ஊட்டி, :ஊட்டியில் நடந்த தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தின விழாவில் பல்வேறு
போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு மாவட்ட கலெக்டர்
அர்ச்சனா பட்நாயக் பரிசுகளை வழங்கினார்.
தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தின விழா ஊட்டியில் உள்ள மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட பயிற்சி அரங்கில் நடந்தது.
மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ஜெயராஜ்
வரவேற்றார். மகளிர் திட்ட இணை இயக்குநர் கோமதி சங்கர், கூட்டுறவு
சங்கங்களின் இணை பதிவாளர் வனிதா, குடிமக்கள் நுகர்வோர் மன்ற
ஒருங்கிணைப்பாளர் சொக்கலிங்கம் ஆகியோர் நுகர்வோர் பாதுகாப்பு குறித்து
பேசினார்கள்.
மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் கலந்து கொண்டு நுகர்வோர்
தினத்தை முன்னிட்டு நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ,
மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
விழாவில் நுகர்வோர்
உரிமைகள் மற்றும் கடமைகள், சுற்றுசூழல் விழிப்புணர்வு, உணவு பாதுகாப்பு
மற்றும் தரக்கட்டுபாடு சட்டம் 2011, நுகர்வோர் பாதுகாப்பு உரிமைகள்,
குடிமக்கள் நுகர்வோர் மன்றம் ஆகியவை குறித்து நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த
நுகர்வோர் மன்ற நிர்வாகிகள் கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய
தலைவர் சிவசுப்பிரமணியம், கோத்தகிரி நுகர்வோர் பாதுகாப்பு சங்கம்
நாகேந்திரன், குன்னூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்க செயலாளர் சபாபதி மற்றும் ஊட்டி அரசு
கலை கல்லூரி தாவரவியல்துறை உதவி பேராசிரியர் ரவி உட்பட பலர் பேசினர்.
உணவு தரக்கட்டுபாடு சட்டம் குறித்து நடத்தப்பட்ட கட்டுரை, கவிதை மற்றும் ஒவிய போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் மாநில அளவில் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த மகளிர் குழுக்கள் உற்பத்தி செய்த பொருட்களை சென்னையில் ரூ.1 லட்சத்து 24 ஆயிரத்திற்கு விற்பனை செய்ததற்காக குன்னூர் வண்டி சோலை பகுதி மலையரசி சுய உதவி குழுவிற்கு முதல் பரிசு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய
தலைவர் சிவசுப்பிரமணியம், கோத்தகிரி நுகர்வோர் பாதுகாப்பு சங்கம்
நாகேந்திரன், குன்னூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்க செயலாளர் சபாபதி மற்றும் ஊட்டி அரசு
கலை கல்லூரி தாவரவியல்துறை உதவி பேராசிரியர் ரவி உட்பட பலர் கலந்து
கொண்டனர். முடிவில் வட்ட வழங்கல் அலுவலர் மணிவேல் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment