கண்புரை நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் குணமாக்குவது மிக இலகு

கண்புரை நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் குணமாக்குவது மிக இலகு

கண்புரை  (Cataract) என்பது கண் வில்லையில் (Lens) ஒளி ஊடுருவுத்தன்மையைக் குறைக்கும் ஒரு நிலைமை ஆகும். கண்புரைகள் தன் இயல்பு நிலையிலிருந்து மாற்றமடைந்த ஒருவித புரதத்தால் ஆனவை. இவை விழித்திரையில் விழும் ஒளியின் அளவை குறைக்கவோ அல்லது முழுமையாகத் தடுக்கவோ செய்கின்றன. இது பெரும்பாலும் முதிர்ந்த வயதில் ஏற்படக்கூடிய ஓர் நிலைமை ஆகும்.
அச்சமயத்தில் அவர்களின் குறும்பார்வை கூடுதலாகி கண்வில்லை சற்றே மஞ்சளாக மாறி ஒளிபுகா வண்ணம் இருப்பதைக் காணவியலும். அவர்களுக்கு நீல நிறத்தை காண்கின்ற திறனும் குறையும். பல ஆண்டுகள் ஆன பின்பும் கண்புரை பெரியளவு தீங்கும் விளைவிப்பதில்லை.
என்றாலும் புரை முற்றிய பின்பு விழித்திரையை அடையும் ஒளியின் அளவு வெகுவாகக் குறைந்து பார்வையில் குறைவோ பார்வை பறிபோகக்கூடிய நிலையோ ஏற்படலாம். இதை அறுவைச் சிகிச்சை மூலம் சரி செய்யலாம். பொதுவாக இது இரு கண்களிலும் ஏற்படுமா யினும், ஒரு கண்ணிற்கும் மற்றொன் றிற்கும் இடையே கால இடைவெளி இருக்கும்.
வயதானவர்களுக்கு ஏற்படும் கண்புரை முதலில் சற்று ஒளிபு காத்தன்மையுடன் தொடங்கி, வில்லை பொருந்திய பின்னர் முழுமையும் ஒளி புகாவண்ணம் சுருங்கும் தன்மையானது. தவிர மார்க்காக்னிய கண்புரை (Morgagnian cataract) கண்வில்லையின் புறப்பகுதி பால் போன்ற திரவமான வகையில் மாறி தடிப்பை உண்டாக்கும்.
இதனால் கண்வில்லையின் உறை உடைபட்டு வழியலாம். சரியாக சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் குளுகோமா என்ற கண்நோய் உருவாகிட காரணமாக அமையும். சில முதிர்ந்த கண்புரையில் வில்லையை இணைத்திருக்கும் தசைநார்கள் உள்ளேயோ வெளியேயோ இடம் பெயரலாம். அவ்வாறு தானாகவே வெளியே நகர்ந்தால் ஒரளவு ஓளி உட்புகுமாதலால் அதனை இறைவனின் வரமாக பழங்காலத்தினர் கருதினர்.
ஆங்கிலத்தில் இதன் பெயரான 'காட்ராக்ட்' என்பது இலத்தீனில் நீர்வீழ்ச்சி என்பதற்கான சொல் (Cataracta) என்பதிலிருந்து வந்தது. தெளிவான நீர் ஓர் அருவியிலிருந்து கொட்டும்போது வெண்மையாக காட்சியளிப்பது போன்று கண்பார்வை மங்கலை இது குறிக்கிறது.
கண்புரை முதிர்ந்த நிலையில் பார்வை முற்றிலும் குறைபடுகிறது. தொடக்க காலங்களில் கண்பார்வையில் சற்றே திறன் குறைந்து வெளிச்சமான பொருட்களைக் காண்கையில் கண் கூசும். இரவு நேரங்களில் வண்டி ஓட்டுபவர்கள் எதிர்வரும் வாகனங்களின் ஒளியால் அவதியுறுவர். ஒளிமாறு பாடுகளைக் கண்டறியும் திறன் பாதிக்கப்படும். இதனால் நிழல்கள், வண்ண மாற்றங்கள், வரிவடிவங்கள் காண்பது கடினமாகும். இந்த அறிகுறிகளைக் காணின் கண்மருத்துவர் ஒருவரை நாடுதல் வேண்டும்.
