மின்சார சிக்கனம் விழிப்புணர்வு நிகழ்ச்சி




கூடலூர் அரசு மேல் நிலை பள்ளியில்  மின்சார சிக்கனம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச் சூழல் பாதுகாப்பு மையம், மின்சார வாரியம் கூடலூர், பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்றம் ஆகியன இணைந்து நடத்திய மின்சார சிக்கனம் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம் தலைமை    தாங்கினார்.


கூடலூர் சமுக பாதுகாப்பு திட்ட தனி வட்டாச்சியர் மு. முத்து நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசும்போது  நாம் வீணடிக்கும் ஒவ்வெரு பொருளும் மற்றவர்களுக்கு பயன் அளிப்பதை தடுக்கின்றோம் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.  நாம் மின்சாரம் சிக்கனபடுத்துவதால் தொழிற் துறைகள் மின்சாரத்தினை பயன் படுத்தி ஒரு பொருளை உற்பத்தி செய்ய முடியும் இதனால் நாட்டின் வளர்ச்சி உயரும்.  தேவையற்ற செலவினகளை தவிர்ப்பது நமக்கும் நாட்டுக்கும் பெரிய பயனை தரும் என்றார்.

உதவி மண் வள பாதுகாப்பு அலுவலர் எம். சுந்தர லிங்கம் பேசும்போது இன்று மின்சாரம் மிக பெரிய அத்தியாவசிய தேவையாக மாறி விட்டது மின்சாரம் இன்றி எதுவும் அசையாது என்ற நிலைக்கு தள்ள பட்டுள்ளோம். மின்சார தேவை அதிகமாக உள்ளது நாம் தேவையற்று பயன் படுத்தும் ஆடம்பர தேவைக்கு பயன் படுத்தும் மின்சாரங்களை சிக்கனபடுத்துவது அவசியம் என்றார்.





மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் பொ. செம்புலிங்கம் மின்சாரம் காற்று, நீர் அனல், அணு, சூரிய சக்தி ஆகியவற்றில் இருந்து தயாரிக்க படுகின்றது நாம் மின்சாரத்தினை சிக்கனமாக பயன்படுத்த பல வழிகள் உண்டு.  குண்டு பல்புகள் அதிக மின் செலவை தரும் அதற்க்கு பதில் சி எப் எல் பல்புகள், எல் ஈ டீ பல்புகள் பயன் படுத்துவதால் 70 சதவீத மின்செல்வை குறைக்க முடியும். மின் விசிறி, பல்புகள் மற்றும் நாம் பயன் படுத்தும் மின் சாதனங்களை அடிக்கடி சுத்த படுத்தி பயன் படுத்தினால் தேவையற்ற மின் செலவினை தவிர்க்கலாம்.  மின்சாரத்தினை பயன் படுத்திய பின் சுவிட்ச்களை ஆப் செய்வது, தரமான மின்சாதனங்கள் வாங்கி பயன் படுத்துவது போன்றவை மின் சிக்கன வழிகள் ஆகும்.  மின் கட்டணம் 100 யூனிட் வரை யூனிடிற்கு ஒரு ரூபாயும் அதற்க்கு மேல் யூனிட்டிற்கு 1.50பைசாவும் வசூலிக்க படுகிறது மின்சாரத்தினை சிக்கன படுத்துவதன் மூலம் மின் செலவினை குறைக்கலாம் என்றார்.

மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் எ . அப்துல் மஜீத் பேசும்போது ஆசியாவிலேயே நீர் மூலம் அதிகம்  மின்சாரம் தயாரிக்கும் இடம்  நீலகிரி ஆகும் இங்கு மின்சாரம் தயாரிக்க பயன் படுத்தும் நீர் பல இடங்களில் மின்சாரம் தயாரிக்க பயன் படுத்த படுகிறது.  மின் விபத்துகள் மூலம் கடந்த மாதத்தில் மட்டும் தமிழகத்தில் 50க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.  மின் கம்பிகள் அறுந்து கிடந்தாலோ சுவிட்ச் உடைந்து இருந்தாலோ மின் வாரியத்திற்கு  தகவல் தெரிவிக்க வேண்டும்   மின்சார தூண்கள் மற்றும் ஸ்டே கம்பிகளில் ஆடு மாடுகளை கட்டுவது, குழந்தைகளை விளையாட விடுவது மின் விபத்திற்கு வழிவகுக்கும் என்றார்.

மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் எஸ். பாலாஜி பேசும்போது
மின்சார கட்டணம் செலுத்த ஆன்லைன் வசதிகள் ஏற்படுத்த பட்டுள்ளது அஞ்சலகம் வங்கிகள் இணையதள மையங்கள் மூலமும் கட்டணம் செலுத்தலாம்.  மின் நுகர்வோர்கள் தங்கள் செல் போன் எண்களை மின் வாரியத்தில் பதிவு செய்து கொண்டால் மின் கட்டணம் குறித்த தகவல்கள் குறுஞ்செய்தி மூலம் தகவல் தெரிவிக்க படும்.  முன் வைப்பு தொகையாகவும் மின் கட்டணம் செலுத்தலாம்.  என்றார்.  மாணவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்க பட்டது.
நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.  

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் ராபர்ட், ஆசிரியர் காந்திமதி மற்றும் நுகர்வோர் மைய நிர்வாகிகள் செய்திருந்தனர்.

முன்னதாக நுகர்வோர் மைய செயலாளர் பொன் கணேசன் வரவேற்றார் முடிவில் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் ஆசிரியை R சீனா நன்றி கூறினார்.  







No comments:

Post a Comment

உயில் நடைமுறைகள்

 *பதிவு செய்யப்பட்ட உயில் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியுமா?... சட்டம் கூறுவது என்ன*...✍🏻 ⚖️உயில் என்பது ஒரு நபர் தனது மரணத்திற்க...