நகல் அட்டை கிடைக்காமல் மக்கள் அவதி விரைவில் வாழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்


பெறுனர்
மாவட்ட ஆட்சியர் அவர்கள்
உதகை
பொருள்: நகல் அட்டை கிடைக்காமல் மக்கள் அவதி
                விரைவில் வாழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

அய்யா அவர்களுக்கு
நீலகிரி மாவட்டத்தில் உதகை குன்னூர் குந்தா. கோத்தகிரி. கூடலூர். பந்தலூர் தாலுக்காக்களை சேர்ந்த மக்கள்  தங்கள் ரேசன் கார்டுகள் தொலைந்து போனது, சேதமாகி போனது என பலர் நகல் அட்டை விண்ணப்பித்து காத்திருக்கின்றனர்ஆனால் அவர்களுக்கு இன்னும் நகல் அட்டை வழங்கப்படவில்லைரேசன் கார்டு தொலைந்தவர்கள் மற்றும் சேதமாகி போனவர்கள் தங்கள் ரேசன்கார்டு நகல் அட்டை வழங்க வேண்டும் என கேட்டு அந்தந்த பகுதி வட்ட வழங்கல் அலுவலரிடம் மனுகொடுத்து அங்கு அலைகழிக்கப்பட்டு அதற்குரிய கட்டணம் வங்கியில் செலுத்தியுள்ளனர்
வட்ட வழங்கல் அலுவலகத்தில் இருந்து மாவட்ட வழங்கல் அலுவலகத்திற்கு பரிந்துரை செய்து அங்கு கிடப்பில் போடபட்டுள்ளதால் அவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்பலர் தங்கள் குழந்தைகள் கல்வி உதவித்தொகை பெறவும், அரசு சார் உதவி பெறவும் குடும்ப அட்டை அவசியம் என்ற நிலையில் கடந்த 6 மாத காலமாகியும் சுமார் 500க்கும் மேற்ப்பட்டோருக்கு நகல் அட்டை கிடைக்காமல் அவதிப்படுகின்றனர்இதற்கு யார் பெறுப்பேற்பார்கள்


நகல் அட்டை கேட்டு விண்ணப்பிப்போருக்கு 45 நாட்களுக்குள் நகல் அட்டை வழங்க வேண்டும் என உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை மக்கள் சாசனம் கூறுகின்றதுகடந்த 6 மாத காலமாக நகல் அட்டை கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகின்றனர்இவர்களுக்கு அரசு வழங்கிய பொதுவினியோக திட்ட பொருட்கள் வாங்க இயலாத நிலை. அரசு உதவி பெற இயலாத நிலைமாவட்ட வழங்கல் அலுவலகத்தில் அரசாணைப்படி நடக்காததினால் மக்களுக்கு இழப்பு, இதற்கு சம்பந்தபட்ட துறையினர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு உதவி மற்றும் நிவாரணம் வழங்க முடியுமா.
விரைவில் நகல் அட்டைகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்தவறும்பட்சத்தில் பணம் செலுத்திய நுகர்வோருக்கு உரிய காலத்தில் சேவையை வழங்காத மாவட்ட வழங்கல் துறை மீது இந்திய நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின்படி ஏன் வழக்கு தொடர கூடாது என்பதற்கான விளக்கமும் அளிக்கும் படி கேட்டுக்கொள்கின்றோம்.
இப்படிக்கு
சு. சிவசுப்பிரமணியம் தலைவர்
கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம்


No comments:

Post a Comment

உயில் நடைமுறைகள்

 *பதிவு செய்யப்பட்ட உயில் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியுமா?... சட்டம் கூறுவது என்ன*...✍🏻 ⚖️உயில் என்பது ஒரு நபர் தனது மரணத்திற்க...