உடலுறுப்பு தானம்:
6 பேருக்கு மறுவாழ்வு!
உடலுறுப்பு தானம்: 6 பேருக்கு மறுவாழ்வு!
இரு சக்கர வாகன விபத்தினால் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் இருதயம், கல்லீரல் ஆகிய உறுப்புகள் தானமாக 6 பேருக்கு வழங்கப்பட்டது.
மதுரை மாவட்டம் திருநகர் பகுதியைச் சேர்ந்த அருணா (வயது 40).
கடந்த 28ஆம் தேதி அப்பகுதியிலுள்ள உறவினர் இல்ல விழாவிற்கு இரு சக்கர வாகனத்தில் சென்று திரும்பும்போது, எதிர்பாராத விதமாகக் கீழே விழுந்து காயமடைந்தார்.
பின்னர் அருணா அருகிலுள்ள மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுவந்தார்.
இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் மூளைச்சாவு அடைந்தார்.
இதையடுத்து அருணாவின் உடலுறுப்புகளை தானம் செய்ய அவரது உறவினர்கள் சம்மதம் தெரிவித்தார்கள்.
இதைத் தொடர்ந்து 5 மணிநேரம் அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு அருணாவின் கல்லீரல், சிறுநீரகம், இதயம் ஆகிய உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டன.
சென்னையில் உள்ள மலர் மருத்துவமனைக்குத் தனி விமானத்தின் மூலம் இதயம் எடுத்துச்செல்லப்பட்டது.
பின்பு ஒரு சிறுநீரகம் மீனாட்சி மிஷன் நோயாளிக்குப் பொருத்தப்பட்டது.
மற்றொரு சிறுநீரகம் திருச்சி அப்பல்லோ மருத்துவமனைக்கும், கண்கள் அரவிந்த் மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது. இதன்படி இந்த உடலுறுப்பு தானத்தால் 6 பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.
தற்போது தமிழகத்தில் உடலுறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு மக்களிடையே அதிகரித்துள்ளது. மக்கள் பெருமளவில் உடலுறுப்புகளை தானமாக வழங்குகிறார்கள். இதன் காரணமாக உடலுறுப்பு தானத்தில் தமிழகம் தொடர்ந்து 3ஆவது முறையாக முதலிடத்தில் இருக்கிறது.
No comments:
Post a Comment