சதுரங்கப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் பாராட்டு சான்றிதழ்கள்
பந்தலூர் வட்டார அளவிலான சதுரங்கப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் பாராட்டு சான்றிதழ்கள் வழங்க பட்டது.
இந்திய அரசு நேரு யுவ கேந்திர நீலகிரி மாவட்டம், பந்தலூர் மகாத்மா காந்தி பொது சேவை மையம், கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் ஆகியன இணைந்து நடத்திய பந்தலூர் வட்டார அளவிலான சதுரங்கப்போட்டி பந்தலூர் புனித சேவியர் பெண்கள் உயர் நிலை பள்ளியில் நடைபெற்றது
இப்போட்டியில் பந்தலூர் வட்டாரத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும், தனியார் மெட்ரிக் பள்ளிகள் உட்பட 10க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த மாணவ- மாணவிகள் பங்கேற்றனர்.
ஜூனியர், சீனியர், சூப்பர் சீனியர் ஆகிய பிரிவுகளில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனி தனிய நடத்தப்பட்டது
இதில் சூப்பர் சீனியர் 19 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் கொளப்பள்ளி அரசு மேல்நிலை பள்ளி மாணவி சிவந்தமல்லி முதல் இடத்தினையும் புனித சேவியர் பள்ளி மாணவி காயத்திரி இரண்டாம் இடத்தினையும் பெற்றனர் . ஆண்கள் பிரிவில் பிதர்காடு அரசு பள்ளி மாணவன் ஜுனைஷ் முதல் இடத்தினையும் தேவாலா ஹோலி கிராஸ் பள்ளி மாணவன் பிரவீன் இரண்டாம் இடத்தினையும் பெற்றனர்.
சீனியர் 17வயதுக்குட்பட்டோரில் பெண்கள் பிரிவில் பந்தலூர் டியூஸ் பள்ளி மாணவி ஜெரால்டு மரிய சுவேதா முதல் இடத்தினையும் புனித சேவியர் பள்ளி மாணவி ஆரோக்கிய டால்மியா இரண்டாம் இடத்தினையும் பெற்றனர் . ஆண்கள் பிரிவில் எம் எஸ் எஸ் பள்ளி மாணவன் அபிஜித் முதல் பரிசினையும் எருமாடு அரசு பள்ளி மாணவன் அனூப் இரண்டாம் இடத்தினையும் பெற்றனர்
ஜூனியர் 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் புனித சேவியர் பள்ளி மாணவி சிந்தியா முதல் இடத்தினையும், கையுன்னி பள்ளி மாணவி ஜான்சி புளோரா இரண்டாம் இடத்தினையும் பெற்றனர் ஆண்கள் பிரிவில் பக்கனா அரசு பள்ளி மாணவன் ஷம்னாஜ் முதல் இடத்தினையும் கையுன்னி பள்ளி மாணவன் அஜய் இரண்டாம் இடத்தினையும் பிடித்தனர்.
பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சியில் காந்தி சேவை மைய அமைப்பாளர் நௌசாத் தலைமை தங்கினார். கூடலூர் நுகர்வோர் மைய தலைவர் சிவசுப்பிரமணியம் பள்ளி ஆசிரியர்கள் உஷா மார்டின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
முதல் மற்றும் இரண்டாம் இடம் பிடித்தவர்களுக்கு கேடயம், பாராட்டு சான்றிதழ்கலை வட்டார மருத்துவ அலுவலர் கதிரவன், பந்தலூர் புனித சேவியர் பள்ளி தாளாளர் ஜான்சி ஆகியோர் வழங்கினார்கள்.
