தேசிய.இளையோர் தினததை முன்னிட்டு


தேசிய.இளையோர் தினததை முன்னிட்டு கூடலூர் காசிகா IAS இலவச பயிற்சி மையம், கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் ஆகியன சார்பில்  போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளுதல் குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கு கூடலூர் காசிகா IAS இலவச பயிற்சி மையத்தில்  நடைபெற்றது.

காசிகா இலவச பயிற்சி மைய நிறுவனர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார்.
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் காளிமுத்து, பொதுச்செயலர் சிவசுப்பிரமணியம், நிர்வாகி சத்தியநேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக காலந்து கொண்ட  கா. இன்பசேகர் IAS பேசும்போது

இளைஞர்கள் தங்கள் நேரத்தை பயனுள்ள வழிகளில் பயன்படுத்த வேண்டும்.  சமூகத்தில் முக்கிய பங்கு இளைஞர்களுக்கு உண்டு. 
சமூக வலைத்தளங்களில் தாங்கள் தேடுவது அனைத்தும் கிடைக்கும் அதில் நல்லவற்றை பயன்படுத்திக்கொள்ளுதல் எதிர்காலத்திற்க்கு நல்லவழியை காட்டும். 
போட்டி தேர்வுகள் மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் நடத்துகின்றன. 
தமிழில் ஐ ஏ எஸ் தேர்வுகள் எழுத முடியும். நேர்முக தேர்வுவரை தமிழில் எதிர்கொள்ளமுடியும். எனினும் மாற்ற மொழி திறன்களை வளர்த்துக்கொள்வதும் அவசியம். 
 IAS தேர்வுகளை பொறுத்தவரை 7 நிமிடங்களில் கேள்வியை படித்து பதில் அளிக்க வேண்டும்.  ஒரு கேள்விக்கு பதில் அளிக்க தாமதமானால் அடுத்த கேள்விக்கான நேரம் கிடைக்காது. அதற்கேற்ப தயாராவது அவசியம். 6ம் வகுப்பு முதல் உள்ள  பள்ளி பாட புத்தகங்களை ஆழ்ந்து படித்து நினைவில் கொள்ளுதல் அவசியம்.  அவற்றில் இருந்துதான் அதிக கேள்விகள் கேட்கப்படுகின்றன. 
அதுபோல் தினசரி செய்தி தாள்கள் படித்து நாட்டு நடப்புகளை அறிந்து கொள்ளுதல் அவசியம்.
அதில் அரசின் திட்டங்கள், செயல்பாடுகள், நடப்பு நிகழ்வுகளை அறிந்து கொள்ளமுடியும்.  ஒரு புத்தகத்தை மீண்டும் மீண்டும் படிக்க வேண்டும்.
அப்போதுதான் அதில் கேட்கப்படும் எந்தவிதமான கேள்விக்கும் பதில் அளிக்க முடியும். 
எல்லா புத்தகங்களையும் படிப்பதைவிட முக்கியமான புத்தகங்களை ஆழ்ந்து படிக்க வேண்டும். சோர்ந்து விடாமல் தொடர் முயற்சி செய்வதன் மூலம் மட்டுமே வெற்றியை பெறமுடியும். வெற்றி பெரும்வரை முயறசிப்பது அவசியம்.
இப்பகுதியில் போட்டி தேர்வுகள் குறித்து  தற்போது ஏற்பட்டுவரும் விழிப்புணர்வு தொடரவும், இளைஞர்கள், மாணவர்கள் பங்களிப்பு அவசியம் தேவை.  படித்த இளைஞர்கள் அரசு வேலைக்கு வர கடின உழைப்பு இருக்க வேண்டும். 
சாதித்த அனைவரும் தோற்றும் இருக்கிறார்கள். எனவே தோல்வியை கண்டு முயற்சியை கைவிடாமல் வெல்லும்வரை தொடர வேண்டும் என்றார்.  தொடர்ந்து மாணவர்களின் சந்தோகங்களுக்கு விளக்கம் அளித்தார்.  இதில் ஏராளமான இளைஞர்கள், மாணவர்கள் காலந்து கொண்டனர். 

