சட்டங்கள்

சட்டங்கள்

தகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005 
இந்த பகுதி தகவல் உரிமைச்சட்டத்தின் கீழ்வரும் தகவல் அணுகுமுறையை பற்றி விவரிக்கின்றன.

இந்தியக் கூலி வழங்கல் சட்டம் 
இந்தியக் கூலி வழங்கல் சட்டம் பற்றிய குறிப்புகள்தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிச் சட்டம் 
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிச் சட்டம் பற்றிய குறிப்புகள்தொழிலாளர்களுக்கான மீதூதியம் (போனஸ்) சட்டம் 
தொழிலாளர்களுக்கான மீதூதியம் (போனஸ்) சட்டம் பற்றிய குறிப்புகள்இந்திய தண்டனை சட்டம் 
இந்திய தண்டனை சட்டம் பற்றிய குறிப்புகள்தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000 (Information Technology Act, 2000) 
தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000 (Information Technology Act, 2000) பற்றிய குறிப்புகள்மோட்டர் வாகனச் சட்டம் 
மோட்டர் வாகனச் சட்டம் பற்றிய குறிப்புகள்இந்திய பதிப்புரிமைச் சட்டம் 
இந்திய பதிப்புரிமைச் சட்டம் பற்றிய குறிப்புகள்குழந்தைகள் பாலியல் கொடுமை தடுப்பு சட்டம், 2011 
குழந்தைகள் பாலியல் கொடுமை தடுப்பு சட்டம், 2011 பற்றிய குறிப்புகள்குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம் 
குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம் பற்றிய குறிப்புகள்

பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் , 2012 
பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் , 2012 பற்றிய குறிப்புகள்பணியிடத்தில் பாலியல் வன்முறை (தடுப்பு,பாதுகாப்பு, குறைதீர்ப்பு) சட்டம், 2013 
பணியிடத்தில் பாலியல் வன்முறை (தடுப்பு,பாதுகாப்பு, குறைதீர்ப்பு) சட்டம், 2013 பற்றிய குறிப்புகள்வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் 
வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் பற்றிய குறிப்புகள்நிலசீர்த்திருத்தச் சட்டம் (நில உச்சவரம்பு சட்டம்) 1961 
நிலசீர்த்திருத்தச் சட்டம் (நில உச்சவரம்பு சட்டம்) 1961 பற்றிய குறிப்புகள்தமிழக அரசின் சட்டங்கள் 
தமிழக அரசின் சட்டங்கள் பற்றிய குறிப்புகள்தொழிலாளர்களுக்கான நன்றித் தொகைச் சட்டம் 
தொழிலாளர்களுக்கான நன்றித் தொகைச் சட்டம்கருச்சிதைவு ஏற்படுத்துதல் (பிரிவு 312)
கருச்சிதைவு ஏற்படுத்துதல் (பிரிவு 312) பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.வரதட்சணை வழக்குகளும், தண்டனையில்லாக் குற்றங்களும் 
வரதட்சணை வழக்குகளும், தண்டனையில்லாக் குற்றங்களும்கிரெடிட் கார்டு - வசூல் குண்டர்களை எதிர்கொள்ள சட்டங்கள் 
கிரெடிட் கார்டு - வசூல் குண்டர்களை எதிர்கொள்ள சட்டங்கள்தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் 
தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் பற்றிய குறிப்புகள்

இந்திய தொழிலாளர் அரசு காப்பீட்டுத்திட்டம் 
இந்திய தொழிலாளர் அரசு காப்பீட்டுத்திட்டம் (ESI Act) பற்றிய குறிப்புகள்

சாமானியர்களுக்காக உருவான இலவச சட்ட உதவி மையங்கள் 
சாமானியர்களுக்காக உருவான இலவச சட்ட உதவி மையங்கள்இந்திய ரிசர்வ் 

வங்கியின் ஒபட்ஸ்மேன் திட்டம். 
இந்திய ரிசர்வ் வங்கியின் ஒபட்ஸ்மேன் திட்டம்.

நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 
நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் பற்றிய குறிப்புகள்

சாலைப் போக்குவரத்து சட்டம் 2015 அதன் தேவையும் நடைமுறை சிக்கல்களும் 
சாலைப் போக்குவரத்து சட்டம் 2015 அதன் தேவையும் நடைமுறை சிக்கல்களும் பற்றிய தகவல்உணவுப் பாதுகாப்பு மற்றும் தரச்சட்டம் -2006 
உணவுப் பாதுகாப்பு மற்றும் தரச்சட்டம் -2006 பற்றிய தகவல்HOT மோட்டர் வாகனச் சட்டம் மற்றும் அபராதம் 
மோட்டர் வாகனச் சட்டம் மற்றும் அபராதம் பற்றிய தகவல்கள்குடும்பச் சொத்து – சட்டம் 
குடும்பச் சொத்து – சட்டம் பற்றிய குறிப்புகள்பொருள் மற்றும் சேவை வரி சட்டம் 2015 
பொருள் மற்றும் சேவை வரி சட்டம் 2015 பற்றிய குறிப்புகள்குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு. 71 
குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு. 71 பற்றிய குறிப்புகள்

பிறப்பு, இறப்பு பதிவுச் சட்டம் மற்றும் விதிகள் 
பிறப்பு, இறப்பு பதிவுச் சட்டம் மற்றும் விதிகள் பற்றிய குறிப்புகள்ரிட் மனு 
ரிட் மனு பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.அரசியல் சட்டம் மற்றும் குற்றவியல் சட்டம் 
அரசியல் சட்டம் மற்றும் குற்றவியல் சட்டம் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.குற்றவியல் நடைமுறைச்சட்டத்தின் 50வது பிரிவில் 50-ஏ 
குற்றவியல் நடைமுறைச்சட்டத்தின் 50வது பிரிவில் 50-ஏ பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.சட்டரீதியான கைதுகளும், சட்ட விரோத கைதுகளும்
சட்டரீதியான கைதுகளும், சட்ட விரோத கைதுகளும் பற்றி இங்கு குறிப்பிடப்பட்டுள்ளன.

உங்கள் புகாரை ஏற்க காவல்துறை அதிகாரிகள் மறுத்தால் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் 
உங்கள் புகாரை ஏற்க காவல்துறை அதிகாரிகள் மறுத்தால் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.முதல் தகவல் அறிக்கை (FIR) – குற்றவியல் நடவடிக்கையின் முதல் படி 
முதல் தகவல் அறிக்கை (FIR) பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.மனித உரிமைகள் 
மனித உரிமைகள் பற்றிய கட்டுரைகள்இயற்கைக்கு மாறான பாலுறவும், இந்தியச் சட்டங்களும் 
இயற்கைக்கு மாறான பாலுறவும், இந்தியச் சட்டங்களும் பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளனமணவாழ்வு மீட்புரிமை சட்டம் 
மணவாழ்வு மீட்புரிமை சட்டம் (Restitution of Conjugal Rights) பற்றிய குறிப்புகள் இங்கு தரப்பட்டுள்ளன.
குழந்தைத் தொழிலாளர் சட்டங்களும் சீர்திருத்தங்களும் 
குழந்தைத் தொழிலாளர் சட்டங்களில் சீர்திருத்தங்களும் இந்தியாவில் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பும் பற்றிய ஒரு தோற்றப்பகுப்பாய்வு இங்கு தரப்பட்டுள்ளது.இந்தியாவில் மணவிலக்குச் சட்டங்கள்
இந்தியாவில் மணவிலக்குச் சட்டங்கள் குறித்த தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.இலவச சட்ட உதவி 
இலவச சட்ட உதவி தொடர்பான தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
நீதித்துறை வளங்கள்

நடுத்தர வருமானத்தினருக்கான உச்சநீதிமன்ற சட்ட உதவித்திட்டம்.

திட்டச் செயல்பாடுகள் 
நடுத்தர வருமானமுள்ளவர்களுக்குச், சட்ட உதவிகளைச் செய்யும் நோக்கத்துடன் நடுத்தர  வருமானத்தினருக்கான உச்சநீதிமன்ற சட்ட உதவித் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. ஒரு மாதத்தின் மொத்த வருமானம் ரூ.20.000/- அல்லது ஆண்டு வருமானம் 2,40,000/- க்கு மிகாமலும் இருக்கும் குடிமக்கள் நடுத்தர வருமானமுடையவர்களாகக் கருதப்படுகின்றனர்; 

தகுதியுடைய சிலருக்கு மாதவருமானம் ரூ.25,000/- அல்லது ஆண்டு வருமானம் ரூ.3,00,000/- இருப்பினும் அவர்களும் நடுத்தர வருமானமுடையவர்களாகவே கருதப்படுகின்றனர். சுய சார்புடைய இத்திட்டத்தின் ஆரம்ப முதலீடு முதல் நிர்வாகக் குழுவினரால் (First Executive Committee) தரப்படும்.

