வாக்காளர் - வேட்பாளராக தகுதி:

 

ஓட்டளித்து வேட்பாளரைத் தேர்வு செய்யும் வாக்காளராகிய நமக்கு என சில தகுதிகளும், தகுதிக்கேடுகளும் சட்டத்தில் குறிப்பிடப்பட்டிருப்பது போலவே, வேட்பாளருக்கு என சில தகுதிகளும், தகுதிக்கேடுகள் பற்றியும் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் ( Representation of the People Act 1951) -ல் பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினருக்கான தகுதிகள் வரையறை செய்யப்பட்டிருக்கின்றது.மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் பாகம் II ல் தகுதிகள் மற்றும் தகுதிக் கேடுகள் எனும் தலைப்பில் அத்தியாயம் ஒன்றில் பாராளுமன்ற உறுப்பினருக்கான தகுதிகள் குறிப்பிடப் பட்டுள்ளது. மாநிலங்களவை உறுப்பினருக்கான தகுதியாக, இந்தியாவில் பாரளுமன்றத் தொகுதி ஒன்றில் அவர் வாக்காளராக இருந்தால் மட்டுமே ஏதேனும் மாநிலம் அல்லது ஒன்றியப் பிரதேசத்தின் பிரதிநிதியாக மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்படத் தகுதியுடையவர் ஆவார். இதில் உட்பொருளாக மற்றொன்றும் குறிப்பாகிறது.



வாக்காளர் தகுதி:

வாக்காளராக அவர் இருக்க வேண்டும் எனும் வாசகத்தின்படி, அவர் வாக்காளராக இருக்க வேண்டும் எனில் சென்ற கட்டுரையில் நாம் பார்த்தபடி வாக்காளருக்கான தகுதிகளோடும், தகுதிக் கேடுகள் ஏதும் இல்லாமலும் இருக்க வேண்டும். வேட்பாளராக இருப்பவர், வாக்காளராக இருக்க வேண்டும். வாக்காளராக இருப்பவர்,இந்திய பீனல் கோடு படி 171 E (Punishment for Bribery) 171F-ன் கீழ் (Punishment for undue influence or persination at an election)ஆகிய குற்றங்களின் படி தண்டனை பெற்றவராக இருக்ககூடாது.மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி பிரிவு 8A (1) ன் கீழ் குடியரசுத் தலைவரின் முடிவினால் ஏதேனும் காலத்திற்கு தகுதியின்மை செய்யப்பட்டிருந்தால் அதே காலத்துக்கு வாக்களுக்கும் உரிமை கிடையாது. பிரிவு 125 (தேர்தல் தொடர்பான குற்றச் செயல்கள்)பிரிவு 135 (ஓட்டுச் சாவடியில் இருந்து ஓட்டுச் சீட்டுகளை அப்புறப்படுத்துவது ஒரு குற்றச் செயலாக இருத்தல்)பிரிவு 136 (பிற குற்றச் செயல்களும் அதற்கான தண்டனைகளும்)ஆகிய குற்றங்களுக்காக தண்டனை பெற்றிருக்கக்கூடாது.மேற்சொன்ன பிரிவுகளின் கீழ் தண்டிக்கப்படத்தக்க ஒர் குற்றத்திற்காக குற்றத் தீர்ப்புக்குள்ளாக்கப்பட்டிருப்பின் அவர் குற்றத்தீர்ப்பு தேதியிலிருந்து அல்லது உத்தரவு அமலுக்கு வரும் தேதியிலிருந்து 6 வருடங்கள் வரை எந்த ஒரு தேர்தலிலும் ஓட்டளிக்கத் தகுதியற்றவராகிறார். ஆக, வாக்காளராக இருக்க மேற்சொன்ன சூழலில் இல்லாதவராகவும், மேலும் வாக்காளருக்கான தகுதிகளான வயது வரம்பு,வாக்காளர் பட்டியலில் பெயர் இருத்தல்ஆகியவையும் கொண்ட நபர் ஒருவர் வாக்காளர் ஆக ஆன பின்பு, வேட்பாளராகலாம் என்றே இந்தச் சட்டம் சொல்கிறது. அதாவது மேற்சொன்ன சூழலில் ஒருவர் தண்டிக்கப்பட்டிருந்தால் அவருக்கு வாக்காளராகும் தகுதி இல்லை. வாக்காளர் ஆகாதவர் வேட்பாளராக இயலாது.



