருடங்களுக்கு மட்டுமே பிரிவு 57-ஐ பாருங்கள் உங்களுக்கு புரியும். ஆயுள் தண்டனையை 14 வருடங்கள் என குறைத்துக்கொள்ள அரசுகளுக்கு அதிகாரம் உண்டு. பிரிவு 55-ஐ பாருங்கள் குற்றவாளி அந்த 14 வருடத்திலும், நன்னடத்தை விதிகளைக் கொண்டு இன்னும் குறைத்துக் கொள்ள மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு. (சிறைவிதிகள் பாருங்கள்) 2013ல் கிரிமினல் சட்ட திருத்தம் ஒன்று கொண்டுவரப்பட்டது. இந்த திருத்தம் கற்பழிப்பு குற்றங்களுக்கு தண்டனையாக 7 வருடத்திற்கு குறையாத ஆனால் 10 வருடத்திற்கு மிகாத சிறை தண்டனை கொடுக்கப்பட்டிருந்தது.


இதை இந்த 2013 திருத்த சட்டத்தின்படி திருத்தி குற்றவாளியின் உண்மையான ஆயுள் முடியும்வரை ஆயுள்தண்டனை என்று மாற்றியுள்ளது.


இதிலிருந்து தெரியவருவது என்னவென்றால் வெறும் ஆயுள்தண்டனை என்பது 14 வருடத்திற்கு மட்டுமே என்றும் உண்மையான ஆயுள் தண்டனை ஆயுள்முடியும்வரை என்றும் விளங்கிக் கொள்ளலாம்.


கற்பழிப்பு குற்றங்களுக்கு ஆயுள் முடியும்வரை ஆயுள்தண்டனை என்று திருத்திய அரசு கொலைக் குற்றங்களுக்கு வெறும் ஆயுள்தண்டனை மட்டுமே (அதாவது 14 வருட தண்டனை மட்டுமே) என்று விட்டுவிட்டது.

கற்பழிப்பு குற்றத்தைக் காட்டிலும், கொலைக்குற்றம் குறைந்ததா என்று சுப்ரீம் கோர்ட்டும் ஒருவழக்கில் கேள்வியும் எழுப்பியுள்ளது.


Commute = reduce a judicial sentence to one less severe; தண்டனை மாற்றம்;

Remission = reduce period of judicial sentence; தண்டனை காலத்தை குறைத்து சலுகை அளிப்பது.


கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம்

நீலகிரி மாவட்டம்

பேப்பர் பப்ளிகேஷன் ஆர்டரை எப்படி பெறுவது?*

 *பேப்பர் பப்ளிகேஷன் ஆர்டரை எப்படி பெறுவது?* 

 சம்மனை பிரதிவாதி பெறவில்லை என்றால் அவருக்கு சம்மனை எப்படி வழங்குவது என்று நீதிமன்றம் சில வரையறைகளை வகுத்துக் கூறியுள்ளது அதில் ஒன்றுதான் இந்த பேப்பர் பப்ளிகேஷன் என்ற நடைமுறையை முழுமையாக தெரிந்து கொண்டால் தான் சம்மன் ஒருமுறை அனுப்பினால் பேப்பர் பப்ளிகேஷனுக்கு உத்தரவு பெற முடியுமா என்கிற கேள்விக்கு முழுமையான விடையை நீங்கள் தெரிந்து கொள்ள முடியும்.

 *பேப்பர் பப்ளிகேஷன் என்றால் என்ன?* 

பேப்பர் பப்ளிகேஷன் என்றால் நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் விபரத்தினை பிரதிவாதிக்கு தெரியப்படுத்த முடியாத ஒரு சூழ்நிலை ஏற்படும் போது அவருக்கு பேப்பர் பப்ளிகேஷன் அதாவது செய்தித்தாளில் விளம்பரம் கொடுப்பதன் மூலமாக வழக்கு இருக்கும் விபரத்தினை பிரதிவாதிக்கு தெரியப்படுத்தும் நடைமுறையை தான் பேப்பர் பப்ளிகேஷன் ஆர்டர் என்று சொல்கிறோம்.

 

 *நீதிமன்றத்தில் சம்மன் எப்படி அனுப்பப்படுகிறது?* 


நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு அந்த வழக்கு தாக்கல் செய்யும்பொழுது பிரதிவாதிக்கு சம்மன் (Summons) ப்ராசஸ் நடைமுறையை கடைபிடிக்க வேண்டும் வழக்கு தாக்கல் செய்யும்பொழுதே அந்த வழக்கில் யார் பிரதிவாதியோ அவர்கள் எத்தனை நபர்களோ அவர்களுக்கு அந்த வழக்கின் மனுவின் நகல்கள் மற்றும் அந்த வழக்கில் ஆஜராகும் படி சமன்கள் எழுதப்பட்டு அதனோடு சேர்த்து அந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட வேண்டும் அதை நீதிமன்றத்தின் மூலமாக பதிவு தபாலில் அனுப்புவார்கள்.


நீதிமன்றம் சம்மன் (Summons) அனுப்பிய உடனே அதை பிரதிவாதி வாங்கவில்லை என்றால் பேப்பர் பப்ளிகேஷன் உத்தரவை பெற முடியுமா?

நீதிமன்ற வழக்கில் ஒரு சம்மன் (Summons) அனுப்பி அது பிரதிவாதிக்கு கிடைக்கவில்லை என்றால் உடனடியாக பேப்பர் பப்ளிகேஷன் ஆர்டர் பெற முடியாது. ஏனென்றால் நீதிமன்றம் மூலமாக அனுப்பிய சம்மன் என்ன காரணத்தினால் பிரதிவாதிக்கு கிடைக்கவில்லை என்பதை பார்க்க வேண்டும்.


நீதிமன்றம் மூலமாக வழக்கில் அனுப்பபட்ட சம்மன் (Summons) பிரதிவாதியின் முகவரி மாறியதால் கிடைக்கவில்லையா? அல்லது தவறான முகவரியா? அல்லது அதே வீட்டில் இருந்து கொண்டு பிரதிவாதி இல்லாததுப் போல் ஏமாற்றி வாங்காமல் இருக்கிறாரா? அல்லது அவர் அதே முகவரியில் இருந்து கொண்டு சம்மனை வாங்க மறுத்துவிட்டாரா? என்று மேற்படி எந்த காரணத்திற்காக பிரதிவாதி நீதிமன்றம் சம்மனை பெறவில்லை என்பதை கவனமாக கவனிக்க வேண்டும் 


1. பிரதிவாதி முகவரியை மாற்றிவிட்டார்.

பிரதிவாதி முகவரியை மாற்றிவிட்டார் என்றால் நீதிமன்ற வழக்கில் கொடுக்கபட்ட முகவரியை மாற்றி தற்போதைய முகவரியை வழக்கில் இணைக்க நீதிபதி உத்தரவிடுவார்.


2. பிரதிவாதியின் முகவரி தவறு.

பிரதிவாதியின் முகவரி தவறாக எழுதி சம்மன் அனுப்பபட்டு இருந்தால் சம்மன் அந்த முகவரிக்கு சென்றுவிட்டு தவறான முகவரி என்று ரிட்டன் நீதிமன்றத்திற்கு அனுப்பபடும் அதாவது பிரதிவாதியின் முகவரியில் தெருக்கள் அல்லது அஞ்சலகம் போன்றவை தவறாக எழுதி இருந்தால் அதை குறிப்பிட்டு நீதிமன்றத்திற்கு திருப்பி அனுப்பபடும் அதை நீதிபதி விசாரித்து வழக்கில் சரியான முகவரியை திருத்தம் செய்ய உத்தரவிடுவார்.

3. வீட்டில் இருந்து கொண்டே பிரதிவாதி இல்லாததுப் போல் ஏமாற்றி வாங்காமல் இருக்கிறார் என்ன ஆகும்?

வீட்டில் இருந்து கொண்டே பிரதிவாதி இல்லாதது போல் சம்மனை வாங்காமல் ஏமாற்றினால் நீதிமன்றத்தில் சம்மன் பதிவு தபாலில் அனுப்படும் அதை தாபால்காரர் வீட்டிற்கு கொணடு வரும் போது கதவு மூடி இருந்தாலோ அல்லது வெளிநாட்டிற்கு சென்றுவிட்டாலோ அதை தபால்காரர் கதவு மூடியிருந்தது (Door closed) என்று சம்மனை திருப்பி (return) நீதிமன்றத்திற்கே அனுப்பி விடுவார் அதை பெற்று கொண்ட நீதிபதி திரும்பவும் புதிய சம்மன் அனுப்ப உத்தரவிடுவார்.