இத்திட்டத்தின் கீழ்வரும் வழக்குகள் 
•    உச்ச நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட இருக்கும் வழக்குகள்.
•    உச்சநீதிமன்றத்தின் சட்ட எல்லைக்குள் பின்வரும் வழக்குகள் வராது.
a)    சுங்கச்சட்டம் 1962 (custom act 1962) பிரிவு 130A இன் கீழ் விசாரணைக்குட்படும் வழக்குகள்.
b)    மத்திய மற்றும் தீர்வை மற்றும் உப்புச்சட்டம் 1944 (Central and Excise and Salt Act, 1944) பிரிவு 35  இன் கீழ் விசாரணைக்குட்படும் வழக்குகள்
c)    தங்க (கட்டுபாடு) சட்டம் 1968, பிரிவு 82C இன் கீழ் விசாரணைக்குட்படும் வழக்குகள்
d)    தனியுரிமை வர்த்தக நடைமுறைக்கட்டுப்பாடு ( M.R.T.P. Act) 1969 பிரிவு 7(2) இன் கீழ் விசாரணைக்குட்படும் வழக்குகள்.
e)    வருமான வரி சட்டம் 1961 (Income Tax Act, 1961) பிரிவு 25 J இன் கீழ் விசாரணைக்குட்படும் வழக்குகள்.
f)    அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 317 (1) இன் கீழ் விசாரணைக்குட்படும் வழக்குகள்.
g)    குடியரசுத்தலைவர் மற்றும் துணை குடியரசுத் தலைவர் சட்டம் 1952 பகுதி 3 இன் தேர்தல் குறித்த வழக்குகள்.
h)    பாராளுமன்ற மற்றும் மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்தல் குறித்த வழக்குகள்.
i)    தனியுரிமை வர்த்தக நடைமுறைக்கட்டுப்பாடு சட்டம் 1969 (M.R.T.P. Act, 1969) இன் கீழ் வரும் மேல் முறையீடு.
j)    சுங்கச் சட்டம் 1962 பிரிவு 130 E, உட்பிரிவு (b) இன் கீழ் வரும் மேல் முறையீடு.
k)    மத்திய தீர்வை மற்றும் உப்பு 1944 சட்டத்தின் பிரிவு 35 L இன் கீழ்வரும் மேல் முறையீடு.
l)    செய்திகளை மறு ஆய்வு செய்தல்

தீதும் , நன்றும் - பிறர் தர வாரா !

தீதும் , நன்றும் - பிறர் தர வாரா ! 

நாம் நேற்று செய்த தவறின் விளைவு தான் இன்றைய அனுபவம் !

ஒரு பால் பாக்கெட் வாங்கினால் கூட அதற்கு ஒரு கேரிபேக்....

அந்த கேரிபேக் மறுநாள் சாக்கடையில் !

மளிகை கடைக்கும் ,
காய்கறி கடைக்கும் துணிப்பை எடுத்து சென்றால் கிரீடம் இறங்கிடுமா ?

பத்தாததுக்கு 
ஒரு நாளைக்கு ,
நபர் ஒன்றுக்கு 2,3 வாட்டர் பாட்டில்கள்...

அதுவும் மறுநாள் சாக்கடையில் !

இப்படியே ,
திருந்தாம வாழ்ந்தால்

வருங்காலம் ..பற்றி
நான் சொல்ல மாட்டேன் !

அனுபவிச்சி தெரிஞ்சிகுவீங்க !

பெருநகர மக்களே !
மஞ்சப் பைக்கு மகுடம் சூட்டுங்க... 
கேரி பேக்குக்கு குட்பை சொல்லுங்க. ..
சாக்கடையில் குப்பைகொட்டாதீங்க...                               
மாற்றம் நம்மில் இருந்து தொடங்கியது 
                             
Forward பபண்ணுவோம் ...
பலன் கிடைக்குதான்னு பார்ப்போம் 

சிலை கடத்தல் பிரிவு தகவல் தெரிவிக்க

திரு.பொன்.மாணிக்கவேல்  (Deputy Inspector General of Police-Idol Wing CID.) அவர்கள்

தமிழகத்தில் உள்ள ஆலய பழமையான தெய்வீக சிலைகளை கடத்திய மீட்டு கொண்டு வர பல சிறப்பான வேலைகளை செய்து உள்ளார்...

சொல்வதோடு நில்லாமல் ஆயிரக்கணக்கான சிலைகள் மீட்டும் உள்ளார்.

உங்கள் ஊரில் ஆலயத்தில் கோபுரம் (rice polling team) சிலையே விற்பனை போன்றவை நடந்தால் தகவல்கள் தெரிவிக்கவும்.நமது ஆலயத்தை நாம்தான் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு நடக்க வேண்டும்.

மீண்டும் யாராலும் மதுரை மீனாட்சி அம்மன், தஞ்சை பெரிய கோவில், ஶ்ரீரங்கம் அரங்கன் கோவில் போன்ற கட்ட முடியாது.

இந்த செய்தி ஒவ்வொரு ஆலய பகுதி மக்களுக்கும் தெரியப் படுத்த வேண்டும்.
அனைத்து பொதுமக்களுக்கு தெரிய வேண்டும்.

Name & Designation of the officers, Contact  Numbers

Thiru.A.G.Ponn Manickavel, IPS
Deputy Inspector General of Police-Idol Wing CID.
+91 96000 43442
+ 91 – 44 – 22504310
Tr. P.A. Sundaram

Deputy Superintendent of Police,
Idol Wing CID.
+91 98417 52537
+91 94981 04682

Thiru. M.Ravi
Inspector of Police (Administration)
Idol Wing CID.
+91 99401 50430
+91 94981 04690

Thiru.V.Natarajan
Inspector of Police
Idol Wing CID.
+91 94432 86904

Thiru. G.Janarthanan
Inspector of Police
Idol Wing CID.
+91 98406 19347

Thiru. R. Tamilselvan
Inspector of Police
Idol Wing CID.
+91 83000 60031

Tmt. Arivukannu
Inspector of Police
Idol Wing CID.
+91 94981 63952

Office Address:
SIDCO,Old Corporate Building,
Thiru.vi.ka Industrial Estate,
Guindy, Chennai-32.
+ 91 – 44 – 22504332

மாபெரும் மனிதன் இருக்க நமக்கு பயம் இல்லை என்றாலும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பகிருங்கள்.

தேவாலா ஹோலிகிராஸ் உயர்நிலைப்பள்ளியில் குடிமக்கள் நுகர்வோர் மன்றம்

பந்தலூர் அருகே தேவாலா ஹோலிகிராஸ் உயர்நிலைப்பள்ளியில் குடிமக்கள்
நுகர்வோர் மன்றம் துவங்கப்பட்டது.

உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில்
தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் குடிமக்கள் நுகர்வோர் மன்றங்கள்
செயல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.  அதன்படி நீலகிரி மாவட்ட முதன்மை
கல்வி அலுவலர் அவர்களின் உத்தரவுப்படி அனைத்து பள்ளிகளிலும் குடிமக்கள்
நுகர்வோர் மன்றங்கள் ஆரம்பிக்கப்படுகின்றது.

இதன்படி கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய
வழிகாட்டலுடன் தேவாலா ஹோலிகிராஸ் உயர்நிலைப்பள்ளியில் குடிமக்கள்
நுகர்வோர் மன்றம் துவங்கப்பட்டது.  துவக்க விழாவிற்கு பள்ளி முதல்வர்
அனிஸ் ஜோர்ஜ் தலைமை தாங்கினார்.

கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய தலைவர் சி.
காளிமுத்து துவக்கி வைத்து பேசும்போது.
நுகர்வோர் விழிப்புணர்வு என்பது இன்று மிகவும் குறைவாக உள்ளது.  இதனால்
மக்கள் பெரும்பாலும் ஏமாற்றப்படுகின்றனர்.  அதனால் மாணவா்கள் மத்தியில்
நுகர்வோர் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றோம்.  பொருட்கள் மற்றும்
தரம் குறித்து மாணவர்கள் அறிந்து கொண்டு தரமான நுகர்வோர் சமுதாயம்
மேற்க்கொள்ள வேண்டும் என்றார்.

கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய பொது செயலாளர் சிவசுப்பிரமணியம் பேசும்போது
நுகர்வோர் உரிமைகள் எட்டு உள்ளன.  தரமான பொருட்களை வாங்கி உடலுக்கும்
உயிருக்கும் தீங்கு ஏற்படாமல் பாதுகாப்பு பெறும் உரிமை, பொருட்கள் பற்றிய
தகவல்கள் தெரிந்து கொள்வதற்கான உரிமை, நமக்கு பிடித்த தரமான பொருளை
தேர்வு செய்து பெறுவதற்கான உரிமை, குறைகளை சுட்டிகாட்டும் உரிமை,
குறைகளினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நிவாரணம் பெறுவதற்கான உரிமை,
இயற்கையை பாதுகாப்பதற்கான உரிமை, நுகர்வோர் கல்வி விழிப்புணர்வு
பெறுவதற்கான உரிமை, மற்றும் அடிப்படை தேவைகளை கேட்டு பெறுவதற்கான உரிமை
என எட்டு உரிமைகளை அறிந்து கொண்டு அதற்கோற்றார்போல் நுகர்வோர்
தரமானவர்களாக மாற வேண்டும் என்றார்.

குடிமக்கள் நுகர்வோர் மன்ற உறுப்பினர்களான மாணவர்களின் சந்தேகங்களுக்கு
விளக்கம் அளிக்கப்பட்டது.

குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் பள்ளி ஆசிரியர் ராஜன்
வரவேற்றார்,  நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் ஆசிரியை சுமித்திரா நன்றி
கூறினார்.

போட்டி தேர்வுகள் விழிப்புணர்வு முகாம்

கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் மற்றும் பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்றங்களில் போட்டி தேர்விற்கான விழிப்புணர்வு கூட்டம் நடைப்பெற்றது. 

பந்தலூர் தாலுக்கா அத்திக்குன்னா அரசு உயர்நிலைப் பள்ளியில் கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் மற்றும் பள்ளியின் குடிமக்கள் நுகர்வோர் மன்றம் சார்பில்  நுகர்வோர் விழிப்புணர்வு கூட்டம் நடைப்பெற்றது.  

