ஊட்டி:"வன வளத்தை பாதுகாக்க அதிகாரிகள் முயற்சி எடுக்க வேண்டும்' என, வலியுறுத்தப்பட்டது.ஊட்டி எச்.ஏ.டி.பி., பயிற்சி அரங்கில், மாவட்ட நிர்வாகம் சார்பில், தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தின விழா நடந்தது. மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ஜெயராஜ் வரவேற்று பேசுகையில்,""வாங்கும் பொருட்களுக்கு பில் வாங்க வேண்டும், என்ற விழிப்புணர்வு படித்த மக்கள் மத்தியில் கூட இல்லை. பில் வாங்காமல் பொருட்களை வாங்குவதன் மூலம், அரசுக்கு பல லட்ச ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுகிறது, என்பதை உணர வேண்டும். திருச்சி உட்பட சமவெளி பிரதேசங்களில் இத்தகைய அரசு விழாக்கள் நடக்கும் போது, இரு மரக்கன்றுகள் நடுவதை வழக்கமாக கொண்டிருப்போம்; நீலகிரியில், ஏராளமான மரங்கள் உள்ள நிலையில், அவற்றை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.
நுகர்வோர் தினத்தை ஒட்டி நடத்தப்பட்ட விளையாட்டு, ஓவியம், கவிதை, கட்டுரைப் போட்டிகளில், வெற்றி பெற்றவர்களுக்கு, மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் பரிசு வழங்கினார். தாங்கள் உற்பத்தி செய்த பொருட்களை, சென்னையில், ஒரு லட்சத்து 24 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்த, குன்னூர் வண்டிச்சோலை "மலையரசி' சுய உதவிக் குழுவுக்கு, முதல் பரிசு வழங்கப்பட்டது.மகளிர் திட்ட இணை இயக்குனர் கோமதி, கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் வனிதா, குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் சொக்கலிங்கம், ஊட்டி அரசு கலைக்கல்லூரி தாவரவியல் துறை உதவி பேராசிரியர் ரவி, நுகர்வோர் சங்க நிர்வாகிகள் நாகேந்திரன், சபாபதி, சிவசுப்ரமணியம், ராஜன் உட்பட பலர் பேசினர்.ஊட்டி வட்ட வழங்கல் அலுவலர் மணிவேல் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment