அயோடின் பற்றிய முழு தகவல்



உலகில் அயோடின் பற்றாக்குறையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் அதை தவிர்க்கும் முறைகள் குறித்தும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவே 






















ஆண்டு தோறும் அக்டோபர் 21 ம் தேதி உலக அயோடின் குறைபாடு தினம் (Global Iodine Deficiency Day, October 21) அனுசரிக்கப்படுகிறது
மனித உடலுக்கு மிகவும் அவசியமானது, கால்சியம், இரும்பு, அயோடின், தாமிரம், பாஸ்பரம், மாங்கனீசம், துத்தநாகம் போன்ற சத்துகள்! இவற்றை சேர்க்க தவறினால் கோளாறுகளும் அது தொடர்ந்து நோய் பாதிப்பும் ஏற்படுகிறது. 
உடலிலுள்ள செல்கள் வளர்ச்சி அடைய இந்த சத்துக்கள் மிக அவசியம். இவற்றுள் அயோடின் மிக முக்கியமானது. அயோடின் கலந்த உப்பை போதுமான அளவில் தினசரி பயன்படுத்துவது ஓர் ஆரோக்கியமான பழக்கம்.
CRz7iiVUsAADMY1
மனித உடலுக்கு தினசரி மிகக் குறைவான அளவே 150 மைக்ரோ கிராம் அயோடின் தேவைப்படுகிறது. குறைவாகத்தானே தேவைப்படுகிறது. இது இல்லாவிட்டால் என்ன? மற்றச் சத்துகள்தான் நிறையவே இருக்கிறது என்று அலட்சியமாக இருந்தால் அவதிப்படப் போவது நீங்கள் தான்.
முதலில் அயோடின் என்றால் என்ன என்று கேட்டால் பலரும் அது ஒரு வகையான உப்புன்னு நெனைக்கின்றாங்க. அது ரொம்ப தப்பு. அயோடின் என்பது ஒருவகையான மினரல் ஆகும். ஆறு, நதி, ஏரி போன்ற நீர்நிலைகளை ஒட்டியுள்ள பகுதிகளில் இயற்கையாகவே அயோடின் அதிகமாக காணப்படும். 
குறிப்பாக, நீர்நிலைகளின் மணற்பரப்பிலும் அயோடின் ஏராளமாக இருக்கும். இந்த அயோடின்தான் கடல்நீரிலும் மிகுந்து காணப்படுகிறது. உப்பில் அயோடின் ஒளிந்திருக்கும் ரகசியம் இதுதான். பச்சைத் தாவரங்களிலும் அயோடின் உள்ளது.
இயற்கையான நீர் நிலைகளின் மூலமாக மனிதர்களுக்குக் கிடைக்க வேண்டிய அயோடின் சத்து பல நேரங்களில் கிடைக்காமல் போய்விடுகிறது. இதனால் அயோடின் சத்து குறைபாடு அதிகம் ஏற்படுகிறது. இதனால் பலவிதமான பாதிப்புகள் ஏற்படுகின்றன. 
முக்கியமாக தைராக்ஸின் ஹார்மோன் சுரப்பில் பாதிப்பு ஏற்படுவதால் தைராய்டு குறைபாட்டை உருவாக்குவது அயோடின் பற்றாக்குறைதான். கடந்த 2015ம் ஆண்டு எடுக்கப்பட்ட ஆய்வு ஒன்றின்படி 4.7 சதவிகிதம் பேருக்கு உலகளவில் தைராய்டு குறைபாடு உள்ளது.
சுருக்கமா சொல்லணும்னா மனிதர்களின் உடல் உயரம் மற்றும் பருமனை நிர்ணயிப்பது இது தான்! சிலர் உயரமாகவும், சிலர் குள்ளமாகவும், சிலர் பருமனாகவும், வேறு சிலர் ராட்சத தோற்றம் கொண்டவர்களாக இருப்பதற்கு இந்த அயோடினே காரணம்.
 மேலும் அயோடின் பற்றாக்குறை குழந்தைகளில் உடல் வளர்ச்சி மற்றும் மூளை செயல்பாட்டை மந்தமாக்குகிறது. 10 முதல் 15 ஐ.கியூ பாயிண்ட்களை இழக்கச் செய்கிறது. இதனால், பள்ளிப் படிப்பில் செயல்திறன் குறைந்துவிடுகிறது. மனித உடல் வளர்ச்சியில் வேறுபாடுகளை உருவாக்குவது, உடலிலுள்ள தைராய்டு சுரப்பிகளின் ( Thyroid Glands) வேலை.
இந்த தைராய்டு சுரப்பிகள் கழுத்தில் முன்பக்கமாக குரல் வளைக்கு கீழ் அமைந்துள்ளன. பக்கத்துக்கு ஒன்றாக இரு சுரப்பிகள் இருக்கின்றன. சுமார் 25 கிராம் எடையுள்ள இவை ஒரு திசு மூலம் ஒன்றோடு ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன.