4. வீட்டிலிருந்து கொண்டு சம்மனை வாங்க மறுத்து விட்டால். 

 நீதிமன்றம் மூலமாக வழக்கில் அனுப்பபடும் சம்மனை வீட்டிலிருந்து கொண்டே தபால்காரர் கொண்டு வரும் போது வாங்க மறுத்து விட்டால் அந்த சம்மன் திரும்பவும் (return) நீதிமன்றத்திற்கு திருப்பி அனுப்பபடும் அதில் மறுத்து விட்டார் (refused) என எழுதி திருப்பி அனுப்புவார். இது பிரதிவாதிக்கு எதிராக அமையும் வழக்கை பற்றிய விபரம் தெரிந்ததால் தான் சம்மனை வாங்கவில்லை என்று நீதிபதி கருதி வழக்கில் பிரதிவாதியை செட் எக்ஸ்பார்ட்டியாக (ex parte) அறிவிப்பார் இதன் காரணமாக பிரதிவாதியின் வாதத்தை கேட்காமலேயே வழக்கில் ஒருதலைபட்சமாக தீர்ப்பு வழங்கபடும்.

மேலே கூறிய காரணங்கள் மிக முக்கியமானவை இதில் சில காரணங்களுக்காக பேப்பர் பப்ளிகேஷன் உத்தரவை நீதிமன்றத்தில் பெற முடியும் அதை தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.

 *எந்தெந்த காரணங்களுக்கு பேப்பர் பப்ளிகேஷன் உத்தரவை பெற முடியும்?* 

பிரதிவாதியின் முகவரியை மாற்றிவிட்டார் என்றாலோ தற்போதைய முகவரி தெரியாத காரத்திற்காக திரும்ப திரும்ப புதிய சம்மனை அனுப்பாமல் பேப்பர் பப்ளிகேஷன் ஆர்டரை (paper publication order) பெறலாம். 

பிரதிவாதியின் முகவரி தவறு என்றால் அதை திருத்தம் செய்தும் பிரதிவாதிக்கு சம்மன் கிடைக்கவில்லை என்றால் பேப்பர் பப்ளிகேஷன் ஆர்டர் உத்தரவை பெற முடியும். 

வீட்டில் இருந்து கொண்டே பிரதிவாதி இல்லாததுப் போல் ஏமாற்றி வாங்காமல் இருக்கிறார் என்றால் திரும்ப திரும்ப மூன்று முறை புதிய சம்மனை அனுப்பியும் பயனில்லை என்றால் பேப்பர் பப்ளிகேஷன் ஆர்டரை பெறமுடியும்.

 *ஒருமுறை சம்மன் (சம்மன்ஸ்) அனுப்பியும் பிரதிவாதி வாங்கவில்லை என்றால் உடனடியாக பேப்பர் பப்ளிகேஷன் உத்தரவை பெற முடியுமா?* 

  நீதிமன்றம் மூலமாக சம்மன் ஒருமுறை அனுப்பிய பிறகு அதை பிரதிவாதி பெறவில்லை என்றால் அதன் காரணத்தை கவனிக்க வேண்டும். பிரதிவாதி சம்மனை வாங்க மறுத்து இருந்தால் அவருக்கு எதிராக ஒருதலைப்பட்ச தீர்ப்பு வழங்கப்படும். மாறாக வேறு காரணங்களுக்காக பிரதிவாதிக்கு சம்மன் கிடைக்கவில்லை என்றால் திரும்பவும் புதிய சம்மனை அனுப்பச் சொல்லி நீதிபதி உத்தரவிடுவார் இதைப்போல இரண்டு அல்லது மூன்று வாய்ப்புகள் பிரதிவாதிகளுக்கு வழங்கப்படும்.