தரமான கல்வி மற்றும் அரசு தேர்வாணைய போட்டி தேர்வுகள் என்ற தலைப்பில் நடைப்பெற்ற கூட்டத்திற்கு பள்ளி ஆசிரியர் பிரதீப் தலைமை தாங்கினார்
.  
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சி. காளிமுத்து பேசும்போது மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு மாணவர்கள் படிக்க வேண்டும்.  பொழுதுபோக்கு அம்சங்களின் அதிக ஈடுபாடு கொண்டால் படிப்பு வீனாகும். கல்வியே சிறந்த மூலதனமாகும்.  

படித்தவர்கள் தான் இப்போது வெற்றி பெற முடிகின்றது.  பெண்களும் படிப்பினால்தான் பல துறைகளில் முன்னேறி உள்ளனர் என்பதும் குறிப்பிடதக்கது.  தரமான கல்வி எதிர்காலத்தை வளமாக்கும் என்றார்.

கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய பொதுசெயலாளர் சிவசுப்பிரமணியம் பேசும்போது  

அரசு சார்பில் போட்டி தேர்வுகள் நடத்தியே அரசு பணிகள் வழங்கப்படுகின்றது.  படித்த பட்டதாரிகள் அதிகம் இருப்பதால் போட்டி தேர்வுகளில் வெற்றி பெற்றால் தான வேலை என்கிற நிலையில் சாதாரன படிப்புக்கான பணிக்கு கூடி முதுநிலை பட்டதாரிகள் விண்ணப்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.  

அரசு 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான பாடதிட்டங்களில் உள்ள கேள்விகளை தொகுத்து கேட்கப்படும் கேள்விகள் போட்டி தேர்வில் இடம்பெறுகிறது.  எனவே  மாணவர்கள் படிக்கும்போதே போட்டி தேர்வுகளுக்கு தயாராக வேண்டும்.  

அதுபோல தினசரி செய்திதாள்கள் வாசிப்பதன் மூலம் பொது அறிவையும் வளர்த்துக் கொள்ளலாம். அப்போது தான் போட்டி தேர்வுகளில் எளிதில் வெற்றி பெற முடியும்.  என்றார்.  தொடர்ந்து மாணவர்களுக்கு போட்டி தேர்வு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் பலர் பங்கேற்றனர். 

அதுபோல உப்பட்டி பகுதியில் உள்ள பள்ளிகளில் போட்டி தேர்வு விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது.  பள்ளி தலைமை ஆசிரியர் கீவர்கீஸ் தலைமை தாங்கினார் மாணவர்களுக்கு போட்டி தேர்வின் அவசியம் மற்றும் போட்டி தேர்விற்கு தயாராகும் முறைகள் குறித்து 
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் காளிமுத்து, பொது செயலாளர் சிவசுப்பிரமணியம் பேசினார்கள்.  பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

சேரம்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைப்பெற்ற நிகழ்ச்சியிலும் பள்ளி மாணவர்சகளுக்கு போட்டி தேர்வுகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டு துண்டுபிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டது.

போட்டி தேர்விற்கான விழிப்புணர்வு முகாம்

கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் மற்றும் பந்தலூர் டிஎன்பிஎஸ்சி இலவச பயிற்சி மையம் ஆகியன சார்பில் தேவாலா அரசு மேல் நிலைப்பள்ளியில் போட்டி தேர்விற்கான விழிப்புணர்வு முகாம் நடைப்பெற்றது. பள்ளி உதவித்தலைமை ஆசிரியர் வே. கிருஷ்ணகுமார் தலைமை தாங்கினார். 

கூடலூர்  நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் காளிமுத்து பேசும்போது  

பந்தலூர் கூடலூர் பகுதியில் ஏழை எளிய தோட்ட தொழிலாளர்களின் பிள்ளைகளே அதிகம் உள்ளனர்.  இவர்கள் அரசு பணிக்கு வருவது மிகவும் குறைவாக உள்ளது.  அதுபோல அரசு துறைகளிலும் பணியாளர் பற்றாக்குறை நிலவுகின்றது.  இப்பகுதியை சார்ந்தவர்கள் அரசு பணிக்கு வரவேண்டும் என்ற நோக்கில் பந்தலூரில் கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் மற்றும் மகாத்மா காந்தி பொது சேவை மையம் மூலம் இலவசமாக போட்டிதேர்வுகளுக்கு பயிற்சி வழங்கி வருகின்றோம்.  இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.


தேவாலா ஜிடிஆர் பள்ளி தலைமை ஆசிரியர் சமுத்திரபாண்டியன் பேசும்போது 

போட்டி தேர்வுகள் இன்றி தற்போது வேலை வாய்ப்புகள் கிடைப்பதில்லை.  வேலைவாய்ப்பு பதிவுகள் அடிப்படையில் அரசு வேலை வழங்கும் முறை தற்போது இல்லை.  எனவே அனைத்து விதமான வேலையை மேற்க்கொள்ள தேர்வாணையங்களை அரசு உருவாக்கி திறமை அடிப்படையில்  பணி நியமனங்கள் வழங்கப்படுகின்றன.  திறமை இருந்தால்தான் போட்டிகளில் பங்கேற்று  வெற்றி பெற்று அரசு வேலைகளை பெறமுடியும்.என்ற நிலையில் பள்ளியில் படிக்கும் வயதிலேயே, போட்டி தேர்வுகளில் தயாராக வேண்டும்  இதன்மூலம் விரைவாக அரசுபணி பெறமுடியும் என்றார்.

கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய பொது செயலாளர் சு. சிவசுப்பிரமணியம் பேசும்போது 

போட்டி தேர்வுகளுக்கு அழைப்பு வந்தவுடன், தேர்வுக்கு தயாராகும் நிலை போட்டி தேர்வில் வெற்றி பெற இயலாத நிலையே உருவாகும்.  தொடர்பயிற்சி பெற்று அதன்மூலம் போட்டி தேர்வுகளில் பங்கேற்று அரசு பணிகள் பெற முடியும், ஒவ்வொரு தேர்விற்க்கும் போட்டியாளர்கள் அதிகமாக உள்ளனர்.  எனவே கடின உழைப்பு மட்டுமே வெற்றியை தரும் என்றார்.
போட்டி தேர்வுக்கான துண்டு பிரசுரங்கள் மாணவர்களிடையே வினியோகிக்கப்பட்டன.  மாணவர்கள் ஆசிரியர்கள் பலர் பங்கேற்றனர். 

இரத்த கொடையாளர்களுக்கு பாராட்டு விழா

கூடலூரில் இரத்த கொடையாளர்களுக்கு பாராட்டு விழா கூடலூர் தோட்ட தொழிலாளர் தொழிற்பயிற்சி மையத்தில் நடைப்பெற்றது.

நிகழ்ச்சிக்கு பயிற்சி மைய முதல்வர்  ஷாஜி ஜோர்ஜ் தலைமை தாங்கினார்.   கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் காளிமுத்து முன்னிலை வகித்தார்.   தொழிற்பயிற்சி மைய முதன்மை பயிற்றுனர் மாதையன் வரவேற்றார்.

கூடலூர் சட்டமன்ற உறுப்பினர்  மு. திராவிடமணி  சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு இரத்த கொடையாளர்களுக்கு பராட்டு சான்று வழங்கி சிறப்புரையாற்றியபோது

இரத்த தானம் கண் தானம் என்பது தற்போது மிகவும் அவசியமானதாகும்.  கூடலூர் அரசு மருத்துவமனையில் இரத்த வங்கி அமைக்கப்பட்டு அதன் மூலம் இப்பகுதி ஏழை எளிய மக்கள் பயன்பெறுகின்றனர்.  

தேயிலை தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள்  ஊட்டசத்தான உணவு உட்கொள்ளாமலும், அட்டை உன்னி போன்ற பூச்சி கடிகளாலும் இரத்ததை இழந்து இரத்த சோகை போன்ற நோய்களுக்கு ஆட்படுவதோடு,  இரசாயன உரங்கள் மற்றும் மருந்துகளின் பயன்பாட்டினால் புற்று நோய்க்கும், சிறுநீரக கோளறுகளுக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.  

எனவே இதுபோன்ற ஏழை தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில்  இரத்த தானம் வழங்கியது பராட்ட கூடியதாகும். அடுத்தவருக்கு உதவும் ஈகை குணம் மாணவ பருவத்திலேயே உருவாகி தொடரவேண்டும்.  

இரத்த தானம் வழங்க மனம் இருப்பது போல் மன வலிமையும், உடல் வலிமையும் அவசியம்.  இளைஞர்கள் தீய பழக்கத்திற்கு ஆளாகாமல்   கல்வியை முறையாக கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம்.

ஏட்டு படிப்பை விட செயல்முறை படிப்பு மிகவும் முக்கியமானது.  இதன் மூலம் சுயமான தொழிலை கற்றுக்கொள்ள முடியும்.   

கூடலூர் வட்டாரத்தில் போதுமான தொழில் நிறுவனங்கள் இல்லாத நிலையே உள்ளது.  இப்பகுதியில் புதிய தொழிற்சாலைகள் கார்மென்ட்ஸ் போன்றவை கொண்டு வர முயற்சிகள் மேற்க்கொண்டோம்.  இங்குள்ள பருவநிலை சமவெளி பகுதிகளில் உள்ள தொழில்கள் செய்ய இயலாத நிலையினால் வேறு தொழில்கள் இப்பகுதிக்கு கொண்டு வர இயலவில்லை.  

அரசு மூலம் உதவிப்பெறும் தொழிற்பயிற்சி மையமாக இதனை மாற்ற முயற்சிகள் மேற்க்கொள்ளகின்றேன்.  தோட்ட தொழிலாளர்களாகிய மாணவர்கள் பெற்றோர்களின் சிரம்மத்தை கருத்தில் கொண்டு கல்வியின் கவனம் செலுத்த வேண்டும்.  கல்வியே மிக சிறந்த மூலதனம் என்பதை உணர்ந்து போதைக்கு அடிமையாகாமல் மாணவர்கள் கற்று மேன்மையடைய வேண்டும் என்றார்.

தொடர்ந்து இரத்த தானம் வழங்கிய மாணவர்கள் மற்றும் கூடலூர் நுகர்வோர் மைய தலைவர் காளிமுத்து,கூட்டுறவு சங்க பணியாளர்கள் கனேசன், சினு, பாப்பன்னன் ஆகியோருக்கும் மரத்தான் ஓட்டபோட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் நிறைவில் கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய பொது செயலாளர் சிவசுப்பிரமணியம் நன்றி கூறினார். 

பிறப்பு சான்று கட்டண உயர்வை திரும்ப பெற


பெறுனர்

மான்புமிகு தமிழக முதல்வர் அவர்கள்            
தலைமைசெயலகம், 
தமிழ்நாடு சென்னை

பொருள்: தமிழ்நாடு அரசு சார்பில் பிறப்பு சான்று மற்றும் இறப்பு சான்று பதிவிற்கான கட்டணத்தை
உயர்த்தியதை  குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டல் சார்பாக.

மதிப்பிற்குரிய அய்யா அவர்களுக்கு வணக்கம்,
தமிழக அரசு சார்பில் பிறப்பு இறப்பு சான்று பெறுவதற்கான கட்டணம் ரூ. 10 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்பட்டது.  மேலும் இறப்பு சான்று ரூபாய் 10 என கட்டணம் வசூலிக்கப்பட்டது.

ஆனால் தீடிரென இந்த கட்டணங்களை பன்மடங்கு உயர்த்தியுள்ளது பெரும்பாலான ஏழை எளிய மக்களை பாதிக்கும் செயலாக உள்ளது. 
பலரும் மருத்துவம் பார்க்க வசதியின்றி அரசு மருத்துவமனையிலேயே பிரசவம் பார்த்து அரசு கொடுக்கும் உதவித்தொகையை பெற்றே பிரசவ காலத்தில் வாழ்கின்ற நிலையும் பலருக்கு  உள்ளது.

தமிழ்நாடு அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் சார்பில் பிறப்பு இறப்பு சான்றிதழ் கட்டணம் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.  இதில் ஏற்கனவே  உள்ள கட்டணங்களை பண்மடங்கு உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக   பிறப்பு அல்லது இறப்பு ஆகியவற்றிற்கு சம்பவம் நடைபெற்ற நாளில் இருந்து 21 நாட்களுக்குள் பதிவு செய்தால் இலவசம் என்ற நிலையும்,  21 நாட்களுக்கு மேல் 30 நாட்கள் வரை தாமத கட்டணம் ரூபாய் 2 நீதிமன்ற வில்லை ஒட்டி கட்டணம் செலுத்தும் நிலை இருந்ததை தற்போது ரூபாய் 100 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதுபோல30 நாட்களுக்கு மேல் ஓரு ஆண்டு வரையில் தாமத கட்டணம் 5 ரூபாயாக இருந்ததை தற்போது 200 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
ஓர் ஆண்டுக்கு மேல் பதிவு செய்யாதவர்களுக்கு தாமத கட்டணம் ரூபாய் 10 லிருந்து ரூபாய் 500 எனவும் உயர்த்தப்பட்டள்ளது.

மேலும் பிறப்பு சான்றிதழில் பெயரின்றி உள்ள சான்றில் பெயரை சேர்த்து  சான்று பெற 5 ரூபாயில் இருந்து 200 ரூபாய் என உயர்த்தப்பட்டுள்ளது.

அதுபோல இறப்பு சான்றிதழ் பெற  கட்டணமாக வசூலிக்கப்பட்ட 5 ரூபாய் கட்டணத்தை ரூபாய்  200 ஆகவும் கூடுதல் நகல்களுக்கு ரூபாய் 200 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பிறப்பு சான்று மற்றும் இறப்பு சான்று பெறுவதில் பலரும் அக்கறை காட்டுவதில்லை என்ற நிலையும் ஏற்படுகின்றது.  
பிறப்பு இறப்பு சான்றுகள் முக்கியம் என்ற நிலையில் இச்சான்றுகளுக்கான கட்டணம் ஒரே நேரத்தில் பண்மடங்கு உயர்தியுள்ளது அடிதட்டு ஏழை எளிய மக்களை பாதிக்கும் செயலாகும்.

அத்தியாவசிய அடிப்படை தேவையான  பிறப்பு மற்றும் இறப்பு சான்றுகளின் கட்டணத்தை தீடிரென பன்மடங்கு உயர்த்தியுள்ளதை திரும்ப பெற வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.

அதுபோல ஆரம்ப சுகாதார நிலையங்களில் சுகாதார ஆய்வாளர்கள் பிறப்பு இறப்பு பதிவு அலுவலர்களாக உள்ளது போல் மற்ற மருத்துவமனைகளிலும்   இலவசமாகவே பிறப்பு இறப்பு சான்றுகள் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றோம்.
                                                                         இப்படிக்கு
சி. காளிமுத்து  (தலைவர்)
சு. சிவசுப்பிரமணியம்   
(பொது செயலாளர்)                                                                                                                                                                                 

TNPSC பயிற்சி மைய ஆலோசணை கூட்டம்



பந்தலூர் டிஎன்பிஎஸ்சி பயிற்சி மையத்தின் மேம்பாடு குறித்த ஆலோசனை கூட்டம்
பந்தலூர் புனித சேவியர் பெண்கள் உயர்நிலை பள்ளி வளாகத்தில் நடைப்பெற்றது.  
கூட்டத்திற்கு  கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சி. காளிமுத்து தலைமை தாங்கினார்.  
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய பொது செயலாளர் சு. சிவசுப்பிரமணியம்,
தேவாலா ஜிடிஆர் பள்ளி தலைமை ஆசிரியர் சமுத்திரபாண்டியன்,
பந்தலூர் அரசு மேல்நிலைப்பள்ளி  ஆசிரியர் தண்டபாணி,
கூடலூர் கலை அறிவியல் கல்லூரி உதவி பேராசிரியர் மகேஸ்வரன்,  
மகாத்மா காந்தி பொது சேவை மைய தலைவர் நவுசாத், 
மகளீர் திட்ட சுய உதவி குழு பயிற்றுனர் செலின்,  பந்தலூர் டிஎன்பிஎஸ்சி பயிற்சியாளர் பூபாலன், ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பந்தலூர் டிஎன்பிஎஸ்சி பயிற்சி மையத்தினை மேம்படுத்தும் விதமாக கல்லூரியில் போட்டி தேர்வுக்கான விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டதும், தொடர் துண்டுபிரசுரங்கள் வினியோகிக்கப் பட்டதும், பயிற்சிகள் குறித்த தகவல் வழங்கியும் மாணவர்களின் பங்களிப்பு குறைவாக உள்ளது.
இப்பகுதியில் உள்ள இளைஞர்களிடையே போட்டி தேர்வுக்கான பங்கேற்புக்கு தயாராகும் விழிப்புணர்வு மிக குறைவாக உள்ளது என்ற கருத்தையும்
பலர் போட்டி தேர்விற்கு விண்ணப்பித்து அதன்பின் பயிற்சி பெறுவதும், படிக்க ஆரம்பிப்பதும் வழக்கமாக கொண்டிருக்கின்றர்,
போட்டி தேர்வுக்கு தயாராகி கொண்டு  போட்டி தேர்வு அழைப்பு வரும்போது விண்ணப்பித்து தேர்வெழுதினால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்பதை உணராமல் இருப்பது குறித்தும்  வேதணை தெரிவிக்கப்பட்டது
அதனால், இந்த பயிற்சி மையம் மூலம் இன்னும் பயிற்சி பெற மாணவர்களை சேர்க்க நடவடிக்கை எடுப்பது மற்றும் தற்போது டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ள குரூப் 4 க்கான தேர்வு குறித்தும் அதற்கான பயிற்சி குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் விவாதிக்கப்பட்டது.
மாணவர்கள் அதிகரிக்க மேல்நிலை பள்ளிகளில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு வழங்குதல், பந்தலூர், கொளப்பள்ளி, சேரம்பாடி, கையுன்னி, தேவாலா, பிதிர்காடு,எருமாடு  பள்ளிகளிலும், பந்தலூர் பகுதிகளில் உள்ள  உயர்நிலை பள்ளிகளிலும் மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது,  அவர்கள் மூலம் துண்டு பிரசுரங்கள் வழங்கி அரசு வேலைக்கு செல்ல விரும்புபவர்களுக்கு இலவச பயிற்சி வழங்குவது என தீர்மாணிக்கப்பட்டது.
எருமாடு மற்றும் சேரம்பாடி பகுதிகளில் மகளீர் குழு பெண்கள் மற்றும் பொதுமக்களிடையே போட்டி தேர்வு குறித்த விழிப்புணர்வை வரும் டிசம்பர் 3 ஞாயிற்றுகிழமை நடத்த திட்டமிடப்பட்டது. 
மத வழிபாட்டு தளங்களில், மதகுருமார்கள்,  மக்கள் ஒருங்கிணையும் தலைவர்கள், நிர்வாகிகள், மூலம்   கிராமபுற மக்களிடையே போட்டி தேர்வு குறித்தும் அதன் அவசியங்கள் மற்றும், பயிற்சி மையம் குறித்தும் விழிப்புணர்வு  ஏற்படுத்துதல் எனவும் தீர்மாணிக்கப்படும்.
பேருந்து நிலையங்கள் மற்றும் முக்கிய இடங்களில் டிஎன்பிஎஸ்சி பயிற்சி மையம் குறித்த தகவல் பலகை வைக்க நடவடிக்கை எடுப்பது எனவும் தீர்மாணிக்கப்பட்டது.
போட்டிதேர்வுக்கான புத்தகங்கள் தேர்வு செய்து வாங்கி வைத்தல் எனவும்,  அதன்மூலம் போட்டி தேர்வுக்கான மாணவர்களுக்கு பயிற்சி மற்றும் கலந்தாய்வுகள் மேற்கொள்ளவும் உதவுதல் எனவும் தீர்மாணிக்கப்பட்டது.
வாகண பிரச்சாரம் மூலம் மாணவர்கள் மற்றும் படித்து முடித்த இளையோர்களை ஒருங்கிணைத்து பயிற்சி வழங்க முயற்சிகள் மேம்படுத்துதல் எனவும்,  தீர்மாணிக்கப்பட்டது.
 சி. காளிமுத்து (தலைவர்)
சு. சிவசுப்பிரமணியம்
(பொது செயலாளர்)
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம்
மாநில அரசு அங்கீகாரம் பெற்றது.

நவுசாத் (தலைவர்)
மகாத்மா காந்தி பொது சேவை மையம

Consumer Grievance Redressal Forum

Consumer Grievance Redressal Forum

Guidelines
  • Consumer can register the petition through 'Petition Entry' menu.

  • Once the petition has been registered a petitionID will be created. The complainant shall track the petition using this petition ID and the status can be viewed using 'Petition Status'menu.

  • In order to view the orders issued by the CGRF of concerned circle, Click the 'Latest Orders' menu. In that page select your circle.

  • All the CGRF petitions(received via online/manual) for which order has been passed will be listed out.

  • Click the petition of your interest to download the orders passed.

உணவு விளம்பரங்களில் சில கட்டுப்பாடு

உணவு விளம்பரங்களில் 'இயற்கை', 'பாரம்பரியம்', 'புதிய', 'அசல்' உள்ளிட்ட வார்த்தைகளைப் பயன்படுத்த மத்திய அரசு சில கட்டுப்பாடுகளை விதிக்கப் பரிசீலித்து வருகிறது.
இதுகுறித்த வரைவு அறிக்கையை இந்திய பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் வெளியிட்டுள்ளது.
இதன்படி,
''ஃப்ரெஷ் (fresh) என்னும் வார்த்தையை கழுவுவது, உரிப்பது, குளிரவைப்பது உள்ளிட்ட அடிப்படை செயல்பாடுகளை மட்டும் மேற்கொள்ளும் பொருட்களுக்கே பயன்படுத்த வேண்டும்.
உணவுப் பொருட்கள் கெட்டுப்போகாமல் இருக்கப் பயன்படுத்தப்படும் பதனப் பொருட்கள் இருந்தாலோ, பதப்படுத்துவது, கிட்டங்கியில் வைக்கப்படுவது உள்ளிட்ட சப்ளை சங்கிலித்தொடர் நடைமுறைகள்  கடைபிடிக்கப்பட்டால்  'புத்தம்புதிதாக பேக் செய்யப்பட்டது' (freshly packed) என்ற வார்த்தையைக் கொண்டு விளம்பரப்படுத்தக் கூடாது.
'இயற்கையான' (natural) என்ற வார்த்தையை, தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிரிகள் அல்லது தாதுக்கள் மூலம் பெறப்படும் உணவுப் பொருட்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். முக்கியமாக அதில் மற்ற வேதியியல் பொருட்களின் கலப்பு இருக்கக் கூடாது.
அத்துடன் கூட்டு உணவுப் பொருட்களுக்கு 'இயற்கையான' என்ற வார்த்தையைப் பயன்படுத்தக்கூடாது. தேவையெனில் 'இயற்கையான மூலப்பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டது' என்று விளம்பரப்படுத்தலாம்.
'பாரம்பரியமான' (traditional)என்னும் வார்த்தை, அடிப்படையான பொருட்கள் அல்லது தலைமுறைகளாக இருந்துவரும் பொருட்களுக்கான தயாரிப்பு நடைமுறை, அந்தப் பொருளின் தன்மை குறிப்பிட்ட சில காலத்துக்கு மாறாததாக இருக்கும் பட்சத்தில் மட்டும் பயன்படுத்தப்பட வேண்டும்.
'அசலான' (original) என்னும் வார்த்தையை, உணவின் ஆரம்பப் புள்ளியைக் (origin) கண்டறிந்த பிறகு உருவாக்கப்படும் உணவுகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். அவை காலத்தால் மாறிவிடும் தன்மையைப் பெற்றிருக்கக் கூடாது. அத்துடன் முக்கிய மூலப் பொருட்களுக்குப் பதிலாக வேறு பொருட்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட உணவுகளுக்கு அந்த வார்த்தையைப் பயன்படுத்த முடியாது''.
இவ்வாறு அந்த வரைவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உதகையில் சட்ட தினம் கடைப்பிடிக்கப்பட்டது

*
உதகையில் சட்ட தினம் கடைப்பிடிக்கப்பட்டது* . 

உதகை நகர விழிப்புணர்வு சங்கம் கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் ஆகியன சார்பில்
உதகை பிரிக்ஸ் மேல்நிலைப்பள்ளியில் நடைப்பெற்ற சட்டதின நிகழ்ச்சிக்கு பள்ளி *உதவி தலைமை ஆசிரியர் கிருஷ்ண குமார் தலைமை* தாங்கினார்.

பள்ளி மாணவி *குணசியா* வரவேற்றார்

 *உதகை நகர மக்கள் விழிப்புணர்வு சங்க தலைவர் ஜனார்தனன்* பேசும்போது நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பிற்க்கு எதிராக அரசியல்வாதிகளும், அரசு அதிகாரிகளும் கைகோர்த்து செயல்படுகின்றனர். வாகன ஓட்டிகளின் விதிமீறியமாக பெறப்படும் ஓட்டுனர் உரிமம் உட்பட பறிமுதல் செய்யப்படும் ஆவணங்கள் திரும்ப பெற அழைகழிக்கப்படுகின்றது.
மக்களுக்கான சட்டத்தின் மூலம் மக்கள் அழைகழிக்கப்படுவது வேதனையானது என்றார்

 *வழக்கறிஞர் நஜூமா பாய் நசீர* ் பேசும்போது
சட்டம் அனைவருக்கும் சமம் என்று அரசியலமைப்பு கூறுகின்றது.  அனைவரும் சட்டம் கற்க வேண்டியது அவசியம் ஆகும்.  குறிப்பாக பொண்களுக்கு சட்டம் சார்ந்த விழிப்புணர்வு மிகவும் அவசியம்,  தன் தாய் மொழியில் வழக்காட நடவடிக்கை எடுக்கவேண்டியது அவசியம் என்றார்.

 *கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச் சூழல் பாதுகாப்பு மைய தலைவர் சு. சிவசுப்பிரமணியம்* பேசும்போது
அனைவரையும் சட்டத்தால் சமமப்படுத்தும் நோக்கில் சட்டம் உருவாக்கபட்டுள்ளது.  சட்டத்தை மீறுவோர் இன்று சுதந்திரமாகவும், சட்டத்தை மதிப்பவர்கள் கட்டபாட்டில் வழ்வது போலவும் நிலை காணப்படுகின்றது.  சட்டத்தின் பயன்கள் பெற சட்டத்தையும் வெளிவரும் தீர்ப்புகளையும் அறிந்து கொள்ளுதல் அவசியம்.  சாட்சிகளும், ஆவணங்களும்ழ வாதங்களுமே சட்டத்தின் பயனை பெறமுடியுமெ என்றார்.

தமிழாசிரியர் *நாகராஜ்* பேசும்போது
முதியோர் மற்றும் மாற்றுதிறனாளிகள் உள்ளிட்டவர்களுக்கான சட்டங்கள் மற்றும் வன்கொடுமை சட்டங்களின் மூலம் சம்பந்தபட்டவர்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்க செய்யவேண்டும்.  சட்டத்தை மீறுவோர் மீது சட்னரீதியான நடவடிக்கை இல்லாததினால் சட்டத்தின் மீதான நம்பிக்கை குறைகிறது என்றார்.

சட்டதின உறுதி மொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.

சட்டதினம் குறித்து நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவிகள் *ரோசினி, குணசியா, தீக்க்ஷா, சுஜித், தீபக், யோசிதா, சிமைலீ, சைந்தவி* ஆகியோருக்கு புத்தகங்கள் பரிசாக வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.

முடிவில் மாணவி *யோசிதா* நன்றி கூறினார்.

உப்பட்டியில் நுகர்வோர் விழிப்புணர்வு


பந்தலூர் அருகே உப்பட்டியில் நுகர்வோர் விழிப்புணர்வு முகாம்

நடைப்பெற்றது.  உப்பட்டி பாரதமாதா மேல்நிலைப்பள்ளியில் பள்ளி குடிமக்கள்

நுகர்வோர் மன்றம் மற்றும் கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் ஆகியன
சார்பில் நுகர்வோர் விழிப்புணர்வு முகாம் நடைப்பெற்றது.

பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் ராஜேந்திரன்

வரவேற்றார்.

இந்த கூட்டத்திற்கு பள்ளி
உதவி தலைமை ஆசிரியர்  பிஜோ தலைமை தாங்கி பேசும்போது
இன்று கலப்படம் அதிகமாக உள்ளது,  உணவுப்பொருட்களில் கலப்படம் உள்ளதால்
பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாகும் நிலை ஏற்படும். எனவே மாணவர்கள்
விழிப்பபோடு இருப்பது அவசியம் என்றார்.

கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சி காளிமுத்து பேசும்போது

மாணவர்கள்  கல்வியோடு பொது அறிவையும் பெறவேண்டும்,  

சந்தையில் மட்டுமல்ல
வாழ்க்கையிலும் நல்லது எது, கெட்டது எது என்பதை பிரித்தறியும் தன்மை
அறிவு மாணவர்கள் பெற்றிருக்க வேண்டும்.  தரமான பொருட்களை அறிந்து கொண்டு
கலப்படங்கள் மற்றும் போலி பொருட்களை கண்டறிந்து அது குறித்து பொது
மக்களிடையே விழிப்புணர்வை கொண்டு செல்லவே மாணவர்கள் மத்தியில் குடிமக்கள்
நுகர்வோர் மன்றங்கள் செயல்படுத்த படுகின்றன என்றார்.

கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய பொது செயலாளர் சு. சிவசுப்பிரமணியம் பேசும்போது

நாம் பயன்படுத்தும் பொருட்கள் பெரும்பாலானவை தரமற்றவையாகவோ, உடலுக்கு
தீங்கு விளைவிக்க கூடியவையாகவோ உள்ளது.  

தரமான பொருட்கள் குறித்து
அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்,  ஒவ்வொரு பொருளின் பொட்டலத்தின்
மேற்பகுதியில் பொருளின் சேர்மங்கள் குறித்து பார்க்க வேண்டும்,  பொருளின்
உபயோகம், பொருளினை பயன்படுத்தும் விதம், பொருளின் காலவதி தேதி, தயாரிப்பு
நிறுவனம் போன்றவை பார்த்து வாங்க வேண்டும்,  

காலையில் பயன்படுத்தும்
பற்பசை முதல் இரவு தூங்கும் வரை பயன்படுத்தும் பொருட்களின் தன்மைகள்
பயன்கள் குறித்து பகுத்தறிந்து பயன்படுத்துவது நுகர்வோரின் கடமையாகும்
என்றார்.

தொடர்ந்து மாணவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்ற மாணவர்கள் கலந்து கொண்டனர்.

முடிவில் ஆசிரியர் மனோஜ் நன்றி கூறினார்.

Labourer loses Rs 1L

Labourer loses Rs 1L after sharing OTP over phone to stranger

Covai Post Network



November 22, 2017



Image credit : Illustrative Image

Unidentified cyber criminals cheated a daily wage labourer in Pandalur district of Rs 1 lakh by collecting his one-time password (OTP) number over the phone, posing as bank officials.

According to sources, Viswanathan of Ambedkhar Colony in Pandalur taluk was working as a daily wage labourer in a tea estate. He has kept his Employee’s Provident Fund (EPF) amount in his personal account in Indian Bank in Pandalur.

 *Viswanathan* received a call from an unidentified person stating he was from the bank’s head office in Chennai and wanted the OTP number he would receive on his mobile phone.

Initially, *Viswanathan* had doubts but shared the OTP after the person mentioned the address and account number correctly.

But later he found that Rs 1 lakh had been withdrawn from his account, the money from his EPF.

A case has been registered at the cyber crime police station.

 *S Sivasubramaniam, general secretary of the Consumer Protection Centre Gudalur* , said though there was growing awareness among the public, many were still falling a prey to cyber crimes. People know they are not to share their ATM pin number with anybody calling from mobile number, but are not so clear about OTP number

To avoid cyber thefts, people should be made aware that no personal details, be it bank account or Aadhaar numbers or any type of passwords, are not to be shared with strangers, especially over the phone.

He also wanted people to go directly to their bank in case they are to share their personal details

https://www.covaipost.com/coimbatore/labourer-loses-rs-1l-after-sharing-otp-over-phone-to-stranger/

மாதாந்திர பலசரக்கு வாங்கும்போது

மளிகைக் கடையில் மாதாந்திர பலசரக்கு வாங்கும்போது, எப்போதுமே கடந்த மாதத்தைவிட பில் அதிகமாகவே வரும். விலைவாசி உயர்வு மட்டும் அதற்குக் காரணமல்ல. நம் தேவைக்கு அதிகமான பொருட்களை நம்மை அறியாமலேயே நாம் வாங்குவதும் அதற்கு ஒரு காரணம்.
அப்படி வாங்க நம்மைத் தூண்டுவது, கடைகளில் வைக்கப்பட்டிருக்கு விளம்பரங்கள், கண்கவர் ஆஃபர் அறிவிப்புகள், கவர்ச்சிகரமான விலைச் சலுகைகள்.
அப்படிப்பட்ட விளம்பரங்களை பார்க்கும்போது, அவற்றில் ஏதாவது ஒன்றை வாங்குவதைவிட வேறு என்ன செய்ய முடியும்.
ஆனால், அப்படி ஆஃபர்களில் விற்கப்படும் பொருட்களை வாங்கும்போது சற்று கவனமாகவே இருங்கள். ஏனென்றால், அந்த பொருட்கள் பெரும்பாலும் குறுகிய காலத்தில் காலாவதியாகப் போவதாகவே இருக்கும். அல்லது முற்றிலும் பயன்படுத்தத் தகுதியற்றதாக மாறியிருக்கும். எனவே, அவற்றை வாங்குவதில் அதிக கவனம் தேவை.
கடந்த ஆண்டு, சென்னை நகர் முழுவதும் பல்வேறு சூப்பர் மார்க்கெட்டுகளில் இருந்து காலாவதியான உணவுப் பொருட்களை மாநில உணவுப் பாதுகாப்பு நிறுவனம் பறிமுதல் செய்ததை யாரும் மறந்திருக்க முடியாது.
இது குறித்து உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, "பெரிய பெரிய சூப்பர் மார்க்கெட்டுகள்கூட காலாவதியான பொருட்களை ஆஃபர் போர்வையில் விற்பனை செய்கின்றன. வடசென்னையில், இப்படிப்பட்ட விற்பனை அதிகளவில் நடைபெறுகிறது" என்றார்
ஆனால் 10, 15 நாட்கள் வரை காலாவதி தேதி இருக்கும் உணவுப் பொருட்களை விற்பனை செய்வது சட்டவிரோதமானது அல்ல என கூறுகிறார் கடைக்காரர் ஒருவர்.
காலாவதிப் பொருட்களின் விற்பனையைக் கட்டுப்படுத்த வேண்டுமானால் நுகர்வோர், உணவுப் பாதுகாப்பு தொடர்பான அடிப்படை புரிதலையாவது பெற்றிருக்க வேண்டும்.
உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம், 2006-ன்படி, காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்தாலோ அல்லது சுகாதரமற்ற நிலையில் உணவுப் பொருட்களை விற்பனை செய்தாலோ சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வழிவகை உள்ளது. உணவுப் பொருட்கள், தயாரிக்கப்பட்ட நாள், காலாவதியாகும் நாளும் ஆகியன குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். விரைவில் கெட்டுப்போகும் பிரெட், பால் போன்ற உணவுப் பதார்த்தங்களிலும் காலாவதி தேதி அச்சிடப்பட்டிருக்க வேண்டியது மிக மிக அவசியம். ஆனால், குழந்தைகளுக்கான உணவுப் பொருட்களில் மட்டுமே பெரும்பாலும் இந்தத் தேதிகள் சுட்டிக்காட்டப்படுகின்றன என இந்திய நுகர்வோர் கூட்டமைப்பு இயக்குநர் ஜி.சந்தனராஜன் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறும்போது, காலாவதியான பொருட்களை விற்பனை செய்வது சட்ட விரோதமானது. தண்டனைக்குரியது. அப்படிப்பட்ட விற்பனை நடைபெற்றால், அது குறித்து நுகர்வோர் தங்கள் பகுதிக்கு உட்பட்ட உணவுப் பாதுகாப்பு அதிகாரியிடம் நிச்சயமாக புகார் செய்யலாம். அதுபோல், காலாவதி பொருளை உட்கொண்டதால் நுகர்வோர் பாதிப்படையும் போது, அந்த பொருள் விற்கப்பட்டது கிரிமினல் குற்றமாகிவிடுகிறது. உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்படி சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு ரூ.5 லட்சம் வரை அபாராதம் விதிக்க வழி இருக்கிறது. ஆனால், இந்த விவகாரத்தில் விற்பனையாளர்களை மட்டும் முழுமையாக குற்றம்சாட்ட முடியாது. நுகர்வோரும் மலிவு விலை, சலுகை விலை, ஆஃபர் விற்பனை பொருட்களை வாங்குவதை நிறுத்த வேண்டும். நுகர்வோர் உரிமை குறித்த விழிப்புணர்வு பெற வேண்டும் என்றார்.
காலாவதி தேதி வரும் வரை உணவுப் பொருட்களை கடைகளில் தேக்கி வைப்பதில் தவறில்லை, ஆனால், கடைகளில் வேலை பார்ப்பவர்களுக்கு காலாவதியான பொருட்களை உடனடியாக அலமாரியில் இருந்து அகற்ற முறையான பயிற்சி அளித்தல் அவசியம் என கூறுகிறார் பிரபல சூப்பர் மார்க்கெட் அதிபர் ஒருவர்.

உணவை வாங்கும் டிப்ஸ்

உணவை வாங்கும் டிப்ஸ்
மாதம் முதல் தேதியானதும் மளிகைக் கடைக்குப்போய் அண்ணாச்சியிடம் லிஸ்ட்டைக் கொடுத்துவிட்டு, அந்த லிஸ்ட்டில் உள்ளதை மட்டும் வாங்கிக்கொண்டு வீடு திரும்பிய காலம் மலையேறிவிட்டது. இது சூப்பர் மார்க்கெட் காலம். சிறு நகரங்களில் மட்டும் அல்ல, சிற்றூர்களிலும் சூப்பர் மார்க்கெட்டுகள் பெருகிவிட்டன. மக்கள் நேரடியாகப் பொருட்களைப் பார்த்து, தங்கள் கைகளாலேயே ரேக்கில் இருந்து எடுத்துக்கொண்டு வந்து பில் போடும் சுதந்திரம் வந்துவிட்டது.

`உண்மையில் இது சுதந்திரமா அல்லது, வாடிக்கையாளர்களுக்கு விரிக்கப்படும் வலையா?’ என்றொரு கேள்வி எழுகிறது. இப்படி, சந்தையில் நிறைந்து கிடக்கும் பொருட்களுக்கு இடையே நம்மை உலவ வைப்பது, நமது வாங்கும் உணர்வைத் தூண்டிவிடுகிறது.வண்ணமயமான, பளபளப்பான பேக்கிங்கைப் பார்த்ததும் அதில் மயங்கி, தேவை இருக்கிறதோ இல்லையோ, வாங்கி வந்துவிடுகிறோம். தேவையற்ற பொருள்கள் வீட்டுக்குள் நுழைவதால் காசுக்குக் கேடு. அதுவே, வயிற்றுக்குள் நுழைவதால் நம் உடல் நலனுக்குக் கேடாகிறது.

ஒருகாலத்தில், நாம் வாங்கும் உணவுப் பொருளில் என்ன இருக்கிறது என்று நமக்குத் தெரியாது. ஆனால், தற்போது பாக்கெட் உணவுகளில் கட்டாயம் அதில் உள்ள மூலப்பொருட்கள், ஊட்டச்சத்துப் பட்டியல் இடம்பெற வேண்டும் என்று சட்டமே உள்ளது. வாங்கும் உணவில் என்ன இருக்கிறது என்று தெரிந்துவாங்க வேண்டியது அவசியம் என்ற விழிப்புஉணர்வு மிகமிகக் குறைவாகவே காணப்படுகிறது. நியூட்ரீஷியன் லேபிளில் பொடி எழுத்துக்களில் எழுதப்பட்டிருப்பதைப் படித்துப் பார்த்து வாங்க, யாருக்கும் பொறுமை இருப்பது இல்லை. அப்படியே பார்த்தாலும், பலருக்கு அது புரியாது. உற்பத்தி தேதி, காலாவதியாகும் தேதியைப் பார்த்து வாங்கும் விழிப்புஉணர்வே இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக உருவாகியுள்ளது.பாக்கெட் உணவுப் பொருட்களை வாங்கும்போது கவனிக்கவேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பதை ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

லேபிளில் என்னென்ன இருக்கும்?
பொதுவாக, ஒவ்வொரு பொருளிலும் மேற்பகுதியில் பரிமாரப்படும் உணவின் அளவு, கலோரி, ஊட்டச்சத்து மதிப்பு போன்றவை குறிப்பிடப்பட்டிருக்கும். இவை, பொருளுக்குப் பொருள் மாறுபடும். கீழ்ப் பகுதியில், ஒரு நாளைக்கு தேவையான கலோரிக்கு (தோராயமாக 2,000 கலோரி) இந்த உணவின் மூலம் கிடைக்கும் பங்களிப்பு  குறிப்பிடப்பட்டிருக்கும். இதில், கொழுப்பு, சோடியம், நார்ச்சத்து ஆகியவை குறிப்பிடப்பட்டிருக்கும். 

எதில் தயாரிக்கப்பட்டது?
ஒரு தயாரிப்புப் பொருளில் என்னென்ன சேர்மானங்கள் (Ingredients) உள்ளன என்பது கொடுக்கப்பட்டிருக்கும். அதை முதலில் பார்க்க வேண்டும். பொதுவாக, எது அதிகமாகச் சேர்க்கப்பட்டுள்ளதோ, அதுதான் அந்தப் பட்டியலின் முதலில் இடம்பெற்றிருக்கும். சேர்க்கப்பட்டுள்ள விகிதத்துக்கு ஏற்பவே பட்டியல் வரிசை இருக்கும். உங்களால் உச்சரிக்க முடியாத, உங்களுக்குத் தெரியாத பொருட்கள் ஆரம்ப இடங்களில் இருந்தால், அந்தப் பொருளை வாங்குவதைப் பற்றி பரிசீலனை செய்யுங்கள்.

சர்க்கரை அளவு
`ஷுகர்’ என்று எழுதப்பட்டிருப்பது மட்டுமே சர்க்கரை அல்ல. ஹை ஃபிரக்டோஸ் கார்ன் சிரப், கார்ன் சிரப், ஃப்ரக்டோஸ், குளுக்கோஸ், டெக்ஸ்ட்ரோஸ், சுக்ரோஸ், தேன், மொலாசஸ் (Molasses), கரும்புச்சாறு (Evaporated cane juice) என்றெல்லாம் எழுதப்பட்டிருப்பவையும் இனிப்புகளே. இவற்றில் ஒன்றுக்கும் மேற்பட்டவை ஒரு பொருளில் இருந்தால் , அதைத் தவிர்ப்பது நல்லது.

சோடியம் அளவு
சோடியம் உப்பின் அளவைக் கவனிப்பது நல்லது. உப்பு அதிகரிப்பதால் உயர் ரத்த அழுத்தம், இதயநோய்கள், வலிப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன.  ஒருநாளைக்கு 5-8 கிராம் என்ற அளவில் உப்பை எடுத்துக்கொள்ளலாம். பொதுவாக, சோடியமும் கலோரியும் 1:1 என்ற விகிதத்தில் இருக்க வேண்டும். அதாவது, 1,000 கலோரி உணவில் 1,000 மி.கி சோடியம் இருக்க வேண்டும். அதற்கு சற்றுக் குறைவாக இருந்தாலும் தவறு இல்லை; அதிகமாக இருக்கக் கூடாது.

கொழுப்பின் அளவு
எல்லா வகைக் கொழுப்புகளுமே உடலுக்கு அவசியம் என்றாலும், அவை தேவைக்கு அதிகமாக உடலில் சேராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். உணவுப்பொருளில் இருந்து கிடைக்கும் கலோரி அளவை மட்டும் அல்ல, கொழுப்பில் இருந்து கிடைக்கும் கலோரி அளவையும் கவனிக்க வேண்டும். `ஒரு பொருளில் கிடைக்கும் கலோரி அளவில் 30 சதவிகிதத்துக்கு மேல் கொழுப்பில் இருந்து கிடைப்பதாக இருந்தால், அது உடலுக்கு நல்லது அல்ல. பேக்கிங் ரேப்பரின் முன்புறம் ‘99 சதவிகிதம் ஃபேட் ஃப்ரீ’’ என எழுதி இருப்பதை நம்பி ஏமாறாதீர்கள். அது எடையை அடிப்படையாகக் கொண்ட சதவிகிதம். கலோரியை அடிப்படையாகக் கொண்டது அல்ல.

சர்விங் சைஸ்
ஒவ்வொரு பொருளிலும் அதன் சர்விங் சைஸ் எவ்வளவு என்பதும், உணவு எத்தனை சர்விங் சைஸ் வரும் என்பதும் குறிப்பிடப்பட்டிருக்கும். சர்விங் சைஸ் என்பது கப் மற்றும் எண்ணிக்கையில் இருக்கும். அதனைத் தொடர்ந்து எத்தனை கிராம் அல்லது லிட்டர் என மெட்ரிக் அளவு குறிப்பிடப்பட்டிருக்கும். உதாரணமாக, வெண்ணெய் கலந்த மக்காச்சோள பாக்கெட் ஒன்றில் ‘சர்விங் சைஸ் ஒன் கப் (228 கி) – சர்விங்ஸ் பெர் கன்டெய்னர் 2’ என்று எழுதி இருந்தால் அந்த பாக்கெட்டில் இருக்கும் மக்காச்சோளம் முழுவதையும் உண்டால், நீங்கள் இரண்டு கப் மக்காச்சோளம் உண்டதாக அர்த்தம். எனவே, அதில் குறிப்பிட்டுள்ள ஊட்டச்சத்து விகிதங்கள், கலோரிகளை இரண்டு மடங்காக உட்கொண்டிருப்பீர்கள். சர்விங் சைஸின் அளவு என்பது அந்த உணவின் கலோரிகள், ஊட்டச்சத்து மதிப்பு போன்றவற்றையும் தீர்மானிக்கும். எனவே, ஒரு பொருளை உண்ணுவதற்கு முன்பு `எவ்வளவு சர்விங் சைஸ் நான் எடுத்துக்கொள்ளப்போகிறேன்?’ என்று கேட்டுக்கொள்ளுங்கள். 

கலோரி
ஒரு சர்விங்கில் எத்தனை கலோரி கிடைக்கிறது என்பதை இந்த கலோரி அளவு குறிக்கிறது மேலும், எத்தனை கலோரிகள் கொழுப்பில் இருந்து கிடைக்கின்றன என்பதையும் குறிப்பிட்டிருப்பார்கள். கலோரி அளவு ஒரு நாள் தேவைக்கு அதிகமாகக் கூடும்போது, உடல் அதைக் கொழுப்பாக மாற்றிச் சேமித்துவைக்கும். இதனால், தொப்பை, உடல்பருமன் போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. எனவே, கலோரியைக் கவனித்து வாங்குவது நல்லது.

