இணையதளத்தில் தரத்தை அறியலாம் போலி குடிநீர் பாட்டில் குறித்து புகார் தெரிவிக்கலாம்
தூத்துக்குடி கலெக்டர் வெங்கடேஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கி வரும் குடிநீர் பாட்டில்கள் தயாரிக்கும் நிறுவனங்களில் தயாரிக்கப்பட்ட
குடிநீரின் தரத்தை பொதுமக்களே தெரிந்து கொள்ள
உணவுப் பாதுகாப்பு துறை ஏற்பாடு செய்துள்ளது.
அதன்படி, அந்தத் துறையின் https:/safewataerfssai.gov.gov.in/cleanwater/home
அதன்படி, அந்தத் துறையின் https:/safewataerfssai.gov.gov.in/cleanwater/home
என்ற இணையதளத்தில் உள்ள தரவினை பயன்படுத்தி
குடிநீர் பாட்டில், பாக்கெட், கேனில் ஐஎஸ்ஐ எண் அல்லது உணவுப் பாதுகாப்பு உரிமம் எப்எஸ்எஸ்ஏஐ எண்ணை பயன்படுத்தி அந்நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட
குடிநீரின் 6 மாதம், ஓராண்டு பரிசோதனை அறிக்கை மற்றும் அவர்களின் ஐஎஸ்ஐ மற்றும் உணவுப் பாதுகாப்பு துறையின் எண், உரிமம் செல்லுபடியாகும் காலம் போன்றவற்றை பொதுமக்கள் தெரிந்து கொண்டு குடிநீரின் தரத்தை அறியலாம்.
பொதுமக்கள் வாங்கும் தண்ணீர் பாட்டில்கள்,
பாக்கெட்டுகள் மற்றும் 20 லிட்டர் கேன்களிலும்,
அதன் தயாரிப்பு நிறுவனத்தின் ஐஎஸ்ஐ எண் மற்றும் உணவுப் பாதுகாப்பு துறை உரிமம் எண் இரண்டையும் பதிவிட்டு இருக்க வேண்டும்.
இதில் ஏதேனும் ஒரு எண்ணை இணையத்தளத்தை பயன்படுத்தி,
இதில் ஏதேனும் ஒரு எண்ணை இணையத்தளத்தை பயன்படுத்தி,
அங்குள்ள செயலில் குடிநீர் நிறுவனத்தின் பெயரை பதிவேற்றம் செய்தால் அந்நிறுவனத்தின் ஐஎஸ்ஐ தரம் மற்றும் உணவுப் பாதுகாப்பு துறையால் வழங்கப்பட்ட உரிமம் தற்போது செயல்பாட்டில் உள்ளதா? என்பதையும்
தண்ணீர் ஆய்வக அறிக்கையையும் அறிந்து கொள்ளலாம்.
இதுகுறித்து ஏதேனும் புகார்கள் இருந்தாலோ, உணவு தொடர்பான புகார்கள் இருந்தாலோ 9444042322 என்ற எண்ணுக்கு கட்செவி அஞ்சல் (வாட்ஸ்அப்) மூலம் புகார் தெரிவிக்கலாம்.
20 லிட்டர் கேன்களில் தயாரிப்பு தேதி, பயன்பாட்டு தேதி அச்சிடப்பட்டுள்ளதா? என்பதை கவனிக்கவும். அடைக்கப்பட்ட குடிநீர் பாட்டில்கள், குடிநீர் பாக்கெட்டுகள் அல்லது 20 லிட்டர் கேன்களில்
ஐஎஸ்ஐ ISI மற்றும் எப்எஸ்எஸ்ஏஐ FSSAI எண் இல்லை என்றால் அது போலியானது என்பதையும் அறியவும். அவ்வாறு இருந்தால் உடன் புகார் தெரிவிக்கலாம்.
மேலும், விபரங்கள் அறிய
நியமன அலுவலர், தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை, உணவு பாதுகாப்பு பிரிவு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் என்ற முகவரியில்
நேரிலும், 0461- 2340699 என்ற தொலைபேசி எண்ணிலும் புகார் தெரிவிக்கலாம்
என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment