கூட்டுறவுச்
சட்டம் மற்றும் இதர தொடர்புடைய சட்டங்கள்
தமிழ்நாட்டில்
தற்போது தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் - 1983, தமிழ்நாடு
கூட்டுறவுச் சங்கங்களின் விதிகள் 1988 ஆகியன அமலில் உள்ளன. 2011 ஆம்
ஆண்டு அரசியலமைப்பு (97வது திருத்த) சட்டத்திற்கிணங்க, இச்சட்டம் மற்றும்
விதிகளில் குறிப்பிட்ட சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
கூட்டுறவு
இயக்கத்தை முறையான வளர்ச்சி அடையச் செய்வதே கூட்டுறவுச் சட்டத்தின் நோக்கம்.
விவசாயத்திலும், தொழிலிலும் மேம்பாடு காணுவதற்கும், உறுப்பினர்களின் சமூக
பொருளாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் வழிகோலுவது கூட்டுறவுகள்.
கூட்டுறவுகளின் அமைப்பு, மேலாண்மை, மேற்பார்வை ஆகியவற்றிற்கு சிறந்த முறையில் வகை
செய்வதற்காகவே இந்த கூட்டுறவுச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
தங்களுக்கு
ஏற்கனவே கூட்டுறவு நிர்வாகத்தில் தொடர்பும் ஆளுமையும் இருந்தபோதிலும் கூட்டுறவு
சங்கங்களின் சட்டம் மற்றும் விதிமுறைகள் நடைமுறையில் இருப்பதால் நிர்வாகத்தை
மேம்படுத்த சில அடிப்படை அம்சங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன. இவைகள்
முழுமையானவைகள் அல்ல. சட்டம் மற்றும் விதிகளைப் பற்றி தாங்கள் முழுமையாக அறிந்து
கொள்ள சட்டம் மற்றும் விதிப் புத்தகங்களைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள். ஒவ்வொரு
சங்கத்திலும் சட்டம் மற்றும் விதிப் புத்தகங்கள் கட்டடாயம் வைத்திருக்க வேண்டும்.
சம்பந்தப்பட்ட
துறை உயர் அலுவலர்களைக் கலந்து ஆலோசித்து நடைமுறைச் சிக்கல்களை தீர்த்துக்
கொள்ளலாம். கூட்டுறவுச் சட்டம் மற்றும் விதிகளில் சொல்லப்பட்டிருப்பவற்றிற்கு
உட்பட்டுத்தான் கூட்டுறவுச் சங்கங்களின் நிர்வாகம் இருத்தல் வேண்டும். சட்டம்
மற்றும் விதிகளுக்கு முரணாகச் செயல்படுவது முற்றிலுமாக தவிர்க்கப்பட வேண்டும்.
சட்டம் மற்றும் விதிகளில் சொல்லப்பட்டிருப்பவற்றில் தாங்கள் தெரிந்து கொள்ள
வேண்டியவை சில கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.
தமிழ்நாடு
கூட்டுறவுச் சங்க சட்டம் 1983 மற்றும் கூட்டுறவு சங்க விதிகள் 1988ன் முக்கிய
அம்சங்கள்
1.
கூட்டுறவுக்
கொள்கைகள் சட்ட முன்னுரையில் இடம் பெற்றுள்ளது.
2.
எல்லா
வகை கூட்டுறவு சங்கங்களுக்கும் ஒரே சட்டம்.
சட்டப் பணிகளை
நிறைவேற்றுவதில் கால வரம்பு
i)
கூட்டுறவுச் சங்கத்தை பதிவு செய்தல் (120 நாட்கள்) (பிரிவு - 9)
ii)
பொதுவாக துணை விதித் திருத்தம் செய்தல் (120 நாட்கள்) (பிரிவு 1) (விதி -9)
வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களைப் பொருத்தவரை (30 நாட்கள் Srfs),
136-D(14)(a).
iii)
தணிக்கை முடித்தல் (6 மாதங்கள்) (பிரிவு 80)
iv)
விசாரணை முடித்தல் (3 மாதங்கள்) (பிரிவு 81)
(v)
ஆய்வு முடித்தல் (3 மாதங்கள்) (பிரிவு 82)
vi)
தண்டத்தீர்வை நடவடிக்கை முடித்தல் (6 மாதங்கள்) (பிரிவு 87)
vii)
சட்டப்பிரிவு 88 ன் கீழ் நிர்வாகக் குழுவை கலைக்க ஆணையிடுதல் (2 மாதங்கள்)
viii)
சட்டப்பிரிவு 88 ன் கீழ் நிர்வாக குழு கலைப்பு காலம் (6 மாதங்களுக்கு மிகாமல்)
ix)
சட்டப்பிரிவு 89 ன் கீழ் சில சூழ்நிலைகளில் தனி அலுவலர் நியமனம் (6 மாதங்களுக்கு
மிகாமல்)
x)
கூட்டுறவுச் சங்கம் அமைக்க குறைந்தபட்ச உறுப்பினர் எண்ணிக்கை 25 (பிரிவு 6).
1.
பிரிவு
21 ல் உறுப்பினர்களாக சேரத் தகுதிகள் சொல்லப்பட்டிருக்கிறது.
2.
பிரிவு
23ல் உறுப்பினர்களாகச் சேரத் தகுதியின்மைகள் பற்றி சொல்லப்பட்டிருக்கிறது.
3.
பிரிவு
22-இணை உறுப்பினர்கள் சேர்ப்பது பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. (உ.ம்) முழு
உறுப்பினராக இல்லாமல் குறிப்பிட்ட காரியங்களுக்கு மட்டும் சேர்க்கப்படும்
உறுப்பினர்கள் இணை உறுப்பினர்கள் எனப்படுவர்.
4.
ஒரு
நபரை சங்கத்தில் உறுப்பினராகச் சேர்ப்பதற்கு பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் விதி
27ல் சொல்லப்பட்டிருக்கிறது. ஒரு நபர் சங்கத்தில் உறுப்பினராகச் சேர விதிகளில்
சொல்லப்பட்ட படிவம் 16-ல் விண்ணப்பிக்க வேண்டும். சங்கத்தில் நிர்வாகக் குழு மனு
கொடுத்த 60 நாட்களுக்குள் மனு கொடுத்தவரை உறுப்பினராகச் சேர்த்துக் கொள்ள
வேண்டும். அல்லது சரியான காரணம் காட்டி நிராகரிக்க வேண்டும். அவ்வாறு
செய்யாவிட்டால், அந்த நபர் மனு கொடுத்த 60 ஆம் நாளன்று சங்கத்தில் உறுப்பினராகச்
சேர்ந்ததாகக் கருதப்படுவார்.
5.
ஒரு
நபர் ஒன்றுக்கு மேற்பட்ட ஒரே வகை சங்கத்தில் உறுப்பினராகத் தடை (பிரிவு 23 ஆனால்
விதி 30ல் சில விலக்குகளும் சொல்லப்பட்டுள்ளன).
6.
ஒரு
குறிப்பிட்ட வியாபாரம் செய்யும் நபர் அதே மாதிரியான வியாபாரம் செய்யும்
கூட்டுறவுச் சங்கத்தில் உறுப்பினராகத் தடை (பிரிவு 23).
7.
ஒரு
நபர் ஐந்துக்கும் மேற்பட்ட சங்கங்களில் நிர்வாகக்குழு உறுப்பினராக இருக்கக்கூடாது
(பிரிவு 334).
8.
மூன்றுக்கு
மேற்பட்ட சங்கங்களில் தலைவராக இருக்கத் தடை (பிரிவு 34 (7).
9.
நிர்வாகக்
குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை (பிரிவு 333).
- தொடக்கக்
கூட்டுறவுச் சங்கங்கள் - குறைந்த அளவு 7 அதிக அளவு 21
- மையக்
கூட்டுறவுச் சங்கங்கள் - குறைந்த அளவு 11 அதிக அளவு 21
- தலைமைக்
கூட்டுறவுச் சங்கங்கள் - குறைந்த அளவு 11 அதிக அளவு 21
நிர்வாகக்குழுவுக்கு
தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களில் மகளிர் மற்றும் ஆதி திராவிடர்,
பழங்குடியினர் ஆகியோருக்கு இடஒதுக்கீடு (பிரிவு 33() மற்றும் 332).
- மகளிர்
30%,
- ஆதி
திராவிடர் மற்றும் பழங்குடியினர் 18%
நிர்வாகக்குழுவில்
அதிகபட்சமாக இரண்டு வல்லுநர்களை இசைந்து சேர்த்துக்கொள்ளலாம். அதிகபட்சமாக 9
செயற்படும் இயக்குனர்கள் இருக்கலாம். இசைந்து சேர்க்கப்படும் நிர்வாகக்குழு
உறுப்பினர்கள் மற்றும் செயற்படும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் குழு கூட்டத்தில்
கலந்து கொண்டு வாக்களிக்கலாம். ஆனால் எந்த தேர்தலிலும் வாக்களிக்கவோ போட்டியிடவோ
கூடாது (பிரிவு 33() மற்றும் 332).
- நிர்வாகக்குழுவின்
பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் பிரிவு 33(10)
- கூட்டுறவுச்
சங்க நிர்வாகப்பணி அல்லது தணிக்கைப்பணியில் ஈடுபட்டுள்ள அரசு அலுவலர்கள்
அல்லது சங்கப் பணியாளர்கள், பதவி விலகிய இரண்டு ஆண்டுகள் வரை நிர்வாகக் குழு
உறுப்பினர்களாகத் தடை (பிரிவு 34 ()(சி)(i).
- நிர்வாகக்
குழு உறுப்பினர்கள் எழுத, படிக்கத் தெரிந்து இருக்க வேண்டும் (பிரிவு 34()().
- நிர்வாகக்குழு
உறுப்பினர்கள் தகுதியின்மை மற்றும் நீக்குதல் (பிரிவு 36).
- நிர்வாகக்
குழு உறுப்பினர்களுக்கு மதிப்பூதியம். : இலாபத்தில் வேலை செய்யும் சங்கங்கள்
(பிரிவு 72 விதி 94)
நிகர லாபத்தில் 10 சதவீதத்திற்கு மிகாமல் அதிக
அளவு மதிப்பூதியம்
சங்கங்களின் வகை |
தலைவர்/ துணைத்தலைவர் |
இதர இயக்குநர்கள் |
தொடக்கச் சங்கங்கள் |
ரூ. 1200/- |
ரூ.2400/- |
மையச் சங்கங்கள் |
ரூ. 4800/- |
ரூ. 2400/- |
தலைமைச்சங்கங்கள் |
ரூ. 7200/- |
ரூ. 3600/- |
ஆ.
முந்தைய ஆண்டுகளில் நட்டம் இருந்தாலும், நடப்பு ஆண்டில் இலாபத்தில் வேலை செய்யும்
சங்கங்கள் - (பிரிவு 72 விதி 82)
நடப்பு ஆண்டில் இலாபத்தில் 5 சதவிகிதம் வரை
பதிவாளரின் முன் அனுமதியுடன்
அதிக அளவு மதிப்பூதியம் |
||
சங்கங்களின் வகை |
தலைவர்/துணைத்தலைவர் |
இதர இயக்குநர்கள் |
தொடக்கச்சங்கங்கள் |
ரூ. 1200/- |
ரூ. 600/- |
மையச் சங்கங்கள் |
ரூ. 2400/- |
ரூ. 1200/- |
தலைமைச்சங்கங்கள் |
ரூ. 3600/- |
ரூ. 1800/- |
சங்கத்தின்
சொத்துக்கள் மற்றும் பணத்தை தவறான முறையில் உபயோகப்படுத்தக்கூடாது (பிரிவு 707)
விதிகள் 3485,86,87,88 மற்றும் 89),
சட்ட
விதிகளுக்குப் புறம்பாக எந்த ஒரு விதமான செலவினங்களும் செய்யக்கூடாது. மேலும்
சங்கத்தின் அசையும் மற்றும் அசையாச் சொத்துக்கள் அனைத்தும் சங்க விதிகளின் படி
உபயோகிக்கப்படவேண்டும்.
கீழ்க்கண்ட
நேர்வுகளில் தண்டத்தீர்வை நடிவடிக்கை எடுக்க பிரிவு 87ல் வகை செய்யப்பட்டுள்ளது.
(அ)
சங்கத்தின் பணத்தை அல்லது சொத்தை கையாடல் செய்தல் அல்லது மோசடி செய்தல்.
(ஆ)
சங்கத்திற்கு நம்பிக்கை மோசடி செய்தல்;
(அல்லது)
(இ)
நம்பிக்கை மோசம் அல்லது வேண்டுமென்றே கடமையைச் செய்யத் தவறியதன் மூலம் சங்கத்தின்
சொத்துக்களுக்கு குறைகளை ஏற்படுத்துதல் ;
(அல்லது)
(ஈ)
சட்டம் விதிகள் அல்லது துணை விதிகளுக்கு மாறாக பணத்தை பட்டுவாடா செய்தல்.
கீழ்க்கண்ட
நேர்வுகளில் நிர்வாகக்குழுவை கலைக்க பிரிவு 83-இல் வகை செய்யப்பட்டுள்ளது
நிர்வாகக்குழு,
(i)
சட்டம், விதிகள் மற்றும் துணைவிதிகளுக்கு இணங்க சங்கத்தின் மேலாண்மை செய்யப்படும்
அலுவல்களில் தொடர்ந்து தவறு நடைபெறுகிறதென்றால்,
(அல்லது)
(ii)
அதனுடைய கடமைகளைச் செய்து முடிப்பதில் கவனமின்றி இருக்கிறதென்றால் :
(அல்லது)
(iii)
சங்கத்தின் நலன்களுக்கு அல்லது அதனுடைய உறுப்பினர்களுக்கு குந்தகமான செயல் எதுவும்
செய்யப்பட்டிருக்கிறதென்றால் ,
(அல்லது)
(iv)
நிர்வாகக்குழுவை அமைப்பதில் அல்லது செயற்பணியில் இக்கட்டான சூழ்நிலை
ஏற்பட்டிருக்கிறதென்றால்,
பதிவாளர்
தாமாகவோ அல்லது விண்ணப்பத்தின் பேரிலோ சங்க நிர்வாகக் குழு அல்லது சங்க அலுவலர்
செயல்முறைகள் அல்லது ஆணை சரியானதாகவும், சட்டப்படியானதாகவும், நேர்மையானதாகவும்
உள்ளதா என்பதை ஆவணங்களைப் பரிசீலனை செய்து திருப்தி செய்து கொள்ளலாம். இத்தகைய
முடிவு அல்லது ஆணை மாற்றப்பட வேண்டும் அல்லது தள்ளுபடி செய்யப்பட வேண்டும் அல்லது
மறுபரிசீலனைக்கு அனுப்பப்பட வேண்டுமென்று பதிவாளருக்குத் தோன்றினால் அவர் அவ்வாறே செய்யலாம்.
ஆதாரம் : தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியம், சென்னை
No comments:
Post a Comment