பாலிதீன் பையும் பயங்கரமும்
எங்கெங்கு காணினும் பாலிதீனடா
என பாரதி பாடலை மாற்றிபாட தோனுது.
எனெனில் காய்கறி கடை, பழக்கடை,
மளிகை கடை, ஜவுளிக்கடை, இறைச்சிக் கடை,
என எந்தக் கடையிலிருந்து யார் திரும்பினாலும்
கையில் தொங்குகின்ற ஆபத்தை ஒழித்து
வைத்திருக்கும் அழகான பாலிதீன் பைகள்.
பயன்படுத்துவதற்கு எளிதானது என்றுதான்
பாலிதீன் அதிகம் பயன்படுத்த ஆரம்பித்தோம். ஆனால்
பயன்படுத்தி குப்பையில் வீசிய பிறகு அந்த
பாலிதீன் என்னவாகிறது? எத்தனைபேருக்கு யோசிக்க நேரமிருக்கிறது.
உலகையே அச்சுறுத்தும்
பிரச்சினையாக எமுந்துள்ளது
பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் விஷயம்.
அகற்றுவதில் அக்கறையற்று இருப்பதால்...
மிக மோசமானதொரு நிலையை நோக்கி
நகர்ந்து கொண்டுயிருக்கிறோம்..
நம்முடைய எதிர்காலமும்,
பூமிப்பந்தின் எதிர்காலமும்..
இந்த பிளாஸ்டிக்கை அதிக அளவு பயன்படுத்த
ஆரம்பித்து 50 ஆண்டுகளதான் ஆகிறது.
அதற்குள் இது ஏற்படுத்தியிருக்கும் பாதிப்புகள்
நிலத்தோடு நின்றுவிடவில்லை
கடல் வாழ் உயிரினங்கள், மற்றும்
கடல்வாழ் தாவரங்களின்
இனப்பெருக்கமும் பாதிக்கப்பட்டு
இந்த கடல்வாழ் உயிரினங்களை நம்பி பூமியில்
இருப்பவர்களின் வாழ்வாதாரத்தை
கேள்வி குறியாக்கிறது?
கடலில் வீசப்படும் பிளாஸ்டிக்கழிவுகளால்
ஒவ்வொரு ஆண்டும் 2 லட்சம்
கடல்வாழ் உயிரினங்கள் அழிகின்றன.
உணவு பொருள்களை பிளாஸ்டிக் பேக்கேஜிங்குகளில் அல்லது
பைகளில் பார்சல் செய்வதால்
உணவு பொருட்களின் சூடு மற்றும்
எண்ணெய்பதார்த்ததால், பிளாஸ்டிக்கில் உள்ள
ஆபத்தான பல வேதிப்பொருள்கள், ரசாயன சாயங்கள் மற்றும்
காரியம் , ஆர்சனிக், நிக்கல், மெர்க்குரி போன்ற
உலோகங்கள் உணவுடன கலப்பதற்கான வாயப்பு உள்ளது .
இவைகள் விஷத்தன்மை கொண்டது.
பாலிதீனில் உளள டையாக்சின் என்ற
வேதிப்பொருள் உணவு பொருளுடன் கலந்து
உணவு பொருளை விஷமாக்குகிறது.
பாலிதீன் கப்புகளில் தொடந்து டீ போன்ற சூடான பொருட்களை பருகுவதால்
குழந்தை பேறின்மை போன்ற வியாதிகள் ஏற்படுகிறது.
இதற்கு மேலும் காசு கொடுத்து நோயை வாங்க வேண்டுமா என யோசியுங்கள்.
ஒவ்வொரு முறையும் பாலிதீன் பேப்பர்களில் சாப்பிடும்போதும், டீ குடிக்கும் போதும்.
அதேபோல மீந்துவிடும் உணவுடன் பிளாஸ்டிக் பைகளையும்
கால்நடைகள் சேர்த்து விழுங்கிவிடுகின்றன.
