மண்டல துணை வட்டாட்சியர்களின் கடமைகளும், பொறுப்புகளும்

மண்டல துணை வட்டாட்சியர்களின் கடமைகளும், பொறுப்புகளும்
1. வருவாய் ஆய்வாளர்கள் நில அளவையர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராமப் பணியாளர்களுடைய பணிகள் மற்றும் பணி அமைப்பினை மேற்பார்வையிடுதல்.
2. வருவாய் வரி வசூல், கடன்கள் வசூல் மற்றும் இதர துறைகளுக்கும் வசூலித்துத்தர தக்க இனங்கள் ஆகியவற்றின் வசூல் பணிகளை ஆய்வு செய்தல்.
3. கிராமக் கணக்குகளை தணிக்கையிடுதல்.
4. “ஏ” மற்றும் “பி” மெமோ இனங்களை தணிக்கையிட்டு வெளியேற்று நடவடிக்கைக்கான ஆணைகளை பிறப்பித்தல்.
5. புறம்போக்கு இடங்களிலுள்ள மரங்களை தணிக்கை செய்தல் மற்றும் அவற்றில் மகசூலை ஏலம்விட நடவடிக்கை எடுத்தல்.
6. முதியோர் உதவித்தொகை மற்றும் பிற நலத்திட்டங்களின் கீழ் பயன்பெறும் பயனாறிகளின் விவரம் சரிபார்த்தல்.
7. பட்டா பாஸ் புத்தகம் கணக்கெடுப்பு மற்றும் பதிவுகளை சரிபார்த்தல்.
8. பாசன ஆதாரங்களை தணிக்கை செய்தல்
9. மனுநீதி நாள் முகாம்களில் கலந்து கொண்டு பொதுமக்களின் குறைகளுக்கு விரைவான தீர்வு காண நடவடிக்கை எடுத்தல்.
10. ஆறுகள் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களில் சட்ட விரோதமாக மணல், கல்போன்றவை தோண்டி எடுக்கப்படுகின்றனவா என்பதை கண்காணித்து நடவடிக்கை எடுத்தல்.
11. வரி வசூல்காலங்களில் அனைத்து வசூல் கணக்குகளையும் தணிக்கை செய்தல்.
12. வருவாய் தீர்வாயப் பணி தொடர்பாக கிராம நிர்வாக அலுவலரால் தயாரிக்கப்படும் கணக்குகளை சரிபார்த்து அங்கீகரித்தல்.
13 பிறப்பு, இறப்பு மற்றும் திருமணப் பதிவுகளை தணிக்கை செய்தல்.
14. நிபந்தனையின் பேரில் வழங்கப்படும் நில ஒப்படை, நிலக்குத்தகை நிலமாற்றம் ஆகிய இனங்களை சரிபார்த்தல் மற்றும் நிபந்தனை மீறல்களை கண்டுபிடித்தல்.
15. குத்தகை உரிமை இனங்களை தணிக்கை செய்தல்.
16. நில பராதீன இனங்களை தணிக்கை செய்து நிபந்தனைகள் மீறப்பட்டனவர் என்பதை சரிபார்த்தல்.
17. வனக் குற்றங்களை கண்டறிந்து நடவடிக்கை எடுத்தல்.
18. பயிர்கள் நிலையை மேல் பயிராய்வு செய்தல்.
19. தீர்வை ஜாஸ்தி, பசலி ஜாஸ்தி, வரி தள்ளுபடி இனங்கள் மரப்பட்டாக்கள் மற்றும் அரசு தோப்புக்கள் ஆகியவற்றை தணிக்கை செய்தல்.
20. வருமானச் சான்று மற்றும் இருப்பிடச் சான்று வழங்குதல்.
21. நகல்கள் கேட்டுவரும் மனுக்கள் மீது ஆணை பிறப்பித்தல்.
22. சாதிச் சான்று வழங்குதல் (தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்கள் தவிர).
23. நில உடமை மேம்பாட்டுத் திட்டத்தின்படி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் ஏற்பட்ட தவறுகளை திருத்தி ஆணைகள் வெளியிட ஆவன செய்தல்.
24. பதிவுகள் மற்றும் பதிவு மாற்றங்கள் குறித்த ஆணைகள் பிறப்பித்தல்.
25. கால்நடைப் பட்டிகளை பார்வையிடல், மற்றும் அது தொடர்பாக கணக்குகளை சரிபார்த்தல், கிராமச் சாவடிகளை பார்வையிடல் மற்றும் அவைகளின் நிலை குறித்து அறிக்கை அனுப்புதல்.
26. மழைமானிகள் தணிக்கையிடுதல்.
27. கிராமக் கல் டெப்போக்கள் மற்றும் நில அளவை கற்களை தணிக்கை செய்தல்.
28. அரசு புறம்போக்கு நிலங்களை தணிக்கையிட்டு ஆட்சேபனையுள்ள ஆக்கிரமணங்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்தல்.
29. வருவாய் ஆய்வாளர்களின் தன் பதிவேடுகளைத் தணிக்கை செய்தல்.
30. வருவாய் ஆய்வாளரின் நாட்குறிப்புகளை ஆய்வு செய்து வட்டாட்சியருக்கு அனுப்புதல்.

வருவாய் கோட்டாட்சியர்களின் கடமைகளும், பொறுப்புகளும்

வருவாய் கோட்டாட்சியர்களின் கடமைகளும், பொறுப்புகளும்
1. வட்டாட்சியர்கள், துணை வட்டாட்சியர்கள், வட்ட அலுவலகப் பணியாளர்கள் மற்றும் சிறப்புத் திட்டபணியாளர்கள் ஆகியோரது பல்வேறு பணிகளை மேற்பார்வை செய்தல்.
2. வட்ட அலுவலகங்களை தணிக்கை செய்தல்.
3. கோட்டத்திலுள்ள களப்பணியாளர்களது நாட்குறிப்புகளை ஆய்வு செய்தல்.
4. வட்ட அலுவலகங்களில் கடன் பிரிவுகளை அரையாண்டுக்கு ஒருமுறை தணிக்கையிடல்.
5. முதல் வகுப்பு நிருவாக நீதிபதியாக செயல்பட்டு கோட்டத்தில், சட்டம் ஒழுங்கினை நிருவகித்தல்.
6. குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் 107 முதல் 110 வரையுள்ள பிரிவுகளின்படி விசாரணை நடத்தி ஆணை பிறப்பித்தல்.
7. காவல் நிலை ஆணை எண் பிரிவு 145-ன்படி விசாரணை செய்தல்.
8. குற்றவியல் நடைமுறைச் சட்டம், பிரிவு 142 மற்றும் 145-ன்படி விசாரணை செய்து ஆணைகள் பிறப்பித்தல்.
9. கிராம நிருவாக அலுவலர்களுக்கு நியமனம், மாறுதல் மற்றும் தண்டனை வழங்குதல்.
கிராம உதவியாளர்கள் நியமனம் மற்றும் தண்டனை தொடர்பான வட்டாட்சியரின் ஆணையின் மீதான மேல் முறையீட்டு மனுக்களில் விசாரணை செய்தல்.
10. நுலகவரி, அரசுக் கடன்கள், நில அளவைக் கட்டணங்கள், பிற அரசுத் துறைகளுக்கு சேரவேண்டிய பாக்கிகள், வேளாண் வருமான வரி, நகர்ப்புற நிலவரி, நீதிமன்ற வழக்குக் கட்டணம், வறியவர் வழக்கு கட்டணம் உள்ளிட்ட அரசுக்குச் சேரவேண்டிய பாக்கிகளை வசூலித்திட வசூல் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தி வசூல் பணியைத்துரிதப்படுத்துதல், வருவாய் வசூல் சட்டத்தின் மூலம் அரசுக்கு சேர வேண்டிய பாக்கியை வசூலித்தல்.
11. நில ஒப்படை மற்றும் பராதீனம் ஆகிய இனங்களைத் தணிக்கை செய்தல்.
12. ஆக்கிரமிப்புகள், ஆக்கிரமிப்புகள் தொடர்பாக மேற்கொள்ளப்படும் மேல்முறையீடுகள் ஆகியவைகளில் நடவடிக்கை மேற்கொண்டு பொது இடங்களை ஆக்கிரமிப்பு தாரர்களிடமிருந்து மீட்பதற்கான நடவடிக்கை எடுத்தல்.
13. நிலமாற்ற முன்மொழிவுகளின் மீது தணிக்கை செய்தல்.
14. ஆதீன ஒழிப்புச் சட்டத்திற்கு அப்பாற்பட்ட இனங்களில் பட்டா வழங்க நடவடிக்கை எடுத்தல்.
15. 1960-ம் ஆண்டு நிலப்பயன்பாட்டு ஆணையினை செயல்படுத்துதல்.
16. நிலச் சீர்திருத்த சட்டங்கள் மற்றும் குத்தகைச் சட்டங்கள் ஆகியவற்றில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைச் செயல்படுத்துதல்.
17. மேம்பாட்டு வரி விதிப்பின் மீது வரும் மேல்முறையீடுகளை முடிவு செய்தல்.
18. சிறப்பு சிறுபாசனத் திட்ட பணிகளை பார்வையிடுவதுடன் தண்ணீர் தீர்வை எவ்வளவு விதிக்க வேண்டும் என்பதை நிர்ணயித்திடுதல்.
19. ரூ.25000-க்கும் அதிகமாக இழப்பீடு தர வேண்டிய நில எடுப்பு அலுவலராக பணியாற்றல்.
20. வெள்ளம், வறட்சி போன்ற இயற்கை இடர்பாடுகள் ஏற்படும்போது நிலவரி தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்று வட்டாட்சியரால் பரிந்துரைக்கப்படும் பட்சத்தில் தொடர்புடைய இடங்களை பார்வையிட்டு நிலவரி தள்ளுபடி செய்திட நடவடிக்கை எடுத்தல்.
21. இந்திய முத்திரைச் சட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைச் செயல்படுத்துதல்.
22. கிராமக் கணக்குகளைத் தணிக்கை செய்தல் மற்றும் பயிர் மேலாய்வு செய்தல்.
23. தமிழ்நாடு இனம் (நியாயவாரம்) சட்டம் 1963 -ன்படி மேல் முறையீடுகளை விசாரித்தல்.
24. குறைந்தபட்ச கூலி சட்டத்தின் கீழ் வரும் முறையீடுகளை பரிசீலித்தல்.குறைந்தபட்ச கூலி சட்டத்தின் கீழ் வரும் முறையீடுகளை பரிசீலித்தல்.
25. முழைமானிகள், சர்வே கற்கள், கல் டெப்போக்கள் ஆகியவற்றை தணிக்கை செய்தல்.
26. கிராமக் கணக்குகளின் ஆண்டு தணிக்கை (வருவாய்த் தீர்வாயம்) முடித்து சரியான கேட்பினை முடிவு செய்தல்.
27. தமிழ்நாடு விவசாயகுத்தகைச் சட்டம் 1969-ன்படி மேல் முறையீடுகளை விசாரித்தல்.
28. மரப்பட்டா- வழங்குதல் தொடர்பான மேல் முறையீடுகளை விசாரித்தல்.
29. அரசு நிலங்கள் குத்தகை இனங்களைப் பார்வையிடுதல்.
30. முறையான தண்ணீர் தீர்வை நிர்ணயம் குறித்து ஆய்வு செய்தல். 31. முதியோர் உதவித் தொகை மற்றும் இதர உதவித் தொகை வழங்கும் பணியைக் கண்காணித்தல், வட்டஅலுவலக முதியோர் உதவித் தொகை பிரிவினை காலாண்டு தோறும் தணிக்கை செய்தல்.
32. பர்மா மற்றும் சிலோன் அகதிகள் நல்வாழ்வு திட்டங்களை செயல்படுத்துதல்.
33. வெள்ளம், தீ விபத்து, புயல் போன்ற இயற்கை இடர்பாடுகளின் போது காப்பு நடவடிக்கைகள் மற்றும் நிவாரணப் பணிகளை மேற்பார்வையிடல்.
34. ஆதிதிராவிடர் குடியிருப்புகளைப் பார்வையிடுதல் மற்றும் ஆதிதிராவிடர் நலத்திட்டங்களைச் செயல்படுத்துதல்.
35. பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான நலத்திட்டங்களைச் செயல்படுத்துதல்.
36. விபத்து மற்றும் சாலை விபத்து நிவாரண நிதி வழங்குதல்.
37. காப்புறுதித் திட்டங்களை ஆய்வு செய்தல்.
38. மனுநீதி திட்ட முகாம் மற்றும் மக்கள் குறை தீர்க்கும் நாள் நடத்திடல்.
39. நியாயவிலைக் கடைகள், அரிசி ஆலைகள் தணிக்கை மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் தொடர்பாக ஆய்வு செய்தல்.
40. கொள்முதல் மையங்கள் மற்றும் கிடங்குகள் தணிக்கை அரசு உணவு தானியக் கிடங்குகள் ஆய்வு மற்றும் இருப்புகள் தணிக்கை.
41. (சில பகுதிகளில்) குடியிருப்பு கட்டுப்பாடு அலுவலராக செயல்படுதல்.
42. 1960ம் ஆண்டு தமிழ்நாடு கட்டிடங்கள் (குத்தகை மற்றும் வாடகை ஒழுங்கு) சட்டத்தினை செயல்படுத்தல்.
43. நிரந்தர மற்றும் தற்காலிக திரை அரங்குகளைத் தணிக்கை செய்தல்.
44. பிறப்பு, இறப்பு மற்றும் திருமணப் பதிவு பதிவேடுகளைத் தணிக்கை செய்தல்.
45. வெடி மருந்துச் சட்டம், படைக்கலச் சட்டம், பெட்ரோலியம் சட்டம் ஆகியவை தொடர்பான பணிகளைச் செய்தல்.
46. அரசு அலுவலர்கள் பிறப்பு தேதி குறித்து விசாரணை செய்தல். 47. எரிசாராயம் மற்றும் கரும்புப்பாகு (மொலாசஸ்) உரிய கணக்குகள் தணிக்கையிடல்.
48. அடகுக் கடைகள் தணிக்கை மற்றும் அடகு கடைக்காரா சட்டம் அமுல் செய்தல்.
49. முக்கியப் பிரமுகர்கள் வருகையைக் கவனித்தல்.
50. வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்தல் மற்றும் தேர்தல் தொடர்பான பணிகளைச் செய்தல்.
51. ஆறிவொளி இயக்கம் முதலிய அரசுத்திட்டங்களைச் செயல்படுத்த ஒத்துழைப்பு நல்குதல்.
52 கிராமச் சாவடிகள் மற்றும் கால்நடைப்பட்டிகளைத் தணிக்கை செய்தல்.
53. வருவாய் நிலையாணைகளில் கூறப்பட்டுள்ள பிற பணிகளைச் செய்தல்.