முதியோர் உதவித் தொகைத்திட்டம்


*முதியோர் உதவித் தொகைத்திட்டம்* 
➖➖➖➖➖➖➖➖

-ஆதரவற்ற முதியோர்
-முதியோர் ஓய்வூதிய உதவித் தொகை திட்டம்
-விண்ணப்பிக்கும் முறை
-வயதுச் சான்று
-இருப்பிடச் சான்று
-விண்ணப்பங்கள் ஆய்வு
-உதவித் தொகை

ஆதரவற்ற நிலையில் உணவுக்கு வழியின்றி வாழும் முதியவர்களுக்கு அவர்கள் துயரத்தை நீக்க தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் திட்டம் தமிழ்நாடு அரசு முதியோர் உதவித் தொகை திட்டம்.

 *ஆதரவற்ற முதியோர்* 
கணவன் அல்லது மனைவி போன்ற மிக நெருங்கிய உறவுகள் இல்லாமல் இருப்பவர்கள், மிக நெருங்கிய உறவுகள் அல்லது பிள்ளைகள் இருந்தும் அவர்கள் ஆதரவு கிடைக்காமல் துன்பப்படும் அறுபது வயதுக்கு மேற்பட்ட அனைவரும் ஆதரவற்ற முதியோர் என்று குறிப்பிடப்படுகின்றனர்.

 *முதியோர் ஓய்வூதிய உதவித் தொகை திட்டம்* 
கணவன் அல்லது மனைவி போன்ற மிக நெருங்கிய உறவுகள் இல்லாமல் இருப்பவர்கள், மிக நெருங்கிய உறவுகள் அல்லது பிள்ளைகள் இருந்தும் அவர்கள் ஆதரவு கிடைக்காமல் துன்பப்படும் அறுபது வயதுக்கு மேற்பட்ட அனைவரும் ஆதரவற்ற முதியோர் என்று குறிப்பிடப்படுகின்றனர். அறுபது வயதிற்கு மேற்பட்ட மக்கள் மற்றும் எவாின் ஆதரவுமின்றி வாழும் முதியோர்களுக்கு மாதம் ரூ. 1000- வீதம் வழங்கப்படுகிறது

 *விண்ணப்பிக்கும் முறை* 
ஆதரவற்ற முதியோர் எனக் கருதப்படும் ஆண், பெண் யாரும் தாலுகா அலுவலகங்களில் கிடைக்கும் விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, அதற்குத் தேவையான வயது, இருப்பிடச்சான்றுகளை இணைத்து சம்பந்தப்பட்ட தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பம் அளிக்க வேண்டும்.

 *வயதுச் சான்று* 
தமிழ்நாடு அரசால் அரசு பதிவு பெற்ற மருத்துவர்கள் வயதுச் சான்றிதழ்கள் வழங்கும் தகுதியுடையவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளதால் அவர்களிடம் படிவத்தில் வயதுச் சான்றிதழ் பெறப்பட வேண்டும். ஆனால் தற்போது குடும்ப அட்டை நகல் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை போன்ற இரு ஆவணங்களையும் அடிப்பைடயாக கொண்டு வயது சான்றிதழ் நிரூபணம் தேவைப்படுகிறது. ஏனெனில் வயது சான்றிதழ் பெறுவதில் பல்வேறு முறைகேடுகள் நிகழ்ந்துள்ளதால் வயது நிரம்பாத தகுதியில்லாத பலர் அரசின் இச் சலுகையை பெற வாய்ப்புள்ளதால் இந்த ஏற்பாடு.

 *இருப்பிடச் சான்று* 
தமிழ்நாடு அரசு இருப்பிடச் சான்று மற்றும் பரிந்துரை அளிக்க விண்ணப்பிப்பவர் வசிக்கும் பகுதியைச் சேர்ந்த நகர்மன்ற / மாமன்ற உறுப்பினர்கள், கிராமப் பஞ்சாயத்துத் தலைவர், நகர்மன்றத் தலைவர், மாநகர்மன்றத் தலைவர் (மேயர்), ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர், மாவட்ட பஞ்சாயத்துத் தலைவர், சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர், மத்திய அல்லது மாநில அரசு பதிவு பெற்ற அதிகாரிகள், முதியோர் இல்ல நிர்வாகிகள் போன்றவர்கள் இருப்பிடம் மற்றும் பரிந்துரைக்கான சான்றுகளை அளிக்கலாம். (இக் கருத்தில் சில திருத்தங்களை மேற்கொள்ளவும் இருப்பிடச் சான்று வட்டாட்சியர் அலுவலகத்தில் பெறப்பட்டதாக இருக்க வேண்டும்)

 *விண்ணப்பங்கள் ஆய்வு* 
இந்த விண்ணப்பங்கள் தாசில்தார் அலுவலகத்திலிருந்து கிராம நிர்வாக அலுவலருக்கு அனுப்பப்பட்டு விண்ணப்பத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்கள் உண்மைதானா என்று ஆய்வு செய்யப்படுகிறது. பின்பு அவரின் பரிந்துரை பெறப்படுகிறது.

 *உதவித் தொகை* 
கிராம நிர்வாக அலுவலரிடமிருந்து பெறப்பட்ட ஆய்விற்குப் பின் உள்வட்ட வருவாய் ஆய்வாளரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவாய் அலுவலரின் பரிந்துரையின் பேரில் தாலுகா அலுவலகங்களில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விண்ணப்பித்தவருக்கு மாதம் ரூ1000 உதவித் தொகையாக வழங்க உத்தரவுகளைப் பிறப்பிக்கின்றனர். இந்த உத்தரவிற்குப் பின்பு விண்ணப்பித்தவருக்கு அவர் இறக்கும் வரையில் மாதந்தோறும் உதவித்தொகை தபால் அலுவலகப் பணவிடை (Money Order) வழியாக அளிக்கப்படுகிறது.

ஆதாரம் : தமிழ்நாடு அரசு சமூகநலத்துறை.

தொழில் உரிமம் பெறுவது எப்படி?

➖➖➖➖➖➖➖➖
*தொழில் உரிமம் பெறுவது எப்படி?*
➖➖➖➖➖➖➖➖

அரசின் பல்வேறு துறைகளின்கீழ் அனுமதி வாங்கப்பட்ட தொழில் என்றாலும் மாநகர, நகர எல்லைக்குட்பட்ட பகுதிகள் எனில் இந்த அனுமதியும் வாங்க வேண்டும்.

ஒரு மாநகராட்சி மற்றும் நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிக்குள் தொழில் தொடங்க வேண்டும் என்றால் அந்த மாநகர, நகர அமைப்பின் மூலம் அனுமதி வாங்க வேண்டும் என்கிறது சட்டம். இதுதான் தொழில் உரிமம், அல்லது வணிக உரிமம் என்கிறோம். உள்ளாட்சி அமைப்புகளுக்கு முக்கியத்துவம் தரும் சட்டம் என்றாலும், அப்போதுதான் நகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை உறுதிசெய்ய முடியும். தவிர தொழில்வரி போன்றவையும் வசூலிக்க இது வகை செய்கிறது.

அரசின் பல்வேறு துறைகளின்கீழ் அனுமதி வாங்கப்பட்ட தொழில் என்றாலும் மாநகர, நகர எல்லைக்குட்பட்ட பகுதிகள் எனில் இந்த அனுமதியும் வாங்க வேண்டும்.

 *யாருக்கு தொழில் உரிமம் தேவை?*

ஒரு தொழிலை தொடங்குவதற்கு அரசின் பல்வேறு துறைகளின் கீழ் அனுமதி வாங்கியிருந்தாலும், மாநகர, நகர பகுதியில் தொடங்குபவர்களுக்கு இந்த அனுமதி வேண்டும்.

குறிப்பாக தொழிற்சாலைகள், சேமிப்புக் கிடங்குகள், பதப்படுத்தும் நிறுவனங்கள், தீப்பெட்டி தயாரிப்பு, அச்சகம், வெல்டிங் பட்டறைகள், பெட்ரோல் பங்க் போன்றவை பிற அரசு துறைகள் மூலம் அனுமதிகள் வாங்கியிருந்தாலும் நகராட்சி அனுமதியும் வாங்க வேண்டும்.

தவிர உணவு தயாரிப்பு நிறுவனங்கள், பேக்கரிகள், பால் மற்றும் இறைச்சி விற்பனை யாளர்கள், பள்ளி, கல்லூரி உணவு விடுதிகள், சமையல் ஒப்பந்தக்காரர்கள் திருமண மண்டபம், ஓட்டல், மளிகை கடைகள், தேநீர் கடைகள், குளிர்பான கடைகள், மொத்தம் மற்றும் சில்லறை வியாபார நிறுவனங்களும் இந்த அனுமதி வாங்க வேண்டும்.

