மைய செயற்குழு கூட்டம்,

பந்தலூர்: கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மக்கள் மைய செயற்குழு கூட்டம், பந்தலூரில் நடந்தது. தலைவர் சிவசுப்ரமணியம் தலைமை வகித்தார். செயலா ளர் கணேசன் வரவேற்றார். பொருளாளர் ஜெயச்சந்திரன், துணைத்தலைவர் செல்வராஜ், துணை செயலாளர் இந்திராணி, கனகலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் தேவதாஸ், தங்கராஜா, சந்திரன், நவுஷாத் உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மூலம் இயக்கப்படும் பல பஸ்களில் மழைகாலங்களில் ஒழுகுகிறது. இதனால் பயணிகள் பாதிக்கப்படுகின்றனர். இதை, போக்குவரத்து கழகம் சரி செய்ய வேண்டும். ரேஷனில் கூடுதலாக மண் எண்ணை வழங்க வேண்டும். பந்தலூரில் செயல்பட்டு வந்த நுகர்வோர் பொருள் வாணிப கிடங்கை மாற்ற கூடாது. பந்தலூர், கூடலூர் அரசு மருத்துவமனையில் கண்பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வட்டார பொறுப்பாளர் தனீஷ்லாஸ் நன்றி கூறினார்.


No comments:

Post a Comment

ஓவேலி அரசு மேல்நிலை பள்ளியில் மின்சார சிக்கனம் விழிப்புணர்வு

  கூடலூர் அருகே ஓவேலி அரசு மேல்நிலை பள்ளியில் மின்சார சிக்கனம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது  தமிழ்நாடு மின்சார வாரியம் கூடலூர் கோட்டம்...