கோவை வட்டார அளவிலான நுகர்வோர் பயிற்றுனர் பயிற்சியில்







கோவை வட்டார அளவிலான நுகர்வோர்  பயிற்றுனர் பயிற்சியில் கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்ரமணியம் தேயிலை கலப்படம் குறித்து பயிற்சி அளித்தார்.

தமிழ் நாடு அரசு உணவு பொருள் வழங்கல்  மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் மகளிர் குழுக்களிடம் நுகர்வோர் விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்து அதற்கான பயிற்றுனர் களுக்கு வட்டார அளவிலான பயிற்சியை வழங்கி வருகின்றது.   இதன் அடிப்படையில் கோவை வட்டார அளவில் 10 மாவட்டங்களை சேர்ந்த நுகர்வோர் பயிற்றுனர்கள் தேர்வு செய்து மேட்டுபாளையத்தில்  பயிற்சி நடைபெற்றது. 

தமிழ்நாடு   அரசு  உணவு  பொருள் வழங்கல் நுகர்வோர் பாதுகாப்பு துறையின்   நுகர்வோர் பாதுகாப்பு  பிரிவு கண்காணிப்பாளர் முத்து கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த பயிற்சியில் நுகர்வோர் சட்டங்கள் நேர்மையற்ற வணிக நடவடிக்கைகள் விளம்பரங்கள் பதிப்புகள் உணவு பாதுகாப்பு சட்டம் மருந்துகள் பாதுகாப்பு தேயிலை கலப்படம் நுகர்வோர் வழக்குகள் புகார்  பதிவு செய்தல் நுகர்வோர் அமைப்புகளின் செயல்பாடுகள் நுகர்வோர் விழிப்புணர்வை மகளிர்களிடம் எடுத்து செல்லுதல்  உட்பட பல்வேறு தலைப்புகளில் நுகர்வோர் பயிற்றுனர்கள் நுகர்வோர் சம்மேளன பொது செயலாளர் நிசமுதீன், வழக்கறிஞர் சி ஏ தாஸ், அசோகன், சகுந்தலா சீனிவாசன் கோவை மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் கதிரவன், மருந்து கட்டுப்பட்டு துறை உதவி இயக்குனர் சந்திர சேகரன், இந்திய தர அமைவனத்தின் ஆராய்ச்சியாளர் ரெங்கநாதன்  நுகர்வோர் ஆர்வலர் ஜோர்ஜ் உள்ளிட்ட பலர்  பயிற்சி அளித்தனர்.

இதில் கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய  தலைவர் சிவசுப்பிரமணியம் தரமான தேயிலை மற்றும் தேயிலை கலப்படம் குறித்து பயிற்சி அளித்து பேசும்போது 

தேயிலை என்பது ஒரு உற்சாக பாணம்.  இது தமிழகத்தில் நீலகிரி வால்பாறை உள்ளிட்ட மலை பிரதேசங்களில் முக்கிய பயிராக விவசாயம் செய்ய படுகின்றது. 12 முதல் 15 நாட்களில் வளர்ந்து  இரு இலை மற்றும் ஒரு அரும்பு   என பறிக்கப்படும் இலைகளை பறித்து அவற்றை முறைப்படி தொழிற்சாலைகளில் அரைத்து தேயிலை தூள் தயாரிக்க படுகின்றது இந்த தூள் உற்சாக பணமாக பயன் படுத்த படுகின்றது. தேயிலை வெள்ளை, பச்சை, ஊலோங்,  கருப்பு மற்றும் சில்வர் டிப்ஸ் டீ  ஆகிய வகைகள் உள்ளன.  தேயிலையோடு எலுமிச்சை, ஏலக்காய், இஞ்சி, சாக்லேட், மசாலா உள்ளிட்ட சுவையுட்ட பட்ட டீ  தூளும் தற்போது கிடைக்கின்றது.

தேநீர் பருகுவதால் உடல் சோர்வும் , களைப்பும் நீங்கிப் புத்துணர்ச்சி ஏற்பட்டு  சுறு சுறுப்பாகவும், துடி துடிப்புடன் திகழவும் உதவுகிறது.
தேநீரில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்டுகள். குறைவான கொழுப்பு அளவு ஆகியவற்றால் இதய நோய்கள் வராமல் தடுக்கப்படுகின்றன. தேநீர் தோல் புற்று நோய் வராமல் தடுப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தேயிலையில் உள்ள சத்துக்கள் பல் ஈறுகளின் வளர்ச்சிக்கும், தேயிலையில் உள்ள புளோரைடு  பற்கள் சொத்தையாகாமல் தடுக்கிறது. கறுப்புத் தேநீர் பருகுவது புற்றுநோய், இதயம் மற்றும் ஈரல் நோய்களைத் தடுப்பதாக சில ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

தரமான தேயிலை இலைகளை கொண்டு தயாரிக்கப்படும் தேயிலை தூளை தற்போது சிலர் சுய லாபத்திற்காக தீங்கு செய்யும்  மரத்தூள், தரமற்ற தேயிலை இலைகள், பயன்படுத்த பட்ட தேயிலை தூள் ஆகியன சேர்த்து அதற்க்கு கலர் கிடைக்க சாயம் சேர்க்கின்றனர் இதனால் பல்வேறு நோய்கள் வரும் நிலை உருவாகின்றது.  சாயம் கலந்த தூள் குளிர்ந்த நீரில் கூட சாயம் வரும்.  வெள்ளை துணி அல்லது வெள்ளை பேப்பரில்  தேய்த்தால் சாயம் கலந்ததினை எளிதில் கண்டு பிடிக்கலாம்.

கலப்பட தேயிலை தூள் விற்பனை செய்வது தெரிந்தால் மாவட்ட உணவு தர நிர்ணய அலுவருக்கு தகவல் தெரிவிக்கலாம்.  தரமான தேயிலை குறித்து மக்களுக்கு நுகர்வோர் ஆர்வலர்கள் விழிப்புணர்வு எற்படுத்த வேண்டும் என்றார்.

பயிற்சியில் 10 மாவட்டங்களை சேர்ந்த 50க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டனர் இவர்கள் மூலம் மகளிர் குழுக்களுக்கு பயிற்சிகள் வழங்க பட உள்ளது. 


S.SIVASUBRAMANIAM,
President 
CENTER FOR CONSUMER HUMAN RESOURCE AND ENVIRONMENT PROTECTION - CITIZEN CENTER
PANDALUR, PANDALUR TALUK & POST
THE NILGIRIS 643 233.

No comments:

Post a Comment

உயில் நடைமுறைகள்

 *பதிவு செய்யப்பட்ட உயில் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியுமா?... சட்டம் கூறுவது என்ன*...✍🏻 ⚖️உயில் என்பது ஒரு நபர் தனது மரணத்திற்க...