Consumer Commission

 

Centre notifies rules for Consumer Protection (Jurisdiction of the District Commission, the State Commission and the National Commission) Rules, 2021

The revised pecuniary jurisdiction for entertaining consumer complaints shall be upto -

1) 50 lakh for District Commissions,

2) More than ₹50 lakh to ₹2 Crore for State Commissions and

3) More than ₹2 Crore for National Commission

Posted On: 30 DEC 2021 5:34PM by PIB Delhi

In exercise of powers conferred by provisos to sub-section (1) of Section 34, sub-clause (i) of clause (a) of sub-section (1) of section 47 and sub-clause (i) of clause (a) of sub-section (1) of section 58 read with sub-clauses (o), (x) and (zc) of sub-section (2) of section 101 of the Consumer Protection Act, 2019, the Central Government has notified the Consumer Protection (Jurisdiction of the District Commission, the State Commission and the National Commission) Rules, 2021

The Consumer Protection Act, 2019 promulgates a three-tier quasi-judicial mechanism for redressal of consumer disputes namely district commissions, state commissions and national commission. The Act also stipulates the pecuniary jurisdiction of each tier of consumer commission. As per the existing provisions of the Act, District Commissions have jurisdiction to entertain complaints where value of the goods or services paid as consideration does not exceed one crore rupees. State Commissions have jurisdiction to entertain complaints where value of the goods or services paid as consideration, exceeds 1 crore rupees, but does not exceed 10 crore rupees and National Commission has jurisdiction to entertain complaints where value of goods or services paid as consideration exceeds 10 crore rupees.

After the Act came into force, it was observed that the existing provisions relating to pecuniary jurisdiction of consumer commissions were leading to cases which could earlier be filed in National Commission to be filed in State Commissions and cases which could earlier be filed in State Commissions to be filed in District Commissions. This caused a significant increase in the workload of District Commissions, leading to rise in pendency and delay in disposal of cases, defeating the very object of securing speedy redressal to consumers as envisaged under the Act.

With regard to revision of pecuniary jurisdiction, Central Government held wide consultation with States/UTs, consumer organizations, law chairs etc. and examined the issues that had created long pendency of cases in detail.

With notification of the aforementioned rules, the new pecuniary jurisdiction, subject to other provisions of the Act, shall be as under:

  1.  District Commissions shall have jurisdiction to entertain complaints where value of the goods or services paid as consideration does not exceed 50 lakh rupees.
  2.  State Commissions shall have jurisdiction to entertain complaints where value of the goods or services paid as consideration exceeds 50 lakh rupees but does not exceed 2 crore rupees.
  3. National Commission shall have jurisdiction to entertain complaints where value of the goods or services paid as consideration exceeds 2 crore rupees.

It may be mentioned that the Consumer Protection Act, 2019 stipulates that every complaint shall be disposed of as expeditiously as possible and endeavour shall be made to decide the complaint within a period of 3 months from the date of receipt of notice by opposite party where the complaint does not require analysis or testing of commodities and within 5 months if it requires analysis or testing of commodities.

The Act also provides consumers the option of filing complaint electronically. To facilitate consumers in filing their complaint online, the Central Government has set up the E-Daakhil Portal, which provides a hassle-free, speedy and inexpensive facility to consumers around the country to conveniently approach the relevant consumer forum, dispensing the need to travel and be physically present to file their grievance. E-Daakhil has many features like e-Notice, case document download link & VC hearing link, filing written response by opposite party, filing rejoinder by complainant and alerts via SMS/Email. Presently, facility of E-Daakhil is available in 544 consumer commissions, which includes the National Commission and consumer commissions in 21 states and 3 UTs. So far, more than 10,000 cases have been filed using the E-Daakhil Portal and more than 43000 users have registered on the portal.

To provide a faster and amicable mode of settling consumer disputes, the Act also includes reference of consumer disputes to Mediation, with the consent of both parties. This will not only save time and money of the parties involved in litigating the dispute, but will also aid in reducing overall pendency of cases

கவுனி அரிசி

 🌾 *உழவன் சந்தை* 🌾

________________________________

*கருப்பு கவுணி அரிசியின் வரலாறு :*

________________________________

உழவு பகிர்வு : 


▪️ கருப்புகவுணி அரிசி பண்டைய சீனாவை பூர்விகமாக கொண்டது. பண்டைய சீன மன்னர்கள் மற்றும் அரச குடும்பத்தினர், மந்திரிகள், பெரு வியாபாரிகள் மட்டும் பயன்படுத்தி வந்துள்ளார்கள். 


▪️ *கருப்புகவுணி அரிசி நிறம்:*

கருப்பு கவுனி நிறம் கருப்பாக இருப்பதற்கு காரணம், இதில் உள்ள *அந்தோசினனின்* என்னும் மூல வேதிப்பொருள் தான்.


*ஊதா அரிசியா கருப்பு அரிசியா..?*

▪️ கருப்பு கவுணி அரிசி சமைத்த பின் ஊதா நிறத்தில் இருக்கும். கருப்பு கவுணி அரிசியின் கருப்பு நிறத்தின் காரணம் இதில் *அதிகப்பிடியான “Anthocyanins”* என்ற மூலக்கூறு தான்.


*கருப்புகவுணி தமிழகம் வந்த எப்படி:*

▪️ பண்டைய தமிழ் மன்னர்கள் – சீன மன்னர்கள் கிடையே இருந்த கப்பல் போக்குவரத்து மூலமாக நடைபெற்ற வியாபாரம் காரணமாக கருப்பு கவுனி தமிழகம் வந்தடைந்தது.


*கருப்புகவுணியும்-அரசரின் விருந்தும் :*

▪️ சீன அரசர்கள் தங்களின் நாட்டிற்கு வருகை புரியும் பிற நாட்டின் அரசர்கள் மற்றும் கப்பல் மூலமாக வரும் வியாபாரிகளுக்கு கருப்பு கவுனியில் செய்யப்பட்ட விருந்து அளிக்கப்பட்டது.


▪️ *தடை செய்யப்பட்ட அரிசி :*

▪️ பொது மக்கள் கருப்பு கவுணி பயன்படுத்த தடை செய்யப்பட்டது.. வரலாற்றில் கருப்பு கவுணி அரிசியை *“Forbidden Rice”* என்று அழைக்க காரணமாகும்..

▪️ சீனாவின் அரசர்கள், அரச குடும்பத்தார்கள் மட்டும் பயன்படுத்தும் வகையில் தடைசெய்யப்பட்ட அரிசியாக  “கருப்புகவுணி” கருதப்பட்டது. இதன் காரணம் *இதில் உள்ள ஊட்ட சத்துக்கள்*.. சீன அரசர்கள் இந்த வகை அரிசி கடவுள் தங்களுக்கு அளித்தாக கருதினார்கள். இதனால் பொது மக்கள் இவ்வகை அரிசியை பயன்படுத்த தடை செய்ய பட்டது.


*தண்டனைக்குரிய குற்றம் :*

▪️ அரசரின் கட்டளை மீறி, பொது மக்கள் யாரேனும் *“கருப்பு கவுணி”* அரிசியை பயன்படுத்தினால் தண்டனைக்கு உட்படுத்தபட்டனர்.


*Accupunture மருத்துவம்:*

▪️ தமிழகத்தின் தொடு வர்மம்க்கலை, சீனாவில் Accupunture என்று அறியப்படுகிறது. இவ்வகை மருத்துவர்கள் கருப்புகவுனியின் பயன்பாட்டினை நன்கு அறிந்திருந்தார்கள். இவர்களின், கூற்றுப்படி *பிரபஞ்ச சக்தியை* உள்ள வாங்கும் கிரஹித்து கொள்ளும் ஆற்றல் கருப்புகவுணி அரிசிக்கு உள்ளதாக நம்பப்படுகிறது..

**********************************

*1 .கருப்புகவுணி அரிசியின் Antioxidants பலன்கள் :*

▪️ கருப்புகவுணி அரிசியின் Anthocyanine. சக்திவாய்ந்த Antioxidants ஆக செயல்படுகின்றது. மேலும்,  *புற்றுநோயை* எதிர்த்துப் போராடுவதற்கும், *இருதய நோய்களைத் தடுப்பதற்கும், மூளை செயல்பட்டினை* மேம்பட உதவுகிறது.


▪️சிவப்பு அரிசி அல்லது Brown rice அல்லது மற்ற எந்த ஒரு அரிசியிலும் இல்லாத அளவு கருப்புகவுணி அரிசி அந்தோசினனின் *Antioxidants – Free Radical Damage* பாதிப்பினை தடுக்கிறது. மேலும், இதய பாதிப்பினை தடுக்கிறது. 


*2. கருப்புகவுணி புற்று நோய்க்கு எதிரானது :*

▪️ கருப்புகவுணி அரிசி புற்று நோய்க்கு எதிரானது என்பதை  Third Military University, என்ற சீனா உள்ள யூனிவர்சிட்டியில் எலிகள் மீது மேற்கொண்ட ஒரு ஆய்வில்  *கான்செர் செல்களை குறைத்தோடு மார்பக புற்று நோய்யும் குறைத்து..*


*3. நீர்கட்டிகள் மற்றும் Inflammation:*

▪️ கொரியாவின் Ajo University ஆராய்ச்சியாளர்கள் கருப்பு அரிசி வீக்கத்தைக் (inflammation) குறைக்கும்  என்பதைக் கண்டறிந்துள்ளனர். கருப்பு அரிசியின் சாறு edema வைக்(நீர்கட்டிகளை) குறைக்க உதவியது மேலும், எலிகளின் தோலில் dermatitis ஒவ்வாமை தொடர்பு, தோல் அழற்சியை கணிசமாக குறைத்து என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. 

