இன்று பிப்ரவரி 28. என்ன நாள் தெரியுமா? “தேசிய அறிவியல் தினம்“.
இன்று பிப்ரவரி 28. என்ன நாள் தெரியுமா?
“தேசிய அறிவியல் தினம்“.
இது எத்தனைப் பேருக்கு தெரியும்?
நிலைமை இப்படிதான் உள்ளது. காதலர் தினம் என்றால் என்ன என்று 10 வயது சிறுவனுக்கு கூட தெரிகின்றது.
(காதலர் தினம் கொண்டாட வேண்டாம் என்று கூறவில்லை),
ஆனால் அறிவியல்தினம் பற்றியும் நாம் அறிந்து வைத்திருக்க வேண்டாமா? அறிவியல் தினம் கொண்டாடப்படுவதற்கான காரணம் என்ன?
இது சர் சி.வி.ராமன் அவர்கள் தன் கண்டுபிடிப்பான (Raman Effect) ராமன் விளைவு கண்டுபிடித்த தினம்.
இந்தக் கண்டுபிடிப்பு உலகளாவிய பெருமையை இந்தியாவிற்குப் பெற்று தந்தது. மேலும் உயரிய விருதான நோபல் பரிசும்(1930) இவருக்கு கிடைத்தது.
இதில் நாம் பெருமை கொள்ளும் மற்றொரு செய்தி இவர் ஒரு தமிழர். ஊர் திருச்சிராப்பள்ளி.
மேலும் சில விவரங்கள்:
முழுப்பெயர் : சந்திரசேகர வெங்கடராமன்
பிறப்பு இறப்பு : நவம்பர் 7, 1888 – நவம்பர் 21, 1970
சென்னை மாகாண முதன்மைக் கல்லூரில்(Presidency College) இயற்பியல் மற்றும் ஆங்கிலத்தில் தங்க பதக்கம் பெற்ற மாணவர். கொல்கத்தாவில் இந்திய அரசுபணியில் சேர்ந்தார்.
அதன் பின்னர் கொல்கத்தா பல்கலைகழகத்தில் 15 ஆண்டுகள் பணியாற்றினார். இந்த காலத்தில் தான் தன் கண்டுபிடிப்புகளை உலகிற்கு தந்தார்.
1934ல் பெங்களூர் இந்திய அறிவியல்கழக முதல்வராக பொறுப்பேற்றார். உலக அரங்கில் இந்தியாவின் புகழை தலை நிமிர வைத்தவர்.
தேசிய அறிவியல் தினத்தை கொண்டாடும் நோக்கம் என்ன?
அறிவியல் என்பது வெறும் விஞ்ஞானிகளுக்கும் மெத்த படித்தவர்களுக்குமான சொத்தல்ல. அவை அடித்தட்டு மக்களையும் சென்றடைய வேண்டும்.
அது தான் அறிவியலின் வெற்றியாக கருத முடியும். ஆரோக்கியம் முதல் அணு ஆராய்ச்சி வரை எல்லா பயனும் சாதாரண பாமரனை சென்றடைய வேண்டும்.
அவன் வாழ்கை தரம் உயர வேண்டும். குழந்தைப்பருவத்தில் இருந்தே அறிவியல் தாகத்தையும்,
ஆர்வத்தையும் மாணவர்களுக்கு ஏற்படுத்தப்பட வேண்டும்.
ஆர்வத்தையும் மாணவர்களுக்கு ஏற்படுத்தப்பட வேண்டும்.
அறிவியல் ஒரு பாடம் அல்ல, அது வாழ்கையின் ஒர் அணித்தரமான அங்கம் என்பதை மாணவர்கள அறியவேண்டும்.
வெறும் ஏட்டில் படித்தால் மட்டும் போதாது,
அவற்றை நிஜவாழ்கையோடு ஒப்பிட்டுப் பார்க்கும் திறனை வளர்க்க வேண்டும்.
அறிவியலின் சாராம்சம் இது தான்.
ஏன்? எதற்கு ?? எப்படி ??? என்றும் எழும் கேள்விகளுக்கு விடை காணுங்கள்.