அச்சம் மற்றும் அருவருக்கத்தக்க இனங்களில் தொழில் நடத்துபவர்கள் என்றும், உணவு பொருள் தயாரிப்பு மற்றும் சாப்பிடும் நிலை வரை உள்ள அனைத்து உணவு வணிகர்கள் என்றும், மின்சக்தி மற்றும் டீசல் ஜெனரேட்டர்கள் பயன்படுத்தி தொழில் செய்பவர்கள் என்றும் பல வகைகளில் இந்த தொழில்களை வகைப்படுத்துகிறது சட்டம்.

 *உரிமம் பெறும் நடைமுறை*

விண்ணப்பதாரர் தங்களது பெயர் மற்றும் தொழில் விவரம், தொழில் நடத்தப்பட உள்ள இடத்தின் முகவரி போன்ற விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பிக்க வேண்டும்.

ரூ.20க்கான முத்திரைத் தாளில் தொழில் உரிமத்திற்கான திட்டங் களைப் பின்பற்றுவேன் என்பதற்கான உறுதி மொழி பத்திரம் கொடுக்க வேண்டும். இதனடிப்படையில் தொழில் உரிமம் கிடைக்கும். இந்த உரிமத்தை ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்க வேண்டும். குறிப்பிட்ட காலத்துக்குள் உரிமம் புதுப்பிக்கப் படவில்லையென்றால் புது உரிமம் எடுக்க வேண்டும்.

 *ஏன் வாங்க வேண்டும்*

இது போன்ற அனுமதிகளை நகராட்சிகள் மூலம் வாங்க வேண்டும் என்பதற்கு முக்கிய காரணம் மக்கள் நெருக்கம் மிகுந்த இடங்களில் தொழிற்சாலைகள் அமைத்தால் அது இயல்பு வாழ்க்கைக்கு இடையூறாக இருக்கும் என்பதால்தான். என்ன தொழில் எந்த பகுதியில் தொடங்க உள்ளனர் என்பதை அறிந்து அதற்கேற்ப அனுமதி வழங்கப்படும். இதற்கு எழுத்து பூர்வமாக அத்தாட்சிகள் அடிப்படையில் விண்ணப்பிக்க வேண்டும்.

 *நடைமுறை என்ன?*

தொழில் அமைய உள்ள கட்டடத்தின் அங்கீகரிக்கப்பட்ட திட்டம் அல்லது மண்டல செயற்பொறியாளரால் அங்கீகரிக்கப்பட்ட கட்டட சான்றிதழ், அந்த கட்டட உரிமையாளரின் ஆட்சேபணையில்லா சான்றிதழ், நடப்பு ஆண்டு வருமான வரியின் நகல், தொழில் வரியின் நகல், மாவட்ட தீயணைப்பு அதிகாரியின் ஆட்சேபனையில்லா சான்றிதழ், தொழிற்சாலை ஆய்வாளர்களிடமிருந்து பெற்ற சான்றிதழ், அக்கம் பக்கம் உள்ளவர்களின் ஆட்சேபனை இல்லா சான்றிதழ் என சட்டம் நடைமுறைகளை வைத்துள்ளது.

தங்கும் விடுதிகள் மற்றும் உணவகம் என்றால் குடிநீர் வாய்ப்புகள் குறித்த அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இயந்திரங்களை பயன்படுத்தும் தொழிற்சாலைகள் என்றால் பணியிடம், கட்டிடம், அதற்கான இதர அனுமதிகள், எத்தனை பணியாளர்கள் பணிபுரிய உள்ளனர் என்கிற விவரங்கள் கொடுக்க வேண்டும். தவிர குறிப்பிட்ட தொழிற்சாலை தொடங்குவதற்கான திட்ட வரைபடம் போன்றவை இணைக்க வேண்டும்.

அந்த இடத்தின் காற்றோட்ட வசதி, தீ தடுப்பு வசதிகள், அறைகள், கட்டிட உயரம் போன்றவையும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். தொழிற்சாலை ஆய்வாளர், சுகாதார ஆய்வாளர் உள்ளிட்டவர்களின் குறிப்பின்பேரில் விண்ணப்பம் பரிசீலிக்கப்படும்.

இந்த நடைமுறைகள் பின்பற்றப்படும் பட்சத்தில் பொதுமக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. மேலும் சட்டத்துக்குட்பட்ட தொழில்கள் என்கிற அடையாளமும் கிடைக்கிறது.

இந்த தொழில் உரிமம் பெறாமலோ அல்லது புதுப்பிக்கப்படவில்லை என்றாலோ தொழிலை முடக்கி வைக்கவும் அபராதம் விதிக்கவும் சட்டத்தில் இடமுள்ளது.

கிளினிக்குகளை முறைப்படுத்தும் அரசாணை:

*கிளினிக்குகளை முறைப்படுத்தும் அரசாணை: தடைவிதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு*

Published :  30 Jan 2019   21:21 IST

கிளினிக் மற்றும் மருத்துவ ஆலோசனை மையங்களை முறைப்படுத்த அரசு பிறப்பித்த அரசாணைக்கு தடைவிதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

தமிழகத்தில் உள்ள கிளினிக்குகளை முறைப்படுத்த கடந்தாண்டு தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இதில், கிளினிக்குள் 100 சதுர அடியில் இருக்க வேண்டும், நோயாளிகள் அமர தனி அறை இருக்க வேண்டும், நவீன கருவிகள் வைத்திருக்க வேண்டும் என பல கட்டுபாடுகள் இடம் பெற்றிருந்தன.

இந்த அரசாணை 2019 ஜனவரி முதல் அமலுக்கு வத்த நிலையில் இதற்கு தடை விதிக்கக் கோரி சென்னையை சேர்ந்த மருத்துவர் வெற்றிவேல் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாரயணன் மற்றும் ராஜமாணிக்கம் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது, தமிழகத்தில் செயல்படும் கிளினிக்குகள் நோயாளிகளிடம் குறைவான தொகையை கட்டணமாக வசூலித்து வருவதாகவும், இந்த அரசாணையில் சேவை மனப்பான்மையுடன் மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களும் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பதாகவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இதையடுத்து, தமிழக அரசின் அரசாணைக்கு தடைவிதிக்க மறுத்த நீதிபதிகள்,  மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு,  விசாரணையை தள்ளிவைத்தனர்.

https://tamil.thehindu.com/tamilnadu/article26129656.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

ஆஸ்துமா என்றால் என்ன?

ஆஸ்துமா என்றால் என்ன?


ஆஸ்துமா என்பது சுவாசக்குழல்களை பாதிக்கும் ஒரு நோய். சுவாசக்குழல்கள் என்பது மூச்சுக் காற்றை நுரையீரலுக்குச் எடுத்துச் செல்லும் குழாய்கள் ஆகும். ஆஸ்துமா உள்ள நபர்களி‌ன் சுவாசக்குழாய்களின் உட்சுவர் வீக்கம் கண்டிருக்கும். இப்படிபட்ட வீக்கம் கண்ட சுவாசக்குழாயில் அலர்ஜி எனப்படும் ஓவ்வாமையை ஏற்படுத்தக்கூடிய பொருட்களோ அல்லது மூச்சுக் குழாய்களில் எரிச்சலை ஏற்படுத்தக்கூடிய பொருட்களோ உதாரணமாக புகை, தூசி போ‌ன்றவை செல்லும்போது சுவாசக்குழாய்கள் இப்படிப்பட்ட பொருட்களுக்கு எதிராக செயல்படும்.

இப்படி சுவாசக்குழாய்கள் எதிரிடையாக செயல்படும் போது சுவாசக் குழாய்களின் உள் சுற்றளவு குறைந்து, சாதாரண அளவைவிட மிக குறைந்தளவு காற்றே நுரையீரலின் காற்றுப் பரிமாணம் நடக்கும் இடத்திற்கு செல்கிறது. சுவாச‌க் குழா‌ய்க‌ள் சுரு‌ங்குவதா‌ல், அத‌ன் வ‌ழியாக கா‌ற்று‌ச் செ‌ன்றுவரு‌ம்போது அ‌திகமாக ச‌த்த‌ம் கே‌ட்‌கிறது. மேலு‌ம், நம் உடலில் உள்ள திசுக்களுக்கு செல்லும் பிராண வாயுவின் அளவும் குறைகிறது.

