கூடலூர் நுகர்வோர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், திசைகாட்டி மையம் ஆகியன சார்பில் குன்னூர் சாந்திவிஜய் பெண்கள் மேல்நிலை பள்ளியில் திசைகாட்டி கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது.
குன்னூர் மைய அமைப்பாளர் டேவிட் வரவேற்றார்.
நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் வைரமணி தலைமை தாங்கினார்.
குன்னூர் ஜேசிஐ பயிற்றுனர் அமர்தலிங்கம் முன்னிலை வகித்தார்.
திசைகாட்டி மாநில ஒருங்கிணைப்பாளர் சித்ரவேல் பேசும்போது
பள்ளி மாணவர்கள் படிப்பை தேர்வு செய்வதில் முழுமையான கவனத்தில் கொள்ளாததினால் படித்தபின் வேலைவாய்ப்பு இல்லை என கூறி முடிங்கும் நிலை உள்ளது.
விரும்பும் படிப்பை தேர்வு செய்து படிக்க வழிகாட்டும் விதமாக
தமிழகத்தில் 100 கிராமங்களை தேர்வு செய்து அந்த பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கு கல்வியின் வழிகாட்டலை உருவாக்கும் திசைகாட்டி கல்வி விழிப்புணர்வு முகாம் நடத்தப்படுகின்றது.
இதில் துறைசார்ந்த வல்லூனர்களுடன் அனுபவ பகிர்வுகள் மூலமும் மாணவர்கள் எந்த வகை பாடத்தினை தேர்வு செய்து சாதிக்க முடியும் என வழிகாட்டப்படும் என்றார்.
உளவியல் பயிற்சியாளர் நான்சி (பெங்களூரு) பேசும்போது கல்வி மட்டுமல்ல நாம் நிறைய நேரங்களில் தோல்வியால் துவண்டு போகின்றோம்.
அவற்றில் கிடைக்கும் பாடங்களை அடுத்தகட்ட முயற்சியில் தோல்வி ஏற்படாமல் இருக்க பயன்படுத்தி முன்னேற வேண்டும்.
நமது லட்சியங்களே தேர்வு செய்கின்றோம் அதை அடைய சரியான வழியை தேர்வு செய்வதில்லை. இந்த வழிகள் எது என்பதை சரியாக தேர்வு செய்தால் வெற்றி எளிதில் கிட்டும்.
கல்வியும் தேர்வு செய்யும்போது விருப்ப பாடத்தை தேர்வு செய்ய வேண்டும். அதில் அக்கறையுடன் படித்தல் அவசியம்.
உடலும் மனதும் நல்லநிலையில் வைத்துகொள்வது அவசியம். குறிக்கோளை அடைய முயற்சிகள் இருந்தால் வெற்றி எளிது என்றார்.
குன்னூர் மக்கள் சேவை மைய தலைவர் மனோகரன் பேசும்போது
கல்வியை மதிப்பெண் மற்றும் பணம் சம்பாதிக்கும் நோக்கில் படிக்கின்றனர். ஒரே மாதிரியான படிப்பை பலரும் தேர்வு செய்வதால் பலரும் வேலை கிடைக்காமல் உள்ளனர்.
படிக்கும்போது நாட்டு நல்லது செய்ய வேண்டும், நாட்டிற்கு உதவும் வகையில் பயன்டுத்த வேண்டும் என்ற நோக்கில் படிக்க வேண்டும்.
பலரும் பட்ட படிப்புகளை முறையாக முழுமையாக படிப்பதில்லை. புத்தக வாசிப்பு மனிததன்மையை உணர்த்தும். தினசரி நாம் குறைந்தபட்சம் 10 விதமான தகவல்களை அறிந்து கொள்ளுதல் அவசியம் என்றார்.
திசைகாட்டி மைய மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிவசுப்பிரமணியம் பேசும்போது மாணவர்கள் விரும்பும் பணிக்கு செல்லவும், பட்டம் பெற்றபின் கல்வி அல்லது போட்டி தேர்வுகள் மூலம் வாழ்க்கையை மேம்படுத்தி கொள்ள வழிகாட்ட திசைகாட்டி மையம் செயல்படுத்தபடும்.
நீலகிரியில் ஆறு வட்டங்களில் இரண்டு மையங்கள் வீதம் 12 திசைகாட்டி மையங்கள் மூலம் கல்வி விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளபடும் என்றார்
பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் சமூக ஆர்வலர் கிருஷ்ண குமார் நன்றி கூறினார்.

No comments:
Post a Comment