பெறுனர்
திருமிகு ஆணையாளர் அவர்கள் திருமிகு. ஆணையாளர் அவர்கள்
உணவுப்பொருள் வழங்கல் மற்றும் வருவாய் நிர்வாகம் மற்றும்
நுகர்வோர் பாதுகாப்பு துறை பேரிடர் மேலாண்மை துறை சேப்பாக்கம், சென்னை சேப்பாக்கம்,
சென்னை
பொருள் : மாநில
அளவிலான நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகளுடனான
காலாண்டு நுகர்வோர் கூட்டம் 2018 வருவாய் துறை
சார்பான கோரிக்கைகள் முன்வைத்தல் சார்பாக
மதிப்பிற்குரிய
அம்மா அவர்களுக்கு வணக்கம்
1 அம்மா திட்ட முகாம்களில் மாற்றம்
வேண்டும். மனுக்களுக்கு தீர்வு காண வேண்டும்
வருவாய்
துறை சார்பில் வெள்ளி கிழமைகளில் நடத்தப்படும் அம்மா திட்ட முகாம்கள் தற்போது பெருமளவு
பயன்அளிப்பதில்லை. வருவாய்துறை சான்றுகள் பலவும் இனையவழியில் வழங்கப்படுகின்றது.
அதுபோல வழங்கல் துறை ஆவணங்களும் இனையவழி சேவையாக
மாற்றப்பட்டதால் அதற்கான சேவையும், மனுவும் அம்மா திட்ட முகாமில் பெற முடியாது,
இதனால் அரசு துறை அலுவலர்கள் பணியாளர்களின் பணிகள் பாதிப்பதோடு மக்களுக்கும்
பயனின்றி உள்ளது. இதனை மக்கள் பயன்பெறும் விதமாக
மாற்றி செயல்படுத்த வேண்டும்.
அதாவது
அம்மா திட்ட முகாம்களை வட்டாட்சியர் அலுவலகத்தில் துணை ஆட்சியர் தலைமையில் அனைத்து
துறை அலுவலர்கள் கலந்து கொண்டு மக்களிடம் அனைத்து
வகையான குறைகளுக்கும் மனுக்கள் பெறும் முகாம்களாக செயல்படுத்த வேண்டும்
மாவட்ட ஆட்சியர்
அலுவலகத்தில் திங்கட்கிழமைகளில் பெறப்படும் மனுக்கள் போல் அம்மா திட்ட முகாமிலும் பெறப்படும்
கிராம பகுதி குறைபாடுகளை மனுக்களாக பெற்று கணிணி பதிவுடன் ஒப்புகை சான்று வழங்கி அதன்
மூலம் தாலுக்கா பகுதிகளில் உள்ள குறைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாவட்ட
ஆட்சியர் அவ்வப்போது ஒரு வட்டத்தில் நடைபெறும் அம்மா திட்ட மனுக்கள்பெறும் முகாமில்
கலந்து கொள்ளலாம். இதனால் மாவட்ட ஆட்சியர்
அலுவலகத்தை மக்கள் தேடி வந்து புகார் அளிக்கும் நிலையும் குறையும், வட்ட அளவில்
இதனால்
பொதுமக்கள் குறைகள் களைய முடியும். கணினி வழி சான்று வழங்கப்படுவதால் ஒரே புகார் திரும்ப
வராத வண்னம் துறைகளளுக்கு அறிவுரை வழங்கி தக்க நடவடிக்கை எடுக்க செய்யலாம்.
அதுபோல் திங்கட்கிழமை தோறும் மாவட்ட ஆட்சியர் தலைமையில்
நடைபெறும் கூட்டத்தில் பெறப்படும் மனுக்களுக்கும் தீர்வு வழங்குவதை விட பதில்களே வழங்கப்படுகின்றது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2017ம் ஆண்டு பெறப்பட்ட மனுக்களுக்கு வெறும் 10 சதவீதம்
மட்டுமே தீர்வு காணப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது. இதனால் பொரும்பாலான மனுக்களுக்கு தீர்வு கிடைக்காத நிலையில் மக்கள் அலைகழிக்கப் படுகின்றனர்.
இவற்றை
சரிசெய்து மக்களின் கோரிக்கைக்கு உண்மைதன்மை அறிந்து மக்கள் குறைகளை களைய நடவடிக்கை
எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.
