திசைக்காட்டி கல்வி விழிப்புணர்வு முகாம்
போட்டிதேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில்
மாணவர்கள் உணர்ந்து படிக்க அறிவுரை
பந்தலூர். ஜுலை, 24: பந்தலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், மகாத்மா காந்தி பொது சேவை மையம், பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்றம் ஆகியன சார்பில் திசைகாட்டி கல்வி விழிப்புணர்வு முகாம் நடைப்பெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் அர்ஜுணன் தலைமை தாங்கினார்.
நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் மற்றும் மகாத்மா காந்தி பொது சேவை மைய ஆலோசகர் காளிமுத்து. மகாத்மா காந்தி பொது சேவை மைய தலைவர் நவுசாத், நிர்வாகி செந்தாமரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட வட்டார மருத்துவ அலுவலர் கதிரவன் பேசும்போது
மாணவர்கள் புரிதலுடன் பாடங்களை படிக்க வேண்டும். எதிர்கால லட்சியம் எதுவென்று தீர்மாணித்து படிக்க வேண்டும். தற்போதைய நிலையில் தனியார் பள்ளிகளில் லட்சங்கள் செலவு செய்து படிப்பதை அரசு பள்ளிகளில் கட்டணம் ஏதுமின்றி படித்து தரப்படுகின்றது.
கூலி வேலை செய்யும் பெற்றோர் தனது சிரம்மங்களை கடந்த பிள்ளைகளை படிக்க வைக்கும்போது மாணவர்கள் அவர்களின் கஷ்டங்களை புரிந்து படிக்க வேண்டியது அவசியம்,
மருத்துவ கனவு தற்போது நீட் எழுதி வெற்றி பெற்றால் எளிதில் கிடைக்கும். எனவே 11 ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பாடங்களை முழுமையாக, உணர்ந்து படித்து நீட் தேர்வில் வெற்றி பெற வேண்டும்.
இந்த அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மருத்துவ படிப்பில் தேர்ச்சி பெற்று சேரந்தால் அவர்களுக்கான மருத்தவ கல்வி செலவிற்கு உதவ தயாராக உள்ளோம். என்றார்.
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய பொது செயலாளர் சிவசுப்பிரமணியம் பேசும்போது
கல்வியே ஒருவரின் எதிர்கால வாழ்வை தீர்மாணிக்கும் சக்தியாக உள்ளது. புரிந்து படித்தல் மாணவர்களுக்கு எதிர்கால போட்டிதேர்வுகளை எதிர்கொள்ள எளிதாக அமையும்.
இன்றைய நிலையில் அனைத்து அரசு பணிகளுக்கும் திறமையை நிருபிக்க போட்டி தேர்வுகளில் வெற்றி பெற உதவுகின்றது. நடப்பு நிகழ்வுகள், பொது அறிவை வளர்க்க பத்திரிக்கைகள் படிக்க வேண்டியது கட்டாயம் ஆகும். போட்டி தேர்வுகளால் எளிதில் அரசு பணி பெற முடியும் என்றார்.
ஒய்வு பெற்ற மாவட்ட சித்தா மருத்துவரும், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவருமான கனேசன் பேசும்போது மாணவர்கள் பள்ளிகளில் பங்கேற்புடன் படிக்க வேண்டும் ஒழுக்கம் கல்வி வாழ்வை மேம்படுத்தும் என்றார்.
பந்தலூர் அரசு மருத்துவமனை மருத்துவர் மஞ்சுநாத், மருத்துவம் சார்ந்த படிப்புகள் தேர்வு செய்தது குறித்து விளக்கம் அளித்தார்
பந்தலூர் கிளை நூலகர் அறிவழகன், பொது அறிவை வளர்க்க நூலகம் பயன்படுவதும் போட்டிதேர்வுக்கு உதவும் வகைகள் நூலக பயன்கள் குறித்தும் பேசினார்
மகாத்மா காந்தி பொது சேவை மைய துணை தலைவர் கபீர் ஆங்கில அறிவு, நேர்முக தேர்வுகள் எதிர்கொள்ளுதல் குறித்து பேசினார்.
தொடர்ந்து பள்ளியில் பொது தேர்வில் சாதித்த மாணவர்களுக்கு பரிசுகளும், ஊக்கதொகையும் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
முன்னதாக பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் தண்டபாணி வரவேற்றார்.
முடிவில் பள்ளி முதுநிலை ஆசிரியர் சித்தானந்த் நன்றி கூறினார்.
நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் பெற்றோர்கள் பலர் பங்கேற்றனர்.
S. Sivasubramaniam
General Secretary
CCHEP Nilgiris
http://cchepnlg.blogspot.com/?m=1

No comments:
Post a Comment