சதுரங்க விளையாட்டு போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்க பட்டது
காந்தி சேவை மைய நிர்வாகிகள் நுகர்வோர் மைய நிர்வாகிகள் போட்டியில் பங்கேற்ற பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக காந்தி சேவை மைய செயலாளர் சந்திரன் வரவேற்றார் முடிவில் மைய துணை தலைவர் சுரேஷ் நன்றி கூறினார்
மின்சார சிக்கனம் விழிப்புணர்வு கருத்தரங்கு
பந்தலூரில் மின்சார சிக்கனம் விழிப்புணர்வு கருத்தரங்கு நடை பெற்றது
பந்தலூர் புனித சேவியர் பெண்கள் உயர் நிலை பள்ளியில் கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச் சூழல் பாதுகாப்பு மையம், மின்சார வாரியம் கூடலூர் கோட்டம், பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்றம் ஆகியன இணைந்து நடத்திய இந்த நிகழ்ச்சிக்கு
தலைமை வகித்த கூடலூர் நுகர்வோர் மைய தலைவர் சிவசுப்ரமணியம் பேசும்போது இன்றைய காலகட்டத்தில் மின்சாரம் அனைத்து தேவைகளுக்கும் அத்தியாவசியமாகின்றது நாம் மின்சாரத்தினை பயன்படுத்தும் பொது நாம் மட்டுமே பயன் அடைகின்றோம் ஆனால் இந்த மின்சாரம் தொழிற்சாலைகளில் பயன்படுத்தும் பொது பொருள் உற்பத்தி செய்ய படுகின்றது அதனால் விவசாயி தொழிற்சாலை நிர்வாகம் தொழிலார்கள் நுகர்வோர்கள் என பல தரப்பினரும் பயன் பெறுவார்கள். நாட்டின் பொருளாதாரமும் வளர்ச்சி அடையும். எனவே, நாம் அன்றாட தேவைகளில் பயன் படுத்தும் மின்சாரத்தினை மிச்சம் பிடித்து நாட்டின் வளர்ச்சியில் பங்கு கொள்ள வேண்டும் என்றார்.
சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கூடலூர் மின் கோட்ட பொறியாளர் முரளிதரன் பேசும்போது மின்சாரத்தின் உற்பத்தி அளவு தேவையை பூர்த்தி செய்ய கூடிய அளவு இல்லை. புதிய திட்டங்கள் நிறைவேறும் வரை மின் தேவையை சமாளிக்க நாம் பயன்படுத்தும் மின்சாரத்தினை குறைத்து கொள்ள வேண்டும் நீலகிரி மாவட்டம் மட்டுமே மின் தடை இல்லாத மாவட்டமாக உள்ளது. குண்டு பல்புகள் வெப்ப ஆற்றலை தருகின்றது இதனால் அதிக செலவு மற்றும் புவி வெப்பமடைதல் ஏற்படுகின்றது.
சி எப் எல் பல்புகள் பயன் படுத்த வேண்டும் வீடுகளில் பழைய வயரின் பழுதடைந்து இருந்தால் அதன் முலம் மின் விபத்து ஏற்படுவதுடன் மின்சரமும் விரையமாகும் இவற்றை தவிர்க்க வேண்டும். நட்சத்திர குறியீடு உள்ள மின் சாதனங்கள் வாங்கி பயன் படுத்துவதால் மின் சிக்கனம் பெறுவதோடு வீண் செலவினகளை தவிர்க்கலாம். மின்சார கம்பிகள் கிழே அறுந்து கிடந்தாலோ மின் கம்பங்களில் செடிகள் வளர்திருந்தாலோ மின்சார வாரியத்திற்கு தகவல் தெரிவித்தால் அவை சரிசெய்து தரப்படும். மின் கட்டணங்கள் செலுத்துவதற்கான முறை இணைய தளம் மூலம் செலுத்த வசதி செய்து தரப்பட்டுள்ளது எனவே மின் கட்டணங்களை அஞ்சலகங்களில் வங்கிகளில் இணைய தல சென்டர்களில் செலுத்தலாம் மின் நுகர்வோர்கள் தங்களது செல்போன் எங்களை பதிவு செய்து கொண்டால் மின் கட்டணம் குறித்த தகவல்கள் தெரிவிக்க படும் என்றார்
நிகழ்ச்சியில் மின் வாரிய உதவி பொறியாளர்கள் சந்தோஸ் தமிழரசன் விக்னேஷ் ஆசிரியர் மார்டின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
மாணவிகள் கனிமொழி யமுனா ஆகியோர் மின் சிக்கனம் குறித்து பேசினார்கள்
நிகழ்ச்சியில் 200க்கு மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்
முன்னதாக நுகர்வோர் மன்ற மாணவி உமா வரவேற்றார்
முடிவில் நுகர்வோர் மன்ற மாணவி கீர்த்தனா நன்றி கூறினார்

கண் சிகிச்சை இலவச முகாமில் 20பேர் கண் புரை அறுவை
பந்தலூர்
: பந்தலூர் அருகே கொளப்பள்ளியில் நடந்த கண் சிகிச்சை இலவச முகாமில் 20பேர்
கண் புரை அறுவை சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டனர்.
நீலகிரி மாவட்ட
பார்வை இழப்பு தடுப்பு சங்கம், கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம், ஷாலோம்
சாரிட்டபிள் டிரஸ்ட், நேரு யுவ கேந்திரா இணைந்து கொளப்பள்ளி அரசு ஆரம்ப
சுகாதார நிலையத்தில், இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தின.
முகாமிற்கு நுகர்வோர் மைய தலைவர் சிவசுப்ரமணியம் தலைமை வகித்தார்.
கண் டாக்டர்
அகல்யா, சுகாதார நிலைய டாக்டர் ரமேஷ் சிகிச்சையளித்தனர். முகாமில்,
100க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பயனடைந்தனர்.
அதில் 20பேர் கண் புரை அறுவை
சிகிச்சைக்காக, ஊட்டி அழைத்து செல்லப்பட்டனர்.
ஷாலோம் டிரஸ்ட் செயலாளர்
சுப்ரமணி வரவேற்றார்.
District Consumer Disputes Redressal Forums
What are the addresses of the District Consumer Disputes Redressal Forums functioning in the State of Tamil Nadu
SL. NO:
|
District Consumer Disputes Redressal Forum / COMMISSION
|
Telephone numbers
|
1
|
The President,
State Consumer Disputes Redressal Commission,
No: 212, R.K. Mutt Road, Mylapore, Chennai – 600 004
|
044-24940687
044-24618900
|
2
|
The President,
District Consumer Disputes Redressal Forum (Chennai – South)
No: 212, R.K. Mutt Road, Mylapore, Chennai – 600 004
|
044-24938697
|
3
|
The President,
District Consumer Disputes Redressal Forum (Chennai – North)
No: 212, R.K. Mutt Road, Mylapore, Chennai – 600 004
|
044-24952458
|
4
|
The President,
District Consumer Disputes Redressal Forum,
Sub-Collector Office Campus,
GST Salai, Melamaiyur Village, Chengalpattu, Kancheepuram District
|
044-27428832
|
5
|
The President,
District Consumer Disputes Redressal Forum,
No: 1, D.C.V. Naidu Road, 1st Cross Street,
Tiruvallur – 602 001
|
04116-27664823
|
6
|
The President,
District Consumer Disputes Redressal Forum,
District Court Buildings Campus
Saththuvachcheri, Vellore – 632 009
|
0416-2254780
|
7
|
The President,
District Consumer Disputes Redressal Forum,
58/D, Anna Salai, Adhidravida Welfare Office (Ground Floor)
Dindivanam, Tiruvannamalai – 606 601
| |
8
|
The President,
District Consumer Disputes Redressal Forum,
No: 58, Chennai Trunk Salai,Villupuram, Villupuram District
| |
9
|
The President,
District Consumer Disputes Redressal Forum,
102, Pudhupalayam Main Road, Cuddalore – 2
|
04142-295926
|
10
|
Dharmapuri -- @ Krishnagiri
| |
11
|
The President,
District Consumer Disputes Redressal Forum,
Yercard MainRoad, Hasthampatty,
Salem – 636 007
|
0427-2213279
|
12
|
The President,
District Consumer Disputes Redressal Forum,
3-152-D, Jeeva Complex Tiruchi Main Road, Namakkal – 637 001
|
04286-224716
|
13
|
The President,
District Consumer Disputes Redressal Forum,
Erode Commercial Complex
Surampatti Naal Road, Erode – 638 009
|
0424-2250022
|
14
|