வேட்பாளராக தகுதி

மக்களவை உறுப்பினருக்கான தகுதிகளாக பிரிவு 4 சொல்வதாவது, ஏதேனும் மாநிலத்தில் அட்டவணை சாதியினருக்கு இடம் ஒன்று ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தால், அவர் அந்த மாநிலத்தின் அல்லது வேரு ஏதேனும் மாநிலத்தின் அட்டவணை சாதியினைச் சார்ந்தவராகவும் மற்றும் ஏதேனும் மக்களவைத் தொகுதியில் வாக்களராகவும் இருக்க வேண்டும்.பிரிவு 5 மாநில சட்டமன்றங்களின் உறுப்பினருக்கான தகுதிகள் என இவற்றையே சொல்கிறது.சட்டமன்ற மேலவை உறுப்பினருக்கான தகுதிகள் என்பது, மேற்சொன்னபடியே, ஒருவர் ஒரு மாநிலத்தின் சட்டமன்ற மேலவை இடத்தை தேர்தல் மூலம் நிரப்பபட் அதேர்ந்தெடுக்கப்படுவதற்கு அவர் அந்த மாநிலத்தின் வேறு ஏதேனும் சட்டமன்றாத் தொகுதியில் வாக்காலராக இருக்கவேண்டும், மற்றும் மாநில சட்டமன்ற மேலவையில் ஒர்ர் இடத்தை நிரப்ப ஆளூனர் மூலம் நியமனம் செய்யப்பட தேர்ந்தெடுக்கப்படுவதற்கு அவர் அந்த மாநிலத்தில் சாதாரணமாக வசிப்பிடம் கொண்டிருத்தல் வேண்டும் என சட்டமன்ற மேலவை உறுப்பினருக்கான தகுதிகள் பற்றி இதே சட்டத்தின் பிரிவு 6 கூறுகிறது.