கிடைத்த விடையை மீண்டும் ஆராய்ந்து கேள்வி கேளுங்கள்.
அது தான் கல்லோடு வாழ்ந்திருந்த மனிதனை இன்று கணிப்பொறியோடு வாழ வைத்துள்ளது.
என்று கேள்விகள் நிற்கின்றதோ அன்றே வளர்ச்சியும் நின்றுவிடும்.
அனைவருக்கும்
தேசிய அறிவியல் தின நல் வாழ்த்துகள்..
🌸 அறிவியலால் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் வியப்பில் ஆழ்த்தக் கூடியவை
🌸 பல்வேறு அறிவியல் அறிஞர்களின் கடின உழைப்பால் விளைந்தப் பொருட்கள் ஏராளம்
🌸இவற்றில் கண்ணிற்குத் தெரிந்த பொருட்களும் கட்புலனாகாத கதிர் வீச்சுகளும் வான் வெளி விந்தைகளும் அடங்கும்
🌸இயற்பியல்,வேதியியல், உயிரியல் இருந்த அறிவியல் இன்னும் பல நுண் பிரிவுகளாகப் பிரிந்து புதிய துறைகளாக மாறி வருகின்றன என்பது பெருமையே
🌸 மருத்துவத் துறையில் எல்லையற்ற வளர்ச்சியைக் கண்ட போதிலும் இன்னும் பல சவால்கள் இருந்து கொண்டே இருக்கின்றன
🌸வேளாண்மையைப் பொறுத்தவரையில் வேளாண் கருவிகள் கண்டுபிடிக்கப் பட்டாலும் புதிய புரட்சியை காணமுடியவில்லை
🌸வேளாண்மையைக் காப்பதற்கும் விசாலமாக்குவதற்கும் இன்னும் இத்துறையில் புதிய வல்லுநர்கள் தேவைபடுவதை உணர முடிகின்றது.
🌸அறிவியல் யுகத்தில் வாழ்கிறோம் என்று பெருமைப் பட்டுக் கொண்டாலும் அறிவியல் மனப்பான்மை குறைந்து வருவது ஏமாற்றத்தைத் தருகிறது
🌸அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பதும் அறிவியல் சார்ந்த கண்டுபிடிப்புக்களை ஊக்கப்படுத்தவதும் நமது கடமையாகவே கருதுகிறேன்
🌸முதலில் இந்தியாவின் அறிவியல் அறிஞர்களின் பங்களிப்பினை வளரும் இத்தலைமுறையினருக்கு எடுத்துச் சொல்வது மிக மிக அவசியம்
🌸 சர் சி வி இராமன் ,GT நாயுடு ஜே.சி போஸ்,குரானா போன்றோரின் வாழ்க்கையை பாடத் திட்டத்தில் வரும் ஆண்டுகளில் சேர்பதற்கான வழிவகை காணபட்ட போதிலும் உயிருள்ள புத்தகமான நம் அனைவரின் பங்களிப்பு முதன்மை பெறுவதை உணரமுடிகிறது.
🌸 வாழும் நியூட்டன் என அழைக்கப்படும் அர்விந்த் குப்தாவின் எளிய சோதனைகளை இளைய தலையமுறையினருக்கு எடுத்துச் செல்ல வேண்டும்
🌸கலாம் சாட் உருவாக்கிய இளையதலைமுறை ரிபாத் போன்றோரை NASA அடையாளம் காண்பித்த பிறகே நாம் அடையாளம் கண்டிருக்கிறோம் என்பது கூட வளர்ச்சியை நோக்கிய பயணத்தில் நாம் இருக்கிறோமா என்ற மிகப் பெரிய கேள்வியை நம்முள் எழுப்புகிறது.
🌸அறிவியல் ஆய்வகங்கள் உருவாக்கப்பட்ட போதிலும் ஆய்வுகளும் ஆய்வு மனப்பான்மைகளும் குறைந்து மறைந்து போகாமல் இருப்பதற்கான வழிவகைகளை காணவேண்டும்
🌸நூல்கள் வாசிப்பு உயிர்ப்புப் பெறவேண்டும்
🌸 நன்றி இரா.சக்திவேல் ப.ஆ