FORM No . V

 

FORM No . V

(See Rule 15 of the Tamil Nadu Societies Registration Rules, 1978)

 

Notice of Situation / Change of situation of the Registered office of the Society under sub-section (1) of section 13 of the Tamil Nadu Societies Registration Act, 1975.

(Tamil Nadu Act, 27 of 1975)

 

1.  Name of the society :                  

 

2.      Date of Registration:

 

3.      The Registration No. &

      Year of Registration:

 

4.      Presented By:

 

 

 

To

 The Registrar of Societies,

 

------------------------------------------------

 

-----------------------------------(Station).

 

Sir,

          “______________________________________________________________________________________________________________________________________________”

 

hereby given you notice under sub-section (1) of section 13 of the Tamil Nadu Societies Registration Act, 1975 (Tamil Nadu Act 27 of 1975) that the Registered office of the society.

 

Situated at No. ________________________________________________________________________________________________________________________________________________

 

on the__________________________ day of __________________.

 

                                                                                                    Signature

 

Dated:                                                                                      President/ Secretary,

                                                                                                Designation or Position

                                                                                                In Relation to the Society

Place:

பதிவு செய்யப்பட்ட சங்கம் என்பது என்ன?

 

பதிவு செய்யப்பட்ட சங்கம் என்பது என்ன?

Law on registration of societies

1. பதிவு செய்யப்பட்ட சங்கம் என்பது என்ன?

பதிவு செய்யப்பட்ட சங்கம் என்பது 1975 ஆம் ஆண்டு தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டப்படி பதிவு செய்யப்பட்ட அல்லது பதிவுச் செய்யும் நிகர்நிலையிலுள்ள (deemed) சங்கமாகும். ( பிரிவு 2(h))

2. கட்டாயமாக பதிவு செய்யப்பட வேண்டிய சங்கங்கள் :

20 உறுப்பினர்கள் அல்லது அதற்கு மேல் இருந்தால், அல்லது எந்த நிதியாண்டிலும் மொத்த ஆண்டு வருமானம் அல்லது செலவு ரூபாய் 10,000/-க்கு மேல் இருந்தால் அந்த சங்கம் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும். ( பிரிவு 4)

3. பதிவு பெற முடியாத சங்கங்கள் :

மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 7க்கு குறைவாக உள்ள சங்கங்கள், அதிர்ஷ்டத்தினால் வெற்றி பெறுபவருக்கு பரிசுகளை வழங்கும் சங்கங்கள், தொழிலாளர்களின் பொருளாதார நிலையை உயர்த்துவதை குறிக்கோளாக கொண்டிருக்கும் சங்கங்கள் இச்சட்டத்தின் கீழ் பதிவு செய்ய முடியாது. ( பிரிவு 3(2))

4. விருப்பத்தின்படி பதிவு செய்யக்கூடிய சங்கங்கள் (Optional Registration) :

சமயம், உடற்பயிற்சி அல்லது விளையாட்டு போட்டிகளை நோக்கங்களை கொண்ட சங்கங்களை விருப்பத்தின் பேரில் பதிவு செய்து கொள்ளலாம். அதாவது கட்டாயப் பதிவு தேவையில்லை. ( பிரிவு 5)

5. சங்கத்தை எங்கே பதிவு செய்ய வேண்டும்?

சங்கம் எந்த மாவட்டத்தில் அமைக்கப்பட்டிருக்கிறதோ அந்த மாவட்டத்தின் பதிவாளரிடம்தான் சங்கத்தை பதிவு செய்ய வேண்டும்.

6. ஒரு சங்கத்தை எப்படி ஆரம்பிக்க வேண்டும்? மற்றும் பதிவு செய்யும் போது என்னென்ன ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும்? :

பிரிவு 3 விதி 3 ல் கூறப்பட்டுள்ள நோக்கங்களையும் பயனுள்ள குறிக்கோள்களையும் கொண்ட சங்கங்களை ஆரம்பித்து பதிவு செய்யலாம்.

கல்வி, இலக்கியம், அறிவியல், சமயம், அறநிலையம், சமூகச் சீர்திருத்தம், கலை, கைத்தொழில்கள், குடிசைத் தொழில்கள், உடற்பயிற்சிகள், விளையாட்டு போட்டிகள், பொழுதுபோக்கு, மக்கள் நல்வாழ்வு, சமூகப்பணி, பண்பாட்டு நிகழ்ச்சிகள், பயனுள்ள அறிவை விரிவாக பரப்புதல் அல்லது மாநிலத்திற்கு சட்டம் இயற்றுவதற்கு அதிகாரம் கொண்டுள்ள சட்ட மன்றம் குறித்து கொடுக்கும் அத்தகைய மற்றைய பயனுள்ள குறிக்கோள்களை மேம்படுத்தும் குறிக்கோள்களை கொண்டிருக்கிற சங்கங்களை இந்த சட்டத்தின் படி பதிவு செய்யலாம்.

7. சங்கத்தை ஆரம்பிக்க தேவையான உறுப்பினர்கள் எண்ணிக்கை :

ஒரு சங்கத்தை ஆரம்பிப்பதற்கு குறைந்த பட்சம் 7 உறுப்பினர்கள் தேவை. ஏனென்றால் பிரிவு 3(2) ன்படி 7 உறுப்பினர்கள் கொண்டிராத சங்கங்களை பதிவு செய்ய இயலாது என்றும், பிரிவு 7 ன்படி பதிவு செய்ய தாக்கல் செய்யப்படும் விவரக்குறிப்பிலும் (Memorandum), சங்கத் தனிநிலைச் சட்ட விதிகளிலும் (Bye-Laws) குறைந்த பட்சம் 7 உறுப்பினர்கள் கையெழுத்திட வேண்டும்.

சங்கத்தின் அலுவல்களை நடத்த குறைந்த பட்சம் 3 உறுப்பினர்களை கொண்ட குழுவை (Committee) சங்க மொத்த உறுப்பினர்கள் சாதாரண பெரும்பான்மையில் (Simple Majority) தேர்ந்தெடுக்க வேண்டும். இக்குழுவை நிர்வாக குழு அல்லது செயற்குழு (Executive Committee) என்றும் அழைக்கலாம்.

அதாவது நிர்வாக குழுவில் தலைவர், துணைத் தலைவர் அல்லது துணைத் தலைவர்கள், செயலாளர், துணை செயலாளர் அல்லது துணைச் செயலாளர்கள், பொருளாளர், நிர்வாக குழு உறுப்பினர்கள் ஆகிய பதவிகளை கொண்டவர்கள் இருக்கலாம்.

8. சங்கத்தை பதிவு செய்ய என்னென்ன ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் :

நிர்வாக குழு உறுப்பினர் ஒருவரால் அல்லது அக்குழுவினால் அதிகாரம் அளிக்கப்பட்ட ஒருவரால் மாவட்ட பதிவாளர் முன்பு கீழ்க்கண்ட ஆவணங்களை தாக்கல் செய்து சங்கம் அமைக்கப்பட்ட தேதியிலிருந்து அல்லது பிரிவு 4(1) ல் கூறப்பட்டுள்ள நிபந்தனைகளை நிறைவேற்றிய தேதியிலிருந்து 3 மாத காலத்திற்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

1. விதிகளின் பிற்சேர்க்கையில் (Schedule) கொடுக்கப்பட்டுள்ள பூர்த்தி செய்யப படிவ எண் 1

2. சங்க விவரக்குறிப்பு (Memorandum)

3. சங்க தனிநிலைச் சட்ட விதிகள் (Bye-laws of the Society)

4. பூர்த்தி செய்யப்பட்ட படிவ எண் 5

5. பூர்த்தி செய்யப்பட்ட படிவ எண் 6

இதில் படிவ எண் 1 என்பது மாவட்ட பதிவாளருக்கு சங்கத்தை பதிவு செய்யக் கோரும் விண்ணப்பம் ஆகும்.

படிவ எண் 5 என்பது பதிவு செய்யப்பட்ட அலுவல இருக்குமிடம் பற்றிய விவரத்தையும் மாற்றம் ஏற்பட்டால் அதைப்பற்றிய விவரத்தை தெரிவிக்கும் படிவமாகும்

படிவம் 6 என்பது சங்க உறுப்பினர்களை பற்றிய விவரங்கள் அடங்கிய பதிவேடாகும்.

சங்க விவரக்குறிப்பு என்பது சங்கத்தின் பெயர், சங்கத்தின் குறிக்கோள் மற்றும் குழு உறுப்பினர்களின் பெயர்கள், முகவரிகள், தொழில்கள் பற்றிய விவரங்களை கொண்ட விவரக்குறிப்பாகும். இத்துடன் சங்கத்தின் தனி விதிகளையும் (Bye-Laws) இணைப்பாக கொண்டதாகும்.

சங்க தனிநிலைச் சட்ட விதிகள் விதி 6 ல் கூறப்பட்டுள்ள விவரங்களை கொண்டிருக்க வேண்டும்

 

சங்கங்களை பதிவு செய்ய என்ன செய்ய வேண்டும்?

சில காரியங்களை தனி ஒரு நபரால் செய்ய முடியாது. அதனைச் செய்வதற்கு பல நபர்கள் தேவைப்படும். அந்த நபர்களை சட்டபூர்வமாக ஒன்றிணைக்க சங்கம் ஏற்படுத்துவது அவசியம்.

ஒரு சங்கத்தை அமைப்பதற்கு அதிக நபர்கள் தேவையில்லை. குறைந்தபட்சம் 7நபர்கள் இருந்தால் போதும். ஆனால், அவர்களுக்கு வயது 18 ஆகியிருக்க வேண்டும்.

சங்கம் அமைத்தால் மட்டும் போதாது. அதனை தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டம்,1975 மற்றும் விதிகள் 1978ன்படி மாவட்டப் பதிவாளர் அவர்களிடம் பதிவு செய்து கொள்ள வேண்டும். அப்போதுதான் அது சட்டப்படியான அங்கீகாரத்தைப் பெறுகின்றது.

எந்த ஒரு அமைப்பாக இருந்தாலும் அதன் உறுப்பினர்கள் எண்ணிக்கை 20ஐதாண்டிவிட்டாலோ, அதனுடைய ஆண்டு வருமானம் அல்லது செலவு ரூ.10,000/-த்தை தாண்டிவிட்டாலோ மூன்று மாத காலத்திற்குள் சட்டப்படி கண்டிப்பாக அதனை ஒரு சங்கமாக பதிவு செய்ய வேண்டும்.

சங்கத்திற்கு பெயர் வைத்தல்

ஒரு சங்கம் ஏற்படுத்த முதலில் அதற்கு ஒரு நல்ல பெயரை சூட்டுவது மிக அவசியம். ஆனால், சங்கத்தின் பெயர் இந்திய இறையாண்மைக்கு மற்றும் இந்திய சட்ட திட்டங்களுக்கு எதிராக இருக்கக்கூடாது. மேலும் வன்முறையைத் தூண்டுவதாகவோ,அறுவறுப்பானதாகவோ மற்றும் ஆபாசமாகவோ இருக்கக் கூடாது. ஏற்கனவே செயல்பட்டு வருகின்ற ஒரு சங்கத்தின் பெயரை மற்றோரு சங்கத்திற்கு சூட்டுவதும் கூடாது.  இதுபற்றி சங்கத்தை பதிவு செய்ய மாவட்டப் பதிவாளர் அவர்களிடம் நீங்கள் விண்ணப்பிக்கும் போது அவர் உங்களுக்கு வழி காட்டுவார்.

பெயர் மாற்றம்

ஏற்கனவே ஒரு பெயரில் செயல்பட்டு வருகின்ற சங்கம் மாவட்டப் பதிவாளர் அவர்களிடம் ஒப்புதல் பெற்று தன்னுடைய பெயரை பொதுக்குழு கூட்டத்தில் இயற்றப்படுகின்ற சிறப்புத் தீர்மானம் மூலம் பொதுக்குழு கூட்டம் நடந்த தினத்தில் இருந்து 90 நாட்களுக்குள் மாற்றிக் கொள்ளலாம்.

பெயர் பலகை

அலுவலகம் ஒன்றை ஏற்படுத்தி, சங்கத்தின் பெயர் மற்றும் முகவரி தெளிவாக தெரியுமாறு தமிழில் எழுதி, முகப்பில் விளம்பர பெயர் பலகை மாட்ட வேண்டும். ஒருவேளை சங்கத்தின் பெயர் வேறு மொழியில் இருந்தால் அதன் உச்சரிப்பை தமிழில் எழுதி கண்டிப்பாக போர்டு வைக்க வேண்டும்.

சங்க நிர்வாகக் குழு

சங்கத்தை நிர்வகிக்க குறைந்தபட்சம் 3 உறுப்பினர்கள் நியமிக்கப்பட வேண்டும். அதிகபட்சமாக எத்தனை நபர்கள் வேண்டுமானாலும் நியமித்துக் கொள்ளலாம். சங்க துணை விதிகள் (By Laws) ஏற்படுத்தப் பட்டிருந்தால், அதில் குறிப்பிட்ட அளவின்படிதான் நிர்வாகிகள் நியமிக்கப்பட வேண்டும்.

இந்த நிர்வாகக்குழு உறுப்பினர்களை பொதுக்குழுக்கூட்டம் மூலம் சங்கத்தின் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். இவர்களது பதவிக்காலம் 3 ஆண்டுகளுக்கு மேல் கண்டிப்பாக இருக்கக்கூடாது. அதே நேரத்தில், சங்க உறுப்பினர்கள் மறுபடியும் சங்க நிர்வாகிகளாக இவர்களையே மீண்டும் தேர்ந்தெடுக்க எந்தவித தடையும் இல்லை.

இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் பெயர் பட்டியலை FORM-VII மூலமாக மாவட்டப் பதிவாளர் அவர்களிடம் சமர்ப்பித்து அவரது சான்றொப்பம் பெற வேண்டும்.

பொதுக்குழுக் கூட்டம்

ஆண்டுக்கு ஒரு முறை பொதுக்குழுக் கூட்டம் கண்டிப்பாக கூட்டப்பட வேண்டும். சட்டப்படி கூட்டம் நடைபெறும் நாளுக்கு 21 நாட்கள் முன்னதாக உறுப்பினர்களுக்கு கூட்டம் பற்றிய அறிவிப்பானது அறிவிக்கப்பட வேண்டும். அந்த அறிவிப்பில் நாள்,இடம், கூட்டத்தின் குறிக்கோள் ஆகியவற்றை கண்டிப்பாக குறிப்பிட வேண்டும்.

அந்தக் கூட்டத்தில் சங்கத்தின் ஆண்டு வரவு செலவு கணக்குகள் தணிக்கை செய்யப்பட்டு (நகல்கள்) உறுப்பினர்களுக்கு வழங்கி அவர்களின் ஒப்புதல் பெற வேண்டும். மற்றும் அதில் இயற்றப்படும் தீர்மானங்கள் நிர்ணயம் செய்யப்பட்ட உறுப்பினர்களால் (Quorum) ஏற்றுக் கொள்ளப்பட்டு கூட்ட நடவடிக்கை குறிப்பேடு என்ற Minutes Bookல் கையெழுத்திடப்பட வேண்டும். இதனையும் மாவட்டப் பதிவாளர் அவர்களிடம் சமர்ப்பித்து அவரது சான்றொப்பம் பெற வேண்டும்.

உறுப்பினர்கள் மாற்றம்

உறுப்பினர்கள் சேர்த்தல் மற்றும் நீக்கம் சம்பந்தமான விபரங்களை FORM-VI மூலமாக விண்ணப்பித்து மாவட்டப் பதிவாளர் அவர்களின் சான்றொப்பம் பெற வேண்டும்.

சங்க துணை விதிகள்

சங்கத்திற்கென்று சட்டதிட்டங்களை ஏற்படுத்தி பொதுக்குழு கூட்டத்தில் உறுப்பினர்களின் ஆதரவுடன் ஏற்றுக் கொள்ளப்பட்டு அதனை தீர்மானமாக நிறைவேற்றி மாவட்டப் பதிவாளரின் ஒப்புதலோடு  சங்கத்தை நிர்வகிக்கலாம்.

மாவட்டப் பதிவாளர்

சங்க நிர்வாகிகளால் சமர்ப்பிக்கப்படுகின்ற ஆவணங்களை மாவட்டப் பதிவாளர் அவர்கள் (தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்ட விதிகள் 1978 - விதி எண்: 50ன்படி) ஆய்வு செய்தே ஏற்றுக் கொள்ள வேண்டும். 
______________________________________________________________

சங்ககத்தை உருவாக்கி பதிவு பண்ணினால் மட்டும் போதாது.

சங்க தனிநிலை சட்ட விதிகளின் படி, நிர்வாகக்குழு கூட்டங்களை கூட்டி, அந்த நிர்வாகக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானம் அனைத்தையும் (உறுப்பினர் எவரும் சேர்க்காத தீர்மானம்) அந்த தீர்மான தேதியில் இருந்து 6 மாதத்திற்குள் சங்க பதிவாளரிடம் படிவம் 7-உடன் சேர்த்து தாக்கல் செய்யவேண்டும்.

ஏதாகிலும் உறுப்பினர்கள் சேர்ந்தாலும், நீக்கம் செய்யப்பட்டாலும் அல்லது அவர்கள் மறைந்தாலும், மற்றும் புதிய நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், அது சார்ந்த தீர்மான் நகலுடன், படிவும் 7-யுடன் சேர்த்து 3 மாதத்திற்குள் பதிவு செய்யப்படவேண்டும்.

சங்க வருமானம் ரூ.10 ஆயிரத்திற்கு மிகும்போது, தணிக்கையாளரை கொண்டு சங்க விதிகளின் படி தணிக்கை செய்து, ஆண்டு பொதுக்குழு கூட்டம் செப்டம்பர் 30ம்தேதிக்குள் கூட்டி அதற்கான அறிவிப்பை ஆண்டு பொதுக்குழு கூட்டத்திற்கு 21 நாட்களுக்கு முன்னர் உறுப்பினர்களுக்கு வழங்கி, அந்த கூட்டத்தில் அந்த தணிக்கையை ஏகமனதாக ஒப்புக்கொண்ட தீர்மானத்தையும் கீழ்கண்ட ஆவணங்களையும்31ம் தேதி மார்ச் மாதத்திற்குள் சமர்பிக்கவேண்டும்.

ஆண்டு பொதுக்குழு கூட்ட தீர்மானத்தில், ஒருவரை உறுப்பினராக சேர்த்தாலோ, நீக்கினாலோ, அல்லது நிர்வாகக்குழுவினர் தேர்தலில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டாலோ, 31ம் தேதி டிசம்பருக்குள் அனைத்தையும் தாக்கல் செய்ய வேண்டும்.

1975ம் ஆண்டு தமிழ்நாடு சங்கங்களின் பதிவுச்சட்டத்தின் பிரிவு 16 மற்றும் 1978 தமிழ்நாடு சங்கங்களின் பதிவு விதி 22ன் படி கீழ்கண்ட ஆவணங்கள் சமர்பிக்க வேண்டும்.

1) 2016-2017 ஆம் ஆண்டின் தணிக்கை செய்யப்பட்ட வரவு செலவு கணக்கு மற்றும் இருப்புநிலை ஏடு அறிக்கை

2) 2016-2017 முடிந்த கணக்காண்டு இறுதிநாளில் சங்க உறுப்பினர்களாக இருந்தவர்கள் பட்டியல் - படிவம் 6

3) சங்கம் செயலாற்றி வருவதற்கான உறுதிமொழி

4) 2016-2017முடிந்த கணக்காண்டு இறுதிநாளில் சங்க நிர்வாகிகளின் பட்டியல்

5) 29.09.2017 அன்று நடந்த ஆண்டு பொதுக்குழு கூட்ட தீர்மான நகல்

6) உறுப்பினர்களை நீக்கியதற்கான விபரம் அடங்கிய படிவம் 7
இந்த நடைமுறையில் ஒரு முறை தவறினாலும், அதற்கு பிறகு தாக்கல் செய்யும் எந்த ஆவணங்களையும் கோப்பிற்கு எடுத்து கொள்ளமாட்டார்கள்.

அதை தனி பைலில் வைத்து வருவார்கள். பின்னர் நாம், சென்னையில் உள்ள பதிவாளர் ஜெனரல் (பதிவுத்துறைத் தலைவர்) அவர்களுக்கு  மனு செய்து, அவர்கள் வந்து நமது சங்க ஆவணங்களை ஆய்வு செய்து, அதன்பிறகே எடுத்து கொள்வார்கள்.

எப்போது தங்கள் ஆவணங்கள் கோர்வைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லையோ, அன்றே உங்கள் சங்கம் செயலிலந்த சங்கமாகிவிடுகின்றது. அதற்கு பிறகு அந்த சங்கத்திற்கு சட்டப்படியான பாதுகாப்பு இல்லை.

உதாரணமாக, அந்த சங்கத்தின் சார்பில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்யவோ அல்லது ஒரு வழக்கில் எதிர்வாதியாக இருக்கவோ அந்த சங்கத்திற்கு தகுதியில்லை.

இன்று இப்படி செயலலிழந்த பல சங்கங்கள், பல வழக்குகளை தாக்கல் செய்யும் வேளையில், சங்க பதிவாளருக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேள்வி எழுப்பி, பதில் பெற்று, அந்த சங்கம் செயல் இழந்து விட்டது என்ற ஆவணத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து, அந்த வழக்கை ஆரம்பத்திலேயே தள்ளுபடி செய்துவிட வைத்துவிடலாம்.

கூட்டுறவுச் சட்டம் மற்றும் இதர தொடர்புடைய சட்டங்கள்

 

கூட்டுறவுச் சட்டம் மற்றும் இதர தொடர்புடைய சட்டங்கள்

அறிமுகம்

தமிழ்நாட்டில் தற்போது தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் - 1983, தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் விதிகள் 1988 ஆகியன அமலில் உள்ளன. 2011 ஆம் ஆண்டு அரசியலமைப்பு (97வது திருத்த) சட்டத்திற்கிணங்க, இச்சட்டம் மற்றும் விதிகளில் குறிப்பிட்ட சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

கூட்டுறவு இயக்கத்தை முறையான வளர்ச்சி அடையச் செய்வதே கூட்டுறவுச் சட்டத்தின் நோக்கம். விவசாயத்திலும், தொழிலிலும் மேம்பாடு காணுவதற்கும், உறுப்பினர்களின் சமூக பொருளாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் வழிகோலுவது கூட்டுறவுகள். கூட்டுறவுகளின் அமைப்பு, மேலாண்மை, மேற்பார்வை ஆகியவற்றிற்கு சிறந்த முறையில் வகை செய்வதற்காகவே இந்த கூட்டுறவுச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

தங்களுக்கு ஏற்கனவே கூட்டுறவு நிர்வாகத்தில் தொடர்பும் ஆளுமையும் இருந்தபோதிலும் கூட்டுறவு சங்கங்களின் சட்டம் மற்றும் விதிமுறைகள் நடைமுறையில் இருப்பதால் நிர்வாகத்தை மேம்படுத்த சில அடிப்படை அம்சங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன. இவைகள் முழுமையானவைகள் அல்ல. சட்டம் மற்றும் விதிகளைப் பற்றி தாங்கள் முழுமையாக அறிந்து கொள்ள சட்டம் மற்றும் விதிப் புத்தகங்களைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள். ஒவ்வொரு சங்கத்திலும் சட்டம் மற்றும் விதிப் புத்தகங்கள் கட்டடாயம் வைத்திருக்க வேண்டும்.

சம்பந்தப்பட்ட துறை உயர் அலுவலர்களைக் கலந்து ஆலோசித்து நடைமுறைச் சிக்கல்களை தீர்த்துக் கொள்ளலாம். கூட்டுறவுச் சட்டம் மற்றும் விதிகளில் சொல்லப்பட்டிருப்பவற்றிற்கு உட்பட்டுத்தான் கூட்டுறவுச் சங்கங்களின் நிர்வாகம் இருத்தல் வேண்டும். சட்டம் மற்றும் விதிகளுக்கு முரணாகச் செயல்படுவது முற்றிலுமாக தவிர்க்கப்பட வேண்டும். சட்டம் மற்றும் விதிகளில் சொல்லப்பட்டிருப்பவற்றில் தாங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை சில கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.

முக்கிய அம்சங்கள்

தமிழ்நாடு கூட்டுறவுச் சங்க சட்டம் 1983 மற்றும் கூட்டுறவு சங்க விதிகள் 1988ன் முக்கிய அம்சங்கள்

1.     கூட்டுறவுக் கொள்கைகள் சட்ட முன்னுரையில் இடம் பெற்றுள்ளது.

2.     எல்லா வகை கூட்டுறவு சங்கங்களுக்கும் ஒரே சட்டம்.

சட்டப் பணிகளை நிறைவேற்றுவதில் கால வரம்பு

i) கூட்டுறவுச் சங்கத்தை பதிவு செய்தல் (120 நாட்கள்) (பிரிவு - 9)

ii) பொதுவாக துணை விதித் திருத்தம் செய்தல் (120 நாட்கள்) (பிரிவு 1) (விதி -9) வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களைப் பொருத்தவரை (30 நாட்கள் Srfs), 136-D(14)(a).

iii) தணிக்கை முடித்தல் (6 மாதங்கள்) (பிரிவு 80)

iv) விசாரணை முடித்தல் (3 மாதங்கள்) (பிரிவு 81)

(v) ஆய்வு முடித்தல் (3 மாதங்கள்) (பிரிவு 82)

vi) தண்டத்தீர்வை நடவடிக்கை முடித்தல் (6 மாதங்கள்) (பிரிவு 87)

vii) சட்டப்பிரிவு 88 ன் கீழ் நிர்வாகக் குழுவை கலைக்க ஆணையிடுதல் (2 மாதங்கள்)

viii) சட்டப்பிரிவு 88 ன் கீழ் நிர்வாக குழு கலைப்பு காலம் (6 மாதங்களுக்கு மிகாமல்)

ix) சட்டப்பிரிவு 89 ன் கீழ் சில சூழ்நிலைகளில் தனி அலுவலர் நியமனம் (6 மாதங்களுக்கு மிகாமல்)

x) கூட்டுறவுச் சங்கம் அமைக்க குறைந்தபட்ச உறுப்பினர் எண்ணிக்கை 25 (பிரிவு 6).

1.     பிரிவு 21 ல் உறுப்பினர்களாக சேரத் தகுதிகள் சொல்லப்பட்டிருக்கிறது.

2.     பிரிவு 23ல் உறுப்பினர்களாகச் சேரத் தகுதியின்மைகள் பற்றி சொல்லப்பட்டிருக்கிறது.

3.     பிரிவு 22-இணை உறுப்பினர்கள் சேர்ப்பது பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. (உ.ம்) முழு உறுப்பினராக இல்லாமல் குறிப்பிட்ட காரியங்களுக்கு மட்டும் சேர்க்கப்படும் உறுப்பினர்கள் இணை உறுப்பினர்கள் எனப்படுவர்.

