பொதுமக்களே உஷார்…! நல்லெண்ணெய் வாங்கும்போது பார்த்து வாங்குங்க…!by SENTHIL |
செக்கு' எண்ணெய் என்று கூறி போலி நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் விற்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு பாதுகாப்பு துறை ஆணையாளர் அமுதா கூறியுள்ளார்.
சமையலில் நல்லெண்ணெய் பயன்படுத்துவது உடம்புக்கு நன்மை பயக்கும் என்று நமது முன்னோர்கள் பயன்படுத்தி வந்தனர்.
வெப்பம் காரணமாக ஏற்படும் உடல் உஷ்ணம், வயிற்றுவலி, வயிற்றுப்புண், வயிற்றுக்கோளாறு ஆகிய நோய்களுக்கு எள்ளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய்யைத்தான் பயன்படுத்தி வந்தனர்.
ஒரு காலகட்டத்தில், சந்தையில் பல்வேறு எண்ணெய்கள் வந்தன. அதன் தூய்மையையும், பளபளப்பையும் பார்த்த மக்கள், அதனை வாங்கி பயன்படுத்தி வந்தனர். ஆனால், புதிய எண்ணெய்களால் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டு வருகிறது.
புதிய எண்ணெய்களின் பாதிப்பு குறித்து அறிந்த பொதுமக்கள் மீண்டும், நல்லெண்ணெய்யை பயன்படுத்த ஆரம்பித்து விட்டனர். இதற்காக, பல்வேறு நிறுவனங்கள், நல்லெண்ணெய் குறித்து விளம்பரங்கள் வெளியிட்டும், தங்கள் நிறுவன எண்ணெய்களை அதாவது செக்கு தேங்காய் எண்ணெய், செக்கு கடலை எண்ணெய் விற்பனை செய்து
வருகிறது.
வருகிறது.
பொதுமக்களும், செக்கு எண்ணெய்களை விரும்பு வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், பல்வேறு இடங்களில் உள்ள கடைகளில் போலி செக்கு
எண்ணெய் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. இது குறித்து உணவு பாதுகாப்பு துறைக்கு பல்வேறு புகார்கள் குவிந்து வருகின்றன.
எண்ணெய் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. இது குறித்து உணவு பாதுகாப்பு துறைக்கு பல்வேறு புகார்கள் குவிந்து வருகின்றன.
பொதுமக்களின் புகாரை அடுத்து, உணவு பாதுகாப்பு துறை ஆணையாளர் அமுதா, ஆய்வு நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இது குறித்து பேசிய ஆணையாளர் அமுதா, செக்கு நல்லெண்ணெய் என்ற பெயரில் ஏமாற்றி போலியாக நல்லெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் விற்போர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
சென்னையில் உள்ள அனைத்து கடைகளிலும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள்
சோதனை நடத்தி வருவதாகவும், போலி எண்ணெய்களை பறிமுதல் செய்யப்பட்டு வருவதாகவும் கூறினார். மேலும் பொதுமக்களை ஏமாற்றுவோர் மீது
சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆணையாளர் அமுதா கூறினார்
சோதனை நடத்தி வருவதாகவும், போலி எண்ணெய்களை பறிமுதல் செய்யப்பட்டு வருவதாகவும் கூறினார். மேலும் பொதுமக்களை ஏமாற்றுவோர் மீது
சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆணையாளர் அமுதா கூறினார்
No comments:
Post a Comment