The President,
District Consumer Disputes Redressal Forum,
District Collector’s Office campus, Coimbatore – 641 018
|
0422 - 2300152
|
15
|
The President,
District Consumer Disputes Redressal Forum,
N.G.M.S.Campus, Udhagamandalam – 643 001
|
04232 - 2451500
|
16
|
The President,
District Consumer Disputes Redressal Forum,
Municipal Buildings, Azad Salai, Karur – 639 002
|
04324 - 260193
|
17
|
The President,
District Consumer Disputes Redressal Forum,
Lakshmi Illam, 345, Rower Nagar, First Floor
Ellampaloor Salai, Perambalur, Perambalur District – 621 212
|
04328-276700
|
18
|
The President,
District Consumer Disputes Redressal Forum,
St. Mary’s Campus, First Floor,
Bharathidasan Road, Tiruchirapalli – 620 001
|
0431-2461481
|
19
|
The President,
District Consumer Disputes Redressal Forum,
Ilango Commercial Complex. Court Road, Neethi Nagar,
Thanjavur – 613 002
|
04362-272507
|
20
|
The President,
District Consumer Disputes Redressal Forum,
52, Kumaran Koil Salai, Tiruvarur, Tiruvarur District – 610 001
|
04366-224353
|
21
|
The President,
District Consumer Disputes Redressal Forum,
543, Public l Office Road, Vellipalayam, Nagapattinam – 611 001
|
04365-247668
|
22
|
The President,
District Consumer Disputes Redressal Forum,
District Court Buildings Campus, Pudukottai, Pudukottai District
| |
23
|
The President,
District Consumer Disputes Redressal Forum,
No: 95 & 96, Pensioners’ Street,
Near Arya Bhavan, Dindigul, Dindigul District
|
0451 - 2433055
|
24
|
The President,
District Consumer Disputes Redressal Forum,
1st Floor, Combined Court Building, Lakshmipuram,
Periakulam Road, Theni – 625 523
|
04546-269801
|
25
|
The President,
District Consumer Disputes Redressal Forum,
District Court Buildings Campus, Madurai, Madurai District
|
0452-253304
|
26
|
The President,
District Consumer Disputes Redressal Forum,
10 / 25, Thirupattur Road, Sivaganga – 630 561
|
04575-241591
|
27
|
The President,
District Consumer Disputes Redressal Forum,
District Court Complex, Srivilliputtur, Virudhunagar – 626 125
|
04563-260380
|
28
|
The President,
District Consumer Disputes Redressal Forum,
District Collecrate Campus, Ramanathapuram – 623 501
| |
29
|
The President,
District Consumer Disputes Redressal Forum,
2/ 263, 10th Street, "Valli Illam" , P & T Colony,
Thoothukudi – 628 008
| |
30
|
The President,
District Consumer Disputes Redressal Forum,
No: 4/993, 2nd Street, Shanthi Nagar,
Bell Ambrose Colony, Palayamkottai, Tirunelveli – 627 002
|
0462-2572134
|
31
|
The President,
District Consumer Disputes Redressal Forum,
New No: 55, Old No: 36/1, First Floor, President Sivadhanu Salai,