வட்டாட்சியர்களின் கடமைகளும், பொறுப்புகளும்

வட்டாட்சியர்களின் கடமைகளும், பொறுப்புகளும்
1. வருவாய் நிர்வாகப் பணிகள்:-
1. வட்டஅளவில் பணியாற்றும் துணை வட்டாட்சியர்கள் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள். உதவியாளர்கள் மற்றும் இதர வருவாய்த்துறை பணியாளர்களின் பணிகளைக் கண்காணித்தல்,
2. பயிர் மேலாய்வு செய்தல், நில அளவைப் பணிகளை ஆய்வு செய்தல்.
3. நில அடமான இனங்களில் நில மதிப்பு ரூ.2000/-க்கு மிகைப்படாத இனங்களில் மூன்று ஏக்கர் புஞ்சை அல்லது 1½ ஏக்கர் நஞ்சை பரப்பளவிற்கு மேற்படாத இனங்களில் ஆணை பிறப்பித்தல்.
4. விலை மதிப்பு அற்ற நிலங்களில் வீட்டு மனை கோரிவரும் மனுக்கள் மீது ஆணை வழங்குதல்.
5. இயற்கை இடர்பாடுகள், தீ விபத்து, வெள்ளம், புயல் ஏற்படும் காலங்களில் பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிட்டு, பாதுகாப்பு நடவடிக்கை எடுத்தல் மற்றும் நிவாரணம் வழங்கத் தக்க நடவடிக்கை எடுத்தல்.
6. நில ஆக்ரமணச் சட்டம் 1905 ன்படி அரசு நிலங்களில் உள்ள ஆக்கிரமணங்களை அகற்ற நடவடிக்கை எடுத்தல்.
7. பி.மெமோ இனங்களில் தீர்வை மற்றும் அபராதம் விதித்து ஆணையிடுதல்.
8. கிராமச் சாவடி, கால்நடைப்பட்டி / கல் இருப்பு/ 2 சி மரங்கள் நிலபராதீனம் இனங்கள் / நில ஒப்படை இனங்கள்/ குத்தகை/ தண்ணீர் தீர்வை இனங்கள்/ ஆக்ரமணம்/ அரசு புறம்போக்கு நிலங்கள்/ தீர்வை விதிக்கப்பட்ட மற்றும் தீர்வை விதிக்கப்படாத நிலங்கள் இவைகளைத் தல ஆய்வு செய்தல்.
9. முதியோர் உதவித்தொகை மற்றும் இதர நலத் திட்ட உதவி வழங்குதல்.
10. நில உரிமை மாற்ற இனங்களில் ஆணை பிறப்பித்தல்.
11. நிலம் கையகப்படுத்தும் இனங்களில், ஆணை பிறப்பித்தல்.
12. நில ஒப்படை / பராதீன இனங்களில் விதிமுறை மீறப்பட்ட இனங்களில் உரிய நடவடிக்கை எடுத்தல்.
13. பாசன ஆதாரங்கள் மற்றும் மழை மானிகளை ஆய்வு செய்தல் பாசனம் குறித்த தகராறு இனங்களைத் தீர்த்து வைத்தல்.
14. வருவாய் நிலை ஆணை பத்தி 11சி-ன் கீழ் பாசன ஆதாரங்களில் இருந்து, விவசாயம் மற்றும் தொழிற்சாலை உபயோகத்திற்கு தண்ணீர் எடுத்தலை முறைபடுத்தல் தொடர்பான பணிகள்.
15. பல்வேறு பாசனச் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை செயல்படுத்தல்.
16. அரசுக்கும், அரசு பொதுத்துறை நிறுவனங்களுக்கும் சேர வேண்டிய தொகைகளை வருவாய் வசூல் சட்டப்படி வசூலித்தல்.
17. நிர்ணயிக்கப்பட்ட கால அளவில் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தி நிலவரி, கடன், ஊராட்சிவ ரி, சர்வே கட்டணம், வேளாண்மை வருமான வரி, நகர்புற நிலவரி, நீதி மன்றக் கட்டணம், வேளாண்மை வருமானவரி, நகர்புற நிலவரி, நீதி மன்றக் கட்டணம், முத்திரைக் கட்டணம், வறியவர் வழக்குக் கட்டணம், மற்றும் பல்வேறு துறைகளிடம் இருந்து வரப் பெற வேண்டிய நிலுவைத் தொகைகள் வசூலைத் துரிதப்படுத்துதல்.
18. கிராம நிர்வாக அலுவலர்கள் பராமரிக்கும், வரிவசூல் கணக்கு மற்றும் இதர கணக்குகளை ஆய்வு செய்தல்.
19. ஆண்டு வருவாய் திர்வாயக் கணக்குகளை ஆய்வு செய்து ஒப்புதல் அளித்தல்.
20. வேளாண்மை நிலங்களுக்கு நியாயமான குத்தகை வாரம் நிர்ணயித்தல்.
21. நத்தம் மனை வரி நிர்ணயித்தல்.
22. அரசு புறம்போக்கு நிலங்கள் வழியாக நீர் கொண்டு செல்ல பாதைக் கட்டணம் நிர்ணயித்தல்.
23. தண்ணீர் தீர்வை இனங்களில் ஆணை பிறப்பித்தல்.
24. குத்தகை உரிமைப் பதிவு ஆணை பிறப்பித்தல்.
25. கிராம உதவியாளர் பணி நியமனம் செய்தல்.
26. கிராம நிர்வாக அலுவலர் மீதான ஒழுங்கு நடவடிக்கை இனங்களில் தண்டனை அளித்தல்.
27. கிராம நிர்வாகப் பணியமைப்பு தொடர்பான பணிகள்.
28. கிராம உதவியாளர் மீதான ஒழுங்கு நடவடிக்கை இனங்களில் ஆணை பிறப்பித்தல்.
29. கிராம நிர்வாக அலுவலர்களின் விடுப்பு மனுக்களின் மீது ஆணை பிறப்பித்தல்.
30. 2சி மரப்பட்டா மனுக்கள் மீது ஆணை பிறப்பித்தல். v 31. புறம்போக்கு நிலங்களில் உள்ள மரங்களை தல ஆய்வு செய்து சட்ட விரோதமாக மரம் வெட்டுவோர் மீது நடவடிக்கை எடுத்தல்.
32. ஆறுகள், மற்றும் அரசு புறம்போக்குகளில் சட்டவிரோதமாக கல் மற்றும் மணல் தோண்டி எடுக்கப்படுவதைக் கண்காணித்து நடவடிக்கை எடுத்தல்.
33. வருவாய் நிலை ஆணைகளில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை செயல்படுத்துதல்.
34. ஆதீன ஒழிப்பு இனாம் ஒழிப்புச் சட்ட காலங்களுக்கு அப்பாற்பட்ட இனங்கள் மீதான மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்தல்.
35. உப்பளம் அமைக்க நிலங்களை குத்தகைக்கு விடுதல் மற்றும் குத்தகை வசூலித்தல்.
36. வட்டக் கணக்கு நடைமுறை நூல்படி பதிவேடுகள் மற்றும் கணக்குகள் பராமரித்தல்.
37. ரயத்துவாரி நிலங்களில் உட்பிரிவு செய்து ஆணையிடுதல்.
38. அரசால் வாங்கப்பட்ட நிலங்களை விதிப்படி தீர்வு செய்தல்.