4.     ஒரு நபரை சங்கத்தில் உறுப்பினராகச் சேர்ப்பதற்கு பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் விதி 27ல் சொல்லப்பட்டிருக்கிறது. ஒரு நபர் சங்கத்தில் உறுப்பினராகச் சேர விதிகளில் சொல்லப்பட்ட படிவம் 16-ல் விண்ணப்பிக்க வேண்டும். சங்கத்தில் நிர்வாகக் குழு மனு கொடுத்த 60 நாட்களுக்குள் மனு கொடுத்தவரை உறுப்பினராகச் சேர்த்துக் கொள்ள வேண்டும். அல்லது சரியான காரணம் காட்டி நிராகரிக்க வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால், அந்த நபர் மனு கொடுத்த 60 ஆம் நாளன்று சங்கத்தில் உறுப்பினராகச் சேர்ந்ததாகக் கருதப்படுவார்.

5.     ஒரு நபர் ஒன்றுக்கு மேற்பட்ட ஒரே வகை சங்கத்தில் உறுப்பினராகத் தடை (பிரிவு 23 ஆனால் விதி 30ல் சில விலக்குகளும் சொல்லப்பட்டுள்ளன).

6.     ஒரு குறிப்பிட்ட வியாபாரம் செய்யும் நபர் அதே மாதிரியான வியாபாரம் செய்யும் கூட்டுறவுச் சங்கத்தில் உறுப்பினராகத் தடை (பிரிவு 23).

7.     ஒரு நபர் ஐந்துக்கும் மேற்பட்ட சங்கங்களில் நிர்வாகக்குழு உறுப்பினராக இருக்கக்கூடாது (பிரிவு 334).

8.     மூன்றுக்கு மேற்பட்ட சங்கங்களில் தலைவராக இருக்கத் தடை (பிரிவு 34 (7).

9.     நிர்வாகக் குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை (பிரிவு 333).

சங்கங்களின் வகைகள்

  • தொடக்கக் கூட்டுறவுச் சங்கங்கள் - குறைந்த அளவு 7 அதிக அளவு 21
  • மையக் கூட்டுறவுச் சங்கங்கள் - குறைந்த அளவு 11 அதிக அளவு 21
  • தலைமைக் கூட்டுறவுச் சங்கங்கள் - குறைந்த அளவு 11 அதிக அளவு 21

நிர்வாகக்குழுவுக்கு தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களில் மகளிர் மற்றும் ஆதி திராவிடர், பழங்குடியினர் ஆகியோருக்கு இடஒதுக்கீடு (பிரிவு 33() மற்றும் 332).

  • மகளிர் 30%,
  • ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் 18%

நிர்வாகக்குழுவில் அதிகபட்சமாக இரண்டு வல்லுநர்களை இசைந்து சேர்த்துக்கொள்ளலாம். அதிகபட்சமாக 9 செயற்படும் இயக்குனர்கள் இருக்கலாம். இசைந்து சேர்க்கப்படும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் மற்றும் செயற்படும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் குழு கூட்டத்தில் கலந்து கொண்டு வாக்களிக்கலாம். ஆனால் எந்த தேர்தலிலும் வாக்களிக்கவோ போட்டியிடவோ கூடாது (பிரிவு 33() மற்றும் 332).

  • நிர்வாகக்குழுவின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் பிரிவு 33(10)
  • கூட்டுறவுச் சங்க நிர்வாகப்பணி அல்லது தணிக்கைப்பணியில் ஈடுபட்டுள்ள அரசு அலுவலர்கள் அல்லது சங்கப் பணியாளர்கள், பதவி விலகிய இரண்டு ஆண்டுகள் வரை நிர்வாகக் குழு உறுப்பினர்களாகத் தடை (பிரிவு 34 ()(சி)(i).
  • நிர்வாகக் குழு உறுப்பினர்கள் எழுத, படிக்கத் தெரிந்து இருக்க வேண்டும் (பிரிவு 34()().
  • நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தகுதியின்மை மற்றும் நீக்குதல் (பிரிவு 36).
  • நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கு மதிப்பூதியம். : இலாபத்தில் வேலை செய்யும் சங்கங்கள் (பிரிவு 72 விதி 94)

நிகர லாபத்தில் 10 சதவீதத்திற்கு மிகாமல் அதிக அளவு மதிப்பூதியம்

சங்கங்களின் வகை

தலைவர்/

துணைத்தலைவர்

இதர இயக்குநர்கள்

தொடக்கச் சங்கங்கள்

ரூ. 1200/-

ரூ.2400/-

மையச் சங்கங்கள்

ரூ. 4800/-

ரூ. 2400/-

தலைமைச்சங்கங்கள்

ரூ. 7200/-

ரூ. 3600/-

ஆ. முந்தைய ஆண்டுகளில் நட்டம் இருந்தாலும், நடப்பு ஆண்டில் இலாபத்தில் வேலை செய்யும் சங்கங்கள் - (பிரிவு 72 விதி 82)

நடப்பு ஆண்டில் இலாபத்தில் 5 சதவிகிதம் வரை பதிவாளரின் முன் அனுமதியுடன்

அதிக அளவு மதிப்பூதியம்

சங்கங்களின் வகை

தலைவர்/துணைத்தலைவர்

இதர இயக்குநர்கள்

தொடக்கச்சங்கங்கள்

 

ரூ. 1200/-

ரூ. 600/-

மையச் சங்கங்கள்

ரூ. 2400/-

ரூ. 1200/-

தலைமைச்சங்கங்கள்

ரூ. 3600/-

ரூ. 1800/-

சங்கத்தின் சொத்துக்கள் மற்றும் பணத்தை தவறான முறையில் உபயோகப்படுத்தக்கூடாது (பிரிவு 707) விதிகள் 3485,86,87,88 மற்றும் 89),

சட்ட விதிகளுக்குப் புறம்பாக எந்த ஒரு விதமான செலவினங்களும் செய்யக்கூடாது. மேலும் சங்கத்தின் அசையும் மற்றும் அசையாச் சொத்துக்கள் அனைத்தும் சங்க விதிகளின் படி உபயோகிக்கப்படவேண்டும்.

தண்டத் தீர்வை (பிரிவு 87)

கீழ்க்கண்ட நேர்வுகளில் தண்டத்தீர்வை நடிவடிக்கை எடுக்க பிரிவு 87ல் வகை செய்யப்பட்டுள்ளது.

(அ) சங்கத்தின் பணத்தை அல்லது சொத்தை கையாடல் செய்தல் அல்லது மோசடி செய்தல்.

(ஆ) சங்கத்திற்கு நம்பிக்கை மோசடி செய்தல்;

(அல்லது)

(இ) நம்பிக்கை மோசம் அல்லது வேண்டுமென்றே கடமையைச் செய்யத் தவறியதன் மூலம் சங்கத்தின் சொத்துக்களுக்கு குறைகளை ஏற்படுத்துதல் ;

(அல்லது)

(ஈ) சட்டம் விதிகள் அல்லது துணை விதிகளுக்கு மாறாக பணத்தை பட்டுவாடா செய்தல்.

நிர்வாகக் குழுவைக் கலைத்தல் (பிரிவு எண் 88 மற்றும் விதி 105)

கீழ்க்கண்ட நேர்வுகளில் நிர்வாகக்குழுவை கலைக்க பிரிவு 83-இல் வகை செய்யப்பட்டுள்ளது

நிர்வாகக்குழு,

(i) சட்டம், விதிகள் மற்றும் துணைவிதிகளுக்கு இணங்க சங்கத்தின் மேலாண்மை செய்யப்படும் அலுவல்களில் தொடர்ந்து தவறு நடைபெறுகிறதென்றால்,

(அல்லது)

(ii) அதனுடைய கடமைகளைச் செய்து முடிப்பதில் கவனமின்றி இருக்கிறதென்றால் :

(அல்லது)

(iii) சங்கத்தின் நலன்களுக்கு அல்லது அதனுடைய உறுப்பினர்களுக்கு குந்தகமான செயல் எதுவும் செய்யப்பட்டிருக்கிறதென்றால் ,

(அல்லது)

(iv) நிர்வாகக்குழுவை அமைப்பதில் அல்லது செயற்பணியில் இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறதென்றால்,

சீராய்வு - (பிரிவு -153)

பதிவாளர் தாமாகவோ அல்லது விண்ணப்பத்தின் பேரிலோ சங்க நிர்வாகக் குழு அல்லது சங்க அலுவலர் செயல்முறைகள் அல்லது ஆணை சரியானதாகவும், சட்டப்படியானதாகவும், நேர்மையானதாகவும் உள்ளதா என்பதை ஆவணங்களைப் பரிசீலனை செய்து திருப்தி செய்து கொள்ளலாம். இத்தகைய முடிவு அல்லது ஆணை மாற்றப்பட வேண்டும் அல்லது தள்ளுபடி செய்யப்பட வேண்டும் அல்லது மறுபரிசீலனைக்கு அனுப்பப்பட வேண்டுமென்று பதிவாளருக்குத் தோன்றினால் அவர் அவ்வாறே செய்யலாம்.

ஆதாரம் : தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியம், சென்னை

 

நுகர்வோர் தின விழிப்புணர்வு

 உலக நுகர்வோர் தினத்தையொட்டி நுகர்வோர் விழிப்புணர்வு வாரம் கொண்டாடபடுகிறது இதனை முன்னிட்டு பந்தலூர் அருகே கரியசோலை அரசு உயர்நிலைப் பள்ளியில்...