நகரப்பகுதிகளில், சர்க்கரைநோய் போன்ற காரணிகளால் புரை தோன்ற வாய்ப்புகள் உள்ளவர்கள் தெரு விளக்கினைச் சுற்றி ஓர் ஒளிவட்டம் கண்டால், அதிலும் ஒரு கண்ணில் மட்டும், கண்மருத்துவரை நாடுதல் மிகவும் தேவையாகும். கண்புரை நோய் பலவித காரணங்களால் வருகின்றது.
புற ஊதாக்கதிர்களுக்கு நெடுங்காலமாக கண்ணை வெளிப்படுத்துவது சர்க்கரை நோயின் தாக்கம், இரத்த அழுத்த நோயின் தாக்கம், பயங்கரமான அடி போன்றவை கண்வில்லையின் புரதங்களில் மாற்றங்களை ஏற்ப டுத்துகின்றன.
பிறக்கும் போது அல்லது மிக இளமையில் கண்புரை ஏற்படுவது மரபு வழியினால் குடும்பத்தின் வரலாறு காரணமாக அமையும். தவிர கண்ணிற்கு ஏற்படும் காயங்களாலும் ஏற்படலாம். ஐஸ்லாந்து விமான ஓட்டிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றின்படி வணிக விமானங்களை ஓட்டுபவர்களிடம் கண்புரை ஏற்படுவதற்கு மற்றவர்களை விட மூன்று மடங்கு வாய்ப்பு உள்ள தாகக் கண்டறியப்பட்டுள்ளது. இது வான்வெளியில் அவர்கள் கூடுதல் கதிர்வீச்சிற்கு எதிர்ப்படுவதால் நிகழ்வதாக ஆய்வு கூறுகிறது.
இதேபோல அகச்சிவப்புக் கதிர்க ளுக்கு எதிர்பட்ட கண்ணாடி ஊது பவர்கள் போன்றோரும் இதேபோன்ற வாய்ப்பினைக் கொண்டுள்ளனர். நுண்ணலை கதிர்களும் கண்புரை வரக் காரணமாகும். ஒவ்வாமை நிலைகளும் சிறுவர்களிடையே புரை நோய் வரக் காரணமாக அமைந் துள்ளது.
கண் புரை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ, வளர்ந்து கொண்டோ அல்லது நிலையாகவோ, மென்மையாகவோ அல்லது வலிதா கவோ இருக்கலாம். ல மருந்துகளும் கண்புரை தோன்றக் காரணிகளாக அமைகின்றன. கண்புரை மையப்புரை, புறத்துபுரை, முதிர்ந்த புரை, மிகமுதிர்ந்த புரை என வகைப்படுத்தப்படுகின்றது. மேலும் அவற்றின் இடத்தைப் பொறுத்து வெளிப்புறப் புரை (பெரும்பாலும் மருந்துகளால்) மற்றும் உட்புறப் புரை (பெரும்பாலும் வயதானவர் களிடையே) எனவும் பிரிக்கப்படுகின்றன.
கண்ணில் ஏற்படும் புரை பல வகைப்படும். பெரும்பாலான புரைகள் வில்லையில் ஏற்படும் இரசாயன மாற்றத்தினால் ஏற்படுகின்றன. பொதுவாக 50 வயதுக்கு மேற்பட்ட வர்களுக்கு இப்புரை ஏற்பட வாய்ப்புண்டு. புரைகளில் 80 சதவிகிதம் முதுமைப் புரையாகும். குழந்தைகளுக்கு அபூர்வமாக இந்தப் புரை நோய் ஏற்படுகிறது. இது கர்ப்பமாக இருக்கும் தாய்க்கு உண்டாகும் நோயாலோ அல்லது பரம்பரை காரணமாகவோ வரலாம். இந்தப்புரை எந்த வயதி னருக்கும் வரலாம். பலமான அடி, ஊசி முனைக்காயம், வெட்டுக்காயம், அதிகமான உஷ்ணம் (வெப்பம்), இரசாயனப் பொருட்கள் போன்ற காரணங்களால் வில்லை பாதிக்கப்பட்டு புரை உண்டாகலாம்.
விஞ்ஞான முறையிலான தடுப்பு வழிகள் எதுவும் அறியப்படவில்லை. எனினும் சூரிய ஒளியிலிருந்து காக்கும் குளிர்க்கண்ணாடிகள் புற ஊதாக்கதிர்களை வடிகட்டி புரை தோன்றும் வயதைத் தள்ளிப் போடலாம் எனக் கூறப்படுகிறது. உயிர்சத்துக்கள் ஏ, சி மற்றும் ஈ இய ற்கையாக விளங்கும் உணவுப் பொருட் களை உண்பதனால் நோய் வரும் நிலை யைத் தள்ளிப்போடலாம்.
ஆனால் இவற்றை வில்லைகளாக உண்பதால் பயனெதுவும் இல்லை என்றும் சில ஆய்வுகள் கூறுகின்றன. மிகவும் வெற்றி கண்ட பொதுவான சிகிச்சை முறை, கண்புரை அறுவைச் சிகிச்சை, இச்சிகிச்சை செய்யத்தகுந்த நிலைக்கு முதிர்ந்த பிறகு, கண்வில்லை வைக்கப்பட்டுள்ள உறையில் ஓர் கிழிசலை ஏற்படுத்தி மேகமூட்டமான வில்லையை நீக்குவதே ஆகும். இவ்வாறு கண்வில்லையை நீக்குவதில் இருவகை அறுவை முறைகள் உள்ளன.
உறையிலிருந்து வில்லையை நீக்குதல் உறையுடன் வில்லையை நீக்குதல். முதல்முறையில் கண்வில்லை மட்டுமே அறுவை சிகிச்சை மூலம் நீக்கப்படும். பெரும்பாலான வில் லையுறை அப்படியே இருக்கும். மிகக் கூடுதலான அதிர்வெண் உடைய ஒலி அலைகளால் கண்வில்லை சிறு துகள்களாக உடைக்கப்பட்டு வெற்றிட உறிஞ்சி வழியாக உறிஞ்சப்படும்.
இரண்டாம் முறையில் கண்வில்லை அதன் உறையுடன் அறுவை சிகிச்சை மூலம் நீக்கப்படும். இது தற்போது பெரிதாக பயன்படுத்தப்படுவதில்லை. இரண்டு முறைகளிலும் புரைவிழுந்த கண்வில்லை நீக்கப்பட்டு அதனிடத்தில் நெகிழ்வினால் ஆன வில்லையொன்று நிலையாகப் பொருத்தப்படுகிறது. நவீன வில்லை தொழில்நுட்பத்தில் முன்னதாக கிட்டப்பார்வை அல்லது தூரப்பார்வை குறை இருந்தவர்களுக்கு இந்த வில்லையில் அதற்கான திருத்த வடிவமைப்பும் மேற்கொள்ளப்படுவதால் அறுவை சிகிச்சைக்குப் பின்னர் தனியாக கண்ணாடி எதுவும் அணிய வேண்டியதில்லை.
கண்புரை அறுவைகள் உடலின் அப்பகுதியில் மட்டும் தாக்கமேற்படுத்தும் மயக்க மருந்துகளுடன் செய்யப்படுவதால் நோயாளி அன்றே வீடு திரும்பலாம். கண்வில்லையுறை நீக்கப்படும் இரண்டாம் முறையில் செயற்கை வில்லையை கண்ணினுள்ளே பொருத்த வியலாது. அவர்களுக்கு தடித்த கண் ணாடிகள் அணிய வேண்டியிரு க்கும்.
உலக சுகாதார அமைப்பு அறிக்கை யின்படி உலகளவில் பார்வையற்றோரில் 48 சதவீதத்தினர் (18 மில்லியன் மக்கள்) முதிய வயதினால் ஏற்படும் கண்புரையால் பாதிக்கப்பட்டவர்கள். பல நாடுகளில் அறுவை சிகிச்சைச் சேவைகள் போதுமானதாக இல்லை யாதலால் பார்வை இழப்பவர் எண் ணிக்கை கூடி வருகிறது.