அனுப்பிய புதிய சம்மன்களும் (சம்மன்கள்) நீதிமன்ற வழக்கு தொடர்ந்து நிலுவையில் இருக்கும் அந்த சூழ்நிலையில் வாதி பேப்பர் பப்ளிகேஷனுக்கு மனு தாக்கல் செய்யும்போது அந்த மனுவைப் பெற்றுக் கொண்ட நீதிபதி பேப்பர் பப்ளிகேஷனுக்கு உத்தரவிடுவார் இதனால் சம்பந்தப்பட்ட வழக்கின் தகவல்களைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். தோன்றாத போது அவருக்கு எதிராக ஒருதலைப்பட்ச தீர்ப்பு வழங்கப்படும் நீதிமன்ற வழக்குகளை நிராகரித்தால் அந்த வழக்குகளை நடத்தாமல் தனது பக்க ஆவணங்களை சமர்ப்பித்து தனது வாக்குமூலத்தை தாக்கல் செய்து தனது வாதத்தை நீதிமன்றத்தில் எடுத்துரைக்கவில்லை என்றால் அவருக்கு எதிராக தீர்ப்பு நீதிமன்றத்தில் வழங்கப்படும்.

ஆனால் ஓரு முறை சம்மனை அனுப்பியவுடன் உடனடியாக பேப்பர் பப்ளிகேஷன் ஆர்டரை பெற முடியாது. அதற்கு நீண்ட நடைமுறைகள் இருக்கிறது அதை பின்பற்றி தான் பேப்பர் பப்ளிகேஷன் உத்தரவை நீதிமன்றத்தில் பெற முடியும்.

 *எந்த சட்டத்தின் அடிப்படையில் பேப்பர் பப்ளிகேஷன் ஆர்டர் உத்தரவை நீதிமன்றத்தில் பெற முடியுமா?* 

நீதிமன்றத்தின் மூலமாக வழக்கு தாக்கல் செய்யப்பட்ட பிரதிவாதிக்கு வழக்கு விசாரணைக்கு பலமுறை சம்மன் அனுப்பி அவருக்கு கிடைக்காத பட்சத்தில் நீதிமன்றத்தில் இந்த பேப்பர் பப்ளிகேஷன் உத்தரவை பெற முடியும் ஆனால் மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் அது எந்த சட்டத்தின் அடிப்படையில் தாக்கல் செய்ய வேண்டும் இந்திய சிபிசி சட்டம் அதாவது இந்திய உரிமையியல் நடைமுறைச் சட்டம் ஆர்டர் (ஆர்டர்) 5 விதிகள் ) 20 இதற்கான வழிமுறைகளை வரையறுத்துக் கூறுகிறது இதை சப்ஸ்டிடியூடெட் சர்வீஸ் (பதிலீடு சேவை) என்று சிபிசி சட்டம் சொல்கிறது.

கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம்

பந்தலூர் 

நீதிமன்றத்தில் IA என்றால் என்ன?

 *நீதிமன்றத்தில் IA என்றால் என்ன?* 


 *I.A பெட்டிஷன் அர்த்தம் என்ன?* 


இந்தியாவில் உள்ள நீதிமன்றங்களில் சிவில் வழக்குகள் தாக்கல் செய்தவர்கள் I.A என்ற வார்த்தையை பல முறை கேள்விப்பட்டு இருப்பீர்கள், IA என்ற சொல்லின் அர்த்தம் என்னவென்றால் I. A" என்பது Interlocutory Application, Interim Application,and  Impleading application, என்று அறியப்படுகிறது.


 *Interlocutory Application-இடைநிலை விண்ணப்பம்.* 


 *Interim Application-இடைக்கால விண்ணப்பம்.* 


 *Impleading application-உள்வாங்கும் விண்ணப்பம்.* 


 *I.A பெட்டிஷன் எப்போது தாக்கல் செய்யப்படுகிறது?* 


நீதிமன்ற வழக்குகளில் சூழ்நிலைக்கேற்ப இந்த I.A மனுக்கள் தாக்கல் செய்யபடுகிறது.  இதை தெளிவாக நீங்கள் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் அனைத்து I.A மனுக்களும் இடைக்கால விண்ணப்பங்கள் (இடைச்சொருகல் விண்ணப்பங்கள்)என்றே வைத்துக் கொள்ளுங்கள். இனி இதை பற்றி இடைக்கால விண்ணப்பம் என்றே குறிப்பிடுகிறேன் எளிதாக புரிந்து கொள்வதற்காக, இந்த இடைக்கால விண்ணப்பம் என்பது முக்கிய வழக்கு நிலுவையில் இருக்கும் போது சில இடைக்கால நிவாரணம் அல்லது நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களைக் கோரி சட்ட நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள தரப்பினரால் செய்யப்படும் கோரிக்கையாகும்.    