தகுதியின்மைகள்

பாராளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களுக்கு உறுப்பினராக தகுதிகளைப் பார்த்தோம். தகுதியின்மைகள் பற்றி இதே சட்டத்தின் அத்தியாயம் III விளக்குகிறது. இதில் பிரிவு 8-ல் ஒருவர் தண்டனைக் கைதியாக விதிக்கப்பட்டிருந்தால் கீழ்கண்ட தண்டனைக்குரியவராவார். இந்திய குற்றவியல் விதித்தொகுப்பு (மத்திய சட்டம் XLV-1860ல்)-ன் படி…மதச் சார்பாக, இனம், பிறந்த இடம் குடியிருப்பு, மொழி, மற்ற பிற வகையில் பகைமை வளர்ப்பவராக, அமைதிக்குக் குந்தகம் விளைவிப்பவராக (பிரிவு 152 A)இந்தியன் பீனல் கோடு -படி…லஞ்ச குற்றம் (பிரிவு171 E), தகாத செல்வாக்கு செய்பவராக அல்லது தேர்தலில் ஆள் மாறாட்டம் செய்தவராக(171F),படி தண்டனை பெற்றவராக இருக்கக்கூடாது.பலாத்கார குற்றங்கள் (பிரிவு 376 - (1)), 376 - (2), பலாத்காரம் தொடர்ந்து, பாதிக்கப்பட்டவரின் சாவுக்கு காரணமாக இருத்தல்/வெஜிடேடிவ் நிலைக்கு ஆளாக்குதல்(பிரிவு376 A) விவாகரத்து வழக்கு நிலுவையில் பிரிந்திருக்கும் மனைவியுடன் இணைதல் (பிரிவு376 B,) Sexual intercourse by person in authority (பிரிவு376 C), கூட்டுக் கற்பழிப்பு (பிரிவு376 D), அல்லது பெண்ணுக்கு கணவனால் அல்லது கணவனின் உறவினரால் கொடுமை செய்த குற்றத்திற்காக (பிரிவு 498-A),Protection of civil rights 1955 -ன் கீழான தீண்டாமை போதித்தல், நடைமுறைப்படுத்துதல் போன்ற குற்றங்கள்,சுங்க வரிச் சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்ட பொருட்களை ஏற்றுமதி, இறக்குமதி செய்தல்,Unlawful Activities (prevention) Act 1967 -இன் கீழ் சட்டத்திற்கு புறம்பான சங்கத்தில் உறுப்பினராக இருத்தல்Foreign Exchange Act 1973, போதை மருந்து மற்றும் மயக்கம் தரும் பொருட்கள் சட்டம், Terrorist and Disruptives Activities (Prevention) Act-ன் பிரிவுகல் 3, 4 ந் கீழான குற்றங்கள், எனப் பலவேறு குற்றங்கள் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவு 8ல் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. அவற்றின் கீழான குற்றத்திற்காக தண்டிக்கப்பட்டவர் எவரும் பாராளுமன்ற மற்றும் மாநில சட்டமன்றங்களுக்கு உறுப்பினராக தகுதியாக முடியாது.மேலும், தேர்தலின் போது ஊழல் புரிந்ததாகக் குற்றச் சாட்டு ஏதேனும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்து, மேலும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 99ல் குறிப்பிடப்பட்டவை காரணமாக நீதி மன்றத்தால் ஆணை வெளியிடப்பட்டிருந்து, அத்தகைய உத்தரவு/ஆணை அமலுக்கு வரும் தேதியிலிருந்து 90 நாட்களுக்குள் தகுந்த அதிகாரியினால், அந்த நபர் தகுதியின்மையாக்கப்பட வேண்டுமா அல்லது வேண்டாமா? வேண்டும் எனில் அத்தனை காலத்திற்கு அது தகுதியின்மையாகக் கொள்ளப்பட வேண்டும் என தீர்மானிக்கும் பொருட்டு குடியரசுத் தலைவரிடம் கருத்து சமர்ப்பித்தல் வேண்டும். அப்படியான தகுதியின்மை அந்த உத்தரவு அமலுக்கு வரும் தேதியில் இருந்து 6 வருடங்களுக்கு மேற்படக் கூடாது.ஊழல் அல்லது தேசப்பற்றுறுதியின்மைக்காகப் பணி நீக்கத்தின் பேரில் தகுதியின்மையும் நேரலாம். அதாவது இந்திய / மாநில அரசின் கீழ் அரசுப் பதவி வகித்து, ஊழல் அல்லது தேசப்பற்றுறுதி காரணமாக வேலை இழந்திருந்தால், அதிலிருந்து 5 ஆண்டுகள் வரை தகுதியின்மை செய்யப்படுதல் வேண்டும்.



அரசுடன் வியாபார ஒப்பந்தம் இருந்தால்...

மேலும், அரசுடன், வியாபார ஒப்பந்தம் ஒன்று நிலுவையில் இருக்கையில், அவ்வாறு இருக்கின்ற வரையில் தகுதியின்மை ஆகும். அதாவது, அரசுடன் நேரடி காண்ட்ராக்டில் இருக்கும் ஒருவர், அப்படி இருக்கின்ற சமயத்தில், தகுதியின்மை ஆனவர் ஆகிறார்.அதே சமயத்தில் அவர் அந்த ஒப்பந்தத்தின் கீழான தன் பகுதியை முடித்திருந்து, ஆனால் ஒப்பந்தத்தின் தன் பகுதியை அரசு நிறைவேற்றவில்லை என்பதால் மட்டுமே ஒப்பந்தம் நிகழ் நிலையில் இருப்பதாகக் கருதப்படக்கூடாது.அரசு நிறுவனத்தின்கீழான பதவி வகித்தல் காரணமாகவும் தகுதியின்மை ஏற்படலாம். மத்திய / மாநில அரசின் மூலதனப் பங்கு 25%க்கு குறையாமல் உள்ள ஏதேனும் நிறுவனத்தில் / கழகத்தில் மேலாண்மை முகவராகவோ, அல்லது மேலாளர், செயலாளராக இருப்பின் அவ்வாறு இருக்கும் வரை தகுதியின்மையாகும்.



