1.நீலகிரி தேயிலையில் கலக்கப்படும்சாயங்களால் அபாயம் :பள்ளியில் நடந்த கருத்தரங்கில் "பகீர்'


பந்தலூர் : "கலப்பட சாயங்கள் தேயிலையில் சேர்க்கப்படுவதால், நோய் எதிர்ப்பு சக்தியான தேநீர் அதன் தன்மையை இழந்து, நோய் உருவாக்கும் பானமாக மாறுகிறது' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேயிலை வாரியம் குன்னூர், நுகர்வோர் பாதுகாப்பு மையம், புனித சேவியர் பெண்கள் உயர்நிலைப்பள்ளி ஆகியவை இணைந்து, பந்தலூரில் தேயிலை விழிப்புணர்வு கருத்தரங்கை நடத்தின. பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் மார்ட்டின் வரவேற்றார். நுகர்வோர் மைய தலைவர் சிவசுப்ரமணியம் பேசுகையில், ""நீலகிரியின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் தேயிலையில் கலப்படத்தை தடுக்கவும், தேயிலை தொழிலில் புதிய யுக்திகளை கையாளவும், பல வழிமுறைகள் மேற்கொள்ளப்படுவதை மாணவர்கள் தெரிந்துக்கொண்டு பயன்பெற வேண்டும்,'' என்றார்.
தேயிலை வாரிய இணை இயக்குனர் ஹரிபிரசாத் பேசுகையில்,
""இந்தியாவில் 1100 மில்லியன் கிலோ தேயிலை உற்பத்தி செய்வதில், 250 மில்லியன் கிலோ தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படுகி றது. இதில், 80 சதவீத தேயிலைத்தூளை உள்ளூரிலும், 20சதவீத தூள் ஏற்றுமதியும் செய்யப்படுகிறது. மாநிலமும் முழுவதும், தேயிலை கலப்படத்தை தடுக்க தொடர் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது,'' என்றார்.
உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர் ரவி பேசுகையில்,""கடந்த 1800வது ஆண்டிலேயே தேயிலையில் கலப்படம் துவங்கிய நிலையில், தற்போதைய கால கட்டத் தில் இத்தகைய செயல்கள் அதிகரித்து விட்டன. 5 வகையான கலப்பட சாயங்கள் தேயிலையில் சேர்க்கப்படுவதால், நோய் எதிர்ப்பு சக்தியான தேநீர் அதன் தன்மையை இழந்து, நோய் உருவாக்கும் பானமாக மாறுகிறது. இதனால், பல்வேறு நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. இதனை தடுக்க மக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்,'' என்றார்.
தொடர்ந்து, உபாசி திட்ட அலுவலர் சிவகுமார் கலப்பட தேயிலை, கலப்படமற்ற தேயிலை கண்டறியும் வழிமுறைகள் குறித்து செயல்விளக்கம் அளித்தார்.
வட்டார மருத்துவ அலுவலர் கதிரவன், தொழிற்சாலை நல அலுவலர் அனில்குமார், பள்ளி தலைமையாசிரியர் செலீன், அரசுமேல்நிலைப்பள்ளி ஆசிரியர் தண்டபானி, சேரன் டிரஸ்ட் நிர்வாகி தங்கராஜா, காந்தி சேவா மைய அமைப்பாளர் நவுசாத் உட்பட பலர் பங்கேற்றனர். மைய செயலாளர் கணேசன் நன்றி கூறினார்.









No comments:

Post a Comment

சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்*

 *Tips for Today* 🔖🔖🔖🔖🔖 *சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்* 🔖சாதிச் சான்று தற்போது இணைய வழியில் மட்டுமே வ...