தரமான தேயிலை விழிப்புணர்வு முகாம்

தரமான தேயிலை விழிப்புணர்வு முகாம்

தமிழ்நாடு அரசு உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை,  கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், பாரதியார் பல்கலை கழக கலை அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் ஆகியன இணைந்து  ஆமைக்குளம் கல்லூரி வளாகத்தில் தரமான தேயிலை விழிப்புணர்வு முகாமினை நடத்தின.

நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முனைவர் டி பழனிசாமி தலைமை தாங்கினார்.
நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் முனைவர். சைலஜா  வரவேற்றார்.

கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சி. காளிமுத்து முன்னிலை வகித்தார்.

தேயிலை வாரிய தர மேம்பாட்டு அலுவலர்  அஞ்சலி பேசும்போது 
தேயிலை இந்தியாவின் முக்கிய பாணமாக உள்ளது.  இந்தியாவை பொறுத்தவரை டார்ஜிலிங், அசாம், மேற்குவங்கம், தமிழ்நாடு உள்ளிட்ட பகுதிகளில் விளைவிக்கப்படுகின்றது. 
இந்தியா தேயிலை உற்பத்தி மற்றும் பயன்பாட்டில் 2ம் இடம் வகிக்கிறது.  தேயிலை செடிகளில் இருந்து எடுக்கப்படும் 2 இலைகள் ஒரு அரும்பு சேர்ந்த தரமான இலைகளில் தயாரிக்கப்படும் போது அவை தரமான தேயிலையாக தயாரிக்கப்படுகின்றது. 
தேயிலை ஏழைகளின் பாணமாக கருதப்படுகின்றது.  ஆனால் ஆரோக்கிய பாணமான தேயிலை தூளுடன் இஞ்சி மற்றும் எலுமிச்சை போன்றவை கலந்து குடிப்பது  அதிக பயன்தரக் கூடியது  ஆகும் என்றார்.

வட்டார மருத்துவ அலுவலர் மரு. கதிரவன் பேசும்போது
தேயிலை ஒரு சுறுசுறுப்பை தர கூடிய உற்சாக பாணமாகும்.  மன அழுத்தம், கவலை, சோர்வு ஏற்படும் போது ஒரு கப் தேனீர் அருந்தினால் உடல் மற்றும் மனம் சுறுசுறுப்படையும், 
தேயிலையில் உள்ள பால்பினால்கள், புற்றுநோயை உருவாக்கும் டியூமர் செல்களையும், கேன்சர் திசுக்களையும் அழிக்கின்றது. எனவே உடலில் புற்றுநோய் உருவாகுவதை தடுக்கின்றது.
கெட்ட கொழுப்புகளை கரைத்து நல்ல கொழுப்புகளின் அளவை அதிகரிக்கிறது.  இதனால் அதிகபட்ச உடல் பருமன் ஆவதை தடுக்கிறது.  எலும்பு சம்பந்தமான நோய்களில் இருந்து காக்கின்றது,  மாணவர்கள் தினசரி 3 கப் தேனீர் அருந்தினால் நினைவாற்றலும் அதிகரிக்கும் என்றார்.

தேயிலை வாரிய உதவி இயக்குனர் ரமேஷ் பேசும்போது 
தேயிலை உற்பத்தி செய்யும் தேயிலை தொழிற்சாலைகளை தேயிலை வாரியம் கண்காணிக்கின்றது. 
தரமான தேயிலை உற்பத்தியை உருவாக்கும் பணியில் தேயிலை வாரியம் பங்காற்றுகின்றது.  சில இடங்களில் கலப்பட தேயிலை உருவாகுவது தெரியவரும் பட்சத்தில் அந்த தொழிற்சாலைகளை சீல் வைக்கும் நடவடிக்கையும் எடுத்து வருகின்றது. 
தேயிலை தூளில் தரமற்ற மரத்தூள் ஆவரை இலைகள் போன்றவை கலந்து அவை நிறங்கள் சேர சாயம் கலக்கின்றனர்.  இதுபோல் சாயம் கலப்பதால் தேனீரின் தரம் குறைகின்றது.   அதிக சாயம் பெறும் பொருட்டு தரமற்ற தேயிலை தூளுடன் சோடியம் கார்பனேட் ரசாயனம் கலக்கப்படுகின்றது.  இது உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடியதாகும் என்றார்.

கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய பொது செயலாளர் சிவசுப்பிரமணியம் பேசும்போது 
மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் தேயிலையில் கலப்படம் என்ற விசம் சேர்ப்பதால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகின்றது.  தேயிலை தூள் வாங்கும்போது நல்ல நிறுவனங்களின் தூள்களை பார்த்து வாங்க வேண்டும்.  தயாரிப்பு தேதி, நிறுவனத்தின் முழுமையான முகவரி உணவுபாதுகாப்பு துறை உரிமம் எண் போன்றவை பார்த்து வாங்க வேண்டும். 

கலப்படம் இருப்பது தெரிந்தால் உணவு பாதுகாப்பு துறை அறிமுக படுத்தியுள்ள வாட்சப் எண்  94440 42322 உரிய ஆதாரத்தோடு புகார் அளித்தால் கலப்பட தேயிலை விற்பனை செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும். 
கல்லூரி மாணவர்கள் கலப்பட தேயிலைக்கு எதிராக போராட முன்வரவேண்டும் என்றார்.

தொடர்ந்து தேயிலை கலப்படம் அறியும் வழிமுறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. 

முடிவில் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் கார்த்திக் நன்றிகூறினார்.
நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள் மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதுபோல  கல்லூரியின் கோழிபாலம் வளாகத்தில் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்களுக்கும் தரமான தேயிலை குறித்த விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. 

இதில் தேயிலை வாரிய உதவி இயக்குனர் தரமான தேயிலை குறித்த விழிப்புணர்வு கையேட்டினை வெளியிட கூடலூர் நுகர்வோர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய தலைவர் காளிமுத்து பெற்றுக்கொண்டார். 

தொடர்ந்து தேயிலை வாரிய உதவி இயக்குனர் ரமேஷ், தர மேம்பாட்டு அலுவலர் அஞ்சலி, நுகர்வோர் மைய பொது செயலாளர் சிவசுப்பிரமணியம், காசிகா பயிற்சி மைய நிறுவனர் சுரேஷ்குமார், ஜான்சன் ஆகியோர் தரமான தேயிலை, தேயிலையின் மருத்துவ குணங்கள், கலப்பட தேயிலை உள்ளிட்ட தகவல்களை விளக்கமாக எடுத்துரைத்தனர். 

இந்த நிகழ்ச்சியில் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் மகேஸ்வரன், சிவசங்கரன், மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர். 

நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு தரமான தேயிலை குறித்த விழிப்புணர்வு கையேடு வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment

உயில் நடைமுறைகள்

 *பதிவு செய்யப்பட்ட உயில் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியுமா?... சட்டம் கூறுவது என்ன*...✍🏻 ⚖️உயில் என்பது ஒரு நபர் தனது மரணத்திற்க...