மக்கள் தொகை யின் வயது ஏற ஏற புரைநோயாளிகளின் எண்ணிக்கையும் கூடுகிறது. வளரும் மற்றும் வளர்ந்த நாடுகளில் பார்வைக் குறைகள் உள்ளவர்கள் எண்ணிக்கைக்கு முதன்மைக் காரணமாக கண்புரை உள் ளது. அறுவை சிகிச்சைக்கான காத்திருப்பு அறுவை சிகிச்சை விலை, போதிய தகவலின்மை, போக்குவரத்து போன்ற காரணங்களால் அறுவை சிகிச்சை மேம்பட்ட வளரும் நாடுகளிலும் கண்புரையால் பார்வைத்திறன் குறைந்தவர்கள் இருக்கக்கூடும்.
அமெரிக்காவில் 52 முதல் 64 வயதுடையோரில் 42 வீதம் பேருக்கு கண்புரை நோயுள்ளதாகவும், 65 முதல் 74 வரை உள்ளோருக்கு 60 வீதம் வரை உள்ளதாகவும். 75 முதல் 85 வயதுடையோருக்கு 91 வீதம் வரை உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. வளர்கின்ற தொழில்மயமாக்கம் ஓசோன் இருப்பைக் குறைப்பதால் கதிரவனின் ஒளியில் புற ஊதாக் கதிர்களின் தாக்கம் கூடி கண்புரை நோயின் பரவலை கூடுதலாக்கும் என்று நம்பப்படுகிறது.
கண்புரை பற்றிய தொன்மையான செய்திகளை ஆவணங்களிலிருந்து பெறுகிறோம். முதன் முதலில் இதற்கான அறுவை சிகிச்சையை இந்திய மருத்துவர் சுசுருதா கி.மு. ஆறாம் நூற்றாண்டில் உருவாக்கியதாகத் தெரிகிறது. இந்திய அறுவை முறையில் 'ஜபமுகி சாலகா' என்ற சிறப்புக்கருவி, ஓர் வளைந்த ஊசி மூலம் கண் வில்லையை பெயர்த்தெடுத்தனர். பின்னர் சூடான வெண்ணெயில் ஊற வைத்துக் கட்டுப்போட்டனர். இந்த முறை வெற்றிகரமாக அமைந்தாலும் சுசுருதா இதனை தேவையேற்பட்டால் மட்டுமே பயன்படுத்த அறிவுரைத்தார். கிரேக்க மருத்துவர்களும் மெய்யிய லாளர்களும் இந்த அறுவை சிகிச்சையைக் காண இந்தியாவிற்கு வந்தனர். இந்த முறை சீனாவிலும் அறிமுகப்படுத்தப்பட்டது.
தொன்மையான உரோமாவில் கண்புரை மற்றும் சிகிச்சை குறித்த குறிப்புகள் கி.பி. 29 ஆம் ஆண்டு இலத்தீன் கலைக்களஞ்சிய ஆசிரியர் ஔலஸ் கார்னியலஸ் செல்சஸ் எழுதிய 'டிமெடிசன்' புத்தகத்தில் உள்ளன. கண் மருத்துவத்துறையில் உரோ மானியர்கள் சிறந்து விளங்கினர். ஈராக்கிய கண்மருத்துவர் அம்மர் இபின் அலி உறுஞ்சுதல் முறையில் முதன்முதலில் புரையெடுத்தார். ஓர் வெறுமையான உலோக உறுஞ்சுகுழலை கண்ணின் மேல் வைத்து தோலினடி ஊசி மூலம் புரையை உறிஞ்சினார்.
கி.பி. 1000 ம் ஆண்டில் அவர் எழுதிய 'Choice of Eye Diseases' என்ற புத்தகத்தில் தாம் எவ்வாறு தோலினடி ஊசியைக் கண்டுபிடிக்கும் போது ஓர் விபத்தாக கண்புரை வெளி யேற்றத்தைக் கண்டறிந்ததாக விளக்கியுள்ளார். வயதானவர்களுக்கு வரும் புரைகளில் முதன்மையான மையப்புரை நோய்க்கு ஒட்சிசனேற்றமே முக்கிய காரணியாக விளங்குவதாகக் கருதப்படுகிறது.