தேர்தல் செலவு கணக்கு

தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்வதற்குத் தவறியுள்ளார் என்றாலோ, அவ்வாறு செய்வதற்கான உரிய சரியான காரணம் ஏதும் இல்லாதிருந்தாலோ, தேர்தல் ஆணையம் அரசிதழின் வாயிலாக அவர் தகுதியின்மை அறிவிக்கலாம்.ஆனால், தேர்தல் ஆணையமானது காரணங்களைப் பதிவதன் பேரில், விதியின் ஏதேனும் தகுதியின்மையை நீக்கலாம், ஆல்லது தகுதியின்மைக் காலத்தைக் குறைக்கலாம். ஆனால் பிரிவு 8A - ல் குறிப்பிட்ட தகுதியின்மைகள் தவிர…பொதுவாகச் சொன்னால்..நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டத்தின் அடிப்படையில் தகுதி இழந்திருந்தல்,தீர்க்கப்படாத கடனாளிஇந்தியக் குடிமகனாக இல்லாதிருத்தல், வெளீநாட்டின் குடியுரிமையை விரும்பிப் பெற்றிருத்தல், அல்லது ஒரு வெளி நாட்டின் மீது பற்றுக் கொண்டிருப்பதாக ஒப்புக் கொண்டிருத்தல்,நீதி மன்றத்தால், மனநிலை சரியில்லாதவர் என அறிவிக்கப்பட்டிருத்தல்,அரசின் கீழ் ஆதாயம் ஈட்டக்கூடிய பதவியில் இருத்தல் ஆகியவை உறுப்பினராகும் தகுதியின்மைகள் ஆகும்.



உறுப்பினர் தகுதி இழப்பு எனில்

ஒரு சட்டமன்றத்தின் இரு அவைகளிலும் ஒரே நபர் உறுப்பினராக இருத்தல் இயலாது.இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களின் சட்ட மன்ற உறுப்பினராக ஒரே நபர் ஒரே நேரத்தில் இருத்தல் இயலாது.ஒரு் சட்டப்பேரவை உறுப்பினர் தமது கையெழுத்தில் பேரவைத் தலைவருக்கு விலகல் கடிதத்தை அனுப்பி பேரவைத் தலைவரால் அது ஏற்றுக் கொள்ளப்படுமே ஆனால், அவர் அப்பதவியை இழப்பார். ஆனால் அப்பதவி விலகல் தன்னிச்சையானதல்ல என்ற முடிவுக்கு பேரவைத் தலைவர் வருவாரேயானால் அப்பதவி விலகல் ஏற்கப்பட மாட்டாது.ஒரு பேரவை உறுப்பினர் அவையின் அனுமதியின்றி தொடர்ந்து 60நாட்களுக்கு வாரமல் இருப்பின் அவ்வுறுப்பினரை பதவி நீக்கம் செய்ய பேரவைத் தலைவருக்கு அதிகாரம் உண்டு. பதவி ஏற்புப் பிரமாணம் மேற்கொள்ளும் முன்பாகவோ, உறுப்பினர் தகுதியை இழந்துள்ளதை அறிந்த பின்னரோ, சட்டப் பேரவை விதிகளின்படி தடுக்கப்பட்ட பின்னரோ, ஒரு சட்டப் பேரவைக் கூட்டத்தில் கலந்து கொள்வதும், வாக்களிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். அவ்வாறு ஒரு நபர் பங்கேற்கும் ஒவ்வொரு நாளுக்கும் ரூபாய் 500 அபராதமாக விதிக்கப்படும்.இது வரை, வேட்பாளராக, உறுப்பினராக இருக்க வேண்டிய தகுதிகள், தகுதியின்மைகள், தகுதி இழப்புகள் பற்றி அறிந்தோம். அடுத்தடுத்த வாரங்களில், வாக்காளர்களாகிய நம் ஒவ்வொருவரும் தெரிந்திக்க வேண்டிய, தேர்தல் நடமுறை, தேர்தல் ஆணையம், போன்றவை பற்றி அலசுவோம்.தொடருவோம் நம் பயணத்தை..நம் உரிமைகளை அறிந்தபடி…- ஹன்ஸா

 

No comments:

Post a Comment

உயில் நடைமுறைகள்

 *பதிவு செய்யப்பட்ட உயில் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியுமா?... சட்டம் கூறுவது என்ன*...✍🏻 ⚖️உயில் என்பது ஒரு நபர் தனது மரணத்திற்க...