பிளாஸ்டிக் பொருள்கள் கால்நடைகளின் குடலில் தங்கிவிடுவதால்
அவை கறக்கும் பாலில் உண்டாகும் நச்சுத்தன்மையை
ஆராய தற்பொழுது தமிழ்நாடு கால்நடைப் பல்கலைக்கழகம் முற்பட்டு வருகிறது.
உத்திரபிரேதேசத்தில மட்டும் குப்பையில் வீசப்படும்
பிளாஸ்டிக் கழிவுகளை சாப்பிடுவதால் தினமும் 100 மாடுகள் இறக்கின்றன.
பாலிதீன் பொருட்கள் மண்ணில் மக்குவதும் இல்லை.
மண்ணின் புதைத்தாலும் மழைநீர் மண்ணில் செல்லவிடாமல்
தாவரங்களின் அழிவிற்கும் மழையின்மைக்கும் காரணமாகிறது.
பாதுகாப்பற்ற முறையில் பாலிதீன் பொருட்களை
மறு சுழற்சியில் ஈடுபடுத்தும் போது அதில் இருந்து வெளியேறும்
நச்சு வாயுவுக்காளால் உலகம் முழுவதும்
ஒவ்வொரு ஆண்டும்80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இறக்கினறனர்.
ஒசோன் மண்டலத்திலும் ஒட்டையும் ஏற்படுத்துகிறது.
பிளாஸ்டிக் பொருட்களின் கழிவு நிலத்தடி நீரில் கலப்பதால்
குழந்தைகளின் நரம்பு மண்டலம் பாதிக்கப்படுகிறது.
20 மைக்ரான் தடிமன் எனும் அளவு கோல்
ஒன்றுக்கும் உதவாத காலவதியான அளவு எனபதை நாம் உணர வேண்டும்.
50 மைக்ரான்வரை கூட பாலிதீன் பைகளைப் பிரித்து காசாக்க முயல்வது
இன்றைக்கு சிறிதும் லாபமற்ற தொழிலாக கருதப்படுவதால்
இப்போது பாலிதீன் பொருட்களை யாரும் பிரிந்து சேகரிக்க முன்வருவதில்லை.
இதை பழைய பேப்பர் வாங்குபவர் கூட வாங்குவதில்லை.
ஆதனால் மறு சுழற்சி பயன்பாடு எனபது இயலாததாகும்.
இத்தகைய பாலிதீன்பைகள் சாக்கடைகளை அடைத்து
சாக்கடை நீரோட்டத்தைத்தடுத்து, கொசு உற்பத்தியாகி
கொடிய நோய்கள் ஏற்பட வழிவகுக்கிறது.
சமீபத்தில் திருவாருரில் கடந்த மழை காலத்தில்
பாலிதீன் பைகள் சாக்கடைகளில் அடைப்பு ஏற்படுத்தி
மழைநீர் வடியாமல் பொதுமக்களின் பொது சுகாதாரத்திறகு
பெரும் சிரமத்தை ஏற்படுத்தியது.
இதன் பயன்பாட்டை உடனடியாக நிறுத்திகொள்ளவில்லையெனில்
இப்போழுது நாம் கொஞ்சம் கொஞ்சமாக கொன்று கொண்டிருக்கும் நம் பூமி ,
ஒரு நாள் முழுவதும் முடிந்து விடும்.
இனி எதிர்காலச் சந்ததியினரின் நலனையும் கருத்தில் கொண்டு
தெளிவான முடிவுகளை எடுக்க வேண்டும்.
இந்த சுற்றுச்சுழல் மற்றும் மக்கள் நலன் சார்ந்த முடிவில்.
அனைவரும் அக்கறையோடு இருப்போம்
பாலிதீன் பைகளை தவிர்ப்பீர்! ஆருரின் அருமை காப்பீர்
No comments:
Post a Comment