கோத்தகிரி, : நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே குஞ்சப்பனை ஆதிவாசிகள் கிராமத்தில், இந்திய ரிசர்வ் வங்கியின் சார்பில் அனைவருக்கும் வங்கி சேவை துவக்க விழா நடந்தது.
விழாவிற்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ரிசர்வ் வங்கி மண்டல இயக்குனர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார். பொது மேலாளர் ராஜா வரவேற்றார். பொது மேலாளர்கள் சாந்தகுமார், சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 இந்திய ரிசர்வ் வங்கி நிர்வாக இயக்குனர் பத்மநாபன், கனரா வங்கி நிர்வாக இயக்குனர் அர்ச்சனாபார்கவா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி நிர்வாக இயக்குனர் பன்சால், நபார்டு வங்கி பொது மேலாளர் லலிதா, குஞ்சப்பனை ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணம்மாள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதை தொடர்ந்து, இந்திய ரிசர்வ் வங்கி நிர்வாக இயக்குனர் பத்மநாபன் பேசுகையில், “தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் உங்கள் தேவையறிந்து சேவை செய்வதில் முன்னோடியாக உள்ளது. இந்த சேவைகளை பயன்படுத்தி கொள்ளவேண்டும். அதிக வட்டிக்கு பணம் கொடுக்கும் கந்துவட்டி கும்பலிடம் சிக்க கூடாது. லாட்டரியில் பணம் விழுந்ததாக, செல்போன்களுக்கு வரும் எஸ்எம்எஸ்களை நம்ப வேண்டாம். குஞ்சப்பனை கிராமம் மற்ற கிராமங்களுக்கு முன்னோடியாக திகழ்கிறது’’ என்றார்.
மேலும் இப்பகுதியை சேர்ந்த 15 மகளிர் சுய உதவி குழுக்கள் மற்றும் பொது மக்களுக்கு வங்கி கடனுதவி வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடந்தது. அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
முன்னதாக, இப்பகுதி மக்களுக்கு தகவல் தொழில் நுட்பத்தின் மூலம் எளிய வங்கி கணக்குகள் துவங்கப்பட்டன. இதில் சுற்றுவட்ட பகுதிகளை சேர்ந்த ஆதிவாசி மக்கள் ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.
இவ்விழாவிற்கான ஏற்பாட்டினை இந்திய ரிசர்வ் வங்கி சென்னை கிளை அதிகாரிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.  முடிவில் கனரக வங்கி கிளை மேலாளர் ஜாய்ஸ்குளோரா நன்றி கூறினார். - See more at: http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=163247&cat=504#sthash.aqLSbpF4.dpuf

No comments:

Post a Comment

சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்*

 *Tips for Today* 🔖🔖🔖🔖🔖 *சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்* 🔖சாதிச் சான்று தற்போது இணைய வழியில் மட்டுமே வ...