தரமற்ற குடிநீர் ‘வாட்ஸ்- ஆப்’பில் புகார்

தரமற்ற குடிநீர் குறித்து பொதுமக்கள் ‘வாட்ஸ்- ஆப்’பில் புகார் தெரிவிக்கலாம்,” என கலெக்டர் எம்.பல்லவி
பல்தேவ் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: குடிநீர் தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள், அவை தயாரிப்பு தேதி, தயாரிக்கப்பட்ட இடத்தின் முகவரி, இந்திய தர நிர்ணய சான்றிதழ் (ஐ.எஸ்.ஐ.,), உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய உரிமம் (எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ.,) உரிமம் பெற்றிருக்க வேண்டும். சுத்திகரிக்கப்பட்ட குடிநீரின் தரத்தை தினமும் ஆய்வகத்தில் பரிசோதனை செய்து, உண்மை தன்மையை தெரிந்து கொள்வது அவசியம். தயாரிப்பு நிறுவன வளாகம், சுத்தம், சுகாதாரத்துடன் இருக்க வேண்டும். மிகவும் மோசமான நிலையில் உள்ள 20 லி., கேன்கள் பயன்படுத்தக்கூடாது.
குடிநீர் மற்றும் குடிநீர் தயாரிக்கும் நிறுவனங்கள், வினியோகிக்கப்படும் பாட்டில்கள், கேன்களில் தரத்தை http:/safewater.gov.in/cleanwater/homeஎன்ற இணையதள முகவரியில் பொது மக்கள் தெரிந்து கொள்ளலாம். இதுகுறித்த புகார்களை 94440 42322 என்ற ‘வாட்ஸ் -ஆப்’
எண்ணில் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உயில் நடைமுறைகள்

 *பதிவு செய்யப்பட்ட உயில் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியுமா?... சட்டம் கூறுவது என்ன*...✍🏻 ⚖️உயில் என்பது ஒரு நபர் தனது மரணத்திற்க...