S.L.B. Higher Secondary School (South), Nagarcoil,
Kanniyakumari – 629 001
|
04652-229683
|
32
|
The President,
District Consumer Disputes Redressal Forum,
No: 46, M.V.K. Mansion, West Links Colony,
Krishnagiri – 635 001
|
லஞ்சத்தினை ஒழிக்க இளம் சமுதாயம் முன்வர வேண்டும்
ஊட்டி, : லஞ்சத்தினை ஒழிக்க இளம் சமுதாயத்தினர் முன்வர வேண்டும் என விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
நேரு யுவகேந்திரா, கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்கம், மகாத்மா காந்தி பொது சேவை மையம், பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்றம் ஆகியவை சார்பில் உப்ப ட்டி எம்.எம்.எஸ்.பள்ளியில் லஞ்சம் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய செயலாளர் கணே சன், ஆசிரியர் சூசன் ஜே ஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் கவிதா தலைமை தாங்கி பேசு கையில், ‘லஞ்சம் இல்லாத இடம் இல்லை எனும் நிலை உருவாகி விட்டது. எல்லே ரும் லஞ்சம் வாங்குவதில்லை. பலர் லஞ்சம் வாங்க மாட் டாம் என்ற உறுதியுடன் உள்ளனர். லஞ்சம் ஒரு புற்றுநோய் போல பரவி விட்டது. இதனை தடுக்க இளைஞர்கள் முன்வர வேண்டும்’ என்றார். மைய தலைவர் சிவசுப்ரமணியம் பேசு கையில், லஞ்சம் அதிக ரிக்க மக்க ள முதல் காரணம். மக்கள் தகுதி யை மறைத்து அரசு சலுகைகளை பெற நினை ப்பதாலேயே லஞ்சம் அதிகரித்து வருகிறது. முன்பு கட மயை செய்த பின்னர் லஞ்சம் கேட் டனர். ஆன ல் தற் பாது லஞ்சம் கொடுங்கள் கடமையை செய்கிறோம் என்ற நிலை உள்ளது. லஞ்சம் அதிகரிப்பதால் நாட்டின் வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்படுகின்றது. தற்போதைய நிலையில் கோடிக்கணக்க ன ஏழைகள் தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இவர்களுக்கு அரசு வழங்கும் சலுகைகளை வேறு தகுதியில்லாதவர்கள் லஞ்சம் கொடுத்து பெற்று செல்கின்றனர். லஞ்சத்தினை ஒழிக்க இளம் சமுதாயத்தினர் முன்வர வேண்டும். லஞ்சம் வாங்க மாட்டே ம் என்று உறுதி மொழி எடுக்க வேண்டும். பொது சேவை உரிமை சட்டத்தினை நடைமுறைப்படுத்தினால் லஞ்சம் ஒழியும் என்றார். தொடர்ந்து லஞ்சம் ஒழிப்பு தொடர்பான கட்டுரை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. இதில் குடிமக்கள் நுகர் வோர் மன்ற பொ றுப்பாளர் ராஜாங்கம், ஆசிரி யர் பரிமளாதேவி மற்றும் மாணவ மாணவிகள் உட் பட பலர் கலந்து கெ ண்டனர். |
Subscribe to:
Posts (Atom)
உயில் நடைமுறைகள்
*பதிவு செய்யப்பட்ட உயில் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியுமா?... சட்டம் கூறுவது என்ன*...✍🏻 ⚖️உயில் என்பது ஒரு நபர் தனது மரணத்திற்க...
-
:1.காவல் நிலை ஆணைகள் மொத்தம் எத்தனை தொகுதிகளாக (Volume)உள்ளது? -மூன்று தொகுதிகளாக. 2.காவல் நிலை ஆணைகள் தொகுதி -1ல் மொத்தம் எத்தனை ஆணைக...
-
மின் நுகர்வோர் குறைதீர் மன்றம் / CONSUMER GRIEVANCE REDRESSAL FORUM ( CGRF ) ****************************************************** தமிழ்ந...
-
*#பணியிடத்தில்_பாலியல்_வன்முறை (தடுப்பு,பாதுகாப்பு, குறைதீர்ப்பு) #சட்டம், 2013* *#பாலியல்_வன்முறை_தடுப்பு* இந்தியாவில் பணியிடத்தில் பாலியல...