இவைகளிலிருந்து தைராக்ஸின் என்ற ஹார்மோன் சுரக்கிறது. இது உடலில் வளர்சிதை மாற்றத்தை கட்டுப்படுத்துகிறது. உடலிலுள்ள அயோடினில் பெரும்பகுதி தைரோகுளோபின் என்ற பொருளாக இருக்கிறது.
இதுக்கிடையிலே நமது உடலில் இயற்கையாகவே அயோடின் உள்ளது. ஆனால், இந்தச் சத்து பற்றாக்குறையின் போது நமது உடலுக்கு அயோடின் சேர்ப்பது அவசியமாகிறது.
அறிகுறி
காரணம் இல்லாமல் உடல் எடை அதிகரிப்பது அல்லது குறைவது,
மலட்டுத் தன்மை,
முடி உதிர்வு,
சருமத்தில் வறட்சி, குளிர் / வெப்பத்தை தாங்க முடியாமை,
களைப்பு,
மனச் சோர்வு,
அதிக வியர்வை,
படபடப்பு,
எப்போதும் தூக்க கலக்கம்,
மலச்சிக்கல் / வயிற்றுப் போக்கு,
கழுத்தில் வீக்கம் போன்றவை
இதன் அறிகுறிகளாக இருக்கின்றன.
ஆண்களுடன் ஒப்பீடும் போது பெண்களுக்கு தைராய்ட்டு ஏற்படும் அபாயம் 5 மடங்கு அபாயம்.
இந்தச் சத்துக் குறைவால் இந்தியாவில் காஷ்மீர், உத்தரப் பிரதேசம், நாகலாந்து, அசாம், மணிப்பூர், இமாச்சலப் பிரதேசம், வட கிழக்கு எல்லைப் புற மாகாணம் போன்ற பகுதிகளில் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 இந்தியாவில் சுமார் 7.1 கோடி பேர்கள் அயோடின் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டிருகிறார்கள். மேலும் 20 கோடிக்கும் மேலானோர் இந்த பாதிப்பின் ஆபத்தில் இருக்கிறார்கள்.
பற்றாக்குறையால் ஏற்படும் பாதிப்பு
அயோடின் சத்து உடலில் குறைந்தால் பல்வேறு நோய்கள் உருவாவதை தடுக்க முடியாது. இதில், ஹைபோ தைராய்டிசன் நோய் அபாயாகரமானது. இந்நோய் ஏற்பட்டால் கழுத்திலுள்ள தைராய்டு சுரப்பி வீக்கமடைந்து கழுத்தின் முன் பக்கம் பெரிய கட்டிப் போல் பெருத்துவிடும்.
அப்போது தைராய்டு சுரப்பி குறைந்த அளவில் வேலை செய்யும். அதன் விளைவு எடை அதிகரிப்பு, சுறுசுறுப்பு, பசியின்மை, குறைவான இருதயத் துடிப்பு, குறைந்த வளர்சிறை மாற்றம், மனவளர்ச்சி பாதிப்பு போன்றவை ஏற்படும்.
குழந்தைகளை இக்கோளாறுகள் அதிகமாக பாதிக்கின்றன. அவர்களின் உடலில் தைராய்டு சுரப்பிகள் குறைவாயாக வேலை செய்தால் அயோடின் குறைவு உருவாகும். அதனால், கிரெட்டினிசம் என்னும் நிலை உண்டாகிறது. 
பாதிக்கப்பட்ட குழந்தைகள் குண்டாகவும், குள்ளமாகவும் இருப்பார்கள். இவர்களுக்கு போதிய அளவு மன வளர்ச்சி இருப்பதில்லை. அயோடின் பாதிப்பு இருந்தால் குழந்தைகளுக்கு உடல் மற்றும் மன வளர்ச்சி குறைவாக இருக்கும்.
இதனால், அவர்களின் பள்ளிப் படிப்பில் முன்னேற்றம் இருக்காது. இந்த பிரச்னை உள்ள பெண்களுக்கு அடிக்கடி கருச்சிதைவு ஏற்படக்கூடும். பாதிப்பு அதிகரிக்கும் போது மனைநிலை பாதிப்பு ஏற்படும். இந்த அயோடின் பற்றாக்குறை மேலும் கடுமையான விளைவுகளைக் குழந்தைகளுக்கு ஏற்படுத்தக்கூடும் என்பதால் பிரச்னையின் ஆரம்பக் கட்டத்திலேயே கவனித்து சிகிச்சை பெறுவது அவசியம்.
சிகிச்சை
அயோடினை நாம் உண்ணும் உணவுப் பொருட்களிலிருந்து பெறுகிறோம். சில சமயங்களில் உணவு பொருட்களில் போதுமான அளவு இருக்காது. அப்போது தனியாகச் சாப்பிட வேண்டும்.
அயோடினை நாம் நேரடியாக சாப்பிட முடியாது என்பதால் அதைத குடிக்கும் நீரிலோ அல்லது உணவுடன் சேர்த்துக் கொள்ளும் உப்பிலோ (சோடியம் அயோனைடு) கலந்துக் கொள்ளலாம். உப்போடு அயோ டினை சேர்ப்பது சுலபமான வழி. இதற்காக அயோடின் கலந்த உப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
தைராய்டு பிரச்னை இருப்பவர்கள் எலக்ட்ரான்சின் மாத்திரைகளை காலையில் வெறும் வயிற்றில் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும். பாதிப்பின் தன்மைக்கு ஏற்ப முழு அல்லது பாதி மாத்திரையை உட்கொள்ள வேண்டும்.
கர்ப்பிணி பெண்களும் வழக்கம் போல் சாப்பிட்டு வர வேண்டும். அது பிறக்கும் குழந்தைக்கு இந்த பிரச்னை வராமல் தடுக்க உதவும். அதே நேரத்தில் இந்த முடிவை மருத்துவ நிபுணரை கலந்து ஆலோசித்தே எடுக்க வேண்டும்.
இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் அயோடின் கலக்காத உப்பை விற்கத்தடை உள்ளது. இதன் மூலம் பெரும்பாலோருக்கு அயோடின் பற்றாக்குறையால் ஏற்படும் பாதிப்பை தடுத்து வருகிறது
அயோடின் யாருக்கு எவ்வளவு?
தினந்தோறும் ஒவ்வொரு நபருக்கும் தேவைப்படும் அயோடினின் அளவு அவர்களின் வயதுக்கு ஏற்ப மாறுபடுகிறது.
சிசுகளுக்கு அவை கருவில் வளரும் போதே 5 முதல்10 மாதங்களில் 40 முதல் 50 மைக்ரோ கிராம் அயோடின் தேவைப்படுகிறது. இந்த அளவு குழந்தைகள் வளர வளர வளர்ச்சிக்கு ஏற்ப அதிகரிக்கிறது.
* 1 – 3 வயது – மைக்ரோ 70 கிராம்
* 4 – 6 வயது – 90 மைக்ரோ கிராம்
* 7 – 10 வயது – 120 மைக்ரோ கிராம்
* 11 – 50 வயது – மைக்ரோ 150 கிராம்

