மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு குழு கூட்டம்

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு குழு தலைவரும் மாவட்ட ஆட்சியருமான சங்கர் தலைமை தங்கினார்.  மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பதுகாப்பு அலுவலர் நல்லசாமி முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம்
பேசும்போது   பல துறைகளில் பல முறை வலியுறுத்தியும் இது வரை காலாண்டு நுகர்வோர்  கூட்டம் நடத்த படவில்லை இது மிகவும் வருந்ததக்கது  இவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நீலகிரி மாவட்டத்திற்கு கூடுதல் மண்ணெண்ணெய் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.    வருவாய் துறை சான்றுகள் பெற விண்ணப்பங்கள் ஜெராக்ஸ் கடைகளில் வாங்க சொல்வதோடு விண்ணப்பத்தோடு பரிந்துரை கடிதங்கள் உள்ளிட்டவை  இணைக்க வேண்டும் எனவும் கட்டாயமாக கோர்ட் பீ ஸ்டாம்பு ஓட்ட வேண்டும் என கூறபடுகிறது. இது குறித்து விளக்கம் வேண்டும்.   தரமற்ற மின் சாதன  பொருட்கள் விற்பனை குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.   உதகை உணவு விலை ஏற்றத்தினை கட்டுபடுத்த வேண்டும். மக்கள் பயன் பெரும் விதமாக அம்மா உணவகம் உதகையில் அமைக்க வேண்டும்.
சேரம்பாடி உயர் நிலை பள்ளிக்கான இடம் குறித்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பந்தலூர் அரசு மேல் நிலை பள்ளியில் தடுப்பு சுவர் இல்லாததினால் பாதிப்பு  ஏற்படுகின்றது விரைவில் தடுப்பு சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  பல நியாய விலை கடைகளில் இன்னும் பழைய முழுமையான தகவல் இல்லாத கடுகு மற்றும் வெந்தயம் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்ய படுகின்றது  பல முறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.  அனைத்து கடைகளிலும் காலவதியான தகவல் இல்லாத பொருட்களை திரும்ப பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.  

கூடலூர் தேவர்சோலை நெலாக்கோட்டை பொன்னானி வழியாக காலையில் ஒரு பேருந்து இயக்க வேண்டும்.  உப்பட்டி கூடலூர் ஈரோடு வழித் தடத்தில் புதிய பேருந்து இயக்க வேண்டும். பந்தலூர் பகுதியில் பேருந்து இயக்கத்தினை முறை படுத்த நேர காப்பாளர் வேண்டும் அம்மா குடிநீர் விற்பனை நிலையம் திறக்க வேண்டும்.

பந்தலூர் கூடலூர் ஊட்டி  அரசு மருத்துவ மனைகளில் தினசரி ஸ்கேன் எடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது  ஸ்கேன் எடுக்கும் நாளை  தனியாக நிர்ணயித்து அந்நாளில்  முறையாக ஸ்கேன் எடுக்க வேண்டும் நோயாளிகள் அலைகழிக்க படுவது தவிர்க்க வேண்டும்.  பந்தலூர் அரசு மருத்துவ மனையில் முழு நேர உள்நோயாளிகள் அனுமதிக்க வேண்டும். அவசர சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.  
எலியாஸ் கடை அருகே, தேவாலா நீர்மட்டம் பகுதி மற்றும் உப்பட்டி புஞ்சவயல் பகுதியில் கொட்டப்படும் கோழி கழிவுகள் தூர் நாற்றம் வீசுகின்றது நடவடிக்கை எடுக்க வேண்டும்.  முக்கிய இடங்களில் இலவச சிறுநீர் கழிப்பிடம் அமைக்க வேண்டும்.   பேருந்து நிலையங்கள் அருகில் பயணிகள் நலன் கருதி சுகாதாரமான குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும்.  ஏ டி சி பகுதியில் உள்ள கழிவுகள் அப்புறபடுத்த வேண்டும் தொடர்ந்து சுத்தபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குந்தா  தேவர் சோலை பகுதியில் புதிய டவர் அமைக்க வேண்டும். பல பகுதிகளில்  BSNL டவர் சிக்னல் கிடைப்பதில் சிரம்மம் உள்ளது நடவடிக்கை எடுக்க வேண்டும். என்பன உள்ளிட்ட 45 கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.

மாவட்ட ஆட்சியரும் அரசு மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு குழு தலைவருமான பி சங்கர் பேசும்போது   நுகர்வோர் நலன் கருதி செயல் படாத துறைகள் நிறுவனங்கள் நீண்ட நாட்கள் செயல் பட முடியாது ஒரு கட்டத்தில் நுகர்வோர்களை நாடி செல்லும் நிலைக்கு தள்ளப்படும்.  அனைத்து துறைகளும் விரைவில் கலாண்டு நுகர்வோர் கூட்டங்கள் நடத்தி நுகர்வோர் குறைகளை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும் வருவாய் துறை சான்றுகளுக்கு எவ்வளவு கோர்ட் பீ ஸ்டாம்ப் ஒட்ட வேண்டும் என்ற தகவலை அலுவலகங்களில் ஒட்டி வைக்க வேண்டும்.  பொது மக்களை அலைய வைக்க கூடாது என்ற நோக்கில் தமிழக அரசு அம்மா திட்டத்தினை நடத்தி வருகின்றது இம் முகாம்கள் மூலம் மாவட்டத்தில் சுமார் 40 ஆயிரம் பேருக்கு   வருவாய் துறை சான்றுகள் உடனுகுடன் வழங்க பட்டுள்ளது.  தரமற்ற பொருட்கள் விற்பனை குறித்து ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்க படும்.  பந்தலூர் அரசு மேல் நிலை பள்ளிக்கு தடுப்பு சுவர் கட்ட ஆய்வு மேற்கொள்ள பட்டு நடவடிக்கை எடுக்க படும்.  கூடுதல் பேருந்துகள் இயக்க உரிய ஆய்வுகள் மேற்கொண்டு தக்க நடவடிக்கை எடுக்கவும் விரைவு பேருந்துகள் சாதாரண பேருந்துகள் குறித்தும் தகவல்கள் போக்குவரத்து கழகம் சமர்பிக்க வேண்டும்.  சுகாதார நடவடிக்கைகளுக்கு உள்ளாட்சி மன்றங்கள் முக்கியதுவம் அளிக்க வேண்டும் தற்போது உதகையில் நம்ம கழிப்பிடம் திட்டம் செயல் படுத்த படள்ளது.  பொது மக்கள் பயன் படுத்துவதோடு சுத்தமாக வைக்க வேண்டும். அரசு மருத்துவ மனைகளில் ஸ்கேன் எடுக்கும் நாளை குறித்து வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.  மக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் பல ஏமாற்றங்கள் தடுக்க நுகர்வோர் அமைப்புகள் விழிப்புணர்வு ஏறபடுத்த வேண்டும். என்றார்.
கூட்டத்தில் வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கட் ராமன், உதகை நகராட்சி ஆணையாளர் சிவகுமார்,   போக்குவரத்து கழக மேலாளர் கணேசன் மற்றும் வட்ட வழங்கள் அலுவலர்கள் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



No comments:

Post a Comment

உயில் நடைமுறைகள்

 *பதிவு செய்யப்பட்ட உயில் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியுமா?... சட்டம் கூறுவது என்ன*...✍🏻 ⚖️உயில் என்பது ஒரு நபர் தனது மரணத்திற்க...