ஹெல்மெட்' விலை, 3,000 ரூபாய்



தமிழகத்தில், 'ஹெல்மெட்' விலை, 3,000 ரூபாய் என, விண்ணைத் தொடும் அளவுக்கு எகிறியதால், நடுத்தர குடும்பத்தை சேர்ந்த வாகன ஓட்டிகள் விழிபிதுங்கி தவிக்கின்றனர்.
குறைந்த விலையில் தரமான ஹெல்மெட் கிடைக்க அரசு தலையிட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
http://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_1287668.jpg



'
இரு சக்கர வாகன ஓட்டிகளும் மற்றும் பின்னால் அமர்ந்து செல்வோரும், ஹெல்மெட் அணிவது கட்டாயம்' என்ற நடைமுறை, கடந்த, 1ம் தேதி முதல், தமிழகம் முழுவதும்அமலுக்கு வந்துள்ளது. இதையொட்டி, முதல் நாளில், மாநிலம் முழுவதும், 90 சதவீதம் பேர், ஹெல்மெட் அணிந்து சென்றனர். இரண்டாவது நாளான நேற்று, போலீசாரிடம் சிக்கிய வாகன ஓட்டிகள், 'மாத சம்பளம், குடும்பம் நடத்தவே போதவில்லை; திடீர் அறிவிப்பால் ஹெல்மெட் வாங்க முடியவில்லை' என, தெரிவித்தனர்.

தற்போது, மாநிலம் முழுவதும் ஹெல்மெட்டுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 'பத்து நாட்களுக்கு பின்னரே, ஹெல்மெட் கிடைக்கும்' என, பெரிய நிறுவனங்கள் வெளிப்படையாக அறிவித்துள்ளன.இருப்பு வைத்திருக்கும் கடைக்காரர்களும், ஓட்டை, உடைசலான ஹெல்மெட்டுகளை கூட, 2,500 - 3,000 ரூபாய் வரை விற்பனை செய்து வருகின்றனர்.
போலீசாரிடம் சிக்கியோர் கூறியதாவது:ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என்பது வரவேற்கத்தக்கது.
ஆனால், அறிவிப்பு வெளியான, 15 நாட்களுக்குள், அதுவும் மாத இறுதியில், அனைவராலும் ஹெல்மெட் வாங்க இயலுமா?

இந்த உத்தரவு வந்த அடுத்த நாளில் இருந்தே, ஹெல்மெட் கடைக்காரர்கள், விலையை இரு மடங்கு உயர்த்தினர். தற்போது ஹெல்மெட் விலை, நான்கு மடங்கு அளவிற்கு எகிறிவிட்டது.
இதுதவிர, பழைய ஹெல்மெட்டுக்கு வர்ணம் அடித்து, புதியது என, விற்பனை செய்கின்றனர். போலீசாருக்கு பயந்து தரமற்ற ஹெல்மெட் வாங்குவதால் என்ன பயன். அனைவரும் தரமான ஹெல்மெட் வாங்க, அரசு, கால அவகாசம் தர வேண்டும்.இவ்வாறு, அவர்கள்தெரிவித்தனர்.

மாத்தி யோசிங்க...:ஹெல்மெட் அணியாமல், இரு சக்கர வாகன ஓட்டிகளிடம் அசல் ஆவணங்களை பறிமுதல் செய்து, பின் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து தேவையற்ற அலைச்சலில் ஈடுபடுவதை விட, அதற்கு பதில் போக்குவரத்து போலீசார் .எஸ்.., தரம் கொண்ட, விலை குறைந்த ஹெல்மெட்களை மொத்தமாக கொள்முதல் செய்து, காவல் நிலையங்களில் இருப்பு வைக்கலாம்.

ஹெல்மெட் இல்லாமல் வரும் வாகன ஓட்டிகளிடம் அதற்கான தொகையை பெற்று, ஹெல்மெட் வழங்கலாம். பணம் இல்லாமல் இருப்பவர்களிடம் மட்டும் ஓட்டுனர் உரிமம், வாகனம் பறிமுதல் செய்யலாம். இதனால், கூடுதல் விலை ஹெல்மெட் விற்பனை தடுக்கப்படும்.இவ்வாறு, சமூக நல ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