இது ஒரு குறிப்பிட்ட சிக்கலைத் தீர்க்க அல்லது உடனடி கவனம் தேவைப்படும் உத்தரவைப் பெறுவதற்கான முக்கிய நடவடிக்கைகளின் போது செய்யப்படும் விண்ணப்பமாகும்.  


எடுத்துக்காட்டாக : ஒரு சொத்தில் உரிமை யாருக்கு என்று வழக்கு நடந்து கொண்டு இருக்கும் போது வாதியோ அல்லது பிரதிவாதியோ அந்த வழக்கு சொத்தை விற்பனை செய்ய முயற்சி செய்தால் அதை தடை செய்ய உடனடியாக நீதிமன்றத்தில் தெரியப்படுத்தி தடை உத்தரவு பெற வேண்டும் இதற்காக வாய்மொழியாக சொல்லி உத்தரவு பெற முடியாது அதற்காக புதிய விண்ணப்பம் தாக்கல் செய்து அதன் அடிப்படையில் உத்தரவை நீதிமன்றத்தில் பெற வேண்டும் இந்த புதிய விண்ணப்பத்தை வழக்கு நடந்து கொண்டிருக்கும் இடையில் இடைக்காலத்தில் தாக்கல் செய்வதால் தான் இதை இடைக்கால விண்ணப்பம் I.A என்று அழைப்படுகிறது.


இடைக்கால விண்ணப்பங்கள், தடை கோருதல், தற்காலிக தடை (temporary stay), பெறுநர்களை நியமனம் செய்தல்(appointment of receivers), மனுக்களில் திருத்தம் செய்தல் (amendment of pleadings), கூடுதல் ஆதாரங்களை சேர்க்க அனுமதி கோருதல் போன்ற பல்வேறு விஷயங்களைத் தீர்ப்பதற்காக தாக்கல் செய்யப்படுகின்றன.

இடைக்கால விண்ணப்பங்கள் என்பது அடிப்படையில் இது இடைக்கால நிவாரணம் பெற அல்லது ஏதேனும் ஒன்றைப் பெறுவதற்குப் பயன்படுத்தப்படும் நடைமுறை சட்ட செயல்முறை ஆகும்.   


 *I.A பெட்டிஷன் நீதிமன்ற நடைமுறை?* 


ஒரு தரப்பினர் ஒரு இடைநிலை விண்ணப்பத்தை தாக்கல் செய்யும் போது, ​​அது வழக்கமாக தனித்தனியாக எண்ணப்பட்டு, "IA எண். X இன் YYYY" போன்ற ஒரு தனித்துவமான தலைப்பு எண் வழங்கப்படுகிறது. வழக்கின் தகுதி மற்றும் சூழ்நிலைகளின் அடிப்படையில் விண்ணப்பத்தை நீதிமன்றம் முடிவு செய்யும்.   

நீதிமன்றம் மற்றும் குறிப்பிட்ட வழக்கை நிர்வகிக்கும் குறிப்பிட்ட சட்டங்களைப் பொறுத்து இடைநிலை விண்ணப்பங்கள் தொடர்பான குறிப்பிட்ட விதிகள் மாறுபடலாம் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். 


எனவே, ஒரு குறிப்பிட்ட நீதிமன்ற அதிகார வரம்பில் ஒரு இடைநிலை விண்ணப்பத்தை தாக்கல் செய்வதற்கான தொடர்புடைய விதிகள் மற்றும் நடைமுறைகளைப் புரிந்து கொள்ள ஒரு வழக்கறிஞருடன் கலந்தாலோசிப்பது நல்லது.

மிக சிறந்த உணவை நம்மால் உண்ண முடியும்

 நம்முடைய வருமானம் குறைவாக இருக்கலாம்.