இதன் விளைவாக, மிகுந்த சிரமத்துடன் மூச்சு விடும் நிலைமை, இருமல், மார்பு பகுதி இருக்கமாகுதல் மற்றும் சுவாசக்கோளாறு போன்றவற்றை உண்டாக்குகிறது. இவை அனைத்தும் குறிப்பாக இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் அ‌திகமாக‌க் காணப்படும்.

ஆஸ்துமாவின் பாதிப்பு மிகவும் கடுமையாக இருக்கும் போது சுவாசக்குழாய்களில் மிக அதிகமான அடைப்பு ஏற்பட்டு, உடலில் முக்கிய உறுப்புகளுக்கு போதிய பிராணவாயு கிடைப்பதில்லை. (உம். மூளை, ஈரல், சிறுநீரகங்கள்). இது போன்ற சந்தர்ப்பத்தில், அவசர மருத்துவ உதவி தேவைப்படும் நிலை ஏற்படுகிறது. ஆஸ்துமாவின் பாதிப்பு மிகவும் கடுமையாக இருப்பின் உயிர் இழப்பும் நேரிடுகிறது.

எனவே ஒருவர் ஆஸ்துமா வியாதியினால் பாதிக்கப்பட்டால், அந்த நபர் மருத்துவரை சந்தித்து, முறைப்படி மருத்துவ உதவியை பெற்றுக்கொள்ள வேண்டும். எதனால் ஆஸ்துமா வருகிறது, அதனை எப்படி தவிர்க்கலாம் என்பதனையும், அறிந்து கொள்ள வேண்டும். மருத்துவரும் ஆஸ்துமாவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள, உட்கொள்ள வேண்டிய மருந்துகளை பரிந்துரைப்பார்.

நோயின் காரணங்கள்

நாம் சுவா‌சி‌க்கு‌ம் கா‌ற்று உ‌ட்பட சுற்றுச்சூழலில் காணப்படுகிறது ‌சில பொரு‌‌ட்க‌ள், ஆஸ்துமா வியாதிக்கான அறிகுறிகள் மற்றும் பாதிப்புக்குளை கொண்டு வருகிறது. ஆஸ்துமா வருவதற்கான சில பொதுவான காரணங்களில் உடற்பயிற்சி, அலர்ஜின்ஸ் எனப்படும் ஒவ்வா பொருட்கள், எரிச்சலூட்டும் பொருட்கள் மற்றும் வைரஸ் நோய் தொற்று போன்றவையும் அடங்கும். சிலருக்கு உடற்பயிற்சி செய்யும் போதும் அல்லது வைரஸ் கிருமிகளால் தாக்கப்படும் போதும் மட்டும் ஆஸ்துமா வியாதி காணப்படுகிறது.

பொது வகையான அலர்ஜின்ஸ் (ஒவ்வா பொருட்கள்)

1. மிருகங்களின் (உடலின் மேல்) உள்ள பொடுகு (தோலில், முடியில் மற்றும் இறகுகளிலிருந்து வருபவை)
2. தூசி மற்றும் தூசியில் உள்ள சிறு பூச்சி (வீடுகளில் இரு‌க்கு‌ம் தூசியில் காணப்படுபவை)
3. கரப்பான்பூச்சி
4. மரங்கள் மற்றும் புல்களிலிந்து வரும் மகரந்தத்தூள்
5. மேல் பூசு பொருட்கள் - பெயின்ட், டிச்டம்பர் போன்றவை
6. சிகரட் புகை
7. காற்றில் காணப்படும் மாசுப்பொருட்கள்
8. குளிர்ந்த காற்று அல்லது த‌ட்பவ‌ெ‌ப்பநிலை மாற்றம்
9. வண்ணப்பூச்சுப் பொருள் மற்றும் சமைக்கும் பொழுது வரும் வாசனை
10. நருமண மூட்டப்பட்ட பொருட்கள்
11. கடுமையான மன உணர்வுகளை வெளிப்படுத்துதல் ( அழுதல் அல்லது சிரித்தல்)
12. ஆஸ்பரின் மற்றம் பீட்டா பிளாக்கர்ஸ் எனப்படும் மருந்துகள்
13. உணவில் சல்பைட்ஸ் போன்ற பொருட்கள் (உலர்ந்த பழவகைகளில் அல்லது மதுபான வகைகள் ( திராட்சை மது)
14. வயிறு மற்றும் உணவுக்குழாய் பாதிப்பினால் நெஞ்சு எரிச்சல் ஏற்படுவது ஆஸ்த்துமாவின் அறிகுறிகளை, பாதிப்புகளை அதிகப்படுத்தி, மோசமான நிலைமைக்கு கொண்டு செல்லும்.
15. இராசாயனப் பொருட்கள் மற்றும் தூசிப் பொருட்கள்.
16. நோய்தொற்றுதல்
17. குடும்ப பின்னணி
18. குழந்தைகள் புகை‌யிலை‌யி‌ல் இரு‌ந்து வரு‌ம் புகையை சுவாசிக்க நேரிடும் போது, ஆஸ்துமா வருகிறது.
19. ஒரு கர்ப்பிணிப் பெண், புகையிலையிலிருந்து வரும் புகையினை சுவாசிக்க நேரிடும் போது வயிற்றில் வளரும் குழந்தைக்கு எளிதில் ஆஸ்துமா வருகிறது.
19. உடற்பருமனாகுதல், பிற சுகாதாரக் கேடுகள் ஆஸ்துமா மற்றும் வியாதியோடு தொடர்புடையவைகளாக இருக்கலாம்.