2. குற்றவியல் நிர்வாகப் பணிகள்:-
1. வட்ட குற்றவியல் நடுவராகப் பணியாற்றுதல்.
2. வட்டத்தில் சட்டம். ஒழுங்கு பராமரித்தல்.
3. அவசர காலத்தில் இருப்புப் பாதையை கண்காணிக்கத் தக்க நடவடிக்கை எடுத்தல்.
4. குற்றவியல் நடைமுறை பிரிவு விதி 144ன் கீழ் ஆணை பிறப்பித்தல்.
5. கொத்தடிமைத் தொழிலாளர் சட்டத்தினை செயல்படுத்துதல்.
6. காவல் துறையினரால் ஒப்படைக்கப்பட்ட உரிமை கோரப்படாத பொருட்கள் மீது நடவடிக்கை எடுத்தல்.
7. காவல் துறை அலுவலர்களின் கோரிக்கையின் பேரில் புதைக்கப்பட்ட பிணங்களை மீண்டும் தோண்டி எடுத்து, மருத்துவ ஆய்வு செய்தல்.

3. பொதுவான பணிகள்:-
1. மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம் நடத்துதல்.
2. பொதுத் தேர்தல் காலத்தில், சட்டமன்ற தொகுதிகளின் உதவி தேர்தல் அலுவலராகப் பணியாற்றுதல், உதவி வாக்காளர் பதிவு அலுவலராகப் பணியாற்றுதல்.
3. சட்டமன்ற / நாடாளுமன்ற தேர்தல் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்தல்.
4. பொது சுகாதாரம், கால்நடை தொத்து வியாதி மற்றும் காலரா முதலிய இதர தொத்து வியாதிகளைத் தடுக்க உடனடி நடவடிக்கை எடுத்தல், பிறப்பு, இறப்புக்களை பதிவு செய்யும் பணியைக் கண்காணித்தல்.

கிராம நிர்வாக அலுவலர்களுடைய கடமைகளும், பொறுப்புகளும்


1. கிராம கணக்குகளை பராமரித்தலும், பயிராய்வு செய்தலும்.
2. நிலவரி, கடன்கள் பஞ்சாயத்து வரிகள், மேம்பாட்டு வரிகள் மற்றும் அரசுக்கு சேர வேண்டிய இதர தொகைகளை வசூல் செய்தல்.
3. சாதிச் சான்று, வருமானச் சான்று, இருப்பிடச் சான்று, சொத்து மதிப்பு சான்று ஆகியவை வழங்கத் தேவையான அறிக்கைகள் அளித்தல்.
4. கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கிகளிலிருந்து கடன்பெற பொதுமக்களுக்கு சிட்டா மற்றும் அடங்கல் நகல்கள் கொடுத்தல்.
5. பிறப்பு, இறப்பு மற்றும் திருமணப் பதிவு பதிவேடுகளைப் பராமரித்தல்.
6. தீ.விபத்து, வெள்ளம், புயல் போன்ற இயற்கை இடர்பாடுகள் ஏற்படும் போது உயர் அலுவலர்களுக்கு உடனடியாக தெரிவித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண ஏற்பாடுகள் செய்தல்.
7. கிராமத்தில் ஏற்படும் கொலை, தற்கொலை, சந்தேக மரணங்கள் ஆகியவற்றை காவல்துறையினருக்கு தெரிவித்தல் மற்றும் காவல்துறையினருக்கு விசாரணையின் போது உதவி செய்தல்.
8. தொற்றுநோய், காலரா, பிளேக் மற்றும் கால்நடை நோய்கள் ஏற்படும போது உடனுக்குடன் உயர் அலுவலர்களுக்கு அறிக்கை அனுப்பி உரிய நடவடிக்கை எடுத்தல்.
9. இருப்புப் பாதைகளைக் கண்காணிக்க ஏற்பாடு செய்தல்.
10. கிராமப் பணியாளர்களுக்கு சம்பளப்பட்டியல்கள் தயாரித்தல்.
11. கால்நடைப் பட்டி கணக்குகள் மற்றும் சாவடிகளைப் பராமரித்தல்.
12. அரசு கட்டிடங்கள், மரங்கள் மற்றும் புறம்போக்குகள் ஆகியவற்றின் உரிமைகளை பாதுகாத்தல்.
13. புதையல் சம்மந்தமான தகவல்களை உயர் அலுவலர்களுக்கு தெரிவித்தல்.
14. முதியோர் உதவித்தொகை மற்றும் பிற நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கு மனுதாரரின் தகுதி குறித்து அறிக்கை தருதல் மற்றும் பயனாளிகள் பதிவேடு பராமரித்தல்.
15. பொது சொத்து பதிவேடு பராமரித்தல்.
16. வளர்ச்சி திட்டங்கள் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட பல்வேறு துறைகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் கேட்கும் புள்ளி விவரங்களை கொடுத்து ஒருங்கிணைப்பு பணி ஆற்றுதல்.
17. பட்டா, பாஸ் புத்தக கணக்கெடுப்பு பணி செய்தல்.
18. வருவாய் தீர்வாய பணி தொடர்பாக அனைத்து கணக்குகளையும் முறையாக தயாரித்தல்.
19. பாசன ஆதாரங்களை அவ்வப்போது தணிக்கை செய்தல்.
20. ஆறுகள் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களில் சட்ட விரோதமாக மணல், கல் போன்றவை தோண்டி எடுக்கப்படுகின்றனவா என்பதை கண்காணித்து நடவடிக்கை எடுத்தல்.
21. மனுநீதி நாள் விழாவில் கலந்து கொண்டு பொது மக்களின் குறைகளுக்கு விரைவான தீர்வுகாண உதவி செய்தல்.
22. பதிவுகள் மற்றும் பதிவு மாற்றங்கள் ஆணைகளை உடனுக்கு உடன் செயல்படுத்துதல்.
23. நிபந்தனையின் பேரில் வழங்கப்படும் நில ஒப்படை, நில குத்தகை, நில மாற்றம் ஆகிய இனங்களை சரிபார்த்தலும் நிபந்தனை மீறல்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்தலும்.
24. குத்தகை உரிமை இனங்களை தணிக்கை செய்து அடங்கலில் பதிவு செய்தல்.
25. நில பராதீன இனங்களை தணிக்கை செய்து நிபந்தனைகள் மீறப்பட்டனவா என்பதை சரிபார்த்து அறிக்கை அனுப்புதல்.
26. பட்டா நிலங்களில் அனுபவதாரர் குறித்து சரிபார்த்து அடங்கலில் பதிவு செய்தல்.
27. வனக் குற்றங்களை கண்டறிந்து அறிக்கை அனுப்பி நடவடிக்கை எடுத்தல்.
28. தீர்வை ஜாஸ்தி, பசலி ஜாஸ்தி, வரி தள்ளுபடி இனங்கள். மரப்பட்டாக்கள் மற்றும் அரசு தோப்புகள் ஆகியவற்றை தணிக்கை செய்து கணக்கெடுத்தல்.
29. கிராம கல் டெப்போ மற்றும் நில அளவை கற்கள் குறித்த கணக்குகள் பராமரித்தல்.
30. மாதாந்திர சாகுபடி கணக்குகளை தயார் செய்து வருவாய் ஆய்வருக்கு உரிய காலத்திற்குள் அனுப்புதல்.
31. மக்கள் தொகை கணக்கெடுப்பு, கால்நடைக் கணக்கெடுப்பு பாசன ஆதாரங்கள் கணக்கெடுப்பு முதலிய பணிகளை செய்தல்.
32. வாக்காளர் கணக்கெடுப்பு மற்றும் தேர்தல்கள் தொடர்பான பணிகள் செய்தல்.
33. அறிவொளி இயக்கம் முதலிய அரசு திட்டங்களை சிறப்புற நடத்த ஒத்துழைப்பு நல்குதல்.

கூடலூர் பிரிவு 17 நில பிரச்சனைக்கு தீர்வுக்கு ஆளுனருக்கு மனு

பெறுனர்

மேன்மைமிகு ஆளுனர் அவர்கள்,
தமிழ்நாடு அரசு  உதகை முகாம்.

பொருள்  : கூடலூர் நிலப்பிரச்சனை  சட்ட மசோதா 2019 திருத்தம்
அனுமதி அளிக்க கூடாது எனவும்,  இப்பகுதியில் குடியிருக்கும்
ஏழை எளிய மக்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க
வேண்டும் எனவும் கேட்டல் சார்பாக.

மேன்மைமிகு ஆளுநர் அய்யா அவர்களுக்கு 
பணிவான வணக்கங்கள்

நீலகிரி மாவட்டம் கூடலூர் பந்தலூர்  பகுதியில் ஜென்ம நிலங்களை அரசு கையகபடுத்தியது.  அதன்பின் சில பகுதிகள் டேன்டீ தோட்டங்களாகவும், வனத்துறைக்கும், வருவாய்துறை மற்றும் உள்ளாட்சிகள், தனியார் எஸ்டேட்டுகள் குத்தகைக்கும் வழங்கப்பட்டது.

மேலும் ஆங்காங்கே சில பகுதிகளில் குடியிருந்தவர்களுக்கு சிறப்பு ஆட்சியர் மூலம் ஆய்வுகள் மேற்கொண்டு பட்டா வழங்கப்பட்டது.  அதனை தொடர்ந்து செட்டில்மென்ட் அலுவலர்கள் மூலம் நோட்டிசு அனுப்பட்டு ஆய்வும் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பிரிவு 17 வகை நிலங்கள் யாருக்கும் சொந்தமில்லாத நிலங்களில் ஆங்காங்கே சிலர் விவசாயம் செய்து வந்தனர்.  அப்போது  இலங்கையில் இருந்து  தாயகம் திரும்பியவர்கள் பலரும் இந்த இடங்களை காசுகொடுத்து வாங்கி விவசாயம் செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர்.

தற்போது இப்பகுதியில்  ஏற்கனவே ஆண்டாண்டு காலமாக வசித்து வந்தவர்களும், தாயகம் திரும்பியவர்களும் பல ஆயிரகணக்கானோர்

மேற்படி பிரிவு 17 வகை நிலத்தில் குடியிருந்து விவசாயம் செய்து பிழைப்பு நடத்தி வரும் நிலையில்  இவர்கள் வாழும் இடங்களை வனமாக மாற்றுவதால் இவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பதோடு  எதிர்காலம் மிகவும் கேள்விகுறியாக உள்ளது.

 இந்த நிலங்கள் மட்டுமே இவர்களுக்கு கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்வாதாரமாக உள்ளது.  இந்த நிலங்களை மட்டுமே நம்பி வாழ்ந்து வருகின்றனர். 

இவர்கள் வாழும் பகுதிகளில் பட்டா இல்லாததினால் சாலை வசதி, மின் இணைப்பு பெற முடியாமை, அடிப்படை வசதியை பெற முடியாமல் அவதிப்படும் நிலையில் வசிக்கின்றனர்.



இந்நிலையில் கூடலூர் பந்தலூர் பகுதயில் உள்ள பிரிவு 17 வகை நிலங்களை வனமாக மாற்ற நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.  முதற்கட்டமாக ஏற்கனவே 19000 ஏக்கர் மக்கள் பயன்படுத்தாத சில பகுதிகளில் வனமாக மாற்றி அறிவித்தனர்.  இந்த பகுதியில் மக்கள் வசிக்காததினால் மக்களுக்கு பாதிப்பு ஏதும் இல்லை.

தற்போது வனமாக அறிவிக்கும் வகையில் தமிழ்நாடு வனச்சட்டத்தில் திருத்தம் செய்து பிரிவு 16 (a)  பட்டியலில் பிரிவு 17 வகை சார்ந்த சுமார 29000 ஏக்கர் நிலத்தை சேர்த்து திருத்தம் மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கு தமிழக அரசு சார்பில் குழு அமைக்கப்பட்டதாக தகவல் கிடைத்தது. ஆனால் இந்த குழு மக்களிடம் விசாரணை ஏதும் மேற்கொள்ளவில்லை.  மக்களிடம் கருத்து கேட்கவில்லை. மக்கள் வசிப்பது குறித்து கணக்கில் எடுத்து கொண்டனரா  என்று தெரியவில்லை.

இதில் ஏழை எளிய மக்கள் வசிக்கும் இடங்களை வனமாக அறிவித்தால் இவர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கும் நிலை ஏற்படும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

எனவே மேற்படி சட்ட திருத்தம் மேற்கொண்டு தங்களின் மேலான அனுமதிக்காக தமிழக அரசு அனுப்பியுள்ளது.  இந்த சட்ட திருத்ததிற்கு அனுமதி அளிப்பதை நிறுத்தி வைத்து உதவுமாறும்

ஏற்கனவே இப்பகுதியில் வசிப்பதற்கு ஆதாரமாக அரசு தரப்பு ஆவணங்களே சாட்சியாக உள்ளன.  வாக்காளர் பட்டியல், ஊராட்சி மற்றும் உள்ளாட்சிகள் வீட்டு கதவு எண்கள், ரேசன்கார்டுகள் மூலம் அரசின் பொருட்கள் வழங்குதல்,  வருவாய் துறை சார்பில் சான்றுகள் வழங்கப் பட்டவை, பள்ளிகளில் படித்த மாணவர்கள், மருத்துவம் பெற்றவர்கள் என பல்வேறு ஆவணங்கள் அடிப்படையில் ஆய்வு மேற்க்கொண்டு

இப்பகுதியில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக வசிக்கும் ஏழை எளிய மக்களின் நிலங்களை அவர்களுக்கு பட்டா வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவிசெய்திட  ஆவண செய்தும்,  வாழ்வதற்கான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க செய்தும்

மீதமுள்ள நிலங்களை வனமாக மாற்றிட நடவடிக்கை எடுக்கவும் பணிவுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

அன்புடன்

தேசிய.இளையோர் தினததை முன்னிட்டு


தேசிய.இளையோர் தினததை முன்னிட்டு கூடலூர் காசிகா IAS இலவச பயிற்சி மையம், கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் ஆகியன சார்பில்  போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளுதல் குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கு கூடலூர் காசிகா IAS இலவச பயிற்சி மையத்தில்  நடைபெற்றது.

காசிகா இலவச பயிற்சி மைய நிறுவனர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார்.
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் காளிமுத்து, பொதுச்செயலர் சிவசுப்பிரமணியம், நிர்வாகி சத்தியநேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக காலந்து கொண்ட  கா. இன்பசேகர் IAS பேசும்போது

இளைஞர்கள் தங்கள் நேரத்தை பயனுள்ள வழிகளில் பயன்படுத்த வேண்டும்.  சமூகத்தில் முக்கிய பங்கு இளைஞர்களுக்கு உண்டு. 
சமூக வலைத்தளங்களில் தாங்கள் தேடுவது அனைத்தும் கிடைக்கும் அதில் நல்லவற்றை பயன்படுத்திக்கொள்ளுதல் எதிர்காலத்திற்க்கு நல்லவழியை காட்டும். 
போட்டி தேர்வுகள் மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் நடத்துகின்றன. 
தமிழில் ஐ ஏ எஸ் தேர்வுகள் எழுத முடியும். நேர்முக தேர்வுவரை தமிழில் எதிர்கொள்ளமுடியும். எனினும் மாற்ற மொழி திறன்களை வளர்த்துக்கொள்வதும் அவசியம். 
 IAS தேர்வுகளை பொறுத்தவரை 7 நிமிடங்களில் கேள்வியை படித்து பதில் அளிக்க வேண்டும்.  ஒரு கேள்விக்கு பதில் அளிக்க தாமதமானால் அடுத்த கேள்விக்கான நேரம் கிடைக்காது. அதற்கேற்ப தயாராவது அவசியம். 6ம் வகுப்பு முதல் உள்ள  பள்ளி பாட புத்தகங்களை ஆழ்ந்து படித்து நினைவில் கொள்ளுதல் அவசியம்.  அவற்றில் இருந்துதான் அதிக கேள்விகள் கேட்கப்படுகின்றன. 
அதுபோல் தினசரி செய்தி தாள்கள் படித்து நாட்டு நடப்புகளை அறிந்து கொள்ளுதல் அவசியம்.
அதில் அரசின் திட்டங்கள், செயல்பாடுகள், நடப்பு நிகழ்வுகளை அறிந்து கொள்ளமுடியும்.  ஒரு புத்தகத்தை மீண்டும் மீண்டும் படிக்க வேண்டும்.
அப்போதுதான் அதில் கேட்கப்படும் எந்தவிதமான கேள்விக்கும் பதில் அளிக்க முடியும். 
எல்லா புத்தகங்களையும் படிப்பதைவிட முக்கியமான புத்தகங்களை ஆழ்ந்து படிக்க வேண்டும். சோர்ந்து விடாமல் தொடர் முயற்சி செய்வதன் மூலம் மட்டுமே வெற்றியை பெறமுடியும். வெற்றி பெரும்வரை முயறசிப்பது அவசியம்.
இப்பகுதியில் போட்டி தேர்வுகள் குறித்து  தற்போது ஏற்பட்டுவரும் விழிப்புணர்வு தொடரவும், இளைஞர்கள், மாணவர்கள் பங்களிப்பு அவசியம் தேவை.  படித்த இளைஞர்கள் அரசு வேலைக்கு வர கடின உழைப்பு இருக்க வேண்டும். 
சாதித்த அனைவரும் தோற்றும் இருக்கிறார்கள். எனவே தோல்வியை கண்டு முயற்சியை கைவிடாமல் வெல்லும்வரை தொடர வேண்டும் என்றார்.  தொடர்ந்து மாணவர்களின் சந்தோகங்களுக்கு விளக்கம் அளித்தார்.  இதில் ஏராளமான இளைஞர்கள், மாணவர்கள் காலந்து கொண்டனர். 

முதியோர் உதவித் தொகைத்திட்டம்


*முதியோர் உதவித் தொகைத்திட்டம்* 
➖➖➖➖➖➖➖➖

-ஆதரவற்ற முதியோர்
-முதியோர் ஓய்வூதிய உதவித் தொகை திட்டம்
-விண்ணப்பிக்கும் முறை
-வயதுச் சான்று
-இருப்பிடச் சான்று
-விண்ணப்பங்கள் ஆய்வு
-உதவித் தொகை

ஆதரவற்ற நிலையில் உணவுக்கு வழியின்றி வாழும் முதியவர்களுக்கு அவர்கள் துயரத்தை நீக்க தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் திட்டம் தமிழ்நாடு அரசு முதியோர் உதவித் தொகை திட்டம்.