CCHEP Ooty Bethalgem school CCC meeting 4.11.2015

நகல் அட்டை கிடைக்காமல் மக்கள் அவதி விரைவில் வாழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

பெறுனர்
மாவட்ட ஆட்சியர் அவர்கள்
உதகை
பொருள்: நகல் அட்டை கிடைக்காமல் மக்கள் அவதி
                விரைவில் வாழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

அய்யா அவர்களுக்கு
நீலகிரி மாவட்டத்தில் உதகை குன்னூர் குந்தா. கோத்தகிரி. கூடலூர். பந்தலூர் தாலுக்காக்களை சேர்ந்த மக்கள்  தங்கள் ரேசன் கார்டுகள் தொலைந்து போனது, சேதமாகி போனது என பலர் நகல் அட்டை விண்ணப்பித்து காத்திருக்கின்றனர்ஆனால் அவர்களுக்கு இன்னும் நகல் அட்டை வழங்கப்படவில்லைரேசன் கார்டு தொலைந்தவர்கள் மற்றும் சேதமாகி போனவர்கள் தங்கள் ரேசன்கார்டு நகல் அட்டை வழங்க வேண்டும் என கேட்டு அந்தந்த பகுதி வட்ட வழங்கல் அலுவலரிடம் மனுகொடுத்து அங்கு அலைகழிக்கப்பட்டு அதற்குரிய கட்டணம் வங்கியில் செலுத்தியுள்ளனர்
வட்ட வழங்கல் அலுவலகத்தில் இருந்து மாவட்ட வழங்கல் அலுவலகத்திற்கு பரிந்துரை செய்து அங்கு கிடப்பில் போடபட்டுள்ளதால் அவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்பலர் தங்கள் குழந்தைகள் கல்வி உதவித்தொகை பெறவும், அரசு சார் உதவி பெறவும் குடும்ப அட்டை அவசியம் என்ற நிலையில் கடந்த 6 மாத காலமாகியும் சுமார் 500க்கும் மேற்ப்பட்டோருக்கு நகல் அட்டை கிடைக்காமல் அவதிப்படுகின்றனர்இதற்கு யார் பெறுப்பேற்பார்கள்

நகல் அட்டை கேட்டு விண்ணப்பிப்போருக்கு 45 நாட்களுக்குள் நகல் அட்டை வழங்க வேண்டும் என உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை மக்கள் சாசனம் கூறுகின்றதுகடந்த 6 மாத காலமாக நகல் அட்டை கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகின்றனர்இவர்களுக்கு அரசு வழங்கிய பொதுவினியோக திட்ட பொருட்கள் வாங்க இயலாத நிலை. அரசு உதவி பெற இயலாத நிலைமாவட்ட வழங்கல் அலுவலகத்தில் அரசாணைப்படி நடக்காததினால் மக்களுக்கு இழப்பு, இதற்கு சம்பந்தபட்ட துறையினர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு உதவி மற்றும் நிவாரணம் வழங்க முடியுமா.
விரைவில் நகல் அட்டைகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்தவறும்பட்சத்தில் பணம் செலுத்திய நுகர்வோருக்கு உரிய காலத்தில் சேவையை வழங்காத மாவட்ட வழங்கல் துறை மீது இந்திய நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின்படி ஏன் வழக்கு தொடர கூடாது என்பதற்கான விளக்கமும் அளிக்கும் படி கேட்டுக்கொள்கின்றோம்.
இப்படிக்கு
சு. சிவசுப்பிரமணியம் தலைவர்
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம்

CCHEP NLG YOUTH DEVELOPMENT AWARENESS GDR

pls visit our webshttp://cchepnlg.blogspot.in/http://cchepeye.blogspot.in/http://consumernlg.blogspot.in/

CCHEP NLG IODINE AWARNESS PROGRAMME MSS UPPATTY 20.10.15

அயோடின் குறைபாட்டால் இரும்பு சத்து குறைபாடு, ஏற்படுகிறது
அயோடின் உப்பு விழிப்புணர்வு கருத்தரங்கில் தகவல்
பந்தலூா், அக். 23; பந்தலூா் அருகே உப்பட்டி எம் எஸ் எஸ் உயர்நிலைப்பள்ளியில் உலக அயோடின் தினத்தை முன்னிட்டு அயோடின் விழிப்புணர்வு மற்றும் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளி முதல்வர் கவிதா தலைமை தாங்கினார்.  கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம் பேசும்போது அயோடின் பற்றாக்குறையால் உடல் வளர்ச்சி இன்மை, முன் கழுத்து கழலை,  இரும்பு சத்து குறைபாடு, மந்த தன்மை, பிறவி குறைபாடுகள், ஊனதன்மை உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன.  எனவே அயோடின் கலந்த உப்பினை பயன்படுத்துவதால் இதுபோன்ற குறைபாடுகளை களையலாம் கடைகளில் எடுக்கபட்ட உப்பு மாதிரிகளில் 48 சதவீதத்தில் மட்டுமே போதுமான அளவு அயோடின் உள்ளது. கடைகளில் எடுக்கப்பட்ட  கல் உப்பில் 33.4 சதவீத அளவில் மட்டுமே அயோடின் உள்ளது. அயோடின் சத்து கடல்களில் உள்ள பவளபாறை உள்ளிட்ட வற்றில் அதிகமாக உள்ளது.  எனவே மீன் உள்ளிட்ட கடல் வாழ் உணவுகளை அதிகம் உண்ண வேண்டும். ஒரு நாளைக்கு நமக்கு 150 முதல் 200 மைக்ரோ கிராம் அளவு அயோடின் தேவை, உப்பு வாங்கும் முன் பாதுகாப்பான முறையில் உள்ள உப்புகளை பார்த்து வாங்க வேண்டும் காலாவதி தேதி மற்றும் பாக்கெட்டில் சிரிக்கும் சூரியன், உணவு தர கட்டுபாட்டு பதிவு எண் போன்றவற்றை கவணித்து வாங்க வேண்டும்   அயோடின் சத்து இல்லாத உப்புகளை தவிர்க்க வேண்டும் என்றார்.   நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் பலர் பங்கேற்றனர்.

அயோடின் விழிப்புணர்வு மற்றும் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடத்தப்பட்டது

பந்தலூா் அக் 21 பந்தலூா் அருகே உப்பட்டி எம் எஸ் எஸ் உயர்நிலைப்பள்ளியில் உலக அயோடின் தினம் மற்றும் உலக கை கழுவும் தினம் ஆகியவற்றினை முன்னிட்டு அயோடின் விழிப்புணர்வு மற்றும் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடத்தப்பட்டது.  

நிகழ்ச்சிக்கு பள்ளி முதல்வர் கவிதா தலைமை தாங்கினார்.  

கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம் பேசும்போது அயோடின் பற்றாக்குறையால் உடல் வளர்ச்சி இன்மை, முன் கழுத்து கழலை,  இரும்பு சத்து குறைபாடு, மந்த தன்மை, பிறவி குறைபாடுகள், ஊனதன்மை உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன.  எனவே அயோடின் கலந்த உப்பினை பயன்படுத்துவதால் இதுபோன்ற குறைபாடுகளை களையலாம் கடைகளில் எடுக்கபட்ட உப்பு மாதிரிகளில் 48 சதவீதத்தில் மட்டுமே போதுமான அளவு அயோடின் உள்ளது. கடைகளில் எடுக்கப்பட்ட  கல் உப்பில் 33.4 சதவீத அளவில் மட்டுமே அயோடின் உள்ளது.  என்றார்.

உப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர்  மருதமுத்து பேசும்போது  அயோடின் சத்து கடல்களில் உள்ள பவளபாறை உள்ளிட்ட வற்றில் அதிகமாக உள்ளது.  எனவே மீன் உள்ளிட்ட கடல் வாழ் உணவுகளை அதிகம் உண்ண வேண்டும். ஒரு நாளைக்கு நமக்கு 150 முதல் 200 மைக்ரோ கிராம் அளவு அயோடின் தேவை, ,  உப்பு வாங்கும் முன் பாதுகாப்பான முறையில் உள்ள உப்புகளை பார்த்து வாங்கவேண்டும் காலாவதி தேதி மற்றும் பாக்கெட்டில் சிரிக்கும் சூரியன், உணவு தர கட்டுபாட்டு பதிவு எண் போன்றவற்றை கவணித்து வாங்க வேண்டும்   அயோடின் சத்து இல்லாத உப்புகளை தவிர்க்க வேண்டும் என்றார். 

உப்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய தொற்றா நோய் செவிலியர் விஜயா பேசும்போது தினசரி தன் சுத்தம் காப்பது அவசியம்,  மாணவர்கள் கைகளை சுத்தமாக வைத்துக்கொள்ள  வேண்டியது அவசியம் தினசரி உடற்பயிற்சி செய்ய வேண்டும், மூச்சு பயிற்சி செய்ய வேண்டும்,  தரமான ஊட்ட சத்து மிக்க உணவுகளை உண்ண வேண்டும்,  அரசு சுகாதார நிலையங்களை அனுகி ஊட்டச்சத்து மற்றும் பூச்சி மாத்திரைகள் வாங்கி பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.  