சுளுக்கு விழுந்த கழுத்தில்... :சென்னையை சேர்ந்த ராமச்சந்திரன் என்ற சமூக ஆர்வலர், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று அளித்த புகார்:தலையில் கட்டி உள்ளவர்கள், தலையில், தொண்டையில் அறுவை சிகிச்சை செய்தோர், கழுத்து சுளுக்கு உடையவர்கள், தைராய்டு பிரச்னை உள்ளோர், நீண்ட நேரம் ஹெல்மெட் அணிந்து செல்ல இயலாது. அவர்களுக்கு, ஹெல்மெட் கட்டாயம் என்ற நடைமுறையில் இருந்து விதிவிலக்கு அளிக்கவேண்டும்.
அவர்களிடம் போலீசார் கடுமையாக நடந்து கொள்ளக்கூடாது.இவ்வாறு, ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
உயர் போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், 'கழுத்து சுளுக்கு உடையவர்களை, பார்த்தாலே தெரிந்து விடும்; அறுவை சிகிச்சை செய்தோர், தலையில் கட்டி இருப்போர், தைராய்டு பிரச்னை உள்ளோர், அதற்குரிய மருத்துவ சான்றிதழ்களின் நகல்களை, இரு சக்கர வாகனத்தில் வைத்துக் கொள்வது நல்லது' என்றனர்.

'
ஹெல்மட்' காமெடி:'வாட்ஸ் ஆப்'பில், நேற்று பரவிய 'ஹெல்மெட்' காமெடி:
போலீசார்: உன் செயினை யாருமா பறிச்சது?
பெண்: கறுப்பு ஹெல்மெட் போட்ட ஆள் சார்.
போலீசார்: வண்டியை அவன் தான் ஓட்டினானா?
பெண்: இல்ல சார்... ஓட்டுனவன், பச்சை ஹெல்மெட் போட்டு இருந்தான்.
போலீசார்: சாட்சி யாராவது இருக்காங்களா?
பெண்: சிவப்பு ஹெல்மெட் போட்டு இருந்தவரு, இதை கண்ணால பார்த்தாரு சார்.
போலீசார்: இப்படி சொன்னா எப்படிம்மா... ஏதாவது அடையாளம் சொல்லு!
பெண்: பின்னாடி உட்கார்ந்து இருந்த பொண்ணு, வெள்ளை நிற ஹெல்மெட் போட்டு இருந்தாங்க சார்.
போலீசார்: அட போம்மா, ஹெல்மெட் போடாத ஆளு யாருமே பார்க்கலையா?
பெண்: நான் மட்டும் தான் சார் ஹெல்மெட் போடல...
போலீசார்: அப்ப உன்னோட லைசென்சையும், ஆர்.சி., 'புக்'கையும் எடு!

தொழிலாளர் நலத்துறை எச்சரிக்கை:தொழிலாளர் நலத்துறை ஆணையர் அமுதா, நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தற்போது, ஹெல்மெட் உள்ளிட்ட பொட்டல பொருட்கள், அதிகபட்ச சில்லறை விலைக்கு மேல் விற்கப்படுவதாக புகார் வருகிறது. இதுபோல விற்பனை செய்வோர் மீது, நடவடிக்கை எடுக்க, தொழிலாளர் துறை ஆய்வாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளோம். என கூறியுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் மோசமான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம்

புதுடெல்லி: சமூக வலைத்தளங்களில் மோசமான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரதமர் மோடி சமூக வலைத்தளங்கள் மூலமாக தொடர்ந்து ஆயிரக்கணக்கான மக்களுடன் உரையாடி வருகிறார். அதில் சுமார் 150 பேரை தேர்வு செய்து அவர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் சமூக வலைத்தளங்களில் மற்றவர்கள் மனதை புண்படுத்தும் வகையில் மோசமான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம் என்றும், எப்போதும் நல்ல விஷயங்களையே பேசும் படியும் கேட்டுக் கொண்டார். மேலும் எனக்கு எதிராக மிகவும் மோசமான வார்த்தைகளால் விமர்சனம் செய்து வெளியிடப்பட்ட செய்திகள் அனைத்தையும் கொண்டு தாஜ் மஹாலையே மூடி விட முடியும் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார். டிஜிட்டல் இந்தியா திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடி அதையொட்டி சமூக வலைத்தளங்களில் உள்ள தனது ஆதரவாளர்களுடன் உரையாடல் நடத்தினார்.

குறிப்பாக பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் சமூக வலைத்தளத்தில் இவ்வாறு உரையாடல் நடத்துவது இதுவே முதன்முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு தனிப்பட்ட உரையாடலை நடத்திக் கொண்டிருந்த அந்த நேரத்தில் மிகவும் மோசமான வார்த்தைகளால் வசைபாடும் வகையில் டுவிட்டரில் ஏராளமானோர் எழுதியிருந்தனர். இருந்த போதும் அவர்களின் டுவிட்டர் தளங்களை முடக்க பிரதமர் மோடி உத்தரவிடவில்லை.

மேலும் தனது ஆதரவாளர்கள் எப்போதும் நல்ல விஷயங்களையே டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பேச வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியின் போது சமூக வலைத்தள ஆதரவாளர்களுடன் மோடி புகைப்படம் எடுத்துக் கொண்டார். இருந்த போதிலும் யாரையும் பிரதமர் மோடியுடன் செல்பி எடுக்க அனுமதிக்கப்படவில்லை

முதல் மூன்று இடங்களை பிடித்த மாணக்கர்களுக்கு



பந்தலூர் மகாத்மா காந்தி பொது சேவை மையத்தின் சார்பில் பொது தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணக்கர்களுக்கு பரிசு வழங்கி ஊக்கப்படுத்தபட்டது.
பந்தலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த 2014-15ம் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு பணிரெண்டாம் வகுப்பு பொது தேர்வுகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணக்கர்களுக்கு பந்தலூர் மகாத்மா காந்தி பொது சேவை மையத்தின் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டது,  பள்ளியில் நடைப்பெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் சித்தானந்த் தலைமை தாங்கினார்.  மகாத்மா காந்தி பொது சேவை மைய தலைவர் நௌசாத், ஆலோசகர்கள் காளிமுத்து, செல்வராஜ் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகி தணிஸ்லாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்,
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்லீரமணியம் பேசும்போது மாணவர்கள் தங்கள் வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற முனைப்புடன் தினசரி படித்தாலே அதிக அளவு மதிப்பெண் பெற முடியும் படிப்பதால் வாழ்வின் நிலை உயரும்.  அதிக மதிப்பெண்கள் பெறுபவர்களுக்கு மேற்படிப்புகளுக்கு அதிக சலுகைகளும் கிடைகிறது.  ஆசிரியர்களை பயன்படுத்தி தங்கள் வாழ்வில் முன்னேற மாணவர்கள் கவணத்துடன் படிப்பது அவசியம் என்றார்,
மகாத்மா காந்தி பொது சேவை மைய நிர்வாகி கபீர் பேசும்போது மாணவர்கள் விருப்பபட்டு படிப்பதன் மூலம் எளிதில் பாடங்களை புரிந்து படிக்க முடியும், படிப்புக்கு கொடுக்கப்படும் முக்கியதுவம் வாழ்வில் முன்னேற எடுக்கும் முயற்சிக்கு சமம் என்றார்,
நிகழ்ச்சியில் பணிரெண்டாம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி சிவசங்கரி (1046-) மற்றும் பத்தாம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி அஸ்னா பெர்சின் (459) ஆகியோருக்கு பரிசும் 1000 ரூபாய் பணமுடிப்பும் வழங்கப்பட்டது.  பணிரெண்டாம் வகுப்பில் இரண்டாம் இடம்  பெற்ற அன்சின செரின் 1005 மற்றும் மூன்றாம் இடம்  பெற்ற விக்னேஸ்வரன் 974 மற்றும் பத்தாம் வகுப்பில் இரண்டாம் இடம் பெற்ற ஜெயஸ்வரூபா 443, மூன்றாம் இடம்  பெற்ற ரூபினா 440 ஆகியோருக்கு பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது,
நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் மகாத்மா காந்தி பொது சேவை மைய நிர்வாகிகள் ரபீக், சலீம், சாதிக், ராம்பிரசாத், அபுதாகீர் மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர், முன்னதாக பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் தண்டபாணி வரவேற்றார், முடிவில் பள்ளி ஆசிரியர் செந்தில்குமார் நன்றி கூறினார்.



தகவல் பெறும் உரிமை சட்டம் 2005

RTI (Right to Information Act – தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005) முக்கியத்துவம் என்ன ? Right to Information Act, 2005 என்பது பொதுமக்கள் அ...