பதப்படுத்தும் உணவையும்பதனமா பாருங்க

பதப்படுத்தும் உணவையும்பதனமா பாருங்க




பதப்­ப­டுத்­தப்­படும் உணவுப் பொருட்­களில், கடை­பி­டிக்க வேண்­டிய தர அள­வீடு குறித்த வரைவு விதி­முறை­களை, இந்­திய உணவு பாது­காப்பு மற்றும் தர நிர்­ணய ஆணையம் வெளி­யிட்டு உள்­ளது. 

ஜாம், ஜெல்லி… இது­கு­றித்து, இவ்­வா­ணைய தலைமை செயல் அதி­காரி பவன் அகர்வால் கூறி­ய­தா­வது:புதிய உணவுப் பொருட்­களின் தர அள­வீட்டை நிர்­ண­யிக்கும் பணி, வழக்­க­மாக நடை­பெ­று­வது தான். 

தற்­போது, பொது­வாக பயன்­ப­டுத்தும், உறைய வைக்­கப்­பட்ட காய்­க­றிகள், பதப்­ப­டுத்­தப்­பட்ட பழங்கள், ‘டின்’­களில் அடைத்து விற்­கப்­படும் உணவுப் பொருட்கள் ஆகி­ய­வற்­றுக்­கான தர நிர்­ணய வரைவு விதி­மு­றைகள் வெளி­யி­டப்­பட்டு உள்­ளன.

அது­கு­றித்து, பொது கருத்­துக்­களின் அடிப்­ப­டையில், விதி­மு­றைகள் அமல்­ப­டுத்­தப்­படும். புதிய விதி­மு­றையில், டின்னில் அடைத்து விற்­கப்­படும் தக்­காளி, தக்­காளி சாறு, உறைந்த பீன்ஸ், காலி­பி­ளவர், பட்­டாணி, கீரை ஆகி­ய­வற்­றுக்­கான தர அள­வீ­டுகள் இடம் பெற்­றுள்­ளன. 

