தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை மற்றும் மருந்து நிர்வாகத்துறை பணிகளை கண்காணிக்கவும், செயல்படுத்தவும், வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டுள்ளது.
கலெக்டர் தலைமையில், சுகாதார பணிகள் துணை இயக்குனர், துணை பதிவாளர் (பால்வளம்), உதவி இயக்குனர் (ஊராட்சிகள்), மாநகராட்சி, நகராட்சி கமிஷனர்கள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் உறுப்பினராக உள்ள வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டுள்ளது.
கலெக்டர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடந்த, வழிகாட்டுதல் குழு கூட்டத்தில்,
உணவு பாதுகாப்பு விதிமுறைகளை அமலாக்குவது குறித்து விவாதிக்கப்பட்டது.அதன் விவரம்:இறந்த கோழிகளை விற்பனை செய்யும் பண்ணையாளர்கள், அதை வாங்கி இறைச்சியாக பயன்படுத்தும் சில்லறை வியாபாரிகள், தள்ளுவண்டி உணவு தயாரிப்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சூடான பொருட்களை, பாலிதீன் பைகளில் பார்சல் செய்வதும், உணவு பொருட்களை செ#தித்தாளில் பார்சல் செய்வதையும் தடுக்க வேண்டும்.உணவகங்களின் பணியாளர்கள் சுகாதாரத்தை பின்பற்ற வேண்டும்.
போலி டீ தூள் விற்பனை செய்பவர்கள் மற்றும் பயன்படுத்துபவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். உணவு பொருள் விற்பனை நடக்கும் இடங்களில், உணவு பாதுகாப்பு விதிமுறைகள் குறித்த தகவல் பலகை வைக்க வேண்டும். விற்பனையாளர்கள், பொருள் கொள்முதல் மற்றும் விற்பனைக்கான ரசீதுகளை வைக்க வேண்டும்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உணவு பொருள் விற்பனையாளர்கள், தயாரிப்பாளர்கள், அரசு திட்டங்களில் உணவு தயாரிக்கும் மையங்கள் என, அனைவரும், வரும், 28க்குள் உரிமம் பெற வேண்டும். பொதுசேவை மையங்களை அணுகி, உணவு பாதுகாப்புத்துறை பதிவு மற்றும் உரிமம் கோரி விண்ணப்பிக்கலாம்.
உணவு பொருள் தரம் மற்றும் கலப்படம் குறித்து நுகர்வோர் புகார் செய்ய ஏதுவாக, 94440 42322 என்ற "வாட்ஸ் ஆப்' எண்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
அனைத்து உணவு பொருள் தயாரிப்பு நிறுவனங்களிலும், "வாட்ஸ் ஆப்' எண்களில் புகார் செய்வது குறித்த அறிவிப்பு பலகைகளை வைக்க வேண்டும்.

No comments:
Post a Comment