2. என்ஜாய்மென்ட் சான்று வாரிசு சான்று விரைவில் வழங்க
வேண்டும்
நீலகிரி
மாவட்டத்தில் என்ஜாய்மென்ட் சர்டிபிக்கேட் எனப்படும் நில உடமை சான்று , வாரிசு சான்று, மின் இணைப்பு பெற தடையில்லா சான்று
போன்ற நேரில் வழங்கும் சான்றுகள் உரிய காலத்தில் வழங்கப்படுவதில்லை. இதனால் பெரும்பாலான ஏழை விவசாயிகள் அரசின் நலதிட்டங்களை பெற இயலாமல்
அவதிப்படுகின்றனர்.
இதனால் மாவட்டத்தில் ஏழை
விவசாயிகள் பயன்பெறும் வகையில் நில உடமை சான்று, வாரிசு சான்று, மின் இணைப்புக்கான
தடையில்லா சான்று, வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.
3 ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க
வேண்டும்
வருவாய்
துறைக்கு சொந்தமான கைவச பூமி, இதர வகை பூமிகள் பெரும்பாலும் தனி நபர்களின் ஆக்கிரமிப்பில்
உள்ளது. இதனை மீட்டெடுக்க வருவாய் துறை எந்தவித
நடவடிக்கையும் எடுக்காமல் தண்ட தீர்வை மட்டும் விதித்து வருகின்றது.
அதனை ஆதாரமாக வைத்துக்கொண்டு வருவாய் துறை இடங்களில்
பெரிய அளவில் மாடி வீடு கட்டிகொண்டு வசித்து வருகின்றனர். இதனால் அரசு துறைகள் சார்ந்த கட்டிடங்கள் கட்டவே
உரிய இடவசதி இன்றி அவதிக்குள்ளாகும் நிலை உள்ளது.
இதனை மீட்டெடுக்க வருவாய் துறை சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
4 கிராம நிர்வாக அலுவலர் இளநிலை
உதவியாளர்கள் துறை உள்மாற்றம் செய்ய வேண்டும்
கிராம
நிர்வாக அலுவலர் பணிகள் தற்போது தனிப்பட்டு பணியாற்றும் நிலை உள்ளது. முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் இளநிலை உதவியாளர்களாகவும்,
இளநிலை உதவியாளர்கள் கிராம நிர்வாக அலுவலர்களாகவும் பணிமாற்றம் செய்யப்பட்டு வந்தது.
இதனால் வட்டாட்சியரின் முழு கட்டுபாட்டில் கிராம
நிர்வாக அலுவலர்களும் வந்தனர். அதுபோல கிராம
நிர்வாக அலுவலராக பணி புரிபவர் கிராம நில பதிவேடுகள் குறித்து நன்கு அறிந்தவராக இருப்பார்கள்,
இவர்கள் இளநிலை உதவியாளராக பணியாற்றும்போது கிராம
நில பதிவேடுகள் குறித்து அறிந்திருப்பதால் பணிகளில் சிறப்புடன் செயல்பட உதவும், அதுபோல இளநிலை உதவியாளர்கள் அலுவலக நடைமுறைகளை கற்றுக்கொள்வதால்
கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்தால் அலுவலக நடைமுறைக்கேற்ப அறிக்கை அளிக்க முடியும்.
எனவே கிராம நிர்வாக அலுவலார்களை இளநிலை உதவியாளா்களாகவும்,
இளநிலை உதவியாளர்களை கிராம நிர்வாக அலுவலர்களாகவும் உள்பணியிட மாற்றம் செய்ய நடவடிக்கை
எடுக்க வேண்டும்
5 பேரிடர் மேலாண்மை திட்டம் முறையாக
செயல்படுத்த வேண்டும்
வருவாய்
துறை சார்பில் பேரிடர் மேலாண்மை திட்டமும்
செயல்படுத்துவதாக உள்ளது. ஆனால் அதற்கான பயிற்சிகள்
மற்றும் செயல்பாடுகள் ஏதும் முறையாக நடைபெறுவதில்லை, இதற்காக ஒதுக்கப்படும் அலுவலரும் மாற்று பணியில்
அமர்த்தி விடுகின்றனர். பெயரளவிற்கே பேரிடர்
மேலாண்மை திட்டம் செயல்படுகின்றது.
இதனை தவிர்த்து
பேரிடர் மேலாண்மை திட்டத்தை முழுமையாக அதன் செயல்வடிவம் கிராம மக்கள் தோறும் சென்றடையும்
வண்ணம் செயல்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.
6 துறையில் உள்ள காலி பணியிடங்களை
நிரப்ப வேண்டும்
7. வருவாய் கோட்டாட்சியர் தலைமையிலான
நுகர்வோர் காலாண்டு கூட்டம் நடத்தப்பட வேண்டும்
அன்புடன்
சி காளிமுத்து தலைவர் சு. சிவசுப்பிரமணியம் பொது செயலாளர்
No comments:
Post a Comment