நோயின் அடையாள அறிகுறிகள்

மூச்சுத்தினறல் - திடீரென ச‌ளி ‌பிடி‌த்த‌ல், கா‌ய்‌ச்ச‌ல் போ‌ன்ற பாதிப்புக்குள்ளாகுதல், இது அடிக்கடி ஏற்படுதல்
இரவு மற்றும் அதிகாலை வேளைகளில் பாதிப்பு மோசமாகுதல்
குளிர்ச்சியான பகுதிக்கு செல்லும்போது அல்லது உடற்பயிற்சி செய்யும் போது நிலைமை மோசமாகுதல் மற்றும் நெஞ்செரிச்சல் காணப்படும். பின்னர் தானாகவே மறைந்துவிடும்
மருந்து உட்கொள்ளும் போது மூடிய சுவாசக்குழாய்கள் திறந்து சுகமாகுதல்
இருமல் அல்லது சளியுடன் கூடிய இருமல்
சாதாரணமாக வேலைக‌ள் செ‌ய்யு‌ம்போது மூச்சு இறைப்பினால் உட‌ல்‌நிலை மோசமாகுத‌ல் போ‌ன்ற அ‌றிகு‌றிக‌ள் காண‌ப்படு‌ம்.

பரிசோதனைகள்

எக்ஸ்ரே, ரத்தப் பரிசோதனை, நுரையீரல் செயல்திறன் பரிசோதனை (பி.எப்.டி.) போ‌ன்ற ப‌ரிசோதனைக‌ள் மூல‌ம் ஆ‌ஸ்துமாவை‌க் க‌ண்ட‌றியலா‌ம்.

கா‌ய்‌ச்சலை அள‌‌ப்பத‌ற்கு தர்மாமீட்டர் உள்ளது போ‌ல், ஆஸ்துமாவிற்கும் பீக்ப்ளே மீட்டர் என்னும் ஒரு கருவி உ‌ள்ளது. இதனை‌ப் பய‌ன்படு‌த்‌தி ஒரு நுரை‌யீர‌ல் எ‌வ்வளவு சீராக காற்றை வெளியே விடுகிறது எ‌ன்பதை அளவெடு‌க்கலா‌ம்.

சிகிச்சை முறை
சித்த மருத்துவத்தில் இதற்கு முழுமையான தீர்வு உண்டு .

சித்த மருத்துவத்தை பயன்படுத்தி குணமடைந்து
வாழ்க வளமுடன் என்றும் நலமுடன் ..

குடியரசு தினம் என்றால் என்ன?


குடியரசு தினம் என்றால் என்ன? 
அந்தப் பதிலைச் சொல்லப் பெரியவர்களே கொஞ்சம் கஷ்டப்படுவார்கள். 
அது சரி, ஏன் குடியரசு தினம் கொண்டாடுகிறோம்?

ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன்பு இந்தியாவை ஆண்டது யார்? 
உங்கள் பாடப்புத்தங்களில் படித்திருப்பீர்களே, மன்னர்கள்தான் ஆட்சி செய்து வந்தார்கள். 
இப்போது இருப்பது போல அப்போது மாநிலங்கள் எல்லாம் கிடையாது. 

சிறிய அரசர்கள், பெரிய அரசர்கள், பேரரசர்கள் எனத் தங்கள் எல்லையைப் பொறுத்து ஆட்சி செய்தார்கள். 
இந்த அரசர்களிடம் ஒற்றுமை இல்லை.

எல்லாருமே இந்தியாவைச் சிறு சிறு பகுதிகளாகப் பிரித்து ஆட்சி செய்துவந்தார்கள். 

இப்படிப் பிரிந்து கிடந்ததாலும், ஒற்றுமை இல்லாததாலும் ஆங்கிலேயர்கள் இதைப் பயன்படுத்திக்கொண்டார்கள். 

தந்திரமாக மன்னர்களிடம் பேசி நம் நாட்டுக்குள்ளே நுழைந்து பின்னர் நம்மை அடிமைப்படுத்தினார்கள்.

அது மட்டுமல்ல, மன்னர்கள் ஆட்சியில் அவர்கள் வைத்ததே சட்டம். மக்கள் சுயமாகச் சிந்திக்க முடியாது;

 சுதந்திரம் பற்றி நினைக்கவும் முடியாது. 
மன்னர் இறந்துபோனால், உடனே அவருடைய மகன் மன்னராகிவிடுவார். இதைத்தான் முடியாட்சி அல்லது மன்னராட்சி என்று சொல்லுவார்கள்.

ஆங்கிலேயர்கள் படிப்படியாக இந்தியாவை அடிமைப்படுத்தியபோது சுதந்திரம் பற்றி மக்களுக்கு எந்த விழிப்புணர்வும் வரவில்லை. மன்னன் எவ்வழியோ மக்களும் அவ்வழியே என்று இருந்தார்கள்.

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு இதுபோன்ற ஒரு நிலை மீண்டும் வரக் கூடாது என்று சுதந்திரத்துக்காகப் பாடுபட்ட தலைவர்கள் நினைத்தார்கள். 
வாரிசு உரிமை உள்ள மன்னராட்சி முறை கூடாது என்று நினைத்தார்கள்.
 மக்கள் பங்கு கொள்ளும் மக்களாட்சி உள்ள நாடாக இந்தியா இருக்க வேண்டும் என்று தீர்மானித்தார்கள். 
அதற்கு நாடு குடியரசாக இருப்பது அவசியம் என்றும் முடிவு செய்தார்கள்.

குடியரசு என்றால் குடிமக்களின் அரசு என்று பொருள். அதாவது மக்களாட்சி என்று அர்த்தம். 
மக்கள் தங்கள் விருப்பப்படி தேர்தல் மூலம் தங்களுடைய தலைவரைத் தேர்ந்தெடுக்கலாம். 

இப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆட்சி நடத்தும் நாடுதான் குடியரசு நாடு. 

இப்படி இருக்க வேண்டும் என்று முடிவு செய்துதான் இந்தியாவும் குடியரசு நாடானது.

ஜனவரி 26-ம் தேதி இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் அமலுக்கு வந்தது என்று பாடப் புத்தங்களில் படித்திருப்பீர்கள் அல்லவா? 
அரசியல் அமைப்புச் சட்டம் என்றால் என்ன தெரியுமா? 
நாம் ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுப்பவர்கள் எப்படி ஆட்சி செய்ய வேண்டும் என்பதை நிர்ணயிப்பதுதான் அரசியல் அமைப்புச் சட்டம்.

டாக்டர் அம்பேத்கர் தலைமையில் சட்ட மேதைகள் பலர் சேர்ந்து இதை உருவாக்கினார்கள். 

இந்த அரசியலமைப்புச் சட்டம் 1950 ஜனவரி 26 அன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. 

அதனால்தான் அன்றைய தினத்தைக் குடியரசு தினமாகக் கொண்டாடுகிறோம்.

உயில் நடைமுறைகள்

 *பதிவு செய்யப்பட்ட உயில் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியுமா?... சட்டம் கூறுவது என்ன*...✍🏻 ⚖️உயில் என்பது ஒரு நபர் தனது மரணத்திற்க...