அதுபோல், பழங்­களில் தயா­ரிக்­கப்­படும், ‘ஜாம், ஜெல்லி மற்றும் மர்­மலட்ஸ்’ ஆகி­ய­வற்­றுக்­கான தர நிர்­ணய விதி­மு­றை­களும் உரு­வாக்­கப்­பட்டு உள்­ளன. இந்த உண­வு­களில், உலோ­கங்கள் இருக்க வேண்­டிய அளவும் நிர்­ண­யிக்­கப்­பட்டு உள்­ளது. 

மேலும், இந்த உணவுப் பொருட்­களின், ‘பேக்­கேஜிங்’ மற்றும் ‘லேபிளிங்’ முறை­க­ளுக்கும் விதி­மு­றைகள் வகுக்­கப்­பட்டு உள்­ளன. 

ஆணையம் அங்­கீ­க­ரித்த, உட­லுக்கு ஊறு விளை­விக்­காத மூலப்­பொ­ருட்கள் மட்­டுமே, உணவுப் பொருட்கள் தயா­ரிப்பில் இடம் பெற வேண்டும். 

உணவு


தண்ணீர் என்றால் பத்து நாளில் புழு வைக்க வேண்டும் !
----------------------------------------
பழங்கள் என்றால் குறிப்பிட்ட நாட்களில் அழுகி நாற்றம் எடுக்க வேண்டும் !
----------------------------------------
காய் கறிகள் என்றால் சில நாட்களில் சொத்தையாகி புழு வைக்க வேண்டும் !---------------------------------------
நவ தானியங்கள் என்றால் கொஞ்ச நாளில் வண்டு சேர வேண்டும்...!
----------------------------------------
ஆக எது கெட்டு போகிறதோ !
புழு வண்டு வைக்கிறதோ !
எது அழுகி நாற்றம் எடுக்கிறதோ !
எது ஊசிப் போய் வீணாகிறதோ!
எது குப்பைக்கு போகிறதோ !
அவைகள் மட்டுமே இயற்கையின் விதிப்படி நல்ல தரமான தீங்கு இல்லாத உணவுப் பொருள்கள்.
----------------------------------------
3 மாதம் ஆனாலும் புழு வைக்காமல் இருக்கும் பாட்டில் வாட்டர் கேன் வாட்டர் எப்படி நல்ல தண்ணீர் ஆகும்??
-----------------------------------------
பழமுதிர் நிலையகளிலும் ரிலயண்ஸ் பிரஸ் களிலும் மெகா சூப்பர் மார்கெட்டிலும் பூச்சி மருந்து தெளித்து இரண்டு வாரம் ஆனாலும் கெடாமல் அழுகாமல் இளமை மங்காது பள பளப்பாக விற்கப்படும்
பழங்கள் காய்கறிகள்
நல்ல தரமான பொருட்களா ?? சிந்திப்பீர்.
-----------------------------------------
இரண்டு மூன்று மாதத்தில் வீட்டில் அரைக்கப் படும் மிளகாய் பொடி, இட்லிப் பொடியிலேயே
கடும் காரத்தை உள்வாங்கி புழு வந்து வைத்து கெட்டுப்போகிறது...

பூச்சிக் கொல்லி மருந்து கலந்து பல மாதங்கள் ஆனாலும் கெட்டுப் போகாது மணமாக விற்பனை செய்யப்படும் சக்தி மசாலா, ஆச்சி மசாலா போன்ற பாக்கெட்டுகள் நல்ல பொருளா??

இல்லவே இல்லை...!

ரெடி மேடு உணவு பொருள் பாக்கெட் எல்லாமே நஞ்சு தான் .

டி.வி. விளம்பரம் பார்த்து எந்த உணவு மற்றும் அழகு சாதனப் பொருட்களை வாங்கினால் அதை விட மடமையும் முட்டாள் தனமும் வேறு எதுவும் இல்லை...

கெட்ட உணவுப் பொருள்களை மெகா கடைகளில் வாங்குவது
ஒரு பொழுது போக்காகவும் - சமூக கௌரவமாக மாறி விட்டது...

உண்மையை உணர்வோம்

சமூக அக்கறையுடன்.

மாணவர்களிடையே அதிகரிக்கும் உயர் ரத்த அழுத்தம்!

எச்சரிக்கை - பள்ளி மாணவர்களிடையே அதிகரிக்கும் உயர் ரத்த அழுத்தம்! ஆய்வு கூறுவது என்ன?


கிராமப்புறங்களில் ஆரம்ப மற்றும் மேல்நிலை வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு உயர் ரத்தம் அழுத்தம், இதயம் சம்பந்தப்பட்ட பிரச்னைகளும் அதிகரித்து வருவதாக எய்ம்ஸ் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

புதுடெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் (எய்ம்ஸ்), கோவா, ஹரியானா, குஜராத் மற்றும் மணிப்பூர் மாநிலத்தில் 5 முதல் 15 வயதுக்கு உட்பட்ட 14,000 பள்ளி மாணவர்களிடம் உயர் ரத்த அழுத்தம் குறித்த ஆய்வு செய்துள்ளது. இந்த 

ஆய்வில் மாணவ, மாணவிகள் சம எண்ணிக்கையில் கலந்துகொண்டிருக்கின்றனர். இதில் ஆரம்ப மற்றும் மேல்நிலை வகுப்புகளில் படிக்கும் மாணவர்களில் 23 சதவிகிதம் பேருக்கு உயர் ரத்தம் அழுத்தம் இருப்பதைக் கண்டறிந்துள்ளனர்.

இந்த ஆய்வில், உயர் ரத்த அழுத்தம் மணிப்பூர் மாணவர்களிடையே 30 சதவிகிதமாகவும், 
ஹரியானாவில் 26.5 சதவிகிதமாகவும்,
குஜராத்தில் 13.6 சதவிகிதமாகவும்,
கோவாவில் 10 சதவிகிதமாகவும் உள்ளது. 

கடற்கரை பகுதியில் அமைந்துள்ள மாநிலங்களான கோவாவிலும், 

குஜராத்திலும் உயர் ரத்த அழுத்தம் குறைவாகவும், 

நாட்டின் உள் பகுதிகளில் அமைந்துள்ள மாநிலங்களில் வசிக்கும் மாணவர்களிடையே உயர் ரத்த அழுத்தமாக அதிக எண்ணிக்கையில் இருப்பதாகவும் கண்டறிந்துள்ளனர்.

எய்ம்ஸ் மருத்துவமனையின் கார்டியாலஜி துறையின் பேராசிரியர் மருத்துவர் அனிதா சக்சேனா, 

``மாணவர்களிடையே வாழ்க்கை முறை மாற்றமும், முறையான உடற்பயிற்சி இல்லாததுமே உயர் ரத்த அழுத்தம் கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்புக்குக் காரணம்.

 மாணவர்கள் விரும்பி உண்ணும் நொறுக்குத் தீனிகளும் உயர் ரத்த அழுத்தத்துக்கு முக்கியமான காரணியாக உள்ளது" என்றார் .

``பள்ளி மாணவர்களிடையே ரத்த அழுத்தம் குறித்து உரிய விழிப்பு உணர்வை ஏற்படுத்தினால் மட்டுமே இதயம் சார்ந்த பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்' எய்ம்ஸ் மருத்துவர்கள்.

குழந்தைகளின் பள்ளிகூடம்


இந்நூலை முன்வைத்து ஒரு உரையாடல்....

இந்த நூலின் நேரடிப்பயன்பாடு கருதி இந்த நூலின் ஒவ்வொரு அத்தியாயத்தைப் பற்றி தனித்தனிப் பதிவாக இடுகிறேன்…

குழந்தைகளின் கல்வியின்பால் நேசம் கொண்ட, நீண்ட பதிவுகளை வாசிக்க முயல்பவர்கள் மட்டும் தொடரலாம்.....

அத்தியாயம்:1

பள்ளிக்கூடத்தின் தேவை என்ன?

சமூக, பொருளாதார, அரசியல் காரணங்களைத்தாண்டி பள்ளிக்கூடம் என்ற கற்பிக்கும் இடத்தின் தேவைக்கான உளவியல் காரணத்தை அறிய இந்த முதல் அத்தியாயம் உதவுகிறது.

மூளை, அதன் செயல்பாடு, கல்வி கற்றலில் மூளையின் அடிப்படைகளை இது விளக்குகிறது.

மூளை என்பது நியூரான் எனப்படும் நரம்புச் சிற்றறைகளால் ஆனது. இது உடலெங்கும் தகவல்களைச் சுமந்து செல்கிறது. 

ஒரு காரில் இருக்கும் வெவ்வேறு பாகங்கள் வெவ்வேறு வேலைகளைச் செய்வது போல மூளையின் ஒவ்வொரு பகுதிக்கும் குறிப்பிட்ட பணிகளுண்டு. 

உடலியல் செயல்களான சுவாசம், எதிர் வினைகள், இதயத்துடிப்பு, நுண்தசை அசைவு, பசி தூக்கம் போன்றவற்றைக் கட்டுப்படுத்தும் மூளையின் பகுதிகளாக கோர்ப்பஸ் கலோசம், பேசல் காங்லியா, மெடுல்லா, செரிபல்லம் போன்றவை உள்ளன.

விலங்குகளிடமிருந்து மனிதன் பிரிந்து பகுத்தறிவு கொண்ட உயர்ந்த மூளைத்திறனுடன் இருப்பதற்கு மூளையின் நியோ கார்டெக்ஸ் பகுதியே காரணம். 

ஆசிரியர்கள் மாணவர்களிடம் எதிர்பார்க்கும் திறன்களான,
புரிந்து கொள்வது, நினைவுபடுத்துவது, தொடர்புபடுத்துவது, கருத்துப்பரிமாற்றம் செய்வது, 

தகவல்களை அலசி சில கருத்துக்ளை கண்டறிவது, பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது, கண்டுபிடிப்பது போன்றவைகளுக்கு அடிப்படையாக நியோ கார்டெக்ஸ் பகுதியே உள்ளது.

நூற்றாண்டு கால ஆராய்ச்சியில்,

• பின்பக்க மூளையின் கீழ்ப்பகுதியில் கண்ணால் காணும் காட்சிகளைத் தகவல்களாக மாற்றுகிறோம்.


• நமது இடது காதின் அருகில் அமைந்திருக்கும் மூளையின் பகுதியில் மொழியைப் புரிந்து கொள்கிறோம்.


• மூளையின் மேற்பகுதியிலுள்ள கோடு போன்ற பகுதியில் உடலின் அசைவுகளையும், ஐம்புலன்களின் தூண்டலையும் அறிந்து கொள்கிறோம்.

• மூளையின் முன் வலது பக்க கோடு போன்ற பகுதி தூண்டல்களைத் தகவல்களாக்கி உடலுறுப்புகளுக்கு அனுப்புகிறது.

• மூளையின் நடுப்பகுதியில் இருக்கும் ஹிப்போகாம்பஸ் பகுதியில் நிகழ்வுகளை ஞாபகப்படுத்துகிறோம்; புதிய நிகழ்வுகளைப் பதிவு செய்கிறோம்.

ஹிப்போ காம்பஸ் பற்றி இன்னும் கொஞ்சம் அறிவோமா?.....

மூளையின் நடுப்பகுதியில் அமைந்துள்ள சிறிய, கவர்ச்சியான இந்தப் பகுதிதான் புதிய ஞாபகங்களை உருவாக்கும் பொறுப்பை வகிக்கிறது. 

கற்றல், ஞாபகம் உருவாவது தொடர்பான இந்தப் பகுதி சமீபத்திய ஆய்வுகளில் கவனம் பெற்றுள்ள பகுதி.. ஹிப்போ காம்பஸ் என்பது சுய உணர்வோடு நினைவுபடுத்திக் கொள்ளவும், சொற்களால் வெளிப்படுத்தவுமான பொறுப்பைக் கொண்டது. 

ஒரே ஒருமுறை ஏற்பட்ட அனுபவத்தைக் கூட நினைவுகளாகப் பதிவுசெய்வதே இதன் சிறப்பு ஆகும். இப்பகுதியில் புதிய நினைவுகளைப் பதிவு செய்யும்போது புதிய நியூரான்கள் உற்பத்தியாகின்றன. 

சிலகாலம் கழியும்போது இந்த நியூரான்கள் அழிந்துபோகின்றன. அது அழிவதற்குள் அப்பதிவுகளை மூளையின் பிற்பகுதியிலுள்ள நியோகார்டெக்ஸ் எனப்படும் நியூரான் வலைப்பின்னல் பகுதிக்கு நிலையாக இடம் மாற்றம் செய்து விடுகின்றன. 

எனவே தான் ஹிப்போகாம்பஸ் பகுதி பாதிக்கப்படும்போது, நிலைத்த பகுதிக்கு அனுப்பப்பட்ட நினைவுகள் மறக்காது, ஆனால் சமீபத்தில் ஹிப்போகாம்பஸ் பகுதியில் பதியப்பட்டு, இன்னும் நிலைத்த பகுதிக்கு மாற்றப்படாத நினைவுகள் அழிந்து போகும்.

ஹிப்போகாம்பஸ் பகுதியில் எவ்வளவுக்கு எவ்வளவு புதிய நியூரான்கள் உற்பத்தி ஆகிறதோ அதைப்பொறுத்து கற்றல் விரைவாக நிகழும். ஆனால் முதுமை மற்றும் நீண்ட கால மன அழுத்தம் போன்றவை இப்பகுதியில் நியூரான் உற்பத்தியை வெகுவாகக் குறைத்துவிடுகிறது. 

ஏனெனில் நீண்ட மன அழுத்த காலங்களில் உடலில் உற்பத்தியாகும் வேதிப்பொருளான க்ளுகோகோர்டி கோயிட்ஸர்ஸ் புதிய நியூரான் உற்பத்தியைக் குறைக்கிறது. 

எனவேதான் குழந்தைகள் நன்கு கற்க பள்ளியிலும், வீட்டிலும் மன அழுத்தம் இல்லாத சூழலை உருவாக்க வேண்டியது அவசியமாகிறது.

மூளையிலுள்ள மாட்யூல்களின் பரிணாமம்…..

மனித மூளை மிகவும் பழமை வாய்ந்தது. மனித இனம் தோன்றி வெறும் முப்பது இலட்சம் ஆண்டுகள்தான் ஆகிறது. 

இக்கால அளவில் மனிதன் தனது மூளையின் 99.9% பகுதியை வேட்டையாட, உணவு தேட, பலவிதமான ஆபத்துகளையும், சவால்களையும் சமாளிக்கப் பயன்படுத்தினான். 

இருப்பினும் நீண்டகால அளவில் நான்கு கால் உயிரியிலிருந்து இரண்டுகால் உயிரியாக எழுந்து நடந்தது, மொழியை உருவாக்கியது போன்றவைதான் மனிதனை குரங்கிலிருந்து பிரிக்கின்றன.

பழைய மனித மூளையானது மின்விளக்கில்லாத, வெள்ளை சீனியில்லாத, பள்ளிக்கூடம் இல்லாத சூழலில் வாழ்வதற்குத்தான் பழக்கப்படுத்தப்பட்டுள்ளது.

டேவிட் கீயரியின் மாடுலர் கோட்பாடு….

“இதுவரை சந்திக்காத சவாலான சூழல்களைச் சமாளிக்க அனைத்து உயிரினமும் தேவையான புதிய மாட்யூல்களை உருவாக்கும்”

இப்போது கல்வி என்பதனை இரண்டாகப் பிரிப்போம்…

1. பிறவி சார்ந்த கல்வி உளவியல்.

2. பிறவி சாராத கல்வி உள்வியல்.

இதனை இன்னும் கொஞ்சம் விளக்கிப் பார்ப்போம்….

1.பிறவி சார்ந்த கல்வி என்பது மூன்று பகுதிகளை உடையது.

அ. முறைசாரா இயற்பியல்..

முப்பரிமாண இயற்பியல் பொருட்களுக்கு இடையே சென்று வருவது, வழியிலுள்ள மேடு பள்ளங்களைப் புரிந்து கொள்வது, அசைவுகளை மதிப்பிடுவது, பொருட்களை கற்பனை செய்வது, ஒரு பொருளை வேறொன்றாகக் கருதுவது(கருவிகளைக் கையாளும்போது இந்தத் திறன் மிக அவசியம்).

ஆ.முறைசாரா உயிரியல்.

தாவரங்களையும், விலங்குகளையும் உண்ணத்தகுந்தவை, தகாதவை, மருந்தாகப் பயன்படுபவை எனவும் புலால் உண்ணிகள், அவற்றின் இரைகள் எனவும் வகைப்படுத்தப்படுகிறது.

இ. முறைசாரா உளவியல்

சமூகச் சூழலில் வாழ்வது(அவர்கள் குழுவாக வாழ்ந்திருந்தனர்), முகங்களை அடையாளம் காண்பது, முகத்தைப் பார்த்து உணர்ச்சிகளைப் புரிந்து கொள்வது, உறவினரை அடையாளம் காண்பது, உலகை உறவினர் குழு, உறவினர் அல்லாதவர்களின் குழு என பிரிப்பது,மொழியைப் பயன்படுத்துவது, அடுத்தவர் மனநிலையைப் புரிந்து கொள்வது.

உளவியலாளர்களும் மேலுள்ள மூன்று முறைசாரா உளவியலுக்கும் மூளையில் மாட்யூல்களைக் கண்டறிந்துள்ளனர்.

A..இயற்பியல் உலகைக் கற்பனை செய்வதில் மூளையின் பரைட்டல் கார்டெக்ஸ் மற்றும் ஹிப்போ காம்பஸின் பகுதிகளின் பங்கு.

B.உயிரினங்களுக்குப் பெயரிடுவதில் பங்குபெறும் போஸ்டீரியர் நியோ கார்டெக்ஸின் பங்கு(ஆனால் உயிரற்றப் பொருட்களைப் பெயரிடுதலில் இவை பயன்படுவதில்லை)
C.முகங்களை இனம்காண உதவும் பியூஸிபோ(ர்)ம் கைரஸ், பிரிஃப்ரன்டல் கார்டக்ஸ் ஆகியவை.