 *ஆதரவற்ற முதியோர்* 
கணவன் அல்லது மனைவி போன்ற மிக நெருங்கிய உறவுகள் இல்லாமல் இருப்பவர்கள், மிக நெருங்கிய உறவுகள் அல்லது பிள்ளைகள் இருந்தும் அவர்கள் ஆதரவு கிடைக்காமல் துன்பப்படும் அறுபது வயதுக்கு மேற்பட்ட அனைவரும் ஆதரவற்ற முதியோர் என்று குறிப்பிடப்படுகின்றனர்.

 *முதியோர் ஓய்வூதிய உதவித் தொகை திட்டம்* 
கணவன் அல்லது மனைவி போன்ற மிக நெருங்கிய உறவுகள் இல்லாமல் இருப்பவர்கள், மிக நெருங்கிய உறவுகள் அல்லது பிள்ளைகள் இருந்தும் அவர்கள் ஆதரவு கிடைக்காமல் துன்பப்படும் அறுபது வயதுக்கு மேற்பட்ட அனைவரும் ஆதரவற்ற முதியோர் என்று குறிப்பிடப்படுகின்றனர். அறுபது வயதிற்கு மேற்பட்ட மக்கள் மற்றும் எவாின் ஆதரவுமின்றி வாழும் முதியோர்களுக்கு மாதம் ரூ. 1000- வீதம் வழங்கப்படுகிறது

 *விண்ணப்பிக்கும் முறை* 
ஆதரவற்ற முதியோர் எனக் கருதப்படும் ஆண், பெண் யாரும் தாலுகா அலுவலகங்களில் கிடைக்கும் விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, அதற்குத் தேவையான வயது, இருப்பிடச்சான்றுகளை இணைத்து சம்பந்தப்பட்ட தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பம் அளிக்க வேண்டும்.

 *வயதுச் சான்று* 
தமிழ்நாடு அரசால் அரசு பதிவு பெற்ற மருத்துவர்கள் வயதுச் சான்றிதழ்கள் வழங்கும் தகுதியுடையவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளதால் அவர்களிடம் படிவத்தில் வயதுச் சான்றிதழ் பெறப்பட வேண்டும். ஆனால் தற்போது குடும்ப அட்டை நகல் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை போன்ற இரு ஆவணங்களையும் அடிப்பைடயாக கொண்டு வயது சான்றிதழ் நிரூபணம் தேவைப்படுகிறது. ஏனெனில் வயது சான்றிதழ் பெறுவதில் பல்வேறு முறைகேடுகள் நிகழ்ந்துள்ளதால் வயது நிரம்பாத தகுதியில்லாத பலர் அரசின் இச் சலுகையை பெற வாய்ப்புள்ளதால் இந்த ஏற்பாடு.

 *இருப்பிடச் சான்று* 
தமிழ்நாடு அரசு இருப்பிடச் சான்று மற்றும் பரிந்துரை அளிக்க விண்ணப்பிப்பவர் வசிக்கும் பகுதியைச் சேர்ந்த நகர்மன்ற / மாமன்ற உறுப்பினர்கள், கிராமப் பஞ்சாயத்துத் தலைவர், நகர்மன்றத் தலைவர், மாநகர்மன்றத் தலைவர் (மேயர்), ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர், மாவட்ட பஞ்சாயத்துத் தலைவர், சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர், மத்திய அல்லது மாநில அரசு பதிவு பெற்ற அதிகாரிகள், முதியோர் இல்ல நிர்வாகிகள் போன்றவர்கள் இருப்பிடம் மற்றும் பரிந்துரைக்கான சான்றுகளை அளிக்கலாம். (இக் கருத்தில் சில திருத்தங்களை மேற்கொள்ளவும் இருப்பிடச் சான்று வட்டாட்சியர் அலுவலகத்தில் பெறப்பட்டதாக இருக்க வேண்டும்)

 *விண்ணப்பங்கள் ஆய்வு* 
இந்த விண்ணப்பங்கள் தாசில்தார் அலுவலகத்திலிருந்து கிராம நிர்வாக அலுவலருக்கு அனுப்பப்பட்டு விண்ணப்பத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்கள் உண்மைதானா என்று ஆய்வு செய்யப்படுகிறது. பின்பு அவரின் பரிந்துரை பெறப்படுகிறது.

 *உதவித் தொகை* 
கிராம நிர்வாக அலுவலரிடமிருந்து பெறப்பட்ட ஆய்விற்குப் பின் உள்வட்ட வருவாய் ஆய்வாளரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவாய் அலுவலரின் பரிந்துரையின் பேரில் தாலுகா அலுவலகங்களில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விண்ணப்பித்தவருக்கு மாதம் ரூ1000 உதவித் தொகையாக வழங்க உத்தரவுகளைப் பிறப்பிக்கின்றனர். இந்த உத்தரவிற்குப் பின்பு விண்ணப்பித்தவருக்கு அவர் இறக்கும் வரையில் மாதந்தோறும் உதவித்தொகை தபால் அலுவலகப் பணவிடை (Money Order) வழியாக அளிக்கப்படுகிறது.

ஆதாரம் : தமிழ்நாடு அரசு சமூகநலத்துறை.

தொழில் உரிமம் பெறுவது எப்படி?

➖➖➖➖➖➖➖➖
*தொழில் உரிமம் பெறுவது எப்படி?*
➖➖➖➖➖➖➖➖

அரசின் பல்வேறு துறைகளின்கீழ் அனுமதி வாங்கப்பட்ட தொழில் என்றாலும் மாநகர, நகர எல்லைக்குட்பட்ட பகுதிகள் எனில் இந்த அனுமதியும் வாங்க வேண்டும்.

ஒரு மாநகராட்சி மற்றும் நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிக்குள் தொழில் தொடங்க வேண்டும் என்றால் அந்த மாநகர, நகர அமைப்பின் மூலம் அனுமதி வாங்க வேண்டும் என்கிறது சட்டம். இதுதான் தொழில் உரிமம், அல்லது வணிக உரிமம் என்கிறோம். உள்ளாட்சி அமைப்புகளுக்கு முக்கியத்துவம் தரும் சட்டம் என்றாலும், அப்போதுதான் நகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை உறுதிசெய்ய முடியும். தவிர தொழில்வரி போன்றவையும் வசூலிக்க இது வகை செய்கிறது.

அரசின் பல்வேறு துறைகளின்கீழ் அனுமதி வாங்கப்பட்ட தொழில் என்றாலும் மாநகர, நகர எல்லைக்குட்பட்ட பகுதிகள் எனில் இந்த அனுமதியும் வாங்க வேண்டும்.

 *யாருக்கு தொழில் உரிமம் தேவை?*

ஒரு தொழிலை தொடங்குவதற்கு அரசின் பல்வேறு துறைகளின் கீழ் அனுமதி வாங்கியிருந்தாலும், மாநகர, நகர பகுதியில் தொடங்குபவர்களுக்கு இந்த அனுமதி வேண்டும்.

குறிப்பாக தொழிற்சாலைகள், சேமிப்புக் கிடங்குகள், பதப்படுத்தும் நிறுவனங்கள், தீப்பெட்டி தயாரிப்பு, அச்சகம், வெல்டிங் பட்டறைகள், பெட்ரோல் பங்க் போன்றவை பிற அரசு துறைகள் மூலம் அனுமதிகள் வாங்கியிருந்தாலும் நகராட்சி அனுமதியும் வாங்க வேண்டும்.

தவிர உணவு தயாரிப்பு நிறுவனங்கள், பேக்கரிகள், பால் மற்றும் இறைச்சி விற்பனை யாளர்கள், பள்ளி, கல்லூரி உணவு விடுதிகள், சமையல் ஒப்பந்தக்காரர்கள் திருமண மண்டபம், ஓட்டல், மளிகை கடைகள், தேநீர் கடைகள், குளிர்பான கடைகள், மொத்தம் மற்றும் சில்லறை வியாபார நிறுவனங்களும் இந்த அனுமதி வாங்க வேண்டும்.

அச்சம் மற்றும் அருவருக்கத்தக்க இனங்களில் தொழில் நடத்துபவர்கள் என்றும், உணவு பொருள் தயாரிப்பு மற்றும் சாப்பிடும் நிலை வரை உள்ள அனைத்து உணவு வணிகர்கள் என்றும், மின்சக்தி மற்றும் டீசல் ஜெனரேட்டர்கள் பயன்படுத்தி தொழில் செய்பவர்கள் என்றும் பல வகைகளில் இந்த தொழில்களை வகைப்படுத்துகிறது சட்டம்.

 *உரிமம் பெறும் நடைமுறை*

விண்ணப்பதாரர் தங்களது பெயர் மற்றும் தொழில் விவரம், தொழில் நடத்தப்பட உள்ள இடத்தின் முகவரி போன்ற விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பிக்க வேண்டும்.

ரூ.20க்கான முத்திரைத் தாளில் தொழில் உரிமத்திற்கான திட்டங் களைப் பின்பற்றுவேன் என்பதற்கான உறுதி மொழி பத்திரம் கொடுக்க வேண்டும். இதனடிப்படையில் தொழில் உரிமம் கிடைக்கும். இந்த உரிமத்தை ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்க வேண்டும். குறிப்பிட்ட காலத்துக்குள் உரிமம் புதுப்பிக்கப் படவில்லையென்றால் புது உரிமம் எடுக்க வேண்டும்.

 *ஏன் வாங்க வேண்டும்*

இது போன்ற அனுமதிகளை நகராட்சிகள் மூலம் வாங்க வேண்டும் என்பதற்கு முக்கிய காரணம் மக்கள் நெருக்கம் மிகுந்த இடங்களில் தொழிற்சாலைகள் அமைத்தால் அது இயல்பு வாழ்க்கைக்கு இடையூறாக இருக்கும் என்பதால்தான். என்ன தொழில் எந்த பகுதியில் தொடங்க உள்ளனர் என்பதை அறிந்து அதற்கேற்ப அனுமதி வழங்கப்படும். இதற்கு எழுத்து பூர்வமாக அத்தாட்சிகள் அடிப்படையில் விண்ணப்பிக்க வேண்டும்.

 *நடைமுறை என்ன?*

தொழில் அமைய உள்ள கட்டடத்தின் அங்கீகரிக்கப்பட்ட திட்டம் அல்லது மண்டல செயற்பொறியாளரால் அங்கீகரிக்கப்பட்ட கட்டட சான்றிதழ், அந்த கட்டட உரிமையாளரின் ஆட்சேபணையில்லா சான்றிதழ், நடப்பு ஆண்டு வருமான வரியின் நகல், தொழில் வரியின் நகல், மாவட்ட தீயணைப்பு அதிகாரியின் ஆட்சேபனையில்லா சான்றிதழ், தொழிற்சாலை ஆய்வாளர்களிடமிருந்து பெற்ற சான்றிதழ், அக்கம் பக்கம் உள்ளவர்களின் ஆட்சேபனை இல்லா சான்றிதழ் என சட்டம் நடைமுறைகளை வைத்துள்ளது.

தங்கும் விடுதிகள் மற்றும் உணவகம் என்றால் குடிநீர் வாய்ப்புகள் குறித்த அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இயந்திரங்களை பயன்படுத்தும் தொழிற்சாலைகள் என்றால் பணியிடம், கட்டிடம், அதற்கான இதர அனுமதிகள், எத்தனை பணியாளர்கள் பணிபுரிய உள்ளனர் என்கிற விவரங்கள் கொடுக்க வேண்டும். தவிர குறிப்பிட்ட தொழிற்சாலை தொடங்குவதற்கான திட்ட வரைபடம் போன்றவை இணைக்க வேண்டும்.

அந்த இடத்தின் காற்றோட்ட வசதி, தீ தடுப்பு வசதிகள், அறைகள், கட்டிட உயரம் போன்றவையும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். தொழிற்சாலை ஆய்வாளர், சுகாதார ஆய்வாளர் உள்ளிட்டவர்களின் குறிப்பின்பேரில் விண்ணப்பம் பரிசீலிக்கப்படும்.

இந்த நடைமுறைகள் பின்பற்றப்படும் பட்சத்தில் பொதுமக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. மேலும் சட்டத்துக்குட்பட்ட தொழில்கள் என்கிற அடையாளமும் கிடைக்கிறது.

இந்த தொழில் உரிமம் பெறாமலோ அல்லது புதுப்பிக்கப்படவில்லை என்றாலோ தொழிலை முடக்கி வைக்கவும் அபராதம் விதிக்கவும் சட்டத்தில் இடமுள்ளது.

கிளினிக்குகளை முறைப்படுத்தும் அரசாணை:

*கிளினிக்குகளை முறைப்படுத்தும் அரசாணை: தடைவிதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு*

Published :  30 Jan 2019   21:21 IST

கிளினிக் மற்றும் மருத்துவ ஆலோசனை மையங்களை முறைப்படுத்த அரசு பிறப்பித்த அரசாணைக்கு தடைவிதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

தமிழகத்தில் உள்ள கிளினிக்குகளை முறைப்படுத்த கடந்தாண்டு தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இதில், கிளினிக்குள் 100 சதுர அடியில் இருக்க வேண்டும், நோயாளிகள் அமர தனி அறை இருக்க வேண்டும், நவீன கருவிகள் வைத்திருக்க வேண்டும் என பல கட்டுபாடுகள் இடம் பெற்றிருந்தன.

இந்த அரசாணை 2019 ஜனவரி முதல் அமலுக்கு வத்த நிலையில் இதற்கு தடை விதிக்கக் கோரி சென்னையை சேர்ந்த மருத்துவர் வெற்றிவேல் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாரயணன் மற்றும் ராஜமாணிக்கம் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது, தமிழகத்தில் செயல்படும் கிளினிக்குகள் நோயாளிகளிடம் குறைவான தொகையை கட்டணமாக வசூலித்து வருவதாகவும், இந்த அரசாணையில் சேவை மனப்பான்மையுடன் மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களும் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பதாகவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இதையடுத்து, தமிழக அரசின் அரசாணைக்கு தடைவிதிக்க மறுத்த நீதிபதிகள்,  மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு,  விசாரணையை தள்ளிவைத்தனர்.

https://tamil.thehindu.com/tamilnadu/article26129656.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

ஆஸ்துமா என்றால் என்ன?

ஆஸ்துமா என்றால் என்ன?


ஆஸ்துமா என்பது சுவாசக்குழல்களை பாதிக்கும் ஒரு நோய். சுவாசக்குழல்கள் என்பது மூச்சுக் காற்றை நுரையீரலுக்குச் எடுத்துச் செல்லும் குழாய்கள் ஆகும். ஆஸ்துமா உள்ள நபர்களி‌ன் சுவாசக்குழாய்களின் உட்சுவர் வீக்கம் கண்டிருக்கும். இப்படிபட்ட வீக்கம் கண்ட சுவாசக்குழாயில் அலர்ஜி எனப்படும் ஓவ்வாமையை ஏற்படுத்தக்கூடிய பொருட்களோ அல்லது மூச்சுக் குழாய்களில் எரிச்சலை ஏற்படுத்தக்கூடிய பொருட்களோ உதாரணமாக புகை, தூசி போ‌ன்றவை செல்லும்போது சுவாசக்குழாய்கள் இப்படிப்பட்ட பொருட்களுக்கு எதிராக செயல்படும்.

இப்படி சுவாசக்குழாய்கள் எதிரிடையாக செயல்படும் போது சுவாசக் குழாய்களின் உள் சுற்றளவு குறைந்து, சாதாரண அளவைவிட மிக குறைந்தளவு காற்றே நுரையீரலின் காற்றுப் பரிமாணம் நடக்கும் இடத்திற்கு செல்கிறது. சுவாச‌க் குழா‌ய்க‌ள் சுரு‌ங்குவதா‌ல், அத‌ன் வ‌ழியாக கா‌ற்று‌ச் செ‌ன்றுவரு‌ம்போது அ‌திகமாக ச‌த்த‌ம் கே‌ட்‌கிறது. மேலு‌ம், நம் உடலில் உள்ள திசுக்களுக்கு செல்லும் பிராண வாயுவின் அளவும் குறைகிறது.

இதன் விளைவாக, மிகுந்த சிரமத்துடன் மூச்சு விடும் நிலைமை, இருமல், மார்பு பகுதி இருக்கமாகுதல் மற்றும் சுவாசக்கோளாறு போன்றவற்றை உண்டாக்குகிறது. இவை அனைத்தும் குறிப்பாக இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் அ‌திகமாக‌க் காணப்படும்.

ஆஸ்துமாவின் பாதிப்பு மிகவும் கடுமையாக இருக்கும் போது சுவாசக்குழாய்களில் மிக அதிகமான அடைப்பு ஏற்பட்டு, உடலில் முக்கிய உறுப்புகளுக்கு போதிய பிராணவாயு கிடைப்பதில்லை. (உம். மூளை, ஈரல், சிறுநீரகங்கள்). இது போன்ற சந்தர்ப்பத்தில், அவசர மருத்துவ உதவி தேவைப்படும் நிலை ஏற்படுகிறது. ஆஸ்துமாவின் பாதிப்பு மிகவும் கடுமையாக இருப்பின் உயிர் இழப்பும் நேரிடுகிறது.

எனவே ஒருவர் ஆஸ்துமா வியாதியினால் பாதிக்கப்பட்டால், அந்த நபர் மருத்துவரை சந்தித்து, முறைப்படி மருத்துவ உதவியை பெற்றுக்கொள்ள வேண்டும். எதனால் ஆஸ்துமா வருகிறது, அதனை எப்படி தவிர்க்கலாம் என்பதனையும், அறிந்து கொள்ள வேண்டும். மருத்துவரும் ஆஸ்துமாவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள, உட்கொள்ள வேண்டிய மருந்துகளை பரிந்துரைப்பார்.

நோயின் காரணங்கள்

நாம் சுவா‌சி‌க்கு‌ம் கா‌ற்று உ‌ட்பட சுற்றுச்சூழலில் காணப்படுகிறது ‌சில பொரு‌‌ட்க‌ள், ஆஸ்துமா வியாதிக்கான அறிகுறிகள் மற்றும் பாதிப்புக்குளை கொண்டு வருகிறது. ஆஸ்துமா வருவதற்கான சில பொதுவான காரணங்களில் உடற்பயிற்சி, அலர்ஜின்ஸ் எனப்படும் ஒவ்வா பொருட்கள், எரிச்சலூட்டும் பொருட்கள் மற்றும் வைரஸ் நோய் தொற்று போன்றவையும் அடங்கும். சிலருக்கு உடற்பயிற்சி செய்யும் போதும் அல்லது வைரஸ் கிருமிகளால் தாக்கப்படும் போதும் மட்டும் ஆஸ்துமா வியாதி காணப்படுகிறது.

பொது வகையான அலர்ஜின்ஸ் (ஒவ்வா பொருட்கள்)

1. மிருகங்களின் (உடலின் மேல்) உள்ள பொடுகு (தோலில், முடியில் மற்றும் இறகுகளிலிருந்து வருபவை)
2. தூசி மற்றும் தூசியில் உள்ள சிறு பூச்சி (வீடுகளில் இரு‌க்கு‌ம் தூசியில் காணப்படுபவை)
3. கரப்பான்பூச்சி
4. மரங்கள் மற்றும் புல்களிலிந்து வரும் மகரந்தத்தூள்
5. மேல் பூசு பொருட்கள் - பெயின்ட், டிச்டம்பர் போன்றவை
6. சிகரட் புகை
7. காற்றில் காணப்படும் மாசுப்பொருட்கள்
8. குளிர்ந்த காற்று அல்லது த‌ட்பவ‌ெ‌ப்பநிலை மாற்றம்
9. வண்ணப்பூச்சுப் பொருள் மற்றும் சமைக்கும் பொழுது வரும் வாசனை
10. நருமண மூட்டப்பட்ட பொருட்கள்
11. கடுமையான மன உணர்வுகளை வெளிப்படுத்துதல் ( அழுதல் அல்லது சிரித்தல்)
12. ஆஸ்பரின் மற்றம் பீட்டா பிளாக்கர்ஸ் எனப்படும் மருந்துகள்
13. உணவில் சல்பைட்ஸ் போன்ற பொருட்கள் (உலர்ந்த பழவகைகளில் அல்லது மதுபான வகைகள் ( திராட்சை மது)
14. வயிறு மற்றும் உணவுக்குழாய் பாதிப்பினால் நெஞ்சு எரிச்சல் ஏற்படுவது ஆஸ்த்துமாவின் அறிகுறிகளை, பாதிப்புகளை அதிகப்படுத்தி, மோசமான நிலைமைக்கு கொண்டு செல்லும்.
15. இராசாயனப் பொருட்கள் மற்றும் தூசிப் பொருட்கள்.
16. நோய்தொற்றுதல்
17. குடும்ப பின்னணி
18. குழந்தைகள் புகை‌யிலை‌யி‌ல் இரு‌ந்து வரு‌ம் புகையை சுவாசிக்க நேரிடும் போது, ஆஸ்துமா வருகிறது.
19. ஒரு கர்ப்பிணிப் பெண், புகையிலையிலிருந்து வரும் புகையினை சுவாசிக்க நேரிடும் போது வயிற்றில் வளரும் குழந்தைக்கு எளிதில் ஆஸ்துமா வருகிறது.
19. உடற்பருமனாகுதல், பிற சுகாதாரக் கேடுகள் ஆஸ்துமா மற்றும் வியாதியோடு தொடர்புடையவைகளாக இருக்கலாம்.

நோயின் அடையாள அறிகுறிகள்

மூச்சுத்தினறல் - திடீரென ச‌ளி ‌பிடி‌த்த‌ல், கா‌ய்‌ச்ச‌ல் போ‌ன்ற பாதிப்புக்குள்ளாகுதல், இது அடிக்கடி ஏற்படுதல்
இரவு மற்றும் அதிகாலை வேளைகளில் பாதிப்பு மோசமாகுதல்
குளிர்ச்சியான பகுதிக்கு செல்லும்போது அல்லது உடற்பயிற்சி செய்யும் போது நிலைமை மோசமாகுதல் மற்றும் நெஞ்செரிச்சல் காணப்படும். பின்னர் தானாகவே மறைந்துவிடும்
மருந்து உட்கொள்ளும் போது மூடிய சுவாசக்குழாய்கள் திறந்து சுகமாகுதல்
இருமல் அல்லது சளியுடன் கூடிய இருமல்
சாதாரணமாக வேலைக‌ள் செ‌ய்யு‌ம்போது மூச்சு இறைப்பினால் உட‌ல்‌நிலை மோசமாகுத‌ல் போ‌ன்ற அ‌றிகு‌றிக‌ள் காண‌ப்படு‌ம்.

பரிசோதனைகள்

எக்ஸ்ரே, ரத்தப் பரிசோதனை, நுரையீரல் செயல்திறன் பரிசோதனை (பி.எப்.டி.) போ‌ன்ற ப‌ரிசோதனைக‌ள் மூல‌ம் ஆ‌ஸ்துமாவை‌க் க‌ண்ட‌றியலா‌ம்.

கா‌ய்‌ச்சலை அள‌‌ப்பத‌ற்கு தர்மாமீட்டர் உள்ளது போ‌ல், ஆஸ்துமாவிற்கும் பீக்ப்ளே மீட்டர் என்னும் ஒரு கருவி உ‌ள்ளது. இதனை‌ப் பய‌ன்படு‌த்‌தி ஒரு நுரை‌யீர‌ல் எ‌வ்வளவு சீராக காற்றை வெளியே விடுகிறது எ‌ன்பதை அளவெடு‌க்கலா‌ம்.

சிகிச்சை முறை
சித்த மருத்துவத்தில் இதற்கு முழுமையான தீர்வு உண்டு .

சித்த மருத்துவத்தை பயன்படுத்தி குணமடைந்து
வாழ்க வளமுடன் என்றும் நலமுடன் ..

குடியரசு தினம் என்றால் என்ன?


குடியரசு தினம் என்றால் என்ன? 
அந்தப் பதிலைச் சொல்லப் பெரியவர்களே கொஞ்சம் கஷ்டப்படுவார்கள். 
அது சரி, ஏன் குடியரசு தினம் கொண்டாடுகிறோம்?

ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன்பு இந்தியாவை ஆண்டது யார்? 
உங்கள் பாடப்புத்தங்களில் படித்திருப்பீர்களே, மன்னர்கள்தான் ஆட்சி செய்து வந்தார்கள். 
இப்போது இருப்பது போல அப்போது மாநிலங்கள் எல்லாம் கிடையாது. 

சிறிய அரசர்கள், பெரிய அரசர்கள், பேரரசர்கள் எனத் தங்கள் எல்லையைப் பொறுத்து ஆட்சி செய்தார்கள். 
இந்த அரசர்களிடம் ஒற்றுமை இல்லை.

எல்லாருமே இந்தியாவைச் சிறு சிறு பகுதிகளாகப் பிரித்து ஆட்சி செய்துவந்தார்கள். 

இப்படிப் பிரிந்து கிடந்ததாலும், ஒற்றுமை இல்லாததாலும் ஆங்கிலேயர்கள் இதைப் பயன்படுத்திக்கொண்டார்கள். 

தந்திரமாக மன்னர்களிடம் பேசி நம் நாட்டுக்குள்ளே நுழைந்து பின்னர் நம்மை அடிமைப்படுத்தினார்கள்.

அது மட்டுமல்ல, மன்னர்கள் ஆட்சியில் அவர்கள் வைத்ததே சட்டம். மக்கள் சுயமாகச் சிந்திக்க முடியாது;

 சுதந்திரம் பற்றி நினைக்கவும் முடியாது. 
மன்னர் இறந்துபோனால், உடனே அவருடைய மகன் மன்னராகிவிடுவார். இதைத்தான் முடியாட்சி அல்லது மன்னராட்சி என்று சொல்லுவார்கள்.

ஆங்கிலேயர்கள் படிப்படியாக இந்தியாவை அடிமைப்படுத்தியபோது சுதந்திரம் பற்றி மக்களுக்கு எந்த விழிப்புணர்வும் வரவில்லை. மன்னன் எவ்வழியோ மக்களும் அவ்வழியே என்று இருந்தார்கள்.

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு இதுபோன்ற ஒரு நிலை மீண்டும் வரக் கூடாது என்று சுதந்திரத்துக்காகப் பாடுபட்ட தலைவர்கள் நினைத்தார்கள். 
வாரிசு உரிமை உள்ள மன்னராட்சி முறை கூடாது என்று நினைத்தார்கள்.
 மக்கள் பங்கு கொள்ளும் மக்களாட்சி உள்ள நாடாக இந்தியா இருக்க வேண்டும் என்று தீர்மானித்தார்கள். 
அதற்கு நாடு குடியரசாக இருப்பது அவசியம் என்றும் முடிவு செய்தார்கள்.

குடியரசு என்றால் குடிமக்களின் அரசு என்று பொருள். அதாவது மக்களாட்சி என்று அர்த்தம். 
மக்கள் தங்கள் விருப்பப்படி தேர்தல் மூலம் தங்களுடைய தலைவரைத் தேர்ந்தெடுக்கலாம். 

இப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆட்சி நடத்தும் நாடுதான் குடியரசு நாடு. 

இப்படி இருக்க வேண்டும் என்று முடிவு செய்துதான் இந்தியாவும் குடியரசு நாடானது.

ஜனவரி 26-ம் தேதி இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் அமலுக்கு வந்தது என்று பாடப் புத்தங்களில் படித்திருப்பீர்கள் அல்லவா? 
அரசியல் அமைப்புச் சட்டம் என்றால் என்ன தெரியுமா? 
நாம் ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுப்பவர்கள் எப்படி ஆட்சி செய்ய வேண்டும் என்பதை நிர்ணயிப்பதுதான் அரசியல் அமைப்புச் சட்டம்.

டாக்டர் அம்பேத்கர் தலைமையில் சட்ட மேதைகள் பலர் சேர்ந்து இதை உருவாக்கினார்கள். 

இந்த அரசியலமைப்புச் சட்டம் 1950 ஜனவரி 26 அன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. 

அதனால்தான் அன்றைய தினத்தைக் குடியரசு தினமாகக் கொண்டாடுகிறோம்.

தேசிய நுகர்வோர் உரிமைகள் தினம்

நுகர்வோர் தின வாழ்த்துக்கள்

எந்தவொரு பொருள் வாங்கினாலும்
ரசீதையும் கேட்டு வாங்குங்கள் !

தேசிய நுகர்வோர் உரிமைகள் தினம்

இந்தியாவில் ஆண்டுதோறும் நுகர்வோர் விழிப்புணர்வை வலியுறுத்தி
டிசம்பர் 24ஆம் தேதி தேசிய நுகர்வோர் தினம் அனுசரிக்கப்படுகிறது.

1986ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி
இந்திய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்
(Consumer Protection Act) இந்திய அரசால் ஏற்படுத்தப்பட்டது.

சந்தையில் விற்பனையாளர்களுக்கு இடையே ஆரோக்கியமான போட்டியை உறுதி செய்வதற்கும்,

நுகர்வோரின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் இந்த சட்டம் உருவாக்கப்பட்டது.

இந்த சட்டம் வர்த்தகர்கள் மற்றும் சேவை வழங்குவோர் தங்களது வணிகத்தில் தங்களை நிலைநிறுத்திக் கொள்வதற்காகவும்,

சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தடை செய்யவும்,

மேலும் எந்தவொரு பொருள் வாங்கினாலும் ரசீதையும் கேட்டு வாங்க வேண்டும்.

 அப்போதுதான் ஏதாவது பிரச்சனை என்றால் உரிமையோடு போராட முடியும் என்பதற்காக உருவாக்கப்பட்டது.


கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம்
நீலகிரி.
CCHEP Nilgiris
http://cchepnlg.blogspot.in

நுகர்வோர் தினம்


இயந்திர கதியில் இயங்கிக் கொண்டிருக்கும் கம்ப்யூட்டர் உலகில், 

நமது உரிமைகளையும், நாட்டில் நடைபெறும் ஒழுங்கீனங்களையும் பற்றி எடுத்துரைக்க நமக்கு நேரம் இல்லை. 

நாம் நம், அறியாமை யினால் ஏமாறுவது ஒரு வகையில் ஏற்றுக் கொள்ளக் கூடியதாகும். 