ஒரு லேபிளில் கலோரி பகுதியில் ‘அமெளன்ட் பெர் சேவிங்: கலோரி – 250, ஃபேட் கலோரி – 125’ என்று குறிப்பிடப்பட்டிருந்தால், அந்த உணவுப்பொருளில் இருந்து கிடைக்கும் கலோரியில் பாதி கொழுப்பில் இருந்து கிடைக்கிறது என்று அர்த்தம்.

ஊட்டச்சத்துக்கள்
இந்தப் பகுதியில் மொத்தக் கொழுப்பு, சாச்சுரேட்டட் கொழுப்பு, கொலஸ்ட்ரால், சோடியம் போன்றவை மேற்பகுதியில் இருக்கும். அதைத் தொடர்ந்து நார்ச்சத்து, வைட்டமின்கள், கால்சியம், இரும்புச்சத்து போன்ற தாதுஉப்புக்கள், நுண்ணூட்டச் சத்துக்கள் எவ்வளவு உள்ளன என்பன குறிப்பிடப்பட்டிருக்கும். இவை அனைத்தும் தினசரித் தேவையில் எவ்வளவு பங்களிப்பு என சதவிகிதத்தில் கொடுத்திருப்பார்கள்.

தினசரி மதிப்பு (Daily value)
இது ஒரு நாளைக்குத் தேவையான ஊட்டச்சத்து அளவில் எவ்வளவு அந்தப் பொருளில் உள்ளது என்பதைக் குறிக்கும். இவை, பெரும்பாலும் மைக்ரோகிராம், மில்லிகிராம், கிராம் என மெட்ரிக் அளவுகளில் இருக்கும். இது, பொருளுக்குப் பொருள் மாறுபடும். ஏனெனில், ஒவ்வொரு பொருளிலும் ஒவ்வொரு விகிதத்தில் ஊட்டச்சத்து மதிப்பு இருக்கும்.

ஆர்கானிக் அறிவோம்!
டிபார்ட்மென்ட்டல் ஸ்டோர்களில் பொருட்கள் வாங்கும்போது, சில பொருட்களில் `ஆர்கானிக்’ என்றும், சில பொருட்களில் `மேட் வித் ஆர்கானிக்’ என்றும், சிலவற்றில் `ஆர்கானிக் இன்கிரிடியென்ட்ஸ்’ என்றும் குறிப்பிடப்பட்டிருப்பதைப் பார்த்திருப்போம். இவற்றுக்கெல்லாம் என்ன அர்த்தம் என்று தெரியாது.  

100 சதவிகிதம் ஆர்கானிக்:
முழுமையான ஆர்கானிக் பொருட்கள். இவற்றில் இந்திய ஆர்கானிக் லோகோ, அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் ஆர்கானிக் ஏஜென்சிகளின் லோகோக்கள் இடம்பெற்றிருக்கும்.

ஆர்கானிக்:
இவற்றில் 95 சதவிகிதம் ஆர்கானிக் பொருட்களாக இருக்க வேண்டும். எஞ்சி உள்ள 5 சதவிகிதத்தில்  (உப்பையும் நீரையும் தவிர) குளோரின் (பாக்கிங் பொருட்கள் சுத்தம் செய்யப்பட்டிருப்பதால்), நிறமூட்டிகள் போன்ற ஆர்கானிக் அல்லாத பிராஸசிங் பொருட்கள் இருக்கலாம். ஆனால், அவை அங்கீகரிக்கப்பட்ட பொருட்களாக இருக்க வேண்டும்.

மேட் வித் ஆர்கானிக்:
இது 70 சதவிகிதம் ஆர்கானிக் உணவு. அதாவது, ஊறுகாய் என்றால், அதில் உள்ள மாங்காய் இயற்கை முறையில் விளைந்ததாக இருக்கும். ஆனால், இவற்றில் சில சுவையூட்டிகளும் உப்புகளும் செயற்கையானவையாக இருக்கும்.

ஆர்கானிக் இன்கிரிடியென்ட்ஸ்:
இதில், 70 சதவிகிதத்துக்கும் குறைவான ஆர்கானிக் பொருள் இருக்கும். இவற்றை ஆர்கானிக் உணவு என்று சொல்ல முடியாது. ஆனால், இவற்றின் லேபிளில் ஆர்கானிக் பொருட்களால் ஆன இன்கிரிடியென்ட்ஸ் உள்ளதெனக் குறிப்பிட்டுக்கொள்ளலாம். உதாரணம் ஜாம்கள், சாஸ்கள் மற்றும் சப்ளிமென்ட்டுகள்.

நேச்சுரல்:
இந்தியாவில் நேச்சுரல், ஹெர்பல் போன்றவற்றுக்கு எந்தவிதமான முறைசார்ந்த அங்கீகாரச் சான்றிதழ்களும், கண்காணிப்புகளும் கிடையாது. இவற்றில் குறைந்த அளவு பிராசஸ்டு பொருட்கள் இருக்கக்கூடும் அல்லது இவை போலியானவையாகவும் இருக்கக்கூடும்.

ஃபேர் ட்ரேடு:
என்.ஜி.ஓ-க்கள் மூலமாக சந்தைப்படுத்தப்படும் பொருட்கள். உற்பத்தியாளர்களிடமிருந்து நேரடியாகப் பெறப்பட்டு, சந்தைப்படுத்தப்படும் பொருட்கள் இவை. சில குறிப்பிட்ட ஊர்கள், சூழல்களில் மட்டும் இவற்றைக் காணலாம். உதாரணம், ஊட்டி டீத்தூள், காபிக்கொட்டை, காபி தூள். 

ஆர்கானிக் பை ட்ரஸ்ட்:
சிறிய விவசாயிகள் மற்றும் உற்பத்தியாளர்களுக்குச் சான்றிதழ் பெறுவது, பெரிய அளவில் சந்தைப்படுத்துவதெல்லாம் சாத்தியம் இல்லை. எனவே, அவர்கள் சந்தைப்படுத்தும் பொருட்கள் அல்லது அவர்களால் சில என்.ஜி.ஓ-க்களுக்கு விற்பனை செய்யப்படும் பொருட்களில், ‘ஆர்கானிக் பை டிரஸ்ட்’ எனக் குறிப்பிட்டுக்கொள்வார்கள். இது சுய சான்றிதழ் என்பதால், இவற்றின் தரத்தை நிர்ணயிப்பது கடினம். வாடிக்கையாளர்கள்தான் இவற்றின் நம்பகத்தன்மையைச் சோதித்து அறிந்துகொள்ள வேண்டும்.

கேஜ் ஃப்ரீ இறைச்சி:
இறைச்சி உணவில், கேஜ் ஃப்ரீ, நியர் ஆர்கானிக் போன்ற பதங்கள் மாறி மாறிக் குறிப்பிடப்படுகின்றன. கூண்டில் அடைக்கப்படாமல், ஒரு பெரிய கட்டடத்தில் சுதந்திரமாக இருக்கவிடப்பட்ட பறவைகளின் இறைச்சிகளை `கேஜ் ஃப்ரீ’ என்பார்கள். இதுவும் முறையான அங்கீகாரம் பெறப்பட்ட சான்று அல்ல.

கிராஸ் ஃபெட்:
தானியங்கள், புற்கள், இலை தழைகள் போன்ற இயற்கை உணவுகள் தந்து வளர்க்கப்பட்ட கால்நடைகள் மற்றும் பறவைகளின் இறைச்சி மற்றும் அவற்றிலிருந்து பெறப்படும் பால் பொருட்களில் `கிராஸ் ஃபெட்’  என குறிப்பிடப்பட்டிருக்கும். 

நோ ஆடட் ஹார்மோன்ஸ்
(No Added Harmones):
ஹார்மோன் ஊசிகள் போடப்படாத கால்நடைகளில் இருந்து பெறப்பட்ட பால்பொருட்கள் மற்றும் இறைச்சிகள் மேல் `நோ ஆடட் ஹார்மோன்ஸ்’ எனக் குறிப்பிடப்பட்டிருக்கும். இந்தியாவில்  முறையாக இந்தச் சான்றிதழ் பெற்றுள்ள நிறுவனங்கள் உள்ளன.

யார் சான்று தருவது? 
ஏபிஇடிஏ (Agricultural and Processed Food Products Export Development Authority) எனும் மத்திய அரசு நிறுவனம் ஆர்கானிக் பொருட்களுக்கான தரச் சான்றிதழை வழங்குகிறது. தற்போது, ஏற்றுமதிப் பொருட்களுக்கு மட்டுமே அரசின் அங்கீகாரம் கட்டாயம். மற்றவர்கள் விரும்பினால், இந்த அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ளலாம். உள்ளூர் பொருட்களுக்கு ஏற்கெனவே அக்மார்க் அங்கீகாரம் உள்ளது. ஆனால், இந்தச் சான்றிதழ் பெறுவதும் கட்டாயம் அல்ல. எனவே, இந்தியாவைப் பொறுத்தவரை ‘ஆர்கானிக் பை டிரஸ்ட்’ என்பதுதான் பொதுவான சந்தை அங்கீகாரமாக பெரும் அளவு உள்ளது.

நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 2019

**நுகர்வோர் பாதுகாப்பு சட்டம், 2019 (Consumer Protection Act, 2019 – Act No. 35 of 2019)**   இந்தச் சட்டம் நுகர்வோர் நலன்களைப் பாதுகாப்பதற்க...