இவ்வாறாக குழந்தைகள் பள்ளிக்கு வருவதற்கு முன்பே இவை மூன்றிலும் ஆழமான கருத்துக்களை வளர்த்துள்ளனர். 

ஆனால் அந்த அடிப்படை அறிவைப் புறக்கணித்து விட்டு புதிய பாடத்திட்டங்களை அவர்கள் மூளைக்குள் திணிக்கிறோம்.

இப்போது நாம் ஏற்கனவே குறிப்பிட்ட கல்வியின் இரண்டு வகைகளில் இரண்டாவதாக உள்ள பிறவி சாராத கல்வி உளவியலைப் பற்றிப் பார்ப்போம்..

2.பிறவி சாராத கல்வி உளவியல்.
இவை பயிற்சியளிப்பதால் வளர்த்தெடுக்கப்படும் திறன்கள். நாம் சில் செயல்களைச் செய்வதற்கு விலங்குகளைப் பயிற்றுவிக்கிறோம். 

ஆனால் மனிதக் குழந்தைகள் கற்றுக்கொள்ளும் அளவையும், புதுமையையும் விலங்குகளுடன் ஒப்பிட்டால் குழந்தை மிக முன்னணியில் உள்ளார்கள். 

மனித மூளை சற்று வேறுபட்டது. மனித மூளையால் இயல்பற்ற திறமைகளையும் கற்றுக்கொள்ள முடியும் என்பதுதான் அந்த வேறுபாடு.

நியூரல் பிளாஸ்டிசிடி…..

பிறவி சாரா கல்வித்திறன்களை கற்றுக்கொள்ள மனிதனால் முடியும். குறிப்பாக மூளையின் செரிபிரல் கார்டெக்ஸுக்கு இந்தப் பண்பு உண்டு. 

மூளையின் இந்தத் திறனையே நியூரல் பிளாஸ்டிசிடி என்று அழைக்கிறார்கள். மனித மூளையில் ஏராளமான உபரி நியூரான் சுற்றுகள் உள்ளன. இதனால் புதியவற்றை ஒன்றோடொன்று இணைக்கவும், அவற்றுக்கிடையே புதிய தொடர்புகளை கண்டுபிடிக்கவும் முடிகிறது. 

காலந்தோறும் இத்திறனாலேயே கற்கால மனித மூளை பல்வேறு திறன்களை உடைய நாகரீக மனித இனமாக வளர்ச்சியுற்றது. தற்காலத்திலும் இதே நியூரல் பிளாஸ்டிசிடிதான் வயலினை இசைக்கவும், இயற்கணித பிரச்சினைக்குத் தீர்வு காணவும் பயன்படுகிறது.

கீயரி தத்துவம்….

இந்தப் பிறவி சார்ந்த, பிறவி சாராத கற்றலைத்தான் உயிரியல் முதன்மைத் திறமை, உயிரியல் இரண்டாம் திறமை என்கிறோம். 

உயிரியல் முதன்மைத் திறமையை விளையாட்டுப் போக்கிலான பரிமாற்றங்கள் மூலமும், தனக்குத்தானே பயிற்சியளிப்பதன் மூலமும் மிக விரைவில் வளர்த்துக் கொள்வார்கள் (குழந்தைகள் மொழி கற்றுக்கொள்வது மிகச்சிறந்த எடுத்துக்காட்டு).
இந்த உயிரியல் இரண்டாம் திறமையையும் தன்வயப்படுத்த முடியும். 

ஆனால் இங்குதான் “கல்வி” தனது பரிவாரங்களான கற்றல் , கற்பித்தல், பள்ளிக்கூடம், புத்தகங்கள்,-தேர்வுகள் எல்லாவற்றோடும் வருகிறது.


இவற்றைப் பயன்படுத்தி மாணவர்களின் மனம் நோகச்செய்யாமல், தற்கொலைக்குத் தூண்டாமல், பள்ளியை விரட்டாமல் இந்த உயிரிய் இரண்டாம் திறமையை வளர்த்தெடுக்கிறோமா?
இரண்டாம் அத்தியாயத்தில் சந்திப்போம்….


நன்றி

மூலநூல்: குழந்தைகள் விரும்பும் பள்ளிக்கூடம் (கமலா.வி.முகுந்தா)
தமிழில்: இராஜேந்திரன். கிழக்கு பதிப்பகம்.
இவண்
இராமமூர்த்தி நாகராஜன்.

உயில் நடைமுறைகள்

 *பதிவு செய்யப்பட்ட உயில் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியுமா?... சட்டம் கூறுவது என்ன*...✍🏻 ⚖️உயில் என்பது ஒரு நபர் தனது மரணத்திற்க...