உதகமண்டலம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பொது மேலாளருக்கு கோரிக்கை



உதகமண்டலம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பொது மேலாளருக்கு கோரிக்கை    



கீழ்கண்ட கோரிக்கைகளை நிறைவு செய்து தர அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்

  1. பேருந்துகளில் பாட்டு அதிக சப்தத்துடன் ஒலிக்கபடுவதால் பயணிகள் பாதிப்பு  ஓட்டுனர் நடத்துனர்களிடம் உரிய அறிவுரை வழங்க வேண்டும்.

  1. கூடலூர் தேவர்சோலை நெலாக்கோட்டை பொன்னானி வழியாக காலையில் ஒரு பேருந்து இயக்க வேண்டும். அல்லது கூடலூர் பொன்னானி வழித்தடத்தில் தற்போது 3 மணி நேரத்திற்கு ஒரு பேருந்து இயக்க படுகின்றது இதற்கிடையில் இயக்கும் விதமாக ஒரு பேருந்து இயக்க பட வேண்டும்.  இப்பேருந்து காலை 6.00 மணிக்கு பொன்னானியில் புறப்படும் வகையில் உப்பட்டி பந்தலூர் வழியாக இயக்க பட வேண்டும் பொன்னானியில் தங்கும் அறை  வசதி ஏற்படுத்த பட்டுள்ளது.

  1. உப்பட்டி கூடலூர் ஈரோடு வழித்தடத்தில் மாலை 4 மணி அளவில் உப்பட்டியில் இருந்து புறப்படும் வகையில் ஒரு புதிய பேருந்து இயக்க வேண்டும்.

  1. பந்தலூர் பகுதியில் பேருந்து இயக்கத்தினை முறை படுத்த நேர காப்பாளர் வேண்டும் என்ற கோரிக்கை ஏற்று நேர காப்பாளர் நியமித்தமைக்கு நன்றி. அதுபோல பந்தலூரில் அம்மா குடிநீர் விற்பனை நிலையம் திறக்க வேண்டும்.

  1. பல பழைய பேருந்துகள் இயக்க படுகின்றன இவற்றை மாற்றி புதிய பேருந்துகள் இயக்க வேண்டும்

  1. குன்னூர் கைகட்டி பகுதிக்கு மாலை நேரத்தில் உரிய நேரத்தில் பேருந்துகள் இயக்க படுவதில்லை. பொது மக்கள் பதிப்பு கிளை மேலாளர்  கண்காணிக்க வேண்டும் .

  1. விரைவு பேருந்து சாதாரண பேருந்து தனி அடையாளம் தெரியாமல் மக்கள் குழப்பம் அடைகின்றனர்.  அடையாள படுத்த வேண்டும்.

  1. கிராம புறங்களுக்கு விரைவு பேருந்து இயக்க படுவது கிராம மக்களுக்கு பதிப்பை ஏற்படுத்துகிறது.  இவற்றை சாதாரண கட்டணத்தில் இயக்க வேண்டும்.

  1. ஊட்டி - கூடலூர் ஆகிய இடங்களில்  போக்குவரத்து கழக கழிப்பிடங்களில் அதிக கட்டணம் ஆனால் சுத்தம் இல்லை பராமரிப்பு இல்லை நடவடிக்கை தேவை

  1. போக்குவரத்து கழகத்திற்கு அனுப்பும் புகார்களுக்கு பதில் கிடைப்பதில்லை விரைவான நடவடிக்கை தேவை

  1. கூடலூர் போக்குவரத்து கழகம் மூலம் இயக்க படும் பல பேருந்துகள் முறையான நேரத்திற்கு இயக்க படுவதில்லை.  சேரம்பாடி வழித்தடத்தில் அடிக்கடி இரு பேருந்துகள் அடுத்தடுத்து செல்லும் நிலை உள்ளது.  அது போல மாலை நேரத்தில் உப்பட்டி பாட்டவயல் பேருந்துகள் அடுத்தடுத்து இயக்கம் நிலை உள்ளது இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  1. கூடலூர் -  கீழ் நாடுகானி  - கூடலூர் - தொரப்பள்ளி என இயக்கபட்ட பேருந்து காலையில் கீழ் நாடுகானி  8.15 மணிக்கு எடுக்க பட்டது இதனால் பள்ளி மாணவர்கள் வேலைக்கு செல்வோர் என பலரும் பயன் பெற்றனர்.  இப்பேருந்து தற்போது நிறுத்த பட்டுள்ளது.  மீண்டும் இப்பேருந்து இயக்க பட வேண்டும்.

  1. ஒரு பேருந்து பழுதானால் அதற்க்கு மாற்றுப் பேருந்து மூலம் இயக்க படவேண்டும்.  மாற்று பேருந்து  இயக்க படாமல் பழுதான பேருந்து சரி செய்தபின் இயக்க படுவதால்  தற்போது பல நடைகள் தாமதமாக இயக்க படுகிறது இதனால் மக்கள் பதிப்பு அடைக்கின்றனர்   நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  1. உதகை கீழ்குந்தா வழித்தடத்தில் வேலை நாட்களில் இயக்க படும் பேருந்து ஒரே ஓட்டுனர் மூலம் இயக்கப் படுவதால் ஓட்டுனர் விடுப்பு எடுக்கும் பொது இப்பேருந்து இயக்க படுவதில்லை இதனால் இப்பேருந்துக்கு காத்திருக்கும் பயணிகள் பெருமளவு பாதிக்கின்றனர்.  மீண்டும் இப்பேருந்து கால அட்டவணை படி இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  1. ஊட்டி கூடலூர் வழித்தடத்தில் மதியம் 12 மணி முதல் 1 மணி வரை பேருந்து இயக்கம் இல்லாததினால் பொது மக்கள் பாதிப்பு  நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இப்படிக்கு

சு சிவசுப்பிரமணியம் தலைவர் பொன். கணேஷன் செயலாளர்

No comments:

Post a Comment

உயில் நடைமுறைகள்

 *பதிவு செய்யப்பட்ட உயில் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியுமா?... சட்டம் கூறுவது என்ன*...✍🏻 ⚖️உயில் என்பது ஒரு நபர் தனது மரணத்திற்க...