உணவுத் தொழிலில் ஈடுபட்டுள்ள வணிகர்கள் உரிமம் பெற பிப்.28 வரை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
உணவு வணிகம் புரியும் வணிகர்கள் அனைவரும் பதிவுச் சான்றிதழ் அல்லது உரிமம் பெற்ற பின்னரே தொழில் நடத்த வேண்டும் என உணவுப் பாதுகாப்புத் துறை ஆணையர் அமுதா உத்தரவிட்டுள்ளார்.
உணவுப் பொருள் தயாரிப்பாளர்கள், மறுபொட்டலமிடுபவர், உணவுப் பொருள் மொத்த வியாபாரம் மற்றும் சில்லறை வியாபாரம் செய்வோர், ஹோட்டல், டீக்கடை, ஸ்வீட் ஸ்டால், பேக்கரி நடத்துவோர், காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்வோர், வடை, பஜ்ஜி, போண்டா, முறுக்கு, அதிரசம் முதலிய பலகாரம் செய்து விற்போர், சமையல் எண்ணெய் தயாரிப்பாளர், சில்லறை விற்பனையாளர், சாலையோர கடை வைத்திருப்பவர்,
இறைச்சிக் கடைக்காரர்கள், முட்டை விற்பனையாளர்கள், மாவு அரைத்து கொடுப்பவர்கள் மற்றும் விற்பனையாளர்கள், அரிசி ஆலை மற்றும் கடைக்காரர்கள், கரும்புச்சாறு, பழச்சாறு கடைகள், இட்லி, ஆப்பம், பணியாரம் விற்கும் சிறு வியாபாரிகள்,
உணவுப் பொருள் ஏற்றிச்செல்லும் வாகனங்கள், பண்டிகைக் காலம் மற்றும் திருவிழாக்களில் தாற்காலிகமாக உணவுப் பொருள் விற்போர், குடிநீர் கேன்கள் மற்றும் பாக்கெட் விற்பனையாளர்கள், பால் விற்பனையாளர்கள் உள்ளிட்டோர் உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகளுக்கு உரிமம் அல்லது பதிவுச் சான்று பெற்றுக்கொள்ளலாம். அதற்கான கட்டணத்தை குறிப்பிடப்பட்ட வங்கிக் கிளைகளில் கருவூல செலுத்துச்சீட்டு மூலம் செலுத்தி, https//:foodlice nsing.fssai.gov. in என்ற
இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.
பதிவுச் சான்றுகளை அருகிலுள்ள பொதுசேவை மையம் மூலமும் விண்ணப்பித்து உடனடியாக பெற்றுக்கொள்ளலாம். பிப்.28-ஆம் தேதிக்குள் உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழ் பெறாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு தங்கள் பகுதி உணவுப் பாதுகாப்பு அலுவலரை தொடர்பு கொள்ளவும்
உணவு வணிகம் புரியும் வணிகர்கள் அனைவரும் பதிவுச் சான்றிதழ் அல்லது உரிமம் பெற்ற பின்னரே தொழில் நடத்த வேண்டும் என உணவுப் பாதுகாப்புத் துறை ஆணையர் அமுதா உத்தரவிட்டுள்ளார்.
உணவுப் பொருள் தயாரிப்பாளர்கள், மறுபொட்டலமிடுபவர், உணவுப் பொருள் மொத்த வியாபாரம் மற்றும் சில்லறை வியாபாரம் செய்வோர், ஹோட்டல், டீக்கடை, ஸ்வீட் ஸ்டால், பேக்கரி நடத்துவோர், காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்வோர், வடை, பஜ்ஜி, போண்டா, முறுக்கு, அதிரசம் முதலிய பலகாரம் செய்து விற்போர், சமையல் எண்ணெய் தயாரிப்பாளர், சில்லறை விற்பனையாளர், சாலையோர கடை வைத்திருப்பவர்,
இறைச்சிக் கடைக்காரர்கள், முட்டை விற்பனையாளர்கள், மாவு அரைத்து கொடுப்பவர்கள் மற்றும் விற்பனையாளர்கள், அரிசி ஆலை மற்றும் கடைக்காரர்கள், கரும்புச்சாறு, பழச்சாறு கடைகள், இட்லி, ஆப்பம், பணியாரம் விற்கும் சிறு வியாபாரிகள்,
உணவுப் பொருள் ஏற்றிச்செல்லும் வாகனங்கள், பண்டிகைக் காலம் மற்றும் திருவிழாக்களில் தாற்காலிகமாக உணவுப் பொருள் விற்போர், குடிநீர் கேன்கள் மற்றும் பாக்கெட் விற்பனையாளர்கள், பால் விற்பனையாளர்கள் உள்ளிட்டோர் உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகளுக்கு உரிமம் அல்லது பதிவுச் சான்று பெற்றுக்கொள்ளலாம். அதற்கான கட்டணத்தை குறிப்பிடப்பட்ட வங்கிக் கிளைகளில் கருவூல செலுத்துச்சீட்டு மூலம் செலுத்தி, https//:foodlice
இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.
பதிவுச் சான்றுகளை அருகிலுள்ள பொதுசேவை மையம் மூலமும் விண்ணப்பித்து உடனடியாக பெற்றுக்கொள்ளலாம். பிப்.28-ஆம் தேதிக்குள் உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழ் பெறாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு தங்கள் பகுதி உணவுப் பாதுகாப்பு அலுவலரை தொடர்பு கொள்ளவும்
No comments:
Post a Comment