CCHEP Nilgiris SAMRAJ SCHOOL PROGRAMME FOOD DAY

உதகை, உதகை அருகே சாம்ராஜ் சிவசைலம் மேல்நிலைப் பள்ளியில் குடிமக்கள் நுகர்வோர் மன்றம் மற்றும் கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் ஆகியன சார்பில் உலக உணவு நாள் கடைப்பிடிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு உணவும் ஊட்டச்சத்தும் என்னும் தலைப்பில் கருத்தரங்கு நடைப்பெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் லதா தலைமை தாஙகினார். பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் முருகன் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம் பேசும்போது உணவு பற்றாக்குறையால் இன்று உலகில் வாழும் பலர் நோய்வாய் பட்டு பாதிக்கப்படுகின்றனர். போதிய உணவு கிடைக்காமல் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களான விட்டமின்கள், மினரல்கள், ஊட்டச்சத்துக்கள், தாது சத்துக்கள் போன்றவை கிடைக்காமல் பாதிக்கப்படுகின்றனர். இதனால் சாதாரண நோய்கள் தாக்கினாலும் அவற்றினால் பெரிய பாதிப்புக்கு உள்ளாகின்றனர். எனவே ஊட்டசத்து மிக்க உணவுகளை அதிகம் அன்றாடம் சேர்த்துக்கொள்ள வேண்டும். பேக்கரி மற்றும் கடைகளில் விற்பனை செய்யப்படும் உணவுகள் பல இடங்களில் தரமற்ற பாதுகாப்பற்ற முறையில் தாயரிக்கப்படுவது உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வின் மூலம் தெரியவருகின்றது. இவற்றை சாப்பிடுவதால் நோய்கள் தாக்கும் அபாயம் உள்ளது. அக்மார்க், மற்றும் எப்பீஓ சான்று உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய உரிமம் ஆகியன பெற்றுள்ள பொருட்களை வாங்கி பயன்படுத்த மாணவர்கள் முன்வர வேண்டும் என்றார்.
நெஸ்ட் அறக்கட்டளை அறங்காவலரும், குன்னூர் கல்வி மாவட்ட தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளருமான சிவதாஸ் பேசும்போது, அசைவ உணவுகள் உருவாக்க பல்வேறு வனப்பகுதிகள் அழிக்கப் படுகின்றன. அவற்றில் குறுகிய கால வளர்ச்சி மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றது. இயற்கையாக நமது முன்னோர்கள் பயன்படுத்திய சிறுதானிய உணவுகள் உடலுக்கு தேவையான அனைத்து வகையான சத்துக்களையும் நமக்கு அளித்தது. இயற்கையை நாம் அழித்து வருவதால் போதிய மழை இல்லாமல் உணவு உற்பத்தி பாதிக்கபடுகின்றது. சைவ உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும் இதனால் அரிய பல மூலாதாரங்களை பாதுகாக்க முடியும். மாணவர்கள் மத்தியில் உள்ள நொறுக்கு தீனி வகைகள் அதிகம் சாப்பிடுவதால் உடலில் கொழுப்பு மற்றும் இரசாயன சத்துக்கள் சேர்ந்து உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றது. எனவே இவற்றை தவிர்க்க வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்ற மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். மாணவி பிரியதர்சினி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்,
முன்னதாக மாணவி ஆர்த்தி வரவேற்றார் முடிவில் மாணவி கார்த்திகா நன்றி கூறினார்.
https://youtu.be/ulHxMg5OMXA

kalainger tv nenju porukkuthillaiye programme Mr. shiva participate

cchep siva kalainger tv interview

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்மக்கள் மையம்

food day 2015 awareness programme

உலக உணவு தினத்தை முன்னிட்டு உதகை ஒய்.எம்.சி. மற்றும்  உதகை நகர மக்கள் விழிப்புணர்வு சங்கம் ஆகியன சார்பாக உணவு திருவிழா ஒய்.எம்.சி. அரங்கில் நடத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஒய்.எம்.சி. செயலர் எல் மேக்ஸ் வில்லியர்ட் ஜெயபிரகாஷ் தலைமை தாங்கினார்
நிகழ்ச்சியில் உணவு தினத்தின் சிறப்பினை குறிக்கும் வகையில் ஆவின் தயாரிப்புகள் மற்றும் சிறு தானிய வகைகள், கீரை, காய்கறிகள் கண்காட்சி நடத்தப்பட்டது
ஆவின் தயாரிப்புகளும் பாலின் உற்பத்தி பொருட்கள் பயன்பாடுகள் குறித்து ஆவின் தர கட்டுபாட்டு அலுவலர் சுப்பிரமணியன் விளக்கம் அளித்து பேசும்போது பால் மற்றும் அதன் மூலம் தயாரிக்கும் உணவுகள் அனைத்தும் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கொடுக்க வல்லதுபாலில் இருந்து நெய், வென்னை, பால்பேடா, பண்ணீர், குளிர்பானங்கள், பாலாடைகட்டி, ஐஸ்கிரிம் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள்  தயாரிக்கப்படுகின்றது.  இவை ஆவின் மூலம் மாடுகளில் இருந்து பெறப்படும் பாலில் மட்டுமே உரிய முறையில் பதப்படுத்தி தயாரிக்கப்படுகின்றது.  ஆவின் பால்இரசாயன தன்மை கிடையாது.  பாலிலும், அதன் உற்பத்தி பொருட்களிலும் இருந்து பல்வேறு மருந்து பொருட்கள் தயாரிக்க பயன்படுத்த படுகின்றது.  ஆயுர்வேதம், சி்த்தா வகை மருந்துகள் பாலுடன் இணைத்து சாப்பிட மருத்துவர்கள் சிபாரிசு செய்கின்றனர்.  மருந்து தயாரிக்க உதகை ஆவின் மூலம் மாதந்தோறும் கோட்டக்கல் ஆரிய வைத்திய சாலைக்கு பால் மற்றும் பால் உற்பத்தி பொருட்கள் அனுப்பபடுகின்றது என்பது குறிப்பிட தக்கது என்றார்.
உதகை நகர மக்கள் விழிப்புணர்வு சங்க தலைவர் ஜி. ஜனார்தனன் பேசுகையில் 130 கோடி மக்களின் உயிர்பாதுகாப்பு உணவை சார்ந்தே உள்ளதுஇந்நிலையில் உணவு தர கட்டுபாட்டு விசயத்தில் அரசு சமரசம் செய்து கொள்ளகூடாதுஉணவு பாதுகாப்பு தர கட்டுபாட்டு சட்டத்தினை உடனடியாக நிறைவேற்றி பாதுகாப்பான உணவு அனைவருக்கும் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சு. சிவசுப்பிரமணியம் பேசும்போது ஊட்டசத்து உணவுகளை மறந்து தரமற்ற உணவுகளை நாடியதால் தற்போது உடல் நல குறைவுடன் உள்ளனர் தரமான சத்தான உணவுகளை அதிகம் உண்ண வேண்டும் என்றார்
அன்னை சாராதா மெட்ரிகுலேசன் பள்ளி ஆசிரியர் அம்பிகா பேசுகையில் உணவில் கீரை வகைகளை அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும் என்றார்நீலகிரி மாவட்டத்தில் அழிந்து வரும் ஆரஞ்சு பழங்களை பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் தலைமை ஆசிரியர் ராஜுபெட்டன் வலியுறுத்தினார்
 தொடர்ந்து மூலிகைகளின் மகத்துவம் குறித்து இந்து நகர் எச்.பி.எப் பள்ளி மாணவர்கள் பேச்சு போட்டியில் பங்கேற்று பரிசுகளை பெற்றனர்புலவர் . சோலூர் கனேசன், புலவர் கமலம், கேத்தி நஞ்சன், சுந்தர பாண்டியன் ஆகியோர் உணவு பாதுகாப்பு தரமான உணவு ஊட்டச்சத்து உணவுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் உரையாற்றினார்கள்

இந்து நகர் எச்.பி.எப் பள்ளி ஆசிரியர் இரா நாகராஜ் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

நுகர்வோர் தின விழிப்புணர்வு

 உலக நுகர்வோர் தினத்தையொட்டி நுகர்வோர் விழிப்புணர்வு வாரம் கொண்டாடபடுகிறது இதனை முன்னிட்டு பந்தலூர் அருகே கரியசோலை அரசு உயர்நிலைப் பள்ளியில்...