பகை- பழியை - தக்காளியையும் தூக்கி எறியுங்கள்''

''மன்னிக்க முடியாத கோபம் யார் மீதேனும் இருக்கிறதா  உங்களுக்குசந்தர்ப்பம் கிடைத்தால் யாரையேனும் பழி வாங்கத் துடிக்கிறீர்களா,  நீங்கள்?'' - மாணவர்களிடம் கேட்டார் ஆசிரியை.
எல்லா மாணவர்களும் ஒரே குரலில் 'ஆமாம்...' என்றனர்அவர்களைஒவ்வொருவராக அருகில் அழைத்த ஆசிரியை, ''மன்னிக்கவும் மறக்கவும் முடியாத அளவுக்கு எத்தனை கோபங்கள் உள்ளன?'' என்று கேட்டார்ஒருவன் 'பத்துஎன்றான்அடுத்தவன் 'பதினைந்துஎன்றான்இப்படியாக ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகச் சொன்னார்கள்.
இதையடுத்து அவர்களிடம் சிறிய பை ஒன்றைக் கொடுத்த ஆசிரியைவகுப்பறையின் மூலையில் இருந்த தக்காளி கூடையைச் சுட்டிக் காட்டி, ''நீங்கள் சொன்ன எண்ணிக்கைப்படிகூடையில் உள்ள தக்காளிகளை எடுத்துஉங்களுக்குக் கொடுத்த பையில் போட்டுக் கட்டுங்கள்'' என்றார்மாணவர்களும் தங்களது பையில்,தக்காளிகளைப் போட்டு மூட்டையாகக் கட்டிக் கொண்டனர்.
அவர்களிடம், ''இந்த மூட்டையை எப்போதும் உங்களுடன் வைத்திருக்க வேண்டும்தூங்கும் போதும் அருகில் வைத்துக் கொள்ள வேண்டும்'' என்று உத்தரவிட்டார்புரிந்தும் புரியாமலும் மாணவர்கள் தலையாட்டினர்.
ஓரிரு நாட்கள் ஒரு குறையும் இல்லைஆனால்அடுத்தடுத்த நாட்களில் தக்காளிகள் அழுகி நாறத் துவங்கினநாற்றம் அடிக்கும் மூட்டையுடன் வெளியே செல்ல மாணவர்கள் கூச்சப்பட்டனர்ஒரு கட்டத்தில்... ஆசிரியையிடம் சென்றுமூட்டைகளைத் தூக்கி எறிய அனுமதி கேட்டனர்.
மெள்ளப் புன்னகைத்த ஆசிரியை, ''நாற்றம் வீசுபவை தக்காளி மட்டுமா..? அந்த நாற்றத்தைப் போலவேபகைமை உணர்வும் பழி வாங்கும் குணமும் உங்கள் மனதுக்குள் அழுகி நாறிக் கொண்டிருக்கின்றனஎனவேபகைபழியை மறந்து மன்னித்து விடுவதாக இருந்தால்தக்காளியையும் தூக்கி எறியுங்கள்'' என்றார்!மாணவர்களுக்கு தெளிவு பிறந்தது.
அப்போதே தக்காளி மூட்டைகளை குப்பைத் தொட்டியில் வீசிய மாண வர்கள்,பகை மறந்து ஒருவரையருவர் ஆரத் தழுவி கண்ணீர் விட்டனர்.

ஒரு LPG சிலிண்டர் // ரூ.40 லட்சம் காப்பீட்டுத் தொகையும்

ஒரு LPG சிலிண்டர் தீர்ந்து இன்னொரு சிலிண்டர் நம் வீட்டு வாசலில் வந்து இறங்கும் அந்த நேரத்திலிருந்து அதை பயன்படுத்தும் வாடிக்கையாளரின் பெயரில் ரூ. 40 லட்சம் காப்பீட்டுத் தொகையும் அதனுடன் வந்து சேர்கின்றது என்ற தகவல் நமக்கு எத்தனை பேருக்கு தெரிந்திருக்கும் என்று தெரியவில்லைஇது குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாததால் சிலண்டர் விபத்து நேரும் போது பாதிக்கப்பட்ட குடும்பத்திலிருந்து யாரும் அந்த காப்பீட்டுத் தொகையை உரிமை கோருவதில்லை!,
இந்த காப்பீடு குறித்து அரசாங்கமோஎண்ணெய் நிறுவனங்களோ வாடிக்கயாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்ப்படுத்துவதுமில்லைசிலிண்டர் விபத்து நேர்ந்து அதன் காரணமாக உயிரிழப்புகள் ஏதும் நேர்ந்தால் சட்டப்படி அந்த குடும்பம் ரூ.50 லட்சம் வரை சம்மந்தப்பட்ட நிறுவனத்திலிருந்து காப்பீட்டுத் தொகை பெற முடியும்!.

Via - Sasi Dharan

காற்றைச் சுத்தப்படுத்தும் வீட்டுச் செடிகள்...!

Vikatan EMagazine's photo.

காற்றைச் சுத்தப்படுத்தும்
வீட்டுச் செடிகள்...!
வீட்டுக்கு ஒரு செடியாவது வளர்ப்போம்...
மரத்தையெல்லாம் அழிச்சாச்சு. இனி, நல்ல காத்துக்கு எங்கே போறது? இனிமே மரம் நட்டாலும் அது வளர்ந்து முழு மரமாகிறதுக்கு 20, 30 வருஷங்கள் ஆகுமேஎன்று சங்கடப்படுபவர்களே... உங்களுக் காகவே இந்த நல்ல செய்தி!
வீட்டிலேயே வளர்க்கக் கூடிய சில குறுஞ்செடிகளில் காற்றில் உள்ள நச்சுக்களைச் சுத்தப்படுத்தும் குணம் நிரம்பி இருக்கிறது என்று நாசா விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி கூறுகிறது. தமிழ்நாட்டுச் சீதோஷ்ண நிலையில் வாழும் தன்மையையும், அதிக நன்மை களையும் கொடுக்கும் இந்தச் செடிகளைப் பற்றிய அறிமுகம் இதோ...
கற்றாழை (AloeVera): மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ள கற்றாழை, காற்றில் உள்ள ஃபார்மால்டிஹைட் என்னும் வேதிப் பொருளை நீக்கும். சருமத் தீப்புண்களுக்கும் மருந்தாகப் பயன்படும்!
சீமை ஆல் (Rubber plant): வெயில் படாத இடங்களில்கூட வாழும் தன்மைகொண்டவை. அதிகமாக அசுத்தக் காற்றை உள்ளிழுத்து அதிகப்படியான ஆக்சிஜனை வெளியிடும்.
வெள்ளால் (Weeping Fig): காற்றின் நச்சுக்களை நீக்கி சுற்றுப்புறத்தின் ஆக்சிஜன் அளவை அதிகப்படுத்தும்.
மூங்கில் பனை (Bamboo Palm) : காற்றில் கலந்துள்ள ஃபார்மால்டிஹைட் நச்சுக்களை நீக்குவதோடு இயற்கையான ஈரப்பதனியாகச் செயல்படும்.
ஸ்னேக் பிளான்ட் (snake-plant): நைட்ரஜன் ஆக்ஸைடு மற்றும் ஃபார்மால்டிஹைடைக் கிரகித்து ஆக்சிஜனை வெளிப்படுத்தும். வறண்ட சூழ்நிலை களில்கூட வாழும் தன்மைகொண்டவை.
கோல்டன் போட்டோஸ் (golden pothos): நாசா விஞ்ஞானிகளின் அறிக்கைப்படி காற்றைச் சுத்தப்படுத்தும் தாவரங்களின் பட்டியலில் மூன்றாம் இடம் பிடித்திருக்கும் இந்தச் செடி, கார்பன் மோனாக்சைடு வாயுவை உறிஞ்சிக்கொண்டு காற்றின் அளவை அதிகரிக்கச் செய்யும்!
வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம். முடியாதபட்சத்தில், இப்படிப்பட்ட செடிகளையேனும் வளர்ப்போமே!


நுகர்வோர் தின விழிப்புணர்வு

 உலக நுகர்வோர் தினத்தையொட்டி நுகர்வோர் விழிப்புணர்வு வாரம் கொண்டாடபடுகிறது இதனை முன்னிட்டு பந்தலூர் அருகே கரியசோலை அரசு உயர்நிலைப் பள்ளியில்...