பந்தலூர் புனித சேவியர் பெண்கள் உயர்நிலை பள்ளியில் செயல் படும் குடிமக்கள் நுகர்வோர் மன்றம் சார்பில் நுகர்வோர் கல்விக்கான உரிமை குறித்து அறியும் வகையில் நுகர்வோர் விழிப்புணர்வு புத்தகங்களான அரசின் நுகர்வோர் கவசம் நுகர்வோர் காவலன் குடிமக்கள் முரசு பாடம் அரும்பு உள்ளிட்ட புத்தகங்களும் தினசரி வெளிவரும் நாளிதழ்களும்மன்ற உறுப்பினர்கள் படிக்க வைக்க பட்டது தொடர்ந்து நுகர்வோர் செய்திகள் குறித்து விளக்கம் மன்ற உறுப்பினர்களிடையே கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது நிகழ்ச்சியில் கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம் பள்ளி தலைமை ஆசிரியர் செலின் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் மார்ட்டின் மகாத்மா காந்தி பொது சேவை மைய அமைப்பாளர் நௌசாத் நுகர்வோர் மைய பந்தலூர் வட்டார அமைப்பாளர் தனிஸ்லாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
பந்தலூர் புனித சேவியர் பெண்கள் உயர் நிலை பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்ற மாணவிகள் களஆய்வுக்காக பந்தலூர் வட்டசியர் அலுவலகத்திற்கு சென்று வந்தனர். பந்தலூர் வட்ட வழங்கல் அலுவலர் மோகன் மற்றும் தேர்தல் தனி துணை வட்டசியர் சங்கர நாராயணன் ஆகியோர் பொது விநியோக திட்டம் அதன் செயல்பாடுகள் குறித்து விளக்கம் அளித்தனர்.
வட்ட வழங்கல் அலுவலர் மோகன் பேசும்போது மக்களுக்கு பொது விநியோக திட்டம் மூலம் உணவு பொருட்கள் அரசு கொள்முதல் செய்து விநியோகிக்கிறது. அரிசி 24 கிலோ சர்க்கரை 2 கிலோ மண்ணெண்ணெய் கோதுமை உள்ளிட்ட பொருட்கள் அரசு ஒதுக்கீட்டிற்கேற்ப வழங்க படுகிறது. பந்தலூரில் தற்போது 46 கடைகள் மூலம் பொருட்கள் வழங்க படுகிறது. என்றார்.
தேர்தல் தனி துணை வட்டசியர் சங்கர நாராயணன் பேசும்போது அரசு மானிய விலையில் வழங்கும் பொருட்களை பெற குடும்ப அட்டைகள் வழங்க பெற்றுள்ளது புதிய குடும்ப அட்டைகள் பெற உரிய ஆவணகளை இணைத்து கொடுத்தால் உரிய ஆய்வுக்கு பின் உண்மையான விண்ணப்ப தாரர்களுக்கு 60 நாட்களில் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப் படும். நியாய விலைக்கடைகள் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும் அரசு விடுமுறை மற்றும் வெள்ளி கிழமைகளில் விடுமுறை விடப்படும் பணி நாட்களில் பெருட்கள் பெற்றுக்கொள்ளலாம். போலி கார்டுகள் கண்டு பிடித்து கொடுப்போருக்கு தக்க சன்மானம் வழங்க படும் நியாய விலை கடைகள் குறித்து புகார்கள் தெரிவிக்கப்பட்டால் உண்மை நிலை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க படும். என்றார்.
நிகழ்ச்சியில் கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம் பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்ற பொறுபாசிரியர் மார்டின், உடற்கல்வி ஆசிரியர் உஷா, நுகர்வோர் மைய நிர்வாகி தனிஸ்லாஸ், காந்தி பொது சேவை மைய அமைப்பளார் நௌசாத் மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.