 ஆரோக்கியத்திற்கு, 

மிக சிறந்த உணவை நம்மால் உண்ண முடியும்.


எடுத்துக் காட்டாக--


1. நாட்டு மருந்துக் கடைகளில் தயார் நிலையில் விற்கும் நெல்லிக்காய் வற்றல். (தினமும்ஒன்று)


2. நஞ்சு கலந்துள்ள சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் / நாட்டு சர்க்கரை.


3. குளிர் பதனப் பெட்டியில் வைக்காத பொருள்கள்.


4. ஒரு கேரட்டுடனும் , (அல்லது)

சிறிது தேங்காயுடனும் ஒரு பேரீச்சம் பழத்தை சிறுக சிறுக கடித்து ஒன்றாக சுவைப்பது.


(இது --- கண்ணுக்கும்,

இரத்தம் அதிக மாவதற்கும்,

அறிவிற்கும், நினைவு ஆற்றல் மேம்படவும் நல்லது.)


5. அதிக கெமிக்கல்கள் உள்ள வேதியியல் பொருட்கள் கலப்புள்ள பாக்கெட் பாலை தவிர்ப்பது நல்லது.


6. தண்ணீராகவே இருந்தாலும் நாட்டு பாலை வாங்க முயற்சிக்கலாமே.


7. முடிந்தவரை செயற்கை வேதிக் கலப்பற்ற கடல் கல் உப்பை மட்டுமே பயன்படுத்தலாமே.


8. சோறு வடித்து சாப்பிடலாமே.


9. வடித்த கஞ்சியை பழய சோறு தயாரிக்க பயன்படுத்தலாமே.


10. இரண்டு லிட்டர் தண்ணீர் குடிக்கும் பாத்திரத்தை, குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு வருக்கும் தனித்தனியாக வைத்து பயன் படுத்தலாமே.


11. ஒரு நாளின் எல்லா நேரத்திலும், கீழே கண்டபடி சுவாசித்து பழகலாமே.


வேகமாக தொப்புள் வழியே காற்று உள்ளே வந்து, மெதுவாக உச்சந்தலை வழியே வெளியே செல்வதாக மனதில் நினைத்தபடியே சுவாசிக்கலாமே.


12. காலையில் முதல் வேலையாக அதிக தண்ணீரை குடித்து மலத்தை கழித்துவிடலாமே. (அ) வெதுவெதுப்பான தண்ணீரை பயன் படுத்தலாமே.

(அ) உப்பும் , எலுமிச்சை சாறும் கலந்து குடிக்கலாமே.


ஒரே மாதத்தில் குடல் நார்மலாக செயல் படும் நிலைக்கு வந்து விடுமே.


13. வடக்கு பக்கம் தலைவைத்து படுப்பதை தவிர்க்கலாமே.


14. மாலை வேளைகளில் உடைத்த-கடலை, முளைகட்டிய பயறுகளில் ஏதாவது ஒன்று, வேர்க்கடலை கொய்யா பழம் போன்ற விலை மலிவான பொருட்களை பயன் படுத்தி பழகலாமே.


15. தினமும் சூரியன் நம்மீது 10 to 20 நிமிடம் படும்படி இருக்கலாமே.


பல பல லட்ச ரூபாய் மருத்துவ செலவை குறைக்கலாமே.


16. நமது மகிழ்ச்சி என்பது வெளியில் எந்த பொருளிலும் இல்லை.


நாம் நினைக்கும் நேர் மறை எண்ணத்தில் மட்டுமே இருப்பதை நம்பலாமே.


17. எண்ணெய் குளியல், குடல் சுத்தம்,

போன்றவற்றை கடைபிடிக்கலாமே.


18. மிக சிறந்த உணவையும் அளவோடு சாப்பிட்டு உடல் நலம் காக்கலாமே 


19. அவ்வப்போது உண்ணா நோன்பு இருந்து,


உடல் காற்றின் உதவியுடனும் செயல் படுவதை ரசனையுடன் உணரலாமே.


20. செக்கு எண்ணெய்யின் விலை அதிகமாக இருந்தாலும்


அதையே பயன்படுத்தலாமே.


சுட்ட எண்ணையை மீண்டும் பயன் படுத்துவதை தவிர்க்கலாமே.