▪️ *நாள்பட்ட அழற்சியுடன்(chronic inflammatory diseases)* தொடர்புடைய நோய்களுக்கு சிகிச்சையளிப்பதில் கருப்பு அரிசியின் ஆற்றலுக்கான சிறந்த சிறந்ததாக உள்ளது.


*4. உடல்பருமன் அல்லது உடல் எடை குறைக்க :*

▪️ பிரவுன் அரிசி, கருப்பு கவுணி அரிசி நார்ச்சத்து மற்றும் *குறைந்த Carbohydrate* உள்ளதால். உடலின் தேவையற்ற கொழுப்புகளை குறைகிறது என்பதை Hanyang University, South Korea நாட்டில் நடைபெற்ற ஆய்வுவில்,  நாற்பது உடல் பருமன் குறைபாட்டால் பாதிப்பு அடைத்த பெண்களிடம் நடைபெற்ற ஆய்வில் ஆறு வாரங்கள் பின் கணிசமான அளவு உடல் எடை குறைத்து.


▪️ இதன் மூலமாக நாம் தெரிந்து கொள்ளவேண்டிய உண்மை வெள்ளை அரிசிக்கு மாற்றாக கருப்புகவுணி மற்றும் *Unpolished brown ரைஸ்* பயன்படுத்த வேண்டும் என்பதே..


*5. கருப்பு கவுணி இதயத்தை பாதுகாக்கிறது :*

▪️ உடலில் உள்ள தேவையற்ற கெட்ட கொழுப்புகளை குறைப்பதால். இதயத்தின் ரத்த குழாய்களில் கொழுப்பு சேர்வதை தவிர்க்கிறது. இதனால் இதயம் பாதுகாக்கப்படுகிறது..


*6. கல்லீரல் உள்ள நச்சுத்தன்மை சுத்திகரிக்க உதவுகிறது :*

▪️ கல்லீரல் உள்ள நச்சுத்தன்மை சுத்திகரிக்க உதவுகிறது


*கல்லீரல் கொழுப்பு நோய்(Fatty liver disease)*

▪️  என்பது வெளிப்படையாகவே, கல்லீரலில் அதிகப்படியான கொழுப்பு சேர்வதால் உருவாகிறது.  இந்நிலையில் எலிகள் மீது செய்யப்பட்ட சோதனையில் கருப்பு அரிசி செயல்பாடு கொழுப்பு அமிலங்களின் வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்துவதாகவும், *triglyceride மற்றும் total cholesterol* அளவைக் குறைத்து, இதனால் Fatty liver disease க்கான அபாயத்தைக் குறைப்பதாக முடிவுகளில் தெரிகிறது.


*7.  மன -அழுத்தம் :*

▪️ மன - அழுத்தம் காரணமாக உடலிலும் மூளையும் பாதிப்பு அடைகிறது. கருப்பு கவுணி அரிசியில் உள்ள ஆன்தோசயனின் ஆக்ஸிடேடிவ் ஸ்ட்ரெஸ் எனப்படும் *மனஅழுத்தம்*  மற்றும் *மூளையில் ஏற்படும் அழுத்தம்* குறைக்க உதவும்.


*8.  இதயத்திற்கு நன்மை தரும் கருப்பு கவுணி :*

▪️ கருப்புகவுணி அரிசியில் உள்ள அந்தோசினனின் *ரத்தக்குழாய்களில் உள்ள கொழுப்புகளை*  கரைக்க உதவுகிறது. 


▪️ கருப்பு கவுனி அரிசி அன்றாட பயன்படுத்த *இதயத்தில் உள்ள சிறு ரத்த குழாய்களில்* அடைபட்டு இருக்கும் கொழுப்புகளை கரைக்க உதவும்.


*9. சர்க்கரை குறைபாடு :*

▪️ ரத்ததில் சர்க்கரை அளவு அதிகரிக்க *டயாபடீஸ்* என்னும் குறைபாடு வரக்காரணம். கருப்பு கவுனி அரிசியில்  உள்ள *Antioxidants, நார்சத்து, அந்தோசினனின்* போன்றவை சர்க்கரை நோய்யை காட்டுக்குள்ள வைக்க உதவு கிறது.


*10.  Gluten அரவே அற்ற கருப்பு கவுணி :*

▪️ கருப்பு கவுணி அரிசியில் இயற்கையாகவே Gluten எனப்படும் ஓட்டும் தன்மையுள்ள வேதி பொருள் கிடையாது. சிலருக்கு Gluten ஒவ்வாமை ஏற்படும். 


▪️ இதனால் கருப்பு கவுணி  அரிசி தினசரி பயன்படுத்த *Gluten-அல்ர்ஜி* யிலிருந்து விடு பெறலாம்.


*11. ஆஸ்துமா:*

கொரியாவில் எலிகளிடம்  மேற்கொண்ட ஆய்வில் அறியப்படுவது.. *மூச்சு குழாய்களில் உள்ள நீர்க்கோர்வை அல்லது சளியால்* ஏற்படும் பாதிப்புகள் குறைக்கிறது. இதனால் ஆஸ்துமா குறைக்கிறது.


*12.*  Glycemic Index Value  = 42.3

***********************************

*1.பேரீச்சை கவுனி அரிசி பாயசம்*


*தேவையானவை :*

கவுனி அரிசி – 4 மேசை கேரண்டி (Tablespoon)


 பால் – 1000 மிலி. 


 பேரீச்சம்பழம் – 20 கொட்டையுடன். 


 Condensed Milk  – 4 மேசை கேரண்டி (Tablespoon)


 துருவிய பாதாம் பருப்பு – 10


 ரோஸ் வாட்டர் – 4 சொட்டுகள்


*செய்முறை :*

*1.*  கவுனி அரிசியை ஒரு பாத்திரத்தில் சேர்த்து அது மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி 2 மணி நேரம் ஊறவிடவும். 


*2.* பேரீச்சம்பழத்தின் கொட்டையை நீக்கி, பின்னர் தண்ணீர் இல்லாமல் மிக்ஸியில் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். 


*3.* ஊறவைத்த கவுனி அரிசியின் தண்ணீரை வடித்துவிட்டு உலர வைக்கவும். பிறகு, லேசான ஈரப்பதத்தோடு இருக்கும் அரிசியை மிக்ஸியில் சேர்த்து ரவை பதத்துக்கு உடைத்துக்கொள்ளவும்.


*சமைக்கு முறை :*

▪️ குக்கரை அடுப்பில் வைத்து பாலை ஊற்றி, ஒரு கொதி வந்ததும், உடைத்த அரிசியைச் சேர்த்து மூடிபோட்டு 4 விசில் வரும் வரை வேகவிடவும். 


▪️ வெந்தவுடன் அதனுடன் அரைத்த பேரீச்சம்பழ விழுது, கண்டன்ஸ்டு மில்க் சேர்த்துக் கலக்கி கொதிக்கவிடவும். கலவை எல்லாம் நன்கு சேர்ந்து வந்ததும், துருவிய பாதாம், ரோஸ்வாட்டர் சேர்த்து பரிமாறலாம்.


*பரிமாறு முறை :*

வறுத்த முந்திரி மேலே வைத்து சூடாகவோ, குளிர வைத்தோ பரிமாறவும்.

***********************************

*2.கருப்பு கவுனி - இடியாப்பம் :*


*தேவையானவை :*

கவுனி அரிசி மாவு – ஒரு கப்


 உப்பு – தேவையான அளவு


 நெய் – ஒரு டீஸ்பூன்


 தேங்காய்த்துருவல் – தேவையான அளவு


 சர்க்கரை – தேவையான அளவு


*செய்முறை :*

*1.* கவுனி அரிசியை ஒரு பாத்திரத்தில் சேர்த்து அது மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி 4 மணி நேரம் ஊறவைத்து.


*2.* பிறகு நீரை வடித்துவிட்டு நிழலில் உலர விடவும். உலர்ந்த அரிசியை மெஷினில் கொடுத்து மாவாக அரைத்துக்கொள்ளவும். 


*3.*  இதை வெறும் வாணலியில் வறுத்து, ஆறவிட்டு, காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைத்துக்கொண்டால், புட்டு, இடியாப்பம், கொழுக்கட்டை செய்ய உபயோகப்படுத்தலாம்.


*சமைக்கும் முறை :*

*1.*  அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து தண்ணீரை ஊற்றி, சூடானதும் உப்பு, நெய் சேர்த்துக் கலக்கவும். ஒரு அகன்ற பாத்திரத்தில் கவுனி அரிசி மாவைக் கொட்டி, சுடவைத்த தண்ணீரை அதில் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி பிசையவும். 


*2.*  மாவு இடியாப்ப பதத்துக்கு வந்ததும் இடியாப்ப அச்சில் சேர்த்து இட்லித் தட்டில் பிழியவும். பிறகு, ஆவியில் 8 முதல் 10 நிமிடம் வரை வேகவைத்து எடுத்தால் இடியாப்பம் தயார்.


*பரிமாறு முறை :*

தேங்காய்த்துருவல், சர்க்கரை சேர்த்துப் பரிமாறவும்.

************************************

*3. கருப்பு கவுனி –  இட்லி*


*தேவையானவை :*

கருப்பு கவுனி அரிசி – 2 கப்


 இட்லி அரிசி – ஒரு கப்


 கெட்டி அவல் – ஒரு கப்


 உளுந்து – ஒரு கப்


 வெந்தயம் – கால் டீஸ்பூன்


 உப்பு – தேவையான அளவு


*செய்முறை :*

*1.*  கருப்பு கவுனி அரிசி மற்றும் இட்லி அரிசி ஒன்றாகச் சேர்த்தும், அவலைத் தனியாகவும், உளுந்து மற்றும் வெந்தயத்தை ஒன்றாக சேர்த்தும் ஒட்டுமொத்தமாக 4 மணி நேரம் ஊறவிடவும். பிறகு, எல்லாவற்றையும் நன்கு கழுவி ஒன்றாக கிரைண்டரில் சேர்த்து அரைத்து, உப்பு சேர்த்துக் கலக்கி 8 மணி நேரம் புளிக்க விடவும். புளித்த மாவை நன்கு கலக்கிவிடவும்..


*சமைக்கும் முறை :*

*2.*  புளித்த மாவை நன்கு கலக்கி. இட்லித் தட்டில் துணி விரித்து மாவை ஊற்றி மூடி போட்டு ஆவியில் 8 முதல் 10 நிமிடம் வேகவிட்டு எடுத்தால் கருப்பு கவுனி அரிசி இட்லி தயார்.


*பரிமாறும் முறை :*

தேங்காய் சட்னி/கரசட்டினி/கடப்பா சாம்பாருடன் பரிமாறவும்.

**********************************

*4. செட்டிநாடு ஸ்பெஷல் கருப்பு கவுனி இனிப்பு*


*தேவையானவை :*

கவுனி அரிசி – ஒரு கப்


 சர்க்கரை – முக்கால் கப்


 ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன்


 தேங்காய்த்துருவல் – முக்கால் கப்


 நெய் – 2 டேபிள்ஸ்பூன்


 முந்திரி, பாதாம் – சிறிதளவு


*செய்முறை :*

சுத்தம் செய்த கவுனி அரிசியை 4 கப் நீரில் 4 மணி நேரம் ஊற விடவும்.


*சமைக்கும் முறை :*

*1.*   குக்கரை அடுப்பில் வைத்து ஊறிய அரிசியை தண்ணீருடன் சேர்த்து மூன்று விசில் வேகவிடவும். 


*2.*  பிறகு, 15 நிமிடம் தீயை முற்றிலும் குறைத்து வேகவிட்டு அடுப்பை அணைக்கவும். பிறகு மூடியைத் திறந்து வெந்த அரிசியோடு சர்க்கரை, ஏலக்காய்த்தூள், நெய், முந்திரி, பாதாம் தேங்காய்த்துருவல் சேர்த்து கிளறி இறக்கிப் பரிமாறவும்.


*பரிமாறும் முறை :*

சூடாக உண்ண/ஆறிய பின் உண்ண ஏற்றது.


**********************************

*1. உடலின் ஆரோக்கியத்திற்கு கருப்புகவுணி அரிசி ஏற்றதா..?*

▪️ ஆம், கருப்புகவுணி அரிசி உடலின் ஆரோக்கியத்திற்கு ஏற்றது. கருப்புகவுணி அரிசி உள்ள *Anthocyanine* அளவற்ற நன்மைகள் தரக்கூடியது. 


*2. கருப்பு கவுனி அரிசி  Glueten Free யா..?*

▪️ ஆம், கருப்பு கவுனி அரிசி  Glueten Free தான்.


*3. சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவுதானா..?*

▪️ ஆம், கருப்பு கவுணி அரிசி சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவு தான். கருப்பு கவுணி அரிசி *ரத்தத்தில் உள்ள சர்க்கரை* அளவினை குறைக்க உதவும்.


*4. புற்று நோயாளிகளுக்கு கருப்பு கவுணி உணவினை உண்ணலாமா..?*

▪️ கருப்பு கவுணி அரிசியை ஆரம்ப நிலை புற்று நோய்யாளிகளுக்கு உட்கொள்ளலாம். மற்ற நிலை புற்று நோயாளிகளுக்கு மருத்துவரின்/சித்த மருத்துவரின் ஆலோசனை பெறவும். 


*5. அரிசியை பாதுகாப்பது எப்படி..?*

▪️ இயற்கை கருப்பு கவுணியை காற்று போகாத வகையில் பாதுகாக்க *லவங்கம், கிராம்பு அல்லது மிளகாய் வற்றல்* போட்டு வைக்கலாம். இதனால் பூச்சிகள் மற்றும் புழுக்கள்   வராமல் தடுக்கலாம்.


*6. கருப்புகவுணி அரிசி சுவை எப்படி இருக்கும்..?*

▪️ மற்ற அரிசி வகை போல அல்லாமல் கருப்பு கவுணி அரிசி *Nutty Flavour* பருப்பு சுவை போல் இருக்கும்.


*7. கருப்பு அரிசியா  அல்லது ஊதா அரிசியா..?*

▪️ கருப்பு அரிசி சமைத்த பின் பார்ப்பதற்கு ஊதா நிறத்தில் இருக்கும். இதனால் கருப்பு கவுணி அரிசிக்கு ஊதா அரிசி *“Purple Rice ”* என வேறு பெயர் உண்டு. 


🌾  *கருப்புகவுணி* *NutrinationalFacts*

*நார்ச்சத்து:* 

▪️கருப்புகவுணி அரிசி அதிக படியான நார்ச்சத்து உள்ளது.100 கிராம் அளவில் 3 கிராம் நார்ச்சத்து உள்ளது. 


🌾  *1 கப் அளவு சமைத்த கருப்புகவுணி அரிசியில் உள்ள சத்துக்கள்*


▪️ கலோரிஸ்   =160 கிராம் 


▪️ மொத்த கொழுப்பு  = 2 கிராம் 


▪️ சோடியம்     = 4 மில்லி கி


▪️ பொட்டாசியம்  = 268 கிராம் 


▪️ மொத்த carbs   = 34 கிராம் 


▪️ புரதம்           = 5 கிராம் 


▪️ இரும்பு               = 6%


▪️ நார்ச்சத்து     = 3 கிராம்

_________________________

தமிழ் எண்கள்

🌴🌴🌴

தமிழ்எண்களைப் பயன்படுத்தும் நாடு


உலகில் ஒரே ஒரு நாடு மட்டுமே தமிழ் எண்களை நாணயத்தாள்களில் பயன்படுத்துகிறது.....


தமிழ் எண்கள்


1 - க, 2 - உ, 3 - ங, 4 - ச, 5 - ரு, 6 - சு, 7 - எ, 8 - அ, 9 - கூ, 10 - கo,

11 - கக, 12 - கஉ, 13 - கங, 14 - கச, 15 - கரு, 16 - கசு, 17 - கஎ, 18 - கஅ, 19 - ககூ, 20 - உo

21 - உக, 22 - உஉ, 23 - உங, 24 - உச, 25 - உரு, 26 - உசு, 27 - உஎ, 28 - உஅ, 29 - உகூ, 30 - ஙo

31 - ஙக, 32 - ஙஉ, 33 - ஙங, 34 - ஙச, 35 - ஙரு, 36 - ஙசு, 37 - ஙஎ, 38 - ஙஅ, 39 - ஙகூ, 40 - சo,

41 - சக, 42 - சஉ, 43 - சங, 44 - சச, 45 - சரு, 46 - சசு, 47 - சஎ, 48 - சஅ, 49 - சகூ, 50 - ருo

51 - ருக, 52 - ருஉ, 53 - ருங, 54 - ருச, 55 - ருரு, 56 - ருஎ, 57 - ருஎ, 58 - ருஎ, 59 - ருகூ, 60 - சுo

61 - சுக, 62 - சுஉ, 63 - சுங, 64 - சுச, 65 - சுரு, 66 - சுசு, 67 - சுஎ, 68 - சுஅ, 69 - சுகூ, 70 - எo

71 - எக, 72 - எஉ, 73 - எங, 74 - ஏசு, 75 - எரு, 76 - எசு, 77 - எஎ, 78 - எஅ, 79 - எகூ, 80 - அo

81 - அக, 82 - அஉ, 83 - அங, 84 - அச, 85 - அரு, 86 - அசு, 87 - அஎ, 88 - அஅ, 89 - அகூ, 90 - கூo

91 - கூக, 92 - கூஉ, 93- கூங, 94 - கூச, 95 - கூரு, 96 - கூசு, 97 - கூஎ, 98 - கூஅ, 99 - கூகூ, 100 - கoo

101 - கoக, 102- கoஉ, 103 - கoங, 104 - கoச, 105 - கoரு, 106 - கoசு, 107 - கoஎ, 108 - கoஅ, 109 - கoகூ, 110 - ககo

111 - ககக, 112- ககஉ, 113 - ககங, 114 - ககச, 115 - ககரு, 116 - ககசு, 117 - ககஎ, 118 - ககஅ, 119 - கககூ, 120 - கஉo

121 - கஉக, 122- கஉஉ, 123 - கஉங, 124 - கஉச, 125 - கஉரு, 126 -கஉசு, 127 - கஉஎ, 128 - கஉஅ, 129 - கஉகூ, 130 - கஙo

131 - கஙக, 132- கஙஉ, 133 - கஙங, 134 - கஙச, 135 - கஙரு, 136 - கஙசு, 137 - கஙஎ, 138 - கஙஅ, 139 - கஙகூ, 140 - கசo

141 - கசக, 142- கசஉ, 143 - கசங, 144 - கசச, 145 - கசரு, 146 - கசசு, 147 - கசஎ, 148 - கசஅ, 149 - கசகூ, 150 - கருo

151 - கருக, 152- கருஉ, 153 - கருச, 154 - கருச, 155 - கருரு, 156 - கருஎ, 157 - கருஎ, 158 - கருஅ, 159 - கருகூ, 160 - கசுo

161 - கசுக, 162- கசுஉ, 163 - கசுங, 164 - கசுச, 165 - கசுரு, 166 - கசுசு, 167 - கசுஎ, 168 - கசுஅ, 169 - கசுகூ, 170 - கஎo

171 - கஎக, 172- கஎஉ, 173 - கஎங, 174 - கஏசு, 175 - கஎரு, 176 - கஎசு, 177 - கஎஎ, 178 - கஎஅ, 179 - கஎகூ, 180 - கஅo

181 - கஅக, 182- கஅஉ, 183 - கஅங, 184 - கஅச, 185 - கஅரு, 186 - கஅசு, 187 - கஅஎ, 188 - கஅஅ, 189 - கஅகூ, 190 - ககூo

191 - ககூக, 192- ககூஉ, 193 - ககூங, 194 - ககூச, 195 - ககூரு, 196 - ககூசு, 197 - ககூஎ, 198 - ககூஅ, 199 - ககூகூ, 200 - உoo

      மொரீசியஸ்  நாட்டின் ரூபாய் தாளில் தமிழில் எழுத்துக்களும், எண்களும் ( ரூ.10 தமிழில் ) இடம் பெற்றிருக்கின்றது. எங்கோ தூரத்தில் ஆப்பிரிக்காவின் அருகில் உள்ள மொரிசியஸ் அரசு தமிழ் எண்களை பயன்படுத்துவது பெருமைக்குரியதே.

மொரீசியஸில் 30000 க்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழ்கின்றனர்.  அகத்தியர் தந்த தமிழ் மொரீசியஸில் இன்றும் வாழ்கிறது.

நில அளவை தகவல்கள்

 சர்வே" பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 7 சங்கதிகள்:

--------------------------

1. சர்வே இரண்டு பிரிவுகளாக மாநில அரசு பிரிக்கிறது.

1. நில அளவை துறை

2. நில வரிதிட்ட துறை

2. புலப்படம், கிராம வரைபடம் எல்லாம் நில அளவை துறையினால் தயாரிக்கப்படுகிறது.

3. “அ” பதிவேடு (A. Register) நில வரி திட்ட துறையினரால் உருவாக்கப்படுகிறது.

4. மாநில அரசின் நில அள வைகளை நகர நில அளவை , நத்தம் நில அளவை, மலை கிராம நில அளவை, மறு நில அளவை, வட்ட அளவில் நாள் தோறும் நடைபெறும் பட்டா மாறுதல் சம்மந்தமான நில அளவைகள் என பிரிக்கப்படுகிறது.

5. 1. கிராம வரைபடம்,

2. D ஸ்கேட்ச் ( நன்செய், புன்செய், மானவளி, நத்தம், புறம்போக்கு பகுதிகளை பிரித்து காட்டும் வரைபடம்)

3. புலப்படம்

4.சர்வே கற்கள் பதிவேடு

5. டிப்போ பதிவேடு ( கிராமத்தில் இருக்கும் ஸ்டாக் வைக்கப்பட்ட கற்கள், நில அளவை சங்கிலி உட்பட

உபகரணங்கள் இருக்கும் டிப்போ ) போன்ற ஆவணங்ள் கிராம நில அளவையில் இருக்கும்.

6. ஒவ்வொரு நில உரிமையாளரும் சர்வே செய்து போடப்பட்ட கற்களை பராமரிக்க வேண்டும். எல்லை கல்லை பாதுகாப்பது , அந்த கல் தொட்டு கொண்டு இருக்கும் புலன்களுடைய பட்டாதரரின் கூட்டு பொறுப்பு ஆகும்.

7. மத்திய அரசினால் ஆறுகள், ஏரிகள், மலைகள், சாலைகள் கோவில்கள் விளக்கி காட்டி ஸ்தல சர்வே செய்வார்கள், இவை கனிம வள ஆராய்ச்சிக்கு மிகவும் பயன்படும்.

எப்பொழுதெல்லாம் நிலத்தில் சர்வே செய்யப்படும்?

1. நிலவரி திட்டம் செயல்படுத்தப்படும் பொழுது, இறுதியாக 1984 ல் இருந்து 1987 வரை நடந்தது.

2. பிறகு நத்தத்தில் நிலவரி திட்டம் செயல்படுத்தப்படும் பொழுது , இறுதியாக 1990 களில் நடந்தது.

3. சர்வே புலத்தில் புதிய சர்வே புலம் அமைக்கும் போதும், சர்வே புலத்தின் எல்லையில் மாற்றம் செய்ய நேரிடும் போதும்.


4. கிராம வரைபடம் வரையும் போது திருத்தம் கண்டுப்பிடிக்கப்பட்டு எல்லை மாற்றம் செய்யப்படும் பொழுதும்

5. புறம்போக்கு நிலத்தில் எல்லைகள் மாறுதல், புறம்போக்கு தரிசாக மாறும் பொழுது, தரிசு புறம்போக்காக மாறும் பொழுதும்.

6. நிலத்தை அரசு ஆர்ஜிதம் செய்யும் போது நிலத்தின் உட்பிரிவுகளை ஒன்றாக்கி புறம்போக்காக மாற்றும் பொழுது.

7. அளவுப்பிழை, விஸ்தீரணப் பிழை, உருவப்பிழை பட்டாதரரின் நிலத்தில் கண்டுபிடிக்கப்பட்டால் அதனை சரி செய்யும் பொழுது.

8. பராமரிப்பு பணிகளின் போது புதிய சர்வே புலம் அமைக்க வேண்டி இருந்தால் நில அளவை, சர்வே செய்யப்படும்.

9. இரண்டு நில உரிமையாளருக்கு நில அளவுகளில் தகராறு வரும்பட்சத்திலும் நிலத்தை சர்வே செய்ய வேண்டி இருக்கும்.

சர்வே புல வரைப்படத்தில் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய 7 முக்கிய செய்திகள் :

1. ஒரு FMB யில் நிலத்தின் அளவுகள், உட்பிரிவு எண்கள், விளக்கிகள் அருகில் உள்ள சர்வே எண்கள் ஆகியவை இருக்கும்.

2. ஒரு சர்வே எண்ணின் எல்லை கோடுகளுக்கு பெயர் F லைன் என்று பெயர் ( FIELD BOUNDARY LINE).

3. குறுக்கு விட்டமாக வரும் லைனுக்கு G லைன் என்று பெயர் அதாவது A யிலிருந்து D க்கு இவ்வளவு தூரம் என்று கணக்கிட்டு விடுவார்கள்.

4. மேலும் E யிலிருந்து B க்கும் விட்டமாக ஒரு லைனும் அதன் அளவும் போட்டு இருப்பர், அதுவும் G. லைன் ஆகும்.

5. இரண்டு G லைனில் ஏதாவது ஒரு கல் காணாமல் போனாலும் மற்ற G லைனை வைத்து காணாமல் போன கல் எங்கு இருக்க வேண்டும் என்று கண்டுப் பிடிப்பர்.

6. மீட்டர் கணக்கில் தான் FMB யில் அளவுகளை எழுதுவார்கள்.

7. ஒரே சர்வே எண்ணில் 15 ஏக்கருக்கு மேல் இருந்தால் 1:5000 என்றும், கொஞ்சம் குறைவாக இருப்பின் 1:2000 என்றும், மிகசிறிய நிலமாக இருந்தால் 1:1000என்றும் இருக்கும்.நிலத்தை அளக்கும் அளவு முறைகள் பற்றி …

நிலத்தை அளக்கின்ற அளவீடுகள்! ஒவ்வொரு பகுதிகளில் ஒவ்வொரு அளவீட்டு முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றை நிச்சயமாக புரிந்து கொள்ள வேண்டும். தமிழ்நாடில் 3 அளவீட்டு முறைகள் பயன்படுத்தப்படுகின்றது.

1. பாரம்பரிய நாட்டு வழக்கு அளவீடுகள் : குழி, மா, வேலி, காணி, மரக்கா,

2. பிரிட்டிஸ் வழக்கு அளவீடுகள் : சதுரஅடி, சென்ட், ஏக்கர், போன்றவை

3. மெட்ரிக் வழக்கு அளவுகள் : ச.மீட்டர், ஏர்ஸ், ஹெக்டேர்ஸ்

@#பாரம்பரியவழக்கம்:

நம் மண்ணில் ஆரம்ப காலம் தொட்டு புழக்கத்தில் இருக்கிறது. பிரிட்டிஸ் அளவுகள், வெள்ளைகாரன் நாட்டை ஆண்டபோது நில நிர்வாகத்தை 90% அவர்கள் உருவாக்கியதால், அதன் அளவு முறைகள் இன்றும் நடைமுறையில் உள்ளன.