ஆனால் நாம் தெரிந்தே ஏமாற்றப்படுவது பொறுக்க முடியாத குற்றமாக கருதப்படுகிறது.

நுகர்வோராகிய நாம், மிகுந்த விழிப்புடனும்,
எச்சரிக்கையுடனும், மற்றவரால் ஏமாற்றப்படாமலும் இருத்தல் அவசியம். 

இது சம்பந்தமாக நுகர்வோர் உரிமை பற்றி விழிப்புணர்வு,

செயல்வடிவம் பெறும் வண்ணம் அந்தந்த மாவட்டத்தில் கலெக்டரால் அங்கீகரிக்கப்பட்ட நுகர்வோர் அமைப்புகள் செயல்படுகின்றன. 

இந்த அமைப்புகள் மக்களை
விழிப்புடன் வைத்திருக்க பல
வழிகளில் மக்களுக்கு சேவை செய்து வருகின்றன.

இந்திய குடியரசு ஆட்சியில் சாதாரண குடிமகன் முதல், ஜனாதிபதி வரை அனைவருமே நுகர்வோர் தான். 

நிறத்தாலோ, இனத்தாலோ நுகர்வோரை பிரிக்க முடியாது. 
வாழ்க்கை கலாசாரத்திற்கு நுகர்வு அவசியமாகிறது. நுகர்வின்றி வாழ்வில்லை.

நுகர்வோர் என்பவர் ஒரு பொருளையோ, ஒரு சேவையையோ விலை கொடுத்து வாங்கி பயன்
படுத்துபவர். 

நுகர்வோர், தன் சொந்த
உபயோகத்திற்காக பொருளையோ அல்லது சேவையையோ பெறுபவர். 

ஒரு மனிதனோ, ஒரு நிறுவனமோ தங்கள் தேவைக்கு விலை கொடுத்து தங்களுக்கு தேவையானவற்றை பெற்று அனுபவித்தும், தேவையான சேவையை பெற்று கொள்வதும் 'நுகர்வு' எனப்படும்.

ஒருவர் தனக்கு வேண்டிய பொருளை விலை கொடுத்து வாங்குவதும், 
சேவையை குறுகிய கால கட்டத்தில் அனுபவிப்பதும், 
அதற்கான முழு கட்டணத்தை செலுத்தியோ அல்லது தவணை முறையில் செலுத்துவதாக ஒப்புக் கொண்டாலோ, 

அவரே நுகர்வோர் என நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 1986 வரையறுக்கிறது. 

நுகர்வு செயல்பாடு என்பது நுகர்வோர், விற்பனையாளர் மற்றும் பொருளை சார்ந்திருக்கிறது.

வித்திட்ட ஜான் கென்னடி

அமெரிக்காவில் ரால்ப்நாடர் என்பவர்
முதல் முதலில் நுகர்வோர் இயக்கத்திற்கு வித்திட்டார்.

 அவரே நுகர்வோர் இயக்கத்தின் தந்தை. அன்றைய அமெரிக்க அதிபர் ஜான் எப் கென்னடி, அமெரிக்க மக்கள் பயன்பெறும் பொருட்டு, 

1962ம் ஆண்டு
மார்ச் 15 ல் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தை
நிறைவேற்றினார். 

இதுவே உலக நுகர்வோர்
தினமாக அனுசரிக்கப்படுகிறது. 
அச்சட்டம் எட்டு
உரிமைகளை நுகர்வோருக்கு பெற்றுத் தருகிறது.

இந்தியாவில் டிசம்பர் 24 
தேசிய நுகர்வோர் தினமாக கடைபிடிக்கப்படுகிறது

* பாதுகாப்பு உரிமை

* அறிந்து கொள்ளும் உரிமை

* தேர்ந்தெடுக்கும் உரிமை

* குறைதீர்க்கும் உரிமை

* நுகர்வோர் கல்வி உரிமை

* இழப்பீடு பெறும் உரிமை

* சுற்றுச்சூழல் பாதுகாப்பு உரிமை

*     அடிப்படை வசதி பெறும் உரிமை

இந்திய நாட்டில் இதுகுறித்து பல ஆண்டுகளாக பேசப்பட்டு, 1986 டிசம்பர் 24ல் சட்டமாக இயற்றப்பட்டது. 

நுகர்வோர் தக்க நிவாரணம் பெற இச்சட்டம் நமக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கிறது.

நுகர்வோருக்கு சட்டப்பாதுகாப்பு
இந்தியருக்கு இச்சட்டம் மூலம் பெறப்பட்ட
உரிமைகள்

* நுகர்வோர் உரிமை பாதுகாப்பு

* நுகர்வோர் அறிந்து கொள்ளும் உரிமை

* குறைகள் கேட்பதற்கான உரிமை

* தேர்ந்தெடுக்கும் உரிமை

* குறைகளை முறையிடுவதற்கான உரிமை

* நுகர்வோர் கல்வி உரிமை

* நுகர்வோர் சட்டம், நுகர்வோருக்கு தன் இழப்பிற்கு நிவாரணம் மற்றும் இழப்பு தொகை பெற பெரிதும் உதவுகிறது.

* உணவு பொருளில் கலப்படம் செய்தல், வங்கி மற்றும் தபால் சேவை குறைபாடு, கள்ளச்சந்தை, 

திரையரங்குகளில் அதிக விலைக்கு விற்கப்படும் டிக்கெட் மற்றும் 

மின் விசிறி, குளிர்சாதன இயக்கத்தில் உள்ள குறைபாடு,

அரசு பஸ்களில் பயணத்தில் ஏற்படும்
குறைபாடுகள், 

டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் பயணிகள் மேல் உள்ள அலட்சிய போக்கு, 

டவுன் பஸ், விரைவு பஸ், சொகுசு பஸ் என அதிக கட்டணம் வசூலிக்கும் போக்குவரத்து நிர்வாக குறைபாடு.

மற்றும் மின் வாரிய சேவை குறைபாடு, பழுந்தடைந்த மீட்டர், அதிகளவு காட்டும் மீட்டர், மின் இணைப்பு தாமதம், 

முன்னறிவிப்பு இன்றி மின் தடை, பழுதான மின் கம்பியால் மரணம், காப்பீட்டு கழகத்தில் உரிய நேரத்தில் இழப்பீடு பெற முடியாமை, ரயில் பயணச் சேவை குறைபாடு,

மருத்துவமனைகளில் நோயாளிக்கு ஏற்படும் சேவை
குறைபாடு, அதிக கட்டணம் வசூலித்தல்,
 நகர் மற்றும் கிராம நிர்வாகங்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர்
குறைபாடு, 
பொது விநியோகத்திட்ட குறைபாடு
போன்ற குறைபாடுகளை களைந்து இழப்பீடு பெற

நாம் நுகர்வோர் குறைதீர் நீதிமன்றங்களை அணுகலாம்.

நுகர்வோர் பாதுகாப்பு சட்டங்களை அரசு இயற்றினாலும், நுகர்வோர் தான் விழிப்புடன் இருக்க வேண்டும்.

 சட்ட விரோத செயல்களை அனுமதிக்க இடமளிக்கக்கூடாது. 
பொருள் வாங்கியதில் இழப்பு, சேவை குறைபாடு போன்றவற்றை தக்க அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். 

மக்களின் விழிப்புணர்வு மிகமிக அவசியம். அரசாங்கம், மாணவர்களிடையேயும் விழிப்புணர்வு ஏற்படுத்த, 
நுகர்வோர் மன்றங்களை பள்ளிகளிலும், கல்லுாரிகளிலும் ஏற்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

மூன்றடுக்கு நீதிமன்றங்கள்

1. மாவட்ட குறைதீர் மன்றம்: 
இதன் தலைவர் ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி. 
வணிகம் மற்றும் கல்வியியலில் தேர்ந்த ஒரு உறுப்பினரும்,
 சமூக சேவையில் தேர்ந்த ஒரு பெண் உறுப்பினரும் குறை கேட்பர். 

இழப்பீட்டு தொகை ரூ.20 லட்சம் வரை பெற, இந்நீதிமன்றத்தை அணுகலாம்.

2. மாநில குறைதீர் மன்றம்: 
இதன் தலைவர் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி. 
ஒரு உறுப்பினர் பொருளாதாரம் போன்ற துறையில் தேர்ந்தவராகவும், 
சமூக சேவையில் தேர்ந்த ஒரு பெண் உறுப்பினரும் குறைகேட்பர்.

இழப்பீட்டு தொகை ரூ.ஒரு கோடி வரை பெற, இந்
நீதிமன்றத்தை அணுகலாம்.

3. தேசிய குறைதீர் மன்றம்: 
இதன் தலைவர் ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி. 
நான்கு உறுப்பினர்கள், அதில் ஒரு பெண் உறுப்பினரும் குறைகேட்பர். 
இழப்பீடு தொகை ரூ.ஒரு கோடிக்கு மேல் பெற, இந்நீதிமன்றத்தை அணுகலாம்.

4. நுகர்வோர் நீதிமன்றங்களில் தீர்ப்புகளை மூன்று முதல் ஆறு மாதங்களுக்குள் வழங்க, இச்சட்டம் வழிவகை செய்கிறது. 

2002ம் ஆண்டு வரை நீதிமன்ற கட்டணம் ஏதுமின்றி வழக்கு நடத்தி தீர்ப்பு வழங்கப்பட்டது. 

2002 ம் ஆண்டு திருத்த சட்டத்தில் கட்டணம் ரூ.100 முதல் ரூ.500 வரை இழப்பீடு தொகைக்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 

நீதிமன்ற ஆணைகளால் திருப்தி அடையாத நுகர்வோர் 30 நாட்களுக்குள் அடுத்த நீதிமன்றத்தை அணுகலாம்.

 நுகர்வோர் விழிப்புடன் இருந்து தாம் ஏமாற்றப்படுவதை தடுத்து கொள்ள வேண்டும் என நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் வலியுறுத்துகிறது.

நுகர்வோர் பாதுகாப்பு மத்தியஸ்தம்

Consumer Protection (Mediation) Rules, 2020 ( நுகர்வோர் பாதுகாப்பு (மத்தியஸ்தம்) விதிகள், 2020 ) இவை நுகர்வோர் பாதுகாப்பு சட்டம்...