21. மைதா பொருட்களை தவிர்க்கலாமே.


22. வெது வெதுப்பான நீரை முதலில் தலையில் ஊற்றியும் ,


சாதாரண நீரை முதலில் காலில் இருந்து ஊற்றியும்


குளிக்கலாமே.


குளிக்கும் போது வாயை மூடி இருக்கலாமே.


பலர் அப்போது வாயால் சுவாசித்து உடல் நலத்தை கெடுத்து கொள்வதை கவனிக்கலாமே.


23. தூக்கம் உடனே வராத மனநிலையில் இருப்பவர்கள்,


கடைசி சொட்டு காற்றையும் வெளியே விட்டு விட்டு,


மூச்சை இழுக்காமல் இருக்கவும்.


அதிகப்படியான காற்றை வேகமாக முடிந்த வரை இழுத்து,


சிறிது நேரத்தில்


மெதுவாக வெளியே விடலாமே.


இவை ஒரு சுற்று சுவாசம்.


இப்படி இருபது சுற்றுவரை


எண்ணுவதற்கு முன்பே நாம் தூங்கி விடுகிறோம்.


24. மிக மிக எளிதான உடற்பயிற்சி: தோப்புக்கரணத்தை முடிந்த வரை போடலாமே.


படிப்படியாக அதிகப் படுத்திக் கொள்ளலாமே.


அப்போது மூச்சை விட்டபடியே உட்கார வேண்டும்.


கைகள் பெருக்கல் குறியை போல காதுகளை பிடித்து இருக்க வேண்டும்.


25. வீட்டில் நேர்மறை சக்தி அதிகமாவதற்கு தேவையான சூழ்ந்லைகளை உருவாக்கலாமே


26. உடலில்

நேர்-மறை சக்தி அதிகமாவதற்கு


நல்ல எண்ணம் உள்ளவர்களின் உறவில் இருக்கலாமே.


நல்ல நல்ல நூல்களை தேடிப் பிடித்து படிக்கலாமே.


நாம் மனம் ஒன்றி படித்தால் மட்டுமே தவறே இல்லாமல் படிக்க முடியும்.


27. எலுமிச்சை+இஞ்சி+பூண்டு மருந்து இதய அடைப்பை நீக்குகிறது.


28. கருஞ்சீரகம்+ஓமம்+ வெந்தயம் மருந்து மனிதர்களுக்கு வரக்கூடிய 4448 வியாதிகளையும் தடுத்து கட்டுப்படுத்துகிறது.


29. உடலில் அதிக ஆக்ஸிஜனை சேர்ப்பதன் மூலம் கேன்சரை கட்டுப்படுத்த முடிகிறது.


மேலே குறிப்பிட்டவைகளை கடைபிடித்து வாழ நம் எல்லோராலும் எளிதாக முடியும்.


இந்த உலகிலேயே மிகவும் உயர்ந்த பதவியையும்,


அளவிடவே முடியாத பணத்தையும் வைத்து கொண்டு இருந்தாலும் பயன் இல்லை.


தினமும் பரபரப் பாகவே வாழ்க்கையை வாழ்ந்து முடிப்பவர்களே அதிகம்.


எல்லா பழத்திலும் தோலும் கொட்டையும் இருப்பதைத் நினைத்து கவலைபடுபவர்களே அதிகம்.


இதுபோலவே--


அனைவரிடமும் குறைகளை மட்டுமே கவனித்து குறைகளையே பேசி வாழ்பவர்களே அதிகம்.


நாம் நேர்மறை எண்ணத்துடன் வாழும் போது நமது மனம்,


நமது சுவாசத்தை ஆழமாக நிர்வகித்து,


அதிக நிம்மதியையும்,

அதிக திருப்தியையும்,

அதிக ஆயுளையும் தருகிறது!


வாழ்த்துக்கள்!

வாழ்க வளமுடன்

https://www.instagram.com/cchepnilgiris?igsh=YzVkODRmOTdmMw==


நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 2019

**நுகர்வோர் பாதுகாப்பு சட்டம், 2019 (Consumer Protection Act, 2019 – Act No. 35 of 2019)**   இந்தச் சட்டம் நுகர்வோர் நலன்களைப் பாதுகாப்பதற்க...