உலகம் முழுக்க ஒரே அளவுகள் கொண்டுவந்தால் வியாபாரத்தில் வசதியாக இருக்கும் நோக்கில் மெட்ரிக் அளவுமுறையும் பயன் படுத்தி கொண்டு இருக்கின்றோம்.

• இன்றைக்கும் விருதுகள், சிவகாசி, சாத்தூர் பகுதிகளில் வீட்டுமனைகள் குழி கணக்கில் தான் விற்பனை செய்யபடுகிறது.

• கொங்கு பகுதிகளில் சென்ட் என்றும், சென்னையில், கிரவுண்டு என்றுமே வீட்டுமனைகள் புழக்கத்தில் இருக்கிறது.

• நாட்டு வழக்கு அளவுகளில் பிரிட்டிஸ் அளவு முறைகளில் தமிழகம் முழுவதும் உள்ள விவசாய நிலங்கள் பரிமாற்றங்கள் நடக்கின்றன.

• ஆனால் எல்லா பட்டா ஆவணங்களும் மெட்ரிக் அளவுமுறைகளில் ஏர்ஸ், ஹெக்டேரில் தான் இருக்கின்றன.

#வேலி

• 1வேலி – 2௦ மா

• 1வேலி – 6.17 ஏக்கர்

• 1வேலி – 5காணி

#மா

• 1மா – 1௦௦ குழி

• 2௦மா – 1வேலி

• 3மா – 1ஏக்கர்

• 3மா – 1௦௦ சென்ட்

• 7மா – 1ஹெக்டேர்

#சதுமீட்டர்

• 1௦,௦௦௦ சதுர மீட்டர் – 1ஹெக்டேர்

• 4046.82 சதுர மீட்டர் – 1ஏக்கர்

• 4௦.5 சதுர மீட்டர் – 1சென்ட்

• 222.96 சதுர மீட்டர் – 1கிரவுன்ட்

• 1சதுர மீட்டர் – 1௦.76391 சதுர அடி

• ௦.௦929 சதுர மீட்டர் – 1 சதுர அடி

• 1௦௦ சதுர மீட்டர் – 1ஏர்ஸ்

• ௦.8361 சதுர மீட்டர் – 1குழி

• 1௦1.17 சதுர மீட்டர் – 121 குழி

#செயின்

• 1செயின் – 66அடி

• 1செயின் – 1௦௦ லிங்க்

• 1௦செயின் – 1 பர்லாங்கு

• 1செயின் – 22 கெஜம்

#ஏக்கர்

• 1ஏக்கர் – 43,56௦ சதுர அடிகள்

• 1ஏக்கர் – 1௦௦ சென்ட்

• 1ஏக்கர் – 16௦ square Roads

• 1ஏக்கர் – 1.1834 Square Arpents

• 1ஏக்கர் – 1௦ Square Chains

• 1ஏக்கர் – 16௦ Perches

• 1ஏக்கர் – 16௦ Poles

• 1ஏக்கர் – 4௦46.82 சதுர மீட்டர்

• 2ஏக்கர் 47சென்ட்- 1 ஹெக்டேர்

• 1ஏக்கர் – ௦. 4௦469 ஹெக்டேர்

• 1.32ஏக்கர் – 1 காணி

• 64௦ஏக்கர் – 1 சதுர மைல்

• 2.5ஏக்கர் – 1 லட்சம் சதுர லிங்ஸ்

• 6.17ஏக்கர் – 1 வேலி

• 1ஏக்கர் – 3 மா

• 1ஏக்கர் – ௦. 4௦4694 ஹெக்டேர்

• 1ஏக்கர் – 4௦.5ஏர்ஸ்

• 1ஏக்கர் – 4840 சதுர கெஜம்

• 64௦ ஏக்கர் – 1 சதுர மைல்

• 8.64ஏக்கர் – 1வள்ளம்

#கெஜம்

• 1கெஜம் – 3அடி

• 22கெஜம் – 1 செயின்

• 22கெஜம் – 66 அடி

• 1கெஜம் – ௦.9144 மீட்டர்

• 1.௦93613 – 1மீட்டர்

#ஏர்ஸ்

• 1௦ ஏர்ஸ் – ௦2471 சென்ட்

• 1ஏர்ஸ் – 1௦76 சதுர அடி

• 1ஏர்ஸ் – 2. 47 சென்ட்

• 1ஏர்ஸ் – 1௦௦ ச.மீ

• 1௦௦ ஏர்ஸ் – 1ஹெக்டேர்

• ௦. 4௦5 ஏர்ஸ் – 1 சென்ட்

#ஹெக்டேர்

• 1ஹெக்டேர் – 2 ஏக்கர் 47 சென்ட்

• 1ஹெக்டேர் – 1௦,௦௦௦ ச.மீ

• 1ஹெக்டேர் – 1௦௦ ஏர்ஸ்

• ௦௦4௦ ஹெக்டேர் – 1சென்ட்

• 1ஹெக்டேர் – 247 சென்ட்

• 1ஹெக்டேர் – 1௦7637.8 சதுர அடிகள்

• ௦. 4௦5 ஹெக்டேர் – 1ஏக்கர்

#சென்ட்

• 1சென்ட் – 435.சதுரஅடிகள்

• 1சென்ட் – 4௦.5 சதுர மீட்டர்

• 1சென்ட் – 3குழி

• 1சென்ட் – 48.4 சதுர குழி

• 1௦௦ சென்ட் – 484௦ சதுர குழி

• 1 சென்ட் – ௦௦4௦ ஹெக்டேர்

• 1 சென்ட் – ௦. 4௦5 ஏர்ஸ்

• 1சென்ட் – 4௦. 46 சதுர மீட்டர்

• 2. 47 சென்ட் – 1ஏர்ஸ்

• 1 சென்ட் – 1௦௦௦ சதுர லிங்ஸ்

• 5.5 சென்ட் – 1கிரவுன்ட்

• 1.5 சென்ட் – டிசிமல்

• 1சென்ட் – ௦.௦௦4௦47 ஹெக்டேர்

• 1௦ சென்ட் – ௦.௦4௦47 ஹெக்டேர்

• ௦.௦2471சென்ட் – 1 ஏர்ஸ்

• ௦.௦2471சென்ட் – 1௦ ஏர்ஸ்

• 5.5 சென்ட் – 24௦௦ சதுர அடிகள்

• 5.5 சென்ட் – 1 மனை

• 33.௦6சென்ட் – 1 மா

• 6.61 சென்ட் – 1 வேலி

• ௦.7 சென்ட் – 1 குழி – 3௦௦ சதுர அடி ( மதுரை)

• ௦.7. சென்ட் – 3௦௦ சதுர அடிகள் ( மதுரை )

#சென்ட்

• 11.௦ சென்ட் – 4800 சதுர அடிகள்

• 11.௦ சென்ட் – 2மனை

• 56 சென்ட் – 1குருக்கம்

• 56 சென்ட் – 24,௦௦௦ சதுர அடிகள்

• 2. 47 சென்ட் – 1௦76 சதுர அடிகள்

• 4.7 சென்ட் – 1வீசம்

#கிரவுண்ட்

• 1கிரவுண்ட் – 222.96 சதுர மீட்டர்

• 1கிரவுண்ட் – 24௦௦ சதுர அடிகள்

• 1கிரவுண்ட் – 5.5 சென்ட்

#மீட்டர்

• 1 மீட்டர் – 3.281 அடிகள்

• 161௦ மீட்டர் – 1 மைல்

• 1௦௦௦ மீட்டர் – 1கி.மீ

• 1௦௦௦ மீட்டர் – ௦.62 மைல்

• ௦.9144 மீட்டர் – 1 கெஜம்

• 1 மீட்டர் – 39.39 இஞ்ச்

• 2௦1.16 மீ – 8 பர்லாங்கு

• 1 மீட்டர் – 1.௦93613 கெஜம்

• ௦.3௦48 – 1அடி

• 1௦ மீட்டர் – 32. 8௦84 அடிகள்


#அடி_சதுரஅடிகள்


• 435.6 சதுர அடிகள் 1சென்ட்

• 24௦௦ சதுர அடிகள் 1கிரவுண்ட்

• 57,6௦௦ சதுர அடிகள் 1காணி

• 3.28 அடி 1மீட்டர்

• 1அடி 12 இன்ச்

• 1அடி 3௦. 48 செ. மீ

• 528௦ அடி 1 மைல்

• 328௦ அடி 1கி. மீ

• 1௦76 சதுர அடிகள் 1 ஏர்ஸ்

• 1௦.76391 சதுர அடிகள் 1சதுர மீட்டர்

• 1சதுர அடி ௦.௦929 சதுர மீட்டர்

• 24௦௦ சதுர அடிகள் 1 மனை

• 1 சதுர அடிகள் 144 சதுர அங்குலம்

• 43,56௦ சதுர அடிகள் 1 ஏக்கர்

• 1 சதுர அடி 144 சதுர அங்குலம்

• 1௦89 சதுர அடிகள் 33 அடி

• 1௦7637. 8 சதுர அடிகள் 1 ஹெக்டேர்

• 33 அடி 1 குந்தா

• 66௦ அடி 1 பர்லாங்கு

• 66௦ அடி 22௦ கெஜம்

• 66 அடி 1 செயின்

• 66 அடி 1௦௦ லிங்க்

• ௦.66 அடி 1 லிங்க்

• ௦.66 அடி 7.92 அங்குலம்

• 3 அடி 1 கெஜம்

• 1௦76 சதுர அடிகள் 2. 47 சென்ட்

• 66 அடி 22 கெஜம்

• 3.28 அடி 1.௦93613 கெஜம்

• 1 அடி ௦.3048 மீட்டர்

• 3.28௦84 அடி 1 மீட்டர்

• 32. 8௦84 1௦ மீட்டர்

• 1 சதுர அடி ௦.௦929௦ சதுர மீட்டர்

• 1௦ சதுர அடிகள் ௦.929௦ சதுர மீட்டர்

• 1௦௦ சதுர அடிகள் 9.29௦ சதுர மீட்டர்

• 2௦௦ சதுர அடிகள் 18.58௦ சதுர மீட்டர்

• 5௦௦ சதுர அடிகள் 46. 45 சதுர மீட்டர்

• 1௦7.6939 சதுர அடிகள் 1௦ ச. மீ

• 215.278 2௦சதுர மீட்டர்

• 538.195 சதுர அடிகள் 1௦௦ சதுர மீட்டர்

• 4,356 சதுர அடிகள் 1௦ சென்ட்

• 48௦௦ சதுர அடிகள் 1 மிந்திரி

• 24, 4௦௦ சதுர அடிகள் 1குறுக்கும்

• 144 சதுர அடிகள் 1குழி

கருவளையம் போக்க

 *🌷🌷கருவளையத்தைப் போக்க வீட்டிலேயே செய்யக்கூடிய வழிமுறைகள்…*


கருவளையம் வந்தால், முதலில் அதற்கான காரணத்தைக் கண்டுபிடிக்க வேண்டும். மருத்துவர்கள் கண்களை இழுத்துப் பரிசோதிப்பது போல கண்ணாடி முன் நின்று பரிசோதிக்க வேண்டும். கருவளையத்தின் மேல் விரல் வைத்து இழுக்கும்போது, தோல் பகுதி வெள்ளையாக இருந்தால் ஊட்டச்சத்து குறைவு (குறிப்பாக இரும்புச்சத்து) காரணமாக ஏற்பட்ட கருவளையமாக இருக்கலாம். இதுவே கருப்பாக இருந்தால், பிக்மென்ட் அல்லது மரபணுவினால் ஏற்பட்டுள்ள கருவளையமாக இருக்கக்கூடும்.


சிவப்பு தாமரை இதழ்களை அரைத்து, அதன் விழுதில் ஒரு 25 கிராம், விளக்கெண்ணெய் 25 கிராம், தேன் 10 கிராம் எடுத்து எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும். தினமும் குளிக்கும் முன்பும், இரவு தூங்கும் முன்பும் இதில் சிறிது எடுத்து கண்களைச் சுற்றி பேக் போல தடவி, அரை மணி நேரம் கண்களை மூடி ஓய்வெடுத்து, பிறகு கழுவி விடலாம்.


திக்கான கிரீன் டீ டிகாக்ஷன் 10 மில்லி எடுத்து, அதில் 5 கிராம் சுருள் பாசி (ஸ்பைருலினா) தூள், 10 சொட்டு லாவண்டர் ஆயில், 10 சொட்டு லெமன்கிராஸ் ஆயில் கலந்து இரண்டு மணி நேரம் திறந்தாற்போல வைக்க வேண்டும். பிறகு, இதை எடுத்து ஃப்ரிட்ஜில் வைத்து, தினமும் குளிக்கும் முன்பும், இரவு தூங்கும் முன்பும் சிறிது எடுத்து கண்களைச் சுற்றி பேக் போல தடவி, அரைமணி நேரம் கண்களை மூடி ஓய்வெடுத்து… பிறகு, கழுவிவிடலாம்.


கண்ணுக்கு கீழ் வரும் பை: சிலருக்கு கண்ணுக்கு கீழ் சதைப் பை தோன்றி, முக அழகையே கெடுத்துவிடும். இதற்கு, பாதாம் ஆயில் 2 சொட்டு, விளக்கெண்ணெய் 2 சொட்டு இரண்டையும் கலந்து, கண்ணின் வெளி நுனிப்பகுதியில் ஆள்காட்டி விரலை வைத்து அழுத்தி, வெளிப்பக்கமா இழுத்துப் பிடித்துக்கொண்டு, இன்னொரு கை விரலால் எண்ணெய்க் கலவையைத் தொட்டு, இழுக்கும் திசையில் வெளிப்பக்கமாக மசாஜ் செய்ய வேண்டும். ஒவ்வொரு கண்ணுக்கும் 10 - 15 முறை இப்படி மசாஜ் செய்த பின், இரண்டு கண்களையும் மூடி, ஐஸ் தண்ணீரில் நனைத்த திக்கான பஞ்சை அதன் மேல் வைத்து ஐந்து நிமிடம் கழித்து எடுத்துவிட வேண்டும். தினமும் இருமுறை இதைத் தொடர்ந்து செய்துவந்தால், நாளடைவில் கண் பை குறையும்.





🌷🌷

குளிர்காலத்தில் எலும்புகளை காக்க சாப்பிட வேண்டிய உணவுகள்

*🌷🌷குளிர்காலத்தில் எலும்புகளை காக்க சாப்பிட வேண்டிய உணவுகள்*


குளிர்காலத்தில் உடலின் வெப்ப நிலை குறைவதன் காரணமாக தசைகள் இறுக்கமடையும். மூட்டுகள் விறைப்படையும். மூட்டு வலி பிரச்சினையும் தலைதூக்கும். அதனை தவிர்க்க குளிர் காலத்தில் சாப்பிட வேண்டிய அவசியமான உணவு பட்டியல்களின் தொகுப்பு இது.


தினை:


தினை வகைகளில் நார்ச்சத்தும், அமினோ அமிலமும் நிறைந்துள்ளது. குர்செடின் எனும் சேர்மமும் உள்ளது. இது அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டது. மேலும் இது மூட்டு வலியை குறைத்து உடலை நீண்ட நேரம் சூடாக வைத்திருக்க உதவும். தினை வகைகளில் ராகியை உணவில் கட்டாயம் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதில் கால்சியம் அதிகம் உள்ளதால் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு நல்லது.


நெய்:


இதில் வைட்டமின்கள், ஆன்டி ஆக்சிடென்டுகள், ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ளது. இவை மூட்டு விறைப்படைவதை குறைக்க உதவுகிறது. மற்றும் மூட்டுகளில் உராய்வு மற்றும் வீக்கத்தை தணிக்க உதவுகிறது.


நட்ஸ் வகைகள்:


பாதாம், முந்திரி, வால்நட் போன்ற நட்ஸ் வகைகளில் நார்ச்சத்து, கால்சியம், மெக்னீசியம், துத்தநாகம் மற்றும் வைட்டமின் ஈ ஆகியவை நிறைந்துள்ளன. ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களும் அதிகம் உள்ளன. இவை அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன. மூட்டுகளில் ஏற்படும் வீக்கம் மற்றும் வலியைக் குறைக்கவும் இது உதவும். மேலும் குளிர்காலத்தில் உடலை சூடாக வைத்திருக்கவும் துணை புரியும்.


பச்சை இலை காய்கறிகள்:


குளிர்காலத்தில் பச்சை இலைக் காய்கறிகள் எளிதாகக் கிடைக்கும். அவை வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் மற்றும் ஆன்டி ஆக்சிடென்டுகள் நிறைந்தவை. அவற்றில் சல்போராபேன் உள்ளது. இது எலும்பு தொடர்பான பிரச்சினைகளை தடுக்கக்கூடியது. பச்சை இலை காய்கறிகளை அதிகம் எண்ணெய் சேர்க்காமல் சமைப்பது நல்லது. சூப்பாக தயாரித்தும் உட்கொள்ளலாம். அது எளிதில் உடலில் உறிஞ்சப்படும்.


எலும்பு சூப்:


ஆடு, கோழி போன்ற இறைச்சிகளின் எலும்பு பகுதிகளை வேக வைத்து சூப்பாக தயாரித்தும் பருகலாம். இந்த எலும்பு சூப்பில் தாதுக்கள், குளுக்கோசமைன் மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளன. இவை எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு நல்லது. மூட்டு வலிக்கும் நிவாரணம் தரும்.


இஞ்சி - பூண்டு:


மூட்டு வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவும் கிருமி நாசினியாக இவை அறியப்படுகின்றன. இவை அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆன்டி ஆக்சிடென்ட் பண்புகளை கொண்டிருக்கின்றன. இஞ்சி, பூண்டு இரண்டையும் விழுதாக அரைத்து உணவில் பயன்படுத்தலாம். இஞ்சி டீ பருகலாம்.





🌷🌷

லைசென்ஸ் இல்லாமல் வட்டிக்குப் பணம் கொடுப்பது சட்டப்படி குற்றமா?

 சட்டம் என்ன சொல்கிறது..?

லைசென்ஸ் இல்லாமல் வட்டிக்குப் பணம் கொடுப்பது சட்டப்படி குற்றமா? அப்படி வட்டிக்குக் கொடுத்தால் என்ன தண்டனை?

வட்டிக்குப் பணம் கொடுத்து வாங்குவதை முறைப்படுத்துவதற்காக ஒவ்வொரு மாநிலமும் தனியாகச் சட்டம் கொண்டு வந்துள்ளது.

அதில் தமிழ்நாடு 1957-லிலிருந்து வட்டிக்குப் பணம் கொடுப்பதை நெறிப்படுத்தும் சட்டம் (tamil nadu money lenders act 1957) நடைமுறையில் உள்ளது.

அதன்படி வட்டிக்குப் பணம் கொடுப்பதைத் தொழிலாக நடத்துபவர்கள் முறைப்படி தாசில்தாரிடம் அனுமதி பெற்று நடத்தவேண்டும். இது தனி நபர், கூட்டாக பங்குதாரர்களாக நடத்தலாம்.

ஆனால் இந்தச் சட்டம் வங்கிகளுக்கோ, வட்டிக்குப் பணம் கொடுக்கும் கூட்டுறவு சங்கங்கள், நிதி நிறுவனங்களுக்குப் பொருந்தாது. ஏனென்றால் டெபாசிட் வாங்குவது வட்டிக்குப் பணம் கொடுப்பது என்றால் வங்கி நடைமுறைக்கு கீழ் வருவதால் அதற்கு ரிசர்வ் வங்கியில் அனுமதி பெற வேண்டும்.

நான் டெபாசிட் எதுவும் வாங்கவில்லை, வெறுமனே பணம் மட்டுமே வட்டிக்குக் கொடுத்து வாங்குகிறேன் என்றால் அதற்கு தாசில்தாரிடம் லைசென்ஸ் வாங்க வேண்டும். 

அடகுக் கடை வைத்திருப்பவர்கள் லைசென்ஸ் வாங்குவது போல் இதற்கும், ‘மணி லெண்டர்ஸ் ஆக்ட் 1957’-ன் கீழ் உள்ள சட்டத்தின் கீழ் லைசென்ஸ் வாங்க வேண்டும்.

அப்படி இல்லாமல் வட்டிக்குப் பணம் கொடுத்து வாங்குவதை முழுநேரத் தொழிலாக செய்வது சட்டப்படி குற்றம். ஒரு வித்தியாசம் என்னவென்றால் அதை முழு நேரத் தொழிலாக ஒரு இடத்தில் நிறுவனம் தொடங்கி முழு நேரத் தொழிலாகச் செய்தால் லைசென்ஸ் எடுக்க வேண்டும். 

ஆனால் ஒரு தனிநபர் யாருமே தனது வாழ்க்கையில் மற்றவர்களிடம் பணம் கொடுத்து வட்டி வாங்குவது நடக்கும்.

தனது நண்பர்களுக்கு, உறவினர்களுக்கு வாழ்க்கையில் பணத் தேவைக்கு உதவும்போது பணம் கொடுத்து வட்டி வாங்குவது வழக்கமாக இருக்கும். அவர்களை முழு நேரத் தொழிலாக நாம் எடுத்துக்கொள்ள முடியாது. அதில் லைசென்ஸ் எடுக்கவேண்டும் என்கிற அவசியமில்லை.

சில வருடங்களுக்கு முன், வருமான வரித்துறை நடிகர் ரஜினிகாந்த் மீது தாக்கல் செய்த வழக்கில், நடிகர் ரஜினி தனது அபிடவிட்டில் கீழ்கண்டவாறு பதில் அளித்திருந்தார்.

"நான் நண்பர்களுக்குப் பணம் கொடுத்து அதற்காக வட்டி வாங்கினார் என்பதை முழு நேரத் தொழிலாக கருத முடியாது. ஒருவருக்கோ, சிலருக்கோ உதவி செய்வதை லைசென்ஸ் வாங்கி செய்யவேண்டும் என்று அவசியமில்லை". 

ஒருவேளை ஒருவர் லைசென்ஸ் எடுக்காமல் தொழிலாகச் செய்தார் என்று புகார் வந்தால் அதற்கு தண்டனை ஆயிரம் ரூபாய் நீதிமன்றத்தால் விதிக்கப்படும். சிறைத் தண்டனை எதுவும் இல்லை.

இதில் கோடிக்கணக்கில் பணம் வட்டிக்கு கொடுத்திருந்து உரிமம் வாங்கவில்லை என்று குற்றச்சாட்டு வந்தாலும் சட்டம் தொகையைப் பற்றி சொல்லவில்லை. 

உரிமம் வாங்காமல் வட்டிக்குப் பணம் கொடுத்து தொழில் செய்வதுதான் குற்றம் என்கிறது. ஒருவேளை நடவடிக்கை வந்தால் அதற்கு ரூ.1000 அபராதம் என்பதுதான் சட்ட நடவடிக்கை''.

நன்றி.

இந்திய மருத்துவச் சட்டம்


இந்திய மருத்துவச் சட்டம்

"Drugs and cosmetic Act, 1940, 1945, 1995, 'Schedule J' contains a list of 51 diseases and ailments (by whatever name described) which a drugh not purport to prevent or cure or make claims to prevent or cure"

'மருந்துகள் மற்றும் அழாஅகு சாதன்ங்கள்' சட்டம் 1940இல் இயற்றப்பட்டு பின்னர் 1945, 1995இல் திருத்தியமைக்கப் பட்டுள்ள நோய்களின் விபரம் வருமாறு:-

1.    எய்ட்ஸ் 'AIDS'

2.    நெஞ்சுவலி

3.    குடல் வால் நோய்

4.    இதய இரத்தக்குழாய் அடைப்பு

5.    தலை வழுக்கை

6.    கண்பார்வை அற்ற நிலை

7.    சுவச காசம் (ஆஸ்த்துமா)

8.    உடலில் தோன்றும் கட்டிகள் முதலாக புற்று நோய் வரை

9.    கண்புரை

10.  தலை முடி வளர்த்தல், நரையை அகற்றல்

11.  கருவில் வளரும் குழந்தையை ஆணாகவோ பெண்ணாகவோ மாற்றுவோம் என்று கூறுதல்

12.  பிறவிக் கோளாறுகள்

13.  காது கேளாமை

14.  நீரிழிவு நோய்

15.  கருப்பை சார்ந்த அனைத்துக் குறைப்பாடுகளும்

16.  வலிப்பு நோய் – மனநோய்கள்

17.  மூளைக்காய்ச்சல்

18.  உடல் நிறம் கருப்பைச் சிவப்பாக மாற்றுதல்

19.  மார்பக வளர்ச்சி

20.  புரையோடிய புண்

21.  மரபணு நோய்கள்

22.  க்ளாகோமா எனும் கண்வலி நோய்

23.  கழுத்து வீக்கம் (தைராய்டு)

24.  குடலிறக்க நோய் (ஹெர்னியா)

25.  இரத்த அழுத்தம் ( மிகுதி, குறைவு)

26.  விரை வீக்கம்

27.  பைத்தியம்

28.  ஞாபக மறதி, ஞாபக சக்தியை விருத்தி செய்தல்

29.  குழந்தையின் உயரத்தைக் குட்டுதல்

30.  கண் – கிட்டப்பார்வை – தூரப்பார்வை

31.  ஆண் உறுப்பு வளர்ச்சி; வீரியம்

32.  பற்களை உறுதிப்படுத்த, கால்ஷியம் மருந்து மூலமாக மருத்துவம் பார்ப்பது

33.  மஞ்சள் காமாலை – கல்லீரல் மர்ம நோய்.(ஹெப்டைட்டிஸ்)

34.  இரத்தப் புற்று

35.  வெண்குஷ்டம்

36.  உடலுறவில் வீரியம் அதிகப்படுதல்

37.  மூளைவளர்ச்சிக் குறைவு

38.  மாரடைப்பு நோய்

39.  குண்டான உடம்பு மெலிவு

40.  பக்கவாதம்

41.  உடம்பு முழுவதும் நரம்பு நடுக்க நோய்

42.  மூலம், பவுத்திரம்

43.  வாலிப சக்தியை மீட்க

44.  குறைந்த வயதில் முதிர்ச்சியடைந்த தோற்றம்

45.  குறைந்த வயதில் தலை நரை

46.  ரூமாட்டிக் இதய நோய்

47.  ஆண்மைக் குறைவு

48.  கழுத்து வலி, முதுகுத் தண்டில் ஏற்படும் வலிகள்

49.  திக்குவாய்

50.  சிறுநீரகக் கற்கள், பித்தப்பை கற்கள், சிறுநீர்ப்பை கற்கள்

51.  காலில் இரத்த நாளங்கள் வீக்கம் அடைந்து புடைத்து காணப்படுதல்.

மேற்கண்ட பட்டியலிலுள்ள நோய்களுக்கு ஆங்கில மருத்துவர்கள் தங்கள் மருந்துகளால் மருத்துவம் அளித்துவருவது குற்றச் செயல் என்று இந்திய அரசு சட்டம் மூலமாக எச்சரித்த பின்பும் மேற்கண்ட அனைத்து நோய்களுக்கும் மருத்துவம் செய்யப்படுகிறது. இது சட்டத்திற்கு எதிரானதாகவும் மக்கள் நலனுக்கு எதிரானதாகவும் இருந்தாலும், சிறப்பு மருத்துவம் எனும் பெயரிலும், விலையுயர்ந்த மருந்துகள் என்று கூறிக்கொண்டு மருந்து கம்பனிகள் கொள்ளை லாபம் ஈட்டுகின்றன.

