இளையோர் வார விழா 20,01,2017

இளையோர் வார விழா 20,01,2017

பந்தலூர் அ|ருகே தேவாலா அரசு மேல்நிலைப்பள்ளியில் கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் இந்தியஅரசு நேருயுவகேந்திரா நீலகிரி பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்றம் ஆகியன சார்பில் இளையோர் வார விழா நிகழ்ச்சி நடைப்பெற்றது.

நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் உதயகுமார் தலைமை தாங்கினார்.  ஆங்கில ஆசிரியர் கிருஷ்ணகுமார் முன்னிலை வகித்தார்.

கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய தலைவர் பேசும்போது  இளைஞர்கள் மன உறுதியோடு செயல்பட வேண்டும், தற்போது அதிகரித்து வரும் தவறான பழக்கங்களில் அடிமையாகாமல் நல்வழியில் வாழ்வை அமைத்து கொள்ள வேண்டும்.  தினசரி நிகழ்வுகளை அறிந்து கொள்ள பத்திரிக்கை படிக்க வேண்டும் என்றார்.

தேவாலா அரசு பழங்குடியினர் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சமுத்திரபாண்டியன் பேசும்போது விவேகானந்தர் துறவு மேற்கொண்டாலும் நாட்டின் மீதும் இளைஞர்கள் மீதும் பற்று கொண்டிருந்தார்.  அவர் இளைஞர்களை ஒருங்கிணைத்து அவர்கள் முயற்சியினால்  சமுதாய மாற்றம் வரவேண்டும் என்ற விரும்பியது இன்று நடைபெறுகின்றது.  இளைஞர்கள் நாட்டு பற்று சமுதாய பங்களிப்புடன்  செயல்படவேண்டும் என்றார்.

ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர்  சத்தியநேசன் பேசும்போது இளைஞர்கள் தங்கள் திறன்களை அறிந்து கொள்ளுதல் அவசியம்.  திறமைகளை அறிந்து அதனை எட்டும் வழிகளை அறிந்து அதனை பின்பற்றினால் வாழ்வில் வெற்றி பெறலாம்.   மாற்றத்திற்கான முயற்சியை இளைஞர்கள் மேற்க்கொள்ள வேண்டும் என்றார்.

கூடலூர் கல்லூரி நாட்டு நலப்பணிதிட்ட அலுவலர் மகேஸ் பேசும்போது இளைஞர்கள் மாணவர்கள் மத்தியில் தற்கொலை எண்ணங்கள் அதிகரித்து வருவது வேதனைக்குரியது.  இளைஞர்கள் தவறான வழிகளை விடுத்து பெற்றோர்கள் நண்பர்கள் உறவினர்கள் இருப்பதை உணர்ந்து மனஉறுதியோடு வாழ பழகவேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் பலர் பங்கேற்றனர். 














சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு

கூடலூர் தோட்ட தொழிலாளார் தொழிற்பயிற்சி  மையத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு நடைப்பெற்றது.
கூடலூர் காவல் துறை, கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் ஆகியன இணைந்து சாலை பாதுகாப்பு மற்றும் இளையோர் வார விழாவை முன்னிட்டு நடத்திய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கிற்கு கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம் தலைமை தாங்கினார்.
பயிற்சி மைய முதல்வர் ஜிஜு ஜோர்ஜ் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசிய கூடலூர் காவல் துணை கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசலு பேசும்போது  சாலையில் விபத்துகள் ஏற்படாமல் தடுப்பதற்கு தான் விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுகின்றது.  மனிதஉயிர்கள் பாதுகாக்கப்பட வேண்டியது மிகவும் முக்கியம்,  வேகமாக செல்லும் போது நமது கவனம் சிதறும் வாய்ப்பு அதிகம் எதிரில் வரும் வாகனம் வழிவிடுவதற்கு இயலாத நிலை உள்ளது.  செல்போன்களில் பேசிக்கொண்டு வாகணங்களை இயக்கும் பழக்கம் அதிகரித்து வருகின்றது.  இதனால் சாலை விபத்துகள் அதிகரித்து உள்ளது.  சிறு தடுமாற்றம் சமாளிக்க முடியாமல் விபத்துகள் ஏற்படுவதை தவிர்க்க இளைஞர்கள் முன்வரவேண்டும்.  அதுபோல பைக் ரேஸ், அளவுக்கு மீறி வேகமாக வாகணங்கள் இயக்குதல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.  காவல்துறை நட்புடன் கூடிய காவல்துறையாக செயல்படுகின்றது.  படிக்க இயலாத ஏழை எளிய வறுமையில் உள்ள மாணவர்கள் படிப்பிற்கு உதவுதல் ஆதரவற்றவர்களுக்கு உதவுதல் போன்ற சமூக பணிகளையும் மேற்க்கொண்டு வருகின்றது.  அதுபோல சிறப்பு போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி வழங்கி அரசு வேலை பெற உதவுகின்றது.  படித்த இளைஞர்கள் அரசு வேலை பெற திறன்களை மேம்படுத்தி கொள்ள இதுபோன்ற பயிற்சிகளை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
மோட்டர் வாகண ஆய்வாளர் சண்முகசுந்தரம் பேசும்போது சாலை விபத்துகளில் வெறும் 20 சதவீதம் மட்டுமே வாகன பாதிப்பினால் விபத்து ஏற்படுகின்றது.  மிதி மனித தவறுகளினால்தான் ஏற்படுகின்றது.  லைசென்ஸ் இல்லாமல் வாகணங்கள் இயக்குதல் குற்றமாகும்.  இருசக்கர வாகணங்களில் செல்லும் போது முன்னும் பின்னும் அமர்ந்து செல்லும் இருவரும் தலைகவசம் அனிந்த செல்லவேண்டும்.  கார்களில் செல்லும்போது சீட்பெல்ட் அணிநது செல்ல வேண்டும்.  சாலைவிதிகளை மதித்து வாகணங்களை இயக்கினால் விபத்துகளை தவிர்க்க முடியும்.,  18 வயது பூர்த்தியடைந்தவர்களுக்கு போக்குவரத்து துறையை அனுகினால் லைசென்ஸ் வழங்க நடவடிக்கை மேற்க்கொள்ளப்படும் என்றார்,
நிகழ்ச்சியில் காவல் துறை ஆய்வாளர் சக்திவேல், போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர்கள் சத்தியன், ராஜன், கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய ஆலோசகர் காளிமுத்து, சத்தியநேசன் ஆகியோர் சாலை பாதுகாப்பு குறித்து பேசினார்கள்
பயிற்சி மைய மாணவர்கள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
முடிவில் பயிற்சி மைய மூத்த ஆசிரியர் மாதையன் நன்றி கூறினார்.











உயில் நடைமுறைகள்

 *பதிவு செய்யப்பட்ட உயில் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியுமா?... சட்டம் கூறுவது என்ன*...✍🏻 ⚖️உயில் என்பது ஒரு நபர் தனது மரணத்திற்க...