மேற்கண்ட இச்செயலை 'இந்திய மருத்துவச் சங்கமும் தமிழ்நாடு மருத்துவக் குழுவும் நடவடிக்கை எடுக்காத்து ஏன்?

இக்குற்றச் செயலுக்கு மருத்துவச் சங்கம் துணைபோகக் காரணம் என்ன?

மேற்கண்ட நோய்களுக்கு ஆங்கில மருத்துவத்தில் மருந்துகள் இல்லை என்பதை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

பசு நெய்

*நாட்டு மாட்டு பசு நெய்*

*Country Cow Ghee*

நெய் என்றால் பாலை தயிராக்கி வெண்ணெய் எடுத்து உருக்கி *(பஞ்சகர்ண சுத்தி)* செய்யப்படுவது மட்டுமே. 

இன்று நாம் கடைகளில் வாங்கும் நெய் எதுவுமே நெய் அல்ல. அவை பால் கொழுப்பு. பாலை அரைத்து கொழுப்பை பிரித்து செய்யப்படுவது.

உடலுக்கு மிகவும் தீங்கானது.


*பயன்கள்*

♦️நெய்யில் A. D. E. K ஆகிய விட்டமின்கள் உள்ளன.


♦️நெய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. கேன்சர், வைரல் நோய்களை தடுக்கிறது.


♦️நெய்யில் CLA - Conjulated Linoleic Acid உள்ளது. இது உடல் பருமனாவதைத் தடுக்கிறது.


♦️நெய்யில் ஒமேகா 3 என்ற கொழுப்பு அமிலம் உள்ளதாக அண்மையில் கண்டறிந்துள்ளனர். இது மூளைக்கு சிறந்த டானிக்.


♦️மலச்சிக்கலைப் போக்கி வாத, பித்த, கபத்தின் தாக்கத்தைத் தடுக்கும்.


♦️ஞாபக சக்தியை தூண்டும். சரும பளபளப்பைக் கொடுக்கும்


♦️கண் நரம்புகளைப் பலப்படுத்தி கண் பார்வை தெளிவடையச் செய்யும்.

*

முருங்கை

 *_முருங்கை கீரை அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா?_*



மலச்சிக்கல் நாம் அன்றாடம் சாப்பிடும் உணவை மறுநாள் கழிவுகளாக நமது உடல் வெளியேற்றினால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். 


ஒரு சிலருக்கு உடலில் நீர் வற்றி, உடல் உஷ்ணமடைந்து மலச்சிக்கல் ஏற்படுகிறது. இப்படிப்பட்டவர்கள் முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணிவதுடன், மலச்சிக்கல் பிரச்சனை விரைவில் நீங்கும்.


உடல் மற்றும் கை, கால் வலிகள் உடலில் வாத தன்மை அதிகரிக்கும் போதும், கடின உழைப்பில் ஈடுபட்ட பின்பும் சிலருக்கு உடல் மற்றும் கை கால்களில் வலி ஏற்படுகின்றன. 


இத்தகைய பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள் முருங்கை இலைகளை உருவி, அதன் காம்புகளை நீக்கிவிட்டு, அந்த முருங்கை இலைகளை சேர்த்து மிளகு ரசம் வைத்து சாப்பிட்டு வந்தால், கை, கால் உடம்பின் வலிகள் அனைத்தும் தீரும்.


மலட்டுத்தன்மை எந்த ஒரு ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ உடலில் எந்தவிதமான குறைபாடுகள் இல்லாமல் இருந்தால் குழந்தை பிறப்பதில் தடையேதும் இருக்காது.


 தற்காலங்களில் சத்தில்லாத மற்றும் கலப்படங்கள் நிறைந்த உணவுப் பொருட்களை அனைவரும் சாப்பிடுவதால் மலட்டுத் தன்மை பிரச்சனை அதிகரித்து காணப்படுகிறது. 


ஆண், பெண் இரு பாலர்களும் முருங்கை இலைகளை வேக வைத்து, அடிக்கடி சாப்பிட்டு வந்தால் மலட்டுத் தன்மை குறைபாடு நீங்கி குழந்தை பிறக்க வழி வகை செய்யும். 


ரத்த சோகை ரத்தத்தில் வெள்ளை ரத்த அணுக்கள் குறையும் போது ரத்த சோகை ஏற்படுகிறது.


 பெரியவர்களை விட இந்த குறைபாடு குழந்தைகளையே அதிகம் பாதிக்கிறது. இதற்கு சிறந்த நிவாரணியாக முருங்கை கீரை இருக்கிறது. 


முருங்கை இலைகளை நெய்யில் வதக்கி தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் அதிகரிக்கும். உடல் பலம் பெறும்.


பற்களின் உறுதி, வாய்ப்புண் நாம் சாப்பிடும் உணவை நன்கு மென்று சாப்பிடவும், உணவை செரிமானம் செய்வதிலும் பற்களின் செயல்பாடுகள் இன்றியமையாததாக இருக்கின்றன. அத்தகைய பற்கள் உறுதியாக இருக்க வேண்டியது அவசியம். 


முருங்கைக் கீரையை அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு பற்கள் உறுதியாகும். ஈறுகள் சம்பந்தமான குறைபாடுகள் நீங்கும். உடல் வெப்பத்தால் ஏற்படும் வாய் புண்கள் போன்றவை நீங்கும். இரும்புச்சத்து நமது ரத்தத்தில் நோய் எதிர்ப்புத் திறன் அதிகம் உருவாகவும், காயம்படும் காலத்தில் இரத்தம் வேகமாக உறையவும், ரத்தத்தில் ஹீமோகுளோபின் சத்துக்கள் அதிகரிக்கவும் இரும்புச்சத்து இன்றியமையாததாக இருக்கிறது. இந்த இரும்புச் சத்து முருங்கை கீரையில் அதிகம் உள்ளன. 


எனவே குறைந்த பட்சம் வாரம் ஒரு முறையாவது முருங்கைக்கீரையை பக்குவம் செய்து சாப்பிட்டு வருவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.


தலைமுடி நமது தலையில் இருக்கும் முடிகள் நமது உச்சந்தலையை வெப்பத்திலிருந்து காக்கிறது. 


அத்தகைய தலை முடிகள் அடர்த்தியாக வளரவும், உறுதியாக இருக்கவும் நமது உணவில் வைட்டமின் மற்றும் புரதச் சத்துக்கள் இருப்பது அவசியம்.


 முருங்கைக் கீரையில் வைட்டமின்கள், புரத சத்துகள் அதிகம் உள்ளன. 


முருங்கைக் கீரையை அடிக்கடி பக்குவம் செய்து சாப்பிடுபவர்களுக்கு தலைமுடி உதிர்வது, முடி நரைப்பது போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் காக்கும்.


 தோல் வியாதிகள் உணவில் ஊட்டச்சத்து குறைபாடுகள் மற்றும் வெளிப்புற காரணிகளால் சிலருக்கு தோல் சம்பந்தமான வியாதிகள் ஏற்படுகின்றன.


 முருங்கைக்கீரையில் தோல் வியாதிகள் மற்றும் இதர தோல் சம்பந்தமான குறைபாடுகளை போக்க உதவும் வைட்டமின்கள், புரத சத்துக்கள் போன்றவை நிறைந்துள்ளன.


 முருங்கைக் கீரையை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு தோலில் சுருக்கங்கள் ஏற்படுவது குறைந்து, அனைத்து விதமான தோல் வியாதிகளும் விரைவில் நீங்க உதவுகிறது.


தாய்ப்பால் சுரப்பு குழந்தைகள் பிறந்து ஆறு மாத காலம் வரை தாய்ப்பால் மட்டுமே குழந்தைகளுக்கு முக்கிய உணவாக இருக்கிறது ஒரு சில குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரப்பு நின்று விடுகிறது. 


இப்படிப்பட்ட இக்கட்டான சூழலை சந்திக்கும் பெண்கள் முருங்கை இலையை கொண்டு தயாரிக்கப்படும் பதார்த்தத்தை சாப்பிட்டு வந்தால், தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.


 சுவாச கோளாறுகள் குளிர்ந்த சீதோஷணம் நிலவும் காலத்திலும், தூசுகள் நிறைந்த இடங்களில் ஏற்படும் ஒவ்வாமை காரணமாகவும் சிலருக்கு சளி, ஆஸ்துமா போன்ற சுவாச சம்பந்தமான நோய்கள் ஏற்படுகின்றன.


 இத்தகைய பிரச்சனையால் அவதிபடுபவர்கள் தினந்தோறும் முருங்கை கீரையை சூப் செய்து, இளம் சூடான பதத்தில் குடித்து வர சுவாச சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் விரைவில் நீங்கும்.




🌷🌷

உயில் நடைமுறைகள்

 *பதிவு செய்யப்பட்ட உயில் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியுமா?... சட்டம் கூறுவது என்ன*...✍🏻 ⚖️உயில் என்பது ஒரு நபர் தனது மரணத்திற்க...